COROT-9B



      ஓர் புதிய planet ஒன்று புதியதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன் பெயர் COROT 9B. இதனை FRENCH SPACE AGENCY கண்டுபிடித்து வெளியிட்டுள்ளது.

       இதனைப்பற்றி முழுவதும் பார்க்கும் முன் என் சிறிய கருத்து, இந்த பிரபஞ்சத்தை கடவுள் படைக்கவில்லை......சரி அப்படியே கடவுள் படைத்து இருந்தாலும் இந்த சிறிய மனித கூட்டம் இந்த சிறிய பூமி உருண்டையில்  வாழ்வதற்காக இத்தனை பில்லியன் நட்சத்திரங்கள், கோடன கோடி விண்வெளி சமாச்சாரங்களை படைத்தார் என்று சொன்னால் அது என்னை பொறுத்தவரை காதில் பூ சுற்றும் வேலையே தவிர வேறொன்றும் இல்லை....


   அதனால் கடவுள் பெயரைச்சொல்லி பல நூற்றாண்டுகளாக பல வேலைகளை செய்து கொண்டிருப்பவர்களை நம்புவதைவிட்டு விட்டு சொந்தமாக யோசிக்கத் தொடங்கினால் நல்லதாக இருக்கும் என்பது என் கருத்து ,,அவ்வளவே.....


   வேண்டும் என்றால் டார்வின்,ஐன்ஸ்டீன்,நியூட்டன் போன்ற மனிதர்களை நம்பினால் ஒருவிதத்தில் நல்லது.... நம்புகிறவர்கள் என் கட்சி...... இவர்கள் அந்த கடவுள் அவதாரங்கள் நமக்கு விளக்காதாதை நமக்கு விளக்கி சென்றவர்கள்.......என்னை பொறுத்தவரையில்........

  COROT-9B….இது நம் பூமியில் இருந்து சுமார் 1500 light year தூரத்தில் இருக்கின்றது என கண்டுபிடித்துள்ளனர்.. இது ஏற்க்கனவே நம் சூரிய குடும்பத்தில் இருக்கும் jupiter and satrun  போன்ற planet ஐ போன்றது.

     ஆனால் இது பெரும்பகுதி hydrogen and helium வாயுக்களை கொண்டுள்ளது. மேலும் இது பூமியைப்போலவே பாறைகள்,தண்ணீர் போன்றவைகள் அதிக அழுத்தத்தில் இருப்பதாக கண்டுபிடித்து உள்ளனர்.


  இது ஒரு முறை COROT-9 நட்சத்திரத்தை சுற்றிவருவதற்க்கு எடுத்துக்கொள்ளும் நேரம், நம் பூமி நேரப்படி 95 நாட்கள்.

  இது கண்டுபிடிக்கப்பட்டது TRANSITS என்ற முறையை பயன்படுத்தி.

     (EXTRA SOLAR PLANET களை கண்டுபிடிக்க இருக்கும் முறைகளில் இதுவும் ஒரு முறை இதில் அந்த PLANET  சுற்றி வரும் வேகம், மற்றும் அதன் முறை...... போன்றவற்றைவைத்து கணக்கிடப்படுகின்றது)

  இன்னும் இதுபற்றி ஆராய்ச்சி நடந்து கொண்டிருக்கின்றது. மேலும் நல்ல தகவல்களை எதிர்பார்க்கலாம்..

இது சம்பந்தமான VIDEO LINK இங்கு கொடுத்து இருக்கிறேன் பாருங்கள்......



மேலும் அது என்ன நி சொல்லி நான் கேட்பது.... என்று நினைப்பவர்கள் இந்த WIKI LINK க்கு சென்று பாருங்கள் இது பற்றி நிறையா தகவல்கள் கிடைக்கும்....அங்கு கண்டிப்பாக என் கருத்துக்கள் இருக்கா வாய்ப்பில்லை.........






ஐன்ஸ்டீன் பிறந்தநாள் இன்று........


 ஆல்பர்ட ஐன்ஸ்டீன் பிறந்த நாள்......

அவரைப்பற்றி நான் என்ன எழுதுவதின் மூலம் அவரை பெருமைபடுத்த முடியும்.... கண்டிப்பாக அது முடியாத காரியம்.....

