சில விசயங்கள்..

   ஐன்ஸ்டீன் மீதுள்ள ஆர்வத்தில், எல்லோரும் இலக்கியத்தோடு கவிதைகள், பாக்கள் எழுதுகின்றார்களே நானும் எழுதி பார்த்தால் என்ன என்று  யோசித்ததின் விளைவாய் சிலவற்றை எழுதினேன்..(ஐன்ஸ்டீன் பா)

   அறிவியல் விசயங்களை சரியான பா வடிவில் யோசித்து எழுதுவது கொஞ்சம் சிக்கலானது, எதுகை,மோனையோடு சரியான யாப்பு இருக்கவேண்டும்..ஒன்றை எழுதி முடிக்கும் நேரத்தில்..இரண்டு அறிவியல்புனைவு கதைகள் எழுதி இருக்க முடியும் என்னால்...

   சில விசயங்களை கட்டுரையாக சொன்னால் அதிகம் விரும்பமாட்டார்கள் அதை கற்ப்பனை எனும் சாக்லேட் தடவி கதையாக சொன்னால் கொஞ்சம் படிப்பார்கள் என்பது என் எண்ணம..இதில் இலக்கியத்தன்மையோடு எழுதுகிறேன் என்று  ஏதாவது எழுதினால் படிப்பது சந்தேகம்தான்...இருந்தாலும் எனக்கு ஆர்வம் அதிகம் இதில்..அப்படி எழுதியது..

வெளிவளைந் திருப்பதின்  விளைவே அங்கு
ஒளிவளைய காரணம் என்பதும் உன்னறிவு.
புதுவடிவமது ஈர்ப்புவிசைக்கு கொடுத்தாய் அதிங்கு
பொதுசார்பியல் தத்துவமாய் உன்புகழ் உணர்த்த.

   காதல் கவிதைகள் எழுத காதலிக்க வேண்டும் என்ற அவசியமில்லை...கொஞ்சம் கற்ப்பனைசக்தி இருந்தாலே போதும். அப்படி உள்ளவர்கள் அருமையாக கவிதைகள் எழுதிவிட்டு அதுக்கு தனது காதலன்,அல்லது காதலிதான் காரணமென்று அவர்களுக்கு பெருமை சேர்க்கிறார்கள் என நினைக்கிறேன்....இந்த விசயங்களில் அதிக அனுபவம் இல்லையென்பதால் நான் ஏதாவது சொல்லப்போய் வேண்டாம்.....

கவிதை மாதிரி சில..


ஹோர்மொன்களின்
விளையாட்டுதான் காதல்
என்று எழுதிய காகிதத்தின்
பின்னால் இன்று
காதல் கவிதைகள்
எழுதுகிறேன் உன்னால்

**********

என்னுள் நீயில்லையென்று
சத்தம் போட்டு சொன்னாலும்
தனிமையில் விழியில் வடியும்
துளிக்கண்ணீர் உணர்த்திவிடும்
உணமையை  - நீ
எவ்வளவு தூரத்தில் இருந்தாலும்

*********

உன்பார்வையில் இருந்து
கற்பனைகளை கடன்
வாங்குகிறேன்- மறுநாள்
கவிதை எழுத

*****

தூரத்தில் இருந்தாலும்
சந்தித்துகொள்கின்றன நம்
இதயங்கள் காதல் எனும்
உணர்வால்...
 *******


    புத்தாண்டு வருகின்றது..சிறுவயதில் இந்த வருஷம் இதை செய்ய கூடாது, இதை செய்யவேண்டும் என்று முடிவெடுத்து அதை அடுத்த மூன்று நாள்களுக்குள் என்ன முடிவெடுத்தோம் என்பதையே மறந்து போய் .....பின் வந்த நாளில் அந்த பழக்கமே இல்லாமல்  எல்லா வருட நாள்களும் சாதாரண நாள்களாக மாறின..

   இப்போதைக்கு புதியதாக எந்த எதிர்பார்ப்பும் இல்லை..ஒருவேளை வாழ்க்கையின் அந்த கட்டத்திற்குள் நுழையவில்லை என நினைக்கிறேன்..அன்றாட வேலைகள் சரியாக நடந்து, வாசிக்க நல்ல புத்தகங்கள் கிடைத்தாலே சந்தோசம்...

அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

ஆனால்..

((உங்களுக்கு வைத்தி, புனி புதியவர்கள் என்றால் ஒரு அறிமுகம்..வைத்தி மிகப்பிரபலமான ஒரு மருத்துவர்..தனது மருத்துவமனையில் செய்ய முடியாதவற்றை தனது ஆய்வுகூடத்தில் செய்பவர்..அவருக்கு உதவியாக இருப்பவள் புனி எனும்  ஒரு மாணவி))



"புனி உனக்கு காதல் ஏதும் உண்டா?"

"எதுக்கு டாக்டர் திடிர்னு கேட்க்கிறிங்க?" என்றாள் கொஞ்சம் பயந்தபடி

   "இல்லை நான் பார்த்தவரையில் நீ நல்ல அறிவாளி பெண்ணாயிற்றே அதான் இந்த காதல் பேரிக்காய் செய்கிறாயா என கேட்டேன்" என்றார்

    தந்தை வயதுடையவர்..மிகபிரபலமான மருத்துவர் இந்த கேள்வியை கேட்டதால்... அவளுக்குள் உணமைய சொல்லவா? இல்லை பொய் சொல்லவா? என யோசித்து கொண்டு இருக்கும் போதே....

   ஆய்வுகூடத்தில் ஒருவன் நுழைந்தான்..நேராக அவர்கள் உட்கார்ந்து இடம் நோக்கி வந்தவன்..

"இங்கு வைத்தி என்பவர்?".

"நான்தான் என்னவேண்டும்"

"எனக்கு ஒரு பிரச்சினை"என்றான்

"என்ன?" கேட்டார் வைத்தி

    "இரண்டு ஆண்டுகளாக ஒரு பெண்ணை காதலிக்க முயற்சி செய்கிறேன் ஆனால் அவள் என் காதலை ஏற்றுக்கொள்ள மறுக்கிறாள்"

   "நான் ஒரு மருத்துவர் அதற்கு என்னால் என்ன செய்யமுடியும்" என்று சொனவர்..புனியை அது நீதானா என்பது போல பார்த்தார்..அவள் வேகமாக இல்லை என்பது போல தலையசைக்க..

   "அவள் பின்னாடி சுற்றியதுதான் மிச்சம்.... இதுவரை என்னிடம் எந்த ஒரு பதிலையும் சொன்னதில்லை..இனிமேலும் அவளை பின்தொடரவோ.. என் காதலை வற்புறுத்தவோ போவதில்லை" என்றான்

   "நான் திருமப்வும் கேட்கிறேன்..நான் என்ன செய்ய வேண்டும் என்பதை சொல்லுங்கள்"

   "அவளின் நினைவுகளை என்னால் மறக்க முடியவில்லை..அவளின் வீடுவேறு என்தெருவில் அமைந்து இருப்பதால் பார்க்காமலும் இருக்க முடியாது.......நிறையா கனவுகள்......வலிகள் எல்லாம் கொடுக்கிறாள் காதலை தவிர.....எனக்கு வேண்டியது அவளை பார்க்கும் போது எந்த ஒரு உணர்வும் வரகூடாது..அவள் சாதாரண பெண் என்பதைத்தவிர..அதற்கு நீங்கள் என்ன செய்தாலும் நான் தயார்" என்று வேகமாக சொல்லி முடித்தான்...

    "ஏன் உலகத்தில் அவள் ஒருத்திதான் பெண்ணா? அவளை விட்டுவிட்டு வேறு யாரையாச்சும் கதாலிக்கலமே"

    "காதல் பற்றி உங்களுக்கு தெரியாது..அது ஒருவள் மேல் ஒரு தடவைதான் வரும் ..அது எனக்கு இப்போது வந்து இருக்கிறது ஆனால் அவள் மறுக்கிறாள்" என்றான்

    "அந்த ஹோர்மோன் விளையாட்டை பற்றி எனக்கு நல்லா தெரியும்....சரி இதுக்கு என்னை எந்தவிதத்தில்  நம்புகிறீர்கள்?"

   "நீங்கள் புதியவற்றை செய்வதில் திறமையானவர் என்று கேள்விபட்டு இருக்கிறேன்.".என்றான்

    "சரி அவளை முழுவதும் மறக்க வேண்டுமா? இல்லை அவளை பார்க்கும்போது வயிற்றுக்கும் தொண்டைக்கும் இடையே உருளுமே அந்த உருளை மட்டும் உருள வேண்டாமா?"

"அந்த உருளை உருள வேண்டாம்" என்றான்

"அவளது புகைப்படம் இருக்கா?"

    "இப்போது இல்லை...நாளைக்கு எடுத்து வருகிறேன்..இப்போது இது சாத்தியமா என்று மட்டும் சொல்லுங்கள் நிம்மதியாக தூங்குவேன்"என்றான்

    "இது சாத்தியம் தான்.....நீங்கள் இனிமேல் அந்த பெண்ணை பார்க்கும்போது பழைய காதல் உணர்வுகள் ஏதும் தோன்றது.....இதற்கு பிறகு அவளை காதலிக்காமல் இருக்கும்வரை....மீண்டும் அவளின் பின் சுற்றி கர்ச்சிப் பிறக்கி காதல் வளர்த்தால் நான் பொறுப்பில்லை" என்றார்

    "இல்லை கண்டிப்பாக செய்ய மாட்டேன்.....நாளை புகைப்படத்தோடு வருகிறேன்"" என்று சொல்லிவிட்டு கிளம்பினான

" எப்படி இது சாத்தியம்?" கேட்டாள் புனி

    "கொஞ்சம் சிக்கலானது..காதல் எல்லாம் ஹோர்மோன் விசயம்தானே..அதே முறையில்தான் இதையும் செய்ய வேண்டும்" என்றார்

    "இதுமட்டும் சாத்தியம் என்றால் காதலுக்காக தற்கொலை,தாடிவளர்ப்பது, உருகி உருகி கவிதை எழுதுவது இல்லாமல் போயிடுமே"

"பாப்போம் முதல் முயற்சி."என்றார்

"எப்படி செய்ய போகிறீர்கள்?"

     "உனக்கு தெரியும் நமது பார்வை மண்டலம் எப்படி வேலை செய்கின்றது என்று.....முதலில் பிம்பம் நமது கண்ணில் படும்போது retina வில் இருக்கும் rod மற்றும் cone போன்ற photoreceptor செல்கள் வழியாக உணரப்பட்டு பின் இந்த rod,cone தான் உணரும் பிமப்ங்களுக்கு ஏற்றவாறு ஒருவிதமான glutamate எனும் அமினோ அமிலம் அளவில் கூடும....இதுதான் rod, cone ல் இருந்து தகவல்களை bipolar செல்களுக்கு கொடுக்கும் ... பின் அது ganglion செல்கள் வழியாக மூளைக்கு செல்கின்றது...

     இப்போது அவன் காதலியின் புகைப்படத்தை பார்க்கும்போது அவனுக்குள்  இந்த glutamate அமிலத்தின் சுரக்கும் அளவு அதான் தன்மை போன்றவற்றை தெரிந்துகொண்டு பின் அதை நாம் செயற்கையாக மாற்றினால் மூளைக்கு போகும் தகவலும் மாறும்..அவன் அந்த பெண்ணை பார்ப்பான் ஆனால் தெரிவது அவனது பழைய காதலி இல்லை.....ஏனென்றால் அந்த காதல எண்ணம் ஏற்பட ஆதாரம் இந்த தகவல்கள்தான்.....அதை நாம் மாற்றுவதால் அவனுக்கு அந்த காதல் உணர்ச்சிகள் இருக்காது...

