"செல்"லும் ...சொல்லும் 1

     தனியாக இருக்கும் அந்த ஆய்வுகூடத்துக்கு வேலைக்காக வந்து போகும் ஒன்பது  ஊழியர்களை தவிர அந்த பக்கம் அவ்வளவாக ஆள் நடமாட்டம் இருக்காது..அபப்டியொரு அமைதியான இடம் இப்போது பெறும் பரபரப்பாக இருந்தது..

    அதனை ஒட்டி சில காவல்துறை வாகனங்கள், வேடிக்கை பார்க்கவந்தவ்ர்கள் என சேர்ந்ததுதான் அந்த பரபரப்புக்கு காரணம..

     அவர்களுக்கு இருந்த ஒரே கேள்வி ஏன்?எதற்கு? என்றுதான்..எப்படி? என்பது அவர்களுக்கு தெரியும்...

    அங்கு கிடந்த சடலத்தை பார்த்த முதல் பெண்.. அந்த ஆள் கைகள் கட்டபட்டு நெற்றியில் சுடப்பட்டு இருப்பதாக பலமுறை பயத்தோடு எல்லோரிடமும் புலம்பிஇருந்தாள்...

     எல்லோரும் அந்த சடலத்தை பார்க்க ஆவலாய் இருந்தாலும் அவர்களை அனுமதிக்கவில்லை...அங்கு வேலை செய்பவர்கள் வரிசையாக உட்காரவைக்கபட்டு அவர்களிடம் காவல் துறையை சார்ந்த சிலர் பேசிக்கொண்டு இருந்தார்கள்..

   . அந்த பகுதியை சேர்ந்த காவல்நிலையத்தில் இருந்து கடமைக்கு வந்த  ஒரு போலீஸ்காரர் தனது விசாரணையை தொடங்கி இருந்தார்...
அங்கு இருந்த ஊழியரில் ஒருவர் போலீஸ் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் சொல்லிக்கொண்டு இருந்தார்..

இங்கு என்ன சம்பந்தமான வேலை நடக்கின்றது?

ஜெனடிக் சம்பந்தமான சில ஆராய்ச்சிகள் என்றார்..

   அப்படி என்றால்?? கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்கள் நீங்கள் இங்கு என்ன செய்துகொண்டு இருந்திர்கள்? அவர்கள் ஏன் இவரை கொல்ல வேண்டும்?

     கொல்லப்பட்டது எங்களது நிறுவனத்தின் தலைவர் அவரே தலைமை விஞ்ஞானியும்கூட...நாங்கள் ஈடுபட்டு இருந்தது எப்போதும் இறக்காத சில செல்கள் அல்லது ஸ்டெம் செல்களை உருவாக்குவது பற்றி..அதில் கொஞ்சம் வெற்றி அடையும் நிலையில் இருந்தோம்..இந்நிலையில் நாங்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை இப்படி நடக்கும் என்று..

     போலீஸ் வழக்கமாக கேட்க்கும் கேள்வியை கேட்டது.. “உங்களுக்கு இது சம்பந்தமாக யார் மீதாவது சந்தேகம் இருக்கின்றதா?

     எங்களது இந்த ஆராய்ச்சி யாருக்கும் எந்தவிதமான இழப்போ,தொந்தரவோ கொடுக்கும்படி.. இல்லை என்பதால் யார் மீதும் சந்தேகப்பட வாய்ப்பு இல்லை என்றார்..அந்த ஊழியர்

     உங்களுக்கு எதிராக இதே துறையில் போட்டியாளர்கள் இருக்கின்றார்களா? என்றது போலீஸ்

     அப்படி யாரும் இல்லை..வேறு சிலர் இதே முயற்சியை செய்தாலும் இந்த ஆராய்ச்சியை பொறுத்தவரை உதவி செய்வார்களே தவிர இந்த மாதிரி செயல்களில் ஈடுபடமாட்டார்கள்

   சரி உங்கள் தலைவருக்கு ஏதாவது தனிப்பட்ட முறையில் விரோதம் ஏதும்? என்றது போலீஸ்..

    இல்லை அவருக்கு குடும்பம் என்று ஏதும் இல்லை..அவர் தங்கி இருப்பது இதே கட்டிடத்தின் மேல்பகுதியில்தான்...அவர் இங்கு வேலைமுடிந்தவுடன் வெளியில் எங்கும் போக மாட்டார்..இங்குதான் தங்கி இருப்பார்..என்றார்

   எந்தவிதமான பிரச்சினை,சந்தேகம் இல்லை என்றால் அவர் எதற்கு கொலைசெய்ய படவேண்டும்? என்றது போலீஸ்

அதுதான் எங்களுக்கும் பயம்களந்த ஆச்சர்யம் என்றார்கள்...அனைவரும்

   கொஞ்சம் பெரிய அறை,சில அறிவியல் ஆய்வுக்கருவிகள் உட்பட சில கணினிகள் இருந்தன..ஒரு இடத்தில அந்த சடலம் கிடத்தப்பட்டு இருந்தது..பின்பக்கமாக கைகள் கட்டபட்ட நிலையில்..

