ஐன்ஸ்டீன் தாத்தா சொன்னவைகள் - 2

   ஒரு  அறிவியல் சிரிப்புக்கு விளக்கம் சொல்லபோய் இப்போது ஐன்ஸ்டீன் குவாண்டம் தத்துவத்தை ஏன் மறுத்தார் என்பதில் இருக்கிறோம்..

   குவாண்டம் தத்துவத்தில் இருந்த சத்தியமின்மையை குறை சொல்லி கொண்டு இருந்த ஐன்ஸ்டீன் HEISENBERG உருவாக்கிய ஐயபாட்டு கொள்கையை இன்னும் அதிகமாக மறுக்க ஆரம்பித்தார்...

   ஐயபாட்டு கொள்கையின்படி துகளின் உந்தத்தை(momentum) துல்லியமாக அளக்க முயன்றால் அந்த இடத்தில் துகளின் இருப்பிடத்தை துல்லியமாக தெரிந்து கொள்வதற்கு பதில் தோராயமாக மட்டுமே தெரிந்து கொள்ள முடியும்..அதே போல் அதன் energy மற்றும் time இந்த இரண்டிலும் எதையாவது ஒன்றை மட்டுமே ஒரே நேரத்தில் துல்லியமாக சொல்ல முடியும்..

   இங்கு ஐன்ஸ்டீன் அவர்களின் வாதம என்னவென்றால் இந்த மாதிரி தோராயமாக சொல்வது இல்லாமல் அந்த துகள்களின் அளவீடுகளை துல்லியமாக கொடுக்கும் ஒரு தத்துவம் இருக்கின்றது அதை கண்டுபிடிக்கவேண்டும் என்பதே...

  மேலே சொன்ன விசயங்கள் சிலருக்கு புரிவதற்கு சிரமமாக இருக்கலாம்..இனிவரும் பகுதிகளில் இந்த அணுக்கள்,அனுதுகள்கள்,எலக்ட்ரான் ஒரு நிலையில் இருந்து மற்றொரு நிலைக்கு மாறும் போது என்ன நடக்கின்றது, போன்றவற்றை பார்க்கலாம்..

   புரிதல் பற்றி ஐன்ஸ்டீன் ஒரு அருமையான விளக்கம் கொடுத்து இருக்கிறார்.....ஒரு விசயத்தை நீங்கள் சரியாக புரிந்து கொண்டு இருக்கிறீர்கள் என்றால் அந்த விசயத்தை உங்களின் பாட்டியிடம் சொல்லி அதை அவருக்கு சரியாக புரிய வைக்க வேண்டும்..அப்படி நீங்கள் சொல்லும் விசயத்தை அவர் சரியாக புரிந்துவிட்டால்..அந்த விசயத்தை நீங்களும் சரியாக புரிந்து கொண்டு இருக்கிறீர்கள் என்று நம்பலாம்.....


   என்னை பொறுத்தவரை இது சாத்தியம் இல்லைதான்...என் பாட்டியிடம் சென்று இப்போது பாட்டி இந்த அனுவில் எலெக்ட்ரான் தனது இடத்தை மாற்றிகொள்வதால் ஏற்ப்படும் போட்டான் துகள் ஒளியுடன் வெளிப்படும்...அதை வைத்து அந்த துகளின் இருப்பிடத்தையும்,அதன் உந்தத்தையும் அளக்க முற்பட்டால் அந்த இரண்டையும் சரியாக அளக்க முடியாது,ஏனென்றால் துள்ளி ஓடும போட்டான் எங்கு எப்போ எப்படி போகும்னு தெரியாது என்றால், அவர் இவன் சின்ன வயதில்தான் என்னை கதை கேட்டு தொந்தரவு செய்தான்,இப்போதும் ஏதோ கதை சொல்லி தொந்தரவு செய்கிறான்..கடைசி காலத்தில் நிம்மதியாக இருக்க விடமாட்டன் போல என்று புலம்புவார்கள்..


   இந்த குவாண்டம் தத்துவமும் கொஞ்சம் சிக்கலான விசயம்தான்..அதிக கணித சமன்பாடுகள்,பலரின் தத்துவங்கள் நிறைந்து குழப்புவது..கொஞ்சம் பெரியம்மா,சின்னம்மா போன்ற தொடர் நாடகங்கள் பார்க்காமல் முயற்சி செய்தால் குறைந்தது இந்த தத்துவம் என்ன? இது என்ன சொல்கிறது? என்பதையாவது புரிந்து கொள்ளலாம்..

