சில விசயங்கள்..

   ஐன்ஸ்டீன் மீதுள்ள ஆர்வத்தில், எல்லோரும் இலக்கியத்தோடு கவிதைகள், பாக்கள் எழுதுகின்றார்களே நானும் எழுதி பார்த்தால் என்ன என்று  யோசித்ததின் விளைவாய் சிலவற்றை எழுதினேன்..(ஐன்ஸ்டீன் பா)

   அறிவியல் விசயங்களை சரியான பா வடிவில் யோசித்து எழுதுவது கொஞ்சம் சிக்கலானது, எதுகை,மோனையோடு சரியான யாப்பு இருக்கவேண்டும்..ஒன்றை எழுதி முடிக்கும் நேரத்தில்..இரண்டு அறிவியல்புனைவு கதைகள் எழுதி இருக்க முடியும் என்னால்...

   சில விசயங்களை கட்டுரையாக சொன்னால் அதிகம் விரும்பமாட்டார்கள் அதை கற்ப்பனை எனும் சாக்லேட் தடவி கதையாக சொன்னால் கொஞ்சம் படிப்பார்கள் என்பது என் எண்ணம..இதில் இலக்கியத்தன்மையோடு எழுதுகிறேன் என்று  ஏதாவது எழுதினால் படிப்பது சந்தேகம்தான்...இருந்தாலும் எனக்கு ஆர்வம் அதிகம் இதில்..அப்படி எழுதியது..

வெளிவளைந் திருப்பதின்  விளைவே அங்கு
ஒளிவளைய காரணம் என்பதும் உன்னறிவு.
புதுவடிவமது ஈர்ப்புவிசைக்கு கொடுத்தாய் அதிங்கு
பொதுசார்பியல் தத்துவமாய் உன்புகழ் உணர்த்த.

   காதல் கவிதைகள் எழுத காதலிக்க வேண்டும் என்ற அவசியமில்லை...கொஞ்சம் கற்ப்பனைசக்தி இருந்தாலே போதும். அப்படி உள்ளவர்கள் அருமையாக கவிதைகள் எழுதிவிட்டு அதுக்கு தனது காதலன்,அல்லது காதலிதான் காரணமென்று அவர்களுக்கு பெருமை சேர்க்கிறார்கள் என நினைக்கிறேன்....இந்த விசயங்களில் அதிக அனுபவம் இல்லையென்பதால் நான் ஏதாவது சொல்லப்போய் வேண்டாம்.....

கவிதை மாதிரி சில..


ஹோர்மொன்களின்
விளையாட்டுதான் காதல்
என்று எழுதிய காகிதத்தின்
பின்னால் இன்று
காதல் கவிதைகள்
எழுதுகிறேன் உன்னால்

**********

என்னுள் நீயில்லையென்று
சத்தம் போட்டு சொன்னாலும்
தனிமையில் விழியில் வடியும்
துளிக்கண்ணீர் உணர்த்திவிடும்
உணமையை  - நீ
எவ்வளவு தூரத்தில் இருந்தாலும்

*********

உன்பார்வையில் இருந்து
கற்பனைகளை கடன்
வாங்குகிறேன்- மறுநாள்
கவிதை எழுத

*****

தூரத்தில் இருந்தாலும்
சந்தித்துகொள்கின்றன நம்
இதயங்கள் காதல் எனும்
உணர்வால்...
 *******


    புத்தாண்டு வருகின்றது..சிறுவயதில் இந்த வருஷம் இதை செய்ய கூடாது, இதை செய்யவேண்டும் என்று முடிவெடுத்து அதை அடுத்த மூன்று நாள்களுக்குள் என்ன முடிவெடுத்தோம் என்பதையே மறந்து போய் .....பின் வந்த நாளில் அந்த பழக்கமே இல்லாமல்  எல்லா வருட நாள்களும் சாதாரண நாள்களாக மாறின..

   இப்போதைக்கு புதியதாக எந்த எதிர்பார்ப்பும் இல்லை..ஒருவேளை வாழ்க்கையின் அந்த கட்டத்திற்குள் நுழையவில்லை என நினைக்கிறேன்..அன்றாட வேலைகள் சரியாக நடந்து, வாசிக்க நல்ல புத்தகங்கள் கிடைத்தாலே சந்தோசம்...

அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

26 comments:

சண்முககுமார் said...

வரும் ஆண்டு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்

இதையும் படிச்சி பாருங்க
சித்தரை நேரில் பார்த்த அனுபவம் உண்டா?

ம.தி.சுதா said...

தங்களுக்கு எனது ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரம்..

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
அழியா வடுக்கள்

கணேஷ் said...

உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்..

கணேஷ் said...

ம.தி.சுதா said...//

உங்களுக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரரே..

ஆனந்தி.. said...

காதல் கவிதைகள் அற்புதம்:))...புத்தகம் தவிர இன்னும் அழகான விஷயங்களும் இருக்கு...அதையும் ரசிச்சால் சாதா நாட்களாய் தெரியாது...:))) simple and nice post...Happy Newyear:)))

கணேஷ் said...

அப்படியா அக்கா..
உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்))

Kousalya Raj said...