    அதே நேரத்தில் அந்த புகைபடத்தில் இருப்பது சாதாரண பெண் என்பதை மட்டும் அவனது மூளை உணரும்..அவ்வளவுதான் விசயம்..அதற்கு பிறகு இவன் அந்த பெண்ணை எத்தனை முறை பார்த்தாலும் காதல இல்லை.. இவன் இன்னொருமுறை அவளை காதலிக்க ஆரம்பிக்காத வரையில்"

     "விழியில் விழுந்து இதயம் நுழைந்த உறவே என்ற காதலின் அடிப்படையை கொஞ்சம் மாற்றபோகிறீர்கள் அப்படித்தானே" என்றாள்

    "ஆமாம் இதில் விழியில் விழுவது ஒன்று இதயம் நுழைவது ஒன்று" என்றார் சிரித்துகொண்டே

     புகைபடத்தை பார்த்த வைத்தி அவனை ஒரு நாற்காலியில் உட்காரவைத்துவிட்டு அவனின் எதிர்புறத்தில் அந்த புகைபடத்தை தெரியுமாறு அமைத்தார்..அதற்குள் புணி அவனது தலையில் வயர்கள் கொண்டு பல இணைப்புகளை கணினியோடு இணைத்து இருந்தாள்...

    "இப்போது அந்த புகைப்படத்தை எப்போதும் பார்ப்பது போல பாருங்கள்" என்றார்

     புனி சில அளவுகளை குறித்துகொண்டாள்..அடுத்துவந்த சில மணிநேரத்தில் வைத்தியின் முயற்சியில் அவனுக்கு அவளின் புகைப்படம் பார்க்கும்போது சுரக்கும் அமிலத்தின் அளவில்,தன்மையில் மாற்றம் செய்து இருந்தார்கள்...

   அவன் அங்கு இருந்து வெளியில் வந்து வீடு திரும்பும் அதே நேரத்தில் அவனது தெருமுனையில்...இரண்டு பெண்கள்..

    "அவனை இவ்வளவு நாள் சுத்தவிட்டுட்டு இப்பபோய் உன் காதலை சொன்னால் அவன் சம்மதிப்பானா என்ன? என்றாள் ஒருவள்

   "படிக்கின்ற காலத்தில் காதல் பேரிக்காய் என்று சுற்றினால் சரியாக படிக்கமுடியாது என்பதற்காகத்தான் என் காதலை மறைத்தேன் என்பதை அவனிடம் சொல்வேன்" என்றாள் அவனின் முன்னால் காதலி

   அவன் தூரத்தில்  வருவதை பார்த்தவுடன் அவள் கண்களில் காதல்,முகத்தில் ஒருவித புரியாத வெட்கம்....

   அருகில் நெருங்கி வருவதை பார்த்தாள்...எப்படி ஆரம்பிப்பது..அவனை நிறையாமுறை தவிர்த்து இருக்கிறோம்..என்ற தவிப்பில்..... அவனே வழக்கம் போல வந்து பேசினால் சொல்லிவிடவேண்டுமென்று நினைக்கையில் ...அருகில வந்தான்...பார்த்தான்...

ஆனால்..




(இதில்  கண் செயல்படும்விதம சரியானது...அதில் செய்யும் மாற்றம் என் கற்ப்பனை))

தெரியலை.....

     ஆற்றை கடக்கும்போது தண்ணீர் முனங்கால் அளவிற்குத்தான் போனது... மழைக்காலம்...அந்த ஆறும் காட்டாறு..எப்போது மழை பெய்யுமோ அப்போதுதான் தண்ணீர் வரும்..அதுவும் சில நேரங்களில் அதிகமாக..குறைவாக..இப்படித்தான்.......முற்றிலும் மழை நின்றபிறகுதான் படிப்படியாக குறையும்..

     ஆற்றில் நீர் வந்தாலும் வராவிட்டாலும்  மிக பிடித்தமான இடம் அதுதான்..நிறைய பேசி இருக்கிறோம்..விளையாடியிருக்கிறோம் ...

    போனமுறை பார்த்ததுக்கு இப்போது இன்னும் அழகாயிருந்தாள்.....அதை அவளிடம் சொன்னால் திட்டுவாள்..என்பதால் ரசிக்க மட்டும் செய்தேன்...ஊரில் நடந்த எல்லா விசயங்களையும் முடிந்தால் நடித்துக்காட்டி ஒன்றுவிடாமல் அழகாய் சொல்லுவாள்...நான் அதிகம் பேசுவது இல்லை..அவளின் அந்த அழகான பேச்சை கேட்பதற்காகவே...

    "நான் எவ்வளவு பேசுகிறேன் நீ ஏன் எதுவுமே என்னிடத்தில் சொல்லமாட்டிக்கிறே?"

"சொல்வதற்க்கு ஒன்றும் இல்லையே" என்றேன்

"வேண்டாம் நீ வாய் திறக்காமல் இருப்பதே நல்லது..அறிவியல் பேசுவாய்..அதுக்கு இப்படியே இரு" என்றாள்

கிழே கிடந்த ஒரு கல்லை எடுத்து தூரத்தில் இருந்த கிணற்றை காட்டி...

   "இங்கு இருந்தபடியே அந்த கிணற்றுக்குள் கல்லை எறிந்தால் என்ன தருவாய்?" என்றேன்

    "நீ போடு இல்லை போடாமல் போ.... நான் எதுக்கு உனக்கு எதுவும் கொடுக்கணும்"

"இல்லை இது ஒரு பந்தயம் மாதிரி"

    "நீ எதுக்கு இதை ஆரம்பிக்கிறே....... இந்த தனிமையில் பந்தயத்திற்கு நீ என்ன கேட்பாய் எல்லாம் எனக்கு தெரியும்..நான் வரவில்லை " என்றாள்

"எப்பதான் நீ திருந்துவே?"

"திருமணத்திற்கு பிறகு" என்றாள்


    நீர் ஓடும இடத்திற்கு அருகில் உடகார்ந்து ஊற்றை தோண்டி அதில் தெளிந்த நீர் வரும் வரை தண்ணீரை கையால் இறைத்து ஊற்றி கொண்டு இருந்தாள்...நான் அருகில் அமர்ந்து பார்த்துகொண்டு இருந்தேன்...

"உனக்கு பயமாக இல்லையா?

"எதுக்கு பயம்?" கேட்டாள் தண்ணீரை இறைத்து ஊற்றியபடியே

"நம் காதல் திருமணத்தில் முடியுமா இல்லையா என்பதை பற்றி?"

"இல்லை?"என்றாள்

"ஏன்?"

     "உன்னை உணமையாக காதலிக்கிறேன் ..வீட்டில் சொல்லி பார்ப்பேன்..தடுத்தால் உன்னோடு வந்துவிடுவேன்..இதில் என்ன பயம் வேண்டியதிருக்கு"என்றாள்

"நான் உன்னை வேண்டாம் என்றால்?"

    சட்டென்று அவளின் கண்ணில் நீர் அரும்பியது...ஏதும் பதில் சொல்லாமல் மறுபக்கம் திரும்பிகொண்டாள்.

  அபோதுதான் நான் கவனித்தேன்..அவள் தோண்டிய ஊற்றின் மீது தண்ணீர் சென்று கொண்டு இருப்பதை..காரணம் புரிந்தது..ஆற்றில் தண்ணீர் கூடுகின்றது...

    எங்காவது கண்மாய் உடைந்து விட்டாலோ....அல்லது திறந்து விட்டாலோ இப்படி நிகழும்..இதை மேல்தண்ணி என்று சொல்வார்கள்..மிக ஆபத்தானது..எப்போது வரும் என்று தெரியாததால் குளிப்பவர்கள்,கடப்பவர்கள் பாதிக்கபடுவார்கள்...


    தண்ணீர் கணிசமாக உயர்ந்து இருந்தது...இப்போது இடுப்புக்கு மேலே போய் கொண்டு இருந்தது..

"எப்படி போக?"

     "சீக்கிரம் போக வேண்டும் ..இல்லையென்றால் இன்னும் தண்ணீர் கூடும" என்றேன்

    அக்கரையில் இருப்பது ஒரு ஒற்றையடி பாதை...அதன் இருபுறங்களிலும் தண்ணீரில் அடித்து வரப்பட்ட முட்புதர்கள்....நேராக பயணித்தால் சரியாக பாதையை அடைவதென்பது முடியாத காரியம்..நீரால் இழுத்து செல்லப்பட்டு வேறு இடம் சேர்வோம்...

    பாதை இருக்கும் இடத்தில இருந்து கொஞ்சம் முன்னாடி இறங்கினால் மட்டுமே நீரால் தள்ளிக்கொண்டுபோய்  பாதைக்கு அருகில் சேரமுடியும்.....

    சற்று தூரம் சென்று  இறங்கினோம்..என் கையை இருக்க பிடித்து இருந்தாள்.....சிறிது தூராம் சென்றவுடன் நீரின் தள்ளும் விசை கொஞ்சம் தள்ளியது.......

     திடிரென்று என் கால் நீரால் உருவான பள்ளத்தில்செல்ல..சட்டென்று குனிய நேர்ந்தது..அந்த நேரத்தில் அவளின் கை விடுபாட்டதொடு இல்லாமல்...நானும் அதிகமாக குனிய என்னை நீர் புரட்டி உள்ளே இழுத்து உருட்ட ஆரம்பித்தது...முயற்சி செய்து வெளிவர பார்த்தாலும் இழுத்துச்செல்வதில் இருந்து தப்பிக்க முடியவில்லை..

    நீரின் போக்கிற்கு ஏற்ப மேலே வருவதும் பின் உள்ளே இழுத்து செல்வதும் தொடர்ந்துநடக்க..அவளை விட்டு  தொலைவாக போய் இருந்தேன்...

      கொஞ்சம் முயற்சி செய்து நீந்தி கரையருகில் சென்றால்  முட்புதர்கள்....ஒருவழியாக முள்குத்தும் வலியையும் பொறுத்துக்கொண்டு......அந்த இடத்தில ஒதுங்க என் முகம் ,கால் உட்பட முட்கள் தைத்து ரத்தம் வழிந்தது...

     அவள் அந்த பாதையில் சரியாக சேர்ந்து இருந்தாலும்...நான் எங்கே போனேன் என்பதை பார்க்க கொஞ்சம் ஆற்றில் இறங்கி நான் இருக்கும் இடத்தை பார்ப்பது தெரிந்தது...

      நான் தூரத்தில் முட்களுக்குள் இருப்பதை பார்த்தவுடன் அவளும் கரையையொட்டி என்னை நோக்கி ஓடிவர ஆரம்பித்தாள்..அவள் வரும் வழியில் நீருக்குள் இருந்த முட்கள் அவளின் காலில் குத்த அதை குனிந்து பிடுங்கிவிட்டு பின் ஓடிவந்துகொண்டு  இருந்தாள்...

   கரையோரத்தில்  முள் இல்லாத இடத்தை பார்த்து நின்று இருக்க..முகம் மற்றும் கையில் முள் கீறல்களோடு என்னருகே வந்து சேர்ந்தாள்...

"ஒன்னும் ஆகலியே" கேட்டாள்

    "நீ ஏன் இங்கு வந்தாய்..அதான் நான் அங்கு வருவேன்ல..பார் ரத்தம் வருகின்றது" என்று அவள் கையில் முட்களால் வந்த ரத்தத்தை காட்டி இயல்பாய் கேட்டேன்...

     சிறிது நேரம் எனது கண்களை பார்த்து கொண்டு இருந்தவள்..தனது இருகைகளால் முகத்தை மூடிக்கொண்டு அழுதுகொண்டே  நின்று இருந்த இடத்தில அப்படியே உட்கார்ந்தாள்..

     எதுக்கு இப்ப அழுகிறே? என்று கேட்டுக்கொண்டே கிழே அமறும்போதுதான் பார்த்தேன் அவள் காலில் இருந்து ரத்தம் வழிந்து நீரோடு கலந்து கொண்டு இருந்தது...

"முள் குத்தியது வலிக்குதா என்ன?"

இல்லை என்று தலையாட்டினாள் அழுதுகொண்டே...

    "பின்ன என்ன?"என்று கேட்டுக்கொண்டே அவளது கைகளை விளக்கி முகம் பார்க்க..கண்ணீர் வழிந்தோடியது...

