இரண்டாவது சூரியகுடும்பம் (EXTRA SOLAR PLANETS)

        அறிவியலின் மற்றுமொரு வெற்றியாக நமது பிரபஞ்சத்தில் இருக்கும் இன்னுமொரு (EXTRA SOLAR PLANETS) சூரியக் குடும்பம் இருப்பதை கண்டுபிடித்து இருக்கின்றார்கள்.

       இதை EXTRA SOLAR PLANETS வகையில் சேர்த்தாலும்  இந்த EXTRA SOLAR PLANET வகையில்  அதிக கோள்களை கொண்ட ஒரு நட்சத்திரம் இதுதான்..எனவேதான் இதை இரண்டாவது சூரியக் குடும்பம் என் கருதுகிறார்கள். .


      ஆனால் இதன் உணமையான அறிவியல் பெயர் HD10180... இது இருப்பது நாம் இருக்கும் இடத்தில இருந்து 127 ஒளி ஆண்டுகள் தொலைவில்.... இதை கண்டுபிடித்தவர்கள் European Southern Observatory சேர்ந்த ஒரு அறிவியல் அய்வுக்கூட அறிவியலர்கள்.

     இந்த சூரிய குடுப்ம்பத்தில் மொத்தம் ஏழு கோள்கள இருப்பதாக கண்டு பிடித்து இருக்கின்றார்கள். இதில் ஐந்து கோள்களை உறுதி படுத்தப்பட்டு இருக்கின்றன..மற்ற இரண்டு கோள்கள இருப்பதற்கு உண்டான  தடயங்கள் அங்கு இருப்பதால்  மொத்தம் ஏழு கோள்கள  இருக்கலாம் என நம்புகிறார்கள்.. ..இந்த ஏழுகோள்களும் நமது சூரியனை போன்ற ஒருநட்சத்திரத்தை சுற்றிவருவதாக சொல்லுகிறார்கள்.

       அந்த நட்சத்திரம் கிட்டத்தட்ட நமது பூமியை போல 1.5 மடங்கு பெரியது.இதனை அந்தகோள்கள ஒருமுறை முழுவதும் சுற்றிவர 6 முதல் 600 நாட்கள் ஆகின்றன என்பதை தோராயமாக கணக்க்கிட்டுள்ளார்கள்

       இப்பொது அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன..ஆராய்ச்சிகள் தொடர்ந்துகொண்டு இருக்கின்றன.. கட்டாயம் நல்ல செய்திகளை எதிர்பார்க்கலாம்....


   கிழே உள்ள இணைப்பில்  அந்த EXTRA SOLAR PLANETS எப்படி இயங்குகின்றது என்பதை செயற்கையாக உருவாக்கி இருக்கிறார்கள் முடிந்தால் பாருங்கள்.... 

http://www.youtube.com/watch?v=5kHJMnWPKdI&feature=player_embedded

சுஜாதா = St.Hawking

       சுஜாதா = St.Hawking  என்றவுடன் சுஜாதா St.Hawking க்கு இணையானவரா இல்லையா என்ற விவாதத்திற்கு செல்வதை விட இரண்டு பேருக்கும் உள்ள சில பொதுவான ஒற்றுமைகளை பார்ப்போம்..

    அப்படி என்ன சுஜாதா வுக்கும் St.Hawking க்கும் பெரிய ஒற்றுமை........இருவருக்கும் இருக்கும் ஒரு திறமை..தனது எழுத்தின் மூலம் எளிமையாக அறிவியலை எடுத்து சொல்லும் முறை அதைப்பற்றித்தான் இங்கு ஒப்பிட்டு உள்ளேன்.. அதற்கு முன் St.Hawking பற்றி சில வரிகள் சொன்னால் கொஞ்சம் புரிதலுக்கு எளிதாக இருக்கும். அவரை பற்றி விவரமாக மற்றொன்றில்  எழுத எண்ணம.


       St.Hawking ஜனவரி 8 ஆம் தேதி 1942 ஆம் வருடம் இங்கிலாந்தில் பிறந்தவர்.இவரது பிறப்புக்கு ஒரு பெருமை உண்டு.கலிலியோ இறந்து சரியாக 300 வருடம் கழித்து பிறந்தவர்.இவரது வாழ்க்கை 21 வயதுக்கு பிறகு மிகவும் வருத்தமானதாக மாறியது. ALS (motor neuron disease) என்ற நோயால் பாதிக்கபட்டு அன்றில் இருந்து இன்றுவரை சர்க்கர நாற்காலியில் தனது வாழ்நாளை கழித்து கொண்டிருக்கும் உலக விண்ணியல் அறிவாளிகளில் மிக மிக முக்கியமானவர்.(இவரை பற்றி விளக்கமாக ஒரு பதிவு போடுவேன்)

    அடுத்து சுஜாதாவை பற்றி சொல்லத்தேவை இல்லை.எங்காவது ஒரு 18 வயதில் இருந்து 24 வயதுக்குள் இருக்கும் ஒரு இளைஞ்ன் காதல் கீதல் என்று சுத்தாமல் சமத்தாக உட்கார்ந்து புத்தகம் படித்து கொண்டு இருந்தால் கண்டிப்பாக அவன் சுஜாதாவால் பாதிப்படைந்து இருக்கவேண்டும்.

    அந்த அளவு இளைஞ்ஞர்களின் மத்தியில் ஆழமாக பதிந்தவர் சுஜாதா. அப்படி என்றால் பெரியவர்களின் மத்தியில் இல்லையா? என்று கேட்காதிர்கள்..நான் என் நிலையில் இருந்து சொல்லி இருக்கிறேன்..எனக்கு வயதான அப்புறம் அவரது எழுத்துக்களை மீண்டும் படித்துவிட்டு சொல்லுகிறேன்..அல்லது யாராவது பெரியவர்கள் இதை படித்து கொண்டு  இருந்தால் சொல்லலாம்.....

   மேலே சொன்னதிலிருந்தே ஒரு ஒற்றுமை இருக்கின்றது. நமது தமிழ் இளைஞ்ர்களுக்கு சுஜாதா எப்படியோ..அதே மாதிரிதான்..இங்கிலாந்து,மற்றும் அமெரிக்கா போன்ற நாட்டு இளைஞ்ர்களுக்கும். St.Hawking.

இந்த இருவருமே இளைஞ்ஞர்களால் பெரிதும் மதிக்கப்பட்டு..நேசிக்கப்படுகின்றவர்கள்.

   சரி அடுத்து என்ன ஒற்றுமை என்றால் இவர்களின் அறிவுத்திறமையை எழுத்துக்களில் கொண்டுவரும் முறை..... தனக்கு தெரிந்த மிக சிக்கலான ஒன்றை அப்படியே வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல அருமையாக எழுத்தின் மூலம் சொல்லக்கூடியவர்கள். நான் இங்கு சொல்ல வருவதும் இருவரின் எழுத்து ஒற்றுமையை பற்றித்தான்....

   இவர்களின் அறிவியல் சம்பந்தமான எழுத்துக்கள் என்னை போன்ற அறிவியல் அறிவு இல்லாதவர்களுக்கும் மிக எளிதாக புரியும்படி இருப்பதுதான் இவர்களின் சிறப்பு.


   தமிழில் சுஜாதாவின் அறிவியல் எழுத்துக்களை பற்றி நான் சொல்லித் தெரியவேன்டியாதில்லை,அதே போலத்தான் St.Hawking எழுத்தும். இவரது brief history of time எந்த அளவு உலக புகழ்  பெற்றது எனபது எல்லோர்க்கும் தெரிந்த விசயமே.அதற்க்கு காரணம் அதில் அவர் எளிமைப்படுத்தி இருந்த  அறிவியலே .


