பெரிய மழை பெய்ந்தால் குறைந்தது வருடத்தில் மூன்று அல்லது நான்கு முறை அந்த ஆற்றில் தண்ணீர் வரும்...ஒருவகையில் காட்டாறு...அதுவும் என் வீட்டின் மிக அருகில்..
அந்த ஆறோடு பல இனிய நினைவுகள் உண்டு...சிறிய வயதில் விளையாடியது,என் அம்மாவின் கண்டிப்புக்கு இணங்க காலை,மாலை உடற்பயிற்சிக்காக ஓடியது, ஒரு வயது வந்தவுடன் அங்கு சென்று தனியாக வானத்தை பார்த்து படுத்துக்கொண்டு ஏதாவது ஒன்றை கற்ப்பனை செய்வது...........இப்படி நிறையா உண்டு...
தண்ணீர் வந்துவிட்டால் இன்னும் அதிக சுகம் ..தண்ணீர் வந்தவுடன் குளிக்கமுடியாது.....தண்ணீர் தெளியவேண்டும்.... குறைய வேண்டும் அப்புறம்தான் அனுமதி கிடைக்கும் வீட்டில்... அதுவும் கரையில் இருந்து குளித்துவிட்டு வந்துவிடவேண்டும்...
தண்ணீர் ஓட்டம் நின்றபிறகும்...நீர்ச்சுழியால் ஏற்ப்பட்ட கேணி என்று சொல்லப்படும் பெரிய பள்ளங்களில் நீர் இருக்கும்...அங்கு போக அனுமதி இல்லை...
தண்ணீர் தரையை ஒட்டித்தான் போய்கொண்டு இருந்தது...எங்கள் வீட்டில் வளர்த்த செல்ல நாய் எங்கோ சேற்றில் விழுந்து எழுந்துவர அதை ஆற்றில் போய் குளிப்பாட்ட எண்ணிய நான் அதை எப்படியோ அன்பாக அழைத்துக்கொண்டு ஆறுவரை போய்விட்டேன்...
நாயை நான் குளிப்பாட்ட போகிறேன் என்பது அந்த நய்க்கோ,என் வீட்டுக்கோ தெரிந்தால் இரண்டுமே பிரச்சினை...நாய் என்கூட வராது,வீட்டில் திட்டு விழும்...
தண்ணீர் பரப்பு வந்தவுடன் நாயை கண்டுகொள்ளாதாவாறு நான் கடந்து சென்றேன்..அப்படி போனால்தான் அது என்னை பின் தொடரும்...அந்த இடத்தில நான் அன்பாக வருமாறு அழைத்தால் அதுக்கு சந்தேகம் வரும்......என்னைவிட புத்திசாலியான நாய்...
ஒரு வழியாக நீரைகடந்து நாயோடு நடு ஆற்றில் இருந்தேன்..தண்ணீர் கரையோராமாகத்தான் போனது...இப்போது எனக்குள் இருந்த குழப்பம் எப்படி நாயை தண்ணீரில் இறக்கி குளிப்பாட்டுவது...??
அப்போதுதான் அருகில் இருந்த கேணி கண்ணில் பட்டது..கொஞ்சம் பெரியது..அது இருந்தது தண்ணி ஓடும பாதையில் ......அதாவது ஓடும நீர் அதில் நிரம்பி பின் வெளியேறி சென்றது......
முதலில் நாயை அருகில் அழைத்து அதை அப்படியே தூக்கி தண்ணீரில் போட்டுவிட்டு நானும் குதித்து அதை பிடித்துவைத்து குளிப்பாட்டுவதாக முடிவு செய்து நாயை அன்பாக அழைத்தேன்...
நன்றியுள்ள நாய், எனக்கு வீட்டில் கொடுக்கப்படும் தின்பண்டங்களில் பாதியை அதுக்கு போட்டதற்கு பரிகாரமாக நான் கூப்பிட்டதும் அன்பாக என்னிடம் ஓடிவந்தது...நாய் கொஞ்சம் பெரிதும்,சிறியதும் இல்லாமல் இருந்ததால் அதன் நான்கு காலகளையும் பிடித்து அப்படியே தூக்கி அந்த கேணிக்கு அருகில் செல்லும்போது அது உணர்ந்துகொண்டது...என் கையில் இருந்து திமிரி ஓட முயன்று தோற்றது..