இருந்தாலும் சில வரிகள்......

"ஐன்ஸ்டீன்" அறிவியல் உலகில் இன்றும் யாரும் எட்டிப்பிடிக்காத ஏன் முடியாத  ஒரு இடம் .... அது ஐன்ஸ்டீனுக்கு மட்டும் சொந்தமானது.........

ஒரு தலை சிறந்த விஞ்ஜானி மட்டும் இல்லாமல் ஒரு நல்ல மனிதனர்.....  

அவரது அறிவியல் அறிவை இன்றும் உலகம் பார்த்து வியக்கின்றது....

அவரைப்பற்றி அதிகமாக படித்து இருந்தாலும் அதை இங்கு எழுத மனம் வரவில்லை..... 

இங்கு நான் எழுதும் அந்த நான்கு வரிகள்தான் அவரின் புகழை அதிகபடுதவேண்டுமா? என்று நினைக்கும் போது.. அதை விட்டு விடுவதே நல்லது என நினைக்கிறேன்.....

(ஏற்கனவே ஒரு எஜமான் என்ற தலைப்பில் முன்றைய பதிப்பில் கொஞ்சம் அவரைப்பற்றி எழுதி இருக்கின்றேன்..)

என்னதான் அவரைப்பற்றியும் அவரது அறிவியலைப்பற்றியும் கொஞ்சம் படித்து இருந்தாலும் .... நான் ஐன்ட்டீனை பார்ப்பது... ஒரு சிறுவன் எவரெஸ்ட் சிகரத்தின் கீழ் நின்று அதன் உச்சியை தலை உயர்த்தி பார்க்கின்றது போலத்தான் நானும் அவரைப்பர்க்கிறேன்......

இதுவரை என் வாழ்க்கையில் நான் அதிகம் விரும்பும் ஒரு தலைசிறந்த மனிதர் என்றால் அது ஐன்ஸ்டீன் மட்டுமே..... இனிமேல் வரும் காலங்களிலும் கூட.......


 இந்த நாளில் ஐன்ஸ்டீனை பற்றி ஏதாவது செய்ய வேண்டும் என்று ஆசை... அதனால் அவரின் life time line ஐ கிழே கொடுத்து இருக்கிறேன்... மேலும் சில படங்கள்.....


































1879 Born March 14 at 11:30 AM in Ulm, Germany


1880 Einstein family moves to Munich


1881 Sister Maja (Maria) is born


1884 The Compass - A gift from his Uncle sparks his wonder


1885-1888 Pupil at Catholic elementary school in Munich
Private lessons in Judaism at home


1888 Pupil at Luitpold-Gymnasium, Munich for the next six years


1889 Meets 21 year old student, Max Talmud.
Introduction to key science and philosophy texts
Religious instruction at school (until 1892)


1892 Einstein is not Bar Mitzvahed. Technically, not a member of the Jewish community


1894 Parents move to Milan
Six months later, Einstein leaves Gymnasium without completing his schooling and joins his family in Pavia, Italy
1895-96 Pupil at cantonal school in Aarau, Switzerland


1896 Renounces his German citizenship


1896-1900 Student at the Polytechnic (later the Federal Institute of Technology), Zurich


1901 Acquires Swiss citizenship
Completes his first scientific paper


1901-02 Temporary teaching position at school in Schaffhausen, Switzerland


1902 Daughter Lieserl born to Mileva Maric in Novi Sad, Hungary
Appointed as technical expert third class at the Swiss Patent Office in Bern


1903 Marriage to Mileva Maric in Bern
Founds "Akademie Olympia" with Conrad Habicht and Maurice Solovine
Daughter Lieserl probably put up for adoption


1904 Son Hans Albert born in Bern


1905 The annus mirabilis (miracle year) : completes papers on light quanta, Brownian motion, and special theory of relativity
Receives Ph.D. from Zurich University


1906 Promoted to technical expert second class at the Swiss Patent Office


1907 Discovers the principle of equivalence


1908 Appointed lecturer at Bern University


1909 Resigns from Patent Office
Appointed Associate Professor of theoretical physics at Zurich University


1910 Second son Eduard born in Bern


1911 Predicts bending of light


1911-12 Professor of theoretical physics at German University of Prague


1912-14 Professor of theoretical physics at the Federal Institute of Technology, Zurich
1914 Appointed Professor at University of Berlin (without teaching obligations) and Member of Prussian Academy of Sciences
Separates from his wife, Mileva Maric - she returns to Zurich with the two sons
Signs anti-war "Manifesto to Europeans"


