சில ஆறுதல்கள்...

      விடுமுறைக்கு ஊருக்கு சென்றால்.. அடுத்த நாளில் செய்யும் முக்கியமான வேலை என்றால்.. அவளை பார்த்து ஒரு புன்னகையை பரிசாய் பெறுவதுதான்....பேசமாட்டாள்.......அந்த வழியாக நான் போகும்போது பார்த்து சிரிப்பாள்....ஒரே ஊரில் இருந்துகொண்டு காதலிப்பதில் உள்ள பிரச்சினைகளில் இதுவும் ஒன்று..வெளிப்படையாக எதையும் செய்ய முடியாது...

      பொதுவாக காலையில் எப்போதும் அதிக நேரம் தூங்கினால் அது பிடிக்கும்,இது பிடிக்கும் என்று தூங்க விடாமல் என் வீட்டில் எழுப்பி விடுவார்கள்..ஆனால் அன்று யாரும் எழுப்பவில்லை....ஆறுதலாக தூங்க நினைத்தபோது வழியில் சிலர் சத்தமாக பேசிக்கொண்டு செல்வது கேட்டது...

     காலையில் காட்டுக்கு வேலைக்கு செல்வார்கள் என்று நினைத்தேன்..ஆனால் தொடர்ந்து ஆண்கள்,பெண்கள். பேசிக்கொண்டே போகும் குரல் கேட்டது....

      எழுந்து பார்த்தால் என் வீட்டில் யாரையும் காணோம்...வெளியில் பார்த்தால் ஆட்கள் சென்று கொண்டு இருந்தார்கள்..என்னவென்று கேட்க அந்த பிரதான பாதைக்கு செல்ல.... அந்நேரம் என்னவள் அவள் தோழியுடன் வந்து கொண்டு இருந்தாள்..

      நான் பொதுவாக அவர்களை நோக்கி “எல்லாரும் எங்கே போகிறார்கள்?” என்று கேட்டு..
இப்போதாவது அவள் பேசுவாள் என்ற ஆவலில் இருக்க ....இப்போதும் பேசவில்லை...அவளுடைய தோழிதான் ஊரில் உள்ள ஒருவர் குழாய்பதிக்க பள்ளம தோண்டிய இடத்தில் இருந்து ஒரு புதையல் கிடைத்து இருக்கிறதாம் அதை பார்க்கத்தான் எல்லோரும் போய்கிட்டு இருக்கோம்..நீயும் வாயேன் என்று சொல்லிவிட்டு நடந்தார்கள்.....

    அந்த புதையல் கிடைத்து இருக்கும் இடத்திற்கு சென்றபோது, கிட்டதட்ட ஊரில் உள்ள பாதிபேர் அங்குதான் இருந்தார்கள்...அவர்களுக்கு மத்தியில் ஒருவர் செவ்வக வடிவ கல்லை தண்ணீர் ஊற்றி அதன் மேல் இருந்த மண்ணை கழுவி கொண்டு இருந்தார்..

     அது முழுவதும் ஒரே கல்லால் செய்யப்பட்டு இருந்தது.... எந்த பக்கம் திறக்க வழி இருக்கிறது என்று அவர் பார்க்க...அதன் ஒரு பக்கத்தில் நான்கு கல்லாலான வில்லைகள் இருந்தன...நான்கும் ஒரு சதுர வடிவ slot ல் நகரும் வண்ணம் இருந்தது...அதாவது அந்த நான்கு எழுத்துக்களை நமக்கு தேவையானபடி அந்த slot ல் மாற்றியமைக்கலாம்.....அதே நேரத்தில் அந்த பகுதியில் இருந்து வெளியில் எடுக்க முடியாது...