   சரி கதைக்கு வருவோம், இந்த ஐயபாட்டு கொள்கைக்கு முன்னரே ஐன்ஸ்டீன் Bohr டம் பல சோதனைகள் இந்த தத்துவம் சம்பந்தமாக  செய்ய சொல்லி இருந்தார்....இந்த நிலையில் தான் Heisenberg ஐயபாட்டு கொள்கையை வெளியிட்டதால் மனிதருக்கு கோபம் அதிகமானது...

   இந்த நேரத்தில் சொன்னதுதான் god does not play dice with the universe இதன் அர்த்தம முழுவதும் இந்த ஐயபாட்டு கொள்கைக்கு சரியாக பொருந்தும்..அதாவது கடவுள் இந்த உலகத்தை படைத்தார் என்று நம்பினால் அவர் ஒரு முறையாகத்தான் படைத்து இருப்பார்..அந்த வரையறுக்க தக்க ஒரு முறையை நமது அறிவியல் விதிகள் சரியாக விளக்க வேண்டும்.

    அதைவிடுத்து அதை சாத்தியமாக கொண்டு விளக்குவது ஒரு முழுமை இல்லை என்பதே அவரின் வாதம்....மேலும் the moon is still there if we don't look at it இதுவும் ஐயபாட்டு கொள்கைக்கு ஐன்ஸ்டீன் அவர்கள் சொன்னதுதான்..அதாவது நாம் அறிவியல் விதிகொண்டு எலெக்ட்ரான் சுழற்சியை துல்லியமாக கணிக்க முடியவில்லை என்றாலும் அந்த எலெக்ட்ரான் வரையறுக்க தக்க ஒரு சுழற்சியை கொண்டு இருக்கின்றது என்பதே.....அதைவிளக்கும் அறிவியல் விதியை நாம் கண்டுபிடிக்க வேண்டும் அவ்வளவே..
   அவரும் அந்த தத்துவத்தை கண்டுபிடிக்க தனது வாழ்நாளின் பெறும் பகுதியை செலவிட்டார் ......அவர இறக்கும் முந்தைய நாள மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு இருந்தும்கூட தனது அறையில் இருந்த அவருடைய மூக்கு கண்ணாடி,எழுதிக்கொண்டு இருந்த சில தகவல்களை கொண்டு வரும்படி சொல்லி அதில் வேலைகள் செய்தார்.

   ஐன்ஸ்டீன் இந்த குவாண்டம் தத்துவத்தை முழுமையான தத்துவம் இல்லை என மறுத்ததுக்கு காரணம் Bohr க்கும் அவருக்கும் எந்த ஒரு பிரச்சினையும் இல்லை...சொல்ல போனால் இந்த குவாண்டம் தத்துவம் உருவானதுக்கு Bohr தவிர்த்து பலபேர் காரணமாக இருக்கிறார்கள் அதில் ஐன்ஸ்டீனும் உண்டு...

ஆனால் general relativity theory க்கு தாத்தா ஒருவரே தலைவர்

   இறுதியில் யாருடனும் விவாதம் செய்து பலன் இல்லை என்பதை உணர்ந்தாரோ என்னமோ தெரியவில்லை, ஐன்ஸ்டீனும் அவரோடு சேர்ந்த இருவரும் சேர்ந்து குவாண்டம் தத்துவத்தை பற்றி EPR ( Einstein, . Podolsky . Rosen)  என்ற ஒரு அறிக்கையை வெளியிட்டார்கள்..(மற்றொன்றில் விளக்கமாக பார்க்கலாம்)...


  ஐன்ஸ்டீன் சொல்வதில் ஒரு தவறும் இல்லை...சரியான தொழில்நுட்பம் அல்லது ஒரு தத்துவம்  நமக்கு கிடைத்துவிட்டால் அனுத்துகளின் எல்லா தன்மையையும் ஒரே நேரத்தில் துல்லியமாக அளக்கலாம்...எப்போது இந்த நவீன தொழில்நுட்பம்(தத்துவம்) வருகின்றதோ அப்போது Heisenberg ன் ஐயபாட்டு கொள்கை விழுந்துவிடும்...

