ஐன்ஸ்டீன் தாத்தா சொன்னவைகள் – 3
    கடந்த பகுதிகளில் குவாண்டம் தத்துவத்தை ஏன் ஐன்ஸ்டீன் ஒரு முழுமையான தத்துவம் இல்லை என்று மறுத்தார் என்பதை பார்த்தோம்...அதற்கு காரணம் துகளின் (எலெக்ட்ரான்) சுழற்சியை சரியாக சொல்லமுடியாது என்பதே..

    சரி ஏன் இப்படி? என்ன காரணம்?அப்படி எலக்ட்ரோனை அளக்க அது எங்கு போகின்றது? அதை எதுக்கு அளக்க வேண்டும்? போன்ற கேள்விகள் இருந்தால் போன பதிவுகளை நீங்கள் கொஞ்சம் தெளிவாக படித்து இருகிறீர்கள் என்று அர்த்தம..

    இல்லை இந்த கணேஷுக்கு வேற வேலை இல்லை...ஏதாவது அவனுக்கு மட்டுமே புரிகின்ற மாதிரி எழுதிகொண்டு நம்மிடம் கேள்விகள் கேட்பான் என்று நினைப்பவர்கள் இந்த பதிவை படித்து விட்டு மீண்டும் இதே பழைய பதிவுகளை படிக்க வேண்டுகிறேன்...

    மேலே நான் சொன்ன கேள்விகளுக்கு விடை புரிய வேண்டும் என்றால் கொஞ்சம் அணுவை பற்றி தெரிந்து இருக்கவேண்டும்..அணுவை பற்றி சொல்ல போகின்றேன் என்றவுடன் .....முதன் முதலில் கி.மு 400 வருடத்தில்......என்று ஆரம்பிக்க விரும்பவில்லை.....அந்த விசயங்கள் எல்லாம் நான் இங்கு சொல்ல போவதற்கு தேவையில்லாதவை ....

   ஏனென்றால்.... ஒருவர் மற்றொருவரிடம் ஆலமரத்தை பற்றி சொல்லும்போது இது 100 வருடத்திற்கு முன் இவரால் நட்டபட்டது..அதுக்கு முன்னாடி இது விதையாக இருந்தது..இந்த வருடத்தில் இது இவ்வளவு உயரம் இருந்தது..என்று சொல்ல ஆரம்பித்தால் கேட்பவர் அதே மரத்தடியில் குறட்டைவிட்டு தூங்க ஆரம்பித்து விடுவார்...


    அதனால் அணு என்றால் இப்போதைக்கு எப்படி நாம் காண்கிறோம் என்பதை மட்டும் பார்ப்போம்..அதுதான் நாம் இங்கு பார்க்கபோகும் விசயத்திற்கு தேவையும் கூட..


    நியுட்ரோன்,ப்ரோட்டான் இந்த இரண்டும சேர்ந்து அணுவின் மையத்தில் நியுக்லி என்ற பெயரில்  இருக்கும்... , இந்த நியுக்லி மையமாக வைத்து எலெக்ட்ரான் சுற்றி வரும்.இதுதான் இப்போதைய அணுவின் புரிதல்... இதில் எலெக்ட்ரான் ஒரு வட்டத்தில் சுற்றி வருவதாக சிறுவயதில் படித்து இருப்போம்..அது தவறு...ஏன்?

    இதில் தான் பிரச்சினை.....இதுக்குத்தான்..ஐன்ஸ்டீன் சண்டை போட்டார்.. உணமையில் அந்த எலேக்ட்ரோன்கள் எப்படி,எந்த பாதையில்  NUCLEI ஐ சுற்றுகின்றது என்பதை யாராலும் சொல்ல முடியாது..இதைத்தான் ஐன்ஸ்டீன் சரியாக சொல்லவேண்டும் என்றார்..

    கொஞ்சம் விரிவாக பார்ப்போம் .....நியுக்லியை எலெக்ட்ரான் சுற்றி வருகின்றது என்று மட்டுமே நம்மால் சொல்ல முடியுமே தவிர .... எந்த பாதையில்,எவ்வளவு வேகத்தில்.. என்ன நேரத்தில்.. அது எங்கு இருக்கின்றது என்பதை(அடக்கி ஒரே நேரத்தில்) சொல்ல  முடியாது.....இதில் எதையாவது ஒன்றை மட்டும்தான் துள்ளியமாக சொல்ல முடியும்...இதை மையமாக வைத்துதான் ஹெசின்பெர்க் uncertainty தத்துவத்தை வெளியிட்டார்..இதைத்தான் ஐன்ஸ்டீன் மறுத்தார் ....இருந்தும் நாம் அதை வட்ட வடிவமாக சொல்ல காரணம்..... நியுக்லியில் இருந்து எலெக்ட்ரான் சுற்றும் தூரங்களுக்கு இடையே உள்ள சக்தி நிலையை (ENERGY LEVELS) குறிப்பதற்கு மட்டுமே..

