திரும்பும்போது "இந்த முயற்சி யாரை கொல்ல?" என்றாள்
"வேறு யாரை உன்னைத்தான்.".என்றான் கணேஷ்
அவள் எதுவும் பேசவில்லை
"அதான் பிழைத்து விட்டாயே என்ன கவலை" என்றது நிஷி.
"இதை வீட்டில் யாரிடமும் சொல்லாதே" என்றான்
"சரி" என்று இறங்கி கொண்டாள்
திரும்பி வீடு வரும் போது அவனுக்கு அழைப்பு....அந்த வாகனம் பிடிக்கப்பட்டு இருப்பதாக்...
வேகமாக அந்த காவல் நிலையத்திற்கு சென்றான்.அதே வாகனம் வெளியில் நின்று இருந்தது....சிறைக்குள் இரண்டு பேர் அடைத்து வைக்கப்பட்டு இருந்தனர்.
"ஏதாவது தகவல் சொன்னார்களா?" என்றான்
"இல்லை சொல்ல மறுக்கிறார்கள் எப்படியும் காலைக்குள் சொல்லவைத்து விடுவோம்" என்றார் அங்கு இருந்த அதிகாரி
"விவரம் சொன்னவுடன் என்னை தொடர்பு கொள்ளுங்கள்" என்று சொல்லிவிட்டு கிளம்பினான்
"என்ன குற்றத்தை ஒப்புகொண்டார்களா?" என்றது நிஷி
"இல்லை" என்றான்
"அவர்கள் புனிதாவை குறிவைத்தர்கள்..நாம் மாட்டிகொண்டோம்" என்றது நிஷி
"எல்லாம் நாளை காலையில் தெரியும்" என்றான்
அதற்குள் அந்த வாகனம் பற்றிய விவரம்.அந்த ஆட்களின் விவரம் பற்றி அறிந்த காவல்துறை அவர்கள் மூவரும் சந்திக்கும் இடத்தை கண்டுபிடித்து,அங்கு இருந்த அந்த செல்கள் அடங்கிய பெட்டியையும் கைப்பற்றியது.
மறுநாள் ஊடகங்களில் பிரபலமாக அந்த மூவரின் புகைப்படம் இருந்தது..கொலைக்கு காரணமாக.....அந்த அழியா செல்களின் மூலமாக உயிர் அழியாத ஒன்றை உருவாக்கினால் கடவுளின் கோட்பாட்டுக்கு பங்கம் வரும் என்பதால் ஒரு சிறு இயக்கத்தை சேர்ந்த அவர்கள் அந்த செல்களை கடத்தியதாகவும்,அப்போது பிரச்சினை ஏற்பட்டதால் அந்த விஞ்ஞானியை கொல்ல நேர்ந்ததாகவும் அந்த மூவரும் ஒப்புகொண்டு இருந்தனர்.
மறுநாள் அந்த பெட்டியை பாதுகாப்பாக திறக்கும் பொருட்டு அய்வுகூடத்திற்கு கொண்டுவரப்பட்டது.
முதல வாய்ப்பு புனிதாவுக்கு கொடுக்கப்பட்டது...அவள் இந்த கொலை விவகாரம் ஒரு முடிவுக்கு வந்ததில் இருந்து கொஞ்சம் நிம்மதியாக ..இனிமேல் இந்த வேலையும் வேண்டாம் ஒன்னும் வேண்டாம் என்று முடிவெடுத்து இருந்தாள்..இதனால் அதன் முன் நின்று பார்த்துவிட்டு "எனக்கு எப்படி என்று தெரியாது..அந்த சந்தேக எழுத்துக்கள் கொஞ்சம் சிக்கலானவை" என்று சொல்லி விட்டு நகர்ந்தாள்
ஒருமுறை அந்த எழுத்துக்கள் பொதிந்து இருக்கும் செல்களை பற்றி அறிய முனைந்தது நிஷி..
"எல்லாம் கொஞ்சம் புரிகின்ற மாதிரி இருந்தாலும் அந்த எழுத்துக்கள் பொதிந்த செல்கள் எங்கே என்பதுதான் இப்போது குழப்பம்" என்றது நிஷி
"ஒருவேளை இறுதியில் ஒட்டகசிவிங்கி படம் போட்டு இருப்பதால் அதன் செல்லை படித்தால் விடை கிடைக்குமா?" என்றான் கணேஷ்
"வாய்ப்பு இல்லை அதன் செல்களை படிப்பது தேவை இல்லாத விசயம் அதே நேரத்தில் இந்த படம் ஒன்றை உணர்த்துவதற்காக கொடுக்கப்பட்டு இருக்கின்றது..அதை கண்டுபிடிக்க வேண்டும்" என்றது நிஷி
நிஷி மெதுவாக அங்கு இருந்த மேசையில் உலாவியது...
"நிஷி ஏதாவது செய்" என்றான் கணேஷ்
அதை காதில வாங்காமல் அது உலாவியது...