"ஏன் அழுகிறே சொல்லேன்?"

 மீண்டும் ஒன்றுமில்லை என்பது போல தலையசைத்தாள்..

    முள் இல்லாத இடம் பார்த்து கடந்து நல்ல பாதைக்கு வந்து இருவரும் மௌனமாக நடந்து கொண்டு இருந்தோம்........

"அப்ப ஏன் அப்படி அழுதே?"

"தெரியலை" என்றாள் என்விழி பாராமல்.

நான் அல்லாத நான்

    எனது விண்கலம் முழுவதும் தானாக இயங்கும் விதத்தில் அமைக்கப்பட்டது..சில கட்டுப்பாடுகள் என்னிடமும், பிரதான கட்டுப்பாடு பூமியிலும் இருந்தது...

    கண்ணிமைக்கும் நேரத்தில் .....என் ருபுறம் அந்த விண்கலம் திடிரென்று தோன்றியது...அது தோன்றியதில்  இருந்து  கண்டிப்பாக அது ஒளியின் வேகத்தில் பயணித்து இருக்க வேண்டும்...அடுத்த இரண்டு நிமிடங்களில் என்னோடு இருந்த பூமியின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு முழு விண்கலமும் அவர்களின் கட்டுபாட்டுக்குள் போனது..நான் சில கட்டளைகள் பிறப்பித்தும்...பயனில்லை...அந்த  கலத்தை தொடந்து   எனது கலம்  பயணித்தது...

   தரையிரங்கியவுடன்...அந்த கலத்தில் இருந்து..இரண்டு பேர் என்னை நோக்கி வந்தார்கள்.......என்ன ஆனாலும் எனது கலத்தின் கதவை திறக்க கூடாது என்றுதான் இருந்தேன்....ஆனால் அவர்கள் கிட்டே வர அது தானாக திறந்தது....


   பயணத்தின் தொடக்கத்திலியே முடிவாகியிருந்தது...இது வேற்று கிரக ஆய்வு பயணம்..என்னவேண்டுமானாலும் நடக்கலாம் ......இருந்தாலும் அந்த நேரத்தில் உயிரின் மேல் பயம் வந்தது...என்ன செய்வார்கள்..எப்படி சாமாளிப்பது...??

   வெளியில் நின்று இருந்தார்கள..சைகை காட்ட கிழே இறங்கினேன்...விமானத்தில் இருந்து நான் சுவாசித்து கொண்டு இருந்த உயிர்வாயு இப்போதும் என் முகத்தோடு இணைக்கப்பட்டு இருக்க..... ஒருவன் வந்து அதை நீக்கினான்...அவ்வளவுதான் கதை முடிந்தது என நினைத்தேன்...என் சுவாசம் தொடர்ந்தது..அப்படியென்றால் அங்கு உயிர்வாயு இருக்கின்றது...

   ஏதும் உரையாடாமல் அழைத்து சென்றார்கள்...அவர்களுக்குள் பேசிக்கொள்ளவில்லை..கட்டடங்கள் போல இருந்த எல்லாம் ஒருவித தகடு போன்ற பொருளால் இருந்தது...அந்த அறைக்குள் நுழையும் போது மெல்லிய ஒரு சத்தம் ......

   அந்த நாற்காலி போன்ற ஒன்றில் கட்டாயபடுத்தி அமர வைத்தார்கள்...தலைக்கவசம் போல இருந்த ஒன்றை ஒருவர் மாட்ட..அங்கு இருந்த இன்னொருத்தன்...அவனது மேசையில் எதையோ அழுத்தினான...

   எனது தலையில் சிறிய அளவிலான மின்சாரம் பாய்ந்தது போல இருக்க..நினைவிழந்தேன்...

    கண்விழித்த போது...எதிரில் சிலர் அமர்ந்து இருந்தார்கள்....ஆச்சர்யம் அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது எனக்கு புரிந்தது....மேலும் அந்த கிரகத்தை பற்றிய எல்லா அறிவுகளும் இருந்தது...


        “இப்போது உனது மூளையில் இருந்த உனது அறிவு மற்றும் தகவல்களை நீக்கி விட்டு எங்களின் கிரகத்துக்கு ஏற்றாற்போல் உனது மூளையில் மாற்றம் செய்து இருக்கிறோம்...உனது பழைய எல்லா தகவல்களும் ஒரு கோப்பில் இருக்கின்றது அதை திரும்பவும் நீ பெற முடியும்...இப்போது நீ எதையாவது எங்களுக்கு உணர்த்த அதை நீ நினைத்தாலே போதுமானது என்று அவர்கள் உணர்த்தினார்கள்.

என்னை என்ன செய்வீர்கள்? எப்போது நான் திரும்புவேன் நினைத்தேன்

பிரச்சினை இல்லை..உன்னை ஒன்றும் செய்யபோவதில்லை...நலமாக திரும்பி போகலாம்

பின்னே எதற்கு என்னை இங்கே வைத்து இந்த மாற்றம் எல்லாம்

    உங்களின் கிரகத்துக்கு நாங்களும் அடிக்கடி வந்து போய் இருக்கிறோம்...ஆனால் உங்களால் எங்கள் இனத்தவரை பிடிக்க முடியவில்லை...இப்போது முதன் முறையாக அங்கிருந்து வந்து இருக்கிறாய்...இந்த கிரகத்தை பற்றி கொஞ்சம் தெரிந்து கொண்டு போகத்தான் இந்த வழி....உங்களது அறிவால் எங்களை தெரிந்து கொள்வது என்பது இயலாத காரியம்...அதனால் இங்கு இருக்கும் சில பொதுவான விசயங்களை உனது மூளைக்குள் கொடுத்து இருக்கிறோம் உணர்த்தினார்கள்

எவ்வளவு காலம் இருக்க வேண்டும் நினைத்தேன்

     “உனது விருப்பம்...நீ இங்கு சுற்றி திரியலாம்..எப்போது போகவேண்டும் நினைக்கிறாயோ..உனது பழைய எண்ணங்கள் உனக்கு திரும்பி வழங்கபடும்... நீ உனது கிரகத்துக்கு பயணிக்கலாம்

    வெளியில் போனேன்...இது என்ன புதிய திருப்பம் என்று நினைத்து கொண்டே நடந்தேன்..யாரும் என்னை கண்டுகொள்ளவில்லை..எல்லாம் அவரவர் வேலையில் இருந்தார்கள்...

   அருகில் அமர்வதறக்கான இடம்  இருந்தது...அமர்ந்தேன்..அதன் மேசையில் பார்த்தால் ஒளிரியது..நமது கணினி போல அதை மேசையோடு வைத்து இருந்தார்கள்....அதில் எல்லா விதமான புத்தகம், யார் யாருக்கு என்னென்ன வேலை...போன்ற கிரகத்தின் எல்லா தகவல்களும் தெரிந்து கொள்ளும்படியிருந்தது..

   அந்த கிரகத்தில் யாரும் தனியில்லை..நாடு இல்லை..பிரிவு இல்லை..கிரகமே ஒன்றாய் இருந்தார்கள்..எல்லோர்க்கும் பொதுவான விதிகள்...யாருடைய ஆட்சியும் இல்லை..அவர்களுக்கு தெரிந்த வேலைகளை பார்த்தார்கள்...சம்பளம் என்று எதுவும் இல்லை..

    அவர்களின் உணவு என்றால் ஒரு திரவம்தான்....அந்த கிரகத்தில் இருந்தே கிடைத்தது...அவர்களிடத்தில் முனேற்றம் என்பதைவிட நமது சாதாரண மூளையால் புரிந்து கொள்ள முடியாத வகையில் இருந்தது...தனக்கு தெரிந்த வேலையை ஒரு குழுவாக சேர்ந்து செய்தார்கள்..

   எங்கும் போக மனமில்லாமல் மீண்டும் அதே அறைக்கு திரும்பினேன்...அமர்ந்து இருந்த அவர்களிடம் சென்று

எப்படி சாத்தியம் மூளையில் உள்ளவற்றையே மாற்றுவது என்று நினைத்தேன்

    “எங்களை பொறுத்தவரை எல்லாம் இயந்திரம்தான்...எதையும் எங்களால் செயற்கையாக கட்டுப்படுத்த முடியும்....இப்போது நாங்கள் உன் மூளையில் சேர்த்தது சில அடிப்படையான விசயங்கள்தான்... உனக்கு புரிந்து கொள்ளமட்டும். உணர்த்தினார்கள்

என்னை விட்டு விடுங்கள் நான் போகிறேன் நினைத்தேன்

    “சரி போகலாம் உதவுகிறோம்..எங்கள் விமானத்தை உபோயோகிக்கலம்..இங்கு இருந்து நீ போவதற்கு எங்களின் அறிவு உனக்கு தேவை என்பதால் இப்படியே நீ போகலாம்..உனது பழைய நினைவு கோப்பு உன்னோடு இருக்கட்டும்..எப்போது உன் கிரகம் போகின்றயோ அப்போது விமானத்தில் இதே போன்று ஒரு இயந்திரம் இருக்கு அதில் அந்த கோப்பை உட்செலுத்தி அதை உனக்குள் மாற்றிகொள்ளலாம்

    “இல்லை எனது நினைவையும் கொடுங்கள் எனது கிரகத்தை நெருங்கும்போது மனிதர்களிடம் இருந்து தகவல்களை பெற்று அதற்கு பதில் அளிக்க உதவியாக இருக்கும்..இல்லைஎன்றால் அவர்கள் என்னை அழித்து விடுவார்கள் அவர்களிடம் ஒற்றுமை இல்லை  நினைத்தேன்

    “அதுவும் சரிதான்..உனது முழு நினைவை கொடுத்தால் உன் வழியில் நீ சிந்திக்க தொடங்குவாய்..அது உனது பயணத்திற்கு சரியல்ல..உனது சில அடிப்படையான வேலைகள் செய்யும் நினவை மட்டும் இப்போது கொடுக்கிறோம்

    சரி என்று நாற்காலியில் அமர்ந்தேன்..மீண்டும் அதே தலைகவசம்..கொஞ்சம் வலி..இப்போது எனக்கு என்ன  நடந்தது ...எந்த நிலமையில் இருக்கிறேன் என்பதை உணர முடிந்தது...பூமியோடு தொடர்பு கொண்டால் பதில் அளிக்க முடியும்...எனது நிலையை விளக்க முடியும்..வேறொன்றும் செய்ய முடியாது..மீதம் இருப்பது அவர்கள் என் மூளையில் செலுத்தியது...


     “இது நீ செல்லும் விண்கலம் ஒளியின் வேகத்தில் பயணிப்பது...இதில் சில மாற்றங்களை செய்து இருக்கிறோம்...நீ போய் இறங்கியவுடன் இது தானாகவே எங்களிடம் வந்து சேரும்...பயணிக்கும் போது சில கட்டளைகள் பிறப்பிக்க வேண்டும் அது உன் மூளையில் இருக்கிறது..நீ போகலாம்.

   அமர்ந்தேன்...கிளம்பியது...ஒளியின் வேகத்தில் பயணம்...பூமி கட்டுப்பாட்டில் பேசி..தரையிறங்கியவுடன் கதவை அடைக்க அந்த விண்கலம் வேகமாக எம்பி பறந்து கண்ணில் இருந்து
மறைந்தது...இப்போது புரிந்தது.. ஒரு முறை கதவை திறந்து முடின உடனே அது திரும்பும் படி செய்து இருக்கிறார்கள்........

    அப்போதுதான் நினைவுக்கு வந்தது...அந்த விமானத்தில் என் பழைய நினைவுகள் அடங்கிய கோப்பு,மற்றும் அதை என் மூளைக்குள் ஏற்ற தேவையான இயந்திரம் இருந்தும் அதை ஏற்ற மறந்து நான் அவசரமாக இறங்கிவிட்டு  கதவை அடைத்தது....

