அறியா உலகம் (சவால் சிறுகதை-2011 )


    அந்த நீளமானபெட்டி கரையில் வைக்கப்பட்டிருக்க அதனைசுற்றி ஒரு சிறுகூட்டம். அதில் பாதிபேர் இந்த கடல் ஆராய்ச்சி சம்பந்தபட்டவர்கள் மீதி அந்த பெரியபெட்டியை கரைசேர்க்க உதவியவர்கள்,வேடிக்கைபார்க்க வந்தவர்களென கூடியிருந்தார்கள்.

    பெட்டியை ஆராய்ச்சிகூட வண்டியில் ஏற்றும்போதே அதைப்பற்றிய வதந்தி காற்றில் ஏறியிருந்தது. கடலில் இருந்து ஒருபெரிய புதையல் கிடைத்து இருப்பதாகவும், வேற்றுகிரகத்தில் இருந்து பூமியில் விழுந்த ஒருபெட்டி என்றும் மக்களின் கற்பனை வளம் வேகமாக  விரிந்துகொண்டு  இருந்தது.

   வந்துசேர்ந்தவுடன் அதன் நீளம் அகலம, உயரம, எடை போன்றவை கணக்கிடபட்டன. இதுவரை ஊடகசெய்திக்கு சொல்லவில்லை. பணியாளர்கள் அதனை துடைக்க உத்தரவு இடப்பட்டு இருந்தார்கள். மேழேபடர்ந்து இருந்த கடல்பாசிகளை துடைத்து கழுவி நீக்கியபின்  ஒரு மஞ்சள்நிறத்தில் கொஞ்சம் பளுப்பக இருந்தது.

    அதனை திருப்பி பார்த்தபோது மூன்றுபக்கம் வெறுமையாக இருக்க அதன் ஒருபக்கத்தில் ஒருசின்னம் இருந்தது. சின்னம் என்பதைவிட ஒரு முத்திரை வடிவம். இரண்டு பெரிய மீன்கள் அலையில் எழும்பி குதிப்பதுபோல.அதைத்தவிர அந்தபெட்டி முழுதும் சமபரப்பே எங்கு எப்படி  மூடி இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது என்பதைகூட கணிக்கமுடியவில்லை. காரணம் அதன் நான்கு மூலைகளிலும் வளைவு (radius) கொடுக்கபட்டிருந்தது.

    அந்தஇரண்டு மீன்களின் சின்னத்துக்கு கிழே சின்ன எழுத்துக்களாக பொரிக்கபட்டு இருந்தன. இணைப்புகளை கண்டுபிடிக்க எல்லா மூலைகளிலும் சுரண்டிபார்க்கப்பட்டு ஏதுமில்லாமல்போக அடுத்தகட்ட வேலைக்கு தடைசெய்யபட்டிருந்தது. பெரிய அதிகாரிகள் வருவதாகச்சொல்லி அதைமூடினார்கள்.  


   சிறிய ஆய்வுக்குப்பின் ஒருவித பவளபாறைகளால் ஆனது என்று கண்டுபிடித்தார்கள்.அந்த இரண்டு மேலதிகாரிகளில்  ஒருவர் மீன்முத்திரையும்  எழுத்துக்களையும் பார்த்தபிறகு சங்கேதபாசை இருக்கிறது என தனக்குள் முனுமுனுத்தர்ர்.     

     சிறிய உரையாடலுக்கு பிறகு அதைஎப்படி திறப்பது என யோசிக்கபட்டது.. இந்தபெட்டி சில சங்கேதபசைகளால் மூடப்பட்டுள்ளது.முதலில் அது சம்பந்தபட்டவர்கள் கொண்டு முயற்சிசெய்துவிட்டு பின் உடைக்கலாம். அதோடு நமது உயிரியல் பிரிவில் உள்ளவர்களுக்கு தகவல் கொடுங்கள். திறக்கும்போது அவர்கள் இருப்பதும் முக்கியம்.


“புனி என்ன பண்றே?

“என்ன பண்றேன்னு   நீயே சொல்லேன்

  “என்னசெய்ய போற உன் செல்லபூனை லில்லியை கொஞ்சி விளையாடிட்டு இருப்பே

“ஆமா அதுஇருக்கட்டும் இப்ப எதுக்கு திடீர் அழைப்பு உனக்கும் அந்தபெட்டியை பத்தி தகவல் வந்துச்சா என்ன?

“ஆமாம் அதுக்குத்தான் நானும் உனக்கு போன் பண்ணேன். எப்பபோகலாம் சொல்லு சேர்ந்தேபோகலாம்

“ நான் வரலை முடிஞ்சா அங்க சந்திக்கலாம்

“ஏன் இப்படி பண்றே?
 
“சரி அழுகாதே வரேன் எப்பபோகலாம் சொல்லு?

“நாளை காலையில் 9 மணிக்கு இங்க வந்துடு


  புனி உயிரியல் பிரிவில் ஆராய்ச்சி பணிகள் செய்யும் குழுவில் இருப்பவள். அந்த பெட்டியை பற்றிய ரகசிய தகவல் அவளுக்கு வந்து இருந்தது அதுவும் வெளியில் யாருக்கும் தெரியபடுத்தவேண்டாம் என்ற அறிவுரையோடு. அப்போதே அவளுக்கு அதன்மீது ஒரு ஆர்வம்கலந்த ஆச்சர்யம்

   கணேஷ்  அதே ஆய்வுகூடத்தில் cryptography   துறையில் இருப்பவன். அங்கு சேரும் முன்னரே புனி பின்னாடி சுற்றி அவளை காதலித்துக்கொண்டு இருப்பவன். அவர்கள் காதலிக்கிறார்கள் என்பதைவிட சண்டை போடுகிறார்கள் என்றே சொல்லவேண்டும்..

  மறுநாள் காலையில் இருவரும் சேர்ந்தே ஆராய்ச்சி கூடத்துக்கு வந்தார்கள். பார்த்த இருவருக்குமே ஆச்சர்யம்.அவர்கள் நினைத்து இருக்கவில்லை இந்த அளவு வித்தியாசமாக இருக்குமென. இருவருக்கும் அது கண்டுபிடிக்கபட்டதில் இருந்து கடைசியில் செய்தவேலைகள் பற்றிய தகவல்கள் அனைத்துமே கொடுக்கபட்டன. கணேஷ் அதன் அளவுகள் எடை மற்றும் அது என்ன பொருளால் ஆனது போன்ற தகவல்களை வாங்கிகொண்டான்.

   கணேஷின் முதல்வேலை அந்தபெட்டி ரகசிய எழுத்துக்களால் மூடபட்டுள்ளதா இல்லையா என்பதை கண்டறிய வேண்டும். அந்த மீன்முத்திரைக்கு கிழே இருந்த எழுத்துக்களை முதலில் எழுதியவன் அந்தபெட்டி முழுவதும் பூதகண்ணாடி கொண்டு தேடினான் வேறெங்கும் எழுத்துக்கள் இருக்கிறதா என்று. தென்படவில்லை. அவன் குறிப்பெடுத்த எழுத்துகள் SWH26F


   சிறிதுநேர யோசனையில் அவனுக்கு தெரிந்து இருந்தது மிகவும் பழமையான கஷ்ட்டமான எழுத்துக்களை கொண்டு சங்கேதபாசையால் அமைத்து மூடப்பட்டபெட்டி அதென்று. வெளியில் வந்தான் அங்கிருந்த அதிகாரிகளிடம் அந்தபெட்டி ரகசிய எழுத்துக்களால் பூட்டப்பட்டுள்ளது என்பதையும் அதனை திறக்க தனக்கு கொஞ்சம் அவகாசம்தேவை என்று சொல்லிவிட்டு கிளம்பினான்.   
வெளியில் வரும்போது .புனியை வீட்டுக்குவருமாறு அழைக்க முதலில் மறுத்தவள் பின்சம்மதித்தாள்.