   அதுவரை குறிப்பிட்ட சிலருக்கே தெரிந்த அல்லது இருந்த விண்ணியல் (cosmological) சம்பந்தமான அறிவு இந்த புத்தகம் வெளியிட்ட அல்லது படித்த பின்னர் தலைகிழாக மாறியது என்பதே உணமை

    அந்த புத்தகத்தில் எந்த அளவு அறிவியலை எளிமைபடுத்த முடியுமோ அந்த அளவு எளிமைபடுத்தி அனைவருக்கும் புரியும்படி எடுத்து சொல்லி இருப்பார் St.Hawking. மூன்று வருடங்களுக்கு முன்னர் இதை படித்தபோது  சுஜாதா இந்த புத்தகத்தை ஆங்கிலத்தில் எழுதி இருந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது எனக்கு...

   அந்த அளவு எழுத்து நடை இருவருக்கும் ஒத்துபோகின்றதுதான் உண்மை.   எளிமையான அறிவியல் விளக்கம்..இடையிடையே கொஞ்சம் நகைச்சுவை...போன்றவைகள் இருவருக்கும் பொதுவானவைகள். முடிந்தால் இந்த புத்தகத்தை படித்து பார்த்துவிட்டு சொல்லுங்கள்.

    St.Hawking பொறுத்தவரை அவரது நிலைமையில் நகைச்சுவை எனபது இயலாத காரியம்..சாதாரண மனிதர்கள் என்றால அவரது நிலைமையில் அடுத்து என்ன செய்ய முடியும் என்ற மனநிலையில் துவண்டு போய் இருப்பார்கள்..ஆனால் இவரோ அந்த நோயின் பாதிப்புக்கு பின்னர்தான் மிக உபோயோகமான  விசயங்களை அறிவியல் உலகத்திற்கு தந்தார்.அதுமட்டும் இல்லாமல் விண்ணிற்கு ஒருமுறை பயணம் செய்து zero gravity ல் மிதந்து விட்டு வந்தவர்.

(அவரது உடம்பில் ஒரு வெளிப்பாகமும் வேலை செய்யாது.... அதாவது ஒருமனிதன் உயிரோடு இருந்து... வெறும் மூளை மட்டும் நன்றாக வேலை செய்து  கொண்டு இருந்தால் அதுதான் St.Hawking)

St.Hawking  பொதுவாக இளைஞ்ஞர்களின் மீது கொஞ்சம் நம்பிக்கை மற்றும் பற்று கொண்டவர்.

  அதே போல்தான் நமது சுஜாதாவும். அவரது அறிவுரை இன்றைய இளைஞ்ர்களுக்கு மிக முக்கியமானவைகள். அவர் அறிவுரை சொன்னாலும் நாசூக்காகச் சொல்லுவார். எப்படி மருத்துவர் வலிக்காமல் ஊசி போடுவாரோ அப்படி.

   அவர் அடிக்கடி அறிவுறுத்துவது முடிந்த அளவு புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை கடைபிடியுங்கள் என்றுதான்...இதை நான் பின்பற்றியதன் விளைவு இப்போது என் அறையில் 150 மேல் புத்தகங்கள்....

மேலும் சுஜாதா அவர்களுக்கு எழுத்து  துறையத்தவிர மற்ற திறமைகள் இருப்பது நாம் தெரிந்த விசயமே..

   ஒரு முறை நேர்காணலில் அவரிடம் “நீங்கள் ஏன் அறிவியலை உங்கள் எழுத்துக்களின் மூலம் மக்களுக்கு தெரியப்படுத்த விரும்புகின்றிர்கள் “ என்று கேட்கப்பட்டது.

   அதற்க்கு அவர் அறிவியல் கொஞ்சம் சிக்கலான விசயம்...அதை சொல்லுகின்ற விதத்தில் எடுத்து சொன்னால் சாதாரண மக்களும் தெரிந்து கொள்வார்கள். சாதாரன கதைகளை எழுதுவதற்கு ஏராளமானோர் இருக்கின்றனர்.கதை எழுதும் வேலையை அவர்கள் பார்த்துகொள்வார்கள்... என்று பதில் அளித்து இருந்தார். அதை செய்தும் இருந்தார்..

(இதற்க்கு அர்த்தம மொக்கையான கதைகள் கணேஷ் போன்றவர்களால் கூட  எழுத முடியும் என்பதே)

.

THE CLONING

      உணமைக்காதல் என்ற தலைப்பில் கொஞ்சம் க்ளோனிங் சேர்த்து நான் எழுதியிருந்த  கதையை படித்து இருந்தால் இப்படியெல்லாம் நடக்குமா என்ற சந்தேகம் வரலாம்...

   அந்த  கதையில் வரும் காதல் உணமையில் நடக்குமா இல்லையா என்று என்னால் உறுதியாக சொல்ல முடியாது. காதலுக்காக காதலன் க்ளோனிங் செய்து பின் அவர்களை இணையவைப்பது இப்படி எல்லாம்  செய்வது என்பது கொஞ்சம் முடியாத காரியம்.
   
    ஏற்க்கனவே காதல் ஹார்மோன்களின் வேலை, காதல் அபத்தமானது என்று நிறைய எழுதிவிட்டதால்..காதல் பற்றிய புராணத்தை..விட்டுவிடுவோம்.


கொஞ்சம் க்ளோனிங் பற்றி பார்ப்போம்...


   குளோனிங் என்பது ஏற்க்கனவே இருக்கும் இருந்த ஒரு உயிருள்ள ஒன்றை அப்படியே பிரதி எடுப்பது. இந்த பிரதி எடுப்பில் பிரதி எடுக்கப்பட்டது அது எதில் இருந்து பிரதி எடுக்கப்பட்டதோ அதே குணங்களை கொண்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


சரி பொதுவாக பின்பற்றும்  குளோனிங் முறைகளை பற்றி கொஞ்சம் பார்ப்போம்.

  பொதுவாக அதிகமாக ARTIFICIAL EMBRYO TWINNING  மற்றும் SOMATIC CELL NUCLEAR TRANSFER என்ற முறைகள் பயன்படுத்த படுகின்றன.

  இதில் ARTIFICIAL EMBRYO TWINNING என்பது ஒரு சாதாரண  முறை.இது இயற்கையான கருத்தரிப்பு முறையை அப்படியே கொஞ்சம் ஒன்றிபோகும்முறையும் கூட..

   பொதுவாக இயற்க்கையில் ஆண் விந்து அணுவும பெண்ணின் அண்ட அணுவும இணைந்து முதலில் ZYGOTE உருவாகின்றது. பின் அது EMBRYO எனப்படும் கருவாக மாறும். இந்த EMBRYO தான் சில நேரங்களில் அரிதாக இரண்டாக பிரிந்து தனித்தனி கருவாக வளர ஆரம்பிக்கும். அப்படி தனியாக வளரும் இரண்டு கருக்களும் ஒரே முட்டையில் இருந்து வந்தது என்பதால் அது இரண்டுமே ஒரே மாதிரியாக இருக்கும். இது இயற்கையாக இரட்டையர்கள் பிறக்க காரணமாக இருக்கும் ஒரு காரணம். 

  இந்த ARTIFICIAL EMBRYO TWINNING முறை என்பது இயற்கையில் எப்படி தாயின் கருவறைக்குள் அந்த EMBRYO இரண்டாக பிரிகின்றதோ அதை அப்படியே தனியாக வெளியில் ஆய்வுக்கூடத்தில் பிரித்து பின் அதை ஒரு தாயின் கருப்பையில் வளர வைப்பார்கள். இதில் உருவாக்கப்படும் இரண்டு உயிரியும் ஒரே மாதிரி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

  அடுத்து SOMATIC CELL NUCLEAR TRANSFER(scnt) முறை. இதை சொல்லுவதற்கு முன் SOMATIC CELL மற்றும் GERM CELL இந்த இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை கொஞ்சம் பார்த்துவிட்டால் புரிவதற்கு கொஞ்சம் எளிதாக இருக்கும்.