   இப்போது நான் இருக்கும் நிலை...கொஞ்சம் வேற்றுகிரக வாசி..கொஞ்சம் பூமி வாசி...அதாவது அந்த கோப்பு என்னிடம் கிடைக்கும்வரை நான் ஒரு....."நான் அல்லாத நான்"



காதலின் பரிசு...

    கிடைத்த அந்த தனிமையான நேரத்தில் இருவரும் ஊருக்குவெளியில் ஒரு இடத்தில இருந்து பேசிவிட்டு.... திரும்பி வரும்போது...

    "கணேஷ் இது வீட்டுக்கு தெரிந்தால் பெரிய பிரச்சினை ஆகும்...உனக்குத்தான் என் அப்பா பற்றி தெரியுமே?"

    " இருவரும் சம்மதித்ததுனே முடிவெடுத்தோம் .... எப்படியாவது சமாளிக்கத்தான் வேண்டும்"என்றேன்

   "நீ என்னதான்  சொல்லு கண்டிப்பாக  ஒருநாள்  வெளியில் தெரிந்து விடும்" என்றாள்

    "என்ன செய்ய சொல்றே..இது ஒரு உயிர் பிரச்சினை....அதுவும் நம் உணமையான காதலோடு சம்பந்தப்பட்டது...இதுக்கு எதிராக என்ன பிரச்சினை வந்தாலும் சமாளிச்சுதான் ஆகணும்..அதுதான் என் முடிவு" என்றேன்

  "பார் இன்னும் கொஞ்ச நாளில் நீ வேலைக்கு போய்டுவே..நான் மட்டும் எப்படி இதை தனியாக யாருக்கும் தெரியாமல்  பாதுகாப்பது சொல்?

"நம் காதலுக்காக இதை கூட செய்ய மாட்டிய என்ன?"

     "இல்லை கணேஷ் புரிந்துகொள் என்னை.......நான்தான் சொன்னேனே முதலில்.... இது எல்லாம் வேண்டாம் என் வீட்டில் சம்மதிக்க மாட்டார்கள் நம் கதாலுக்கும் பிரச்சினை வரும் என்று"

      "நீ ஏன் இப்படி பயப்படுகிறாய் என்று எனக்கு தெரியவில்லை..எப்படின்னாலும் ஒருநாள் நம் காதல் வெளியில் தெரிந்துதானே ஆகவேண்டும் ..அது இப்போது இதன் மூலம் தெரிந்து விட்டு போகட்டுமே நல்லதுதானே"


   "இதுதான் உன்னோடு பிரச்சினை...எதையும் சரியாக புரிந்து கொள்ள மாட்டாய்...இதனால் எனக்கு வரும் பிரச்சினையை உனக்கு எப்படி புரிய வைக்க போகிறேன்..." என்றாள்

  "நீ என்ன சொன்னாலும் இந்த விசயத்தில் எனக்கு உடன்பாடு இல்லை..இத்தனை வருடம் உருகி உருகி காதலித்துவிட்டு அதன் அடையாளமாக ஒன்றை ஏற்க்க மறப்பது உனக்கு எந்த விதத்தில் சரியாக படுகின்றது என்று தெரியவில்லை" என்றேன்

அமைதியாக என் முகம் பாராமல் மெதுவாக நடந்து வந்தாள்....

    எனக்கு நன்றாக தெரியும் அவளுக்கு இதில் துளியும் இஷ்டமில்லை..காரணம் பயம......இதன் மூலம் எங்கள் காதல் வெளியில் தெரிந்து விடும்...பின் ஏதாவது பிரச்சினை வந்து நாங்கள் சேரமுடியாமல் போய் விடுமோ என்பதுதான் அவளது எண்ணம...ஆனால் எனக்கு இதில் எந்த ஒரு பயமும் இல்லை..என்றாவது தெரியப்போகிற காதல்தான்..அதுக்கு ஏன் பயப்பட வேண்டும் என்பதுதான் என் எண்ணம.

    மற்றபடி என்னை காதலிப்பதில் எந்தவித குறையும் இல்லை அவளிடம் ...ஏனோ இந்த விசயத்தில் மட்டும் தயங்குகிறாள்... ஒரு உயிர் சம்பந்தப்பட்டு இருப்பதுதான் காரணம்...

நீண்ட நேரம் பேசாமல் நடந்தவள்...

"சரி காரணம் கேட்டால் என்ன சொல்ல அதையாவது சொல்?" என்றாள்

    "இது என்ன பெரிய விசயம்..முடிந்தவரை சாமளித்துபார் நம்பவில்லை என்றால் உண்மையை சொல்லிவிடு அவ்வளவுதானே இதில் என்ன இருக்கு?"

     "இதை நீ எளிதாக சொல்லி விட்டாய் ஆனால் இந்த இடத்தில ஒரு பெண்ணாக இருந்து யோசித்து பார்...அப்போது உனக்கு என் கஷ்டம் தெரியும்..அதுவும் காதல் சம்பந்தமான விசயங்களை  மறைப்பது..கஷ்டம் கணேஷ்...தயவு செய்து புரிந்து கொள்ளேன்"

"அப்ப நான் சொல்வதில் எந்த அர்த்தமும் இல்லை என்கிறாயா?"


  "இல்லை இதனால் வரும் பெரிய பிரச்சினைகளை புரிந்துகொள் என்கிறேன் அவளவுதான்"

"சரி இப்ப என்ன செய்ய முடிவாக?"என்றேன்


    "கோபப்படாம நிதானமா யோசனை பண்ணி நீதான் ஏதாவது சொல்லணும்" என்றாள்

"இவ்வளவு தூரம் நடந்தது நடந்தாச்சு அதான் யோசிக்கிறேன்"

     "எவ்வளவு தூரம்..இங்கு இருந்து பத்து நிமிடம் நடை....... வா போய் விட்டுவிட்டு வந்துவிடலாம்..இது என்கிட்ட  இருப்பதைவிட அது அம்மாகிட்டே இருந்தாதான் நல்லா இருக்கும்" என்றாள்

     இருவரும் பேசிக்கொண்டு இருந்த இடத்திற்கு  அருகில் ஒரு நாய் குட்டி போட்டு இருந்தது..அதில் ஒரு வெள்ளைநிற நாய் குட்டி அழகாக இருக்க.....அவள் அதை தூக்கி கொஞ்சி கொண்டு இருந்தாள்....நான்தான்..இதை நமது காதலின் அடையாளமாக வளர்க்கலாம் என்று சொல்ல  கொஞ்சம் தயக்கத்தோடு சம்மதித்தவள் வருகின்ற வழியில் பயந்து மனம் மாறிவிட்டாள்....

      அந்த இடத்தை நெருங்கினோம்...அந்த நாய்குட்டியை உணமையில் பிரிய அவளுக்கு பிரியம் இல்லைதான்....ஆனால் அவள சொல்வது போல வீட்டில் சம்மதம் இல்லாமல் அதை வளர்ப்பது கஷ்டம்...

    அதை இறக்கி விடுவதற்கு முன் அதன் நெற்றியில் செல்லமாக ஒரு முத்தம் கொடுத்துவிட்டு கிழே இறக்கிவிட்டாள்...... கொஞ்சம் தள்ளாடிய நடையில் அதன் அம்மாவிடம் சென்றது....அதை பார்த்த நாங்கள்...பிரிய மனமில்லாமல்  வந்த வழியில் நடக்க ஆரம்பித்தோம்....

நம்பிக்"கை"

    வைத்தியின் அண்மைய சாதனை என்றால் ஸ்டெம் செல்களை வைத்து ஒரு உறுப்பை உடலிலேயே  வளரச்செயவதுதான்..ஏற்கனவே இதே ஸ்டெம் செல்களை வைத்து  செல் குறைபாடுகளை ஜீன்தெரபி மூலம் சரி செய்து கொண்டு இருந்தார்கள்..... ஸ்டெம் செல்களை தேவையான திசுக்களாக அல்லது உறுப்புகளாக மட்டுமே  தனியாக வளரவைத்து பின் அதை பாதிப்படைந்தோரின் உடலில் பொருத்தி அந்த குறையை சரி செய்தனர்...

       இந்த முறையில் ஒரு முன்னேற்றமாக வைத்தியின் முறை இருந்தது...அது..ஸ்டெம் செல்களை தனியாக வெளியே வளர வைக்காமல் நேரடியாக அதை உடம்பிலேயே வளர வைப்பது அதாவது ஒருவருக்கு இன்னொரு காது வேண்டும் என்றால் அதுக்கு தேவையான ஸ்டெம் செல்களை பிரித்து எடுத்து அதில் உள்ள ஜீன்களை செயற்கையான கட்டுப்பாட்டில் வைத்து  அதான் மூலம் உருவாக்கும் ப்ரோடின்களை சரியான வகையில் கட்டுபடுத்தி ஒரு புதிய காதை உருவாக்கிவிடுவார்...இதற்கு அந்த ஆள் அவரது ஆய்வுகூடத்தில் சில மணிநேரங்கள இருந்தால் போதுமானது...  அவருக்கு உடம்பில் எந்த இடத்தில காது வேண்டுமோ அங்கு கிடைக்கும்...

     வைத்தி இதை சில எலிகளின் மீது மட்டும்தான் செய்து பார்த்து இருந்தார்...என்னதான் வைத்தி பெரிய ஆளாக இருந்தாலும்.இந்த ஆராய்ச்சிகளை மருத்துவமனைகளில் செய்ய முடியவில்லை..சட்டபிரச்சினை ஒருபுறம் இருந்தாலும்..சில மதவாத சக்திகள் இந்த முயற்சியை விரும்பவில்லை..எனவே  யாருக்கும் தெரியாமல் அவரது ஆய்வுகூடத்தில் இதனை செய்தார்

     மொத்தம் மூன்றுபேர் வைத்தியோடு சேர்த்து.... ஒருவள் புனி..கல்லுரி முடித்து விட்டு ஆய்வுசெய்யும் மாணவியாக சேர்ந்தாள்..இப்போது வைத்தியின் கண்டுபிடிப்பில் பாதி அறிந்தவள்..மற்றொருவள் பணியாள்.. சிறு சிறு மருத்துவ வேலைகள் செய்வாள்...

      புனியை வைத்தி தனது சொந்த மகள் போலத்தான் வைத்து இருந்தார்..ஆனால் புனிக்கு விளையாட்டுத்தனம் அதிகம்.....முதலில் அவளுக்கு எதையும் கற்றுகொள்ள ஆர்வம இல்லையென்றாலும் வைத்தியின் இந்த ஸ்டெம்செல் ஆராய்ச்சி புனிக்கு கொஞ்சம் புதுமையாக ஆர்வமாக இருந்தது..சந்தேகங்களை கேட்டு ஒருவழியாக அவளும் இதை கொஞ்சம் படித்து இருந்தாள்...

    இந்த முறையை ஒரு மனிதன் மீது செய்து பார்க்கவேண்டும் என்பதே அவரின் இப்போதைய விருப்பம்...அதை புனியிடம் சொன்னபோது..

    "அதில் ஏதும் பிரச்சினை ஏற்ப்பட்டால் என்ன ஆகும் என்பதையும் நினைத்து பார்க்கவேண்டும்" என்றாள்

      "ஆமாம் பெரிய பிரச்சினை...இதை யாருக்கும் தெரியாமல் செய்யவேண்டும் முடிந்த வரை நமது ஆராய்ச்சியை பற்றி தெரியாதவராக இருந்தால் நல்லது... பேசி சம்மதிக்க வைக்கலாம்" என்றார்

      "அதைவிட யாருக்கு ஒரு குறை இருக்கோ அவரிடம் உங்க குறையை நீக்குகிறோம் என்று சொல்லி இதை செய்ய முயற்சிக்காலமே" என்றாள்

     "ஆமாம் இதுவும் நல்ல யோசனைதான்... அந்த ஆளும் தானாக முன்வந்து ஒத்துகொள்ள வாய்ப்பு இருக்கின்றது உடனடியாக இதுக்கு தேவையான ஆளை தேட வேண்டும்" என்றார்

      அன்று மாலையில் எல்லோரும் கிளம்பும் முன் அந்த பணியாளிடம்  ஏதாவது உடல் குறை இருப்பவர் உங்களுக்கு தெரிந்தவர் என்றால் அழைத்துவருமாறும் அந்த குறையை சரி செய்யலாம் என்று சொன்னார்..அவளும் சரி என்றாள்

      இரண்டு நாள்கள கழித்து அந்த  பெண் தனக்கு ஒருவனை தெரியும் அவன் சிறுவயதில் வலது கை பாதியை இழந்தவன்..இப்போது வீட்டில் சும்மாதான் இருக்கிறான்..நீங்கள் சம்மதித்தால் நாளைக்கு அவனை அழைத்து வருகிறேன் என்று சொல்ல வைத்தியும் சம்மதித்தார்...

     அவன் வந்தான்...ஒல்லியாக இருந்தான்..புனியை கண் கொட்டாமல் பார்த்தான்...அவனது உடல் நிலையில் சில பொதுவான சோதனைகள் செய்யபட்ட பின்னர்...வைத்தி அவனிடம்

"நீங்கள் இழந்த கையை திருப்பி வளர வைக்க முடியும் நீங்கள் சம்மதித்தால்"

      "அது எப்படி அதான் முடிஞ்சு போச்சே...இது என்ன மரமா? கிளை ஓடிந்தவுடன் அந்த இடத்தில இருந்து தானாக ஒரு புது கிளை தளிர்த்து வர." என்றான் சிரித்து கொண்டே..

     "ஆமாம் நமதும் உடம்பிலும் அது சாத்தியம்தான்...அந்த மாதிரி தளிர்த்து வரும் அதிசயத்தைத்தான் நான் இப்போது
உனக்கு செய்ய போகிறோம்" என்றார்

"எப்படி மந்திரம் சொல்லியா? இல்லை ஏதாவது பூஜை செய்தா?"

"இல்லை இது அறிவியல்.... மந்திரம் இல்லை தந்திரம் இல்லை..முழுவதும் நம்பலாம்"என்றார்

"சரி என்னை என்ன செய்வீர்கள் ..எனக்கு ஏதாவது ஒன்று ஆனால்?"கேட்டான்

     "ஒன்றும் ஆகாது..ஏற்கனவே சோதித்து இருக்கிறோம்...என்ன ஒருவேளை கை வளராமல் போகுமே தவிர மற்றபடி ஒரு தீங்கும் இருக்காது...இது உண்மை நம்பலாம்" என்றார்

     அருகில் இருந்த புனித..."ஒரு தடவை முயற்சி செய்து பாருங்களேன் கை கிடைத்தால் உங்களுக்குத்தானே நல்லது" என்று சொல்ல அவளை உற்று பார்த்தான்

"சரி சம்மதிக்கிறேன் எனக்கு எதுவும் ஆககூடாது" என்றான்


     அடுத்த வந்த நாள்களில் வைத்தியும் புனியும் நிறையா உழைத்தார்கள்..செல்களின் வளர்ச்சி விகிதம்..அதுக்கு தேவையான ப்ரோடின்கள்...அதை கொடுக்கும ஜீன்கள்..அதை எப்படி தகுந்த நேரத்தில் கட்டுபடுத்துவது போன்றவிசயங்களை சேகரித்தார்கள்..

    அன்று மாலை  அவனை ஒருமுறை சோதித்து பார்த்துவிட்டு...எல்லாம் தயாராய் இருந்த அந்த அறைக்குள் கொண்டு போனார்கள்..வெட்பநிலை முழுவதும் சரியாக கட்டுபடுத்தபட்டு இருந்தது...ஒரு சிறிய நீண்ட கண்ணாடி குடுவை அவனது கையில் பொருத்த பட்டது..அதன் மேல் சில துவாரங்கள்..இருந்தன...சில வயர்கள் அருகில் இருந்த கணினியில் இணைக்கு பட்டு இருக்க...அவன் மிரண்டு போய் இருந்தான்...

       வைத்தி அந்த கண்ணாடி குடுவையில் இருந்த துவாரத்தில் ஒரு ஊசியை   அவனது கையில் ஒடிந்து இருந்த முனையில் அதை செலுத்தினார்...அருகில் இருந்த புனி சரியாக எப்போது செலுத்த பட்டது என்ற நேரத்தை குறித்து கொண்டாள்...

   முழுவதும் அந்த செல்கள் வளர்ச்சி அடைய ஆகும் நேரத்தை முன்னரே அவர்கள் கணித்து இருந்தார்கள்..போதுமான வளர்ச்சி அடைந்த பிறகு அந்த செல்களின் வளர்ச்சியை நிறுத்த ஒரு ஊசி போடவேண்டும்...அதாவது அந்த செல்கள் பல்கி பெருகாது...இவர்களின் கணக்குப்படி அதிகாலையில் ஐந்து மணிக்கு அந்த ஊசி போட்டு செல்லின் வளர்ச்சியை நிறுத்த வேண்டும...

     அவனை முழுவதும் மயக்கபடுத்தி இருந்தார்கள்..சிறிது நேரம் தொடக்க நிலை செல்கள் பல்கி பெறுகி வளர்ச்சி அடைவதை உறுதி செய்துவிட்டு வைத்தியும் புனியும் ஒரு அறைக்கு செல்ல..அந்த பணியாள் அங்கு இருந்தாள்...


       வைத்திக்கு தூக்கம் வரவில்லை..அவ்வப்வோது போய் பார்த்துவிட்டு வந்தார்.....

     "இதுமட்டும் நிறைவேறி விட்டால் என் வாழ்கையின் லட்சியம் நிறைவேறின மாதிரி" என்றார்

"இதில் என்ன சந்தேகம் கண்டிப்பாக நிறைவேறும்" ..

"பார்ப்போம் இன்னும் சில மணி நேரம் இருக்கு"என்றார்



அந்த ஊசியை போடவில்லை என்றால என்ன ஆகும்?கேட்டாள்



       "அவன் கையின் வளர்ச்சி நிற்காமல் தொடர்ந்துகொண்டே இருக்கும் அவ்வளவுதான்" என்றார்

    கொஞ்ச நேரத்தில் புனி அப்படியே சாய்ந்து தூங்கியே விட்டாள்..வைத்தி அந்த ஐந்து மணிக்காக காத்து இருந்தார்...

  ஐந்து மணிக்கு முன்னரே புனியை எழுப்பி..அந்த மருந்தை எடுத்துக்கொள்ள சொல்லி இருவரும் கிளம்பி அந்த அறையை நோக்கி சென்றார்கள்..அங்கே..அவன் இல்லை..ஒரு ஓரத்தில் அந்த பணியாள் விழுந்துகிடந்தாள்...

அவசரமாக அவளை மயக்கத்தில் இருந்து எழுப்பி.

அவன் எங்கே?

"என்னை தாக்கிவிட்டு போய்ட்டான்?

"அதான் ஏன்?"என்றார் கோபமாய்

    "அவனுக்கு முழு கையும் நல்லா வளர்ந்து இருந்தது...எழுந்தவுடன் உங்களை அழைத்துவருவதாக சொன்னேன்..ஆனால் அவன் வேகமாக எல்லாத்தையும் நீக்கிவிட்டு...வேண்டாம்..நான் போகிறேன்..அவர் வந்தால் துட்டு கிட்டு கேட்பார்...அதோடு என்னை வைத்து விளம்பரம் செய்வார்கள்...அதுக்கு நான் இப்படியே போய்விடுகிறேன் என்றான்..நான் தடுத்தேன் தள்ளிவிட்டு ஓடிட்டான்".என்றாள்




(இப்போது உள்ள (genetic) மருத்துவ துறையில் அதிகமாக ஆராயப்படுவது இந்த ஸ்டெம்செல்கள்தான்...அண்மையில் AIDS யை ஸ்டெம் செல்களை வைத்து குணப்படுத்தி இருக்கிறார்கள்...இன்னும் நிறையா எதிர்பார்க்கலாம்..அதில் ஒன்றுதான் மேலே சொன்ன கற்ப்பனை....
    திசுக்களை,செல்களை  வெளியில் வளர்த்துதான் பயன்படுதுகிறார்கள்...வரும் காலங்களில் சில முன்னேற்றங்களை எதிர்பார்க்கலாம்..))))) 

ஓடிப்போகலை..

   அழைத்து இருந்தாள்...எப்பையாவதுதான் இது நடக்கும்.....தோழியின் அலைபேசியில் இருந்து பேசினாள்..

கணேஷ் பெரிய பிரச்சினைஎன்றே ஆரம்பித்தாள்..

என்ன ஆச்சு?

   “எங்கள் வீட்டில் திருமண பேச்சை நேற்று எடுத்தார்கள்.....அப்போது நான் உன்னை காதலிப்பதை சொல்லி விட்டேன்என்றாள்

  அடிப்பாவி ஏன் உனக்கு இந்த அவசரம்...........என்ன நாளைக்கேவா உன்னை கல்யாணம் செய்து வைக்க போகிறார்கள்...........சரி வீட்டில் என்ன சொன்னார்கள்?

  இந்த காதல் பேரிக்காய் எல்லாம் காரணமாக சொல்லாதே நாங்கள் பார்க்கும் பயனைத்தான் திருமணம் செய்யணும் என்று  சொல்லிவிட்டார்கள்..

அதற்கு நீ என்ன சொன்னே?

நான் முடியாது உன்னை காதலிப்பதாக சொன்னேன்...ஆனால் அவர்கள் மறுத்து விட்டார்கள்

என்ன காரணம்? கேட்டியா?

கேட்கலையே. இப்ப என்ன செய்ய? என்றாள்

எப்ப திருமணம்னு பேசிகிட்டங்களா?

இல்லை ஆனால் உன்னை காதலிக்கிறேன்னு தெரிஞ்சபிறகு சீக்கிறம் வச்சிருவாங்க என்றாள்

உன் முடிவு என்ன? என்றேன்

அதான் உன்கிட்டே கேட்கிறேன் நீ தான் ஏதாவது செய்யணும் எனறாள்

சரி நான் கொஞ்ச நாளில் வருகிறேன் உங்க அப்பாகிட்டே பேசுறேன் என்றேன்


சீக்கிரம் வா..இல்லேன்னா நான் அங்கே வந்துவிடுவேன் என்றாள்

அவ்வளவு தைரியாமா உனக்கு என்றேன்

பின்னே உன்னை காதலிச்சதுக்கு நான்தான் ஏதாவது செய்ய வேண்டும் என்றாள்


விரைவில் வருவதாக சொல்லி முடித்தேன்


   ஊருக்கு செல்லும் முன் என் வீட்டில் இருந்து கேட்டார்கள் என்ன விசயம் அவளின் அப்பா வந்து இங்கு சண்டை போட்டார் என்று..

   நான் அவளை காதலிக்கிறேன்..திருமணம் செய்துகொள்ள ஆசை என்று சொல்ல..அவர்களது குடும்பம்தான் மறுக்கின்றார்களே பின்னே எப்படி என்றார்கள்...

நான் வந்து பார்த்து கொள்வதாக சொல்லி சமாதானம் செய்தேன்..

  அவளின் அப்பாவை சந்திக்க போகும் முந்தைய நாள் இரவில் அவளோடு நான் கொடுத்த ஜடைமாட்டியில் பேசினோம்...உறுதியாக இருந்தாள் என்னை திருமணம் செய்வதில்...கொஞ்சம் தைரியம் வந்தது...

மறுநாள் தனியாக அவளின் அப்பாவை பார்த்தேன்....வந்த காரணத்தை பார்த்ததும் புரிந்து கொண்டார்...

உனக்கு திருமணம் செய்துவைக்க இஷ்டம் இல்லை என்றார்

ஏன் என்ன காரணம்

எங்கள் இஷ்டம் அதன்படி நாங்கள் செய்வோம் என்றார்

அதற்கு அவளின் சம்மதம் வேண்டுமே? என்றேன்


அவள் எங்கள் மகள் நாங்கள் சொல்வதை கேட்டுத்தான் ஆக வேண்டும் என்றார்.....அதற்குள் அவள் வெளியில் வந்து இருந்தாள்

இவனிடம் சொல் காதல பேரிக்காய் ஏதும் இல்லையென்று என்றார் கோபமாக அவளிடம்...