1915 Joins pacifist "New Fatherland League"
Completes logical structure of the general theory of relativity


1916 Publication of the general theory of relativity


1917 Writes first paper on cosmology
Appointed Director of Kaiser Wilhelm Institute for Physics in Berlin


1917-1920 Suffers from a liver ailment, a stomach ulcer, jaundice and general weakness - his cousin Elsa
Einstein Loewenthal takes care of him


1918 Supports the new Weimar Republic in Germany


1919 Divorces Mileva Maric
Bending of light observed during solar eclipse in West Africa and Brazil
First discussions on Zionism with Kurt Blumenfeld
Marries his cousin Elsa
Announcement at joint meeting of Royal Society and Royal Astronomical Society that Einstein's theories have been confirmed by eclipse observations
Sensational headlines in The Times and The New York Times : Einstein becomes a world figure


1920 Mass meeting against the general theory of relativity in Berlin
Appointed special visiting professor at Leiden University


1921 First visit to the U.S. with Chaim Weizmann: fund-raising tour for The Hebrew University
Lectures at Princeton University on theory of relativity


1922 Completes first paper on unified field theory
Visit to Paris contributes to normalization of French-German relations
Joins Committee on Intellectual Cooperation of the League of Nations
Lecture tours in Japan and China
Awarded Nobel Prize for Physics for 1921


1923 Visit to Palestine: holds inaugural scientific lecture at future site of The Hebrew University in Jerusalem, named first honorary citizen of Tel Aviv
Visit to Spain
Lecture in acknowledgment of Nobel Prize in Göteborg, Sweden
Edits first collection of scientific papers of The Hebrew University


1924 The "Einstein-Institute" in Potsdam, Germany, housed in the "Einstein-Tower" starts its activities


1925 Trip to South America: Argentina, Brazil and Uruguay
Signs manifesto against obligatory military service
Joins Board of Governors and Academic Council of The Hebrew University


1927 Begins intense debate with Niels Bohr on the foundations of quantum mechanics


1928 Suffers temporary physical collapse - enlargement of the heart is diagnosed


1930 Intensive activity on behalf of pacifism


1930-32 Three trips to U.S.: stays mainly at the California Institute of Technology, Pasadena, during winter semesters


1932 Supports conservation of the Weimar Republic
Public correspondence with Sigmund Freud on the nature of war
Appointed Professor at The Institute for Advanced Study, Princeton
Plans to divide his time between Berlin and Princeton
Leaves Germany for the last time
1933 Declares that he will not return to Germany Resigns from Prussian Academy of Sciences
Spends spring and summer in Belgium and Oxford
Emigrates to U.S. in September
Why War? published


1934 Collection of essays The World As I See It published


1935 The Einstein-Podolsky-Rosen paradox is published


1936 Elsa Einstein dies


1938 Publication of The Evolution of Physics


1939 Signs famous letter to President Franklin D. Roosevelt recommending U.S. research on nuclear weapons


1940 Acquires U.S. Citizenship


1943 Works as consultant with the Research and Development Division of the U.S. Navy Bureau of Ordnance, section Ammunition and Explosives


1944 Handwritten copy of his 1905 paper on special relativity auctioned for six million dollars in Kansas City, as a contribution to the American war effort


1945 Shattered by the extent of the Holocaust of European Jewry
Shocked by the nuclear bombing of Hiroshima and Nagasaki


1946 Becomes chairman of the Emergency Committee for Atomic Scientists
Expresses public support for the formation of a world government


1947 Intense activity on behalf of disarmament and world government


1948 Supports creation of the State of Israel
First wife, Mileva Maric, dies in Zurich
Intact aneurysm of the abdominal aorta disclosed


1949 Publication of "Autobiographical Notes"


1950 Signs Last Will and Testament: Otto Nathan and Helen Dukas named co-trustees
The Hebrew University named as the ultimate repository of his personal papers
Collection of essays, Out of My Later Years, published


1952 Offered presidency of the State of Israel


1953 Public support for individuals under investigation by the House Un-American Activities Committee


1955 Co-signs the Russell-Einstein Manifesto warning of the nuclear threat
Rupture of the aortic aneurysm
Dies April 18 at 1:15 AM in Princeton Hospital at the age of 76
Body cremated and ashes scattered at an undisclosed place

fibonacci யும் ......என் கற்பனையும்.....