     ஆய்வுகூடத்தில்  சில முக்கயமான முடிவுகள் எடுக்கப்பட்டன. அந்தபகுதியில் இருக்கும் காவல்நிலையத்துக்கு இதுசம்பந்தமாக சொல்லி  பாதுகாப்புவசதி கோரப்பட்டது. அதோடு ஊடகங்களுக்கு செய்திகளை அளிப்பதில் கட்டுபாடுகளை கையாள ஒருநபரை நியமிப்பது என முடிவாகியிருந்தது.

     S W H2 F6 கண்டிப்பாக அந்தபெட்டியை மையமாக வைத்துதான் இது இருக்க வேண்டும் என்பதால் அந்த கோணத்திளியே யோசிக்க ஆரம்பித்தான். அதை திறப்பதற்கு ஒருஇடம் இருக்கவேண்டும்.  ஒரு செவ்வகவடிவில் உள்ள  பொருளில் குறிப்பிட்ட பகுதியை சரியாக குறிக்க நீளஅகல முறைகளை கொண்டுதான் கண்டிப்பாக உணர்த்தவேண்டும். அப்படிபார்த்தால் இதில் இருக்கும் W,H2 என்ற எழுத்துக்கள் கொஞ்சம் பொருந்துவதாக இருந்தது. அதாவது ஒரு புள்ளியில் இருந்து WIDTH, HEIGHT போன்றவற்றை இவை உணர்த்தவேண்டும். அப்படியே இருந்தாலும் H2 என்பதில் ஒருஅளவை குறிக்கும் எண் இருக்கிறது. ஆனால் WIDTH க்கு இல்லை.

    அதுக்கு பொருத்தமான எண்ணை முதலில் கண்டுபிடிக்க வேண்டும். அதில் உள்ள மற்றவவை எண்களுடன் தொடர்புகொண்டு இருக்க   S மட்டும் எந்த எண்ணோடு தொடர்பு இல்லாமல் இருப்பது கொஞ்சம் குழப்பியது. ஆனால் அந்த எழுத்தை எதுக்கு கொடுக்கபட்டு இருக்கிறது என்பதை கண்டுபிடித்தபோது அது  எளிதானது. அந்த எழுத்து குறிப்பது நீள உயர அளவுகளை எந்தபக்கத்தில் இருந்து அளக்கவேண்டும் என்பதை அது குறிக்கிறது.அதாவது அந்த பெட்டியில் இருக்கும் நான்கு பக்கங்களில் ஒன்றை குறிப்பாக உணர்த்த அந்த எழுத்து. இப்பொது அந்த எழுத்துக்கும் ஒரு எண்ணை கொடுக்க வேண்டிய கட்டாயம். அப்போதுதான் அவனுக்கு நினைவுக்கு வந்தது அந்த மீன்முத்திரை அதை பார்த்தால் எதாவது கிடைக்கலாம் என்ற எண்ணம் அவனுக்கு.

    மறுநாள் அங்கு போனபோது இரண்டு புதியவர்கள் அவனுக்கு அறிமுகமானார்கள். ஒருவர் பாதுகாப்பு பணியினை மேற்கொள்ளும் எஸ்.பி கோகுல்  மற்றொருவர் செய்தி  தகவல்களை கட்டுபடுத்தும் விஷ்ணு. இதில் விஷ்ணுவின் பணி கொஞ்சம் கணேஷ்க்கு தேவை. அதாவது எந்த காரணத்தை கொண்டும் இந்த ரகசிய எழுத்து முறைகளை வெளியில் சொல்லகூடாது. அப்படி சொன்னால் மக்களுக்கு ஆர்வம் அதிகமாகி பிரச்சினை வேறுமாதிரி போகலாம். அதோடு தவறான சிலரின் கைகளுக்குபோக வாய்ப்பு இருக்கிறது. எனவே விஷ்ணுவை கூப்பிட்டு தனியாக இதைப்பற்றி விளக்கினான்.

    அவனுக்கு தேவையான எண்கள் அந்த மீன்முத்திரையில் இருக்கிறதா என்பதை தேடினான். இல்லை. அந்த எண் எழுதுகளுக்கிடையேதான் இருக்கிறது என்று முடிவாகினான். வெளியில் போகும்போது கோகுல் எதிரில் வந்தார். ஏற்க்கனவே நன்கு பழக்கம் உடையவர். அவரது சிலபிரச்சினைகளில் இருந்த ரகசிய எழுத்துக்களை தீர்க்க கணேஷ்ஐ சந்தித்தது உண்டு.

    கணேஷ் அவரை தனியாக அழைத்துச்சென்று அந்த ரகசியஎழுத்துக்கள் சம்பந்தமாக பேசினான். அதன் முக்கியத்துவம் பற்றிசொன்னான்.  அது விஷ்ணுவுக்கும் தெரியும் அவன் அந்த எழுத்துகளை எந்தக்காரணம் கொண்டும் வெளியில் சொல்லாமல் இருக்கவேண்டும் என்ற தனது கருத்தை சொன்னபோது.

 “அப்படி என்ன எழுத்து அது எனக்குதெரியாம? என்றார் கோகுல்

“இப்போதைக்கு வேண்டாம் விஷ்ணுவை கொஞ்சம் பார்த்து கொள்ளுங்கள் எங்காவது சொல்லிவிடபோகிறார் என்று சொல்லிவிட்டு கிளம்பினான்.

    அந்த S க்கு உதவும் எண் எது என்பதை யோசித்தான்.அதில் மீதம் இருக்கும் எண்கள் 6, 2 இதில் 2 என்பது H ஓடு சேர்ந்து உயரத்தில் இருந்து 2 அடி என்ற அர்த்தத்தில் வருமென தோன்றியது. மீதி இருப்பது அகலம் எந்தபக்கம். அந்த இரண்டின் கூட்டுதொகை 8. மற்ற இரண்டு எழுத்துக்களின் கூட்டு தொகையும் அதுவாகவே இருக்கவேண்டும். காரணம் இந்தமாதிரியான ரகசிய எழுத்துக்கள் அமைப்பதின் நோக்கம் இது சாதாரணமானவர்களின் கையில் கிடைத்து சேதம்அடையகூடாது என்பதே. எனவே அனுமானம் செய்ய எளிதாக ஒன்றையே இன்னொன்றிலும் தொடர்வது சங்கேத பாசையில் பொதுவானஒன்று.

   அந்த இரண்டு எழுத்துக்களுக்கும் இரண்டு எண்களை கொடுத்தால் அதன் கூட்டுதொகை 8 வரவேண்டும். எளிதாக பாதியாகபிரித்து S4, W4 கொடுத்தான். காரணம் மேலேசொன்னதுதான். கண்டுபிடிப்பவரின் சிறிய அனுமானத்திற்குகேற்ப எளிதானமுறை. இப்போது அந்தஎழுத்துக்களை அமைத்தால் S4 W4 H2 F6 அதாவது பெட்டியின் நான்காவது பக்கத்தில் நான்கடி அகலத்தில், இரண்டடி உயரத்தில் எதாவது ஒன்று இருக்கவேண்டும் 

   ஆனால் அந்த F6க்குமுடிவு இன்னும் இல்லாமல்இருந்தது. F சேர்ந்தபடி இருக்கும் 6 எண்ணை மட்டும் வைத்துபார்ப்பது சரியாகாது ஏனென்றால் இதன் அடிபப்டை எண் 8.எனவே F8 என அர்த்தம்கொள்ள தீர்மானித்தான். அந்த 6 என்ற எண் ஒரு உதவிக்குமட்டுமே என்பது அவனது எண்ணம்.F8 என்பதை Fல் இருந்து 8வது எழுத்தை முன்னோக்கிபார்த்தால் அதில் அர்த்தமில்லை ஆனால் பின்னோக்கி பார்க்கும்போது 8 எழுத்துக்கள் முடிந்து 9வதாக வரும்எழுத்து o. இது எதையாவது உணர்த்தவேண்டும். அந்த F6 க்கு பதிலாக o எழுத்தை பொருத்திபார்த்தபோது அவனுக்கு ஆச்சர்யம்  S4W4H2o அதாவது H2o நீரை குறிக்கும் ஒரு குறிப்பு. கணிப்பு சரியாக இருந்தால் பெட்டியில் திறக்கும் இடத்தை கண்டுபிடித்தபிறகு தண்ணீரின் தேவையிருக்கும் என்ற முடிவுக்குவந்தான்.