அதை கேணிக்குள் தூக்கி போட்ட அதே வேகத்தில் நானும் குதித்தேன்...குதித்த வேகத்தில் உள்ளே சென்றேன் ..மேலே வர கையை காலை உதறுகிறேன்...அந்த உதறளுக்கு ஏற்ப சில நொடிகள் மட்டும் மேலே வருகிறேன்..மீண்டும் மூழ்குகிறேன்...
அப்படி மேலே வரும்போது நான் பார்த்தது ...நாய் தனது தலையை மட்டும் வெளியில் வைத்தபடி அழகாக நீந்தி கரைக்கு செல்வதை...நிறையா தண்ணீர் குடித்து..சில நொடிகள் மேலே வருவதும் மீண்டும் உள்ளே செல்வதும்...ஒரு கட்டத்தில் நீரில் மூழ்கி மூக்கு வழியாக நீர் உள்ளே செல்ல ஆரம்பித்தது....
வெளியே வரமுடியாமல் உள்ளே அப்படியே மூழ்கினேன்...தரையை தொட்டபோதுதான் தெரிந்தது....ஆற்றில் கேணிகள் எப்போதும் செங்குத்தாக இருக்காது..மணல மிகவும் உதிரியாக இருக்கும் என்பதால் குழிகள் சரிவாகத்தான் இருக்கும்....
அப்படி ஒரு சரிவான இடத்தில்தான் நான் இருந்தேன்...வேகமாக கையை அந்த சரிவின் மீது வைத்து அந்த மணலசரிவில் தவழ்ந்து கரை மேலே வந்து அப்படியே விழுந்தேன்....
மூச்சு விடமுடியாமல் திணற..மூக்கு வாயில் இருந்து தண்ணீர் மண்ணோடு வர ஆரம்பித்தது..நாய் சற்று தூராமாய் நின்று தனது ஈர உடலை உதறிய படி நின்று இருந்தது...மூச்சு இரைத்தபடி அதை பார்த்துக்கொண்டு இருக்க....அது வீட்டை பார்த்து நடந்தது....
அப்படியே கொஞ்சம் இயல்பாக மூச்சு விடும்வரை படுத்த இருந்த போது..நான் யோசித்தது....நாய் பிறந்ததில் இருந்து என்னுடன்தான் இருக்கின்றது பின்னே எப்படி அதுமட்டும் நீச்சல் பழகி இருக்க முடியும்?? என்று...
அப்படியே ஈரமாக வீட்டிற்கு சென்றால் பிரச்சினை என்பதால்..வெயிலில் உலர்த்த சிறிது நேரம் அங்கு இருந்துவிட்டு வீடுபோய் சேர்ந்தேன்...அன்றைய இரவில் சரியாக தூக்கம் வர மறுத்தது....தண்ணீருக்குள் இருந்தபோது என்னுடைய மன நிலை பலமுறை நினைவுக்கு வந்தது....
எப்படியோ ஒருவழியாக தூங்கி மறுநாள் காலையில் வீட்டை விட்டு வெளியில் வரும்போது ...நாய் வழக்கம்போல நின்று வாலை ஆட்டினாலும்...அதன் முகத்தை நான் பார்க்கும் போது ஏனோ என்னை பார்த்து நக்கலாக சிரிப்பது போல இருந்தது....
(சிறுவயதில் ஏற்ப்பட்ட அந்த சந்தேகம்...சில வருடங்கள் கழித்து தீர்ந்தது ....சில விலங்குகள் இயல்பாகவே நீந்தும் திறனை பெற்று இருக்குமாம...அடுத்த படியாக டார்வின் தாத்தா சொன்ன படி பார்த்தால்...ஒவ்வொருஉயிரினமும் ஒரு சூழ்நிலைக்கு தகுந்தவாறு தன்னை நிலைபடுத்திகொள்ள முயலுமாம்...அதாவது நாய் நீந்தியது...நான் நீந்த முயற்சித்தது....
