பயமா? பக்தியா? தெரியவில்லை...இதுவரை கோயிலில் உள்ள அந்த குகைக்குள் யாரும் போனதாக இல்லை.....குகை என்று சொல்வதைவிட....கோயிலுக்குள் கிழே இருக்கும் ஒரு வழிப்பாதை...
பல வருடங்களுக்கு முன் அந்த கோயில் மிக பிரபலமாக இருந்ததாம்....திருவிழாவின் போது யானை கட்டி தேர் இழுத்ததாக சொல்வார்கள் என் பாட்டி.
நான் சிறு பிள்ளையில் பார்த்து இருக்கிறேன்.....மிகப்பெரிய தேர் ஊரின் மையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும்......அந்த இடத்திற்கு தேரடி என்ற பெயர்.....மாலையில் பெரியவர்கள அமர்ந்து கதை பேசுவார்கள்..அதன் நான்கு சக்கரங்களுக்கு கிழே ஒரு பெரிய கல்லை வைத்து இருப்பார்கள்..எனக்கு தெரிந்து நான் பார்த்து அந்த கோயிலுக்கு விழாக்கள் நடந்ததாக இல்லை..அதற்கு பிறகு வந்த நாட்களில்..அந்த தேரின் பாகங்கள் ஊரில் உள்ளவர்களால் அடுப்பு எரிக்க பயன்படுத்தப்பட்டு...இப்போது அந்த கல் மட்டும் இருக்கின்றது..
நான் சிறு பிள்ளையில் பார்த்து இருக்கிறேன்.....மிகப்பெரிய தேர் ஊரின் மையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும்......அந்த இடத்திற்கு தேரடி என்ற பெயர்.....மாலையில் பெரியவர்கள அமர்ந்து கதை பேசுவார்கள்..அதன் நான்கு சக்கரங்களுக்கு கிழே ஒரு பெரிய கல்லை வைத்து இருப்பார்கள்..எனக்கு தெரிந்து நான் பார்த்து அந்த கோயிலுக்கு விழாக்கள் நடந்ததாக இல்லை..அதற்கு பிறகு வந்த நாட்களில்..அந்த தேரின் பாகங்கள் ஊரில் உள்ளவர்களால் அடுப்பு எரிக்க பயன்படுத்தப்பட்டு...இப்போது அந்த கல் மட்டும் இருக்கின்றது..
பெரிய கோயில், நிறைய சிலைகள் இருந்தன,ஒரு கட்டத்தில் எல்லாம் திருடுபோய் இன்று ஒரு சில மட்டுமே மிஞ்சி இருக்கின்றன..கோயிலின் கோபுரத்தை சுற்றியும் செதுக்கப்பட்டுள்ள சிற்ப்பங்கள் நேர்த்தியானவைகள்...உள்புறம் பெரிய தூண்கள் வைத்து கட்டப்பட்ட கோயில்..,...வெளியேயும் பெரிய தூண்கள் இருந்ததாகவும்...சில காரணங்களுக்காக அதை பிடுங்கி விட்டார்கள் என்றும் பாட்டி சொல்லி இருக்கிறார்கள்..
இன்றும் அந்த கோயிலை சுற்றி பெரிய அளவிலான கல் தூண்கள் கிடக்கின்றன...அதை யாரும் பெயர்த்து எடுத்து கொண்டு போக முடியாது என்பதே அதற்கு காரணம்...
மூலவர் பெருமாள்..சிறுவயதில் போய் இருக்கிறேன்...அதற்கு பிறகு அந்த கோயிலில் பூஜை நடந்ததாக நினைவில்லை....ஒரு நேரத்தில் கோயிலின் மீது இருந்த கலசம் காணமல் போனது..இப்போது இருப்பது வெறும் மூலவரும்,சில அழகான சிற்பங்களும், அந்த மர்ம குகையும்தான்...
எல்லோரின் நம்பிக்கையும் அந்த குகைக்குள் சில ரகசியங்கள் இருகின்றன என்பதுதான், சிலர் புதையல் இருப்பதாக சொல்லுவார்கள்..ஆனால் இதுவரை யாரும் உள்ளே போனதில்லை..