   அந்தநேரத்தில்தான்  கோகுலிடமிருந்து அலைபேசி அழைப்புவந்தது. அதை கேட்டபோது கொஞ்சம் அதிர்ந்துதான்போனான். காரணம் கோகுல் விஷ்ணுவிடம் ஒரு சோதனைக்காக அந்தஎழுத்துக்கள் பற்றிகேட்க கொஞ்சமும் தயக்கம் இல்லாமல் அதை எழுதி அவன் அனுப்பியதே. கோகுல் கூடவே ஒரு விண்ணப்பம் வைத்தார்  தன்மூலம் இது தெரிந்தது என்று விஷ்ணுக்கு தெரியவேண்டாம் என்பது.

    சிறிது நேரம்கழித்து கணேஷ் விஷ்னுவுக்கு போன்செய்தான் அவனிடம் அந்த ரகசிய எழுத்துக்கள் பற்றி கேட்டபோது நான் யாரிடமும் சொல்லவில்லை என்பதயே திரும்பதிரும்ப சொன்னான். ஒருகட்டத்தில் கோபம அடைந்த கணேஷ் ஆதாரத்தை காட்டினால் என்னசெய்வாய் என்றபோதுதான் அவனுக்கு புரிந்தது. எங்கு மாட்டினோம் என்று. அதற்குபிறகு அவனிடம் வெறும் மௌனமே.

    கணேஷ்  புனியோடு அந்த இடத்திற்கு போனபோனது அவனது மேஜையில் ஒரு துண்டுகாகிதம் இருந்தது. அதில் விஷ்ணு தான் கோகுலிடம் அந்த ரகசிய எழுத்துகளை சொன்னதாகவும்  அது தவறானதுதான் என்பதை எழுதி வைத்திருந்தான். ஆனால் கணேஷ் வரும்போதே கோகுலிடம் இருந்து அவன் கொடுத்த அந்த எழுத்துக்கள் அடங்கிய சீட்டை வாங்கிவந்து இருந்தான்.அது சரியான எழுத்துதான் என்பது அவனுக்கு தெரியும்.


    இப்போது அவன் கவனம் முழுவதும் அந்தபெட்டியில் திறப்பதில் இருந்ததால் அதற்கு தேவையான வேளையில் இருந்தான். அளப்பதற்கு தேவையாக ஒரு அளவுகோல்(steel rule) வரவழைத்தான். அதன்மூலம் துல்லியமாக எழுத்துக்களில் பொதிந்திருக்கும் அளவுகளை அளக்க முடிவாகியிருந்தான்.அந்தநேரத்தில்தான் அவனுக்கு விஷ்ணுவிடம் இருந்து போன்வந்தது. கணேஷ்க்கு தெரியும் அவன் இப்போது என்ன பேசுவான் என்று. மன்னிப்பு கேட்பான் இனிமேல் கவனமாக இருப்பதாக சொல்வான் என்பதால் சிறிதுநேரம்  யோசித்த கணேஷ் இணைப்பை துண்டித்துவிட்டு அருகில் இருந்த அளவுகோலை எடுத்துக்கொண்டு பெட்டியை நெருங்கினான்.

    அருகில் இருபவர்களை வெளியில் அனுப்பிவிட்டு முக்கியமானவர்கள் மத்தியில் அதைதிறந்து முதலில் நான்காவது பக்கத்தை தேடும் முயற்சி செய்து அந்த மீன்முத்திரை இருக்கும் பக்கத்தை முகப்பு பக்கமாக கொண்டு அதில் இருந்து நான்காவது பக்கம் எனபார்த்தால் அதன் இடதுபக்கம் இருக்கிற பகுதிவந்தது. அதன் மேற்புறத்தில் இருந்து H2 என்பதுக்கு இணங்க இரண்டடியில் ஒரு குறிப்பை வைத்தான் அடுத்து W4 என்பதுக்கு பக்கவாட்டில் இருந்து நான்கடியில் ஒரு குறிப்பை வைக்க அது இரண்டும் ஒருஇடத்தில சேர்ந்தது.

   ஒருசிறிய சுத்தியல் வாங்கி மற்ற இடங்களில் தட்டி ஒலியின் தன்மையை சோதித்துப்பார்த்துவிட்டு அந்த குறிப்பு செய்த இடத்தை தட்டியபோது மாற்றமான சத்தம்வர எல்லோர் முகத்திலும் சந்தோஷம். அங்கிருந்த புனிக்கு கணேஷ்க்கு எதாவது கொடுக்கலாம் போல இருந்தது. அந்தப்பெட்டியில் திறப்புக்கான இடம் தெரிந்தவிட்டாலும் அதை எப்படி திறப்பது என்பதில் பிரச்சினை இருந்தது

   காரணம் இந்தமாதிரியான சங்கேதபாசைகள்  கொண்ட பெட்டிகளை வடிவமைக்கும்போது முறையான வழியில் திறக்காமல் தவறாக திறந்தால் அதன் உள்ளேஉள்ள பொருள்கள் அழிந்திடுமாறு அமைப்பார்கள்.கணேஷின் பயத்துக்கும் இதுதான் காரணம். ஒரு முடிவுக்கு வந்தவனாக ஒரு துளையிடும் கருவியும்(DRILLING MACHINE), மறைபோடும் (TAP) கேட்டுவாங்கி அந்த இடத்தில குறைந்த ஆழத்துக்கு துளையிட்டு மறையிட்ட பின்னர் அதில் ஒரு SCREW வை இணைத்து கொஞ்சம் அழுத்தமாக இழுத்து பார்த்தான். அந்த இடம் மெதுவாக விலகி வெளியில்வந்தது. கிட்டதட்ட சிறிய சதுரவடிவ பாகம்  முழுவதும் வெளியில்வர அதைதொடர்ந்த உட்பகுதி ஒரு துளைபோல உள்ளேசென்றது.

    அடுத்து நீரை எடுத்துவரச்சொன்னவன் அந்த துளைவழியாக செல்லுமாறு ஊற்றினான். நீர் நிரம்பி வெளியில்வர ஆரம்பித்த நிலையில் நிறுத்த அந்தபெட்டியில் ஒருமாற்றமும் இல்லாதது அதுவரை எல்லவாற்றையும் ஆச்சர்யமாக பார்த்துகொண்டு இருந்தவர்களுக்கு ஒரு ஏமாற்றமாக இருந்தது. கணேஷ்க்கும் குழப்பம். சிலவினாடிகள் கரைந்த நிலையில் அதன் எதிர்புற பக்கம் சிறுசப்பதத்துடன் விலகி வெளியில் விழுந்தது. எல்லோரும் அந்தபக்கம் பொய்ப்பார்த்தார்கள். ஊற்றிய தண்ணீர் வெளியே வடிந்து கொண்டு இருக்க இப்போது அதன்மேல் மீன்முத்திரை பதித்திருக்கும் ஒருபக்கத்தை விளக்க அந்தபெட்டியில் இருப்பது வெளிப்படையாக தெரிந்தது.

   ஒருவகைதுணியால் சுற்றப்பட்டு அந்தபெட்டிக்கு மத்தியில் தனியாக அதுக்கேன்று ஒரு இடம் அமைக்கபட்டு வைக்கபட்டிருந்தது. அதுக்குகிழே கொஞ்சம் இடைவெளி அதில் நீரால் விரிவடையும் ஒருபொருள் இருக்க அந்தபொருள் விரிவடைந்தால் அதுகொஞ்ச உயரத்தில் இருக்கும் நான்கு பக்கங்களையும் இணைக்கும் ஒரு பிரதான இணைப்பு பகுதியை அழுத்தி விளக்குவதாக அமைக்கபட்டு இருந்தது.

