இதுவரை ~ இனி....

   இதுவரை  ......

     இப்போதுதான் தொடங்கியதுபோல இருக்கிறது  வருடம் ஆனால் இன்றோடு முடிந்து புதிய வருடம் பிறக்க போகிறது. இந்த வருட தொடக்கம் என்று இல்லை எந்த வருட தொடக்கத்திலும் பொதுவாக எடுத்துகொள்ளும் உறுதிமொழிகள் எல்லாம் எடுக்கும் பழக்கம் இதுவரை இல்லை.எங்காவது தேதி எழுதும்போது வருடம் கொஞ்ச நாளைக்கு நினைவு இருந்தாலே போதும். மற்றபடி எல்லா நாலும் நன்னாலே.

    ஆனால் பொதுவாக எல்லோரும் புது வருடம் பிறக்கப்போகிறது என்பதுடன் அதோடு சில மாற்றங்களையும் எதிபார்ப்பது வழக்கம்தான். நான் இன்றையில் இருந்து இதை செய்வேன், அதை செய்ய மாட்டேன் இந்த மாதிரி. உணமையில் இப்படி செய்பவர்களில் 98% பேர் வெற்றி பெருவதில்லைதான். காரணம் பழக்கவழக்கம்  உடனே ஒரு புதியவருடத்திற்காக மாறிவிடுவது இல்லை என்பதே. மாற்றம் வேண்டுமானால் அதை இன்றுகூட வரவைக்கலாம்.

    சரி இந்த வருடம் எனது வலைப்பூ வாழ்க்கை எப்படி என்றால் சென்ற வருடம் போல இல்லைதான். ஆனால் சில முக்கியமான விஷயங்கள் நடந்தேறியது. கதைகளை தொகுத்து மின்புத்தமாக வெளியிட்டது, உருப்படியாக சில கதைகளை எழுதி திருப்தி அடைந்தது இந்த மாதிரி. வழக்கமான "என் கதையை படித்துவிட்டு கருத்துகள் சொல்ல மறுக்கிறார்கள்" என்ற புலம்பளோடு இந்த வருடமும் நிறைவடைகிறது.

   ஆனால் சொந்த வாழ்க்கையில் நிறையா மாற்றங்கள் எல்லாமே சந்தோசமானைவைகள் ஒரு சில தவிர்த்து. புதுவீடு கட்டியது, நல்ல நிறுவனத்தில் வேலை கிடைத்தது, ஒரே ஒருமுறை லேசான கால்வலிக்கு மருத்துவமனை சென்றது போன்ற பல சந்தோசங்கள பல நிறைந்தே இருந்தது. பொதுவாக எதுக்கும் பெரியதாக அலட்டிகொள்வதில்லை என்பதாலோ என்னவோ எதையுமே பெரிய விசயமாக எடுத்துக்கொண்டு வருத்தபடுவதிலை. காரணம் எதுக்குமே தீர்வு நம்மிடம இருந்தே வெளிப்பட வேண்டும் கட்டாயம் வெளிப்படும் எனக்காக கடவுளோ மற்றவர்களோ உதவி செய்வார்கள் என்று நினைக்கும்போதுதான் கொஞ்சம் எதிர்பார்ப்புகள் அதிகமாகி ஏமாற்றம் போன்ற பிரச்சினைகள் வருகிறது.


    அனேகமாக பிரச்சினைகள் வந்து இருந்தாலும் எனக்கும்சரி எல்லோர்க்குமே பொதுவான ஒரு விசயம் பிரச்சினைகள் இரண்டு விதம்  இயற்கையானவை அல்லது நம்மால் மற்றும் சகமனிதனால் நமக்கு வருபவை. முதல் வகையில் நோய் நொடிகளை சேர்த்து கொள்ளலாம். தகுந்த மருத்துவ உதவியை நாடினால் அதுவும் சுபமே. ஆனால் பெரிதும் பாதிக்கபடுவது மனிதனால் மனிதனுக்கு வரும் பிரச்சினைகள்.இதில் விஷயம் என்னவென்றால் நமக்குள்ளே பிரச்சினைகள் செய்துகொண்டு அதை தீர்க்க இல்லாத எல்லாம்வல்ல இறைவனை நாடுவதே.

      இந்த வகையான பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வுதான். முடிந்தவரை மற்றவர்களிடத்தில் அன்பாக மனித நேயத்துடன் நடந்து கொள்ளுங்கள். இப்படி செய்தாலே உலகத்தில் பாதி பிரச்சினைகள் முடிந்துவிடும்.சந்தேகம் என்றால் தனியாக உட்கார்ந்து உங்களுக்கு இருக்கும் பிரச்சினைகளை வரிசையாக எழுதுங்கள் அதில் எத்தனை உங்களது எதிரிகள் என்று கருதப்படும் நபர்களால் அல்லது வேலை செய்யும் இடத்தில இருந்து வருகிறது என்று பாருங்கள்.

     இதை சரி செய்வதில் இருக்கும் பெரும் பிரச்சினை "சரி நான் மற்றவர்களிடத்தில் நல்லவிதத்தில் நடந்து கொள்கிறேன் ஆனால் மற்றவர்கள் ஏன் என்னிடத்தில் அப்படி இல்லை" என்று யோசிப்பதே. இதுதான் மாறுகின்ற ஒவ்வொரு மனிதனுக்கும் முட்டுக்கட்டை. அவளும் குப்பையை தெருவில்தான் கொட்டுகிறாள் நானும் அங்குதான் கொட்டுவேன் என்பவர்கள்தான் அதிகம் இருப்பார்கள்.  ஆனால் இப்படி இருப்பதில் ஒரே லாபம் மனதிருப்தி நான் நல்லவிதமாக இருக்கிறேன் என்ற திருப்தி மட்டும் மிஞ்சும். சிலருக்கு இது போதுமானதாக இருக்கும்.


    என்னைபொருத்தவரையில் அடித்து பிடித்து பணம் சம்பாரித்து பெரிய ஆளாக வரவேண்டும் என்பதில்லை. அன்றாடம் வாழ்க்கைக்கு போதுமானதாக இருந்து வாழ்க்கை சுபமாக கழிந்தாலே போதும்தான். வாழ்க்கையை வாழவேண்டும் அதுவும் அதன் போக்கிலேயே கட்டாயமாக இழுத்துக்கொண்டு திரியதேவை இல்லை. போதுமானவரை அன்போடு பழகி வருகின்ற வருடத்தில் பிறரிடம் இருந்து பிரச்சினைகள் வந்தாலும்கூட நம்மால் நமக்கு எதுவும் வராமல் பார்த்துகொண்டு வருடத்தை இனிதாக களிப்போம்.


   அதோடு இந்த வருடத்தில் சில விசயங்கள் "ஏன் இப்படி?" என்றிருந்தது. அதில் போனவருடமும் இந்தவருடமும் பொதுவாக இருப்பது என்னதான் கொட்டகொட்ட முழித்து படித்து கதைகளில் அறிவியல் சேர்த்து எழுதினாலும் படிக்க மாட்டிக்கிறார்கள் அதோடு ஒரு படம் சில வரிகள் கவிதை என்ற பெயரில் எழுதுவதையும், விழிப்புணர்வு பதிவு என்ற பெயரில் எழுதும் எழுத்துக்களைத்தான் ரசிக்கிறார்கள். என்ன காரணம் இதுவரை புரியாத ஒன்று. கொடுமை என்னவென்றால் இந்த விழிப்புணர்வு பதிவுதான் என்ன சொல்ல...எல்லாமே பொதுவான ஜனங்களுக்கு தெரிந்த விசயம்தான் அல்லது செய்திகளில் நாளிதழ்களில் வந்த விசயத்தை தனது கருத்தையும் நான்கு வரிகளாக சேர்த்து எழுதுகிறார்கள். கட்டாயம் இணையம் வந்து பதிவுகளை படிப்பவர்கள் செய்திகளை அறிந்து கொள்ளாமல் தூங்குவார்கள் என்பது போலதான் இருக்கும் அவர்களது எழுத்து.    அடுத்து கோபம்வரும் விசயம் என்னவென்றால் இதை சொல்லும்முன் THE GRAND DESIGN புத்தகத்தில் படித்த ஒரு விசயத்தை சொல்கிறேன்.மத்திய ஆப்ரிக்காவில் வாழும் BOSHONGO இன மக்களிடையே ஒருகதை பழக்கத்தில் உண்டு.  தொடக்கத்தில் வெறுமனே மூன்று விசயங்கள்தான் இந்த பிரபஞ்சத்தில் இருந்ததாம். இருட்டு,தண்ணி, BUMBA எனும்  கடவுள். ஒருநாள் அந்த கடவுள் அதிக வயிற்றுவலி வர வாந்தி எடுக்கிறார் அதில் சூரியன் முதலில் வந்து அங்கிருந்த தண்ணியில் விழுகிறது. கொஞ்சநேரத்தில் அது உலர்ந்து கரைசேருகிறது.இன்னும் வலி நிக்காத அந்த கடவுள் தொடர்ந்து உவ்வே செய்ய மற்ற கொள்களான செவ்வாய்,புதன் எல்லாம் வரிசையாக வர அடுத்து வந்த உயிரினங்களை தொடர்ந்து கடைசியாக மனிதன் வந்து விழுகிறான்.

   இந்த விசயத்தை   இதுதான் இந்த முழு பிரபஞ்சம் உருவான unified Theory என்று சொன்னால் நம்புவீர்களா? இதே போல  சில படித்தவர்களே மூடநம்பிக்கைகளை வெளிப்படையாகவே எழுதி வருகிறார்கள். அவர்கள் இஷ்டம் எழுதட்டும் என்று இருந்தாலும் அவர்களுக்கு அளிக்கும் ஆதரவுதான் கோபத்துக்கு காரணம். ஒருவரை நீங்களே அதிகமாக ஊக்கப்டுத்தும்போது தனது வேலையில் அவர் மும்மரமாக இறங்குவார். அதோடு அந்த செயலுக்கு நீங்களும் உதவி போகிறீர்கள்.

   மூடநம்பிக்கையில் ஆவது ஒன்றுமில்லைதான். ஆனால் மக்களின் மனதில் அது அழமாக பதிந்து அகல மறுக்கும் ஒன்று. அதுக்குப்பிறகு நீங்கள் என்னதான் அவருக்கு அறிவியலை எளிமையாக கணிதம் கொண்டு விளக்கினாலும் இந்த பிரபஞ்சம் வாந்தி எடுக்கப்பட்டதுதான் என்பதே அவரது முடிவாய் இருக்கும். அந்த அளவு வலிமை வாய்ந்தது மூடநம்பிக்கைகள். 

    நான் சொல்லவருவது அதை எழுதுபவர்கள் அவர்களின் மன திருப்திக்காக எழுதட்டும் ஆனால் நீங்கள் அதை ஆராய்ந்து பார்த்துவிட்டு "அருமை, வாய்ப்பே இல்லை" போன்ற பின்னுட்டங்களை இடுங்கள். எதையும் முழுவதும் இல்லாவிட்டாலும் கொஞ்சம் அடிப்படையில் அறிவியல் கொண்டு யோசிக்கலாம். எல்லாமே சரியாக அறியப்படவேண்டியதுதான் ஆனால் அறிகின்ற விதம்தான் தவறாக இருக்க கூடாது.

      இந்த அறிவியல் காலத்திலும் அண்மையில் ஒரு பதிவு படிக்க நேர்ந்தது அதில் ஒரு எலியை தண்ணியில் இரண்டாக வெட்டினால்அதில் ஒன்று மிதக்கும் இன்னொரு பாகம் முங்குமாம்  இரண்டையும் எரித்து சாம்பலாகின பிறகு ஒன்றைவைத்து மார்பகத்தை பெரிதாக்கவும்,மற்றொன்றை வைத்து சிரிதாக்கவும் முடியும் என்ற அர்த்தத்தில் இருந்தது அது. இந்த விஷயத்திற்கும் நான் மேலே சொன்ன கதைக்கும் எதாவது வித்தியாசம் இருந்தால் சொல்லுங்கள். இரண்டுமே ஒரே எலி. முடிந்தவரை இந்த விளம்பரங்களை தவிர்க்கலாம் குவாண்டம் தத்துவத்தை விட இது வேகமாக பரவும் என்பது எல்லோர்க்கும் தெரிந்திருக்கும்.


      உங்கள் கண்முன் அறிவியல் விரிந்து கிடக்கிறது.  அனைத்தையுமே அதைகொண்டு பார்க்காவிட்டாலும் சில அடிப்படையான விசயங்களையாவது பார்த்து தேர்வு செய்துகொள்வது நல்லது.


     அடுத்து போனவருடத்தை விட இந்தவருடம் புத்தகவாசிப்பு என்னிடம் குறைந்தது. காரணம் இணையம்தான். ஆர்வம் அதிகம் இருந்தபோதும் பொழுது போக்கு அம்சங்கள் தன்பக்கம் இழுத்துக்கொண்டது. அதோடு இதுக்குமுன் இருந்தஇடம் புத்தக வாசிப்புக்கு துணையான ஒன்று. நடைபாதைகடையில் புத்தகங்கள மிக மலிவாக கிடைக்கும். ஒரு புத்தகம் நூறு ரூபாய். அதோடு படித்துவிட்டு திரும்பி கொடுத்தால் வாங்கும் புதிய புத்தகத்திற்கு 50% தள்ளுபடி வேறு. ஆனால் இப்போது இருக்கும் இடத்தில அதே புத்தகம் மூன்று மடங்கு விலையில் கிடைக்கிறது. வேறுவழியில்லாமல் வாங்கித்தான் ஆக வேண்டிய சூழ்நிலை.


