சுஜாதாவும் ..synthetic cell ம்.....

சுஜாதாவும் synthetic cell ம்...

      முதலில் நான் சொல்ல வரும் விஷயத்தை சொல்லி விடுகிறேன்...
அறிவியலில் மற்றுமொறு மைல் கல்லாக ஒன்றை கண்டு பிடித்து இருக்கிறார்கள்... அது synthetic CELL. (இதைப் பற்றி கொஞ்சம் ஆழமாக படித்தபோதுதான் தெரிந்து கொண்டேன் SYNTHETIC CELL என்பது சரியான வார்த்தை இல்லை என்பதை....பத்திரிக்கைகள் இதை தவறாக உபோயோகிகின்றன....சரியான வார்த்தை SYNTHETIC DNA.இங்கு நானும் அப்படி சொனதர்க்கு காரணம் செய்திகளில் அப்படி வந்ததால் நான் வேறுமாதிரி சொன்னால் கொஞ்சம் குழப்பும் அதான்...)

அமெரிக்கவை சேர்ந்த VENTER மற்றும் அவரது குழுவினர் இதை கண்டுபிடித்து உள்ளனர்.(இதில் தமிழ் நாட்டில் படித்தவர்களும் இருப்பதாக படித்தேன் கொஞ்சம் சந்தோசம்)

     அவர்கள் தங்கள உருவாக்கிய செயற்கையான DNA மூழக்கூறுக்களை ஏற்க்கனவே இருக்கும் ஒரு CELL ல் சேர்த்து பார்த்தார்கள்.(அந்த செல்லில் உள்ள DNA வின் ஒரு பகுதியை நீக்கிய பின் அந்த இடத்தில்) அது சாதாரண CELL களை போலவே பல்கி பெருகத்தொடங்கியது இதன் மூலாம் பல்வேறு நன்மைகள் இருந்தாலும் தீமைகளும் அதிகம். எடித்துகாட்டாக ஐன்ஸ்டீன்    E = MC^2 FORMULA எப்படியோ அப்படித்தான் இதுவும்.

    இதன் மூலாம் செயற்கையான முறையில் உயிரிகளை உருவாக்கும் சாத்தியம் உட்பட bio fuel போன்ற பல நல்ல விசயங்களை செய்ய முடியும் என்பதை அவர்கள் எடுத்து காட்டியுள்ளனர்.

   இதற்கும் சுஜாதா அவர்களுக்கும் என்ன சம்பந்தம் என்றால்....

    சுஜாதா எனக்கு ஒரு நல்ல சிறந்த வழிகாட்டி.நல்ல மனிதர். என்னைபோன்ற இளைஞ்ர்களுக்கு அவரின் எழுத்து கண்டிப்பாக தேவை. அதை நான் என் வாழ்க்கையில் உணர்ந்த்தவன்.

   சரி இந்த SYNTHETIC CELL பற்றி என் சுஜாதா ஏற்க்கனவே எனக்கு சொல்லி இருக்கிறார். ஆம் அவர் எழுதிய வேலி என்ற கதையில் இதை தெயளிவாக எழுதி இருக்கிறார்.

   இந்த கதையை  அவரது விஞ்ஞான சிறுகதை தொகுப்பில் நிங்களும் 360 ஆம் பக்கத்தில் படிக்கலாம்.

   அவர் என்ன சொல்லியிருக்கிறோ அதைத்தான் இப்போது செய்து இருக்கிறார்கள்.

   இது மனிதர்க்கு எப்படி தெரிந்தது,எங்கே படித்தார் என்று தெரியவில்லை.

    நான் இந்த கதையை  படித்தது இரண்டு வருடங்களுக்கு முன். நான் இது சம்பந்தமான செய்தியை பார்த்தவுடன்..சிறிது நேரத்தில் என் மனதில் தோன்றியது சுஜாதாவின் இந்த புதிய செயற்கை உயிர் கதைதான்.... என் அறையில் இருந்த புத்தக குவியல்கலீல் அந்த புத்தகத்தை தேடிப்பிடித்து மிண்டும் அந்த கதையை படித்தேன்.....(என்னிடத்தில் உள்ள ஒரு சிறப்பு என் அதிக ஞாபகசக்தி தான் )

    சொல்ல முடியாத சந்தோசம், பெருமை,  நான் ஒரு நல்ல மனிதரை கடந்த ஐந்து வருடங்களாக பின்பற்றிவருகிறேன் என்பதை நினைத்து.