   தவறான முறையில் திறக்க முற்பட்டால் நான்குபக்கசுவரில்  இருக்கும் ஒருவகை அமிலம் உடைந்து அதிலுள்ள பொருளை யாருக்கும் கிடக்கலாம் சிதைத்துவிடும். அதன் மத்தியில் உள்ள அந்த பொட்டலம் போன்ற ஒன்றை வெளியில் தனியாக எடுத்து அவில்க்கும்போது துர்நாற்றம் வீசியது. புனி வேகமாக சென்று தன் உபகரணங்களை எடுத்து வந்து அதன்மீது சுற்றியிருந்த ஒருவிதமன் துனிபோன்ற ஒன்றை முழுதும்விலக்க அந்த உருவம் கண்ணுக்கு புலப்பட்டது.          

    உடல்பகுதி டால்பின்போல இருந்தாலும் அதன் கால்பகுதி மத்தியில் இருந்தே இரண்டாக பிரிந்திருந்தது. எப்படி மனிதனுக்கு இடுப்பில் இருந்து கால் பிரிகிறதோ. அனைவரின் ஆச்சர்யமும் அதன் தலை அமைந்த விதம்தான். கிட்டதட்ட மனிதஉருவ அமைப்பை பெற்றிருந்தது முடியில்லாமல் வழுவழுப்பாக இருக்க தலயின் நுணி கொஞ்சம் கூராக இருந்தது.

   அந்ததுணியில் ஒட்டினாற்போல ஒருகடிதம்.பாதுகாப்பான முறையில் மடித்து வைக்கப்பட்டிருந்தது. அதை சுத்தம்செய்து கணேஷ் படிக்கஆரம்பித்தான்.

    எங்களது பலகால கடல்பயணத்திலும் ஆராய்ச்சியிலும் நாங்கள்  கண்டசில உண்மைகள்.... மனிதன்  குறைந்தபட்ச நிலமே உலகம் என் நம்பிக்கொண்டு இருக்கிறான். அப்படியில்லாத பெரும்பகுதியான நீர்பகுதியில் ஏன் இன்னொரு உலகம் இருக்ககூடாது என்பதை கற்பனை செய்யமறுத்துவிட்டான் என்பதுக்கான பதில்தான் இது. நீர்பகுதியில் நிலப்பகுதியில் வாழ்வதைவிட ஒருபெரிய உலகம் இயங்குகிறது. நம்மைபொருத்தவரை வெறும் மீன்களும், வேறுசில உயிரனங்களும்தான்  நீர் உலகம் எனநம்புகிறோம். அது இல்லாத ஒருபெரிய வாழ்வு ஒன்று உள்ளே நமக்கு தெரியாமல் நடக்கிறது. அப்படிபட்ட ஒன்றுதான் இந்தஉயிர். இதுவரை இந்தபூமி பார்த்திராத ஒரு உயிர் அதுவும் இதேபூமியில். மனிதனின் ஆராய்ச்சி வேற்றுகிரகதுக்கு சென்றாலும் தனது கிரகத்தில் இருக்கும் ஒருபெரிய உயிரின் வாழ்க்கையையே காணமுடியாதவனாக தோற்றுபோய் இருக்கிறான். இதைகண்டு பிடித்தவர்கள் சில ஆராய்ச்சிகள் செய்வதின்மூலம் அந்த உலகம் சம்பந்தமாக தெளிவுகள் பெறலாம். 

எச்சரிக்கை : இந்த ஒரு உயிரனத்தை பிடிக்க நாங்கள் அப்போது பலஉயிர்களை பலிகொடுதோம்.நம்மைவிட எல்லாவிதத்திலும் மிகுந்த சக்திவாய்ந்தவைகள் ஆராய்ச்சியில் கவனம் இருக்கட்டும்.

படித்து முடித்தபோது அனைவரின் கண்களிலும் பயமிருந்தது.

   புனி அந்தஉடலில் பல்வேறு இடங்களிருந்து திசுக்களை சேகரித்தாள். கணேஷ் அந்தகடிதத்தை அங்கிருந்த அதிகாரிகளிடம் கொடுத்துவிட்டு மௌனமாக வெளியேறினான். அங்கு இதுவரை நடந்தவை எல்லாம் ஒரு நம்பமுடியாத கனவுபோல இருந்தாலும் இன்னும் கொஞ்சநாளில் புனியின் ஆராயச்சியில் இருந்து இந்த உலகம் ஒருபுதிய முடிவை சந்திக்கபோவதில் உறுதியாக இருந்தான்.  

  
                                             

சிறு சிறு - 5


  
கொஞ்ச நேர மௌனத்தை அவளது அந்த கேள்வி களைத்தது...

“கணேஷ், நமது காதல் உண்மையானதா என்ன?

“ஏன் திடிர்னு உனக்கு இந்த சந்தேகம்? என்றேன் சிரித்தபடி

“இல்லை சும்மாதான்கேட்டேன் கேட்கனும்போல இருந்துச்சி” என்றாள்

“சரி நீ சொல்லு உண்மையானதா இல்லையான்னு?

“அதைவிடு காதல்னா என்னன்னு நினைக்கிறே நீ முதல்ல?“ கேட்டாள்

  “என்ன நினைக்கிறது எல்லாம் உணர்ச்சிகள் சம்பந்தபட்டதுதான் என்று பொதுவாக சொல்லி முடித்தேன்.

  முறைத்து பார்த்தவள் "நான் கேட்ட கேள்விக்கு நீ சொன்னது என்ன பதிலா?

“பின்னே?

“ஒழுங்கா சொல்லு

   “சரி காதல்ங்கிறது நான்கு பக்கமும் weld செஞ்ச திறக்க முடியாத ஒரு இரும்பு பெட்டி மாதிரி. அதுக்குள்ளே என்ன இருக்குதுன்னு யாருக்குமே தெரியாது. ஆனா அதை நம்மதான் கற்பனை செஞ்சி அதுல இது இருக்குமோ அது இருக்குமோன்னு நினச்சி வாழ்ந்துகிட்டு இருக்கோம். சிலர் அதை அறிவுகொண்டு உடைக்காமலேயே உள்ளே அப்படி பெருசா ஒன்னுமில்லைன்னு விட்ருவாங்க. சிலர் அதுக்குள்ள ஏதோ இருக்குன்னு உணர்ச்சிகளை வளத்துக்கிட்டு அதை உடைக்க முயலுவாங்க. அப்புறம்தான் தெரியும் அதுல ஒன்னுமே இல்லைன்னு ஏன இதை உடைக்க இவ்வளவு கஷ்ட்டப்பட்டோம்னு  யோசிப்பாங்க

  “அடப்பாவி என்ன இப்படி சொல்ற அப்ப நம்ம காதலும் இதுல அடங்குமா?

“பின்னே எல்லாம்தான்

“உன்னைபோய் காதலிக்கிறேன் பார் என்னை சொல்லணும்

“சரி சொல்லு நீ என்ன நினைக்கிறே?