   GERM CELL என்பது ஆண் மற்றும் பெண்ணின் REPRODUCTIVE CELL களான SPERM மற்றும் EGG CELL  போன்றவைகள். இதில் ஒவ்வொன்றிலும் ஒரு இணை ஜோடி குரோமோசோம்களே இருக்கும்.(23 குரோமோசோம்கள் மட்டும்தான்..எனவேதான் இதனால் தனியாக பல்கி பெருகி ஒரு குழந்தையாக வளர முடியாது..எப்போது மற்றொரு ஜோடி குரோமோசோம்கள் உடன் இணைகின்றதோ அப்போதுதான் செல்கள் உருவாகி பல்கி பெருகி உயிர்கள் உருவாக முடியும்))


   SOMATIC CELL என்பது இனப்பெருக்க(GERM CELL) செல்கள் இல்லாமல் உயிரியின் உடம்பின் மற்ற பகுதியில் எடுக்க படும் செல்கள் ஆகும்.( மேலே சொன்ன கதையில் அந்த பெண்ணின் கையில் இருந்து எடுக்கப்படுவது SOMATIC  CELL)

   இதில் இரண்டு ஜோடி குரோமோசோம்கள் இருக்கும் மொத்தம் 46. அதாவது ஒன்று ஆணிடம் இருந்து வந்தது,மற்றொன்று பெண்ணிடம் இருந்து வந்தது.

(சரி இந்த மனிதர்களில் ஆண் பெண் வித்தியாசம் எப்படி என்றால் .....கொஞ்சம் பார்ப்போம் ...குரோமோசோம்களில் பெண்களில்(EGG) எப்போதும் ஒரு ஜோடி "X" குரோமோசோம்கள் மட்டுமே  இருக்கும்.ஆனால் ஆண்களுக்கு(SPERM) "X" அல்லது "Y" இந்த இரண்டில் ஏதாவது ஒன்றை கொண்டு இருப்பார்கள்.

      இணையும் போது  "XX" என்றால் அது பெண். "XY" என்றால் ஆண். இது இணைவதை பொறுத்துதான் ஆண்  மற்றும் பெண் குழைந்தைகள் கருப்பையில் உருவாகின்றன. ........ஆண் மற்றும் பெண்ணை வேறுபடுத்தி  கருவில் பிரிப்பதில் ஆண்களுக்கே முழு உரிமை )

       சரி இப்போது இந்த முறையில் எப்படி குளோனிங் சாத்தியம் என்று பார்க்கலாம். இந்த முறையில் DOLLY என்ற செம்மறி ஆடு முதன் முதலில் உருவாக்கபட்டது என்பது குறிப்பிடதக்கது. அதுவும் 270 க்கும் மேற்ப்பட்ட முயற்சிகள் செய்த பின்னர்தான் அந்த ஆடு உருவாக்கப்பட்டது.இதுதான் இப்போது இருக்கும் குளோனிங் முறையில் உள்ள குறைபாடு  இதுதான்...   அடுத்து நடக்கும் என எதையும் முடிவாக குறிப்பிட்டு சொல்ல முடியாது.....  ஆனாலும் பல  சோதனைகள் ஆராய்ச்சிகள் செய்து ஒரு நல்ல நிலையை க்ளோனிங் முறையில் நெருங்கி கொண்டு இருக்கிறர்கள் நம் மனிதர்கள்.


    சரி இந்த SCNT முறையில் எப்படி குளோனிங் செய்வது  என்று பார்க்கலாம். முதலில் யாரை குளோனிங் செய்ய வேண்டுமோ எடுத்துகாட்டாக என்னை குளோனிங் செய்ய வேண்டும் என்றால் என் கை,முகம் போன்ற எதாவது ஒரு இடத்தில இருந்து  ஒரு செல்லை தனியாக பிரித்து எடுக்க வேண்டும். எப்படி கதையில் வரும் பெண்ணின் கையில் இருந்து அந்த செல் எடுக்கப்பட்டதோ அப்படி....

      அதற்க்கு முன் என் செல்லை வளர வைப்பதற்கு ஒரு வாடகைத்தாய்,மற்றும் ஒரு கருமுட்டை தேவை..அந்தகருமுட்டையில் உள்ள nucleus ஐ நீக்கிவிடவேண்டும் ஏனென்றால் அந்த இடத்தில தான் என் nucleus வைத்து வளர வைக்க வேண்டும். அப்படி nucleus நீக்கப்பட்ட முட்டையில் என் உடலில் இருந்து எடுக்கப்பட்ட செல்லை பொருத்தி அதை ஒரு வாடகைத்தயின் கருப்பையில் முறையாக வளரவைத்தால் அடுத்த கணேஷ் தயார் ஆவான்.

       இங்கு நீங்கள் படிப்பது போல இது ஒன்றும் அவ்வளவு எளிது இல்லை...இந்த முறையில் உருவாக்கப்பட செம்மறி ஆடு கிட்டதட்ட 275 முறை முயன்றபிறகுதான் உருவானது.  இதில் எங்கு பிரச்சினைகள் வரும் என்றால்...அந்த nucleus ஐ பிரிக்கும் போது அதை திரும்பி சரியாக முட்டையில் உல் செலுத்தும் போது. அப்படியே சரியாக செழுத்திவிட்டாலும் அது அடுத்து வரும் நாள்களில் செல்கள் பிரிந்து பல்கி பெருகவேண்டும்.அப்படியே பல்கி பெருகினாலும் அதில் உருவாக்கப்படும் உயிர் எந்தவித குறைபாடு இல்லாமல் இருக்கவேண்டும்.

  இந்த முறைகள் க்ளோனிங் முறைகளில் பொதுவாக பயன்படுத்தபடும் முறைகள். இதில் இன்னும் பலவிதமான முறைகளை மனிதன் தினமும் கண்டுபிடிக்கிறான். உறுதியாக இன்னும் சில ஆண்டுகளில் குழந்தை பெறுவது போல எளிதாக  இந்த க்ளோனிங் வந்து விடும் என நினைக்கிறேன்.

கடைசியாக therapeutic க்ளோனிங் பற்றி சிலவரிகள்.

   இந்த therapeutic க்ளோனிங்கும் ஒரு விதத்தில் சாதாரன க்ளோனிங் முறையை சார்ந்ததுதான். ஆனால் இதன் மூலம் ஒரு முழுமையான உயிரை உருவக்கமுடியாது அதற்க்கு பதிலாக உடலில் உள்ள பாதிப்படைந்த உறுப்புகளை(organs,tissue) புதிப்பிக்க இயலும்.

   இதுவும் நான் மேலே சொன்ன scnt என்ற முறையில்தான் செய்வார்கள் ஆனால் அந்த கரு முழு வளர்ச்சி அடைவதற்கு முன் அதில் இருந்து sten cells பிரித்து எடுத்து அதை மனிதனின் பாதிப்படைந்த இடத்தில வைத்து அதை வளரச்செய்து அந்த இடத்தில இருக்கும் குறையை(பதிக்கப்பட்ட செல்களை) நீக்குவர்கள்.

  அதவ்ர்து முட்டைக்குள் புகுத்தப்பட்ட  nucleus பிரிந்து வளர்ச்சி அடையும் போது அதவது நான்கு முதல் ஐந்து நாள்களுக்குள் வளர்ச்சி அடைந்த அந்த செல்களை பிரித்து எடுத்தால் அதுதான் stem cells. கருவில் வளருவதை இடையிலேயே தடுத்து எடுப்பதால் இதுவும் ஒருவித கொலைதான். சொல்லப்போனால் கருக்கலைப்புக்கு நிகரானது.இருந்தாலும் இதுல இருந்து மிகப்பெரும் நன்மைகள் கிடைக்கும் என்பதால் செய்யவேண்டிய அவசிய நிலை.