    அதிக சோகம் (சுஜாதா இப்போது இல்லை என நினைத்தால் எப்போதும் எனக்கு கொஞ்சம் கண்ணீர் வரும்.)

     உண்மையை சொல்ல வேண்டும் என்றால் நான் சுஜாதா போட்ட வட்டததில்தான் சுற்றிக்கொண்டு இருக்கிறேன். அதுவே எனக்கு போதும்.



    முதலில் சுஜாதாவை எனக்கு எந்த அளவு எப்படி பிடிக்கும் என்பதை கொஞ்சம் சொல்லி விடுகிறேன். அவர் அப்படி,இப்படி என்று அதிகமாக சொல்லி ஜல்லியடிக்க விரும்பவில்லை  (இது அவரது வார்த்தை)

   அதிகம் பிடிக்கும் என்றால் இதுவரை நான் தமிழில் அதிகம் படித்த புத்தகங்களில் 99% சுஜாதா உடையது.

    என்ன சொல்ல ...நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை அவரைப்பற்றி.......ஆனால் ஒன்று சுஜாதா பூரானம் பாடினால் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் படிப்பேன்.....ஆனால் அவரைப்பற்றி கொஞ்சம் தவறாக படிக்க நேர்ந்தால் எழுதியவரின் குடுமபததில் உள்ளவர்களின் இரண்டு தலைமுறையினர் வரை கொஞ்சம் நினைவு கூர்வேன்...அவ்வளவுதான்....

   எனவே இதற்கு மேல் படிப்பவர்கள் அவரைப்பற்றி படித்துவிட்டு பிடித்து இருந்ததால் நல்லது.....இல்லை என்றால் எதாவது அவரைப் பற்றி  கருத்து தெரிவிக்கிறேன் என்று முயர்ச்சிப்பதைவிட வலது கைப்பக்கம் சற்று மேலே மூலையில்  உள்ள சிவப்பு நிற பெருக்கல் குறியை அழுத்துவது நல்லது.....

  

    இது நான் சுஜாதா அவர்களை படிக்கும் முன் வரைதான். நான் எப்போது அவரை படிக்க ஆரம்பித்தேனோ கொஞ்சம் கொஞ்சமாக   அவரின் கருத்துக்களை என்னுள் ஏற்ற தொடங்கினார். அதுவும் மிக எளிய முறையில் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல.

   அவர் கருவை மற்றும் சொல்லி விட்டு சென்று விடுவார். அதற்க்கு பிறகு அதை புரிந்து கொள்ள  அதைவைத்து கொண்டு நான் படும்பாடு அது எனக்குத்த்தான் தெரியும்..

   அப்படி கொஞ்சம் கொஞ்சமாக தெரிந்து கொண்டதுதான். அதற்க்கு காரணம் என்னில் இருந்த புதியவற்றை கற்றுக்கொள்ளும் ஆர்வமே. அதற்க்கு சரியாக வழி காட்டியவர் அவரே.

    என்னை பொறுத்தவரையில் என் வாழ்க்கையில் சில நல்ல விசயங்களில் நான் இன்று ஈடுபடுகின்றேன் என்றால் அதற்க்கு முதல் காரணம் சுஜாதா அவர்களே.அவரது ஒரு அறிவுரையையும் நான் தட்டியதில்லை.

   என்னை பொறுத்தவரையில் சுஜாதாவின் வார்த்தைகளை கடைபிடிப்பது என்னை போன்ற இளைஞ்ர்களுக்கு ஒரு மிகபெரிய வரமே.கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.

   அவரது எழுத்தின் மூலாம் என்னை செதுக்கி,வளர்த்து,தெரியாததை கற்று கொடுத்து இந்த நிலைவரை கொண்டு வந்து இருக்கிறார்.