     அதில் இருந்த எழுத்துக்கள் சு,பு,செ,கு. அவர் இதை பார்த்துவிட்டு அந்த மேல் பகுதியை திறக்கின்றதா என்று இழுத்து பார்த்தார் அது வரவில்லை...மற்ற பக்கங்களை சோதித்து பார்த்தார்.....இந்த எழுத்துக்கள் இருந்த பக்கத்தை தவிர மற்ற பக்கங்கள் எல்லாம் ஒரே மாதிரியாக சமமாக இருந்தது...

       கொஞ்சம் முயற்சியுடன் அதை தூக்கி ஒரு திண்டின் மீது வைத்தார்..அதற்குள் ஊர் பெரியவர்கள்...இது சில எழுத்துக்களால் பூட்டப்பட்டு இருக்கிறது..இதை சுத்தியல் கொண்டு உடைத்துதான் பார்க்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்து இருந்தனர்....

      அந்த கல்பெட்டி அருகே சென்று பார்த்தேன்...அந்த எழுத்துக்கள் இருக்கும் பக்கதில்தான் அது திறப்பதற்கு உண்டான சாத்தியம் தெரிந்தது...அந்த எழுத்துக்களை கொஞ்சம் நகர்த்தி பார்த்தேன்..அதன் இடுக்குகளில் மண் நிரம்பி இருந்ததால் நகர மறுத்தன..தண்ணீர் வைத்து சுத்தபடுத்திய பின்னர் ஒரு சிறு சத்தத்துடன் நகர்ந்தது...

       அதற்குள் ஒருவர் ஒரு சுத்தியலையும் உளியையும் எடுத்து வந்து இருந்தார்..அதே நேரத்தில் கொஞ்ச தூரம்தள்ளி இருந்த பெரியவர்கள்..இதை கலெக்டரிடம் ஒப்படைக்கலமா? தாசில்தாரிடம் கொடுக்கலாமா? என்ற விவாதத்தில் இருந்தனர்...சுத்தியல் வைத்து இருந்த மனிதர் அந்த பெரியவர்களின் கட்டளைக்கு காத்து இருந்தார்...

      அதற்கு முன் நான் அந்த பெர்யவர்களிடம் சென்று "இதை நான் ஒரு முறை திறக்க முயற்சி செய்து பார்க்கட்டுமா?" என்று கேட்க..."அது உன்னால் முடியாதுப்பா..இது பழைய காலத்து தந்திரமுறை...உடைப்பதுதான் எளிது" என்றார் அதில் ஒருவர்.

     "உடைப்பது இறுதி தீர்வாக இருக்கட்டுமே,அதற்கு முன் நான் கொஞ்சம் முயற்சித்து பார்க்கிறேனே"..என்று சொல்ல ஒருவழியாக சம்மதித்தார்கள்..... சுற்றி கூட்டம் கூடி இருக்க..அதில் என்னவளும் இருந்தாள்..ஒரு ஓரத்தில் என் பாட்டியும் இவன் என்ன செய்யபோகிறான் என்று பார்த்து கொண்டு இருந்தார்கள்...

        முதலில் அதில் இருந்த எழுத்துக்களை பார்த்தேன்..சு பு செ கு ...இந்த நான்கு எழுத்துக்களையும் எந்த வகையிலாவது மாற்றி அமைத்தால் ஒரு பொருள்படும் சொல்வருகின்றதா எனப்பார்த்தேன்...ஒரு அர்த்தம இருந்தது “புகு” ..இது தவிர மற்ற இரண்டு எழுத்துக்கள் ஒரு அர்த்தம இல்லாமல் போகின்றன.......அந்த “புகு” என்ற சொல் சரியாக இருக்குமோ என்ற சந்தேகத்தில் அதனை வரிசையாக அமைத்து அதை இழுத்து பார்த்தேன் திறக்கவில்லை..

       சற்று நிமிர்ந்து பார்க்க என்னவள் என்னையே பார்த்து கொண்டு இருந்தாள்....பெரியவர்கள் வேறு அதை உடைக்கும் அவசரத்தில் பார்த்தார்கள்..