                                                 *************  

     இந்த வருடத்தில் நடந்த சில அறிவியல் முக்கிய நிகழ்வுகளை பார்க்கலாம். இதே மாதிரி சுஜாதாவும் தனது கற்றதும் பெற்றதும் புத்தகத்தில் ஒரு கட்டுரை எழுதி இருப்பார். அருமையான ஒன்று.அந்த அளவு சிறப்பாக விரிவாக இல்லாமல் பெரும்பாலும் வலைப்பூவில் எழுதிய போது குறிப்பெடுத்த விசயங்களையே சொல்கிறேன். இந்த விசயங்களை ஏற்க்கனவே கட்டுரையாக கதையாக எழுதி இருக்கிறேன்.


1) முதலில் செயற்கை மூளை தயாரிக்கும் முயற்சியில் ஒரு படிக்கல்லாய் சில நிமிடங்கள் மட்டும் நினைவு இருக்கும் விதத்தில் மூளையின் சிறு பகுதியை முயற்சித்து இருக்கிறார்கள். அதாவது நமது மூளையில் நினைவுபகுதியாக விளங்குவது Pre frontal cortex. இதில்தான் அன்றாடம் நடக்கும் செயல்கள் thalamocorical loop, reciprocol loop போன்றவைகளால் பதியப்பட்டு தேவையான் போது திரும்பி கிடைக்கும்படி இருக்கும்.இதை அடிப்படையாக வைத்து சில பாலிமர் பொருளோடு ப்ரோடின்களை ஒட்டவைத்து அதை ஒரு வட்டவடிவமாக அமைத்து அதில் தகவல் சேமிப்பு 12 நொடிகள் இருக்குமாறு சோதித்து இருக்கிறார்கள். இதுக்கு தகவல் கடத்த தேவையான நியூரான்கள் எலிகளிடம் இருந்து எடுக்கப்பட்டது.

2) அடுத்தவிசயமும் மூளையோடு சம்பந்தபட்டதுதான். விபத்தில் இதயகோளறு ஏற்ப்பட்டவ்ரின் மூளையை எடுத்து அதை MRI மற்றும் பலவிதமான ஆய்வுகளுக்கு உட்படுத்தி உண்மையான மனித மூளையின் வரைபடம் ஒன்றை தயாரித்து இருக்கிறார்கள். இதுதான் முதன்முறை.

3) மனித இனத்தை அதிகம் பலிவாங்கிய நோய்களுள் ப்ளு காய்ச்சலும் ஒன்று. அதுக்கென சில மருந்துகள் இருந்தாலும் முழுதும் வீர்யம் மிக்கவைகளாக இல்லை. OXFORD UNIVERSITY யை சேர்ந்த விஞ்ஜானிகள்ஆய்வில் HINI, H3N2 போன்றவற்றின் பல்கிப்பெருக காரணமாக இருக்கும் இரண்டு ப்ரோடீன்களை அழிப்பதின் மூலம் அதை முழுமையாக தடுக்கலாம் என்பதை கண்டுபிடித்து இருந்தனர்.

4) இனிவரும் காலத்தில் மருத்துவ துறையில் முழுவதும் ஸ்டெம் செல்களின் ஆக்கிரமிப்பு இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அந்த வகையில் தனியாக இதயத்தை ஸ்டெம் செல்களை கொண்டு வளர்த்து சாதனை செய்துவிட்டார்கள்.இதன்மூலம் இதய நோய் சம்பந்தபட்டவர்கள் கொஞ்சம் நிம்மதியடையாலம் வருங்காலத்தில்.

5) புதிய பதிவர்கள் அதிகம் வந்ததாலோ என்னவோ இணையத்தை பயன்படுத்துவோரின் எண்ணிகை இந்த வருடத்தில் இரண்டு பில்லியன்கள் ஆனதாக சொல்கிறார்கள்

6) இதுவரை பலமுறை பல் சோதனைகளை செய்ததில் எல்லாவற்றிலும் தேர்ச்சி பெற்ற ஐன்ஸ்டீன் தாத்தாவின் GENERAL RELATIVITY THEORY மீண்டுமொருமுறை நாசாவின் GRAVITY PROBE  - B என்ற செயற்கைகோளால் நிருபணம் செய்யபட்டுள்ளது.

7) அதே நேரத்தில் ஐன்ஸ்டீன் தத்துவத்துக்கு கொஞ்சம் திருத்தம் கொண்டுவரும் அளவுக்கு கிளம்பியது CERN அமைப்பு அறிவித்த ஒளியை மிஞ்சும் வேகம் கொண்ட NETRINO எனும் துகள். ஆனால் கடைசியில் அதில் இருந்த சிறு தவறுகளால் நிருபனமற்று போனது. அதில் இன்னும் நுட்பமான முடிவுகளை செய்யுமாறு ஹவ்கிங் போன்றவர்கள் கருத்து தெரிவித்து இருந்தார்கள்.

8)    இதயம் பாதிப்புள்ளவர்கள் மாற்று சிகிச்சைக்கு அவர்களின் சொந்த ஸ்டெம் செல்கலையே பயன்படுத்தி குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம் என்பதை கண்டுபிடித்து இருந்தார்கள். வேறொருவரின் தானம் இதுக்கு தேவையில்லை.

9)  குழந்தையின்மைக்கு முக்கிய ஒரு காரணமாக இருக்கும் ஆண்மலட்டுதன்மைக்கு முடிவாக செயற்கையாக விந்து அணுக்களை உருவாக்கி இருந்தார்கள் ஜப்பான் நாட்டை சேர்ந்த kyoto university ஐ சேர்ந்த அறிவியலர்கள்.

10) கடைசியாக  ஸ்டெம் செல்களை  வைத்து தனியாக உறுப்புகளை வளர வைக்க சோதனைகூடங்கள் இல்லாமல் ஒரு உயிரின் கருமுட்டையில் ஸ்டெம் செல்களை செலுத்தி அதை அதுனுல்லேயே முழுவதுமாக வளர வைக்கமுடியும் என்பதை நிருபித்து இருந்தார்கள். அதாவது மனித உறுப்புகளை உருவாக்க  ஸ்டெம் செல்களை பன்றியின் கருமுட்டையில் நுழைத்து அதை முழுவதும் வளரச் செய்யலாம் என்கிறார்கள்.   

     இவையெல்லாம் இந்த வருடத்தில் நடந்தேறிய நான் படித்த அறிவியல் விஷயங்கள். இதுதவிர பல அருமையான கண்டுபிடிப்புகளை நிகழ்த்திக்கொண்டு இருக்கிறார்கள். அடுத்த வருடமும் நிறையா எதிர்பார்க்கலாம். முக்கியமாக நான் இயற்பியல் துறையில் எதிர்பார்ப்பது யாரவது இந்த unified theory யை உருவாக்கினால் பிறவிப்பயன் அடைந்த சந்தோசம் இருக்கும். குறைந்தது என் வாழ்நாளிலாவது கண்டுபிடித்தால் போதும்.

     இனி என்று பார்த்தால் முதல் பத்தியில் சொன்னது போல பெரியதாக எந்தொரு பெரிய உறுதிமொழிகளும் எடுத்துகொள்ளவிலை. வழக்கம்போல வாழ்க்கை போகின்ற போக்கில் வாழ்வதுதான எனக்கும் பிடிக்கும் அதையே செய்ய போகிறேன். பார்க்கலாம் என்ன நடகிறது என்று.

     சரி எதுஎப்படியோ இந்த புதுவருடம் எல்லோர்க்கும் இனிமையான ஒன்றாக அமையட்டும். அல்லது அதை அமைத்துவிடுங்கள் எல்லாம் உங்களிடம்தான் இருக்கிறது. எல்லோர்க்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

நிஜமாகும் நிழல்கள்...

      அந்த நகரத்தின் வளர்ச்சியின் ஒரு பகுதியாக அருகில் இருந்த கிராமங்கள் கட்டாயமாக அதோடு இணைத்துக்கொள்ளப்பட்டு அங்கிருக்கும் கிராமியத்தன்மையை வலுக்கட்டாயமாக வெளியேற்றிவிட்டு நகரமாக்கும் வேலையை அரசாங்கம் மெதுவாக செய்ய தொடங்கியிருந்தது. மக்களுக்கும் அது பிடித்துபோய்தான் இருந்தது. எதோ வயதான உடலைவிட்டுவிட்டு புதிய உடலுக்கு கூடு விட்டு கூடு பாய்வதை போல.பின்வரும் சம்பவங்கள்  நடந்தேரியதும் அப்படியொரு கிராமியம் அழிந்துகொண்டு இருக்கும் ஒரு நகரத்தில்தான்.

      மேம்படுத்தும் பணி என்ற பெயரில் சாலையின் இருபுறம் இருந்த மரங்கள் எல்லாம் வெட்டப்பட்டு வெறிச்சோடி போய் இருக்க சில வீட்டுக்கு முன்னால் இருந்த மாட்டு தொழுவம் எல்லாம் இடம் மாறியிருந்தது. புகை கக்கிகொண்டு சில பேருந்துகள் வந்து போய்க்கொண்டு இருந்தன. புதிதாய் சில கடைகள். இன்னும் சில அறிகுறிகளோடு அந்த கிராமம் நகரமாக மாறும் முயற்சியில் இருந்தது.


      அது கிராமமாக இருந்தபோது ..........ஊரின் தொடக்கம் முதல் கடைசிவரை ஒரே சாலை  அல்லது மண் பாதை. ஊரின் நுழைவு ஒரு பெரிய பெருமாள் கோயிலோடு ஆரம்பித்து அதே நேர்சாலையில் கொஞ்சதூரம் தள்ளி ஒரு சிவன் கோயிலோடு தொடரும் அந்த சாலையின் இருபுறங்களிலும்  வீடுகள் என அழகாக அமைத்திருக்கும் கிராமத்தை இன்னும் அழகாக்கும் விதத்தில் அதை சுற்றி வளைந்து ஓடியது ஒரு ஆறு.


       பெரிய அளவில் வசதிகள் ஏதும் இதுவரை அந்த ஊரில் இருந்ததில்லை. ஒரு ஆரம்ப சுகாதார மையம் மட்டுமே. அதிலும் இரண்டு செவிலியர்கள் இருப்பார்கள் மருத்துவர் ஒருநாளைக்கு சில மணிநேரங்கள் மட்டும் வந்துவிட்டு போவார். இன்றுவரை அதை நம்பாமல் அருகில் இருக்கும் நகரத்தின் மருத்துவமனையை நாடியவ்ரே அதிகம்.  சில சிறிய அவசர சிகிச்சைகளுக்கு அங்கு சென்று வந்தார்கள்.


      அந்த ஆரம்ப சுகாதார மையத்தை பற்றி பேசும்போது கண்டிப்பாக புனி யை பற்றி சொல்லித்தான் ஆகவேண்டும். அவள் சிறுமியாக இருக்கும்போது அதன் கட்டுமான பணிகள் நடந்தது. அது முடிந்து செயல்பட தொடங்கிய காலத்தில் அவளின் ஊருக்கு வந்த செவிலியர்கள், அங்கு இருந்த மருத்துவ உபகரணங்கள் எல்லாமே அப்போது பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த புனிக்கு மனதில் ஒரு புதிய ஆர்வத்தை உண்டாக்கியது.
       பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு விடுமுறை நாள் ஒன்றில் சும்மாவே அந்த மையத்துக்கு போய் இருந்தாள். அங்கு வேலை பார்த்தவர்கள் ஊர்க்கதை பேசிக்கொண்டு இருக்க அவர்களோடு புனி யும் சேர்ந்தாள். அழகான முகம் துறுதுறுவென்று கண்கள் பார்த்தவுடனே யாருக்கும் பிடித்துபோகும் அளவில்தான் புனி இருந்தாள்.அவள் வந்த வேலை வரும்வரை காத்து இருந்தாள். பேச்சுவாக்கில் அவர்கள் இவளின் படிப்பை பற்றி கேட்கும்போது அவள் கேட்க வந்ததை எல்லாம் கேட்டுவைத்தாள். அவளின் ஆசை எல்லாம் எப்படியாவது மருத்துவ வேலைக்கு போக வேண்டும் என்பதே. பேச்சின முடிவில் அவளுக்கு தெளிவு இருந்தது அவர்கள் வெறும் செவிளியர்களதான் நன்றாக படித்தால் மருத்துவராகக்கூட வாய்ப்பு இருப்பதாக அவர்கள் சொல்லி அனுப்பினார்கள்.

       ஒரு மாலையில் தன அப்பாவிடம் சொல்லிவைத்தாள்  மருத்துவ படிப்பு படிக்க விரும்புவதாகவும் அதுவும் முடித்துவிட்டு நம்ம ஊருலயே பணி செய்ய போவதாகவும். அதுக்கு அவர் முதலில் பத்தாம் வகுப்பு மதிப்பெண் வரட்டும் அதுக்கு பிறகு பார்க்கலாம் என்றார். பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண்கள் வர அடுத்து மருத்துவத்துக்கு வசதியான பிரிவையே மேல்நிலைப்பள்ளியிலும் படித்தாள். அதே நேரத்தில் ஊரில் விஷயம் கொஞ்சம் கிண்டலாக பரவி இருந்தது. புனி நமது ஊருக்கு மருத்துவராக வரத்தான் படிப்பதாக.