   இதற்க்கு நான் அவருக்கு செய்யும் நன்றிகடன் அவரது வார்த்தைகளை கடைபிடிப்பதைவிட வேறொன்றும் இருக்க முடியாது.

   அவர் அதிகம் சொல்லுவது படிக்கத்தான். எதைப்படித்தால் நி உருப்பிடுவாய் என்பதை கூட அவரே எனக்காக சொல்லி இருக்கிறார்.

  அவருக்கு பெருமை சேர்ப்பது என்றால் அவரின் ஆசைப்படி நான் அதிம படிக்க வேண்டும். கட்டாயம் இன்னும் அதிகம் படிப்பேன்....என் சுஜாதாவுக்காக.



யார் இந்த Neanderthals....

யார் இந்த neanderthalis...

 கடவுள் மனிதர்களை படைத்தார் எனபதில் எனக்கு கொஞ்சம்கூட உடன்பாடில்லை....

   ஏதேன தோட்டத்தில்  விலா எலும்பில் இருந்து மற்றொரு உயிரை படைப்பதாக நான் ஒரு கிறிஸ்துவ கல்லூரியில் படிக்கும் போது விவிலிய நூலில் படித்து இருக்கிறேன்...

  அது எந்த அளவிற்கு உண்மை என்று எனக்குத்தெரியாது...அப்போதே குளோனிங் முறை இருந்திருந்தால் என்னால் நம்ம்பமுடியும்...இல்லாவிட்டால் அது காதில பூ சுற்றும் வேலையே....

   அடுத்து இந்த உடல் அழியக்கூடியது...ஆனால் அதில் உள்ள ஆன்மா அழியாது..அது என்றும் நிலைத்து இருக்க கூடியது...செய்யும் பாவங்கள் அதில் சேராது...மனிதன் மட்டுமே தனது பூத உடலை இழக்கிறான்... அவன செய்த கருமத்திற்கு ஏற்றாற்போல் அடுத்தவரும் பிறவியில் தகுந்த குளத்தில் பிறக்கின்றான்... ஆத்துமா அப்படியே இருக்கின்றது.....போன்ற வசனங்களை பகவத்கீதையில் படித்து இருக்கிறேன்....... இதுவும் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியாது....

   நான் படித்த இரண்டு மத நூல்கள் இந்த இரண்டு மட்டுமே...மற்றவற்றில் எப்படி என்று படிக்கவில்லை...

   என்னை பொறுத்தவரையில் இந்த இரண்டுமே நடக்க அல்லது நடந்து இருக்க வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை....

   அறிவியலின் படி மனிதன் ஒன்றும் ஒரே நாளில் படைக்கப்பட்டு பூமியில் விட்டுவிடவில்லை என்பதே...அதற்க்கு நிறைய ஆதாரங்கள் இருக்கின்றன....

 அது பரிணாம வளர்ச்சி... பூமியில் முதல் உயிர் தோன்றியதில் இருந்து இன்று இருக்கும் மனிதன் வரை நடந்தவற்றை பரிணாம வளர்ச்சியின் மூலம் விளக்க முயல்கின்றது அறிவியல்....

 முதல் உயிர் எப்படி தோன்றியது...என்பதை மற்றொன்றில் பார்ப்போம்..இப்போது இந்த மனிதனுக்கு முன்னோர் என சொல்லப்படும் neanderthal ஐ பற்றி கொஞ்சம் பார்த்துவிடுவோம்...

   இந்த neanderthal ஐ நான் ப(பி)டித்தது ஒருவருடத்திற்கு முன்னால் michael crichtion எழுதிய NEXT எனும் நாவல் படிக்கும் போதுதான்...அதற்க்கு முன்னால் எனக்கும் இந்த neanderthal க்கும் ஒரு சம்பந்தமும் இல்லை...

 அந்த நாவலில் neanderthal ஐ ப்பற்றி ஒரு இடத்தில கொஞ்சம் விளக்கமாக சொல்லிருப்பார் மனிதர்....