     இதில் இன்னும் வளர்ச்சி அடைந்து தனியாக ஒரு உறுப்பையே உருவாக்க முடியும் என நம்புகிறார்கள்.அப்படி உருவாக்க ஆரம்பித்தால் எவ்வளோ பிரச்சினைகள் தீர்ந்துவிடும் அதுமட்டுமின்றி ஒரு மனிதனுக்கு என்னனென்ன உறுப்புகள் அதிகமாக வேண்டுமோ அதை உருவாக்கி கொள்ளலாம். அதவது எனக்கு புத்தகம் படிக்க இரண்டு கண்கள் போதவில்லை என்றால் காசுகொடுத்து இன்னொரு கண்ணை நெற்றியிலோ அல்லது கன்னத்திலோ வளர்த்துக்கொள்ளமுடியும்.

(ஆனால் அது வேலை செய்யுமா என்று எனக்கு தெரியாது)

உணமைக்காதல்...(THE CLONING)

   சரியாக இருந்தால் 35 வயது இருக்கும் அந்த பெண்ணுக்கு. அவள் கையில் ஒரு கடிதம் .....அவளுக்கு தெரியும் அந்த கடிதம் யாரிடம் இருந்து வந்து இருக்கின்றது என்று.  அதில் உள்ள எழுத்துக்கள் அவளுக்கு மிகவும் பரிச்சயம் ஆனவைகள். பிரித்து படித்தாள்  அந்த முழு பக்கத்தில் ஒரு வாக்கியம் மட்டுமே இருந்தது அதற்க்கு கீழ் கையெழுத்து மற்றும் தேதி.

நாம் செர்ந்துவிடுவோம்.....


XY
25-09-2025


     அவள் இதை படித்தவுடன் மெதுவாய் அழுதுகொண்டே அந்த கடிதத்தை கிழிக்க ஆரம்பித்து இருந்தாள். அவள் சிரித்த அந்த சிரிப்புக்கும்,அவள் அந்த கடிதத்தை கிழித்தற்க்கும் காரணம்......சொல்லுகிறேன்... முதலில் அவள் அழுததக்கு

     அவளுக்கு இன்னும் நினைவு இருக்கின்றது அவள் அவனை காதலித்த அந்த நாட்கள்..இருவரும்  உயிருக்கு உயிராக உண்மையாக காதலித்தார்கள். இருவரும் ஒரே இடத்தில வேலை பார்த்ததால் அவர்களின் காதல் வளர எதுவும் தடையாக இல்லை. ஆனால் வழக்கம் போல இறுதியாக சேரும்போதுதான் பிரச்சினை வந்தது

    இவள் வீட்டிற்கு ஒரே பெண் என்பதால் அவளின் பெற்றோருக்கு நிறையா ஆசைகள்..அவர்களின் ஆசைகளுக்கு இவளின் காதலை பலி கொடுக்க வேண்டிய சூழ்நிலை வந்ததால் இவளும் தன் காதலை பலி கொடுத்தாள்.

   ஆனாலும் தனது காதலை எடுத்து சொல்ல தவறவில்லை...கொஞ்சம் முரண்டு பிடித்தும் பார்த்தாள்..ஆனால் அவர்கள் ஜெயித்தார்கள். வீட்டை விட்டும் போக முடியாது. அவளுக்கு நன்றாக தெரியும் இவள் மீது பெற்றோர்கள் எந்த அளவு பாசம வைத்து இருக்கிறார்கள் என்று.

   அவள் காதலித்ததக்கும் இதுவே காரணம். இவ்வளவு பாசம வைத்து இருக்கும் பெற்றோர்கள் எப்படியும் தனது காதலை ஏற்றுக்கொள்வார்கள் என்ற நம்பிக்கையில்தான் அவள் காதலுக்கு சம்மதம் சொல்லி அவனை காதலிக்க ஆரம்பித்தாள்.

  எப்படியோ அவளின் பெற்றோர்கள் ஒரு முடிவை அவளிடம் சொல்லிவிட்டார்கள் தாங்கள் பார்த்த மாப்பிளையைத்தான் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று.

 அவளுக்கு இருந்தது எல்லாம் ஒரே கவலைதான் இந்த விஷயத்தை எப்படி தன் காதலனிடம் சொல்ல போகிறோம் என்பதுதான்..

   உண்மையான காதல் இப்போது சென்று "நீ என்னை மறந்துவிடு" என்று சொன்னால் உடைந்து போவான்.என்ன செய்வது என்று அறியாமல்  அவனை சந்தித்தாள்.ஒருவழியாக தயங்கி தயங்கி ஆரம்பித்து சொன்னாள்.

  நம்மை உயிராக காதலித்த இவளா இப்படி சொல்லுகிறாள் என்ற எண்ணம அவனின் மனதில் ஓடுவதை இவள் அவனின் முகத்தில் இருந்து  தெரிந்து கொள்ளாமல் இல்லை.

   நீண்ட மௌனம்.அடுத்து யார் பேச என்ன பேச என்று தெரியாத அமைதி.முதலில் அவன்தான் பேசினான்......"பார் நான் உணமையாக காதலித்தேன் ஆனால்  நீ இப்படி சொல்லுகிறாய் ....எனக்கு நன்றாக தெரியும் இதற்க்கு எதாவது ஒரு காரணம் இருக்க வேண்டும்.நான் உன்னை புரிந்து இருக்கிறேன்.சரி நீ உன் வீட்டில் சொல்வதை கேள்  எனக்கு ஒன்றும் பிரச்சினை இல்லை".... என்று சொல்லி முடித்தான். அவள் கண்களை பார்க்கவில்லை.

   அவளுக்கு தெரியும் இது அவனுக்கு எந்த அளவு வலியைத் தரும் என்று. இறுதியாக என்னை மன்னித்துவிடு எனறாள் அழுது கொண்டே. அவனிடம் இருந்து எந்த ஒரு பதிலும் இல்லை.

     "என்னோடு ஒரு ஒருமணி நேரம் வரமுடியுமா" என்றான். அவள் எந்தவித தயக்கமும் இல்லாமல் சரி என்றாள்.               அவனை பற்றி நன்றாக தெரியும்..என்பதால். .....    அதனால் எங்கு என்று கூட கேட்காமல் சரி என்றாள்.

     அவன அவளை அழைத்து சென்றது ஒரு மருத்துவ ஆய்வுகூடத்துக்கு. இப்போதும் அவள் ஒன்றும் கேட்கவில்லை.

  அவன் தனியாக பிரிந்து சென்று அங்கு இருந்த மருத்துவரிடம் எதோ பேசினான்.அதற்க்கு பின் அவளை உள்ளே அழைத்தான்.உள்ளே சென்ற அந்த மருத்துவர் கையில் ஒரு குச்சி போன்ற கருவியோடு வந்தார்.

  அதை அவளின் கையில் மனிக்கட்டுகு மேல் வைத்து கொஞ்சம் மெல்ல அழுத்த அவளுக்கு சுருக்கென்று இருந்திருக்க வேண்டும் மெதுவாக கையை அவள் பக்கம் இழுத்தாள். மருத்துவர் அந்த குச்சியை வேகமாக எடுத்து கொண்டு உள்ளே சென்றார்.

அவள் பின் அவனிடம் கேட்டாள் "என்ன இது? எதற்காக இப்படி?" என்றாள்.

    "நான் உன்னை எந்த அளவு உண்மையாக காதலித்தேன் என்பது உனக்கே தெரியும், அப்டி இருக்க நான் உன்னை முழுவதும் மறந்துவிட்டு இன்னொருவளுடன் வாழ்வது என்பது என்னால் முடியாத காரியம்"..என்று சொல்லிவிட்டு தன் பேச்சை நிறுத்தினான்.