   நான் don brown ன் புத்தகங்கள் படித்து இருக்கிறேன். அவரது அனைத்து புத்தகங்களுமே கண்டிப்பாக ஒரு விதமான cryptography topic யை கொண்டு இருக்கும்.

    மேலும் ஒரு சிறந்த பொதுஅறிவு கலந்த பொழுதுபோக்கு புத்தகம் என்றால் அது இவருடையது என்றுசொல்லலாம்.


      எனக்கு CERN யை அறிமுகபடுத்தியது இல்லாமல் ANTIPARTICLES பற்றி சற்று விரிவாக புரிந்து கொள்ள உதவியது இதுதான்.

    (CERN – Consile Europeen pour la Recherhe Nucleare இது சுவிட்சர்லாந்து ல் உள்ள ஒரு அறிவியல் ஆய்வுக்கூடம் ஆகும்)

      அடுத்து THE DA VINCI CODE எல்லோரும் படித்து இருப்பிர்கள். இதைப்பற்றி நான் சொல்லத்தேவை இல்லை.என நினைக்கிறேன்.

    மேலும் சில DECEPTION POINT, DIGITAL FORTRESS, THE LAST SYMBOL போன்றவைகள் இவரின் நல்ல நாவல்கள். (இவளவுதான் அவரும் எழுதி இருக்கிறார் என்று நினைக்கிறேன்......)

சரி நான் இப்போது கதைக்கு வருகிறேன்

      நான் இவரின் the da vinci code படித்து முடித்தவுடன் அதில் இருந்து ஒன்றை எடுத்து என் சிறிய கற்பனையில் ஒன்றை முயன்றேன் அதை இங்கு தந்திருக்கிறேன்.

    அந்த புத்தகத்தில் இருந்து எடுத்தது  ஒரு என் கோர்வை இது இத்தாலி நாட்டை சேர்ந்த ஒரு கணித அறிவியலார் உபோயோகித்தது.

     அவரது பெயர் leondro Fibonacci. இவர் இடைக்காலத்தில் ஒரு தலை சிறந்த ஒரு கணித அறிவியளராக அறியப்பட்டார்.

சரி அந்த என் கோர்வை இதுதான் மிக எளிதான ஒன்றுதான்.

0,1,1,2,3,5,8,13,22,35,57,......... இப்படியே போய்க்கொண்டே இருக்கும்.

இதில் முதலில் உள்ள எண்னுடன் அடுத்து வரும் எண்னை கூட்டி அதற்க்கு அடுத்து வரும் எண்ணாக இடவேண்டும். அவ்வளவே.

சரி இதைவைத்து என் கற்பனை.....

குறிப்பு : இதில் வரும் கதாநாயாகியும் the da vinci code படித்தது இருக்கிறாள். ( கதையை படியுங்கள் எப்படி என்று புரியும்)


     அந்த பேருந்துநிறுத்ததில் எப்போதும் பயணிகளின் கூட்டம் குறைவாகவே இருக்கும். அதற்கான காரனங்களை நாம் அலசி ஆராய்வதைவிட நம் கதைக்கும் அந்தப் பேருந்து நிறுத்தத்திற்கும் என்ன தொடர்பு என்பதற்கு நேராகவே சென்றுவிடுவோம்,

      அந்த பேருந்து நிறுத்தத்தில் எப்போதும் போல் ஆட்கள் ஆரவாரமில்லாமல் மொத்தம் நான்கு பேரே நின்று இருந்தார்கள்.அதில் 3 பெண்கள் மற்றும் ஒரு ஆண், சற்று வயது முதிர்ந்த்தவர்.

       அந்த மூன்று பெண்களில் இரண்டு பெண்கள் சற்று நடுத்தர வயதை சேர்ந்த்தவர்கள். மற்றோருவளுக்கு அதிகமாக இருந்தால் 23 வயது இருக்கலாம்.இவள் தான் நம் கதையின் கதாநாயகி.