காரணம் அந்த குகையின் வாசலில் இருந்த ஒரு கல்வெட்டில் குறிப்பிட்ட சில விசயங்கள் ....நான் பலமுறை என் பாட்டியிடம் கேட்டு இருக்கிறேன்..அந்த குகைக்குள் என்ன இருக்கின்றது என்று?
“அது எதுக்கு உனக்கு? ஏதும் ஆராய்ச்சி செய்யப்போகிறேன் என்று உள்ளே போக முயற்ச்சிக்கதே” என்று கண்டிக்க மட்டுமே செய்வார்கள்..இதுதான் அந்த குகைக்குள் என்ன இருக்கிறது? என்று பார்க்கும ஆர்வத்தை அதிகமாக்கியது...
அதற்கு ஏற்ற நேரமும் வந்தது, ஊரில் ஒருவரின் திருமணத்திறக்கு வீட்டில் உள்ள அனைவரும் சென்றுவிட..தனிமையில் இருந்த எனக்கு அந்த குகைக்குள் செல்லும் எண்ணம வந்தது..இது என் வீட்டுக்கு தெரிந்தால் மட்டும் அல்ல ஊரில் யாருக்கு தெரிந்தாலும் பிரச்சினைதான்..அடுத்த நொடியே வீட்டில் தகவல் கொடுத்து விடுவார்கள்..
அதனால் நான் செய்யும் எல்லா வேலைகளையும் மறைத்து செய்ய வேண்டியது இருந்தது, உள்ளே போவதற்கு தேவையான பொருள்கள் என்னவென்று யோசித்ததில்..இரண்டு டார்ச் லைட்டுகள்,ஒரு சிறிய கம்பு மட்டும் போதும் என நினைத்தேன்....
யாருக்கும் தெரியாமல் கோயிலுக்குள் நுழைந்தேன், அந்த குகையின் வாசல் மண் மூடி மேடு ஏறியிருந்தது.. அந்த கல்வெட்டு செவ்வகவடிவ கல்லில் செதுக்கி அதன் உள்நுழையும் இடத்தில் வைக்கபட்டு இருந்தது...
அதில் ஒரு சில வரிகள் அமைந்த பாடலும் அதற்கு கீழ் ஒரு அட்டவணையும் இருந்தது...அது...
உயிர்வளி காக்க உயிர்வழி சென்று
ஆயுதமெடுத்தால் மெய்வழி கிட்டும்
மெய்கீழ்வழி சென்றால் உயிரினும் மேலான
மெய்ரகசியம் வெளியாய் இருக்கும்
பலவழி இருக்குமிதில் மனவழி சென்றால்
உயிர்வளிதன் மெய்யின்வெளி நீங்கும்
இதில் இப்படி எழுதி இருப்பதற்கு பயந்துதான் யாரும் உள்ளே செல்லவில்லை.....ஒருவேளை அதில் என்ன எழுதி இருக்கின்றது என்பதை புரிந்து உள்ளே போகவில்லையா, இல்லை அது என்னவென்று புரியாமல் போகவில்லையா என்பதை நான் தெரிந்துகொள்ள அந்த வார்த்தைகளை முதலில் நான் புரிந்துகொள்ள வேண்டும்..
இரண்டு முறை வாசித்து பார்த்ததில் அதன் முழு அர்த்தம் புரிந்தது..ஆனால்.எந்த உயிர் வழி சென்று எங்கு ஆயுதம் எடுக்க வேண்டும் என்பதில் குழப்பம்...அதற்கு கிழே அட்டவணையில் வரிசை படுத்தப்பட்ட தமிழ் எழுத்துக்கள்..அந்த எழுத்துக்களில் எங்காவது “உயிர்” என்ற பொருளில் சொல் வருகின்றதா என பார்த்தேன்...
அந்த எழுத்துக்களில் ஒரு எழுதுக்கள கூட ஒரு முழு வார்த்தையை கொடுப்பதாக இல்லை..எந்த முறையில் இது அமைக்கப்பட்டு இருக்கின்றது என்ற அடிப்படை தெரிந்தால் மற்றவற்றை கண்டுபிடிப்பது எளிது..