   
     இதுவரை சுகாதார மையத்தோடு புணியை இணைத்து பேசிவந்தவர்களுக்கு புதியதாக ஒன்று கிடைத்து இருந்தது. அது புனியின் காதல்
புனியை பற்றி பேசிவிட்டு கணேசை பற்றி சொல்லாமல் போவது சரியில்லைதான். அவள் கல்லூரி இரண்டாம் ஆண்டு படிக்கும்போதுதான் அது நடந்தது. ஒரே ஊரோக இருந்தாலும் அவன் எதிரில் வருகையில் ஒருபார்வை பார்த்துவிட்டு தலைகுனிவதும், அவள் பார்வையில் படும்படியாகவே அவன் எங்கேயும் செல்வதும்  இருவருக்குளும் மறைமுகமான சில விசயங்களை உறுதிபடுத்தி இருந்தன. அதுவரை சந்தித்தால் கொஞ்சமாக பேசிக்கொள்ளும் அவர்கள் ஒருகாலகட்டத்தில் வெறும் பார்வை பரிமாற்றங்களையே செய்தது, ஒருகட்டத்தில் கணேஷ் காதலை சொன்னபோது வெறும் சிரிப்பை மட்டும் தந்துவிட்டு ஓடியவள் மறுநாள் வந்து நானும் என்று மட்டும் சொல்லி காதலை சம்மதித்து அவர்களின் ஒரு வருட காதலின் வளர்ச்சி அருமையான ஆற்றங்க கரையிலயே நடந்தது.

     அப்படி ஒரு சமயத்தில்தான் சில பார்த்துவிட அவர்களின் வீடு உட்பட எல்லோர்க்கும் தெரிய வந்தது. இரு வீட்டாரும் உறவினர்கள் என்பதால் கொஞ்சம் கண்டித்ததோடு இப்போது காதல் முக்கியமில்லை முதலில் இருவரும் ஒழுங்க படியுங்கள் என்று காதலுக்கு சொல்லாமல் சொல்லி சம்மதம் தெரிவித்ததில் கணேஷ் மற்றும் புனிக்கும் அளவில்லா சந்தோசம்.

      நான்கு வருடம கடந்த நிலையில் கணேஷ் தான் படித்த படிப்புக்க்கு வேலை கிடைக்க சென்றான். புனி தனது மருத்துவ படிப்பை முடித்து இருந்தாலும் அவளுக்கு இருந்த ஆர்வம காரணமாக உயிரியல் துறையில் சிறப்புபிரிவை தேர்ந்து எடுத்து படிப்பை தொடர்ந்தாள். நான் தொடக்கத்தில் சொன்ன கிராமியத்தை வெளியேற்றி நகரத்தை புகுத்தும் வேலை இந்த நான்கு வருடத்தில் தான் கொஞ்சம் கொஞ்சமாக நிறைவேறிக்கொண்டு இருந்தது.

                                                                   *****----*****


     தே நேரத்தில் அந்த ஊர் மற்றொரு விசயத்திற்கு பெருமை வாய்ந்ததாக மாறியிருந்தது. காரணம் சிவன் கோயிலுக்கு அருகில் அமைக்கபட்ட ஒரு சாமியாரின் ஆசிரமம்.சரியாக ஒருவருடம் இருக்கும் அந்த கோயிலுக்கு ஒரு சாமியாரும் மற்ற சிலரும் வந்து தனக்கு கனவில் கடவுள் வந்து இந்த ஊரில் ஆசிரமம் அமைத்து மக்களுக்கு சேவை செய்ய சொன்னதாக சொல்லி ஒரு ஆசிரமத்தை கட்டினார்கள். அது கோயில் இடம் என்பதாலும் தெய்வ காரியம் என்பதாலும் யாரும் ஒன்றும் சொல்லாமல்விட ஒரு கட்டிடம் ஆசிரமம் என்ற பெயரில் எழும்பியது.

     அது பிரபலம் ஆனதுக்கு காரணம் அங்கு இருந்த சாமியார். பிரச்சினை என்று செல்பவர்களுக்கு தியானத்தின் மூலம் தீர்வுகளை அவர்களின் மனக்கண்ணில் தோன்றவைப்பதுதான். முதலில் உள்ளூர் மக்களுக்கே ஆச்சர்யமாக இருந்தாலும் அனுபவித்தவர்கள் சொல்லும்போது எல்லோரும் நம்பித்தான் போனார்கள். அப்படியே மெல்ல பரவி சுற்றியுள்ள ஊர்களுக்கு எல்லாம் தெரிய வந்து போனார்கள்.

      அங்கு சில விதிகள் இருந்தன. தீர்த்தமோ, பிரசாதாமோ வழங்கப்பட மாட்டாது. அந்த சாமியாரை ஒரு குளிர்சாதன முறையில் குளிர்விக்கப்ட்டு இருக்கும் அறையில் சென்றுதான் பார்த்து பேசவேண்டும். அங்கு இருந்து எதையும் எடுக்கவோ ஏன் தொடக்கூட அனுமதியில்லை. உள்ளே வரும்போதும் சரி வெளியே போகும்போதும் அழுத்தம் நிறைந்த காற்றால் சுத்தபடுத்தபட்டே அனுப்பினார்கள். இது எல்லாம் கொஞ்சம் வித்தியாசமாக தெரிய சிலர் கேட்டு வைக்க அதுக்கு ஆசிரமாத்தாரின் பதில் எல்லாம் சாமியின் சுகாதாரம் மற்றும் மன அமைதி கருதியே என்றார்கள்.` 


      அந்த சாமியார் அங்கு பிரச்சினை என்று வருபவர்களிடம் நடந்துகொள்ளும் விதம்தான் அவர்களை எல்லாம் தெய்வச் செயல் என நம்பவைத்தது. அவருக்கு முன்னால் இருந்த இருக்கையில் அமர வேண்டும். மெதுவாக நமது பிரச்சினைகளை கேட்டுக்கொள்வார் முதலில். அதுக்குப்பிறகு சில நிமிட அமைதி இந்த நேரத்தில்தான் அவர் கடவுளிடம் தொடர்பு கொண்டு அறிந்துகொள்வார் என நம்பினார்கள். அந்த சில நிமிடங்கள் முடிந்த பிறகு எதிரில் அமர்ந்து இருப்பவர் கண்களை மூடி இருக்க அவரின் மனதில் என்ன செய்யவேண்டும் என்ற காட்சி அழகாக விரியும்.அப்படியே நிகழ்கால தோற்றம் எல்லாமே அதிலிருக்கும். இறுதியாக ஏதாவது ஒரு கடவுளிடம் உருவம் தோன்றி மறையும். சாமியார் அந்த சாமியிடம்தன் உதவியை நாடினார் என்றார்கள்.


      அவரின் புகழ் வெகுவாக அக்க்கம்பக்கம் எல்லாம் பரவி அதிகம்பேர் ஆசிரமம் வந்து சென்றார்கள்.அதோடு வாரம் ஒருமுறை வித்தியாசமான சிலிண்டர்களை சுமந்தபடி ஒரு வாகனம் வந்து போனது. அது சாமியின் மகிமையில் மக்கள் யாருக்கும் பெரியதாக தெரியவில்லை.


                                                      

                                                          ******--------******

    புனி விடுமுறைக்கு வந்து இருந்தாள். அவள் மட்டும் வந்திருக்கிறாள் என்றால் நம்புவது கஷ்டம. ஏற்க்கனவே பேசி முடிவெடுத்து கணேஷ் ம் அதே நாட்களில் விடுமுறை என்று வந்து இருப்பான்.  அதே ஆற்றுப்பக்கம் அவர்களை நடந்தபடி சில நாள்கள் பார்க்கமுடியும். அவள் வந்த மறுநாளே ஆச்சர்யம் அதிக மக்கள் ஊருக்கு வந்துபோவத்தின் காரணம். அந்த சாமியாரின் சக்திகள் அறிந்த போது எல்லாம் பித்தலாட்டம்  என்று பெரியாதாக எடுத்துக்கொள்ளமல் இருந்தாள். நெருங்கிய தோழிகள் உட்பட எல்லோரும் பய பக்தியுடன் சொன்னதால் குழப்பம் அவளுக்கு.

     அதே நேரம் அங்கு இருந்த சுகாதார மையத்துக்கு வாரம் இரண்டு அல்லது மூன்று பேர்  வயிற்றுபோக்கு வாந்தி போன்ற பெரும் பிரச்சினைகளால் வந்துகொண்டு இருந்தார்கள். ஆச்சர்யம் என்னவென்றால்  வந்தவர்களில் அனைவரும் ஒரு வாரம் முன் அந்த ஆசிரமம் சென்று திரும்பியவர்கள்.  

                                                                         இன்னும் நிழல்கள் நிஜமாகும் ......

மின்புத்தகம்


   அந்த நீளமான சாலை வளையும் இடத்தில புத்தககடை இருந்ததால்  அந்த உருவம் எப்படி சாலையில் இறங்கியது என்பதை கடையில் இருந்த  அவனால் தெளிவாக பார்க்க முடிந்தது. எல்லாமே சில வினாடிகளில் முடிந்து இருக்க அது அவனது கடையை நோக்கி நகர்ந்தது. இரவு பத்து மணிக்கு கடையை மூடும் வேலையில் இருந்தவன் அதை நிறுத்திவிட்டு அந்த உருவத்தின் மீது கவனம் செலுத்தினான்.

   அது வானத்தில் இருந்து இறங்கிய விதத்திலியே அவனுக்கு புரிந்து பயந்து இருக்க இப்போது கடையை நெருங்க என்னசெய்வதென்று புரியாதநிலை. அதன் உருவம் தெளிவாக அவனுக்கு தெரிந்தது. உடைஏதும் இல்லை மேலே ஒரு மெல்லிய இலைபோல முழவதும் பரவி இருக்க உடல் அங்கங்கள் அதில் எம்பி ஒரு உருவத்தை காட்டியது. கிட்டதட்ட மனித உருவத்தை ஒத்துபோகும் ஒன்று. ஆனால் அதன் முக அமைப்பு இறங்கிய விதம கண்டிப்பாக அது மனித இனம் இல்லை என்பதை தெளிவாக்கியது.

  அவன் எதிர்பார்க்காதது அங்கு நிகழ தொடங்கியிருந்தது. அந்த உருவம் கடைக்கு எதிரில் வந்து நின்று புத்தக கடைக்குள் தனது பார்வையை விரித்து எதையோ தேட ஆரம்பித்து இருக்க அதன் பார்வை படும் இடத்தில எல்லாம் அவனும் பார்த்தான்

   சிலவினாடிகள் நகர்ந்த நிலையில் அதன் பார்வை அவனும் மீது விழ பயந்து பின்வாங்கினான். மெல்லிய கீச்சு குரலில் பேசியது. வாய் பெரியதாக பேசுவதற்கு சம்பந்தமாக அசையாமல் வெறும் சப்தம் மட்டும் வெளியில் வந்தது.

“எனக்கு ஒரு புத்தகம் வேண்டும்என்றது

“அப்பாடா அதுக்கு எதுக்கு இந்த வேசத்தில் வரணும் நான் கொஞ்ச நேரத்தில் பயந்துட்டேன் ஏதோ வேற்றுகிரக வாசிதான்னு நினைச்சிஎன்றான்

“வேற்றுகிரகவாசிதான் நான் கேட்கிற புத்தகம் கிடைத்தால் கிளம்புவேன்

  மீண்டும் பயத்தில் பின்வாங்க “கணேஷ் சிறுகதைகள் அடங்கிய நான் இல்லாத நான் புத்தகம் கொடு கிளம்பனும் என்றது

   அவன் மெல்ல பின்னாடி திரும்பி பார்த்துகொண்டே அந்த
 புத்தகத்தை எடுத்து தூரத்தில் இருந்தபடியே தூக்கி எறிந்தான்

“இந்த புத்தகத்தை வேறு எங்காவது படிக்க வழி இருக்கா?

“இருக்கு இந்த இணைப்பில் படிக்கலாம் என்று சொல்லியபடி ஒரு காகிதத்தில் 


    எழுதி கொடுக்க அது எதுவும் சொல்லாமல் திரும்பி சாலையில் நடக்க ஆரம்பித்தது. கொஞ்ச தூரம் செல்லும் போது புத்தகத்தில் அந்த காகிதத்தை வைத்து தனது உடைக்குள் பொதித்து வைத்த சில வினாடிகளில் வேகமாக மேலே எலும்ப அவன் எடுத்த இரண்டு புத்தகங்களில் நான் இல்லாத நான் புத்தகம் ஒன்று அவன் கையில் இருக்க அதை கொஞ்சம் வித்தியாசமாக பார்த்தான்   "நான் இல்லாத நான்"  எனது முதல் சிறுகதைகளின் தொகுப்பு. மொத்தம் இருபது கதைகளோடு ஒரு குறுநாவலும் இருக்கிறது.எல்லாமே கொஞ்சம் அறிவியல் கலந்த கற்பனைகள். சிலவை அன்றாடம் நிகழும் புதுமையான அறிவியல் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் எழுதியது.

   அறிவியல் வளர்ச்சியில் இப்படியும் நிகழ்ந்தால் என்பதை ஒரு சில கற்பனை கதாபாத்திரங்களோடு சொல்லியிருக்கிறேன் ரசிக்குபடி இருக்கும் என நினைக்கிறேன்.