     இந்த நேரத்தில் அந்த பக்கத்தில் இருந்து வந்த ஒரு பேருந்து அந்த பேருந்து நிறுத்தத்தில் நின்றதில் அதில் இருந்து இரண்டு மூன்று பேர் உதிர்ந்தார்கள். .

     அந்த இளம் வயது பெண்னைத்தவிர அனைவரும் அந்த பேருந்தில் சென்றுவிட்டனர். அந்த பெண் மட்டும் தனியாக அதே இடத்தில் நின்று இருந்தாள்.

      அந்த பேருந்தில் வந்தவர்களில் ஒருவன்தான் அசோக் நம் கதையின் கதாநாயகன்,

      அவன் பேருந்தில் இறங்கி அவன் வழியில் செல்லும்போது அந்த பெண்ணை பார்த்தான் அவளும் சொல்லி வைத்தாற போல் பார்த்தாள். இருவரும் சிரித்து கொண்டார்கள்.பின் அசோக் அவன் வழியில் சென்றுவிட்டான். ஆனாலும் அவள் அங்கேயே நின்று இருந்தாள்

      இப்போது அசோக் பற்றி சில வரிகள் அசோக் மற்றும் அவன் நண்பன் ரமேஷ் ஒன்றாக தங்கி அங்கு உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்துவந்தனர்.

     இன்று ரமேஷ்க்கு உடல் நிலை சரியில்லை என்பதால் அசோக் மட்டுமே வேலைக்கு சென்றான்,

    வீட்டை அடைந்த்ததும் பேருந்து நிறுத்தத்தில் நடந்ததை சொன்னான். “அவள் இன்றும் என்னை பார்த்து சிரித்தாள்” என்றான். ரமேஷிடம்.

அதற்கு ரமேஷ் எந்த பதிலும் சொல்லாமல் கட்டிலில் படுத்து இருந்தான்,

    ஒரு முறை கூறியதில் எந்த ஒரு பதிலும் இல்லை என்பதை உணர்ந்த அவன் தன வேலையில் கவனமானான்.

பின் சற்று நேரம் கழித்து அசோக் முன் சொன்னதையே மீண்டும் ரமேஷிடம் சொன்னான்

அதற்க்கு ரமேஷ் “அதை என்னிடம் எத்தனை தடவை சொல்வாய். அதுதான் ஏற்கனவே சொல்லிவிட்டாயே பின் என்ன அதுவும் இல்லாமல் நான் தான் தினமும் நீங்கள் பார்த்து சிரிப்பதை பார்க்கின்றேன ! ” என்றான்

     இதனைக்கேட்ட அசோக் “ உனக்கு போறாமைடா எங்கே எனக்கு ஒரு அழகான பெண் காதலியாக கிடைத்துவிடுவளோ என்று அதனால் தான் நி இப்படி சொல்கிறாய்” என்றான்.

அதற்க்கு ரமேஷ் ஒன்றும் சொல்லவில்லை

   இரவில் படுக்க போகும் முன் அசோக் சும்மா இருக்காமல் ரமேஷிடம் பேச்சை தொடர்ந்தான்.

     அசோக் “அவளிடம் எப்படி எப்போது காதலை சொல்வது என்பது பற்றி எனக்கு ஏதாவது ஒரு விதத்தில் உதவி வழங்கேன்” என்றான். ரமேஷிடம்

     அதற்க்கு ரமேஷ் “என்னை கொஞ்சம் நேரம் நிமதியாக புத்தகம் படிக்க விடுறியா........... உனக்கு ஏதாவது தேவையென்றால் வெளியில் சென்று நன்றாக யோசித்துவிட்டு ஒரு முடிவை எடுத்துவிட்டுவா..... என்னை தொந்த்தரவு பண்ணாதே........” என்று சொல்லி அவன் படித்துக்கொண்டிருந்த புத்தகத்தில் ஆழ்ந்தான்.

    இதைக்கேட்ட அசோக் ஒன்றும் சொல்லாமல் திரும்பி படுத்துக்கொண்டு யோசிக்கதொடங்கி இருந்தான் அவளிடம் எப்படி தான் காதலை சொல்வது என்று.