    அறையில் உள்ள பொருள்கள் எதுவும் அவ்வளவாக களைந்து இருக்கவில்லை..சோதனை செய்ய தலையை தரையில் வைத்தபடி மண்டியிட்டு இருந்த அந்த சடலத்தை திருப்பி பார்த்தார்கள் ..தலையில் அதிகம் முடி இல்லாததால் நெற்றியில் சுடப்பட்டதால் வந்த ரத்தம் வலுக்கையில் கொஞ்சம் பரவி இருந்தது...

   வயது 50 ல் இருந்து 52 இருக்கும்..சராசரியான உடல்வாகு..கண்ணாடி உடைந்து அருகில் சிதறி இருந்தது..முதலில் தாக்கப்பட்டு பின் கைகள் கட்டப்பட்டு இருக்கலாம்..முகத்தில் அடிகள் விழுந்ததுக்கான வீக்கங்கள் தெரிந்தன...

  அங்கு வேலை செய்பவர்களில் இவருக்கு உதவியாளராக வேலைபார்த்த ஒரு பெண் அந்த அறைக்கு அழைத்து வறப்பட்டாள்..


“உன் பெயர் என்ன?”

“புனிதா” என்றாள் பயத்தோடு..

“வயது?”

“24”

“திருமணம் ஆகிவிட்டதா?”

இல்லை”

“சரி நீதானே இவருக்கு உதவியாள்?”

“ஆமாம்”

“என்னென்ன வேலைகள் நீ செய்வாய்?”

“தினசரி ஆராய்ச்சிகள் சம்பந்தமான குறிப்புகள் எடுப்பது,சில ஆய்வுகூட வேலைகள் சம்பந்தமாக அவருக்கு தகவல் கொடுப்பது..போன்ற வேலைகள்”...

“உனக்கு  அவர் என்ன வேலைகள் செய்கின்றார்?அது சம்பந்தமான அல்லது அதை பற்றிய அறிவோ,அதில் ஈடுபாடோ உண்டா?”

“ஆமாம் நானும் இந்த துறையை சேர்ந்தவள்தான்...இவர் செய்யும் ஆராய்ச்சிகள் சம்பந்தமான எல்லா விசயங்களும் எனக்கு தெரியும்” என்றாள்

பயத்தில் அவளது அழகிய முகம் சற்று சிகப்பாக மாறி வியர்த்து வழிந்தது..

“நேற்று வேலை முடிந்து எத்தனை மணிக்கு கிளம்பினே?”

“வழக்கம்போல மாலை ஆறு மணிக்கு”

“இவர் எத்தனை மணிக்கு வழக்கமாக வேலையை முடிப்பார்?”

“அதை குறிப்பிட்டு  சொல்ல முடியாது..அவர் இங்கு மேலே தங்கி இருப்பதால் எப்போதும் இங்குதான் இருப்பார்..”என்றாள்.

இந்த கேள்விகளை கேட்கும் போது  அந்த போலீஸ் புனிதாவின் அழகை ரசிக்காமல் இல்லை..

  அவரது அறையை பார்த்தார்கள்..நிறைய புத்தகங்கள் தவிர வேறொன்றும் தடயங்கள் இல்லை...சிறிய அறை..ஒரு படுக்கை..பொருள்கள் எல்லாம் கலையாமல் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது..”கொலையாளி இங்கு வரவில்லை...அவனது நோக்கம் திருட வேண்டியது இல்லை ...அவரை கொலை செய்வது மட்டும்தான்” என்றார் அந்த போலீஸ்காரர்..

   மீண்டும் சடலம் கிடந்த இடத்திற்கு சென்றார்கள்...அந்த அறையை புனிதாவிடம் காட்டி “இந்த அறையில் இருந்து ஏதாவது பொருள்கள் காணமல் போய் இருக்கா? என்று கொஞ்சம் பார்த்து சொல்” என்றார்..

பயம் கலந்த அழகிய கண்ணால் சுற்றி பார்த்துவிட்டு..”ஆமாம்” என்றாள்

“என்ன காணவில்லை?”

   “நாங்கள் கண்டுபிடித்த செல்களை வளர்க்க வைத்து இருந்த ஒரு வித பெட்டியை காணவில்லை” என்றாள்

“அப்படி அதில் என்ன இருந்தது?”

  “எங்களின் ஆராய்ச்சியின் கண்டுபிடிக்க பட்ட அந்த செல்களின் வளர்ச்சியை சோதனை செய்ய அதை செயற்கையான ஒரு பெட்டியில் வைத்து வளர்ப்போம்..அதைத்தான் காணோம்”

  “அந்த செல்களை பற்றி யாருக்கோ தெரிந்து,அது அவர்களுக்கு தேவைப்பட்டு இருக்கின்றது...அப்படி பார்த்தால். உங்களின் தொழில்முறை எதிரிதனே இதை செய்து இருக்க முடியும்".. என்றது போலீஸ்.”