    வலைப்பூவில் தேங்கி கிடந்த இந்த கதைகளை தொகுத்து ஒரு மின்புத்தகமாக வெளியிட முழு உதவிகளை செய்த எஸ்.கே அவர்களுக்கு எனது நன்றிகள்.

   தொடர்ந்து என் கதைகளை படித்து கருத்துக்களை சொல்லும் வலைப்பூ நண்பர்களுக்கும் நன்றிகள்.தொடர்ந்து எழுதுகிறேன் அடுத்த பாகம் மற்ற இருபது கதைகளோடு வெளியிடும் எண்ணம் இருக்கிறது. பார்க்கலாம் என்ன நடக்கிறது என்று.


      

ஆதலால்...


    படித்தும் நண்பர்கள் சொல்லி மட்டும்  கேட்டு இருக்கிறேன் காதல் என்ற பெயரில் பெண்கள் வாழ்க்கையில் வந்தால் அதை அழகாக்குவார்கள் என்று ஆனால் உணர்ந்ததில்லை. காரணம் காதலிக்க கிடைத்த தருணங்களை சரியாக பயன்படுத்தாமல் தவிர்த்தேன் அல்லது தவிர்க்கப்பட்டு இருந்தேன் என்பதே உண்மை.

   அழகிய பெண்களை ஏதோ வேற்றுகிரக தேவதைகள் போல பார்ப்பது, அவர்களின் கவனம் என்பக்கம் திரும்ப எதாவது செய்வது,அணிந்திருக்கும் “T shirt வாசகங்களை மெதுவாக எழுத்துக்கூட்டி படிப்பது போன்ற பொதுவான ஹோர்மொன்கள் வேலையை செய்து இருந்தாலும் ஏனோ காதல் மட்டும் செய்யவில்லை.

  அதற்காக காதலின் மீது வெறுப்பு என்றில்லை அதே நேரத்தில் அதில் பெரிய மதிப்பும் இல்லாமல் இருந்தது. காரணம் நான் விரும்பி படித்த சுஜாதா காதலை பற்றி சுவாராசியம் இல்லாமல் சப்பென சொல்லியிருந்த விசயங்களாக இருக்கலாம்.  

   வீட்டில் திருமணம் ஏற்பாடு செய்யும்போதுகூட யாரையும் காதல் செய்கிறாயா? என்று கிண்டலுக்கு கூட கேட்காத ஒரு பெரிய வருத்தத்தோடே திருமணமும் நடந்தது முடிந்தது. வாழ்க்கை எப்படி இன்னும் அழகாக ஆகப்போகின்றது அல்லது எப்படி ஆக்கப்போகிறாள் என்பதில் அதிக ஆர்வாமாய் இருந்தேன்

    திருமணத்துக்கு முன்னாடியே பேசி இருக்கிறோம். எதற்கும் அலட்டிக்கொள்ள மாட்டாள். எதைப்பற்றி பேசினாலும் சலிக்காமல் “உம்கொட்டுவாள். ஏதாவது அவளுக்கு பிடிக்காதது வந்தால் முதலில் எடுத்து சொல்லி நான் கேட்கவில்லை என்றாள் சண்டைபிடிப்பாள். வாழ்க்கையில் இதுவரை கண்டிராத அழகிய தருணங்களில் அதுவும் ஒன்று. உங்களிடம் மேலே சொன்னா விசயங்களை அவளிடம் ஏற்க்கனவே சொல்லியிருந்தேன். அதற்கு “ரெம்ப பாவம்தான் நீங்க என்று கிண்டல் அடித்தாள்.

   ஒருமாதம் கழிந்த நிலையில் அதை அவளிடம் சொன்னபோது கொஞ்சம் அதிர்ந்துதான் போனாள். திருமணத்திற்க்கு முன்னாடியே சொல்லியிருக்க்கலாம்தான் அவள் ஏதாவது தவறாக நினைந்துகொள்வாள் என்ற தயக்கம்தான். இப்போது நான் சொன்னதும்

“கண்டிப்பா இப்படி செஞ்சுதான் ஆகணுமா என்ன? என்றாள்

   “எனக்காக சம்மதியேன் ஏற்க்கனவே சொல்லி இருக்கிறேன் உன்கிட்ட பெருசா ஆர்வம் இல்லனாலும் செஞ்சுதான் பார்ப்போமேனு தோணுது

“ஏன் அதை இப்போதே செய்யலாமே?

   “இப்போது நீ என் மனைவி அதனால அவ்வளவு சுவாரசியம் இருக்காது. யாருன்னு தெரியாத ஒரு பொண்ணுகிட்ட பேசி பழகி காதலை சொல்லுவதில்தான் அந்த சுவாரசியம் இருக்கும் என்றேன்

“சரி நீங்க சொல்லுகிற முறையில் ஏதாவது தவறு நேர்ந்தால்?

   “அதெல்லாம் ஒன்னும் ஆகாது நான் ஏற்க்கனவே பலமுறை சோதனை செய்ததோடு பயணித்தும் இருக்கிறேன்

“இது தேறும்னு தோணலை எனக்குஎன்றாள்

“நீ மட்டும் சரி என்று சொல் மத்ததை நான் பார்த்துக்கிறேன் என்றேன்.

   “சரி செய்யலாம் ஆனால் எல்லாம் குறைந்த காலத்தில் முடியுமாறு செய்யுங்கள் என்றாள்

   “நீ சம்மதித்ததே போதும் மற்றதை நான் பார்த்துகொள்கிறேன் என்று சொல்லிவிட்டு என் ஆய்வுக்கூடம் நோக்கி ஓடினேன். அங்கு போர்த்திவைக்கப்பட்டு இருந்த இரண்டு கால இயந்திரங்களை தயார் செய்யும் வேலையில் இறங்கினேன்.

   சரியாக ஐந்து வருடம் முன்பு அவளும் சென்னையில் வேறொரு இடத்தில வேலை செய்துகொண்டு இருந்தது இன்னும் எனது வேலையை எளிதாக்கியது. வெறும் ஐந்து வருடம் மட்டும் பின்னாடி பயணிப்பது என்பது அவ்வளவு சிக்கலான விசயமாக இருக்கவில்லை. இயந்திரம் தயராகி இருந்தது.

    அவளிடம் என்ன செய்யவேண்டும் என்பதை விளக்கி கொண்டு இருந்தேன். அதாவது ஐந்து வருடம் அவளும் நானும் பின்னோக்கி பயணிப்பது. என்னிடம் நான் அவளை காதலிக்க வேண்டும் என்ற நிகழ்கால குறிப்பு மட்டும் இருக்கும். அவளிடம் நான் அப்போது தங்கியிருந்த இடத்திற்கு அருகில் இருந்த தாம்பரம் கிளை நூலகத்திற்கு வரவேண்டும் என்று இருக்கும். அதாவது காலத்தை குறைக்க அவளை சென்னை முழுவதும் திரிந்து தேடுவதுக்கு பதில் இருவரும் சந்திக்க பொதுவான இடமாய் அந்த நூலகத்தை தேர்ந்து எடுத்து இருந்தேன்.

   காதலை சொன்ன அடுத்த சில மணி நேரங்களில் இருவரும் நிகழ்காலத்துக்கு திரும்பிவிட முடிவெடுத்து இருந்தோம். திரும்பிவரும் பொறுப்பு என்னுடையது அவளால் முடியாது. நான் வந்தவுடன் என் விருப்பப்படி அவளை திரும்ப அழைத்துக்கொள்ளலாம். ஒருவழியாக வீட்டில் ஒரு சோதனைக்காக என்று  பொய் சொல்லி சமாளித்து கிளம்பினோம்.


   ஐந்து வருடம் முன் பார்த்த அதே சென்னை கண்முன் விரிந்து இருந்தாலும் அந்த நினைவுகள் ஏதும் இல்லாததால் இது அன்றைய ஒன்றாகவே இருந்தது. பிள்ளையார் கோயிலுக்கு எதிர் தெருவில் இருக்கும் அந்த கிளை நூலகத்திற்கு எனது பணி முடித்து தினமும் செல்வேன். இன்றும் அங்குதான் இருந்தேன். ஆனால் இன்று மற்றொரு எதிர்பார்ப்பு ஒரு குறிப்பிட்ட பெண்ணை காதலிக்க வேண்டும் என்ற குறிப்பு என் கையில் எனக்கு தெரியாமலே இருந்தது. உண்மையா என்று தெரியவில்லை ஆனாலும் காத்து இருந்தேன்.

   பழக்கமான அந்த நூலகப்பெண் “ஏன் இவ்வளவு நேரம் காத்து இருக்கீங்க அதான் ஏதாவது சுஜாதா புத்தகம் திரும்பி வந்தால் தனியாக எடுத்துவைத்து உங்களிடம் கொடுக்கிறேனே என்றாள். அவளிடம் இதை பற்றி சொல்லலாம் என்று இருந்தாலும் எனக்கே ஏனென்று தெரியாததால் அவளிடம் சொல்லுவது சரியில்லை எனக்கருதி வெறுமனே சிரித்து வைத்தேன்.

   சிறிது நேரத்தில் அந்த பெண் வந்தாள். அமர்ந்தவள் படிக்காமல் சுற்றி பார்த்து கொண்டே இருந்தாள். எல்லோரும் அவளை பார்க்க அருகில் இருந்த ஒரு புத்தகத்தை எடுத்து படிப்பதுபோல வைத்து கொண்டு மீண்டும் பார்வையில் சுற்றினாள். என் குறிப்பின்படி இவள்தான் என்னை காதலிக்க அல்லது நான் காதலிக்க போகிறவள். அழகியிருந்தாள் அப்போது இருந்த அவளின் நிலை செயற்கையாக இருந்தது. ஏதோ ஒரு கட்டளையின் பேரில் செய்வதுபோல்.

   அன்றைய இரவில் அவளது நினைவுகளோடே தூங்கபோய் இருந்தேன். இது எல்லாம் உணமையா என்று தெரியாமலே. மறுநாள் கொஞ்சம் சீக்கிரமே வந்து இருந்தாள். அன்று நூலகத்தில் இணைவதற்கு வேண்டிய வேலைளில் மூழ்கியிருந்தாள். அதில் ஏற்க்கனவே உறுப்பினராக இருப்பவர் மற்றும் அந்த பகுதி கவுன்சிலர் கையெழுத்து வேண்டும். அந்த விண்ணப படிவத்தை பிடித்தபடி வெளியில் நின்று இருக்க அருகில் சென்று கவுன்சிலர் வீடு இதே தெருவில் கடைசியில் இருக்கு கொடுங்க இன்னொரு கையெழுத்து நான் போடுகிறேன் என்று சொல்லி என் பெயரோடு போட்டு கொடுத்தேன். அன்று அவள் உறுப்பினர் சேர்க்கை முடிந்து இருந்தது  வேறெதுவும் பேசவில்லை.

    தொடர்ந்து இல்லாமல் வாரத்தில் மூன்று நாட்கள் வருவாள்.நூலகம் மிக சிறியது என்பதால் அருகருகே அமர வேண்டிய சூழ்நிலை எங்களை விரைவாக நண்பர்களாக்கி இருந்தது. அவளும் சுஜாதாவை விரும்ப நானும் சுஜாதா பிரியன் என்பதை உணர்த்த அவளிடம் அவர் எழுதிய விரும்பி சொன்ன பொய்கள என்ற கதையின் முடிவில் வரும் “ஆம் “இல்லைஎன்ற இரு பொய்களில் ஒன்றை சொல்ல சொன்னால் எதை சொல்லுவாய் என்று கேட்க அவளோ அதில் ஏதாவது ஒரு பொய்யை சொல்லிவிட்டால் அதுவரை படித்த அந்த கதை வீணாகி போவதுமாதிரி அத்தோடு நிறுத்துவதே சரி என்றுதான் சுஜாதாவும் அப்படி செய்து இருக்கிறார் என்று சொல்லி சிரித்தாள்.

   என்னுடைய கெட்ட பழக்கமோ என்னமோ அவளிடம் வெறுமனே படித்த புத்தகங்கள் அது சம்பந்தமான விசயங்களையே பேசிக்கொண்டு இருக்க அவளே ஒருநாள் அதை சொல்லியிருந்தாள். இயல்பாய் பேசலாமே இந்த விசயங்களை தவிர அததான் இதை நானும் படிக்கிறேனே என்று சொல்ல அடுத்துவந்த நாள்களில் எங்களின் உரையாடல் பொதுவாக எல்லா விசயங்களிலும் இருந்தது.

    இந்நிலையில் அவளிடம் ஒரு தருணத்தில் காதலை சொல்லும் தைரியமும் வந்து   தயங்கியபடி சொன்னேன். நீங்கள் நினைப்பது போல ஒரு பெண் சிரித்து பேசிய சில மாதங்களில் அவளிடம் காதலை சொல்லும் ராகம் இது இல்லை ஏற்க்கனவே முடிவெடுத்து நிகழ்கால குறிப்பெடுத்து வந்ததால் செய்ய நினைத்த ஒன்று. ஆனால் இது அவளுக்கு தெரியாது. என்ன நினைத்தாளோ தெரியாது சட்டென்று கன்னத்தில் அறைந்திவிட்டு வேகமாக அவளது பாதையில் நடந்தாள். அங்கு சாலையில் நின்று இருந்தவர்கள் எல்லாம் உடனே திரும்பி பார்க்க நானும் அங்கிருந்து வேகமாக திரும்பினேன்.