  அதான் இப்போது நம்மால்தான் ஒன்று சேரமுடியவில்லை ஆனால் நாம் ஒன்று சேர்வதற்கு ஒரு வாய்ப்பு இருப்பது என்பது எனக்கு தெரியும். அது நம்மை CLONING செய்வது. அப்படி உன்னையும் என்னையும் CLONING முறையில் உருவாக்கி அதன் மூலம்  நாம் இணைவோம் .....அதைத்தான் நான் செய்ய போகிறேன் என்றான்

   அவன் இதை சொல்ல சொல்ல அவளுக்கு இதை நம்புவதா இல்லை இவன் எதோ விபரீதமாக செய்ய போகிறான் என்று கவலை கொல்வதா என்று தெரியாமல் முழித்தாள்.

 "இப்படி கண்டிப்பாக செய்யவேண்டுமா" என்றாள் அவனிடம். அதற்க்கு அவன் "கண்டிப்பாக" என்றான். அதற்க்கு இவள் ஒன்றும் சொல்லவில்லை.

   அதற்க்கு பிறகு இருவரும் பிரிந்தார்கள். அவள்தான் வேலையைவிட்டு நின்றாள். நாட்கள் கழித்து தொலைபேசியில் மட்டும் தனக்கு திருமணம் என்று அவனை அழைத்து இருந்தாள். அவளுக்கு தெரியும் அவன் வரமாட்டான் என்று.

   அவனை பற்றி அவளின் தோழிகளிடம் கேட்டுவைத்து இருந்தாள். இன்னும் அவன் திருமணம் செய்து கொள்ளவில்லை அவனுக்கு அந்த எண்ணமும் இல்லை என்பதை.    இதை நினைக்கும் போதெல்லாம் அவளின் மனம் வலித்தது. எதோ அவனுக்கு பெரிய துரோகம் செய்ததாகவே நினைத்தாள்.


    அவனும் அதற்க்கு பிறகு எப்போதும் திருமணம் செய்து கொள்ளவில்லை. அவனது முழு ஈடுபாடும் எப்படி இருவரையும் குளோனிங் முறையில் உருவாக்குவது என்பதை பற்றியே..அதற்க்கு தேவையான அனைத்து முயற்சியையும் செய்து கொண்டிருந்தான்.


   இப்போது அவனுக்கு அதற்க்கு உண்டான வழி கிடைத்து இருக்க வேண்டும். அதன் இவளுக்கு நாம் சேர்ந்து விடுவோம் என்று கடிதம் எழுதி இருந்தான்.உணமையில் அவனுக்கு ஒரு வழியும் கிடைத்து இருந்தது.

.

கடிதத்தை கிழித்தற்க்கு காரணம்..........

   என்னதான் அவனை உயிருக்கு உயிராக காதலித்து இருந்தாலும் இப்பொது அவளுக்கென்று தனி குடும்பம்,இருக்கின்றது. கணவன் அவள் நேசிக்கும் ஒரு மகள் என்று. இந்த விசயங்கள் அவர்களுக்கும் தெரிந்தால் ஏற்ப்படும் பிரச்சினைகளை தவிர்க்கவே அதை கிழித்தாள். அவர்களுக்கு இது தெரியவும் அவள் விரும்பவில்லை.

   எப்படியோ அவனது காதல் நிறைவேறவில்லை என்றாலும் அவனது இந்த குளோனிங் எண்ணமாவது  நிறைவேற போகின்றது என்ற ஒரு சந்தோசம். அவளுக்கு.


  அப்படியே அவனின் குளோனிங் திட்டம் நிறைவேறி குளோனிங் ஜோடிகளுக்கு திருமணம் நடப்பதாக இருந்தால் ,....அப்போது அவன் இவளுக்கு திருமண அழைப்பிதல் அனுப்பவதாக இருந்தால் அதற்கு இவள் இன்னும் இருபது வருடங்களுக்கு மேலாக காத்திருக்க வேண்டும்.அவள் காத்திருப்பாள் ஏனென்றால் அவள் அவனை உணமையாக காதலித்து இருந்தாள். அவர்களின் காதல் உணமையானது.

  

நட்சத்திர குழந்தைகள்.....

    அறிவுத்திறனைவிட கர்ப்பனைத்திறனே சிறந்தது என்று நமது ஐன்ஸ்டீன் தாத்தா சொல்லி இருக்கிறார். அந்த வகையில் பார்த்தல் இந்த உலகில் கற்பனைத்திறனை அதிகம் உபோயோகிப்பவர்கள் என்னை பொறுத்தவரையில் கவிஞர்களாகவே இருப்பார்கள்.

    முதல் பத்தியை கொஞ்சம் கவிஞர்களை  புகழ்ந்து எழுதி இருப்பதால் இனியும் தொடர்ந்து அப்படித்தான் இருக்கும் என நீங்கள் தொடர்ந்தால் அது தவறு...

     நான் இங்கு சொல்ல போவது கவிஞர்களின் கற்பனைத்திறன் எந்த அளவு ஆபத்தானது என்பதை கொஞ்சம் பார்க்கலாம்...

      என்னை பொறுத்தவரையில் உலக கவிஞர்கள் அதிகம் கவிதைகளில் கற்பனையாக எடுத்துகொள்ளுவது சில  விசயங்களைத்தன்....அவை...நிலவு,நட்சத்திரம்,மேகம் அல்லது வானம.
இந்த மூன்றில் இப்போதைக்கு இந்த நட்சத்திரத்தை மட்டும் கொஞ்சம் பார்க்கலாம்.(இதப்பத்தி மட்டும்தான் எனக்கு கொஞ்சம் தெரியும் என்பதற்காக)

    சரி அவர்கள் எப்படி நட்சத்திரத்தை பயன்படுத்துகிறார்கள் என கொஞ்சம் பார்ப்போம்...(நான் இவைகளை சில இடங்களில் படித்து இருக்கிறேன்)

      நட்ச்சத்திரங்களை காதலியின் பருவோடு,கண்ணோடு,பல்லோடு,சிரிப்போடு...என எல்லாவற்றோடும் ஒப்பிடுவார்கள்..

     நிலவு ஒருநாள் இல்லை என்றால் என்ன இருக்கும் நட்சத்திரங்களில் முகம் பர்த்துகொள்வோம் என்பார்கள்..

      காதலி கோலம போடா வைக்கப்பட்ட புள்ளிகள் என்பார்கள்..இந்த மாதிரி நீண்டு கொண்டே போகும் இந்த பட்டியல்.


    சரி இதில் என்ன தப்பு இருக்கு ..இதைப்பற்றி நீ எழுதவந்துட்டே  என கேட்க்கிறவர்களுக்கு........

      பொதுவாக எல்லோரும் நட்சத்திரங்களை பற்றி தெரிந்தவர்களே...இருந்தாலும் எனக்கு தெரிந்த சில விசயங்க்களை இங்கு சொல்லுகிறேன்..

     இதை படித்த பின் நட்சத்திரத்தை பருவோடோ,அல்லது அதில் முகம் பார்க்கும் என்னமோ வராது என நினைக்கிறேன்.

   உடனே இவன் எதோ கவிஞ்ஞர்களை பற்றி தவறாக எழுதுகிறான் என்று எண்ணி  கவிஞ்ஞர்கள்...

கவிதை எழுதுவது ஒரு
கலை என்று அறியாமல்...
கண்டதை படித்து விட்டு.
கவிஞ்ஞர்களையும் மேலான
கற்பனையையும் குறைசொல்லும்
கணேஷுக்கு கண்டனங்கள்...!!!!!

  இப்படி என்னை கவிதைகாளால் திட்ட வேண்டாம் என கேட்டு கொள்கிறேன்.
(மேலே உள்ளது கவிதை என்பதை இங்கே சொல்லி கொள்ளுகிறேன்)

   முதலில் நட்சத்திரம் எப்படி உருவாகின்றது என பார்ப்போம்.