   “நான் என்ன நினைக்க ...மனுசங்க மனசுங்கிறது நீ சொன்ன மாதிரி திறக்க முடியாத அல்லது  என்ன இருக்குன்னு அறிய முடியாத ஒரு பெட்டி மாதிரி ஆனா அது தனக்கு பிடிச்ச ஒரு மனசோடு சேரும்போது தன்னாலேயே திறந்துக்கும்.  அந்த இன்னொரு மனசுதான் தனக்கு உலகத்துல சொந்தம்கிற மாதிரி அதுகிட்ட வெளிப்படையா இருக்கும். அதுகூட அன்பு,சண்டை,காமம என தனக்கு  பிடிச்ச எல்லா விசயத்தையும் பகிர்ந்துக்கும் அதுவும் வாழக்கை முழுதும். இதுக்கு பேருதான் காதல் என்னை பொறுத்த வரைக்கும்

“அய் இது நல்லா இருக்கே” என்றேன்

“உனக்கு எங்க புரிய போகுது இதெல்லாம்.. நீ சொன்ன பாரு விளக்கம் காதலுக்கு

   “நான் என்ன தப்பு பண்ணேன்.. நீ சொன்னதைத்தான் செஞ்சேன். காதல்னா மனசு வெளிப்படையா இருக்கணும்னு சொன்னே .. அதான் நீ கேட்டதும் காதலை பத்தி நான் நினைச்சதை அப்படியே சொல்லிட்டேன் இப்ப நீ கோபபடுறே. அப்ப நீ சொன்னது தப்புதானே? என்றேன்

“நீ திருந்தவே மட்டே.... “என்று அடிக்க வந்தாள்

                       ******************


“அவங்களை முழுதும்  படிக்க எவ்வளவு நேரம் ஆகும்?

“குறைஞ்சது ஐந்து நிமிடம்.... ரெம்ப எளிதாகத்தான் இருக்கிறது

    “ம் சரி அதை வச்சி அவங்க மூளையில  நமக்கு தேவையான மாற்றம் கொண்டுவர?

  “அதுக்கு கொஞ்சம் நேரம் ஆகும் என்னென்ன மாற்றம் கொண்டுவரணும்னு சொல்லிடுங்க

    “வேறென்ன நமக்கு கிழே வேலை செய்ய ஒரு அடிமை வர்க்கம் வேணும் அவ்வளவுதான். நாம் சொல்வதை தவிர வேற எதையும் யோசிச்சு செய்ய கூடாது.அப்படியே யோசிச்சாலும் அது நம்ம சொல்லி கொடுத்ததாக இருக்கணும். இதை மட்டும் இப்போது செய் போதும்

   “சரி செஞ்சி முடிச்சிட்டு   சொல்றேன். ஆனா இதுக்காக இவ்வளவு ஆபத்தான காரியங்களை ஏன் நாம செய்யணும். நம்மகிட்ட இருக்கிற தொழில்நுட்பத்தை வச்சி செயற்கையா உருவாக்கலாமே?

    “அது அவ்வளவு எளிது இல்லை ஆபத்து அதிகம் கொஞ்சம் பிச்ங்கினாலும் நாம் அழிந்தோம். ஆனால் இவர்கள் நம்மை விட கீழானவர்கள் என்ன முயற்சி செய்தாலும் நம்மை வெல்ல முடியாது சொன்னதை செய் என்று சொல்லி விட்டு அது நகர்ந்தது.

   அங்கு இரண்டு மனித உடல்கள் மயக்க நிலையில் கிடத்தப்பட்டு இருக்க அதன் அருகில் சில உருவங்கள் எதையோ ஆராய்ந்து கொண்டு இருந்தன. மனிதர்களின் ஜீனோமை துளைத்து என்னென்ன இயக்கங்கள் எந்த கட்டளையின் பெயரில் எப்படி நடக்கின்ற என்ற எல்லா தகவல்களும் கிடைக்க பெற்றன. அடுத்த வேலை  அதுக்கேற்ப மூளையில் கட்டளை கொடுக்கும் விசயத்தை மாற்றுவதுதான்.

   எல்லோரும் காத்து இருந்தார்கள். முதலில் அந்த ஒரு மனித உடல் மட்டும் மெல்ல அசைந்து எழுந்து உட்கார்ந்தது..

  “இப்போது நான் என்ன செய்ய வேண்டும் எனக்கான கட்டளை என்ன? என்று கேட்க       

  “அதோ அங்கு படுத்திருக்கும் அந்த உருவத்தை எழுப்பு என்ற கட்டளை கொடுக்க அதுபோய்  எழுப்ப தொடங்கி இருந்தது.

   அங்கு கூடியிருந்தவர்களுக்கு சந்தோசம். .."ஆனால் ஒரு பிரச்சினை இப்போதைக்கு இரண்டு மனிதர்கள்தான் நம்மால் கொண்டுவர முடிந்தது ஆனால் நமக்கு நிறையா தேவை. நாம் பூமிக்கு நேரடியாக சென்று மனிதர்களை கொண்டுவருவது என்பது முடியாத காரியம் அவர்கள் நம்மை அழித்து விடுவார்கள் வேறு எதாவது யோசியுங்கள் என்றது ஒன்று

   “அதுக்கு என்கிட்டே ஒரு யோசனை இருக்கு.... என்ற குரல் அந்த கூட்டதில் இருந்துவர அது முன்னாடி வந்தது.

“சொல்லு என்ன அது?

    “நான் போன முறை பூமிக்கு மனிதர்களை பிடிக்க போய் இருந்த போது அவர்களிடத்தில் ஒரு வினோத பழக்கம் இருப்பதை பார்த்தேன். கடவுள் என்ற நமபிகையில் இதுவரை கண்டிராத ஒன்றை அதிகமா நம்புகிறார்கள்.அதோடு இல்லாமல் என்றாவது ஒருநாள அவர் அவதரிப்பார் நம்மை சொர்க்கத்துக்கு  அழைத்து செல்வார் இந்த மாதிரி நிறையா விசயங்ககளை நம்புகிறார்கள். நான் சொல்ல வருவது நாம் ஏன் அவர்களின் கடவுளாக மாறி சொர்க்கமான நமது கிரகத்துக்கு கூட்டி வந்துவிடகூடாது. உறுதியாக சொல்லுவேன் இந்த விசயத்தில் அவர்கள் அதிகம் யோசிக்க மாட்டார்கள் வந்துவிடுவார்கள் என்று முடித்த போது அவர்களிடத்தில் ஆச்சர்யம். அதுக்கு தயார் செய்தார்கள்

பூமி அதி சீக்கிரம் ஒரு கடவுளின் வருகைக்காக காத்திருந்தது.  

                                                 *******************


   அந்த விண்கலத்தில் என்னோடு இருந்த புனி கத்தியேவிட்டாள் காரணம் எங்கள் கண் முன் விரிந்த அந்த புதிய கிரகத்தில் மேல்பரப்பில் தெரிந்த தண்ணீர் பரப்புதான். நாங்கள் மேற்கொண்ட பயணமே பூமியை போல உயிர்வாழ தேவையான சூழ்நிலையில் இருக்கும் கிரகங்களை கண்டறிந்து பூமிக்கு சொல்வதே. மெதுவாக விண்கலத்தை தரையிறக்கிவிட்டு உள்ளே இருந்து கொண்டே வெளிப்புற சீதோசன நிலையை ஆராய்ந்து பார்த்ததில் சரியான வெப்ப நிலை உட்பட போதுமான பிராணவாயு காற்றில் இருந்தது. கொஞ்சம் ஈர்ப்புவிசை அதிகமாக இருந்தது. நடக்க சிரம படலாம் போல தோன்றியது. இருந்தும் முக சுவாசம்  அணிந்தே வெளியில் வந்தோம்

.  மீண்டும் ஒருமுறை வெளியில் சோதித்த பிறகே அந்த கிரகத்தின் காற்றை சுவாசித்தோம். மாற்றம் இல்லை. நடக்க முயன்ற போது காலை எடுத்து வைக்க அதிக சக்தி தேவையானதை உணர்ந்தோம்.

“கணேஷ் உடனே பூமிக்கு சொல்லிடலாம்

“இல்லை வேண்டாம் இப்ப சொல்லாதே

   “எதுக்கு? அவர்கள் ஏன் ஒரே இடத்தில் நிற்கிறது என்று கேள்விகள் கேட்க ஆரம்பித்து விட்டால்?

   “எதாவது வேறு பொய் சொல்லி சமாளிக்கலாம் என்றேன் தூரத்தில் நிறைந்து இருந்த தண்ணீரை பார்த்தபடியே

“ஏன் இப்படி சொல்றே நீ ?

“உனக்கும் எனக்கும் தனிமை ரெம்ப பிடிக்கும்தானே?

“ஆமா அதுக்கு?