      மறு நாள் மாலை இருவரும் வேலைவிட்டு வரும்போது அதே இடத்தில அந்த பெண் நின்று இருந்தால்.

   வழக்கம் போல் அசோக் அவளை பார்க்க அவளும் அசோக்கை பார்க்க இருவரும் சிரித்து கொண்டனர்.

     இதை அருகில் இருந்து ரமேஷ் பார்த்தாலும் அதை கண்டு கொள்ளாமல் இருப்பது போல் இருந்தான்.

     சிறிது தூரம் நடந்த பின் அசோக் “பார்த்தியா அவள் இன்றும் என்னை பார்த்து சிரித்தாள்” என்றான்.

அதற்க்கு ரமேஷ் வெறும் ம்ம.... கொட்டிவிட்டு பதில் ஒன்றும் சொல்லவில்லை.

மேலும் அசோக் தொடர்ந்தான் “அவள் என்னை பார்த்து சிரிக்கும் போது என் மனதில் ஆயிரம் பட்டாம் பூச்சிகள் பறக்கின்றன”......... என்றான்.


ரமேஷ் தன் ஓரக்கண்ணால் ஒரு முறைப்பு பார்வை பார்த்துவிட்டு ஒன்றும் பேசாமல் நடந்தான்.

இதற்க்கு மேல் ஏதாவது பேசினால் ரமேஷ்க்கு கோபம வந்து விடும் என்று அசோக்கிற்கு தெரியும் எனவே அவன் மேல் எதும் பேசாமல் நடந்தான்.

அன்று இரவு அசோக் அந்த பெண் சம்பந்த்தமாக வேறு எதுவும் பேசவில்லை.

மறு நாள் அதே நேரம் அதே இடம்..... அசோக் வந்து கொண்டிருந்தான். அருகில் ரமேஷ் இருந்தான்.

அன்றும் அந்த பெண் அங்கு இருந்தாள் அன்று அவள் சிரித்ததோடு மட்டும் இல்லாமல் அவள் இருந்த இடத்தில இருந்து இறங்கி அசோக்கை நோக்கி வந்தாள்.


அவள் அசோக்கை நெருங்க நெருங்க அவனக்கு ஒருவிதமான படபடப்பு அதிகமானது. அவன் சற்று திரும்பி அருகில் ரமேஷ் இருக்கின்றான இல்லையா... என்று பார்த்தான். ரமேஷ் அங்கு என்ன நடக்கின்றது என்பதை பார்த்தும் அதை கண்டு கொள்ளாதவன் போல் நடந்து சென்று கொண்டிருந்தான்.

அவன் அருகில் வந்த்தவள் தான் கையில் இருந்த ஒரு துண்டு காகிதத்தை அசோக்கின் கையில் திணித்துவிட்டு அவள் வந்த வழியில் சென்று அவள் முன்னர் இருந்த இடத்தில போய் நின்றாள்.

அசோக்க ச்ற்று நேரம் கழித்துதான் தன் இயல்பு நிலைக்கு வந்தான்.அது வரை திக,,,,,.... திக........ என அடிதுகொண்டிருந்த அவனது இதயம் இப்பொது சந்தோஷத்தில் துள்ளி குதித்தது.


அந்த துண்டு காகிதத்தில் சில எண்களும் அதற்க்கு கில் இந்த எண்ணிற்கு போன் செய்யுமாறு எழுதி இருந்தது.

அதில் இருந்த என் கோர்வையை அசோக் படித்தான். 92-149-57. இது அவனுக்கு புதியதாக இருந்தது. இந்த மாதிரி ஒரு தொலைபேசி என்னை அவன் இதுவரை பார்த்ததில்லை.

விடு வந்து சிறிது நேரத்தில் ரமேஷ் என்ன செய்கிறான்........ என்று பார்த்துவிட்டு சற்று தனியாக சென்று அந்த எண்ணிற்கு அழைத்து பார்த்தான்.

ஒரு பயனும் இல்லை. ஒரு பெண்ணின் குரல் அந்த
எண்னை சரி பார்க்குமாறு அறிவுரை கூறினாள்............