உயிர் வழி என்றால் என்ன அர்த்தம? உயிரின் வழி...அந்த எழுத்துக்களின் அமைப்பை பார்த்தேன்..ஏதவது உயிர் சம்பந்தபட்டதை உணர்த்துகிறதா என்று?.. அதன் நான்கு புறங்களில் இருந்து பார்க்கும்போது ஒரே ஒரு உயிர் எழுத்து அமைந்து இருந்தது..
ஒருவேளை அந்த உயிர் என்ற வார்த்தை இந்த உயிர் எழுத்தை குறிக்கலாம் என நினைத்து...அடுத்த வரியை படித்தேன்..”ஆயுதம் எடுத்தால்”..அப்படி என்றால் ஆயுத எழுத்து ஆச்சர்யம் அதற்கு சற்று கிழே ஒரு ஆயுத எழுத்து இருந்தது..இப்பொது அந்த இரண்டு எழுத்துகளையும் இணைத்தால் ஒரு நேர்கோடு கிடைத்தது..
அடுத்த வரி “மெய்கீழ் வழி” அந்த ஆயுத எழுத்தில் இருந்து அடுத்து ஒரு மெய் எழுத்தை குறிக்கின்றது பாடல்...அதே போல் அங்கு ஒரே ஒரு மெய் எழுத்து இருந்தது....இப்போது அந்த நேரான கோடு வளைந்து இருந்தது..அப்படி என்றால்..இது குகைக்குள் செல்ல வழிகாட்டும் பாதையாக இருக்க வேண்டும்...
அடுத்த வரி “மெய் ரகசியம் ஒரு வெளியாய்”..இந்த வரிக்கு ஏற்றாற்போல் அந்த கட்டத்தின் முடிவில் ஒரு வெற்று இடம் இருந்ததது..அதுவரை கோடு வரைந்தால்.. வருவது..இந்த மாதிரி இருந்தது..
ஒருவேளை இது குகைக்குள் செல்ல வழி காட்டுவதாக இருக்கலாம்...அடுத்து வரும் வரிகள் அதை உறுதி படுத்தின... பலவழி இருக்கும் இதில் மனவழி சென்றால் உயிர்வளி தன் மெய்யின் வெளி நீங்கும்” இதன் படி குகைக்குள் பல வழிகள் இருக்கலாம்..அந்த வழிகளில் மனம் போன போக்கில் சென்றால்.உயிர்போகும் என்பதை முதலிலேயே உணர்த்தி இருக்கிறார்கள்..இந்த வரியை படிக்கும்போது கொஞ்சம் பயம்..
இருந்தாலும் கல்வெட்டில் வழிகிடைத்தது கொஞ்சம் தைரியம்..உள்ளே நுழைந்தேன்..என் விளக்கின் வெளிச்சத்தில் வழியை மூடி இருந்த சிலந்தி வலைகளை கம்பினால் நீக்கி முன்னே நகர்ந்தேன்..சிறிது தூரம் சென்றவுடன் பாதை மூன்றாக பிரிந்தது.....கல்வெட்டு வரைபடம தெரிவித்தபடி பார்த்தால் நேராக செல்லும் பாதை முடியும் இடத்தில் வலது புறம மட்டுமே வளைவு இருக்க வேண்டும்..
எனவே இந்த வல,மற்றும் இட செல்லும் பாதைகள் தவறானவை..ஒருவேளை அந்த பாட்டில் சொன்ன உயிர்வாங்கும் வழியாக இருக்கலாம்..எனவே அந்த வழியில் செல்ல முயற்சிக்க வில்லை...
நேராக சென்றேன்..வௌவால்கள் வெளிச்சம் பட்டவுடன் வேகமாக அங்கும் இங்கும் பறந்தன...கொஞ்சம் பின் திரும்பி பார்த்தேன்..ஒன்றும் தெரியவில்லை..இருட்டு........திரும்பி செல்வது ஒன்றும் பிரச்சினை இல்லை..நான் வந்த வழியை தவிர மற்ற இடத்தில் எல்லாம் சிலந்தி வலை மூடி இருந்தது.... வந்த வழியில் மட்டுமே அந்த வலைகளை விளக்கி ஒரு பாதை அமைத்து இருந்தேன்...
