காதலின் பரிசு...

    கிடைத்த அந்த தனிமையான நேரத்தில் இருவரும் ஊருக்குவெளியில் ஒரு இடத்தில இருந்து பேசிவிட்டு.... திரும்பி வரும்போது...

    "கணேஷ் இது வீட்டுக்கு தெரிந்தால் பெரிய பிரச்சினை ஆகும்...உனக்குத்தான் என் அப்பா பற்றி தெரியுமே?"

    " இருவரும் சம்மதித்ததுனே முடிவெடுத்தோம் .... எப்படியாவது சமாளிக்கத்தான் வேண்டும்"என்றேன்

   "நீ என்னதான்  சொல்லு கண்டிப்பாக  ஒருநாள்  வெளியில் தெரிந்து விடும்" என்றாள்

    "என்ன செய்ய சொல்றே..இது ஒரு உயிர் பிரச்சினை....அதுவும் நம் உணமையான காதலோடு சம்பந்தப்பட்டது...இதுக்கு எதிராக என்ன பிரச்சினை வந்தாலும் சமாளிச்சுதான் ஆகணும்..அதுதான் என் முடிவு" என்றேன்

  "பார் இன்னும் கொஞ்ச நாளில் நீ வேலைக்கு போய்டுவே..நான் மட்டும் எப்படி இதை தனியாக யாருக்கும் தெரியாமல்  பாதுகாப்பது சொல்?

"நம் காதலுக்காக இதை கூட செய்ய மாட்டிய என்ன?"

     "இல்லை கணேஷ் புரிந்துகொள் என்னை.......நான்தான் சொன்னேனே முதலில்.... இது எல்லாம் வேண்டாம் என் வீட்டில் சம்மதிக்க மாட்டார்கள் நம் கதாலுக்கும் பிரச்சினை வரும் என்று"

      "நீ ஏன் இப்படி பயப்படுகிறாய் என்று எனக்கு தெரியவில்லை..எப்படின்னாலும் ஒருநாள் நம் காதல் வெளியில் தெரிந்துதானே ஆகவேண்டும் ..அது இப்போது இதன் மூலம் தெரிந்து விட்டு போகட்டுமே நல்லதுதானே"


   "இதுதான் உன்னோடு பிரச்சினை...எதையும் சரியாக புரிந்து கொள்ள மாட்டாய்...இதனால் எனக்கு வரும் பிரச்சினையை உனக்கு எப்படி புரிய வைக்க போகிறேன்..." என்றாள்

  "நீ என்ன சொன்னாலும் இந்த விசயத்தில் எனக்கு உடன்பாடு இல்லை..இத்தனை வருடம் உருகி உருகி காதலித்துவிட்டு அதன் அடையாளமாக ஒன்றை ஏற்க்க மறப்பது உனக்கு எந்த விதத்தில் சரியாக படுகின்றது என்று தெரியவில்லை" என்றேன்

அமைதியாக என் முகம் பாராமல் மெதுவாக நடந்து வந்தாள்....

    எனக்கு நன்றாக தெரியும் அவளுக்கு இதில் துளியும் இஷ்டமில்லை..காரணம் பயம......இதன் மூலம் எங்கள் காதல் வெளியில் தெரிந்து விடும்...பின் ஏதாவது பிரச்சினை வந்து நாங்கள் சேரமுடியாமல் போய் விடுமோ என்பதுதான் அவளது எண்ணம...ஆனால் எனக்கு இதில் எந்த ஒரு பயமும் இல்லை..என்றாவது தெரியப்போகிற காதல்தான்..அதுக்கு ஏன் பயப்பட வேண்டும் என்பதுதான் என் எண்ணம.

    மற்றபடி என்னை காதலிப்பதில் எந்தவித குறையும் இல்லை அவளிடம் ...ஏனோ இந்த விசயத்தில் மட்டும் தயங்குகிறாள்... ஒரு உயிர் சம்பந்தப்பட்டு இருப்பதுதான் காரணம்...

நீண்ட நேரம் பேசாமல் நடந்தவள்...

"சரி காரணம் கேட்டால் என்ன சொல்ல அதையாவது சொல்?" என்றாள்

    "இது என்ன பெரிய விசயம்..முடிந்தவரை சாமளித்துபார் நம்பவில்லை என்றால் உண்மையை சொல்லிவிடு அவ்வளவுதானே இதில் என்ன இருக்கு?"