   சென்று முதல் காரியமாக அங்கிருந்து  அவளது இயந்திரத்தையும் திரும்பி அழைக்க வந்து இறங்கியவள் என் கன்னத்தில் பதிந்து இருந்த விரல் தடத்தை கைவைத்து தொட்டுபார்த்து பதறியபடி..

“யாருங்க இப்படி அடிச்சா உங்களை?என்றாள்   

    
           

சில விசயங்கள் - 11


   ஒருவழியாக நீண்ட நாள்களாக இருந்த ஒரு பிரச்சினைக்கு தீர்வை கண்டுபிடித்துவிட்டார்கள். பொதுவாக விண்வெளியில் இருந்து வெளிப்படும் Unidentified Infrared Emission features சொல்லப்படும் ஒருவித அலைகளுக்கு காரணம் polycyclic aromatic hydrocarbon (PAH) molecules தான் காரணம் என்று தெரிந்து இருந்தாலும் அது எப்படி உருவாக்கபடுகிறது அல்லது உருவாகிறது  என்பது தெரியாமலே இருந்தது.

   அதுவும் சில தனிமங்களான  carbon, hydrogen இவைகளே இந்த மாதிரியான தகவலை உருவாக்கலாம் என நம்பப்பட்டது. இப்போது University of Hong Kong சேர்ந்தவர்கள் செய்த ஆராய்ச்சியில் இந்த அடிப்படை துகள்கலான பொருள்கள் மட்டுமில்லாமல் மிகவும் சிக்கலான கூட்டமைப்பு கொண்ட organic பொருள்களும் உருவாவதாகவும், அது எங்கு எப்படி உருவாகிறது என்கிறதையும் கண்டுபிடித்து உள்ளனர்.


   அவர்களின் கண்டுபிடிப்பின்படி இந்த organic பொருள்கள் நட்சத்திரங்கள் உருவாகும் நிலைக்கு முந்தைய நிலையான nebula வில் உருவாக்கபடுவதாக சொல்கிறார்கள். அதுவும் இதுக்கு முந்தைய நிலையில் இருக்கும் தூசு படலத்தில் இந்த மூலக்கூறுகள் இல்லாமல் அங்கு அழுத்தம் அதிகருக்கும்போது நடக்கப்படும் வேதிவினையில் இந்த பொருள்கள் உருவாவதாக கணக்கிட்டுள்ளனர்.

    அதோடு இது உருவாகும் நட்சத்திரத்தின் அளவைபொறுத்து அமைவாதாகவும், நிறை அதிகமுள்ள நட்சத்திரமே இந்த மூலக்கூறுகளை உருவாக்குவதாகவும் சிறிய அளவிலானவை அவ்வாறு செய்வதில்லை என்பது இவர்களின் ஆராய்ச்சி முடிவு.

    இதுவரைக்கும் நட்சத்திரங்கள் வெடிப்பில் பல organic பொருள்கள் தூக்கி எறியப்படும் என இருந்தது. இப்போது கூடவே அதன் பிறப்பும் இதை உருவாக்கிறது என்பதும் உறுதியாகிவிட்டது. எப்படியோ இதன்மூலம் ஒன்று உறுதியாக நம்ப தோன்றுகிறது அது விண்வெளியில் சுற்றி திரியும் தூசுகளில் இருந்துதான் பூமிக்கு முதல் செல் உருவாகியிருக்ககூடும என்ற கருத்து. மேலே சொன்ன கண்டுபிடிப்பின் படி பார்த்தால் அந்தமாதிரியான organic தூசுகள் பூமியில் விழுந்து சூழ்நிலை சரியாக அமைந்துவிட ஒரு செல்லாக மாறி இப்போது இதை எழுதிகொண்டு இருக்கலாம் போல.

                                                *****************
   அடுத்த விசயம்  2005 YU55 னும் asteroid பூமியை மிகவும் குறைந்த தூரமான 325,000  கிமீ தொலைவில் நவம்பர் 8 ஆம் தேதி கடக்கிறது. இது நமது பூமியில் இருந்து நிலவு இருக்கும் தூரத்தைவிட குறைவு. இது 2005 ஆம் ஆண்டு Robert McMillan என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டு சொன்னது. நீண்ட பயணத்திற்கு பிறகு அது நம்மை கடக்கிறது. படத்தை பெரிதாக்கி பாருங்கள் அதன் மீது கிளிக்குங்கள்.
.


    இது பூமியோடு மோதுவதுக்கு எந்தவித வாய்ப்பும் இல்லை என்பதை உறுதியாக கண்டுபிடித்து இருக்கிறார்கள் என்பது கொஞ்சம் நிம்மதி இப்போதைக்கு. ஏனென்றால் இது அளவில் கொஞ்சம் பெரிது என்கிறார்கள். இதுக்கு அடுத்து இன்னொரு asteroid   2001 WN5 என்ற ஒன்று 2028 ஆம் ஆண்டு நம்மை கடக்கபோகிறது. இதைவிட இப்போது கடப்பது அளவில் மிகப்பெரியது. 

                       ****************


    அதிகபட்சமாக இருபதுநிமிட நண்பர்களுடான அறிவியல் விவாதத்தின் முடிவில் கண்டிப்பாக அங்கு கடவுள் வந்து இருப்பார். நான் எவ்வளவுதான் அந்த பக்கம் என்பேச்சை கொண்டுபோகதவாறு பார்த்து கொண்டாலும் அவர்கள் விடுவதில்லை. அவர்கள் கேட்கும் கேள்வி “இப்ப என்ன சொல்ல வர்ற கடவுள் இருக்காரா? இல்லையா? என்பதுதான்.  தொடக்கத்தில் பல விளக்கங்ககள் எடுத்து சொல்லி அவர்கள் மறுத்து கடைசியில் என்ன விசயம் பேச ஆரம்பித்தோம் என்பதே மறந்து அரட்டை போய்க்கொண்டு இருக்கும்.

    இப்போதெல்லாம் இந்த கேள்விக்கு எளிய பதில் ஒன்று வைத்து இருக்கிறேன் . “அது உனக்குத்தான் தெரியும் அவர் இருக்கிறாரா இல்லையான்னு அவர்களால் இதன் மீது கேள்விகள் கண்டிப்பாக கேட்கமுடியாது. அதிக பேச்சுகள் தவிர்த்து பேசவந்த விசயத்தை பேசமுடிகிறது.

    தொடக்கத்தில் விவாதங்கள் செய்தாலும் நான் புரிந்துகொண்ட ஒன்று ஒருவரின் மனதை அவரால் அன்றி கடவுளால் நினைத்தால் கூட மாற்ற முடியாது என்பதே. அதாவது என்னதான் அவரது மனது மாறினாலும் அதில் மற்றவர்களின் பங்கு என்பது ஒரு சிறிய அளவே பெரும்பகுதி அவர் தனது மனதை மாற்றியதே.

   மனதை மாற்றுவது என்பது அவ்வளவு எளிது அல்ல. அதை மாற்றுவதுக்கு பல வழிகள் உள்ளன. அன்பு,பாசம்,காசு, என நீளும். இது எல்லாம் வெறும் காரணிகளே முக்கியம் நான் மேல் சொன்னது போல அவர்தான் முக்கியம்.   அண்மையில் பார்த்த ஏழாம் அறிவு படத்தில் வில்லன் நோக்குவர்மம்(hypnotism) என்ற பெயரில் செய்வதை பார்த்தால் sci fic படம் என்றாலும் இப்படியுமா என்று யோசிக்க வைத்தது. அதில் அந்த வில்லன் பார்த்த இரண்டு நொடிகளில் மற்றொருவரின் மனதை தனது கட்டுபாட்டில் கொண்டுவந்து தனது காரியத்தை சாதித்துகொள்வார்.

    இந்த நோக்கு வர்மம் முறையிலும் எவர்மீது செய்கிறோமோ அவர் துணை இல்லாமல் எதுவுமே வேலைக்கு ஆகாது என்பதுதான உண்மை. வெறுமனே அவரது கண்களை முறைத்து பார்த்துகொண்டோ இல்லை அவரை அரைநிலை தூக்கத்தில் படுக்கவைத்து நாம்மட்டும் பேசிக்கொண்டு இருக்கவேண்டியதுதான். அவர் எங்காவது கனவில் டுயட் பாடிக்கொண்டு இருந்தாலும் ஆச்சரியம் இல்லை.   

    இன்னொரு உண்மை என்னவென்றால் மனது உங்களுக்கே கட்டுப்படுகிறது என்பதே பெரிய விசயம் இதில் எங்கு மற்றவர்களுக்கு. இந்த மனதை கட்டுபடுத்ததான் உதவி செய்வதாக  நிறையா ஆனந்தாக்கள் கிளம்பி ஜல்லியடித்து கொண்டு இருக்கிறார்கள்.  அவர்கள் கதவை திறக்க சொல்வதும், ஜன்னலை திறக்க சொல்வதின் மையக்கருத்து இந்த மனதை அடக்குவதுதான். நமக்கு எல்லாம் சொல்லிகொடுத்துவிட்டு அவர்கள் கதவை பூட்டிக்கொண்டு என்ன செய்கிறார்கள் என்பது அடிக்கடி எல்லோர்க்கும் தெரிந்து விடுவதுதான் ஒரு பெரிய சோகம்.

   நான் எப்போதும் ஒரு சில விசயங்களுக்கு self hypnotism பயன்படுத்துவேன். நல்ல பலனும் கிடைத்து இருக்கிறது. சிரமம் இல்லாத ஒன்றும்கூட இதுக்கு ஆனந்தாக்களின் அறிவுரைகள் ஏதும் தேவை இல்லை. உங்களின் முய்றசிமட்டும் போதும்.எனது பல சிக்கலான விசயங்களுக்கு எனது மனதை எளிமையாக கையாள இதை பயன்படுத்தி வருகிறேன்.

    சொல்லவருவது என்னவென்றால் உங்களின் மனது உங்களதுமுடிவில். அது மற்றவர்களால் சந்தோசபடுகிறது அல்லது துக்கபடுகிறது, ஆறுதல் அடைகிறது இது எல்லாமே நீங்கள் மனதுக்கு கொடுக்கும் ஒருவித கட்டளை அல்லது புரிதல் அவ்வளவுதான். இதை புரிந்துகொண்டால் கண்டிப்பாக எந்த ஒரு ஆனந்தாக்களும் உங்களுக்கு குருவாக தேவை இல்லை. இந்த குரு மற்றும் தீட்சை விசயத்தில் எனக்கு பிடிக்காத பல விசயங்கள் நடக்கிறது. என் நண்பர்களோடு மற்றும் அவர்களின் உறவினர்களோடு ஏற்ப்பட்ட அனுபவங்கள் நிறையா. அதையும் அவர்கள் சிலாகித்து சொல்வது எரிச்சலாக இருக்கும். அதை மற்றொன்றில் எழுதுகிறேன்.

    சரி விசயத்துக்கு வருகிறேன் முதல் பத்தியில் சொன்னது போல கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற கேள்விக்கு எனது பதிலான “உங்களுக்குத்தான் தெரியும் என்ற பதிலுக்கு நீங்களே விடை காணலாம். தனிமையில் இருங்கள் ஒரு நேரத்தில் நமது இவ்வளவு நாள் வாழ்க்கையில் கடவுள் என்பவர் எந்த விதத்தில் நமக்கு உதவி இருக்கிறார்? எந்தவிதத்தில் நமக்குள் வருகிறார்? அவரால் நம்மிடமும் சமூகத்திலும்   என்னென்ன மாற்றங்கள் நடந்து இருக்கிறது? அவர் இல்லாமல் நம்மளால் வாழமுடியாதா? இந்தமாதிரி பல கேள்விகளை உங்களுக்குள் கேட்டுபாருங்கள். கடைசியாக வருகிற விடைதான் அவர் இருக்கிறாரா இல்லையா என்ற கேள்விக்குமான விடையும்.     


அறியா உலகம் (சவால் சிறுகதை-2011 )


    அந்த நீளமானபெட்டி கரையில் வைக்கப்பட்டிருக்க அதனைசுற்றி ஒரு சிறுகூட்டம். அதில் பாதிபேர் இந்த கடல் ஆராய்ச்சி சம்பந்தபட்டவர்கள் மீதி அந்த பெரியபெட்டியை கரைசேர்க்க உதவியவர்கள்,வேடிக்கைபார்க்க வந்தவர்களென கூடியிருந்தார்கள்.

    பெட்டியை ஆராய்ச்சிகூட வண்டியில் ஏற்றும்போதே அதைப்பற்றிய வதந்தி காற்றில் ஏறியிருந்தது. கடலில் இருந்து ஒருபெரிய புதையல் கிடைத்து இருப்பதாகவும், வேற்றுகிரகத்தில் இருந்து பூமியில் விழுந்த ஒருபெட்டி என்றும் மக்களின் கற்பனை வளம் வேகமாக  விரிந்துகொண்டு  இருந்தது.

   வந்துசேர்ந்தவுடன் அதன் நீளம் அகலம, உயரம, எடை போன்றவை கணக்கிடபட்டன. இதுவரை ஊடகசெய்திக்கு சொல்லவில்லை. பணியாளர்கள் அதனை துடைக்க உத்தரவு இடப்பட்டு இருந்தார்கள். மேழேபடர்ந்து இருந்த கடல்பாசிகளை துடைத்து கழுவி நீக்கியபின்  ஒரு மஞ்சள்நிறத்தில் கொஞ்சம் பளுப்பக இருந்தது.