அவர் அதில் neanderthal genome project ஐ பற்றி சொல்லி இருப்பார். அதாவது இந்த neanderthal genome project ஆனது ஜெர்மனியில் உள்ள MAX PLANCK INST. FOR EVOLUTIONARY ANTHROPOGY  இல JULY 2006 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது முடிவடைந்த்தது MAY -2010.

  இதற்க்கு பின்னர்தான் neanderthal களை பற்றி பல உண்மைகள் தெரியவந்தது.

  இவரின் புத்தகங்கள் படிப்பதே கொஞ்சம் தலையை பிய்த்துகொள்ளும் விசயமாகவே இருக்கும்....இவரை பற்றி சில வரிகள்...(எனக்கு நிறையவே உதவியிருக்கிறார் தனது எழுத்தின் மூலம்).

   இவர் 1942 ஆம் ஆண்டு chicago வில் பிறந்தவர்...என்னை பொறுத்தவரை இவரது science fiction novel கள் கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும் கொஞ்சம் கஷ்ட்டப்பட்டு புரிந்துகொண்டு எப்படியாவது படித்துவிடுவேன்...அப்படி படித்தது...THE STATE OF FEAR, NEXT, THE RISING SUN...

 இவர் எழுதிய நாவல்களில் பெரும்பான்மையானவை அரசியல் ரீதியாக, சமுக ரீதியாகவும் பெரும் பரபரப்பை ஏற்ப்படுதியவை.... தனது எழுத்தின் மூலம் பெரும் புகழுக்கும்.. பெரும் விமர்சனத்துக்கும் ஆளானவர்.

 மனிதர் 2009 ஆம் ஆண்டு இறந்துவிட்டார்...ஐந்து திருமணம் செய்தவர்...இவரது இறப்பிற்கு பின் அவரது கணினியில் இருந்த அவரது நாவல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது... அதன் பெயர். PIRATES LATTIUDE.

சரி இனி neanderthalai ப் பற்றி பார்க்கலாம்...

Neanderthal ன் தோற்றம்.


    neanderthal கள் பொதுவாக 120000 இருந்து 30000 வருடத்திற்கு முன்னால் இருந்திருக்கலாம் என் கணக்கிட்டுள்ளனர்.

  இதன் எலும்பு படிவங்கள் முதன் முதலில் 1856 ஆம் ஆண்டு ஜெர்மனியில் உள்ள neander thal என்னும் இடத்தில உள்ள feldhoter குகையில் கண்டுஎடுக்கபட்டது.

  அதற்க்கு பின் பல்வேறு இடங்களில் இது சம்பந்த்தமான படிவங்கள், எலும்புகள்,மண்டை ஓடுகள். மற்றும மற்ற தகவல்கள் கிடைக்கபெற்றன.

    neanderthal ன் உருவ அமைப்பு அனைத்தும் நம்மைப்போல இருந்தாலும் அது நம்மை விட பலத்திலும் உடல் கட்டிலும் பலம் வாய்ந்தது என்று சொல்லுகிறார்கள்.

     அவர்களின் வளர்ச்சி விகிதமும் நம்மைவிட அதிகம்.அதாவது அவர்களின் குழைந்தைப்பருவதில் இருந்து இளைஞ்சர்களாக வளவதர்க்கு எடுத்துக்கொள்ளும் காலம் நம்மை விட குறைவு .மட மட என வளர்ந்திருக்கிறார்கள்.

    அதே போல்தான் அவர்களின் மூளையும். அவர்களின் மூளை சாதாரண மனிதர்களின் மூளையை விட அதிக எடை  கொண்டது. சிந்திக்கும் திறன் எப்படி இருந்தது என்று தெரியவில்லை.

    அவர்களின் கைகள் சாதாரண் மனிதனின் கைகளைவிட சற்று நீளமாக இருந்தததாக சொல்லுகிறார்கள்.