அந்த கல்வெட்டு சொன்னபடி ஒரு இடத்தில் பாதை முடிந்து வலப்புறம் திரும்பியது...வழிகளில் சில சிலைகள் இருந்தன..அதன் பக்க சுவர்களில் சிற்பங்கள் செதுக்கி இருந்தார்கள்..எழுதி இருந்தார்கள்...தமிழ்தான்...எல்லா எழுத்துக்களையும் கொஞ்சம் நீட்டி நீட்டி எழுதி இருந்தார்கள்...ஒருவேளை அபோதைய தமிழ் எழுதும் முறையாக இருக்கலாம்...அதை படிக்கவில்லை..காரணம் பயம்..வேகமாக வெளியேறவேண்டும்...
வலப்புற பாதையில் சென்றால் ஒரு இடத்தில் முடிந்து கீழ்நோக்கி படிக்கட்டுகள் அமைத்த வழியில் சென்றது..அந்த கல்வெட்டில் குறிபிட்டபடி இது சரிதான்...படிக்கட்டுகள் செல்ல செல்ல அளவில் குருகியபடி சென்றன..ஒரு இடத்தில் ஒருவரே செல்லும் அளவுக்கு பாதை இருந்தது..
அந்த இடத்தை நெருங்கி விட்டோம் என்று நினைக்கும்போது..அங்கு என்ன இருக்கும் தங்கம்?,புதையல்?..இல்லை வேறு ஏதாவது?...இப்படி என்வென்று யோசித்தாலும் அதில் ஆர்வம இல்லை..யாரும் போகத குகைக்குள் போய் என்னவென்று பார்க்க வேண்டும் என்பதே என் ஆர்வம
அந்த படிக்கட்டுகள் ஒரு இடத்தில் முடிந்தன..சற்று பெரிய இடம்...காற்றின் அடர்த்தி அதிகமாக இருந்தது..மூச்சு விடுவதில் கொஞ்சம் சிரமம்..சமாளித்தேன்..அந்த ரகசியததை கொஞ்ச நேரத்தில் பார்க்க போகிறோம் என்ற ஆர்வம.
அந்த சதுரவடிவ இடத்தை சுற்றி பார்த்தேன் ஒன்றும் இல்லை..சில சிலைகள் அங்கும் இங்கும் கிடந்தன...அதோடு பாதைகள் முடிந்து இருந்தன..இதில் எங்கு? என்ன? ரகசியம் இருக்கிறது என்பதை எப்படி கண்டுபிடிப்பது? சுற்றி பார்த்தேன்..ஒன்றும் கிட்டவில்லை...
அதன் நான்கு சுவர்களிலும் தேடினேன் வழிகள் இருக்கின்றதா என்று இல்லை...சுவர்களில் விளக்கு அடிக்கும் போது தற்செயலாக அதில் பெரிய வடிவில் செதுக்க பட்டிருந்த எழுத்துக்கள் கண்ணில் பட்டன..
அதில் கோயிலுக்கு உண்டான நகைகள்,சிலைகள் மற்ற பொருள்களை ரகசியமாக வைத்து, மக்களை பயம்காட்டி இதன் உள்ளே வராதபடி செய்யத்தான் இந்த முறை என்று சொல்லப்பட்டு இருந்தது..அதன் கடைசியில்..ரகசியம் என்று சுட்டிக்காட்டி..
அறியாதவரைதான் ஒன்று ரகசியம் அறிந்துவிட்டால்?
பதில் என்னவென்று யோசித்தேன் கல்வெட்டில் இருந்த கடைசி கட்டத்தில் அதை சொல்லி இருந்தார்கள்.
(கதையில் சொல்லி இருக்கும் கோயில் எங்கள் ஊரில் சிறுவயதில் நான் மிக ரசித்த ஒன்று..ஆனால் அதன் இப்போதைய நிலை.... எல்லாம் சிதைந்துவிட்டது....சிற்பங்களைதவிர ஒன்றும் அழகாக இல்லை...