     பொதுவாக நட்சத்திரம் என்பது ஒளிரும் மிகப்பெரிய தோற்றம் கொண்ட,அதன் சக்தியில் இருந்து அதிக ஒளியை வெளியிடுகின்ற ஒன்று.. இப்படிப்பட்ட நட்சத்திரதிற்கு பிறப்பு எப்படி என்றால்...விண்வெளியில் உள்ள தூசுகள் ஒன்றோடு ஒன்று இணைந்து முதலில் ஒரு மேகமாக உருவெடுக்கின்றது. இதை நட்சத்திரங்களுக்கு கரு என்று கூட சொல்லலாம்.

      அப்படி மேகம் போன்று அமைந்த அந்த தூசுகள் ஒன்றோடு ஒன்று(GRAVITATIONAL FORCE னால்) உராசுகின்றன.அப்படி உராசும்போது உராய்வினால் முதலில் கொஞ்சம் வெப்பம் வெளிப்படுகின்றது... பின் அங்கு இருக்கும் HYDROGEN&HELIUM வாயுவோடு சேர்ந்து ஜோராக எரிய ஆரம்பிக்கும். இந்த நேரத்தில் அதில் உள்ள அணுக்கள் ஒன்றோடு ஒன்று COLLAPSE  ஆகி பின் அதிக வெப்பம்..பின் அதில் உள்ள அணுக்கள் மீண்டும் COLLAPSE ஆகுதல் இப்படியே அந்த மேகத்தில் உள்ள எரிபொருள்(HELIUM) தீரும்வரை இப்படி எரிந்துகொண்டே இருக்கும். இந்த எரிபொருள் என்ன என்றால் இந்த பிரபஞ்சம் உருவாகிய உடனே உருவான HYDROGEN மற்றும்  HELIUM வாயுதான்.(4 hydrogen atoms  எரிந்தால் = ஒரு  helium அணு உருவாகும்.)நட்சத்திரத்தில் ஹைட்ரோஜேன் எரிந்து அதில் இருந்து ஹீலியம் வாயு வெளிப்பட்டு அதையும் எரிபொருளாக வைத்து எரிகின்றது நட்சத்திரங்கள்.

       இந்த நட்சத்திரங்கள் தான் ஒரு கூட்டமாக அமைந்து இந்த பிரபஞ்சத்தின் உருவத்தை கொடுக்கின்றன....நட்சத்திரம் ஒளிர்வது போல நமக்கு தெரிந்தாலும் ஆடு சுடர் விட்டு ஜோராக எரிய மட்டுமே செய்யும்.ஆனால் அங்கு இருந்து வரும் ஒளி ஆனது காற்றலைகளில் விலக்க பட்டு நமக்கு ஒளிர்வது போல தெரியும்...

     இந்த பிரபஞ்சம் தொடங்கிய பிறகு முதலில் வானில் ஒளிரத்தொடங்கியது இந்த நட்சதிரங்கள்தான் இந்த நட்சத்திரங்களில் இருந்துதான் இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் மற்றவை உருவானது. நம்மின் பிறப்பிடமும் நட்சத்திரம்தான் என்றால் நீங்கள் என்னை ஒரு மாதிரி நினைப்பிர்கள்..ஆனால் உண்மை அதுதான்.எப்படி என்று பார்ப்பதற்கு முன் இந்த நட்சத்திர வாழ்க்கை மற்றும் வகைகளைப்பற்றி கொஞ்சம் பார்க்கலாம். 

NEBULAE   - கரு முட்டை

PROTO STARS   - கரு

T - TAURUS STARS - குழந்தை பருவம்

MAIN SEQUENCE  - இளம் வயது பருவம்

RED GIANT   - முதுமை பருவம்

அதற்க்கு அடுத்தது நட்சத்திர மரணம். அதாவது SUPERNOVA (சாதாரண மரணம்), HYPER-NOVA (அகாலமரணம்)

சரி முதலில் NEBULAE பற்றி.


NEBULAE  என்பது தூசுகள் கலந்த புழுதி படலம் என்பதை ஏற்கனவே மேலே சொல்லிவிட்டேன்.

PROTO STARS


   அந்த மேகத்தில் உள்ள தூசுகள் உராய்ந்து அதில் இருந்து ஈர்ப்பு விசை ஏற்பட்டு அந்த தூசுகள் இன்னும் நெருக்கமாக இணைந்து ஒரு கூட்டமைப்பாக இருக்கும்.இந்த நிலையில் HYDROGEN FUSIONS ஆரம்பித்து இருக்காது.ஆனால் எப்போதுவேண்டுமனாலும் எரிகின்ற நிலையில் இருக்கும் இந்த நிலை மட்டும் உருவாகவே 100000 வருடங்கள் ஆகுமாம்.

T-TAURUS STARS

 இது HYDROGEN எரிவதற்கு முன்னாடி உள்ள நிலை.அதாவது அந்த மேகத் தூசுகளின் உராய்வின் மூலம் கொஞ்சம் வைப்பம் உருவாகி ஒளிரத்தொடங்கும் ஆனாலHYDROGEN FUSIONS நடக்க தேவைப்படும் வெப்பம் உருவகும்வரைதான் இப்படி எரியும் எப்போது HYDROGEN FUSIONS தொடங்கியதோ அவ்வளவுதான் அதற்க்குப்ப்பிறகு அந்த நட்சத்திரம் ஜோராக கொழுந்து விட்டு எரிய ஆரம்பிக்கும்.

MAIN SEQUENCE

     ஒருவழியாக HYDROGEN FUSION தொடங்கி அதில் உள்ள HYDROGEN ஐ வைத்து நட்சத்திரம் ஜோராக எரிந்து கொண்டிருக்கும் நிலை. இந்த நிலையில்தான் பல்வேறு பொருள்கள் ,தாதுக்கள் உருவாகின்றன. அதாவது CARBON,NEON,OXYGEN,SILICON,IRON போன்றவைகள்.இவை அப்படியே உருவாகி நட்சத்திரத்தை சுற்றி அடுக்கு அடுக்காக அமைகின்றது. இந்த அடுக்கு எப்போது வலுக்கின்றதோ அப்போது நட்சத்திரத்தின் மரணம் நெருங்கி விட்டது என்று அர்த்தம இப்படி எரியும் நட்சத்திரங்கள் கிட்டத்தட்ட சில பில்லியன் வருடங்கள் வரை எரியும் என்பது குறிப்பிடதக்கது.
இதில் உருவாகும் வெப்ப நிலை கிட்ட தட்ட 18000000 F .எனவேதான் சொன்னேன் இதைப்படித்த பிறகும் நட்சத்திரதில் முகம் பார்க்கும் அல்லது ஒப்பிடும் எண்ணம வராது என்று.....

RED GIANT

      இந்த நிலையில் நட்சத்திரம் ஆனது தனது HYDROGEN எரிபொருள் தீர்ந்த நிலையில் அதற்க்கு அடுத்தபடியாக இருக்கும் HELIUM வாயுவை வைத்து எரிய ஆரம்பிக்கும்.இந்த HELIUM வாயுவும் ஒரு கட்டத்தில் தீர்ந்து போகும் நிலை வரும்போது அதற்க்கு அடுத்தபடியாக அது எரியும்போது உருவான ELEMENT களை எரிக்க ஆரம்பிக்கின்றது.


    வரிசைப்படி பார்த்தல் முதலில் CARBON---- NEON... OXYGEN....SILICON....IRON.. இப்படியே வரும்போது பிரச்சினை இரும்புத்தாதுவில் வருகின்றது.அதாவது எல்லாவற்றையும் எரித்து தீர்த்த பின்னர் இரும்பு தாதுவே மிதம இருக்கின்றது..இரும்பு மிகவும் கடினமான ஒன்றாக இருக்கும்.எனவே இதை எரித்து ஆற்றல பெறுவது என்பது முடியாத காரியம்...போதுமான வெப்ப அழுத்தம் இல்லாமல் நட்சத்திரமானது நிலையான GRAVITY லும்  இருக்க வேண்டும்..இந்த நிலையில் தான் இரும்பு தாதுக்கள் வேகமாக உள்ள்நோக்கி சுருங்கி விழுந்து அந்த நட்சத்திர கருவில் ஒரு மிக பெரிய வெடிப்பு ஏற்ப்பட வைக்கின்றது.இந்த வெடிப்பு நட்சத்திரத்தின் உருவ அமைப்புக்கு ஏற்றவாறு பிரிக்கப்டும்.