    அதனை திருப்பி பார்த்தபோது மூன்றுபக்கம் வெறுமையாக இருக்க அதன் ஒருபக்கத்தில் ஒருசின்னம் இருந்தது. சின்னம் என்பதைவிட ஒரு முத்திரை வடிவம். இரண்டு பெரிய மீன்கள் அலையில் எழும்பி குதிப்பதுபோல.அதைத்தவிர அந்தபெட்டி முழுதும் சமபரப்பே எங்கு எப்படி  மூடி இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது என்பதைகூட கணிக்கமுடியவில்லை. காரணம் அதன் நான்கு மூலைகளிலும் வளைவு (radius) கொடுக்கபட்டிருந்தது.

    அந்தஇரண்டு மீன்களின் சின்னத்துக்கு கிழே சின்ன எழுத்துக்களாக பொரிக்கபட்டு இருந்தன. இணைப்புகளை கண்டுபிடிக்க எல்லா மூலைகளிலும் சுரண்டிபார்க்கப்பட்டு ஏதுமில்லாமல்போக அடுத்தகட்ட வேலைக்கு தடைசெய்யபட்டிருந்தது. பெரிய அதிகாரிகள் வருவதாகச்சொல்லி அதைமூடினார்கள்.  


   சிறிய ஆய்வுக்குப்பின் ஒருவித பவளபாறைகளால் ஆனது என்று கண்டுபிடித்தார்கள்.அந்த இரண்டு மேலதிகாரிகளில்  ஒருவர் மீன்முத்திரையும்  எழுத்துக்களையும் பார்த்தபிறகு சங்கேதபாசை இருக்கிறது என தனக்குள் முனுமுனுத்தர்ர்.     

     சிறிய உரையாடலுக்கு பிறகு அதைஎப்படி திறப்பது என யோசிக்கபட்டது.. இந்தபெட்டி சில சங்கேதபசைகளால் மூடப்பட்டுள்ளது.முதலில் அது சம்பந்தபட்டவர்கள் கொண்டு முயற்சிசெய்துவிட்டு பின் உடைக்கலாம். அதோடு நமது உயிரியல் பிரிவில் உள்ளவர்களுக்கு தகவல் கொடுங்கள். திறக்கும்போது அவர்கள் இருப்பதும் முக்கியம்.


“புனி என்ன பண்றே?

“என்ன பண்றேன்னு   நீயே சொல்லேன்

  “என்னசெய்ய போற உன் செல்லபூனை லில்லியை கொஞ்சி விளையாடிட்டு இருப்பே

“ஆமா அதுஇருக்கட்டும் இப்ப எதுக்கு திடீர் அழைப்பு உனக்கும் அந்தபெட்டியை பத்தி தகவல் வந்துச்சா என்ன?

“ஆமாம் அதுக்குத்தான் நானும் உனக்கு போன் பண்ணேன். எப்பபோகலாம் சொல்லு சேர்ந்தேபோகலாம்

“ நான் வரலை முடிஞ்சா அங்க சந்திக்கலாம்

“ஏன் இப்படி பண்றே?
 
“சரி அழுகாதே வரேன் எப்பபோகலாம் சொல்லு?

“நாளை காலையில் 9 மணிக்கு இங்க வந்துடு


  புனி உயிரியல் பிரிவில் ஆராய்ச்சி பணிகள் செய்யும் குழுவில் இருப்பவள். அந்த பெட்டியை பற்றிய ரகசிய தகவல் அவளுக்கு வந்து இருந்தது அதுவும் வெளியில் யாருக்கும் தெரியபடுத்தவேண்டாம் என்ற அறிவுரையோடு. அப்போதே அவளுக்கு அதன்மீது ஒரு ஆர்வம்கலந்த ஆச்சர்யம்

   கணேஷ்  அதே ஆய்வுகூடத்தில் cryptography   துறையில் இருப்பவன். அங்கு சேரும் முன்னரே புனி பின்னாடி சுற்றி அவளை காதலித்துக்கொண்டு இருப்பவன். அவர்கள் காதலிக்கிறார்கள் என்பதைவிட சண்டை போடுகிறார்கள் என்றே சொல்லவேண்டும்..

  மறுநாள் காலையில் இருவரும் சேர்ந்தே ஆராய்ச்சி கூடத்துக்கு வந்தார்கள். பார்த்த இருவருக்குமே ஆச்சர்யம்.அவர்கள் நினைத்து இருக்கவில்லை இந்த அளவு வித்தியாசமாக இருக்குமென. இருவருக்கும் அது கண்டுபிடிக்கபட்டதில் இருந்து கடைசியில் செய்தவேலைகள் பற்றிய தகவல்கள் அனைத்துமே கொடுக்கபட்டன. கணேஷ் அதன் அளவுகள் எடை மற்றும் அது என்ன பொருளால் ஆனது போன்ற தகவல்களை வாங்கிகொண்டான்.

   கணேஷின் முதல்வேலை அந்தபெட்டி ரகசிய எழுத்துக்களால் மூடபட்டுள்ளதா இல்லையா என்பதை கண்டறிய வேண்டும். அந்த மீன்முத்திரைக்கு கிழே இருந்த எழுத்துக்களை முதலில் எழுதியவன் அந்தபெட்டி முழுவதும் பூதகண்ணாடி கொண்டு தேடினான் வேறெங்கும் எழுத்துக்கள் இருக்கிறதா என்று. தென்படவில்லை. அவன் குறிப்பெடுத்த எழுத்துகள் SWH26F


   சிறிதுநேர யோசனையில் அவனுக்கு தெரிந்து இருந்தது மிகவும் பழமையான கஷ்ட்டமான எழுத்துக்களை கொண்டு சங்கேதபாசையால் அமைத்து மூடப்பட்டபெட்டி அதென்று. வெளியில் வந்தான் அங்கிருந்த அதிகாரிகளிடம் அந்தபெட்டி ரகசிய எழுத்துக்களால் பூட்டப்பட்டுள்ளது என்பதையும் அதனை திறக்க தனக்கு கொஞ்சம் அவகாசம்தேவை என்று சொல்லிவிட்டு கிளம்பினான்.   
வெளியில் வரும்போது .புனியை வீட்டுக்குவருமாறு அழைக்க முதலில் மறுத்தவள் பின்சம்மதித்தாள்.

     ஆய்வுகூடத்தில்  சில முக்கயமான முடிவுகள் எடுக்கப்பட்டன. அந்தபகுதியில் இருக்கும் காவல்நிலையத்துக்கு இதுசம்பந்தமாக சொல்லி  பாதுகாப்புவசதி கோரப்பட்டது. அதோடு ஊடகங்களுக்கு செய்திகளை அளிப்பதில் கட்டுபாடுகளை கையாள ஒருநபரை நியமிப்பது என முடிவாகியிருந்தது.

     S W H2 F6 கண்டிப்பாக அந்தபெட்டியை மையமாக வைத்துதான் இது இருக்க வேண்டும் என்பதால் அந்த கோணத்திளியே யோசிக்க ஆரம்பித்தான். அதை திறப்பதற்கு ஒருஇடம் இருக்கவேண்டும்.  ஒரு செவ்வகவடிவில் உள்ள  பொருளில் குறிப்பிட்ட பகுதியை சரியாக குறிக்க நீளஅகல முறைகளை கொண்டுதான் கண்டிப்பாக உணர்த்தவேண்டும். அப்படிபார்த்தால் இதில் இருக்கும் W,H2 என்ற எழுத்துக்கள் கொஞ்சம் பொருந்துவதாக இருந்தது. அதாவது ஒரு புள்ளியில் இருந்து WIDTH, HEIGHT போன்றவற்றை இவை உணர்த்தவேண்டும். அப்படியே இருந்தாலும் H2 என்பதில் ஒருஅளவை குறிக்கும் எண் இருக்கிறது. ஆனால் WIDTH க்கு இல்லை.

    அதுக்கு பொருத்தமான எண்ணை முதலில் கண்டுபிடிக்க வேண்டும். அதில் உள்ள மற்றவவை எண்களுடன் தொடர்புகொண்டு இருக்க   S மட்டும் எந்த எண்ணோடு தொடர்பு இல்லாமல் இருப்பது கொஞ்சம் குழப்பியது. ஆனால் அந்த எழுத்தை எதுக்கு கொடுக்கபட்டு இருக்கிறது என்பதை கண்டுபிடித்தபோது அது  எளிதானது. அந்த எழுத்து குறிப்பது நீள உயர அளவுகளை எந்தபக்கத்தில் இருந்து அளக்கவேண்டும் என்பதை அது குறிக்கிறது.அதாவது அந்த பெட்டியில் இருக்கும் நான்கு பக்கங்களில் ஒன்றை குறிப்பாக உணர்த்த அந்த எழுத்து. இப்பொது அந்த எழுத்துக்கும் ஒரு எண்ணை கொடுக்க வேண்டிய கட்டாயம். அப்போதுதான் அவனுக்கு நினைவுக்கு வந்தது அந்த மீன்முத்திரை அதை பார்த்தால் எதாவது கிடைக்கலாம் என்ற எண்ணம் அவனுக்கு.

    மறுநாள் அங்கு போனபோது இரண்டு புதியவர்கள் அவனுக்கு அறிமுகமானார்கள். ஒருவர் பாதுகாப்பு பணியினை மேற்கொள்ளும் எஸ்.பி கோகுல்  மற்றொருவர் செய்தி  தகவல்களை கட்டுபடுத்தும் விஷ்ணு. இதில் விஷ்ணுவின் பணி கொஞ்சம் கணேஷ்க்கு தேவை. அதாவது எந்த காரணத்தை கொண்டும் இந்த ரகசிய எழுத்து முறைகளை வெளியில் சொல்லகூடாது. அப்படி சொன்னால் மக்களுக்கு ஆர்வம் அதிகமாகி பிரச்சினை வேறுமாதிரி போகலாம். அதோடு தவறான சிலரின் கைகளுக்குபோக வாய்ப்பு இருக்கிறது. எனவே விஷ்ணுவை கூப்பிட்டு தனியாக இதைப்பற்றி விளக்கினான்.

    அவனுக்கு தேவையான எண்கள் அந்த மீன்முத்திரையில் இருக்கிறதா என்பதை தேடினான். இல்லை. அந்த எண் எழுதுகளுக்கிடையேதான் இருக்கிறது என்று முடிவாகினான். வெளியில் போகும்போது கோகுல் எதிரில் வந்தார். ஏற்க்கனவே நன்கு பழக்கம் உடையவர். அவரது சிலபிரச்சினைகளில் இருந்த ரகசிய எழுத்துக்களை தீர்க்க கணேஷ்ஐ சந்தித்தது உண்டு.

    கணேஷ் அவரை தனியாக அழைத்துச்சென்று அந்த ரகசியஎழுத்துக்கள் சம்பந்தமாக பேசினான். அதன் முக்கியத்துவம் பற்றிசொன்னான்.  அது விஷ்ணுவுக்கும் தெரியும் அவன் அந்த எழுத்துகளை எந்தக்காரணம் கொண்டும் வெளியில் சொல்லாமல் இருக்கவேண்டும் என்ற தனது கருத்தை சொன்னபோது.

 “அப்படி என்ன எழுத்து அது எனக்குதெரியாம? என்றார் கோகுல்

“இப்போதைக்கு வேண்டாம் விஷ்ணுவை கொஞ்சம் பார்த்து கொள்ளுங்கள் எங்காவது சொல்லிவிடபோகிறார் என்று சொல்லிவிட்டு கிளம்பினான்.

    அந்த S க்கு உதவும் எண் எது என்பதை யோசித்தான்.அதில் மீதம் இருக்கும் எண்கள் 6, 2 இதில் 2 என்பது H ஓடு சேர்ந்து உயரத்தில் இருந்து 2 அடி என்ற அர்த்தத்தில் வருமென தோன்றியது. மீதி இருப்பது அகலம் எந்தபக்கம். அந்த இரண்டின் கூட்டுதொகை 8. மற்ற இரண்டு எழுத்துக்களின் கூட்டு தொகையும் அதுவாகவே இருக்கவேண்டும். காரணம் இந்தமாதிரியான ரகசிய எழுத்துக்கள் அமைப்பதின் நோக்கம் இது சாதாரணமானவர்களின் கையில் கிடைத்து சேதம்அடையகூடாது என்பதே. எனவே அனுமானம் செய்ய எளிதாக ஒன்றையே இன்னொன்றிலும் தொடர்வது சங்கேத பாசையில் பொதுவானஒன்று.