     மீண்டும் அந்த எழுத்துக்களில் முயற்சி செய்தேன்..இந்த ஒவ்வொறு எழுத்துக்களும் தனியாக எதையாவது குறிக்கின்றதா? என பார்த்தால்...அதற்கும் வாய்ப்பு இல்லாமல் இருந்தது...

        இந்த எழுத்துக்களை ஒரு வரிசையில் அமைத்தால் மட்டுமே பெட்டி திறக்கும்...அப்படி என்றால் இந்த எழுத்துக்கள் கண்டிப்பாக ஒரு வரிசையில் இருக்கவேண்டும், அல்லது வரிசையில் இருக்கும் ஒன்றை குறிக்க வேண்டும்...

        இந்த எழுத்துக்கள் ஒரு வரிசையில் இருக்க கண்டிப்பாக வாய்ப்பு இல்லை..அப்படியானால் இது வரிசையில் இருக்கும் ஒன்றை குறிக்கின்றது...அந்த ஒன்றை கண்டுபிடிக்க வேண்டும்...

        முதலில் பொதுவாக வரிசையில் அமைக்கப்பட்டு இருக்கும் விசயங்களை வைத்து தீர்க்க முடிகின்றதா என்று பார்த்தேன் ..இல்லை..தமிழ் மாதங்கள்,ராசிகள்,கிழமைகள்,எண்கள்..இதில் ஏதும் அடங்கவில்லை...வேறெந்த வரிசையை அடிப்படையாக வைத்து இது அமைக்கப்பட்டு இருக்கும்??...அங்கு இருந்த பெரியவர்களிடம் கேட்டால்....இதுக்குத்தான் முதலிலேயே உடைக்கலாம் என்று சொன்னேன்....எனச்சொல்லி உடைக்க ஆரம்பித்து விடுவார்கள்...

        அதே வரிசையில் கோள்களை வைத்து பார்த்தேன்..எழுத்துக்கள் சரியாக பொருந்தின...அதாவது சூரியனில் இருந்து வரிசையில் பார்த்தால்..புதன்(mercury),சுக்கிரன்(venus),செவ்வாய்(mars),குரு(jupiter)..இதில் வரும் முதல் எழுத்துக்கள் சரியாக பொருந்த வேகமாக அதை அமைத்து இழுத்து பார்க்க..அது திறக்க மறுத்தது..என்ன காரணம்..எழுத்துக்கள் எல்லாம் சரியாக பொருந்தியும் ஏன் திறக்கவில்லை?? என்று யோசிததபோதுதன் தெரிந்தது...நமது முன்னோர்களின் நவகிரக அமைப்புபடி பார்த்தால் கோள்களின் வரிசை வேறு.... அதன்படி பார்த்தால் செவ்வாய்,புதன்,குரு,சுக்கிரன்...இதன் எழுத்துக்களை வரிசையில் அமைத்ததில் மேலே இருந்த மூடி கொஞ்சம் ஆடியது...

   அதை பிடித்து இழுக்க திறந்து கொண்டு தனியாக வந்தது..இதை பார்த்தவுடன் சுற்றி இருந்த பெரியவர்கள் உட்பட எல்லோரும் உள்ளே என்ன இருக்கின்றது என்று ஆர்வமாக பார்த்தார்கள்...எல்லோரும் பார்த்த வேகத்தில் பின்வாங்கினார்கள்..

        உள்ளே இருந்தது..பழங்காலத்து ஓட்டை நாணயங்கள்....ஒரு பெரியவர் வந்து அதை முழுவதும் கிளறி பார்த்துவிட்டு..எல்லாம் ஓட்டை நாணயங்கள்... .....கஷ்டப்பட்டு திறந்த கணேஷுக்கு இதை கோர்த்து ஒரு மாலை போடுங்கள் என்று சொல்ல எல்லாரும் சிரித்தார்கள்...