   “உணவு காலியாகும்வரை இங்கே இருப்போமே எனக்கு இந்த தனிமையில் உன்னோடு இருக்கணும்னு போல தோணுது புனி என்றேன்

அவள் ஏதும் பதில் சொல்லாமல் நான் பார்த்த திசையே பாத்தாள்...

   “ஏன் உனக்கு இருக்க  பிடிக்கலியா என்ன? அப்படின்னா போய் பூமிக்கு தகவல்கொடு என்றேன்

    அவள் விண்கலம் நோக்கி செல்லாமல் என்னருகில் வந்து கையை பிடித்துக்கொண்டு "எனக்கும்" என்றால் வெட்கத்தோடு

“இந்த புதிய கிரகத்தில் முதல் சட்டம் ஒன்றை பிறப்பிக்கிறேன் என்றேன்

“என்ன அது? என்றால் ஆர்வமாக

   “இருவருக்கும் வெட்கம் என்பதே இருக்க கூடாது சரியா எங்கே வெட்கத்தை விட்டு கேட்கிறேன் "ஒன்று" கொடு பார்ப்போம்

   நான் எதுக்கு இந்த சட்டத்தை சொன்னேன் என்பதை உணர்ந்தவள் வெட்கத்தை தவிர்க்க முடியாமல் ஒன்று கொடுத்தாள்

   இது செல்லாது இந்த கிரகத்தின் சட்டபடி வெட்கம் இல்லமா இருக்கணும்  என்று  சொல்ல அவளால் வெட்கத்தை விட நெடுநேரம் ஆகியது..

   தோளில் சாய்ந்த படி கொஞ்ச தூரம் நடந்து இருந்த போது அந்த சத்தம் கேட்டது அது நாங்கள் நிறுத்தி வைத்து இருந்த விண்கலத்தின் திசையில் இருந்து வர நாங்கள் திரும்பும்போது அது மேலே எழும்பியிருந்த்து.

    அப்போதுதான் நினைவுக்கு வந்தது அது Auto mode ல் இருந்தது. அதாவது எங்களுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்ப்பட்டு  இயக்க முடியாமல் போய் நின்றுவிட்டால் குறிப்பிட்ட நேரத்தில் பாதுக்காப்பு கருதி அது தானாகவே பூமியை சென்றடைந்து விடும். அது எம்பி பறந்ததை பார்த்த புனி அதை நோக்கி ஓட முயன்று முடியாமல் கிழே விழுந்தாள்.

அது கண்ணை விட்டு மெல்ல மெல்ல மறைந்து கொண்டு இருந்தது. 
      

சில விசயங்கள் - 10

Extraordinary claims require extraordinary evidence    - carl sagan
      எங்கு பார்த்தாலும் இதே பேச்சுதான். பொதுவாக அறிவியலில் புதியதாக என்ன இருக்கிறது என்பதை கொஞ்ச நேரமாவது தேடி பார்ப்பது வழக்கம். கடந்த சில நாட்களாக தேடும்போது கட்டாயமாக கண்ணில் படுவது இந்த விசயம்தான். ஒளியை விட வேகமாக பயணிக்கும் ஒரு particle புதியதாக கண்டுபிடிக்கப்பட்டதான செய்தி.

     இந்த அறிவியலின் கண்டுபிடிப்பு உண்மையாக இருந்தால் கண்டிப்பாக அறிவியல் வரலாற்றில் மிக முக்கியமான கட்டம்தான். இருந்தாலும் இதைவைத்து பலரும் ஐன்ஸ்டீன் ஐ வம்புக்கு இழுப்பதுதான் வியப்பாக இருக்கிறது.

     ஏதோ இந்த கண்டுபிடிப்பின் மூலம் இதுவரை சரியென நம்பிக்கொண்டு இருந்த நிரூபிக்கப்பட்ட ஐன்ஸ்டீன் தத்துவங்கள் எல்லாமே ஒரு நொடியில் விழுந்து விட்டதாக பேசுபவர்களை பார்த்தால் கோபம்தான் வருகிறது. அப்படியே இது உண்மையாக இருந்தாலும் சொல்லக்கூடிய பெரிய மாற்றம் ஒன்றும் சார்பியல் தத்துவத்தில் வராது.  இது ஒரு பக்கம் புதிய ஆராய்ச்சிகளுக்கு வழிவகுக்குமே தவிர ஏற்கனவே இருக்கும் அறிவியல் விதிகளை அவ்வளவாக மாற்றிப் போடாது என்பதே அறிவியலரின் கருத்து.

      என்னதான் நடந்தது .. supernova  என ஒரு சமாசாரம் இருக்கிறது. அதாவது நட்சத்திரங்கள் அகால மரணம் எனலாம். நட்சத்திர இறப்பு என்பது அது தனது சுற்றுவட்டத்தில் பல பகுதிகளாக எரிந்துகொண்டு இருக்கும் எரிபொருள் தீரும்போது அதன் வெளிப்புற ஈர்ப்பு விசை குறைந்து மத்திய கருவில் உள்ள அதிக ஈர்ப்பு விசையின் காரணமாக எல்லாமே கருவில் சென்று விழுந்து நொறுங்கி வெடித்து சிதறும்
.
     இப்படி வெடித்து சிதறும் போது அந்த நட்சத்திரத்தின் பருமனை (mass) ஐ வைத்து  இறப்பு எப்படி என்று பிரிப்பார்கள். அதிகபட்ச நிறை கொண்ட நட்சத்திரம் மிகுந்த ஆற்றலோடு வெடித்து சிதறுவதை supernova என்பார்கள். அதைவிட கொஞ்சம் குறைந்த நிறை கொண்ட நட்சத்திரம் என்றால் nova. இப்படி நடக்கும் supernova வெடிப்பின் போது கிட்டதட்ட 30000 km/s அளவில் அதனுள் இருந்த அணுக்கள் மற்ற பொருள்கள் எல்லாம் தூக்கி எறியப்படும். இதில் இருந்து பலவிதமான ஒளிக்கற்றைகள் உட்பட elementary particle என அனைத்தும் அதற்கான நேர இடைவெளியில் வெளிவரும்.

     நமது கலாக்ஸ்யில் ஒரு supernova 1987 ஆம் ஆண்டு நடந்தது. இது அறிவியல் ஆர்வலர்களுக்கு மிக முக்கியமானதும்கூட. இதை வெறும் கண்ணால் கூட பார்க்க முடிந்தது என்கிறார்கள். எனது துரதிஷ்டம் இது நடந்த ஒரு வருசம் முன்னாடிதான் நான் பிறந்தேன்.

     அப்படி இது வெடித்து சிதறும் போது பல ஆராய்ச்சிகள் செய்ய தயராக பூமியில் எல்லா நாட்டு அறிவியலர்களும் காத்து இருந்தனர். இங்கு நமக்கு தேவையான கண்டுபிடிப்பான neutrino பற்றி மற்றும் பார்ப்போம்.

     ஜப்பானில் Super-Kamiokande ( Super-Kamioka Nucleon Decay Experiments) என்ற detector தான். இதன் மற்ற முக்கியமான பணிகளோடு  வளிமண்டலத்தில் உள்ள neutrino களை அறிவதோடு supernova கள் நடக்கும்போது வெளிப்படும் neutrino களையும் இது போன்ற மற்ற துகள்களையும் கண்டுபிடிக்க உருவாக்கபட்டது
.
     அந்த மிக பெரிய supernova நிகழ்ந்த போது வெளிப்பட்ட neutrino வை கண்டுபிடித்து உணர்த்தியதுக்காக  Koshiba வுக்கு நோபல் பரிசு கிடைத்தது என்பது குறிப்பிட தக்கது. இதற்கு முன் இந்த துகள்கள் கண்டுபிடிக்கப்பட்டு இருந்தாலும் இந்த detector கொண்டு அறிந்த போது மற்றொரு புதிய பிரச்சினையும் வந்தது.

     அதாவது வெடிப்பு நிகழ்ந்த போது  ஒளி வந்து சேர்வதற்கான மூன்று மணி நேரம் முன்னாடியே இந்த nutrino வந்து சேர்ந்ததாகவும் அதனால் இந்த துகள்கள் ஒளியை விட அதாவது போட்டன் துகள்களை விட வேகமாக பயணிக்கும் தன்மை கொண்டவை என்று சொன்னார்கள்.

      ஆனால் அது தவறு என்று நிரூபிக்கபட்டது. அறிவியலரின் கருத்துப்படி அப்படி முன்னாடி வருவதாக இருந்தால் இந்த துகள்கள் நான்கு வருடம் முன்னாடியே வந்து இருக்க வேண்டும் அப்படி வரவில்லை. அதுக்கு காரணமாக இந்த துகள்கள் supernova வின் போது முதலில் அதன் மத்திய கருபகுதிதான் அழுத்த மிகுதியால் வெடிக்கும். அதாவது அதன் சுற்றுவட்டப்குதிகள் கருவில் சென்று மோதுவதற்கு முன்னதான நேரம்
.
    அப்படி நட்சத்திர கருப்பகுதி வெடிக்கும்போது இந்த neutrino வெளிப்படும் ஆனால் அதன் வெளிப்பகுதிகளில் எரிந்து கொண்டிருக்கும் பொருள்கள் கருவோடு மோதி சிதரும்போதுதான் ஃபோட்டன் துகள்கள் அதிக வேகத்தில்  வெளிவரும். இதுதான் neutrino வேகமாக பூமியை வந்தது அடைந்ததுக்கான காரணமாக சொன்னார்கள். அதாவது நடச்சதிர இறப்பில் முதலில் அதன் கருப்பகுதிதான் சேதம் அடையும் அப்போது உருவாகி இந்த neutrino பயணித்து முதலில் வந்து இருக்கலாம் என்பது அறிவியலரின் கருத்து.

      இந்த neutrino 1930 கண்டுபிடிக்கபட்டதில் இருந்தே இதுக்கு mass இருக்கிறதா இல்லையா என்ற பிரச்சினை இருந்துவந்தது. காரணம் ஒளியின் வேகத்தில் பயணிக்கும் தன்மை கொண்டது என்பதால். அப்படி mass கொண்டதாக இருந்தால் அதனால் கண்டிப்பாக ஒளியின் வேகத்தில் பயணிக்க முடியாது. ஒருவேளை mass இல்லாததாக இருந்தால் கண்டிப்பாக அது ஒளியின் வேகத்தை எட்டவேண்டும். இந்த குழப்பம் நீடித்த நிலையில் 1950 ஆம் ஆண்டு கொஞ்சமும் அடுத்து 1998 ல் Super-Kamiokande   செய்த ஆராய்ச்சியில் இது mass உள்ள ஒரு துகள் என் உறுதி செய்யபட்டது.

      அடுத்துவந்த காலத்தில் (2007)  MINOS Main Injector Neutrino Oscillation Search neutrino ஒளிவேக பயணம் குறித்த ஆராய்ச்சி செய்யப்பட்டு அதில் நிகழ்ந்த அதிகமான கால பிழைகளால கைவிடப்பட்டது. முடிவாக இது ஒளியின் வேகத்தில் பயணிக்கும் தன்மை கொண்டது என்று மட்டும் சொல்லி முடித்தார்கள். அதை உறுதிபட சொல்ல அவர்களிடம் இருந்த தகவல்கள் சரியானதாக இல்லை என்பதே காரணம்.  (இதை கிழே உள்ள மற்ற இரண்டு விசயங்களை படிக்கும்வரை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்))

      அடுத்து ஐன்ஸ்டீன் தத்துவப்படி ஒளியை மிஞ்சும் வேகம் இல்லை. இதுவே அவரின் சில கண்டுபிடிப்புகளுக்கு ஆதாரமும் கூட. அதாவது எந்த ஒரு துகளும் போட்டான் துகளின் வேகத்திற்கு பயணிக்க முடியாது. ஏனென்றால் எவ்வளவு வேகமாக பயணிக்கிறதோ அந்த அளவு அதன் நிறைஅதிகரிப்பு ஏற்படும். அப்படி நிறை அதிகரித்தால் அது ஒளியின் வேக பயணத்திற்கு முயல இன்னும் அதிக ஆற்றல தேவைப்படும். இப்படி போய்கொண்டே இருந்தால் அதன் நிறை முடிவில்லா அளவில் போகும். அதாவது நிறை அதிகரிப்பு மற்றும் தேவைப்படும் அதிக ஆற்றல இவற்றால் அதனால் ஒருபோதும் ஒளியின் வேகத்தை எட்டவே முடியாது.  

       எனவே போட்டான் துகள் மட்டுமே அதிக வேக பயணிக்கும் தன்மை கொண்டது என்பதோடு இதன் அடிப்படையிலே அவரது e= mc2 என்ற ஒன்றும் உருவானது. இப்போது  ஒரு m (mass) அழித்தால் அது சரியாக mc2  என்ற அளவிலான ஆற்றலாக கிடைக்கும். அதாவது ஆற்றலும் பருமனும் வெவ்வேறு நிலையில் இருக்கும் ஒரே மாதிரியானவை என்பதே. ஒரு பருமனை c2 அளவிற்கு முடுக்கும்போது அது நமக்கு அதே அளவு ஆற்றலாக கிடைக்கும்.

      இங்கு ஒளியின் அளவை குறிப்பிட்டதுக்கு காரணம்  எந்த ஒரு ஆற்றல் விதிக்கும் அல்லது அதை விளக்கும் போது அங்கு கண்டிப்பாக வேகத்தை squre செய்தாக வேண்டும்.அதாவது எப்படி kinetic energy = 1/2mv^2 . அதே போல ஐன்ஸ்டின் தத்துவத்துக்கும் ஒரு வேகம் தேவை. அதனால் இருப்பதில் அதிக வேகமான ஒளியின் வேகத்தை எடுத்தார். அதாவது அதிகபட்ச பயண வேகம் என்பது இதோடு முடிந்து இதுக்கு மேல் வேகமாக பயணிக்க முடியாது என்ற நிலை. இதோடு இல்லாமல் அவரது சார்பியல் தத்துவத்தில் இந்த ஒளியின் பங்கு மிக முக்கியமான பங்கு வகித்து இருந்தது. எப்படி time dilation போன்ற விசயங்களில் ஒளியின் வேகம் அடிப்படையோ அதே மாதிரி. அதோடு.அவரது போட்டான் துகள்கள் பயணிக்கும் தன்மையை வைத்து அவரது ஆராய்ச்சிகள் என பெரிய கணித சமன்பாடுகள் இப்போது நமக்கு தேவையில்லை என்பதால் இதுமட்டும் போதும்.

 
      இந்நிலையில் இந்த சமன்பாட்டை வைத்து அணுக்கள் சம்பந்தப்பட்ட துறையில் பல ஆராய்ச்சிகள் உட்பட முன்னேற்றங்களும் செய்தாகிவிட்டது. இப்போது இதில் பிழை இருக்கிறது, ஒளியை மிஞ்சும் வேகம் இருக்கிறது என்கிறார்கள். அப்படி என்றால் அவர்கள் அதை நிருபித்ததோடு ஒளியின் வேகம் எல்லோருக்கும் சமமானது அதாவது அதை உணர்கிறவர் எந்த நிலையில் இருந்தாலும், குறிப்பிட்ட வேகத்தில் பயணித்தாலும் நிலையாக இருந்தாலும் சரி ஒளியின் வேகம் ஒரே அளவிலேயே இருக்கும் என்பதை தவறு என்று நிரூபிக்கலாம். ஏனென்றால் ஒளியைவிட வேகமான அந்த துகளே இந்த நிலையில் இருக்க வேண்டும்
.    
       எப்படியோ பல ஆண்டுகளாக அறிவியலில் பெரும்பங்கை வகித்த ஒன்றை தவறு என்று பொத்தாம்பொதுவாக சொல்வதற்கு முன்  பலமுறை ஆராய்ச்சிகள் செய்திருக்க வேண்டும். ஏனெனில் இதன் தொடக்கத்தில் carl sagan சொன்னதை ஒருதடவை படித்து கொள்ளுங்கள்.
  