“எனக்கு தெரிந்து அப்படி யாரும் எங்களுக்கு எதிரிகள் இல்லை” என்றாள்.

   “உங்களுக்குள் ஏதாவது பிரச்சனையா? உங்கள் வேலையாட்களில் யாரவது இதை செய்து இருக்கலாம் என சந்தேகபடுகின்றிர்களா?”

  “இல்லை அப்படி யாரும் எங்களில் இல்லை, எங்களது ஆராய்ச்சியை முழுமையாக தெரிந்து கொண்டவர்கள் மொத்தம் மூன்று பேர்தான்..அவர்களும் அவருக்கு விசுவாசமானவர்கள்.”. என்றாள்

“அந்த மூன்று பேர் யார்?” என்றது போலீஸ்

அந்த கூட்டத்தில் இருந்து ஒரு ஆண் விலகி வந்து புனிதாவோடு இனைந்து கொண்டார்..

   அவர் வயது முதிர்ந்தவர்..இறந்தவ்ரும் இவரும் சேந்து படித்தவர்கள்..இவர் செய்ய வாய்ப்பு இல்லை..

  “அபப்டி என்றால் கொலையாளி வெளியில் இருந்து அந்த செல்களின் தேவைக்காக அவரை கொன்று இருக்கிறான் அப்படித்தானே?”

அந்த ஊழியர்களிடம் மௌனம்

  அந்த போலீஸ் வெளியில் வந்து அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி பேசிக்கொண்டு இருக்கும்போதே பத்திரிக்கைகாரர்கள் சகிதம் மற்றொரு கூட்டம் அந்த கட்டிடத்துக்கு வந்து இருந்தது.

   அவர்களை பார்த்தவுடனே...புனிதா வந்து அங்கு இருந்த போலீசிடம்  “அவர்களை உள்ளே விட வேண்டாம் எங்களது ஆராய்ச்சிகள் கொஞ்சம் முக்கியமானது இதை பிரபல படுததவேண்டாம் என நினைக்கிறேன்” என்றாள்..

  அவள் சொல்லி முடித்துவிட்டு திரும்பும்போது ஒரு சிலர் உள்ளே நுழைந்து புகைப்படம் எடுப்பதில் இறங்கியிருந்தனர்..

  அந்த சடலம் கிடந்த அறை முழுவதும் பத்திரிக்கைகாரர்கள் பரவி அவர்களின் வேலையை சரியாக செய்து கொண்டு இருந்தனர்..

  புனிதாவுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை..அவர்களின் அடுத்த கட்டம் இங்கு வேலை பார்ப்பவர்கள்..அதுவும் இறந்தவரின் உதவியாளன என்னைத்தான் நோண்டுவர்கள்...

   தேவையான கோணங்களில் அந்த சடலத்தை படம் எடுத்த அந்த கூட்டம்..சில ஊழியர்களிடம் தனது கேள்விகளை தொடுக்க அவர்கள் சமத்தாக புனிதாவை கைகாட்டினர்கள்..

இப்போது அந்த கூட்டம் புனிதாவை சூழ்ந்து இருந்தது..

  புனிதா தினறியிருந்தாள்..ஒரு முடிவாக உண்மையை சொல்லிவிடுவது என முடிவெடுத்து ..அங்கு என்ன விதமான ஆராய்ச்சிகள் நடந்து கொண்டு இருந்தன என்பதை பற்றி சொல்லி கொண்டு இருந்தாள்..

  “அப்படி என்றால் நீங்கள் கண்டுபிடிக்கும் அந்த செல்களால் மரணம் இல்லாத உயிரை உருவாக்க முடியுமா?” என்றார் அந்த கூட்டத்தில் இருந்து..

அதற்கு புனிதா கொஞ்சம் தயங்கி விட்டு “ஆமாம் எங்களது நோக்கமே அதுதான்” என்றாள்.

   “அப்படி என்றால் நீங்கள் கடவுளின் படைப்புக்கு எதிராக செயல்படுகின்றிர்களா?நீங்கள் இதை செய்வதின் நோக்கம் என்ன?” என்ற கேள்விக்கு புனிதாவால் பதில் சொல்லமுடியவில்லை..

   அந்த கூட்டத்தை விட்டு  விலகமுயன்ற புனிதாவின் கலங்கிய முகம் அங்கு இருந்த காமேரக்களால் தொலைகாட்சியில் நேரிடையாக  தெரிந்து கொண்டு இருந்தது..



இதை பார்த்துக்கொண்டு இருந்த நிஷியின் ஆர்வம் அடுத்து  என்ன என்றுதான்.......

0 comments: