"செல்"லும் சொல்லும் - கதைகள்

     ஒரு தொடர்கதை..எழுதி இருக்கிறேன்...கொஞ்சம் genetic, cryptology,bio mimicry போன்றவை கலந்த ஒன்று..

   இதில் genetic முறையில் உருவாக்கப்பட்ட ஒருவித நாய் வருகின்றது...கொஞ்சம் ஜீனோவை நினைவுபடுத்தினாலும் இது genetic நாய்..கொஞ்சம் வேறுபட்டது...

    ஒருவகையில் சுஜாதா,மற்றும் ஜீனோ மீது கொண்ட ஒருவித ஆர்வத்தில் இதை எழுதி இருக்கிறேன்...

   சுஜாதா என்ற மாபெரும் மனிதர் எழுதுவதை போல தமிழில்  இந்த உலகத்தில் யாரும் எழுதிவிட முடியாது.....அவரது அறிவியல்,எழுத்துநடை..போன்றவைகளை அவர் உபோயிக்கும் விதம  எல்லாம் அவருக்கே சாத்தியம்...

  இந்த கதையை படித்து விட்டு சுஜாதாவின் கதையை எப்படி தொடரலாம் போன்ற சில கேள்விகள் கேட்காமல் இருந்தால் சந்தோசம்...
  
   இந்த கதையை அவரைபோன்று எழுதவில்லை...அப்படி நான் நினைப்பது சூரியனுக்கு தெர்மாமீட்டர் வைத்து காய்ச்சல் அடிக்கின்றதா? என்று தொட்டு பார்ப்பதற்கு சமம...

எனக்கு தெரிந்த கொஞ்சம் அறிவியல்,எனக்கு ஆர்வம உள்ளcryptography போன்றவற்றை வைத்து எழுதி இருக்கிறேன்...

கதையை முழுவதும் கொடுத்து,அதை  பகுதிகளாக  பிரித்து இருக்கிறேன்..

காரணம்..கொஞ்சம் நீளமான கதை..தொடர்நது படிக்க சிரமம்..எனவேதான் சிறு பகுதிகள்...அதோடு..சிலருக்கு முக்கியமான் வேலைகள்,.....அல்லது சித்தி,பெரியம்மா,சுந்தரி போன்ற அவசியமான தொடர் நாடகங்கள் பார்க்க வேண்டியது இருகலாம்...அப்படி நினைப்பவர்கள்..பார்த்துவிட்டு  மீண்டும் வந்து அவர்கள் விட்ட இடத்தில தொடர வசதியாக இருக்கும்....

அதோடு இதில் சொல்லி இருக்கும் அறிவியல் விசயங்கள் சில உண்மையானவை...அது உங்களுக்கு படிக்கும்போது புரியும்...


இணைப்புகள் கிழே...


      "செல்"லும் சொல்லும் 1

       "செல்"லும்  சொல்லும் 2


       "செல்"லும் சொல்லும்  3


       "செல்"லும் சொல்லும்  4
       

8 comments:

ஆனந்தி.. said...

இப்ப தான் introduction படிச்சேன்...எந்த ஒரு விஷயத்தில் நாம் தீவிர அபிமானியாக இருக்கோமோ அது நம்மை அறியாமல் நம்மகிட்டே அந்த பாதிப்பு வந்துரும்...நீங்க சுஜாதா அபிமானி...எத்தனை பேர் இப்படி அறிவியல் புதினம் எழுதுவாங்கனால் விரல் விட்டு எண்ணிரலாம்..விமர்சனங்கள் நல்லதை எடுத்துக்கிட்டு தேவை இல்லாததை ட்ராஷ் ஷில் போட்டு நீங்க உங்க அறிவியல் கதை முயற்சியை தொடருங்கள் கணேஷ்...!!வாழ்த்துக்கள்!கதை படிச்சுட்டு கம்மென்ட் குடுக்க வரேன்..!!

மதுரை சரவணன் said...

அருமையான தொடக்கம்...கதைப் படித்து பதிலிடுகிறேன்...

ganesh said...

ஆனந்தி.. said...

உங்க அறிவியல் கதை முயற்சியை தொடருங்கள் கணேஷ்...!!வாழ்த்துக்கள்!கதை படிச்சுட்டு கம்மென்ட் குடுக்க வரேன்..!!////

உங்களின் வாழ்த்துக்கும் கருத்துக்கும் நன்றி..

ganesh said...

மதுரை சரவணன் said..
அருமையான தொடக்கம்...கதைப் படித்து பதிலிடுகிறேன்...///

கண்டிப்பாக உங்களின் கருத்துக்கள் உதவியாக இருக்கும்..நன்றி

Sundar said...

இந்த கதையின் 4 பாகங்களையும் ஒரே மூச்சில் படித்து முடித்தேன். நானும் ஒரு சுஜாதா ரசிகன். ஆனால் இதன் முடிவு சரியாக புரியவில்லை.
நாளை மறுபடி படிப்பேன்

சுந்தரவேல்.

ganesh said...

இதன் முடிவு சரியாக புரியவில்லை.
நாளை மறுபடி படிப்பேன்///

மறுபடி படியுங்கள்.. எந்த விசயம் புரியவில்லை என்பதை சொல்லுங்கள் அதை தெளிவாக விளக்கி அதை தனியாக போடுகிறேன்......நானும் சுஜாதா ரசிகன்..

நன்றி..படித்துவிட்டு சொல்லுங்கள்...

NIZAMUDEEN said...

வலைச்சரம் வாயிலாக வந்தேன்.
தொடர்ந்து வருவேன்...

அனைத்து பதிவுகளும் படிக்க
உள்ளேன். கருத்துக்கள் பிறகு...

ganesh said...

NIZAMUDEEN said...@

நன்றி படித்துவிட்டு சொல்லுங்கள்..