      அண்மையில் CERN ல் நடைபெற்ற ஒரு ஆராய்ச்சியின்படி அவர்கள் பயணிக்க செய்த neutrino எனும் துகள் ஒளியை விட வேகமாக பயணித்தது என ஒரு அறிக்கை வெளியிட்டார்கள். அதாவது அவர்களது ஆராய்ச்சியின் (என்ன ஆராய்ச்சி என்று எல்லோர்க்கும் தெரிந்து இருக்கும்) முடிவில் முடிக்கிவிடபட்ட neutrino துகள் ஒளியை விட 1.000025 அளவு வேகமாக பயணித்ததாக முடிவு செய்தார்கள்.

    பெரும் அறிவியலர்கள் இதன்மீது இன்னும் பல ஆராய்ச்சிகள் தேவை என் அறிவித்திருக்கும் நிலையில் அதையும் செய்யும் பணியில் இருக்கிறார்கள். தவறுகள் அதிகம் நேர்ந்து இருக்கலாம் என்று எண்ணுவது அவர்கள் பின்பற்றிய கால அளவுகளை கணக்கிட்ட முறையில்தான். அவர்கள் பயன்படுத்திய GPS முறையில் இங்கு இருந்து தகவல் செயற்கை கோள்களுக்கு செல்லும்போது அங்கு இருந்து வருகிறபோதும் ஈர்ப்பு விசை மற்ற காரணிகளால் பாதிக்கபட்டு இருக்கலாம். என்பதே. இது அதிக அளவு இல்லை என்றாலும் அவர்கள் சொல்லியிருக்கும் நானோ செகண்ட் அளவு துள்ளியத்தில் பாத்தால் தவறுகள் இருக்க வாய்ப்பு இருப்பதாக சொல்கிறார்கள்.
 
    பார்ப்போம். ஆராய்ச்சிகளின் முடிவில் இது சரியென நிரூபிக்கபட்டால்  கண்டிப்பாக அறிவியல் வரலாற்றில் ஒரு முக்கியமான தருணம். அதோடு இதுவரை நாம் பயன்படுத்தி வரும் விதிகளில் சில மாற்றங்கள் கொண்டு வந்தது அந்த துகளை வைத்து புதிய ஆராய்ச்சிகளோடு அறிவியல் தொடரும். அடுத்த ஒரு வேகமான பயணிக்கும் துகள் கண்டுபிடிக்கும் வரை..
                                                 ******************
     உண்மையாக இல்லாமல் வெறும் கற்பனையாக எழுதும் கதைகள் அப்படியே  நடந்துவிடும் என்று சுஜாதா சொல்லுவார். பெரும்பாலும் அறிவியல் புனைவுகள் உட்பட பல அவர் எழுதிய கதைகள் எல்லாமே முழுதும் கற்பனைதான். எந்த அர்த்தத்தில் சொன்னாரோ தெரியலை ஆனால் அப்படி நடக்க வாய்ப்பு இல்லாவிட்டாலும் எங்காவது நடக்கும் விசயங்களை நாம் எழுதியதோடு கொஞ்சம் ஒத்துபோனால் சட்டை காலரை தூக்கி விட்டுகொள்ளலாம்.

   இந்த விசயத்தில் நான் புனைவுகள் என்ற பெயரில் எழுதிய எல்லாமே முழுதும் கற்பனையானவையே. இது எல்லாம் அப்படியே நடக்க நேர்ந்தால் பிரச்சினைதான். ஒருவகையில் எப்போதுமே முழுதும் கற்பனையை வைத்து மட்டும் கதை எழுதுவது என்பது முடியாத காரியம். சொந்த வாழ்க்கை அனுபவங்கள் இழப்புகள் பெற்றவைகள் என்  கண்டிப்பாக நமது எழுத்துக்களில் வந்தே தீரும். அந்த வகையில் நான் எழுதிய புனைவுகள் இல்லாத கதைகளை சேர்க்கலாம்.

    எந்த விதமான கதைகளாக இருந்தாலும் அதில் கண்டிப்பாக  கருவோடு சேர்ந்த நல்ல நடை இருந்தாக வேண்டும். பொதுவாக அறிவியல் புனைவு வகைகைகளில் கொஞ்சம் மாறும் இதில் சொல்லும் அறிவியல சார்ந்த விசயங்களின் மீது படிப்பவர்களின் ஆர்வம் அதிகமாக இருக்கும். அதாவது அறிவியலை எப்படி வித்தியாசமாக கற்பனை செய்து கதைக்கு அல்லது கதையோடு சேர்க்கிறோம் என்பதுதான் முக்கியம். கதையின் கரு முக்கியமானதாக இல்லாவிட்டாலும் நல்ல அறிவியல் சார்ந்த கற்பனை இருந்தாலே போதும் என நினைக்கறேன் ரசிப்பார்கள். நான் இந்த ரகம்தான். பொதுவாக Michael Crichton  எழுதிய கதைகள் என்றால் கதையில் மனம் செல்லாது. கதையில் அவர் அறிவியலை எப்படி வித்தியாசமாக பயன்படுத்தி இருக்கிறார் என்பதையே அறிய முயலுவேன்.

   பல கதைகளை அந்த வகையில் முயன்றாலும் பல பேர் கற்பனை நல்லா இருக்கிறது என்று மட்டும் கருத்து சொல்லிவிட்டு போய்விடுவார்கள். இங்கு பல பேர் என்பது இரண்டு அல்லது மூன்று பேர் மட்டுமே. எப்படி வரலாறு காணாத கூட்டம் என்றால் மைக காரரோடு சேர்த்து மொத்தம் ஆறு பேர் என்று சுஜாதா சொல்வது போல் என்கதைக்கும் பல பேர் என்றால் வெறும் மூன்றில் இருந்து நான்கு பேர் மட்டுமே. ஏன் அவர்களால் அதைத்தவிர வேறொன்றையும் விமர்சிக்க முடியவில்லை என்பது அவர்களுக்கே தெரிந்த ஒன்று.

   ஆனால் அண்மையில் ஒரு பெண்பதிவர் தனது முதல் கதை என்ற குறிப்போடு கதை ஒன்றை எழுதியிருந்தார். என் நினைவில் இருந்தவரை சரியான பத்தி அமைப்பு இருந்ததாக இல்லை. ஆனால் அந்த பதிவரை பின்னுட்ட கருத்து மழையில் நனைத்து இருந்தார்கள். பிரபல பதிவர்கள் என்றழைக்கபடும் பதிவர்கள் உட்பட புகழ்ந்து தள்ளியிருந்தர்கள்.
இது உங்கள் முதல் கதை போலவே இல்லை, அருமையான எழுத்து நடை என் தொடரும் பின்னுட்டங்காளால் அந்த பதிவர் பதில் சொல்ல முடியாமல் தததளித்தே விட்டார்.. நானும் கதையை படித்து விட்டு கதை எங்கே என தேடிவிட்டு வந்தேன்.   

    உனக்கு ஏன் இந்த பொறாமை என்று கேட்டால் கட்டாயம் இல்லை.  இதை நான் பதிவெழுத ஆரம்பித்த தொடக்கத்தில் எழுதியிருந்தால் பொறாமை வகையில் சேர்க்க வாய்ப்பிருக்கிறது. சத்தம் இல்லாமல் நிறையா பேர் அருமையாக எழுதுகிறார்கள். அவர்கள் எழுத்து எனக்கு பிடித்திருக்கிறது. ஆனால் அங்கு நான் சொன்ன பல(சில) பேர்களே கருத்துக்கள் சொல்கிறார்கள். ஏனென்று தெரியவில்லை. திருந்தினால் தேவலை