    சரி அவர்கள் எந்த விதத்தில்  மன்திர்களோடு ஒததுபோகிறார்கள் என்று பார்த்தால்..மனிதனின் genome (chromosome sequense) அமைப்பும் அவர்களின் genome அமைப்பும் 99.5% முதல் 99.9% வரை ஒத்து போகின்றதாக கண்டுபிடித்து உள்ளனர். .  

   neanderthal களின் எலும்பை பொடியாக்கி அதில் இருந்துதான் இந்த genome தகவல்களை கண்டுபிடித்து உள்ளனர்.

    பொதுவாக ஒரு இனத்துக்கும் மற்றொரு இனத்துக்கும் இடையே உள்ள தொடர்பு மற்றும், கால இடைவெளி,வேறுபாடு போன்றவற்றை கணக்கிடுவதற்கு ஆராய்ச்சியாளர்கள் mitochondrial DNA (mtDNA) வை சோதிக்கிறார்கள்.

   mtDNA  இது எல்லா உயிர்களிடமும் சாதரணமாக இருப்பது. இதன் பொதுவான வேலை என்பது நாம் உண்ணும உணவை சக்தியாக மாற்றி நம் உடலில் உள்ள cell களுக்கு கொடுக்கின்றது.

    இதன் மற்றொரு முக்கியமான வேலை என்னவென்றால், இதில் உள்ள gene கள் பரம்பரை குணங்களை கடத்துவது. இது அதிகமாக (பெண்களிடம்) அம்மாவிடம் இருந்தே மற்ற (குழந்தைகளுக்கு) உயிர்களுக்கு கடத்தப்படுகின்றது.

    வெவ்வேறு உயிர்களிடத்தில் இருந்து எடுக்கப்பட்ட mtDNA வை ஆராய்ந்து அதுக்கும் அதற்க்கு முன் அல்லது பின் உள்ள உயிர்களுக்கிடையே உள்ள  வேறுபாடு இடைவெளி போன்றவற்றை துல்லியமாக கணக்கிடுகிறார்கள்.

   அதற்க்கு காரணம் mtDNA வின் mutation rate மிக அதிகம். இது தன்னை வெகு விரைவில் மாற்றிக்கொள்வதால் ஒரு நிலையில் இருந்து மற்றொன்றுக்கு எவ்வாறு,எப்படி மாறி இருக்கின்றது என்று எளிதில் கண்டுபிடித்து விடலாம்.

  இது எந்த விதத்தில் அதிகமாக நன்மை செயய்கின்ரதோ அதைவிட அதிகமாக நோய்களையும் தருகின்றது.

   இதில் எதாவது குறை ஏற்பட்டால் மனிதர்களை பெருமளவில் பதிக்கின்றது. அது mtDNA disease (syndrome). இது உடல்வளர்ச்சி,மனவளர்ச்சி,பார்வைக்கொளறு இன்னும் அதிகம்ன genetic disease களை உண்டாக்குகின்றது.

   neandathal க்கும் நமக்கும் இடையே உள்ள வித்தியாசங்களை சொன்னதும் இதைவைத்துதான்.

இந்த mtDNA neanderthal க்கும் நமக்கும் வேறுபட்டு காணப்படுகின்றது.

    மேலும் உலகின் பல்வேறு இடங்களில் இருந்து gene கள் எடுக்கப்பட்டு சோதித்து அதை neanderthal ன் genome வோடு ஒப்பிட்டு பார்க்கும் போது neanderthal களின் genome ஆனது ஆப்ரிக்காவில் உள்ளவர்களின் genome ஐ விட ஆப்பிரிகா அல்லாத மக்களின் genome வோடு அதிகமாக் பொறுந்துகின்றது.

   இதைவைத்து சுமார் 60000 ஆண்டுகளுக்கு முன்னரே homo sapians (modern humans) ஆப்ரிக்காவை விட்டு இடம்பெயர்ந்திருக்கலாம் என்று கண்டுபிடித்து உள்ளனர்.

    சுத்தமான அறிவியலில் சொல்ல வேண்டும் என்றால்.. homo neanderthalensis என்ற இனத்தவர்கள் நேரிடையாக அதற்க்கு முன்னால் இருந்த homo erectus என்ற இனத்தவரிடம் இருந்து interbreed ஆனவர்கள். இந்த homo neanderthalinsis இருந்து இப்போது உள்ள நாம் (homo sapians) interbreed ஆகி உள்ளோம்.