   அந்த இரண்டு எழுத்துக்களுக்கும் இரண்டு எண்களை கொடுத்தால் அதன் கூட்டுதொகை 8 வரவேண்டும். எளிதாக பாதியாகபிரித்து S4, W4 கொடுத்தான். காரணம் மேலேசொன்னதுதான். கண்டுபிடிப்பவரின் சிறிய அனுமானத்திற்குகேற்ப எளிதானமுறை. இப்போது அந்தஎழுத்துக்களை அமைத்தால் S4 W4 H2 F6 அதாவது பெட்டியின் நான்காவது பக்கத்தில் நான்கடி அகலத்தில், இரண்டடி உயரத்தில் எதாவது ஒன்று இருக்கவேண்டும் 

   ஆனால் அந்த F6க்குமுடிவு இன்னும் இல்லாமல்இருந்தது. F சேர்ந்தபடி இருக்கும் 6 எண்ணை மட்டும் வைத்துபார்ப்பது சரியாகாது ஏனென்றால் இதன் அடிபப்டை எண் 8.எனவே F8 என அர்த்தம்கொள்ள தீர்மானித்தான். அந்த 6 என்ற எண் ஒரு உதவிக்குமட்டுமே என்பது அவனது எண்ணம்.F8 என்பதை Fல் இருந்து 8வது எழுத்தை முன்னோக்கிபார்த்தால் அதில் அர்த்தமில்லை ஆனால் பின்னோக்கி பார்க்கும்போது 8 எழுத்துக்கள் முடிந்து 9வதாக வரும்எழுத்து o. இது எதையாவது உணர்த்தவேண்டும். அந்த F6 க்கு பதிலாக o எழுத்தை பொருத்திபார்த்தபோது அவனுக்கு ஆச்சர்யம்  S4W4H2o அதாவது H2o நீரை குறிக்கும் ஒரு குறிப்பு. கணிப்பு சரியாக இருந்தால் பெட்டியில் திறக்கும் இடத்தை கண்டுபிடித்தபிறகு தண்ணீரின் தேவையிருக்கும் என்ற முடிவுக்குவந்தான்.

   அந்தநேரத்தில்தான்  கோகுலிடமிருந்து அலைபேசி அழைப்புவந்தது. அதை கேட்டபோது கொஞ்சம் அதிர்ந்துதான்போனான். காரணம் கோகுல் விஷ்ணுவிடம் ஒரு சோதனைக்காக அந்தஎழுத்துக்கள் பற்றிகேட்க கொஞ்சமும் தயக்கம் இல்லாமல் அதை எழுதி அவன் அனுப்பியதே. கோகுல் கூடவே ஒரு விண்ணப்பம் வைத்தார்  தன்மூலம் இது தெரிந்தது என்று விஷ்ணுக்கு தெரியவேண்டாம் என்பது.

    சிறிது நேரம்கழித்து கணேஷ் விஷ்னுவுக்கு போன்செய்தான் அவனிடம் அந்த ரகசிய எழுத்துக்கள் பற்றி கேட்டபோது நான் யாரிடமும் சொல்லவில்லை என்பதயே திரும்பதிரும்ப சொன்னான். ஒருகட்டத்தில் கோபம அடைந்த கணேஷ் ஆதாரத்தை காட்டினால் என்னசெய்வாய் என்றபோதுதான் அவனுக்கு புரிந்தது. எங்கு மாட்டினோம் என்று. அதற்குபிறகு அவனிடம் வெறும் மௌனமே.

    கணேஷ்  புனியோடு அந்த இடத்திற்கு போனபோனது அவனது மேஜையில் ஒரு துண்டுகாகிதம் இருந்தது. அதில் விஷ்ணு தான் கோகுலிடம் அந்த ரகசிய எழுத்துகளை சொன்னதாகவும்  அது தவறானதுதான் என்பதை எழுதி வைத்திருந்தான். ஆனால் கணேஷ் வரும்போதே கோகுலிடம் இருந்து அவன் கொடுத்த அந்த எழுத்துக்கள் அடங்கிய சீட்டை வாங்கிவந்து இருந்தான்.அது சரியான எழுத்துதான் என்பது அவனுக்கு தெரியும்.


    இப்போது அவன் கவனம் முழுவதும் அந்தபெட்டியில் திறப்பதில் இருந்ததால் அதற்கு தேவையான வேளையில் இருந்தான். அளப்பதற்கு தேவையாக ஒரு அளவுகோல்(steel rule) வரவழைத்தான். அதன்மூலம் துல்லியமாக எழுத்துக்களில் பொதிந்திருக்கும் அளவுகளை அளக்க முடிவாகியிருந்தான்.அந்தநேரத்தில்தான் அவனுக்கு விஷ்ணுவிடம் இருந்து போன்வந்தது. கணேஷ்க்கு தெரியும் அவன் இப்போது என்ன பேசுவான் என்று. மன்னிப்பு கேட்பான் இனிமேல் கவனமாக இருப்பதாக சொல்வான் என்பதால் சிறிதுநேரம்  யோசித்த கணேஷ் இணைப்பை துண்டித்துவிட்டு அருகில் இருந்த அளவுகோலை எடுத்துக்கொண்டு பெட்டியை நெருங்கினான்.

    அருகில் இருபவர்களை வெளியில் அனுப்பிவிட்டு முக்கியமானவர்கள் மத்தியில் அதைதிறந்து முதலில் நான்காவது பக்கத்தை தேடும் முயற்சி செய்து அந்த மீன்முத்திரை இருக்கும் பக்கத்தை முகப்பு பக்கமாக கொண்டு அதில் இருந்து நான்காவது பக்கம் எனபார்த்தால் அதன் இடதுபக்கம் இருக்கிற பகுதிவந்தது. அதன் மேற்புறத்தில் இருந்து H2 என்பதுக்கு இணங்க இரண்டடியில் ஒரு குறிப்பை வைத்தான் அடுத்து W4 என்பதுக்கு பக்கவாட்டில் இருந்து நான்கடியில் ஒரு குறிப்பை வைக்க அது இரண்டும் ஒருஇடத்தில சேர்ந்தது.

   ஒருசிறிய சுத்தியல் வாங்கி மற்ற இடங்களில் தட்டி ஒலியின் தன்மையை சோதித்துப்பார்த்துவிட்டு அந்த குறிப்பு செய்த இடத்தை தட்டியபோது மாற்றமான சத்தம்வர எல்லோர் முகத்திலும் சந்தோஷம். அங்கிருந்த புனிக்கு கணேஷ்க்கு எதாவது கொடுக்கலாம் போல இருந்தது. அந்தப்பெட்டியில் திறப்புக்கான இடம் தெரிந்தவிட்டாலும் அதை எப்படி திறப்பது என்பதில் பிரச்சினை இருந்தது

   காரணம் இந்தமாதிரியான சங்கேதபாசைகள்  கொண்ட பெட்டிகளை வடிவமைக்கும்போது முறையான வழியில் திறக்காமல் தவறாக திறந்தால் அதன் உள்ளேஉள்ள பொருள்கள் அழிந்திடுமாறு அமைப்பார்கள்.கணேஷின் பயத்துக்கும் இதுதான் காரணம். ஒரு முடிவுக்கு வந்தவனாக ஒரு துளையிடும் கருவியும்(DRILLING MACHINE), மறைபோடும் (TAP) கேட்டுவாங்கி அந்த இடத்தில குறைந்த ஆழத்துக்கு துளையிட்டு மறையிட்ட பின்னர் அதில் ஒரு SCREW வை இணைத்து கொஞ்சம் அழுத்தமாக இழுத்து பார்த்தான். அந்த இடம் மெதுவாக விலகி வெளியில்வந்தது. கிட்டதட்ட சிறிய சதுரவடிவ பாகம்  முழுவதும் வெளியில்வர அதைதொடர்ந்த உட்பகுதி ஒரு துளைபோல உள்ளேசென்றது.

    அடுத்து நீரை எடுத்துவரச்சொன்னவன் அந்த துளைவழியாக செல்லுமாறு ஊற்றினான். நீர் நிரம்பி வெளியில்வர ஆரம்பித்த நிலையில் நிறுத்த அந்தபெட்டியில் ஒருமாற்றமும் இல்லாதது அதுவரை எல்லவாற்றையும் ஆச்சர்யமாக பார்த்துகொண்டு இருந்தவர்களுக்கு ஒரு ஏமாற்றமாக இருந்தது. கணேஷ்க்கும் குழப்பம். சிலவினாடிகள் கரைந்த நிலையில் அதன் எதிர்புற பக்கம் சிறுசப்பதத்துடன் விலகி வெளியில் விழுந்தது. எல்லோரும் அந்தபக்கம் பொய்ப்பார்த்தார்கள். ஊற்றிய தண்ணீர் வெளியே வடிந்து கொண்டு இருக்க இப்போது அதன்மேல் மீன்முத்திரை பதித்திருக்கும் ஒருபக்கத்தை விளக்க அந்தபெட்டியில் இருப்பது வெளிப்படையாக தெரிந்தது.

   ஒருவகைதுணியால் சுற்றப்பட்டு அந்தபெட்டிக்கு மத்தியில் தனியாக அதுக்கேன்று ஒரு இடம் அமைக்கபட்டு வைக்கபட்டிருந்தது. அதுக்குகிழே கொஞ்சம் இடைவெளி அதில் நீரால் விரிவடையும் ஒருபொருள் இருக்க அந்தபொருள் விரிவடைந்தால் அதுகொஞ்ச உயரத்தில் இருக்கும் நான்கு பக்கங்களையும் இணைக்கும் ஒரு பிரதான இணைப்பு பகுதியை அழுத்தி விளக்குவதாக அமைக்கபட்டு இருந்தது.

   தவறான முறையில் திறக்க முற்பட்டால் நான்குபக்கசுவரில்  இருக்கும் ஒருவகை அமிலம் உடைந்து அதிலுள்ள பொருளை யாருக்கும் கிடக்கலாம் சிதைத்துவிடும். அதன் மத்தியில் உள்ள அந்த பொட்டலம் போன்ற ஒன்றை வெளியில் தனியாக எடுத்து அவில்க்கும்போது துர்நாற்றம் வீசியது. புனி வேகமாக சென்று தன் உபகரணங்களை எடுத்து வந்து அதன்மீது சுற்றியிருந்த ஒருவிதமன் துனிபோன்ற ஒன்றை முழுதும்விலக்க அந்த உருவம் கண்ணுக்கு புலப்பட்டது.          

    உடல்பகுதி டால்பின்போல இருந்தாலும் அதன் கால்பகுதி மத்தியில் இருந்தே இரண்டாக பிரிந்திருந்தது. எப்படி மனிதனுக்கு இடுப்பில் இருந்து கால் பிரிகிறதோ. அனைவரின் ஆச்சர்யமும் அதன் தலை அமைந்த விதம்தான். கிட்டதட்ட மனிதஉருவ அமைப்பை பெற்றிருந்தது முடியில்லாமல் வழுவழுப்பாக இருக்க தலயின் நுணி கொஞ்சம் கூராக இருந்தது.

   அந்ததுணியில் ஒட்டினாற்போல ஒருகடிதம்.பாதுகாப்பான முறையில் மடித்து வைக்கப்பட்டிருந்தது. அதை சுத்தம்செய்து கணேஷ் படிக்கஆரம்பித்தான்.

    எங்களது பலகால கடல்பயணத்திலும் ஆராய்ச்சியிலும் நாங்கள்  கண்டசில உண்மைகள்.... மனிதன்  குறைந்தபட்ச நிலமே உலகம் என் நம்பிக்கொண்டு இருக்கிறான். அப்படியில்லாத பெரும்பகுதியான நீர்பகுதியில் ஏன் இன்னொரு உலகம் இருக்ககூடாது என்பதை கற்பனை செய்யமறுத்துவிட்டான் என்பதுக்கான பதில்தான் இது. நீர்பகுதியில் நிலப்பகுதியில் வாழ்வதைவிட ஒருபெரிய உலகம் இயங்குகிறது. நம்மைபொருத்தவரை வெறும் மீன்களும், வேறுசில உயிரனங்களும்தான்  நீர் உலகம் எனநம்புகிறோம். அது இல்லாத ஒருபெரிய வாழ்வு ஒன்று உள்ளே நமக்கு தெரியாமல் நடக்கிறது. அப்படிபட்ட ஒன்றுதான் இந்தஉயிர். இதுவரை இந்தபூமி பார்த்திராத ஒரு உயிர் அதுவும் இதேபூமியில். மனிதனின் ஆராய்ச்சி வேற்றுகிரகதுக்கு சென்றாலும் தனது கிரகத்தில் இருக்கும் ஒருபெரிய உயிரின் வாழ்க்கையையே காணமுடியாதவனாக தோற்றுபோய் இருக்கிறான். இதைகண்டு பிடித்தவர்கள் சில ஆராய்ச்சிகள் செய்வதின்மூலம் அந்த உலகம் சம்பந்தமாக தெளிவுகள் பெறலாம். 

எச்சரிக்கை : இந்த ஒரு உயிரனத்தை பிடிக்க நாங்கள் அப்போது பலஉயிர்களை பலிகொடுதோம்.நம்மைவிட எல்லாவிதத்திலும் மிகுந்த சக்திவாய்ந்தவைகள் ஆராய்ச்சியில் கவனம் இருக்கட்டும்.

படித்து முடித்தபோது அனைவரின் கண்களிலும் பயமிருந்தது.

   புனி அந்தஉடலில் பல்வேறு இடங்களிருந்து திசுக்களை சேகரித்தாள். கணேஷ் அந்தகடிதத்தை அங்கிருந்த அதிகாரிகளிடம் கொடுத்துவிட்டு மௌனமாக வெளியேறினான். அங்கு இதுவரை நடந்தவை எல்லாம் ஒரு நம்பமுடியாத கனவுபோல இருந்தாலும் இன்னும் கொஞ்சநாளில் புனியின் ஆராயச்சியில் இருந்து இந்த உலகம் ஒருபுதிய முடிவை சந்திக்கபோவதில் உறுதியாக இருந்தான்.  

  
                                             

சிறு சிறு - 5


  
கொஞ்ச நேர மௌனத்தை அவளது அந்த கேள்வி களைத்தது...

“கணேஷ், நமது காதல் உண்மையானதா என்ன?