   அதோடு, ஐன்ஸ்டீன் குவாண்டம் தத்துவத்தை பற்றி என்ன நினைத்து இருந்தார் என்றால்,if quantum theory is correct , it signifies the end of physics as a science ஒரு முழுமையான சரியான குவாண்டம் தத்துவம் கண்டுபிடித்தால் அதுவே இயற்பியல் விதிகளில் கடைசியாக அமையும்...ஆனால் இது இன்றுவரை சாத்தியமாகவில்லை...ஏனென்றால் ஒரு முழுமையான தத்துவம் என்றால் அதில் அறிவியலின் நான்கு ஆதார விசைகள் இணைந்து செயல்படவேண்டும்..

   இதுக்குத்தான்  நம்மவர்கள் இப்போது பெறும்முயற்சி செய்துகொண்டு இருக்கிறார்கள்.... 

  ஐன்ஸ்டீன் தவிர சில பெரியவர்கள் குவாண்டம் தத்துவத்தை பற்றிசொல்லி இருக்கிறார்கள்..
if you are not completely confused by quantum mechanics, you do not understand it" சொன்னது john wheeler
roger penrose க்கும் Bohr க்கும் என்ன சொத்து பிரச்சினையோ தெரியவில்லை..."quantum mechanics makes absolutely no sense.."

   யார் என்ன சொன்னாலும் சரி இப்போதைய நிலையில் இருக்கும் மிகபெரிய மற்றும் உபோயோகப்படும்  தத்துவங்கள் என்றால் ஒன்று general relativity theory மற்றொன்று குவாண்டம் தத்துவம் தான்...இந்த இரண்டையும் இணைத்துத்தான் ஒரு முழுமையான அறிவியல் தத்துவத்தை உருவாக்க நினைக்கிறார்கள்..ஆனால் இந்த இரண்டுமே இணைய மறுக்கின்றன... 


(தொடரலாம் இப்போதைக்கு இதுமட்டும்)


19 comments:

பொன் மாலை பொழுது said...

Cute, go ahead!

குறையொன்றுமில்லை. said...

உங்க பதிவு பாத்து ஐன்ஸ்டீனைப்பற்றியும் குவாண்டம்
பற்றியும் தெரிந்துகொள்ள முயற்சிக்கிரேன்.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

சூப்பர்...

கணேஷ் said...

கக்கு - மாணிக்கம் said...

Cute, go ahead!///

நன்றி

கணேஷ் said...

Lakshmi said...

உங்க பதிவு பாத்து ஐன்ஸ்டீனைப்பற்றியும் குவாண்டம்
பற்றியும் தெரிந்துகொள்ள முயற்சிக்கிரேன்.///


தெரிந்து கொள்ளலாம்..எழுதுகிறேன்...நன்றி

கணேஷ் said...

பட்டாபட்டி.. said...

சூப்பர்...////

பார்த்திங்களா... இது நல்லாதானே இருக்கு..

அன்னைக்கு நீங்கள் சொன்ன மாதிரி இல்லைதானே..)))

ஜெயந்தி said...

குவாண்டம் தியரி பற்றி புரியும்படி சொல்லியிருக்கிறீர்கள். இனி வரும் காலங்களில் யாராவது முழுமையாக கண்டுபிடிப்பார்கள்.

கணேஷ் said...

ஜெயந்தி said...

குவாண்டம் தியரி பற்றி புரியும்படி சொல்லியிருக்கிறீர்கள். இனி வரும் காலங்களில் யாராவது முழுமையாக கண்டுபிடிப்பார்கள்.///

நீங்கள் சொல்வது போல எல்லாத்தையும் விளக்கும் ஒரு தத்துவத்தை(TOE) கண்டு பிடிப்பார்கள்..

Anonymous said...

தத்துவங்களும் ஜன்ஸ்டீன் பற்றிய நிறைய தகவல்களும் அறிந்துகொண்டேன்

Jayadev Das said...