இல்லை எனக்கு அவனை பிடிக்கும் என்றாள்

அவரால் ஏதும் உடனடியாக பேசமுடியவில்லை அவளின் இந்த பதிலால்..

அவனை மறந்துவிடு...தேவையில்லை நான் சொல்வதைகேள்

  அவன் ஒன்னும் நாய் குட்டியோ பூனை குட்டியோ இல்லை மனதில் இருந்து இறக்கி விடுவதற்கு..அவன் நல்லவன் எனக்கு அவனை பிடிக்கும் என்றாள்

எனக்கே ஆச்சர்யம் இவளா இப்படி பேசுவது என்று...

  அப்பாவுக்கு கோபம்...ஒன்றும் நீ சொல்ல தேவைஇல்லை நங்கள பார்த்துகொள்கிறோம்..என்று அவளை உள்ளே அழைத்து சென்று விட்டார்..

அன்றைய இரவில் ஜடைமாட்டியில்பேசினோம்...

முதன்முறையாக அழுதாள்...இருவருக்குள்ளும் நிறைய அமைதி ....

கணேஷ் எங்கேயாவது போய்விடுவோம் என்றாள்..


அவசரபடதே...யோசிக்கலாம் என்றேன்

இல்லை.....எனக்கு நம்பிக்கை இல்லை உனக்கு திருமணம் செய்து வைப்பார்கள் என்று

சரி இப்படி சொல்லாமல் போவது சரியாக இருக்காதே என்றேன்

அப்ப என்னதான் செய்வது?என்றாள்

இரண்டு நாள்கள காத்திரு இதற்கு ஒரு வழி செய்கிறேன் என்றேன்

அவளது வீட்டில் இரண்டு நாட்களுக்குள் பெரியதாக ஒன்றும் நடக்கவில்லை..

 மூன்றாவது நாள் ஜடைமாட்டியில் பேசும்போது...நாளைகாலை சீக்கிரம் எழுந்து வா...நாம் ஊரைவிட்டு போகலாம் என்றேன்

எங்க போகபோறோம் என்றாள்

எனது முடிவை சொன்னேன் ஆச்சர்யபட்டாள்

   காலையில் இருவரும் சேர்ந்தோம்...மாலை ஆறு மணிக்கு விமானம்..வேகமாக.. போகவேண்டும் வா என்று அழைத்து கொண்டு இருவரும் போனோம்...அந்த இடத்தை நெருங்க நேரம் சரியாக இருந்தது...

   உள்ளே அந்த விமானம் நின்று இருந்தது...வாசலில் இருந்த கவாலாளி பயண உரிமத்தை கேட்க காட்டினேன்...

எங்கு போக வேண்டும்? என்றாள்

செவ்வாய் கிரகம் என்றேன்

ஒரு திசையை காட்டி வேகமாக போங்கள் கிளம்ப போகின்றது என்றான்

அவள் கையை பிடித்தபடி.. அந்த திசையை நோக்கி ஓடினோம்

வீட்டில் வரும்போது ஏதாவது எழுதிவைத்துவிட்டு வந்தியா என்ன?”” என்றேன்

ஆமாம்..பின்னே இவ்வளவு நாள் வளர்த்த பெற்றோருக்காக இதை கூட செய்யலேன்னா எப்படி? என்றாள்

என்ன எழுதிவச்சே நீ?

விமானம் ஏறின பிறகு சொல்கிறேன் என்றாள்

மேலே எம்பிபறக்க ஆரம்பித்தது.....கேட்டேன்..என்ன எழுதினாய்? என்று

நான் ஓடிப்போகலை" என்றாள்

ஐன்ஸ்டீன் பா


  படிக்கின்ற காலத்தில் செய்யுள் பகுதியில் வரும் பாக்களை மதிப்பெண்களுக்காக கூட மனப்பாடம் செய்து எழுதியதில்லை...காரணம் மனப்பாடம் செய்ய கஷ்டம ....  மேலும் என் தமிழ் ஆசிரியர் இந்த பா வில் மட்டும் எழுத்துப்பிழை இருந்தால் அதிக மதிப்பெண் குறைப்பார்...ஒரு பாவுக்கு நான்கு மதிப்பெண் என நினைக்கிறேன்...


  அதனால் அந்த இடத்தை காலியாக விடுவதே என் வழக்கம்.....திருக்குறள் மட்டும் மனப்பாடம் செய்ததை எழுதுவேன்.....செய்யுள் பகுதியில் எனக்கு சிக்கலானது இந்த இரண்டுதான்....


   மற்றவர்கள் எழுதிய கவிதைகளை படிக்கும்போது  எப்படி இவர்காளால் மட்டும் எழுத முடிகின்றது என்று யோசித்திருக்கிறேன்...... சில கவிதைகள் எழுத முயற்சி செய்து எழுதியதை கிழித்த கடிதங்கள் என்ற தலைப்பில் எழுதினேன்...

   அடுத்த ஆர்வம் பா வின் மீது....அடிப்படை மட்டும் தெரியும்...முழு இலக்கணம் தெரியாது கற்கவேண்டும்...இந்த நிலையில் எழுதியதுதான் இது...எழுத ஏதும் அல்லது யாரும் கிடைக்கவில்லை என்றால் நான் கையில் எடுப்பது என் கற்பனைகாதலி அல்லது ஐன்ஸ்டீன..இருவரில் ஒருவரைத்தான்...இப்போது ஐன்ஸ்டீன்...


ஒளிதனை அறிவுப் பார்வையால் கூறுபோட்டாய்

வெளிதனை கற்பனையில் உருவம் காட்டினாய்

மண்ணில் இதுவரை யாரும் இல்லை

உனைப்போல் உயர்வாய் ஐன்ஸ்டீனே..


******



விண்ணியலை வளர்த்தாய் வியப்பூட்டும் உன்னறிவால்

உன்  விதிகளன்றி  ஏதுமிங்கு விளங்குவதில்லை.

இன்று மண்ணிலுள்ளோர் விண்ணை நோக்குவது

உன் பார்வையன்றி வேறொன்றுமில்லை



   மற்ற புனைவு கதைகள் எழுதும்போது நேரடியாகவே தட்டச்சு செய்துவிடுவேன்...ஆனால்  கவிதைகள் எழுதும்போது அது முடிவதில்லை...யோசிக்க வேண்டியதுள்ளது.....அப்படி பேனாவை கடித்து துப்பி எழுதிய சில கவிதைகள்...


மனதிலுள்ள உயிர்கவிதைகளை

உன் விழிகண்டு எழுத நினைத்தேன் ஆனால்

வெட்கம் எனும் இமைகொண்டு

மறைக்கின்றாய் ஒவ்வொறு முறையும்..

*******

கொஞ்சம் மனதைவிட்டு இறங்கிகொள்

என் துக்கத்தால் சிறிது நேரம்

அழுது கொள்கிறேன்


*********

ஏனென்று காரணம் தேடுகிறேன் உன்

விழி பாராமல் என்னால்

கவிதைகள் எழுத முடியாமைக்கு..


ஜடைமாட்டி...

     போனமுறை ஊருக்கு போயிருந்தபோது, நாங்கள் இருவரும் சேர்ந்து பேசுவதை பார்த்துவிட்ட யாரோ அவளின் வீட்டில் சொல்லிவிட...அடுத்தவந்த நாள்களில் என்னை பார்ப்பதை கூட நிறுத்தி இருந்தாள்...வருத்தப்பட்டேன்..

     இந்த முறை போனாலும் பேசுவது கஷ்டம்தான்...எப்படி அவளின் வீட்டுக்கு தெரியாமல் பேசுவது? ..........ஏதாவது வழி இருக்கிறதா என்று யோசித்து பார்த்தேன்....அதுவும் கிராமத்தில் பேசுவது என்பது முடியாத காரியம்.......ஏதாவது செய்யவேண்டும்...

     அலைபேசி கொடுக்க அதை அவள் மறைத்துவைத்து பேசுவது என்பது தேறாது..ஆனால் அதே நேரத்தில் மறைவாக பேச எனக்கு ஒரு யோசனை......இது தேறும்...செயல்படுத்துவதும் எளிது...வேலையில் இறங்கினேன்..ஊருக்கு போக இன்னும் சில நாட்களே இருந்தன..அதற்குள் முடிக்க வேண்டும்...

     நான் செய்ய போவது, ஒரு ஜடைமாட்டியில் two way radio வை இணைப்பது...இதை அவள் எந்த வித பிரச்சினையும் இல்லாமல் பயன்படுத்தமுடியும்...சந்தேகம் வராது....

    
     எனக்கு ஒன்றும் பிரச்சினை இல்லை என்பதால் எனக்கு தேவையான மற்றொரு பகுதியை  கொஞ்சம் பெரிய அளவில் வடிவமைத்துகொள்ள எண்ணியிருந்தேன்...


      முதலில் கொஞ்சம் பெரிய பொருத்தமான ஜடைமாட்டி தேட வேண்டும்......கிடைத்தது....இரண்டு மூன்று வகையில் தேர்வு செய்து வாங்கினேன்...முதலில் அதில் உள்ள இரும்பு பொருள்களை நீக்கி...அதன் மேல்பகுதியில் சிறு நீளவடிவ பள்ளங்கள் ஏற்படுத்தி அதில் சிறிய ஆன்டெனாக்களை இரண்டு வரிசையாக பதித்தேன்..வெளியில் இருந்து பார்க்க அதுவும் ஜடைமாட்டியின் ஒரு பகுதி போல இருக்குமாறு...

      அதன் உட்புறத்தில் ஒரு இடத்தில பாட்டரி பொருத்த இடத்தை ஒதுக்கி விட்டு ஒரு முனையில் mic ம் மறு முனையில் speaker ம்...மீதி இருக்கும் இடத்தில்.. மற்ற receiver & transmitter களை பொருத்தினேன்..

       ஒரே ஒரு channel  மட்டும் கொண்டு இயங்குமாறுதான் அதை வடிவமைத்தேன்..கிராமம் என்பதால் வேறு யாரும் உபோயோகிக்க வாய்ப்பு இல்லை..அதனால் channel இடையூறுகள் இருக்காது...உபோயோகபடுத்துவது  intermediate frequency என்பதால் பெரிய  பிரச்சினை இருக்காது எனபது என் முடிவு...

      நான் அந்த ஜடைமாட்டியில் பொருத்த வாங்கிய பொருள்கள் எல்லாம் மிகசிறியன என்பதால் விலையும் அதிகம்...எப்படியோ ஒருவழியாக அதை தயாரித்து...கொஞ்சம் தொலைவில் வைத்து இரண்டு பகுதிகளையும் சோதித்து பார்த்தேன்...சரியாகத்தான் இருந்தது..குரல் கொஞ்சம் கர கர என்று இருந்தது..........பேசாமல் இருப்பதற்கு இது பராவாயில்லை என்பதால் போதும் என்ற முடிவு......

      இதை தயாரிப்பது கூட பெரிய விசயமாக இல்லை.. என் வீட்டில் உள்ளவர்களின் கண்களில் படமால் மறைத்து வைக்கவேண்டும்...அவளை பார்த்து இதை கொடுக்கவேண்டும்......இயங்கும் விதத்தை சொல்ல வேண்டும் இதுதான் பெரிய விசயம்...

      ஊருக்கு சென்ற அடுத்தநாளில் அவளை பார்க்க சென்றேன்...எப்போதும் போல வழியில் செல்வது போல சென்று அவள் இருக்கிறாளா என்று பார்க்க..அவள் தோழியுடன் இருந்தாள்...சிரித்தாள்...அப்போதுதான் அந்த ஆச்சர்யம் நடந்தது..

"எப்படி இருக்கிறே? எப்ப வந்தே?" என்றாள்

என்னால் நம்பமுடியாமல்...பதில் அளித்தேன்..