     "இதை நீ எளிதாக சொல்லி விட்டாய் ஆனால் இந்த இடத்தில ஒரு பெண்ணாக இருந்து யோசித்து பார்...அப்போது உனக்கு என் கஷ்டம் தெரியும்..அதுவும் காதல் சம்பந்தமான விசயங்களை  மறைப்பது..கஷ்டம் கணேஷ்...தயவு செய்து புரிந்து கொள்ளேன்"

"அப்ப நான் சொல்வதில் எந்த அர்த்தமும் இல்லை என்கிறாயா?"


  "இல்லை இதனால் வரும் பெரிய பிரச்சினைகளை புரிந்துகொள் என்கிறேன் அவளவுதான்"

"சரி இப்ப என்ன செய்ய முடிவாக?"என்றேன்


    "கோபப்படாம நிதானமா யோசனை பண்ணி நீதான் ஏதாவது சொல்லணும்" என்றாள்

"இவ்வளவு தூரம் நடந்தது நடந்தாச்சு அதான் யோசிக்கிறேன்"

     "எவ்வளவு தூரம்..இங்கு இருந்து பத்து நிமிடம் நடை....... வா போய் விட்டுவிட்டு வந்துவிடலாம்..இது என்கிட்ட  இருப்பதைவிட அது அம்மாகிட்டே இருந்தாதான் நல்லா இருக்கும்" என்றாள்

     இருவரும் பேசிக்கொண்டு இருந்த இடத்திற்கு  அருகில் ஒரு நாய் குட்டி போட்டு இருந்தது..அதில் ஒரு வெள்ளைநிற நாய் குட்டி அழகாக இருக்க.....அவள் அதை தூக்கி கொஞ்சி கொண்டு இருந்தாள்....நான்தான்..இதை நமது காதலின் அடையாளமாக வளர்க்கலாம் என்று சொல்ல  கொஞ்சம் தயக்கத்தோடு சம்மதித்தவள் வருகின்ற வழியில் பயந்து மனம் மாறிவிட்டாள்....

      அந்த இடத்தை நெருங்கினோம்...அந்த நாய்குட்டியை உணமையில் பிரிய அவளுக்கு பிரியம் இல்லைதான்....ஆனால் அவள சொல்வது போல வீட்டில் சம்மதம் இல்லாமல் அதை வளர்ப்பது கஷ்டம்...

    அதை இறக்கி விடுவதற்கு முன் அதன் நெற்றியில் செல்லமாக ஒரு முத்தம் கொடுத்துவிட்டு கிழே இறக்கிவிட்டாள்...... கொஞ்சம் தள்ளாடிய நடையில் அதன் அம்மாவிடம் சென்றது....அதை பார்த்த நாங்கள்...பிரிய மனமில்லாமல்  வந்த வழியில் நடக்க ஆரம்பித்தோம்....

10 comments:

arasan said...

பகிர்வுக்கு நன்றி

நிலாமதி said...

கதை வித்தியாசமா இருக்கிறது . எதோ ஒன்றை மறைத்து கதை சொல்லி,
பின்பு அது செல்ல பிராணி என்றதும்........

Philosophy Prabhakaran said...

சென்ற பதிவில் உங்களை பாராட்டி ஒரு பின்னூட்டமிட்டேன்... ஆனால் அதை நீங்கள் வெளியிடவில்லை... தன்னடக்கமா இல்லை வேறு ஏதேனும் உள்குத்து இருக்கா...

கணேஷ் said...

நிலாமதி said... ///

கதையில் அப்படி எதையும் மறைக்கவில்லையே?..)))))

நன்றி

கணேஷ் said...

philosophy prabhakaran said.///

ஹ ஹ...உங்களுக்கும் எனக்கும் வாய்க்க வரப்பு பிரச்சினையா என்ன?? உள்குத்து,வெளிக்குத்து குத்த))))

காரணம்...

சுஜாதாவை நிறையா படியுங்கள்..அவர் சாதாரணமானவர் இல்லை...என்பதே..

உங்களின் அறிவுரைக்கு நன்றி..

Philosophy Prabhakaran said...

நீங்களும் சாதாரணமானவர் இல்லையே :)

கணேஷ் said...

என்னைப்பற்றி உங்களுக்கு எதுவும் தெரியாது என நினைக்கிறேன்...))))

Unknown said...

கதையின் கடைசி டுவிஸ்ட் என்னை கவர்ந்தது.

கவிநா... said...

:))) super twist...

கணேஷ் said...

கவிநா... said...

:))) super twist...///

கருத்துக்கு..நன்றி...