அதில் வெற்றி பெற்றால உயிர் வாழும் இல்லை என்றால் அதன் கதை முடிந்தது....கிட்டதடட் Neanderthals எப்படி தாக்குபிடிக்க முடியாமல் நம்மை விட்டுவிட்டு அழிந்தார்கள் அதுபோலவே......
இதே போல ஐன்ஸ்டீன் தாத்தாவுக்கு ஒரு நிகழ்வு உண்டு அதாவது அவர் ஒருமுறை நண்பர்களோடு மலையேற்றம் செய்யும்போது அவரின் கால் இடறி கிழே விழநேர்ந்தது...அப்படி அவர் விழுந்து இருந்தால் கண்டிப்பாக உயிர் பிழைத்து இருக்க மாட்டாராம்.... அவருடைய நண்பர் ஒருவர் அவரை இழுத்து பிடித்து காப்பாற்றினார்..அவரது பெயர் Adolf fisch என்று நினைக்கிறேன்)))
11 comments:
//நாய் வழக்கம்போல நின்று வாலை ஆட்டினாலும்...அதன் முகத்தை நான் பார்க்கும் போது ஏனோ என்னை பார்த்து நக்கலாக சிரிப்பது போல இருந்தது//
:-)
super! :))
//கிட்டதடட் Neanderthals எப்படி தாக்குபிடிக்க முடியாமல் நம்மை விட்டுவிட்டு அழிந்தார்கள் அதுபோலவே//
True! :)
உங்கள் சிறுவயது நினைவுகள் எனக்கும் சில பசுமையான நினைவுகளை வரவழைத்தது...
ஆக ஒரு நாய கொல்ல முயற்சி பண்ணி இருக்கிங்க. நல்லது.. :)
TERROR-PANDIYAN(VAS) said...
ஆக ஒரு நாய கொல்ல முயற்சி பண்ணி இருக்கிங்க. நல்லது.. :)///
என்னங்க அந்த நாயை குளிப்பாட்ட போய் நான் சாவின் விளிம்புக்கு போனது உங்களுக்கு தெரியலையா))))
போன பதிவுல அந்த பச்சை புள்ளைகளுக்கு ஆதரவு தாரிங்க..இப்ப ஒரு நாய்க்கு))))
//என்னங்க அந்த நாயை குளிப்பாட்ட போய் நான் சாவின் விளிம்புக்கு போனது உங்களுக்கு தெரியலையா))))//
நாலு கால பிடிச்சி தண்ணில தூக்கி போட்டு கொல்ல பாத்துட்டு. குளிப்பாட்ட போனேன் சொல்றிங்க.. இருந்தாலும் பின்னாடியே நீங்களும் குதிச்ச உங்க நேர்மை பிடிச்சி இருக்கு.. :)))
நாலு கால பிடிச்சி தண்ணில தூக்கி போட்டு கொல்ல பாத்துட்டு///
நாலு காலை பிடிசுன்னா அப்படி இல்லை...காலோடு சேர்த்து நாயை நெஞ்சோடு பிடித்து தூக்குவது ))))
இப்பயயாவது என் நேர்மை புரிஞ்ச்சே...)))))
இந்த பயனுக்கு எப்போது பார்த்தாலும் நாயை ஏதாவது செய்து கொண்டே இருப்பார்
சௌந்தர் said...
இந்த பயனுக்கு எப்போது பார்த்தாலும் நாயை ஏதாவது செய்து கொண்டே இருப்பார்/////
எந்த பையன் ...இந்த கணேஷா??)))
தண்ணியில இருந்து தப்பிச்ச கதை பயங்கரமா இருக்கு. நியாண்டர்தால் மனிதர்களின் கதையையும் எழுதுங்களேன்.
ஜெயந்தி said...
தண்ணியில இருந்து தப்பிச்ச கதை பயங்கரமா இருக்கு. நியாண்டர்தால் மனிதர்களின் கதையையும் எழுதுங்களேன்.////
ஏற்க்கனவே எழுதி இருக்கிறேன்..."யார் இந்த நியாண்டர்தால்" என்ற தலைப்பில்...படித்து பாருங்கள்..
நன்றி
Post a Comment