“ஏன் திடிர்னு உனக்கு இந்த சந்தேகம்? என்றேன் சிரித்தபடி

“இல்லை சும்மாதான்கேட்டேன் கேட்கனும்போல இருந்துச்சி” என்றாள்

“சரி நீ சொல்லு உண்மையானதா இல்லையான்னு?

“அதைவிடு காதல்னா என்னன்னு நினைக்கிறே நீ முதல்ல?“ கேட்டாள்

  “என்ன நினைக்கிறது எல்லாம் உணர்ச்சிகள் சம்பந்தபட்டதுதான் என்று பொதுவாக சொல்லி முடித்தேன்.

  முறைத்து பார்த்தவள் "நான் கேட்ட கேள்விக்கு நீ சொன்னது என்ன பதிலா?

“பின்னே?

“ஒழுங்கா சொல்லு

   “சரி காதல்ங்கிறது நான்கு பக்கமும் weld செஞ்ச திறக்க முடியாத ஒரு இரும்பு பெட்டி மாதிரி. அதுக்குள்ளே என்ன இருக்குதுன்னு யாருக்குமே தெரியாது. ஆனா அதை நம்மதான் கற்பனை செஞ்சி அதுல இது இருக்குமோ அது இருக்குமோன்னு நினச்சி வாழ்ந்துகிட்டு இருக்கோம். சிலர் அதை அறிவுகொண்டு உடைக்காமலேயே உள்ளே அப்படி பெருசா ஒன்னுமில்லைன்னு விட்ருவாங்க. சிலர் அதுக்குள்ள ஏதோ இருக்குன்னு உணர்ச்சிகளை வளத்துக்கிட்டு அதை உடைக்க முயலுவாங்க. அப்புறம்தான் தெரியும் அதுல ஒன்னுமே இல்லைன்னு ஏன இதை உடைக்க இவ்வளவு கஷ்ட்டப்பட்டோம்னு  யோசிப்பாங்க

  “அடப்பாவி என்ன இப்படி சொல்ற அப்ப நம்ம காதலும் இதுல அடங்குமா?

“பின்னே எல்லாம்தான்

“உன்னைபோய் காதலிக்கிறேன் பார் என்னை சொல்லணும்

“சரி சொல்லு நீ என்ன நினைக்கிறே?

   “நான் என்ன நினைக்க ...மனுசங்க மனசுங்கிறது நீ சொன்ன மாதிரி திறக்க முடியாத அல்லது  என்ன இருக்குன்னு அறிய முடியாத ஒரு பெட்டி மாதிரி ஆனா அது தனக்கு பிடிச்ச ஒரு மனசோடு சேரும்போது தன்னாலேயே திறந்துக்கும்.  அந்த இன்னொரு மனசுதான் தனக்கு உலகத்துல சொந்தம்கிற மாதிரி அதுகிட்ட வெளிப்படையா இருக்கும். அதுகூட அன்பு,சண்டை,காமம என தனக்கு  பிடிச்ச எல்லா விசயத்தையும் பகிர்ந்துக்கும் அதுவும் வாழக்கை முழுதும். இதுக்கு பேருதான் காதல் என்னை பொறுத்த வரைக்கும்

“அய் இது நல்லா இருக்கே” என்றேன்

“உனக்கு எங்க புரிய போகுது இதெல்லாம்.. நீ சொன்ன பாரு விளக்கம் காதலுக்கு

   “நான் என்ன தப்பு பண்ணேன்.. நீ சொன்னதைத்தான் செஞ்சேன். காதல்னா மனசு வெளிப்படையா இருக்கணும்னு சொன்னே .. அதான் நீ கேட்டதும் காதலை பத்தி நான் நினைச்சதை அப்படியே சொல்லிட்டேன் இப்ப நீ கோபபடுறே. அப்ப நீ சொன்னது தப்புதானே? என்றேன்

“நீ திருந்தவே மட்டே.... “என்று அடிக்க வந்தாள்

                       ******************


“அவங்களை முழுதும்  படிக்க எவ்வளவு நேரம் ஆகும்?

“குறைஞ்சது ஐந்து நிமிடம்.... ரெம்ப எளிதாகத்தான் இருக்கிறது

    “ம் சரி அதை வச்சி அவங்க மூளையில  நமக்கு தேவையான மாற்றம் கொண்டுவர?

  “அதுக்கு கொஞ்சம் நேரம் ஆகும் என்னென்ன மாற்றம் கொண்டுவரணும்னு சொல்லிடுங்க

    “வேறென்ன நமக்கு கிழே வேலை செய்ய ஒரு அடிமை வர்க்கம் வேணும் அவ்வளவுதான். நாம் சொல்வதை தவிர வேற எதையும் யோசிச்சு செய்ய கூடாது.அப்படியே யோசிச்சாலும் அது நம்ம சொல்லி கொடுத்ததாக இருக்கணும். இதை மட்டும் இப்போது செய் போதும்

   “சரி செஞ்சி முடிச்சிட்டு   சொல்றேன். ஆனா இதுக்காக இவ்வளவு ஆபத்தான காரியங்களை ஏன் நாம செய்யணும். நம்மகிட்ட இருக்கிற தொழில்நுட்பத்தை வச்சி செயற்கையா உருவாக்கலாமே?

    “அது அவ்வளவு எளிது இல்லை ஆபத்து அதிகம் கொஞ்சம் பிச்ங்கினாலும் நாம் அழிந்தோம். ஆனால் இவர்கள் நம்மை விட கீழானவர்கள் என்ன முயற்சி செய்தாலும் நம்மை வெல்ல முடியாது சொன்னதை செய் என்று சொல்லி விட்டு அது நகர்ந்தது.

   அங்கு இரண்டு மனித உடல்கள் மயக்க நிலையில் கிடத்தப்பட்டு இருக்க அதன் அருகில் சில உருவங்கள் எதையோ ஆராய்ந்து கொண்டு இருந்தன. மனிதர்களின் ஜீனோமை துளைத்து என்னென்ன இயக்கங்கள் எந்த கட்டளையின் பெயரில் எப்படி நடக்கின்ற என்ற எல்லா தகவல்களும் கிடைக்க பெற்றன. அடுத்த வேலை  அதுக்கேற்ப மூளையில் கட்டளை கொடுக்கும் விசயத்தை மாற்றுவதுதான்.

   எல்லோரும் காத்து இருந்தார்கள். முதலில் அந்த ஒரு மனித உடல் மட்டும் மெல்ல அசைந்து எழுந்து உட்கார்ந்தது..

  “இப்போது நான் என்ன செய்ய வேண்டும் எனக்கான கட்டளை என்ன? என்று கேட்க       

  “அதோ அங்கு படுத்திருக்கும் அந்த உருவத்தை எழுப்பு என்ற கட்டளை கொடுக்க அதுபோய்  எழுப்ப தொடங்கி இருந்தது.

   அங்கு கூடியிருந்தவர்களுக்கு சந்தோசம். .."ஆனால் ஒரு பிரச்சினை இப்போதைக்கு இரண்டு மனிதர்கள்தான் நம்மால் கொண்டுவர முடிந்தது ஆனால் நமக்கு நிறையா தேவை. நாம் பூமிக்கு நேரடியாக சென்று மனிதர்களை கொண்டுவருவது என்பது முடியாத காரியம் அவர்கள் நம்மை அழித்து விடுவார்கள் வேறு எதாவது யோசியுங்கள் என்றது ஒன்று

   “அதுக்கு என்கிட்டே ஒரு யோசனை இருக்கு.... என்ற குரல் அந்த கூட்டதில் இருந்துவர அது முன்னாடி வந்தது.

“சொல்லு என்ன அது?

    “நான் போன முறை பூமிக்கு மனிதர்களை பிடிக்க போய் இருந்த போது அவர்களிடத்தில் ஒரு வினோத பழக்கம் இருப்பதை பார்த்தேன். கடவுள் என்ற நமபிகையில் இதுவரை கண்டிராத ஒன்றை அதிகமா நம்புகிறார்கள்.அதோடு இல்லாமல் என்றாவது ஒருநாள அவர் அவதரிப்பார் நம்மை சொர்க்கத்துக்கு  அழைத்து செல்வார் இந்த மாதிரி நிறையா விசயங்ககளை நம்புகிறார்கள். நான் சொல்ல வருவது நாம் ஏன் அவர்களின் கடவுளாக மாறி சொர்க்கமான நமது கிரகத்துக்கு கூட்டி வந்துவிடகூடாது. உறுதியாக சொல்லுவேன் இந்த விசயத்தில் அவர்கள் அதிகம் யோசிக்க மாட்டார்கள் வந்துவிடுவார்கள் என்று முடித்த போது அவர்களிடத்தில் ஆச்சர்யம். அதுக்கு தயார் செய்தார்கள்

பூமி அதி சீக்கிரம் ஒரு கடவுளின் வருகைக்காக காத்திருந்தது.  

                                                 *******************


   அந்த விண்கலத்தில் என்னோடு இருந்த புனி கத்தியேவிட்டாள் காரணம் எங்கள் கண் முன் விரிந்த அந்த புதிய கிரகத்தில் மேல்பரப்பில் தெரிந்த தண்ணீர் பரப்புதான். நாங்கள் மேற்கொண்ட பயணமே பூமியை போல உயிர்வாழ தேவையான சூழ்நிலையில் இருக்கும் கிரகங்களை கண்டறிந்து பூமிக்கு சொல்வதே. மெதுவாக விண்கலத்தை தரையிறக்கிவிட்டு உள்ளே இருந்து கொண்டே வெளிப்புற சீதோசன நிலையை ஆராய்ந்து பார்த்ததில் சரியான வெப்ப நிலை உட்பட போதுமான பிராணவாயு காற்றில் இருந்தது. கொஞ்சம் ஈர்ப்புவிசை அதிகமாக இருந்தது. நடக்க சிரம படலாம் போல தோன்றியது. இருந்தும் முக சுவாசம்  அணிந்தே வெளியில் வந்தோம்

.  மீண்டும் ஒருமுறை வெளியில் சோதித்த பிறகே அந்த கிரகத்தின் காற்றை சுவாசித்தோம். மாற்றம் இல்லை. நடக்க முயன்ற போது காலை எடுத்து வைக்க அதிக சக்தி தேவையானதை உணர்ந்தோம்.

“கணேஷ் உடனே பூமிக்கு சொல்லிடலாம்

“இல்லை வேண்டாம் இப்ப சொல்லாதே

   “எதுக்கு? அவர்கள் ஏன் ஒரே இடத்தில் நிற்கிறது என்று கேள்விகள் கேட்க ஆரம்பித்து விட்டால்?

   “எதாவது வேறு பொய் சொல்லி சமாளிக்கலாம் என்றேன் தூரத்தில் நிறைந்து இருந்த தண்ணீரை பார்த்தபடியே

“ஏன் இப்படி சொல்றே நீ ?

“உனக்கும் எனக்கும் தனிமை ரெம்ப பிடிக்கும்தானே?

“ஆமா அதுக்கு?

   “உணவு காலியாகும்வரை இங்கே இருப்போமே எனக்கு இந்த தனிமையில் உன்னோடு இருக்கணும்னு போல தோணுது புனி என்றேன்

அவள் ஏதும் பதில் சொல்லாமல் நான் பார்த்த திசையே பாத்தாள்...

   “ஏன் உனக்கு இருக்க  பிடிக்கலியா என்ன? அப்படின்னா போய் பூமிக்கு தகவல்கொடு என்றேன்

    அவள் விண்கலம் நோக்கி செல்லாமல் என்னருகில் வந்து கையை பிடித்துக்கொண்டு "எனக்கும்" என்றால் வெட்கத்தோடு

“இந்த புதிய கிரகத்தில் முதல் சட்டம் ஒன்றை பிறப்பிக்கிறேன் என்றேன்

“என்ன அது? என்றால் ஆர்வமாக

   “இருவருக்கும் வெட்கம் என்பதே இருக்க கூடாது சரியா எங்கே வெட்கத்தை விட்டு கேட்கிறேன் "ஒன்று" கொடு பார்ப்போம்

   நான் எதுக்கு இந்த சட்டத்தை சொன்னேன் என்பதை உணர்ந்தவள் வெட்கத்தை தவிர்க்க முடியாமல் ஒன்று கொடுத்தாள்

   இது செல்லாது இந்த கிரகத்தின் சட்டபடி வெட்கம் இல்லமா இருக்கணும்  என்று  சொல்ல அவளால் வெட்கத்தை விட நெடுநேரம் ஆகியது..

   தோளில் சாய்ந்த படி கொஞ்ச தூரம் நடந்து இருந்த போது அந்த சத்தம் கேட்டது அது நாங்கள் நிறுத்தி வைத்து இருந்த விண்கலத்தின் திசையில் இருந்து வர நாங்கள் திரும்பும்போது அது மேலே எழும்பியிருந்த்து.

    அப்போதுதான் நினைவுக்கு வந்தது அது Auto mode ல் இருந்தது. அதாவது எங்களுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்ப்பட்டு  இயக்க முடியாமல் போய் நின்றுவிட்டால் குறிப்பிட்ட நேரத்தில் பாதுக்காப்பு கருதி அது தானாகவே பூமியை சென்றடைந்து விடும். அது எம்பி பறந்ததை பார்த்த புனி அதை நோக்கி ஓட முயன்று முடியாமல் கிழே விழுந்தாள்.

அது கண்ணை விட்டு மெல்ல மெல்ல மறைந்து கொண்டு இருந்தது.