இரண்டு முறை விடாமுயற்சி செய்து பார்த்து தோல்வி அடைந்து சற்று கவலை அடைந்து விட்டிறக்குள் வந்தான்.

ரமேஷ் ஒரு புத்தகத்தில் ஆழ்ந்து இருந்தான். அசோக் இதுவரை நடந்த்ததை அவனிடம் கூறினான்.

அதற்கு ரமேஷ் “அந்த எண் தவறாக இருந்தால் நான் என்ன செய்ய......... நாளைக்கு சென்று அவளிடம் சரியான எண்னை கேள்” என்று சொன்னான்.

“ஒரு முறை நி இந்த போன் எண்னை பாரேன் இது பார்க்க ஒரு போன எண் போல் இல்லை சற்று வித்தியசமாக இருக்கிறது”. என்று அந்த துண்டுகாகிததை ரமேஷிடம் நிட்டினான். அசோக்

அதை வேண்டா....... வெறுப்பாக........ வாங்கி பார்த்தான். முதலில் அதை பார்த்த ரமேஷ் சற்று குழம்பினாலும் அந்த எண்களை எங்கோ பார்த்த நினைவு அவனுக்கு இருந்தது.

ரமேஷ் ஆச்சர்யத்துடன் “இந்த எண்னை அந்த பெண் உன்னிடம் கொடுத்தாளா என்ன?” என்று கேட்டான்.


அதற்க்கு அசோக் “ஆம” என்றான் மேலும் “ஏன் இதே என்னை ஏதாவது ஒரு பெண் ஏற்கனவே உன்னிடத்தில் கொடுத்து இருக்கிறாளா என்ன?’ என்று கேட்டு வைத்தான்

அதற்கு ரமேஷ் “இது போன் நம்பறா இல்லையா என்று எனக்குத் தெறியாது.ஆனால் இந்த எண் கொர்வையைப்பற்றி தெரியும்.” என்றான்


இந்த என் கோர்வை leondro Fibonacci என்ற இத்தாலி நட்டு கணித மேதையுடையது. இதன் அமைப்பானது ஒரு எண்ணிற்கு அடுத்துள்ள எண்னை கூட்டி அதற்க்கு அடுத்த எண்ணாக அமைக்கவேண்டும்.

இதைப்பார் என்று ஒரு காகிதத்தில் எழுத ஆரம்பித்தான். 0-1-2-3—5-8-13-22-35-57-92-149-241----- இப்படியே போய்க்கொண்டே இருக்கும்.இதில் பார் முதலில் உள்ள 0 மற்றும் 1 கூட்டினால் 1 கிடைக்கும் அடுத்து 2 யும் 1 யும் கூட்டினால் 3 கிடைக்கும். அந்த 3 யும் 2 யும் கூட்டினால் அடுத்து வரும் என் 5 கிடைக்கும் இவ்வாறு அமைக்க வேண்டும் என்றான்.


அவள் கொடுத்திருக்கும் இந்த எண்னும் இந்த கோர்வையை சார்ந்ததுதான். என்று சொல்லி அந்த எண்களை தனியாக எழுத ஆரம்பித்தான்.

92-149-57 இதை சற்று மாற்றியமைத்தால் அது இப்படி வரும் பார் என்று எழுத ஆரம்பித்தான் 92-57-149. இதுவும் அந்த என் கோர்வை முறையில் தான் இடப்படிருக்கிறது என்றான்.


அசோக் சற்றும் தாமதிக்காமல் வெளியில் விலகி சென்று அந்த எண்ணிற்கு அழைத்தான்.

அவன் எதிர்பார்க்காத மணி ஒலித்தது உடனே அவன் தயாரானான் முதல் வார்த்தை என்ன பேசுவது.......... எப்படி அறிமுகம் செய்து கொளவது என்று ..............அதற்குள் அடுத்த முனையில் இணைப்பு எடுக்கப்பட்டது.

அவள் தான் முதலில் பேசினாள். எப்படியோ கண்டுபிடித்துவிட்டாயே என்றாள் கொஞ்சும் குரலில்.

அதில் கிறங்கி போன அசோக் எனக்கு தெரியும் நி என் அறிவுத் திறனை கண்டு பிடிக்கத்தானே இந்த மாதிரி செய்தாய் என்றான்.