ஐன்ஸ்டினின் Theory-அத்தனையுமே இயற்கையைப் பற்றிய மனிதனின் புரிதல்கள் எல்லாவற்றையுமே புரட்டிப் போட்டவை. அசாதாரணமானவை.நம் சிந்தனைக்கு அப்பாற்பட்டவை [Non-Intuitive]. அத்தனையுமே செயல் முறையில் நிரூபிக்கப் பட்டவை. [Especially the bending of light by a massive object, curvature of space etc.,] இருந்தபோதும் அவருக்கு நோபல் பரிசு Photo Electric Effect-க்குத்தான் கொடுத்திருக்கிறார்கள். ஏனென்று புரியவில்லை. மேலும் ஐன்ஸ்டின் நோபல் பரிசு ஏற்பு விழாவில் Photo Electric Effect பற்றி எதுவுமே பேசவில்லையாம். General Theory of Relativity பற்றித்தான் பேசினாராம். ஆச்சரியமாக இருந்தது.

கணேஷ் said...

Jayadeva said...

ஐன்ஸ்டினின் Theory-அத்தனையுமே இயற்கையைப் பற்றிய மனிதனின் புரிதல்கள் எல்லாவற்றையுமே புரட்டிப் போட்டவை. அசாதாரணமானவை.நம் சிந்தனைக்கு அப்பாற்பட்டவை /////

மேலே சொன்னதுதான் காரணம் என்று நினைக்கிறேன்..அவரது இந்த தத்துவம் எல்லாமே பெரிய அளவுகளுக்கான ஒன்று..மேலும் time dilation, போனறவற்றிக்கு ஒளியின் வேகத்தில் பயணிப்பது என்பது எல்லாம் முடியாத காரியம்..

எல்லோரும் நினைப்பது போல அவரின் தத்துவம் அன்றாட வாழ்க்கையில் பயன்படாமல் இல்லை..அவரது time dilation வைத்துதான் நமது செயற்கை கோள்கள் GPS ஐ சரியாக நேரத்திற்கு இயக்குகின்றன...

இந்த photo electric effect ஒருவேளை அவருக்கு மிகச் சாதாரணமானதாக இருந்து இருக்கலாம்))))

நன்றி

கையேடு said...

சிறப்பாக வந்திருக்கிறது கட்டுரை..
வாழ்த்துகள் தொடருங்கள்..


அருதியின்மைக் கோட்பாடு - அருதியின்மை (uncertainity principle - uncertainity) என்று வழங்குங்கள்.. பொருட்சிதைவு இருக்காது.

கணேஷ் said...

கையேடு said...

அருதியின்மைக் கோட்பாடு - அருதியின்மை (uncertainity principle - uncertainity) என்று வழங்குங்கள்.. பொருட்சிதைவு இருக்காது////

கருத்துக்கு நன்றி

திருத்தி கொள்கிறேன்..

Unknown said...

Einstein said that when speed increases time slows down. If so electromagnetic waves are traveling almost near to the light's speed. Then their time with respect to our time will be relatively slow. we are calculating their distance traveled per second by multiplying frequency and wave length.we are keeping the time constant, but we forgot to calculate the relative time of the particle which is moving in particular speed, so that we could get its exact frequency and wave length relative to the particles speed. what i am trying to say is likewise if the relativity principle is used in calculating the position and momentum of a electron it might give some good results. I don't know whether scientists are using this sort of calculation or not. And also am not a expert in physics.

Unknown said...

you are doing good

கணேஷ் said...

what i am trying to say is likewise if the relativity principle is used in calculating the position and momentum of a electron it might give some good results. I don't know whether scientists are using this sort of calculation or not. And also am not a expert in physics./////

relativity principle மிகப் பெரிய அளவுகளுக்கு மட்டுமே பொருந்தும்...ஆனால் எலெக்ட்ரான் இருப்பிடம் மற்றும் அதன் உந்தம் ஆகியவை மிக மிக சிறிய அளவுகள்...இதற்கு relativity தத்துவத்தை உபோயோகிக்க முடியாது என நினைக்கிறேன்..

ஆனால் நீங்கள் சொன்ன முறை ஏற்க்கனவே CERN ல் LCH ல் சோதித்து பார்த்துகொண்டு இருக்கிறார்கள்...இரண்டு அனுதுகல்களை கிட்டதட்ட ஒளியின் வேகத்தில் பயணிக்க செய்து மோதவைத்து சோதிக்கிறார்கள்...

நன்றி

Unknown said...

நன்றாக இருந்தது.உற்சாகமாக இருந்தது.நன்றி.நன்றி

Unknown said...

Super

Unknown said...

Super