     சிறிய நட்சத்திரங்கள் 3~15 மடங்கு SOLAR MASS உள்ள நட்சத்திரங்கள் COLLAPSE ஆனால் அது SUPERNOVA. அதாவது நட்சத்திரங்களின் சாதாரண மரணம்.அதே நேரத்தில் 100 ~300 மடங்கு SOLAR MASS உள்ள நட்சத்திரங்கள் மரணத்திற்கு சென்றால் அது HYPER-NOVA அதாவது அகால மரணம்.

நட்சத்திரத்தின் SUPERNOVA வில் இருந்து WHITE DWARF,NEUTRON STAR கல் உருவாகின்றன.

  நட்சத்திரத்தின் நிறை 1.4 ~3 SOLAR MASS வரை இருந்தால் அது NEUTRON STAR ஆக முடியும்.
      மேலும் 1.4 SOLAR MASS இருக்கும் நட்சத்திரம் ஆனது மரணம் அடைந்தால் அது WHITE DWARF ஆக மாறும். இந்த WHITE DWARF க்கும் தமிழ் நாட்டுக்கும் அதிக தொடர்பு உண்டு..இதை கண்டுபிடித்து சொன்னவர் ஒரு தமிழர். அவர் சார்.சி.வி.ராமன்.அவர்கள். ஆனால் வெளி உலகத்திற்கு..SUBRAHMANYAN CHANDRASEKHAR. அவரது இந்த கண்டுபிடிபப்பை வைத்து இந்த 1.4 SOLAR MASS க்கு CHANDRA SEKA R LIMIT என்று பெயர். இதற்க்கு அவருக்கு NOBEL PRIZE கிடைத்தது. ஆசியா கண்டத்திலிருந்து முதன் முதலில் இந்த பரிசை பெற்றவர் இவரே அதுவும் அறிவியலுக்கு..அப்படி பட்ட தமிழகத்தில்தான்..இன்று ஏகப்பட்ட ஆனந்தாக்கள் தங்களது வேலையை சிறப்பாக செய்து கொண்டு இருக்கிறார்கள் என்பது என்னை பொறுத்தவரையில் கொஞ்சம் வேதனையான விஷயம்.

    அடுத்து HYPER-NOVA நடக்க நட்சத்திரம் ஆனது 100~300 SOLAR MASS இருக்க வேண்டும். அப்படி இருந்து அது HYPER-NOVA ஆக வெடித்தால் அந்த நட்சத்திரம் ஆனது ஒரு BLACK HOLE உருவாக காரணமாகின்றது.(1 HYPER-NOVA = 100 SUPERNOVA)
   
     சரி இதில் நாம் எங்கு இருந்து வந்தோம் என்று கேட்டால் இப்படி வெடித்து சிதறும் பொருள்களில் இருந்துதான் விண்வெளியில் உள்ள பல பொருள்கள் உருவாகின்றன..
       நமது பூமியும் அப்படி உருவான ஒன்றுதான். அப்படி வெடிக்கும் போது CARBON---- NEON... OXYGEN....SILICON....IRON. போன்ற உயிர் வாழ தேவையான் கனிமங்களும் தூக்கி எறியப்படும். அப்படி தற்செயலாக நட்சத்திரத்தில் இருந்து தூக்கி எறியப்பட்ட பொருள்கள் சரியாக தற்செயலாக  இணைந்து ஒரு உயிர் உள்ள MOLECULES உருவாகி அது பல்கி பெருகி ..பரிணாம வளர்ச்சி பெற்று...மனிதனாக வளர்ந்து இங்கே இதை எழுதிக்கொண்டிருக்கின்றது


     நீங்கள் கவனமாக படித்து இருந்தால் நட்சத்திர வாழ்க்கை பருவத்தில் எங்கே இளமைப்பருவம் என்ற கேள்வி எழுந்து இருக்கவேண்டும் இதில் இளமை பருவம் இல்லை..... ஏனென்றால் இளமை பருவம் என்றால் ஒரு நட்சத்திரத்துக்கும் மற்றொரு நட்சத்திரத்திற்கும் காதல் என்ற ஒன்று வந்து அது போய் மற்றொன்டோடு இணைய அதில் இருந்து வேரேதுவும் ஆனால் பாதிப்பது நாம்தான்.எனவேதான் இயற்கையிலேயே நட்சத்திரத்துக்கு இளமை பருவம் இல்லை.(அதாவது நட்சத்திரமும் நட்சத்திரமும் மோதாது என்பதே இதன் விளக்கம்)

(நான் st.Hawking உடைய brief history of time புத்தகத்தில் படித்த கொஞ்ச அறிவைவைதுகொண்டு..கொஞ்சம் வலையில் தேடி இதை கொடுத்து இருக்கின்றேன்..உங்களுக்கு விரிவான விளக்கம் தேவை என்றால் இந்த புத்தகத்தை வாங்கி படிக்கலாம்)

இரண்டாவது ஐன்ஸ்டின்.

     குளோனிங் பற்றி படிக்க நேர்ந்தது. இதைப்பற்றி படிக்க படிக்க ஆர்வம அதிகமானதால். அதிக நேரம் செலவிட்டு குளோனிங் என்றால் என்ன என்பதை ஓரளவு தெரிந்துகொண்டேன்.

       குளோனிங் பற்றி விரிவாக சொல்ல நினைப்பதற்கு முன் ஐன்ஸ்டீன் வந்து புகுந்து கொண்டார். என் நிலையில் ஐன்ஸ்டீனுக்கே முதலிடம் என்பதால் குளோனிங் பற்றியதை தள்ளிவைத்துவிட்டு இப்போது ஐன்ஸ்டீன் புராணம் பாடலாம் என்று நினைக்கிறேன்.

   அது என்னமோ தெரியவில்லை ஐன்ஸ்டீனை பற்றி எழுதுவது என்றாலே எனக்குள் ஒரு இனம்புரியாத சந்தோசம்....

     சரி இங்கு நான் சொல்வதற்கும் குளோனிங்க்கும் என்ன தொடர்போ அதைமட்டும் இப்போது சொல்லிவிடுகிறேன்.
அதாவது குளோனிங் என்றால் என்ன என்பதை மட்டும்.

    குளோனிங் என்பது ஏற்க்கனவே இருக்கும் அல்லது இருந்த ஒரு உயிரினத்தை (ORGANISM) அப்படியே பிரதி எடுத்து(CHROMOSOME,GENE) அதைபோன்றே வேறொரு உயிரினத்தை உருவாக்குவது அப்படி உருவாக்கப்படும் உயிரினம் ஆனது எதில் இருந்து உருவாக்கபட்டதோ அதன் தன்மைகள் அனைத்தையும் அப்படியே கொண்டிருக்கும்.அதாவது CHROMOSOMES,GENES போன்றவைகள்,மற்றும் அதன் பண்புகள்.(இதில் பல வகைகள் உள்ளன..விரிவாக எழுத எண்ணம)

    சொல்லப்போனால் இப்போது என்னை குளோனிங் செய்கிறோம் என்றால், உருவாக்காபட்ட இன்னொரு கணேஷ் 24 வருடங்கள் கழித்து இதே மாதிரி எதாவது ஒரு பெயரில் ஒரு வலைப்பூ தொடங்கி (பின்னூட்டம் யாரும் போடாவிட்டாலும் கவலை இல்லாமல்) எழுதிக்கொண்டிருப்பான் என வைத்துகொள்ளுங்கள்.