"பயப்படாதே பேசலாம் ...வீட்டில் யாரும் இல்லை...வெளியில் போய் இருக்கிறார்கள்."என்றாள்

     இதுதான் சரியான நேரம் என்று எண்ணி.."கொஞ்சநேரம் இரு வருகிறேன்" என்று சொல்லிவிட்டு வீடுவந்து அந்த ஜடைமாட்டியை எடுத்துக்கொண்டு ஓடினேன்..

"என்ன இது?" என்றாள்

அதை திருப்பி காட்டி அதன் செயல்முறை விளக்கங்களை அளித்தேன்

"சத்தம் அதிகம் வராதே?" என்றாள் அப்பாவியாய்

     "வராது..தேவையான போது இதை உன் காதுக்கு அருகில் வைத்தால்தான் கேட்க முடியும்" என்றேன்

"இதை ஜடையில் மாட்டுவதால் முடி ஏதும் கொட்டாதே?" என்றாள்

"கொட்டினா என்ன எப்படின்னாலும் உன்னை கட்டிக்கிட்டு அழப்போறது நான்தானே முடியே இல்லாவிட்டாலும் பிரச்சினை இல்லை"

சிரித்தாள்.."சரி எப்ப பேசுவே?"

"இரவில் நானாகவே தொடர்புகொள்வேன்...சிறிய சத்தம் வரும் புரிந்து கொள்" என்றேன்

"சரி" என்று தலையாட்டினாள்

     அன்றைய இரவில் வீட்டை விட்டு வெளியில் வந்து உலாவுவது போல அவளிடம் பேசினேன்....சத்தமாக பேச பயந்தாள்...எப்படியோ பேசினோம்..நிறையா பேசினோம்...இதை
முதலிலேயே செய்து இருந்தால் போன முறை பிரச்சினை இருந்து இருக்காதில்லே என்று அலுத்து கொண்டாள்...

     அவள் கண்களை பார்த்து நேராக கேட்க முடியாத ஒன்றை கேட்டேன் கொடுத்தாள்..அதையே என்னிடம் இருந்து திரும்ப கேட்பாள் என நினைத்தேன்..கேட்கவில்லை வருத்தம்...


   அடுத்து வந்த நாள்களில் எந்த ஒரு பிரச்சினை இல்லாமல் நிறைய பேசினோம்...

      காலையில் அவளின் வீதி வழியே செல்லும்போது அவள் வீட்டின் முன் சிறு கூட்டம் கூடி இருந்தது......சில சாமியார்கள்..உட்பட வேடிக்கை பார்க்கவந்தவர்கள் என்று இருக்க..அவளுக்கு ஏதும் ஆச்சோ என்று போய் பார்த்தேன்...

       கூட்டத்தின் நடுவில் அவளது அம்மாவை உட்கார வைத்து இருக்க.... அவள் சோகமாக அருகில் உட்கார்ந்து இருந்தாள்...சாமியார்...ஏதோ மந்திரங்கள் சொல்லிக்கொண்டு இருந்தார்...


    அவளை பார்க்க..புரிந்து கொண்டு.அவள் அணிந்து இருந்த ஜடைமாட்டியை காட்டினாள்...நான் புரியவில்லை என்றேன்...எழுந்து என்னருகில் நிற்ப்பதுபோல நின்று...

"நேற்று இந்த ஜடை மாட்டியை என் அம்மா  மாட்டி இருந்தார்கள்"  என்று சிரித்துகொண்டே நழுவினாள்

          எனக்கு பிரச்சினை புரிந்தது..நேற்று அவளோடு நான் பேச முயற்சிக்க எந்த ஒரு பதிலும் வராததால்.."எழுந்து வெளியே வா"..என்று திரும்ப திரும்ப சொன்னேன்...அதை அறை தூக்கத்தில் இருக்கும் அவளது அம்மா கேட்டு இருக்க வேண்டும்...அந்த வார்த்தைகள் கிட்டத்தட்ட அவர்களுக்கு அரைதூக்க நிலையில் ஹிப்னோசைஸ் செய்வது போல இருக்க ..அதனால் தன்னையறியாமல் எழுந்து நடந்து இருப்பார்கள்....ஒரு கட்டத்தில் நினைவு வந்ததும்...பயந்து தனது காதில் ஏதோ ஓசை கேட்டதை தவறாக நினைத்ததின் விளைவு இந்த பூசைகள்....


         .பயந்து இருந்ததின் விளைவு நடுவில் உட்கார்ந்து இருந்த  அவர்களின் முகத்தில் தெரிந்தது...ஏதோ மந்திரம் ஒலிக்க...அவளை பார்த்தேன....நடந்ததை நான் புரிந்து கொண்டதை நினைத்து இருவரும் ஒருமுறை யாருக்கும் தெரியாமல் சிரித்து கொண்டோம்....

கிழித்த கடிதங்கள் - 3


நான் எழுதிய எத்தனை கடிதங்களை நீ

கிழித்தாலும் வருத்தமில்லை எனக்கு


உனை கவியாய் வடிக்கும்போது என்னுள் நீ

இன்னும் அதிகமாய் படிகின்றாய்

அழியாத கவிதைகளாய்..



கவிதை ரெம்ப சின்னதா நல்லா இருக்கு என்றாள்

நான் அமைதியாக இருந்தேன்

அதான் இந்த முறை கிழிக்கவில்லையே பின்ன என்ன சோகம் என்றாள்

இல்லை ஒரு பிரச்சினை

என்ன அறிவியல் ஏதும் புரியலையா?என்றாள்


இல்லை இது வேறு?


சொல்லித்தான் தொலையேன் எப்படி கேட்கிறேன் என்றாள்


    “ஒரு அக்கா காதலை பற்றி உருகி உருகி காவியம் படைச்சாங்க......அங்க போய் வழக்கம்போல கொஞ்சம் அறிவியல் பேசினேன்.. அடுத்த தொடரில் அவங்க அதுக்கு நன்றிக்கடனை தீர்துட்டாங்க

யாரு அவங்க?

    “அதை எப்படி சொல்ல ...அரைத்த மாவையே திரும்ப திரும்ப அரைத்து அதைவைத்து அருமையா தோசை சுடுவாங்க..அந்த அளவு திறமைசாலி

அப்படியா என்ன சொன்னாங்க உன்னை?


    “எனக்கு காதலில் மோசமான அனுபவம் இருக்காம், அல்லது காதலிக்கவே முடியாதாம் இந்த மாதிரி நிறையா சொல்லிட்டாங்க

அதுக்கு எதுக்கு நீ கவலைபடுறே அதான் நீ என்னை கதாலிக்கிறியே?

அது எப்படி அவங்களுக்கு தெரியும்? என்றேன்

சரி விடு அவங்க சொன்னதிலும் கொஞ்சம் அர்த்தம இருக்கு

என்ன சொல்றே நீயுமா? ஏன் வெந்த புண்ல வெடிகுண்டு போடுறே?


    “பின்ன நீயவா என்னை காதலிச்சே நான்தான் உன் பின்னாடி சுத்தினேன்...இல்லைன்னா உன்னை யாரு காதலிப்பா சொல்லு?

சரி அதைவிடு எப்படியோ இப்ப நம்ம இரண்டுபேரும் ஒன்னு சரியா?

சரி என்றாள்

   “சரி அவங்க அப்படி சொன்னதுக்கு யாரும் உன் பக்கம் ஆதரவாக இல்லையா?


   “எங்கே....நான் எழுதிய  கதையில் இரண்டு பெண்களுக்கு லேசர் ஒளி பாச்சினதுக்கு நம்ம டெர்ரர் சார் என்னை கேள்வி கேட்டாங்க.,.....இப்ப அவரு வருவாருன்னு பார்த்தா  யாருமே வரலை..

ஒருததர்கூடவா  வரலை?

    “வந்தான் ஒருத்தன்..ஆனா கடைசியில்தான் தெரிஞ்சது அவனும் அவங்க ஆளுன்னு..என்னை சோதித்து பார்க்க வந்தானாம்


அடப்பாவிகளா இப்படியா பண்றாங்க உன்னை பாவம் கணேஷ் நீ

   “உனக்கு தெரியுது என்ன பண்ண? ஆனா அதுலேயும் பயங்கார சிரிப்பு எல்லாம் நடந்துச்சு?

என்ன?

     “நான் ஏற்க்கனவே சொல்லி இருந்தேன் என்னை வைத்து  அடுத்த பதிவுவரும்னு அதே மாதிரி போட்டாங்க..அப்புறம் அதில் சொன்ன சில விசயங்கள எனக்கு புரியவே இல்லை ஆனா அதையும் சிலபேர் ஆஹா..ஓகோ புகழ்ந்து தள்ளி இருந்தாங்க பாரு அதான்

அப்படி எதை யாரு புகழ்ந்தாங்க?


    நாம் எதில் வேண்டாம் என்று தீர்மானமாக இருக்கிறோமோ அதை சோதிக்கவே பல காரியங்கள் இயற்கையாக நடைபெறும்" காதலுக்கும் இது ரொம்பவே பொருந்தும்."


இது உனக்கு புரியுதா என்ன?


சத்தியமா புரியல?என்றாள்

    “எனக்கும்தான்,இதை படிச்சு பார்த்த எனக்கு குவாண்டம் தத்துவம் கொஞ்சம் எளிமையாக புரியிற மாதிரி இருந்துச்சு என்றேன்

சரி இது யாருக்கு புரிஞ்சுச்சாம்?

   ஒருத்தங்க உருகி உருகி காதல கவிதை எழுதுவாங்க..அவங்கதான் இதை புரிந்து புகழ்ந்தது...அவங்க பேசுவதுகூட கவி கவியாகத்தான் பேசுவாங்க

அப்படியா?

    “அவங்களும் ஒரு பெண்தான் அவங்களுக்கு புரியிறது உனக்கு ஏன் புரிய மாட்டிக்குது?” என்றேன்

   முறைத்து பார்த்தபடி......அவங்க காதல் கவிதை படிக்கிறாங்க எழுதறாங்க..ஆனா நான் உன்னை காதலிக்க அரம்பிச்சதில் இருந்து நீ என்னிடம் அறிவியல் பேசித்தான் சாகாடிக்கிறே பின்ன நான் எப்படி புரிஞ்சிக்கிறது?

   “ஆமா இல்லைன்னாலும்...சரி சண்டை வேண்டாம்..நீயாவது என்னோடு இரு

இருந்ததுதான் தொலைக்கணும்” என்றாள்


பேசிக்கொண்டே கையில் வைத்து இருந்த கடிதத்தை கிழிக்க ஆரம்பித்தாள்

    “அடிப்பாவி இப்பதான் என்னோடு இருப்பேன்னு சொன்னே அதுக்குள்ளே கிழிக்கிறே? என்றேன்

இதை நான் கிழிக்களைன்னா பின்ன எப்படி இதை கிழித்த கடிதங்கள் என்ற தலைப்பில் கதையாக எழுதுவே? என்றாள்.



(இந்த கதை சந்தோஷமான மனநிலையில் நகைச்சுவைக்காக எழுதினேன் ..எனவே இதை படித்துவிட்டு எப்படி இப்படி சொல்லலாம் என்று வரிந்துகட்டி கொண்டு ஆளுக்கொறு எதிர்பதிவு போடாமல் இருந்தால் சந்தோசம்.)





நிலை மாற்றம்...

    மண்டை ஓட்டு படத்தை வைத்து எதையோ  தேடிக்கொண்டு இருந்த தன் அப்பாவிடம், முகியின் ஓவியக்கண்காட்சிக்கு அழைத்து போகுமாறு கேட்டாள்..மதி

    "இல்லை எனக்கு முக்கியமான வேலை இருக்கு நீ மட்டும் போயிட்டு வா" என்றார் வைத்தி

    "இந்த மண்டை ஒட்டு படங்களை எத்தனை வருடங்கள்தான் ஆராய்ச்சி பண்ணுவிங்க உங்க மகளோட கொஞ்ச நேரம் ஒதுக்குங்க" என்று ஒருவழியாக சண்டை போட்டு அங்கு போக சம்மதிக்க வைத்தாள் மதி..