வேகமாக ஓடி வந்து "நான் உடனே அந்த சடலத்தை பார்க்கவேண்டும்" என்றது நிஷி
"முதலில் என்னை அங்கு அழைத்து போ நான் அப்புறம் சொல்கிறேன்" என்றது
"புனி சில செல்களை பிரித்து எடுக்க தேவையான உபகரணங்களை எடுத்துகொண்டு நீயும் எங்களோடு வா" என்று நிஷி சொல்ல கிளம்பினார்கள்
"எதுக்கு நிஷி இப்போ அந்த சடலம்" என்றான் கணேஷ்
"அதில்தான் அந்த சங்கேத மொழி இருக்கும் செல்கள் இருக்கின்றன"
"எப்படி உறுதியாக சொல்கின்றாய்?"
"அந்த ஒட்டக சிவிங்கியின் படம் அதைத்தான் உணர்த்துகின்றது"
"எப்படி?" என்றான்
"bio mimicry என்ற ஒரு சமாச்சாரம் இருக்கிறது..அதாவது இயற்கையில் உள்ளவற்றை பார்த்து மனிதன் தனது அறிவால் தனது தேவை,முன்னேற்றத்துக்காக அதைபோல செயற்கையாக உருவக்கிகொள்வது..இந்த முறையில் மனிதன் சிலவற்றை உருவாக்கி மிகுந்த பயனும் பெற்று இருக்கிறான்" என்றது நிஷி
"நீ சொல்ல வருவது பறவையை கண்டான் விமானம் படைத்தான் என்ற பாடலின் அர்த்தத்தையா?" என்றான்
"ஆமாம் அதே விசயம்தான் தமிழ் மக்கள் கொடுத்து வைத்தவர்கள் எல்லாமே ஏற்கனவே உங்கள் முன்னோர்களால் சொல்லப்பட்டு இருக்கின்றது..." என்றது நிஷி
"சரி இவர் என்ன அந்த முறையில் செய்து இருக்கிறார் இந்த செல்களின் விசயத்தில்?" என்றான்
"அதை போல ஒரு எளிய முறையை முயன்று இருக்கிறார்..ஒட்டகச்சிவிங்கி என்றதும் நினைவுக்கு வருவது அதன் கழுத்துதான்..அவர் அந்த எழுத்துக்களை அமைத்த செல்களை அவரது கழுத்தில் எங்காவது பொதித்து வைத்துஇருப்பதைத்தான் குறிப்பால் உணர்த்தி இருக்கின்றார்" என்றது நிஷி
"சரி அப்படியே அந்த செல்கள் கிடைத்தாலும் அதில் பெட்டியை திறக்க உதவும் எழுத்துக்கள் எப்படி கண்டுபிடிப்பது?" என்றான்
"அது புனிதாவுக்கு தெரியும்" என்றது நிஷி
"புனிதா நீ இவ்வளவு அறிவாளி என்று நான் நினைக்கவில்லை" என்றான்
"இதில் அறிவாளி என்பதுக்கு இடமில்லை இதே விசயத்தை ஒருவர் ஏற்க்கனவே செய்து இருக்கிறார்...venter என்பவர் தான் உருவாக்கிய செயற்கை genome ல் சில வார்த்தைகளை இந்த முறையில் எழுதி இருக்கிறார்..அதாவது செல்லில் இருக்கும் DNA உள்ள ATCG என்ற ந்யூக்ளியோடைடுகள் இணைந்தால் ஒருவித அமினோ அமிலங்களை உருவாக்கும்.அந்த அமினோ அமிலங்களின் பெயரில்தான் அவர் சொல்ல வரும் வார்த்தைகளை சொல்லி இருப்பார்...நமது வார்த்தைகளை சொல்ல தேவையான அமினோ அமிலங்களுக்கு ஏற்ப அந்த ந்யூக்ளியோடைடுகளை செயற்கையாக தேவையான படி மாற்றியமைக்க வேண்டும்..அவ்வளவுதான் எனவே இதே முறையை பயன்படுத்தி இந்த எழுத்துக்களை கண்டு பிடிப்பது கஷ்டமில்லை" என்றாள்
அந்த சடலத்தின் கழுத்தை பார்த்தார்கள் முன்புறத்தில் ஒரு இடத்தில மட்டும் கொஞ்சம் நிறம் மாறியிருந்தது
"நல்லவேளை பிரேத பரிசோதனையின் போது "Y" வெட்டு கொஞ்சம் நீளமாக வெட்டி இருந்தால் இதுவும் கூட சேர்ந்து போய் இருக்கும்...புனி அந்த இடத்தில உள்ள செலகளோடு சேர்த்து அவரது உடம்பின் சில செல்களையும் எடுத்துகொள் குழப்பம் வந்தால் இரண்டையும் பிரித்து அறிந்து கொள்ளலாம்" என்றது நிஷி
முதலில் அவருடைய செல்களை சோதனை செய்து குறிப்பு எடுத்தாள்...பின்னர் அந்த நிறம் மாறிய இடத்தில இருந்து எடுத்த செல்களை சோதித்தாள்...அதில் இருந்து அந்த செல்களின் உல் அமைப்பு செயற்கையான முறையில் வடிவமைக்கப்பட்டு அதான் வளர்ர்ச்சி தடை செய்யப்பட்டு இருந்தது...அதாவது இந்த எழுத்துக்களை குறிப்பிட மட்டுமே அந்த செல்கள்........அதில் உள்ள DNA வின் இணைப்பை ஆராயும்போது அவளுக்கு புரிந்தது..அதை இணைத்து இருக்கும் ATCG என்ற எழுத்துக்கள் எல்லாமே ஒரே கோர்வையாக இருந்ததன...