   சரி இந்த neanderthal கள் என்னென்ன செய்தார்கள் என்று நான் ஆர்வமாக தேடினேன்... அவர்களும்  மனிதர்களைப்போலவே வாழ்ந்து இருக்கிறார்கள். கற்களால் ஆயுதம் செய்து வேட்டையாடி, தங்களுக்குண்டான உணவை தேடியுள்ளனர்.

    அவர்களின் வேட்டையாடும் மற்றும் பயன்படுத்திய கருவிகளின் முறைக்கு mousterian tradition என்று பெயர்வைதது உள்ளனர்

   சரி அவர்கள் மனிதர்களை போல பேசினார்களா என்றால் இல்லை. அவர்களுக்கு மனிதர்கள் பேச காரணமாய் இருக்கும் FOXP2 என்ற gene கள் அவர்களிடத்தில் இல்லை. இது மனிதர்களுக்கு neanderthal இல இருந்து மனிதர்கள்  interbeed ஆகும்போது வந்திருக்கலாம் என்று சொல்லுகிறார்கள்.

  சரி அவர்கள் சைவமா அசைவமா என்று கேட்டால் அடித்து சொல்லுகிறார்கள் அவர்கள் அசைவம் என்று.

  நி கதைவிடதே யார் சென்று பார்த்தார்கள் என்று நிங்கள் கேட்டால் தொடர்ந்து படியுங்கள்.

  முதலில் இந்த அசைவம்,சைவம்,நடுநிலை, போன்றவற்றிக்கு அறிவியல் பெயர் என்ன என்று பார்ப்போம்.

carnivoros  - அசைவம்

herbiroros  - சைவம்.

omnivoros  - அசைவம்,சைவம்.

   சரி ஒரு உயிர் அசைவமா சைவமா என்று எப்படி கண்டுபிடிக்கிறார்கள் என்றால் அவற்றின் எலும்பு மஜ்சை (collagen) இல உள்ள nitrogen,carbon,and isotopes போன்றவற்றை ஆராய்ந்து அதில் இருந்து கண்டு பிடிக்கிறார்கள்.

   இன்றைய மனிதர்களில சிலரிடம் நிங்கள் அசைவமா, சைவமா என்றால் கொஞ்சம் கோபமாக அந்த கவிச்சி வாசமே பிடிக்காது.... போங்கள்..... என்று சொல்லுவார்கள்..என்னுடைய ஆசை அவர்களுக்கு இந்த சோதனை செய்து உண்மையை கண்டுபிடிக்க வேண்டும் என்பதே.

   சரி இந்த neanderthal கள் எப்படி அழிந்தார்கள் என்று கேட்டால் ..அவர்கள் எங்கே அழிந்தார்கள் அவர்கள் நம்மில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் என்று சொல்லுகிறார்கள். ஆராய்ச்சியாளர்கள்.

   இருந்தும் அழிந்த்தறக்கு காரணம் என்று சொன்னால் தட்பவேட்பநிலையே காரணம் என்கிறார்கள். அவர்கள் அதிக குளிரில் வாழக்கூடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தட்பவெட்ப நிலையில் ஏற்பட்ட மாற்றத்தை சாமளிக்க முடியாமல் அவர்கள் இறந்திருக்கலாம் என்கிறார்கள்.

   மற்றொன்றில் homo sapians (நாம்) அவர்களை படுகொலை செய்து விட்டோம் என்கிறார்கள் சிலர்.

  இன்னும் தொடர்ந்து ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன ....இன்னும் neanderthal பற்றிய பல நல்ல செய்திகளை எதிபார்க்கலாம்.


    
சரி இந்த பெண்ணுக்கும் Neanderthal க்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டால்  ஒரு இடத்தில் கிடைத்த ஒரு Neanderthal சிறுமியின் எலும்பு கூட்டை எடுத்து அதற்க்கு செயற்கையாக உருவம் கொடுத்துள்ளார்கள்....