    வைத்தி இப்போது இருக்கும் மூளை சிகிச்சை மருத்துவர்களில் முதன்மையானவர்..இது சம்பந்தமாக பல விதமான ஆராய்ச்சிகள் செய்து பல விருதுகளை வாங்கி இருப்பவர்..தனது வீட்டின் ஒருபகுதியை தனது ஆராய்ச்சி கூடமாக மாற்றியிருந்தார்...அவரின் இப்போதைய ஆராய்ச்சி மூளை மாற்று அறுவை சிகிச்சை....அதை செய்யும் வழிமுறைகள், அதில் வரும் சிக்கல்கள் போன்றவற்றை பற்றி

    கண்காட்சி இடத்தில் அதிக கூட்டம்..ஓவியர் முகி மிக பிரபலமானவர்..அவரது இயற்கையுடன்  இக்கால நவீனத்துவம் நிறைந்த ஓவியங்கள் பிரபலம்..

     உள்ளே நுழைந்து மதி ஒவ்வொறு ஓவியமாக ரசித்து பார்த்துகொண்டு இருக்க..வைத்தி வேண்டாவெறுப்பாக அவளை பின் தொடர்ந்து கொண்டு இருந்தார்..சில இடங்களில் நின்று அவள் பார்த்த ஓவியத்தை பற்றி அவரிடம் விளக்கும் போது "உம" மட்டும்  கொட்டினார்...

    கடந்து செல்லும் வழியில் முகியை சுற்றி பலபேர் நின்று பேசிக்கொண்டு இருப்பதை பார்த்தவள் தன் அப்பாவிடம் தன்னையும்  அறிமுகம் செய்து வைக்கச்சொல்ல...இருவரும் அவரை நெருங்கினார்கள்..

    அறிமுகம் செய்து கொண்ட வைத்தி..முகியின் ஓவியத்தின் மீது தனது மகளுக்கு இருக்கும் ஆர்வத்தை பற்றி சொல்லி தனது மகளை அறிமுகம் செய்து வைத்தார்...மதிக்கு சந்தோசம்....

    வீட்டிற்கு செல்லும் வழியில் "என்ன மண்டை ஓட்டு படங்களை விட முகியின் ஓவியம நன்றாகத்தானே இருக்கு?" என்றாள்

    "ஆமாம் நல்லத்தான் இருக்கு ஆனால் எனக்குத்தான் ஒண்ணுமே புரியலை" என்றார் வைத்தி சிரித்துக்கொண்டே...

    மறுநாள் வைத்தி மருத்துவமனைக்குள் நுழைந்தவுடன் அவருக்கு அவசர அழைப்பு வந்தது...

    பிரபல ஓவியர் முகி விபத்தில் சிக்கி அவரது கீழ்வயிற்று பகுதி முழுவதும் சிதைந்து விட்டதாகவும்..தலையில் சிறிய காயங்கள் இருப்பதாகவும் ஆனால் நினைவு இழந்து இருப்பதாகவும் சொன்னார்கள்...


   வைத்திக்கு அதிர்ச்சி..நேற்று இரவுதான் சிரித்து பேசினார்...விரைவாக முகி வைக்கபட்டு இருந்த அறைக்கு சென்றார்...

     அடிவயிற்றில் பெரிய ரத்தகறை படிந்த கட்டுடன் கிடத்தபட்டு இருந்தார்....முதலில் அவரது மூளை என்ன நிலையில் இருக்கின்றது என்பதை ஆராய வேண்டும்...

     சிறிய காயம என்பதால் பெரிய ஆபத்து ஒன்றும் இல்லை..அதிர்ச்சியில் நினைவு இழந்து இருக்கலாம்..நினைவு வந்தபிறகுதான் எதையும் சொல்ல முடியும் என்ற தனது அறிக்கையை சமர்பிக்கும்போது....முகியின் உடல்நிலையை பற்றி சக மருத்துவரிடம் கேட்டார்...

     நெஞ்சுபாகம் முதல் வயிறு வரை சிதைந்து இருப்பதாகவும்...இதனால் நுரையீரல் நசுங்கி பாதிப்பு அடைந்து இருக்கின்றது...தானக இயங்கும் சக்தி இல்லை...பிழைப்பது கடினம் என்று சொன்னார்கள்...

    வைத்திக்கு வருத்தம்..நேற்றுதான் தனது அன்பு மகளின் ஆசையை இந்த முகியோடு நிறைவேற்றினார்...இப்போது..

     வருத்தத்தோடு உட்கார்ந்து இருந்தார்...ஒரு யோசனை.... இவரது நெடுங்கால கனவும்கூட....முகியின் மூளையை ஏன் மாற்றி மற்றொருவருக்கு பொருத்தி அதை  செயல்பட வைக்கக்கூடாது...அவரது கடந்த கால ஆராய்ச்சிகளும் இதை பற்றி என்பதால் ஆர்வம அதிகமானது..

     சக மருத்துவரை அழைத்து பேசினார்..முகி உயிர் பிழைக்க இருக்கும் சாத்தியகூறுகளை பார்க்கும் போது அவர் பிழைக்க மாட்டார் என்றே சொன்னார்கள்...அவரது இந்த மூளை மாற்று விசயத்தை சொன்னபோது தயக்கத்தோடு சம்மதித்தார்கள்...

    முதலில் அதே மருத்துவமனையில் மூளை பெறும் பாதிப்புக்கு உள்ளாகி உடல் நன்றாக செயல்படும் விதத்தில் இருக்கும் ஒரு ஆளை தேர்ந்து எடுத்தார்கள்...அந்த ஆள் இளம் வயதுக்காரர்...மூளையில் ஏற்பட்ட சில பிரச்சினைகளால தனது உடலின் செயல்பாட்டை இழந்து இருப்பவர்...

    வைத்தி யோசித்தது..முகியின் மூளையை இந்த ஆளுக்கு பொருத்துவதின் மூலம் ஒருவரின் உயிரை காப்பாற்றலாம்...அதே நேரத்தில் முகியின் ஓவியதிறனும் மறையாமல் இருக்கும்....

     வைத்தி அறுவை  சிகிச்சைக்கு முன் சக மருத்துவர்களுக்கு உணர்த்தியது......இது நாம் செய்ய போகும்  முதல் மூளை மாற்று அறுவை சிகிச்சை...முதலில் முகியின் மூளையை தனியாக பிரித்து எடுப்போம்..அப்படி எடுக்கும்போது முதலில் அவரது மூளைக்கு தங்கு தடையின்றி oxygen செல்லுமாறு பார்த்துகொள்ளவேண்டும்...அதன் neuron கள் பாதிப்பு அடையாமல் காப்பாத்துவது  முக்கியம் ....ஒரு வினாடி தடைபாட்டலும் நமது முயற்சி வீண்...அதே நேரத்தில் யாருக்கு முகியின் மூளையை பொறுத்த போகின்றோமா அவரது மூளையை முழுவதும் வெளியில் எடுப்பதற்கு முன்..ஏற்க்கனவே வெளியில் செயற்கையாக இயங்கி கொண்டு இருக்கும் முகியின் மூளையின் கட்டளைகளை அந்த நபரின் nerve cell களோடு இணைப்பதின் மூலம் அந்த நபரின் உடல் இயக்கங்களை  நாம் எளிதாக கட்டுபடுத்தலாம்....அப்புறம் அந்த நபரின் பாதிக்கப்பட்ட மூளையை முற்றிலும் அகற்றிவிட்டு முகியின் மூளையை இயங்க செய்வது .....

      ஆனால் இது எல்லாம் சாத்தியமாக இருவரின் neuron களும் சரியாக பொருந்த வேண்டும்...என்பது வைத்தியின் கருத்து ...


     செயலில் இறங்கினார்கள்...முதலில் முகியின் மூளையை செயற்கையான முறையில் சுவாசிக்க செய்தனர்..பின் அதன் nerve cell களை அகற்றி வெளியில் குறைந்த வெப்பநிலையில் வைத்தனர்...அடுத்து மற்ற நபரின்  சரியான nerve  cell களை கண்டறிந்து தனிமைபடுத்தி அதை வெளியில் செயற்கையாக சுவாசம் பெறும் முகியின் மூலையோடு இணைத்தனர்....அடுத்து அந்த நபரின் துண்டிக்கப்பட்ட மூளை அகற்றப்பட்டு முகியின் மூளை சரியாக பொருத்தப்பட்டு... இயக்கபட்டது ...

     அந்த நபரின் அனைத்து உடல் விசயங்களும் சோதனை செய்யபட்டது...ஏதாவது ஒரு neoron தகவலை சரியாக கடத்தவில்லை என்றாலும் அது ஏதாவது பெரிய பிரச்சினைக்கு வழிவகுக்கும் என்பதே அனைவரின் கவலை...அதிருஷ்டவசமாக எல்லாம் சரியாக பொருந்தி செயல்பட்டது...

     அவர்  கண் விழித்தார்...கைகள் அசைந்தன..எல்லோரும் ஆச்சர்யமாக பார்த்தார்கள்...கண்கள் முழுவதும் திறக்க கஷ்டப்பட்டார்....வைத்தி உட்பட அனைவருக்கும் மகிழ்ச்சி...அந்த நபர் கொஞ்சநேரத்தில் பேச ஆரம்பித்தார்...

    அனைவரும் காண விரும்பியது முகியின் மூளையை வைத்து இருப்பவர் அவரைப்போலவே ஓவியம வரைவார? என்றுதான்...

    அவரை சில சோதனைகள் எடுக்க அழைத்து செல்லும்போது வைத்தி அந்த நபரிடம் சில வார்த்தைகள் பேசினார்...

"நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்?" என்றார் வைத்தி..

    "தலையில் வலி கொஞ்சம் அதிகமாக இருக்கு...அப்புறம் என் கண்ணுக்கு கருப்பு வெள்ளையை தவிர மற்ற வண்ணங்கள் எதுவும் தெரியவில்லையே  ஏன்?" என்றார் அந்த நபர்..

     வைத்திக்கு எங்கு தவறு நடந்து இருக்கின்றது என்பது புரிந்தது.....ஒன்று விபத்தில் முகியின் மூளை அடிபட்டதில் ..அல்லது..அறுவை சிகிச்சையின் போது தவறான இணைப்பில் நபரின் பார்வை நரம்புகள் பாதிக்க பட்டு இருக்கின்றது....

      சில சோதனைகள் செய்த பின்னர் எல்லோரும் ஆர்வமாக காத்து இருக்கும் அறைக்கு அந்த நபர் கொண்டுவரப்பட்டார்.அங்கு வைத்தி இல்லை...அவரது முன் ஒரு வரைபலகையும்..தூரிகையும் இருந்தது...அங்கு இருந்த ஒருவர் "ஒரு நிலை மாற்றத்துக்கு பின் நீங்கள் வரையும் முதல் ஓவியத்தை வரையுங்கள்" என்று சொல்ல...

    அந்த நபர் கோபமாக பார்த்து கொண்டே .."எத்தனை தடவை சொல்வது எனக்கு கருப்பு வெள்ளையை தவிர வேற வண்ணங்கள் தெரியவில்லை என்று..இதில் எப்படி வண்ண ஓவியம வரைவது"..






(மூளை மாற்று அறுவை சிகிச்சை எனபது இப்போது சாத்தியமில்லைதான....இன்னும் இதற்கு எலிகளை வைத்துதான் ஆராய்ச்சிகள் செய்து கொண்டு இருக்கிறோம்....ஆனால் சீக்கிரம் வரலாம்...இது என் கற்பனைதான்...ஆனால் மேலே நான் சொல்லி இருக்கும் பிரச்சினைகள் ஒரு மூளை மாற்று சிகிச்சை செய்யும்போது ஏற்ப்படும் சில அடிப்படையானவை ...மற்றபடி சிகிச்சை முறை என் கற்ப்பனை...)