TCTTCC TCGCCT CCCTCG CCGCCA TCGTCC TCTTCC TCGCCT
புனிதா இந்த எழுத்துக்களை நிஷியிடம் கொடுத்தாள்
நிஷி அதை ஒருமுறை பார்த்துவிட்டு....இந்த மாதிரி இணைந்து இருந்தால் அதில் இருந்து வெளிப்படும் அமினோ அமிலங்களின் பெயர்களை வரிசையாக சொல்ல ஆரம்பித்தது..அதை புனிதா எழுதினால்
Arginine,Glycine,Serine,Arginine,Arginine Serine Arginine Glycine Glycine Serine Glycine Glycine Serine Arginine...
இதை எழுதிய புனிதா கொஞ்சம் குழம்பினால்..அவள் எதிர்பார்த்தது.. ஒரு வார்த்தை..ஆனால் இதில் இருப்பது அதிகமான அமினோ அமிலங்களின் பெயர் இதில் இருந்து எப்படி பெயரை கண்டு பிடிப்பது ???
"எப்படி நிஷி இதில் இருந்து கண்டுபிடிக்க?" என்றாள்
"இதில் ஒரே மாதிரி பெயர் கொண்ட அமிலங்களை சரியாக பிரித்து எழுது" என்றது
எழுதினாள்......
Arginine Glycine Serine
Arginine Glycine Serine
Arginine Glycine Serine
Arginine Glycine Serine
Arginine Glycine ?
நிஷி ஒரு முறை அந்த வரிசைபடுத்திய வார்த்தைகளை பார்த்தது..
அந்த சந்தேக எழுத்து "Serine" என்றது,
"எப்படி இவ்வளவு உறுதியாக சொல்கின்றாய்,அதில் ஒன்று விடுபட்டு இருப்பதினால் அந்த முடிவுக்கு வந்தியா?" என்ன என்றாள்
"இல்லை நான் சில நாட்களுக்கு முன்னர் மனிதன் எந்த மாதிரியெல்லாம் சங்கேத வார்த்தைகளை அமைப்பான் என்ற சம்பந்தமான புத்தகம் படித்தேன்..அதன்படி இதுதான் சரி நீ முயற்சி செய்து பார்" என்றது நிஷி
அருகில் இருந்த கணேஷ் "வேகமாக அதை திறந்து இந்த விசயத்தை இப்பவே முடித்துவிட்டு போகலாம்" என்றான்
"எங்கே போக?" என்றாள்
"உன் வீட்டுக்கு"
"எதுக்கு?"என்றாள்
"உன் பெற்றோரிடம் என் கல்யாண விசயமாக பேசவேண்டும்."
புனிதா கொஞ்சம் ஆச்சர்யமாகி பின் சிரித்தாள்
"உங்களின் காதலுக்கு இதுவா நேரம் வேகமாக திறந்து அந்த செல்கள் வளர்ச்சி அடைந்து இருக்கின்றதா என்று பாருங்கள்..அதுதான் எனக்கு முக்கியம் என்னை போலவே ஒரு உயிர் பற்றி எனக்கு ஆர்வம அதிகம்" என்றது
"இதுதான் புனிதா நீ செய்யும் கடைசி வேலை இந்த ஆய்வுகூடத்தில் அதற்கு பிறகு நீ இங்கு வேலை செய்து மீண்டும் இந்த மாதிரி பிரச்சினையில் மாட்ட வேண்டாம்" என்றான்
"சரி சரி நீ அவளை வீட்டில் பூட்டி வைத்துகொள் இப்போது அதை திறக்க சொல்" என்றது நிஷி
அந்த எழுத்துக்களை அங்கு இருந்த திரையில் அழுத்தினாள்.
சிறு சத்தத்துடன் அந்த பெட்டி திறந்தது,உள்ளே ஒரு சிறிய கண்ணாடி கிண்ணம் ஒன்றில் ஒரு திரவம் போன்று இருந்தது..
"அதை உடனடியாக சோதித்து பார் ஏதும் செல்களில் வளர்ச்சி இருக்கின்றதா?" என்றது நிஷி ஆர்வமாக
அதை எடுத்து கொண்டு போய் நுண்நோக்கியில் பார்த்தாள்
"என்ன வளர்ந்து இருக்கா?"என்றது நிஷி
"இல்லை"!!!
0 comments:
Post a Comment