    ஏன் சரியாக சொல்ல முடியாது என்றால் சுற்றி வரும் எலக்ட்ரோன்களை நாம் அறிய  முயலும்போது அதன் இயல்பு தன்மை பாதிக்கும்..இப்போது அதன் உந்தத்தை நாம் துள்ளியமாக அளக்கும்போது அதன் இருப்பிடம் நமக்கு சரியாக தெரியாது... தெரியாது என்பதை விட அதை தெரிந்து கொள்ளும் நுட்பம் நம்மிடம் இல்லை..அதைத்தான் ஐன்ஸ்டீன் கண்டுபிடிக்க வேண்டும் என்றார்... 


    சரி இந்த மாதிரி எலேக்ட்ரோன்கள் ஒரு நிலையில் இருந்து மற்ற நிலைக்கு மாறும்போது என்ன நடக்கின்றது என்றால்.. (மேலே உள்ள படத்தை பெரிது படுத்தி பார்க்கவும்) நியுக்லியில் இருந்து விலகி தூரமான அடுத்த நிலைக்கு சென்றால் அந்த எலெக்ட்ரான் போட்டோனை கிரகிக்கும் அல்லது உள்வாங்கும்...அதே நேரத்தில் எலெக்ட்ரான் ஆனது நியுக்லியை நெருங்கிய சக்திநிலைக்கு தாவினால் அது (ஆற்றல்) போட்டோனை உமிழும்..அப்படி உமிழும் போட்டோன் அது ஏற்க்கனவே கிரகித்த போடோனின் அளவில் இருக்கும் என்கிறார்கள்..... அதுதான் நாம் காணும் ஒளி...எலக்ட்ரான் தாவும  சக்திநிலைக்கு ஏற்ப ஒளியின் தன்மை மாறும்... இப்படி போடோனை எலெக்ட்ரான் கிரகித்து உமிழவில்லை என்றால் நமது பிரபஞ்சத்தில் ஒளி கூடிகொண்டே போய் மிக பிரகாசமாய் இருக்கும்.........


   மேலே அணுவை  பற்றி சொன்னதில் ஒரு சிறு பகுதியைத்தான் பார்த்தோம் இன்னும் அதில் அடிப்படை துகள்கள் (பெர்மியன்கள்,போசொன்கள்.,லேப்ட்டன்கள்,க்ளுவான்கள்) என்ற பெயரில் பல ன் கள் உள்ளன....

    இதுவரை பார்த்த விசயங்களில் இருந்து  குவாண்டம் தத்துவம் என்பது மிகசிறிய அளவுகளுக்கான அணுக்கள் மற்றும் துகள்களுக்கான (sub atomic particles) ஒன்று என்பது தெரிந்து இருக்கும்...

   மேலே சொன்னவை குவாண்டம் தத்துவத்தில் உள்ள சில அடிப்படையான விசயங்கள்..இதில் பல பிரிவுகள் பல விசயங்களை விளக்குகின்றன...அவற்றை அடுத்து வரும் பகுதிகளில் கொஞ்சம் பார்க்கலாம்..

  

 6 comments:

Unknown said...

//இருந்தும் நாம் அதை வட்ட வடிவமாக சொல்ல காரணம்..... நியுக்லியில் இருந்தும் எலெக்ட்ரான் சுற்றும் தூரங்களுக்கு இடையே உள்ள சக்தி நிலையை (ENERGY LEVELS) குறிப்பதற்கு மட்டுமே//

ஆமால்ல! ஆனா படிக்கும்போது அது சுற்றும்பாதை வட்டம் என்றே சொல்லித் தந்த மாதிரி இருக்கு! அது பற்றிய தெளிவின்மையை சொன்னமாதிரி தெரியல!
ஒரு வேளை நாமதான் அந்த நேரத்தில குறட்டை விட்டுட்டமோ? :-)

கணேஷ் said...

ஆமாம் நானும் அபப்டித்தான் படித்தேன்...நாம் சிறுவயதில் படித்த அறிவியலில் இந்த விளக்கம் தேவை இல்லை என நினைத்து இருக்கலாம்....

எஸ்.கே said...

இயற்பியல் விஷயங்கள் அருமை! தொடரட்டும்!

கணேஷ் said...

எஸ்.கே said...@

நன்றி

Unknown said...

//இப்படி போடோனை எலெக்ட்ரான் கிரகித்து உமிழவில்லை என்றால் நமது பிரபஞ்சத்தில் ஒளி கூடிகொண்டே போய் மிக பிரகாசமாய் இருக்கும்.........// i cannot understand this thing please explain!

கணேஷ் said...

அதாவது எலெக்ட்ரான் தனது சக்தி நிலை மாற்றத்தின் போது போடோனை வெளிப்படுத்தும்... கருவை நோக்கி வரும் போது போடோனை உமிழும்...

கருவை விட்டு அடுத்த சக்தி நிலைக்கு செல்லும்போது போடனை கிரகிக்கும்...

இந்த இரண்டு செயல்களில் உமிழும் செயல் மட்டும் நடந்தால் என்ன ஆகும் என்பதைத்தான் சொல்லி இருந்தேன்..

((இதில் ஏதும் மாற்றம் அலல்து கருத்து இருந்தால் விவாதிக்கலாம் பயனுள்ளவையாக இருக்கும்...))