       இப்போது என்னவளை பார்த்தேன் அவள் சிரிக்கவில்லை....கண்களில் கோபம தெரிந்தது...இருவரும் சிறிது நேரம் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு இருந்தோம்...

      சிலர் அந்த நாணயங்களை பார்த்துவிட்டு சென்றனர்..யாரும் இதை எப்படி திறந்தாய் என்று கேட்கவில்லை...ஒருவழியாக கூட்டம் குறைந்து இருந்தது..

       என்னருகில் வந்தாள்...சில நாணயங்களை கையில் எடுத்து பார்ப்பதுபோல பார்த்துகொண்டே "சொல் கணேஷ் இதை எப்படி நீ திறந்தாய் என்று? என்றாள்...

13 comments:

test said...

உங்க கதைகள் நல்லா இருக்கு!
வாழ்த்துக்கள்! :)

கணேஷ் said...

ஜீ... said...

Super! :)///

நன்றி..

கணேஷ் said...

KANA VARO said...

அருமை!////

நன்றி..

கருடன் said...

இந்த புள்ளை நிறைய சிந்திக்குதுபா... அப்பொ கண்டிப்பா நீங்க கொஞ்சமா தான் படிச்சி இருக்கனூம்... :))

கணேஷ் said...

TERROR-PANDIYAN(VAS) said...

இந்த புள்ளை நிறைய சிந்திக்குதுபா... அப்பொ கண்டிப்பா நீங்க கொஞ்சமா தான் படிச்சி இருக்கனூம்... :))///

நீங்களும் இங்கு நிறையா சிந்திச்சு...என்னைபோலவே 13 பெயில் ன்னு நிரூபிசசிட்டிங்களே))))))

ஆனந்தி.. said...

எப்படியோ காதலியவும்,பாட்டியும் உன் கிராமத்துக்கதையில் ஆஜர்)))..ஆனால் நல்லா சுவாரஸ்யமாய் சொல்ற சகோதரனே..கோள்கள்,நவகிரகங்களின் வரிசை வச்சு அழகா ஸ்கிரிப்ட் தயார் பண்ற வெரி குட் talent உனக்கு இருக்கு...கீப் இட் அப்...)) இன்னும் குவாண்டம் படிக்கலை...(((

சிட்டுக்குருவி said...

நல்லா எழுதியிருக்கீங்க கணேஷ்

வாழ்த்துகள்

கணேஷ் said...

ஆனந்தி.. said...

எப்படியோ காதலியவும்,பாட்டியும் உன் கிராமத்துக்கதையில் ஆஜர்)))..ஆனால் நல்லா சுவாரஸ்யமாய் சொல்ற சகோதரனே..கோள்கள்,நவகிரகங்களின் வரிசை வச்சு அழகா ஸ்கிரிப்ட் தயார் பண்ற வெரி குட் talent உனக்கு இருக்கு...கீப் இட் அப்...)) இன்னும் குவாண்டம் படிக்கலை...(((/////


உங்களின் கருத்துக்கு நன்றி

கணேஷ் said...

சிட்டுக்குருவி said...

நல்லா எழுதியிருக்கீங்க கணேஷ்

வாழ்த்துகள்////

வாழ்த்துக்கு நன்றி...

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

வாவ்..

கணேஷ் said...

பட்டாபட்டி.. said...

வாவ்..////

என்ன நமக்குள்ளே ஏதும் வாய்க்க பிரச்சினையா...ஒரே வார்த்தையில் கருத்து சொல்லிட்டு போறீங்க)))))

நன்றி

சௌந்தர் said...

யே நீ இதுக்கு தான் அடி கடி ஊருக்கு போறியா...

கணேஷ் said...

சௌந்தர் said...

யே நீ இதுக்கு தான் அடி கடி ஊருக்கு போறியா...////


எல்லாம் கற்ப்பனை...இதுக்கே டிடையலு கேட்டா எப்புடி??))))