     சரி அப்படி க்ளோனிங் முறையில் ஐன்ஸ்டீனை உருவாக்கினால் அவர் எப்படி இருப்பார் ..என்னென்ன மாற்றங்கள் இந்த உலகத்தில் நிகழும் என்பதை கொஞ்சம் பார்ப்போம்.

   முதலில் அவர் சிறுவயதில் பாதிப்படைந்த DYSLEXIC என்ற நோயை அவரது ஜீனில் இருந்து நீக்கவேண்டும். இதனால் அவர் சிறுவ வயதில் பெறும் பாதிப்படைந்திருந்தார்.(இந்த நோய் மிகப்பிரபலமான LEONDRO DA VINCI.HANS CHRISTIAN ANDERSEN,NIELS BOHR போன்றவர்களையும் தாக்கி இருந்தது.)

    இன்னும் சிலவருடங்களில் குளோனிங் முறையில் இப்போது இருக்கும் சில சிக்கல்களை தவிர்த்து எளிதாக குளோனிங் செய்யும் முறை வந்துவிடும். அதற்க்கு பிறகு ஐன்ஸ்டீனை வெற்றிகரமாக குளோனிங் செய்யலாம்.

      அவர் இறந்த பின்னர் அவரது மூளையை இன்றுவரை பதப்படுத்தி வைத்து இருக்கின்றார்கள்.அதில் இருந்து GENETIC பொருள்களை எடுத்து இன்னொரு ஐன்ஸ்டீனை உருவாக்கலாம். அப்படி உருவாக்கினால்...என்ன நிகழும் என்பதை கொஞ்சம் கற்பனை செய்து கிழே கொடுத்துள்ளேன்....

அவர் தனது 18 வயதிற்குள் என்னென்ன விசயங்களில் தேர்ச்சி பெற்றிருப்பார் என்பதை பார்ப்போம்.

1)அவரது முந்தைய வாழ்வில் கண்டுபிடித்த அனைத்தையும் பற்றி தெரிந்து கொண்டிருப்பார்.அதில் முழுவதும் தெளிவு பெற்றிருப்பார்.

2) தனது அறிவியல் அறிவுக்கு,ஆராய்ச்சிக்கு கணினியை எப்படி முழுமையாக பயன்படுத்தவேண்டும் என்பதை கற்றிருப்பார்

3)அவர் முதலில் செய்த தவறுகள் மற்றும் அது பின்வந்த காலங்களில் எப்படி சரி செய்ய பட்டு இருக்கின்றன என்பதை முழுவதும் அறிந்து இருப்பார்.

4) அவரது கண்டுபிடிப்புகள் அல்லாத மற்றவர்களின் கண்டுபிடிப்புகளையும் பற்றி முழு அறிவை கொண்டு இருப்பார்.

5) 1950 ஆம் ஆண்டுக்கு பிறகு நமது விண்வெளியில் என்னென்ன மாற்றங்கள் எப்படி நிகழ்ந்தன என்பதை பற்றி முழு அறிவு அவரிடம் இருக்கும்.

இவைகளை அனைத்தும் தனது 18 ஆம் வயதிற்குள் முழுவதும் தெரிந்து வைத்து இருப்பார்.

பின் 18 வயதிற்கு மேல் ..
     1) அவர் இறப்பதற்கு முன் செய்துகொண்டிருந்த UNIFIED THEORY யை மீண்டும் தொடருவார்.
    
     2) அதோடு அப்போது இருக்கும் காலத்திற்கு ஏற்றவாறு சில THEORY கள்,மேலும் பல கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து கொண்டு இருப்பார்.

     3) அணுசக்தியை எப்படி பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும் என்பதில் புதிய முறைகளை கண்டுபிடித்து உலகிற்கு சொல்லுவார்.
    
     4) தனது 22 ஆம் வயதில் அவர் முயன்று கொண்டிருந்த UNIFIED THEORY யை முழுவதும் கண்டுபிடித்து முடித்து இருப்பார். அதன் மூலம் இந்த பிரபஞ்சம் எப்படி(SINGULARITY) முதன் முதலில் உருவாகியது..இப்போது அது ஏன் இப்படி இருக்கின்றது..இனி வரும் எதிர்காலத்தில் என்னென்ன மாற்றங்கள் பிரபஞ்சத்தில் நிகழும் என்பதை சரியாக விளக்குவார்
.
     இதனால் கோபம அடைந்த கடவுள் சம்பந்தபட்டவர்கள் ஐன்ஸ்டீனுக்கு எதிராக போர்க்கொடி தூக்குவார்கள். இதனால் ஐன்ஸ்டீன் மிகவும் மனவருத்தத்துக்கு உள்ளாவார்.
    ஆனால் அடுத்து வரும் காலங்களில் ஐன்ஸ்டீன் கண்டுபிடித்ததே சரியாய் இருக்கும் என்ற நம்பிக்கை அறிவியல் அறிஞ்ஞர்கள் அல்லாத சாதாரண மக்களுக்கும் வரும்.அப்போது ஐன்ஸ்டீனை பற்றி சாதரண மக்களுக்கும் தெரிந்து இருக்கும்.

  அவருக்கு கிடைக்ககூடிய NOBEL PRIZE அவருக்கு 24 ஆம் வயதில் கிடைக்கும்.

     அதுக்கு பிறகு வரும் காலங்களில் தனக்கு பிடித்தமான வயலின் வாசிப்பது,கடல் பிரயாணம் செய்வது போன்ற அவரது பொழுதுபோக்குகளில் அவரது காலங்களை கழிப்பார்.
     இதற்க்கு இடையில் உலகெங்கும் உள்ள விஞ்ஞாநிகளுக்கு, மாணவர்களுக்கு பகுதிநேரமாக அறிவியல் சம்பந்தமான கல்வியுரை வழங்குவார்.

    இது தவிர அவரது வாழ்க்கையில் ...கண்டிப்பாக எந்த ஒரு பெண்ணையும் காதலிக்க முயற்சிக்க மாட்டார்.

    (ஐன்ஸ்டீன் முதல் திருமணம் காதல் திருமணம். அதுவும் அவர் படிக்கும் போது.அவர் காதல் திருமணம் சந்தோசமாக இருக்கவில்லை... பின்னர அந்த பெண்ணை (மிலேவா)விவாகரத்து செய்தார்..தனக்கு கிடைத்த நோபல் பரிசை தனது காதல் மனைவிக்கு கொடுத்தார் (ஏற்க்கனவே அந்த பெண்ணிடம் சொல்லிவைத்து இருந்தார் நோபல் பரிசு கிடைத்தால் கொடுப்பதாக்..)

பின்னர் வேறு ஒரு பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்))

   இப்படி சொல்லி கொண்டே போகலாம்...ஆனால் நீங்கள் இந்த கணேஷுக்கு எதோ ஆகிவிட்டது என்று நினைக்கும், முன்னால்  இங்கே நிறுத்தி விடுவது நல்லது..என நினைக்கிறேன்.

  குளோனிங் முறையில் ஐன்ஸ்டீனை உருவாக்க வேண்டும் என்பது எனது ஆசையே..ஆனால் இப்பொது இருக்கும் குளோனிங் முறைகளில் மிகுந்த சிரமங்கள் இருக்கின்றன. வருகின்ற காலங்களில் சிரமங்கள் நீக்கப்பட்டு குளோனிங் முறையில் மனிதர்களை உருவாக்கலாம் என்பதே...எனது கருத்து...

   ஆனால் இப்போதே சிலர் குளோனிங் முறையில் மனிதர்களை உருவாக்கி விட்டோம் என்கிறார்கள்...அது அவ்வளவு சுலபம் இல்லை என்பதை நான் படித்து தெரிந்து கொண்டேன்....அப்படியே சிலர் உருவாக்கி இருந்தாலும் அது முழு வெற்றி அடைந்திருக்காது.

  ஆனால் சில ஆண்டுகளில் இதில் உள்ள சிரமங்கள் எல்லாம் நீக்கப்படும்.என நம்புகிறேன்.

    .