அதற்க்கு அவள் அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை இப்போதெல்லாம் வெளியில் போலீஸ் கெடுபிடி அதிகமாக இருக்கின்றது அதுதான் காரணம்

இந்தத மாதிரியான முயற்சியில் இறங்குவதற்கு காரணம் வேறொன்றுமில்லை என்றாள் வேகமாக.


அசோக் சற்று குழம்பினான் அது அவனது பேச்சிலும் தெரிந்த்தது. “எனன சொல்லுகிறாய் போலீஸ் கெடுபிடிக்கும் இந்த எண்ணிற்கும் என்ன சாம்பந்த்தம்.........” என்றான்.

அதறக்கு அவள் “அதை எல்லாம் விவரமாக விளக்க இது நேரமில்லை. எங்கே எப்போது வர வேண்டும் என்று சிக்கிரம் சொன்னால் நனறாக இருக்கும்” . என்றாள்.

அசோக் இதயத்தில் லேசாக ஒரு கிறாள் விழுந்தது. அப்படி என்றால் நி என்னை பார்த்து சிரித்தது எல்லாம் ... என்று அவன் நிறுத்துவதற்கு முன்னாள்.. அதை எல்லாம் வைத்து நீயேதான் தான் புரிந்து கொள்ள வேண்டும்” என்றாள் அவள் மறுமுனையில் இருந்து.

நான் நினைத்தேன் நி என்னை காதலிக்கிறாய் என்று என்றான் அசோக்
அதற்க்கு அவள் அப்படி பார்த்தால் நான் எத்தனை பேரை காதலிப்பது சரி வேகமாக தகவலகளை சொன்னால் எனக்கு கொஞ்சம் நனறாக இருக்கும் என்றாள்

அசோக் தண் உடைந்தத குரலில் அப்படி என்றாள் நி அந்த மாதிரி பெண்ணா என்றான்

அதற்கு அவள் “பின் என்னை நி எந்த மாதிரி பெண் என்று நினைத்தாய்” என்றாள்

அசோக்தான் தொலைபேசியை முதலில் துண்டித்தான். அவன் முகம் தொங்கிபோய் இருந்தது.

அவன் கவலையுடன் வருவதைக்கண்ட ரமேஷ் “என்னடா ஆச்சு.........” என்றன்.

நடந்த்ததை அப்படியே சொன்னான். ரமேஷிக்கு முட்டிக்கொண்டு சிரிப்பு வந்தாலும் அதை அடக்கினான்.

அந்த நேரத்தில் அந்த அளவு அசோக் பாதிக்கப்பட்டிடிருந்த்தான் அவளால்.

தற்று அமதியான் குரலில் சரி அதான் முன்பே தெரிந்து விட்டதே அதை விட்டு விடு என்றான் ரமேஷ்.

இல்லைடா அவளை நான் நல்ல பெண் என்று நினைத்து கடந்த 3 மாதங்களாக உண்மையாகவே காதலித்தேன். ஆனால் அவளைப்பர்ர்த்தாயா...... அவள் எந்த மாதிரி பெண் என்று. என்றான் அசோக்க்க் உடைந்தத குரலில்.

ரமேஷ் அதற்க்கு மேல் ஒன்றும் பேசவில்லை.


மறு நாள் மாலை வேளைக்கு சென்று திரும்பும் போது அதே பெண் அந்த இடத்தில நின்று கொண்டு இருந்தாள்.

அவள் அசோக் மற்றும் ரமேஷ் செல்வதை பார்த்தாள் இப்பொழுது அசோக் அந்த பெண்னை திரும்பி பார்க்க வில்லை. அவன் நேராக பார்த்து நடந்தான்.

இதனைக கவனித்த ரமேஷ் சற்று தூரம் சென்று அவள் அசோக்கை இன்றும் பார்க்கிறாளா..... இல்லையா..... என்று திரும்பி பார்த்தான்.


அவள் பார்த்து கொண்டே தான் இருந்தாள்


ரமேஷ் அவளை பார்த்ததால் அவனை பார்த்து ஒரு மெல்லிய சிரிப்பு சிரித்தாள்.

ரமேஷ் சற்றேன்று தலையை திருப்பிக் கொண்டான் அவன் பதிலுக்கு சிரிக்கவில்லை........