குகை , கல்வெட்டு மற்றும் எழுத்துக்கள் எல்லாம் என் கற்பனை...)
17 comments:
கற்பனையில்.. உங்கள் கோவிலை இணைத்து குகை தமிழ் எழுத்தை வைத்து சொல்லி இருப்பது சுவாரசியம்
ஊர் ஊருக்கு ஒரு கோவில் அதற்கு ஒரு கதை என்பது நம் மக்களுக்கு கைவந்த கலை
நல்ல சுவாரஸ்யமான கற்பனை
நெசமுன்னு நினைச்சுட்டேன்ல!!!!!!!
Blogger சௌந்தர் said...
கற்பனையில்.. உங்கள் கோவிலை இணைத்து குகை தமிழ் எழுத்தை வைத்து சொல்லி இருப்பது சுவாரசியம்
ஊர் ஊருக்கு ஒரு கோவில் அதற்கு ஒரு கதை என்பது நம் மக்களுக்கு கைவந்த கலை////
உங்களின் கருத்துக்கு..நன்றி
Blogger VELU.G said...
நல்ல சுவாரஸ்யமான கற்பனை//
நன்றி
துளசி கோபால் said...
நெசமுன்னு நினைச்சுட்டேன்ல!!!!!!!///
கொஞ்சம் பயந்தும் இருக்கீங்க...எழுத்துல தெரியுதே)))
நன்றி
நல்லாத்தான் இருக்கு உங்க குகைக்கதை. ஆனா நிறைய இடங்களில் அங்க போகக்கூடாதுன்னு சொன்னா அதுக்குப்பின்னால இதுபோன்ற காரணங்கள் நிச்சயம் இருக்கும்.
ஜெயந்தி said...
நல்லாத்தான் இருக்கு உங்க குகைக்கதை. ஆனா நிறைய இடங்களில் அங்க போகக்கூடாதுன்னு சொன்னா அதுக்குப்பின்னால இதுபோன்ற காரணங்கள் நிச்சயம் இருக்கும்./////
நான் கற்பனை செய்துதான் சொல்லி இருந்தேன்..உண்மை எப்படி என்று தெரியவில்லை...
கருத்துக்கு நன்றி
வோட்டு போட்டு இப்ப தான் படிக்க போறேன்..படிச்சுட்டு சொல்றேன் :)))
கதை படிச்சுட்டேன்..பரவாலையே..உனக்கு அறிவியல் கதை தான் எழுத தெரியும் நினைச்சால்...ஒரு மாதிரி மர்மம்,அமானுஷ்யம் சாயலிலும் கலக்குற..அந்த புதிர் நல்லா இருந்தது...:)))
ஆனந்தி.. said...
கதை படிச்சுட்டேன்..பரவாலையே..உனக்கு அறிவியல் கதை தான் எழுத தெரியும் நினைச்சால்...ஒரு மாதிரி மர்மம்,அமானுஷ்யம் சாயலிலும் கலக்குற..அந்த புதிர் நல்லா இருந்தது...:)))///
புரியாதது எல்லாமே நல்லாத்தான் இருக்கும்)))))
karpaniyo/nijamo but super
/புரியாதது எல்லாமே நல்லாத்தான் இருக்கும்)))))/
:-)))
நியூ டெம்ப்ளட்..அந்த லோகோ செமையா இருக்கு...குட் !!:)))
நல்லா இருக்கு உங்க கற்பனை! குறிப்பா குகைக்கு வழி சொல்லும் பாடல் வரிகள்(கொஞ்சம் இந்திரா சௌந்தரராஜனின் தொடர்கள் போலவும்)!!
எப்புடிங்க? :))
ஜீ... said...
நல்லா இருக்கு உங்க கற்பனை! குறிப்பா குகைக்கு வழி சொல்லும் பாடல் வரிகள்(கொஞ்சம் இந்திரா சௌந்தரராஜனின் தொடர்கள் போலவும்)!!
எப்புடிங்க? :))/////
கருத்துக்கு நன்றி...அந்த பாடலும் கற்பனைதான்...
story nice and cool
thanks Ganesh ...
Post a Comment