//அதிக அனுபவம் இல்லையென்பதால் நான் ஏதாவது சொல்லப்போய் வேண்டாம்..//

அந்த பயம் இருக்கட்டும்

//ஹோர்மொன்களின்
விளையாட்டுதான் காதல்
என்று எழுதிய காகிதத்தின்
பின்னால் இன்று
காதல் கவிதைகள்
எழுதுகிறேன் உன்னால்//

அட இப்படி நீயே ஒத்துகிட்டா சரிதான்... நாங்க ஏன் கேள்வி கேட்க போறோம் !!

//துளிக்கண்ணீர் உணர்த்திவிடும்
உணமையை - நீ
எவ்வளவு தூரத்தில் இருந்தாலும்//

ம்...இந்த அளவு நடந்து போச்சா...?!!

//கற்பனைகளை கடன்
வாங்குகிறேன்- மறுநாள்
கவிதை எழுத//

இது வேறயா ?!

//தூரத்தில் இருந்தாலும்
சந்தித்துகொள்கின்றன நம்
இதயங்கள் காதல் எனும்
உணர்வால்...//

ஓ.கே பகிரங்கமா ஒத்துகிட்டாச்சு காதல் என்பது ஒரு உணர்வு தான் என்று !! இனிமே காதல் பத்தி மட்டமா பேசுவ ?

//அதை அடுத்த மூன்று நாள்களுக்குள் என்ன முடிவெடுத்தோம் என்பதையே மறந்து போய் .....பின் வந்த நாளில் அந்த பழக்கமே இல்லாமல் //

சரியா சொல்லி இருக்கிற கணேஷ்...இது பலரும் பண்ற வேலை தான் ரொம்ப வேகமா முடிவெடித்து அதே வேகத்தில் மறந்தும் விடுவோம்.

இந்த மாதிரியான மறதிக்கு உன் தாத்தா ஏதாவது விளக்கம் சொல்லி வச்சு இருக்கிறாரா??!

இந்த வருடத்தில் நல்ல எதிர்பார்ப்பும் வந்து அது நிறைவேறவும் வேண்டும் என்று அன்பாய் உனக்காக ஆண்டவரை வேண்டுகிறேன். புத்தாண்டு வாழ்த்துகள் கணேஷ்.

பிரியங்களுடன் கௌசல்யா

Unknown said...

//காதல் கவிதைகள் எழுத காதலிக்க வேண்டும் என்ற அவசியமில்லை..//

கவிதை எழுதத் தெரிந்திருக்க வேண்டிய அவசியமும் இல்லை...ஹி..ஹி.!!

உங்கள் காதல் கவிதைகள் நல்லாருக்கு பாஸ்! இதையே நீங்க பெண் பெயரில் தனி பிளாக்கில் எழுதிப் பாருங்க கூட்டம் அள்ளும்!! :-)))

கணேஷ் said...

Kousalya said...///


அந்த பயம் இருக்கட்டும் //

யாருக்குன்னு சொல்லவே இல்லை)))

உங்கள் வாழ்த்துக்கும் வேண்டுதல்களுக்கும் மிக்க நன்றி அக்கா..

கணேஷ் said...

ஜீ... said...//

எனக்கு கூட்டம்ன அலர்ஜி..வேண்டாம்))

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

உங்களுக்கு
எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!

நகைச்சுவை; இரசித்தவை 13 !

கணேஷ் said...

NIZAMUDEEN said...//

உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்..

சௌந்தர் said...

ஹோர்மொன்களின்
விளையாட்டுதான் காதல்
என்று எழுதிய காகிதத்தின்
பின்னால் இன்று
காதல் கவிதைகள்
எழுதுகிறேன் உன்னால்///

ஆமா என்னிடம் சொல்லியிருக்கே இல ஆமா சரி தான் ஹார்மோன் செய்யும் கலக்கம் தான் எல்லாம்

சௌந்தர் said...

உன்பார்வையில் இருந்து
கற்பனைகளை கடன்
வாங்குகிறேன்- மறுநாள்
கவிதை எழுத///

கற்பனை மட்டும் தான் கடன் வாங்குறியா...?

சௌந்தர் said...

தூரத்தில் இருந்தாலும்
சந்தித்துகொள்கின்றன நம்
இதயங்கள் காதல் எனும்
உணர்வால்...///

அப்போ டெய்லி மீட் பண்றே சூப்பர்...

கணேஷ் said...

சௌந்தர் said...

கற்பனை மட்டும் தான் கடன் வாங்குறியா...?///

வாங்குவதில் இதை மாட்டும்தான் இங்கு சொல்ல முடியும்)))))

Unknown said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!! :-)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். உங்களை வலைச்சரத்தில் அறிமுகப் படுத்தி உள்ளேன். வருகை தரவும்.

http://blogintamil.blogspot.com/2010/12/blog-post_120.html

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்....

கணேஷ் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... /

புத்தாண்டு வாழ்த்துக்கள்

என்னை அறிமுகம் செய்ததுக்கு மிக்க நன்றி..

கணேஷ் said...

பிரஷா said..

உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்..

ஆமினா said...

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

கணேஷ் said...

ஆமினா said...//

உங்களுக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்..

நன்றி

குறையொன்றுமில்லை. said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

கணேஷ் said...

Lakshmi said...//

உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்..

மிக்க நன்றி..

Unknown said...

அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.