Showing posts with label CRYPTO. Show all posts
Showing posts with label CRYPTO. Show all posts

அறியா உலகம் (சவால் சிறுகதை-2011 )


    அந்த நீளமானபெட்டி கரையில் வைக்கப்பட்டிருக்க அதனைசுற்றி ஒரு சிறுகூட்டம். அதில் பாதிபேர் இந்த கடல் ஆராய்ச்சி சம்பந்தபட்டவர்கள் மீதி அந்த பெரியபெட்டியை கரைசேர்க்க உதவியவர்கள்,வேடிக்கைபார்க்க வந்தவர்களென கூடியிருந்தார்கள்.

    பெட்டியை ஆராய்ச்சிகூட வண்டியில் ஏற்றும்போதே அதைப்பற்றிய வதந்தி காற்றில் ஏறியிருந்தது. கடலில் இருந்து ஒருபெரிய புதையல் கிடைத்து இருப்பதாகவும், வேற்றுகிரகத்தில் இருந்து பூமியில் விழுந்த ஒருபெட்டி என்றும் மக்களின் கற்பனை வளம் வேகமாக  விரிந்துகொண்டு  இருந்தது.

   வந்துசேர்ந்தவுடன் அதன் நீளம் அகலம, உயரம, எடை போன்றவை கணக்கிடபட்டன. இதுவரை ஊடகசெய்திக்கு சொல்லவில்லை. பணியாளர்கள் அதனை துடைக்க உத்தரவு இடப்பட்டு இருந்தார்கள். மேழேபடர்ந்து இருந்த கடல்பாசிகளை துடைத்து கழுவி நீக்கியபின்  ஒரு மஞ்சள்நிறத்தில் கொஞ்சம் பளுப்பக இருந்தது.

    அதனை திருப்பி பார்த்தபோது மூன்றுபக்கம் வெறுமையாக இருக்க அதன் ஒருபக்கத்தில் ஒருசின்னம் இருந்தது. சின்னம் என்பதைவிட ஒரு முத்திரை வடிவம். இரண்டு பெரிய மீன்கள் அலையில் எழும்பி குதிப்பதுபோல.அதைத்தவிர அந்தபெட்டி முழுதும் சமபரப்பே எங்கு எப்படி  மூடி இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது என்பதைகூட கணிக்கமுடியவில்லை. காரணம் அதன் நான்கு மூலைகளிலும் வளைவு (radius) கொடுக்கபட்டிருந்தது.

    அந்தஇரண்டு மீன்களின் சின்னத்துக்கு கிழே சின்ன எழுத்துக்களாக பொரிக்கபட்டு இருந்தன. இணைப்புகளை கண்டுபிடிக்க எல்லா மூலைகளிலும் சுரண்டிபார்க்கப்பட்டு ஏதுமில்லாமல்போக அடுத்தகட்ட வேலைக்கு தடைசெய்யபட்டிருந்தது. பெரிய அதிகாரிகள் வருவதாகச்சொல்லி அதைமூடினார்கள்.  


   சிறிய ஆய்வுக்குப்பின் ஒருவித பவளபாறைகளால் ஆனது என்று கண்டுபிடித்தார்கள்.அந்த இரண்டு மேலதிகாரிகளில்  ஒருவர் மீன்முத்திரையும்  எழுத்துக்களையும் பார்த்தபிறகு சங்கேதபாசை இருக்கிறது என தனக்குள் முனுமுனுத்தர்ர்.     

     சிறிய உரையாடலுக்கு பிறகு அதைஎப்படி திறப்பது என யோசிக்கபட்டது.. இந்தபெட்டி சில சங்கேதபசைகளால் மூடப்பட்டுள்ளது.முதலில் அது சம்பந்தபட்டவர்கள் கொண்டு முயற்சிசெய்துவிட்டு பின் உடைக்கலாம். அதோடு நமது உயிரியல் பிரிவில் உள்ளவர்களுக்கு தகவல் கொடுங்கள். திறக்கும்போது அவர்கள் இருப்பதும் முக்கியம்.


“புனி என்ன பண்றே?

“என்ன பண்றேன்னு   நீயே சொல்லேன்

  “என்னசெய்ய போற உன் செல்லபூனை லில்லியை கொஞ்சி விளையாடிட்டு இருப்பே

“ஆமா அதுஇருக்கட்டும் இப்ப எதுக்கு திடீர் அழைப்பு உனக்கும் அந்தபெட்டியை பத்தி தகவல் வந்துச்சா என்ன?

“ஆமாம் அதுக்குத்தான் நானும் உனக்கு போன் பண்ணேன். எப்பபோகலாம் சொல்லு சேர்ந்தேபோகலாம்

“ நான் வரலை முடிஞ்சா அங்க சந்திக்கலாம்

“ஏன் இப்படி பண்றே?
 
“சரி அழுகாதே வரேன் எப்பபோகலாம் சொல்லு?

“நாளை காலையில் 9 மணிக்கு இங்க வந்துடு


  புனி உயிரியல் பிரிவில் ஆராய்ச்சி பணிகள் செய்யும் குழுவில் இருப்பவள். அந்த பெட்டியை பற்றிய ரகசிய தகவல் அவளுக்கு வந்து இருந்தது அதுவும் வெளியில் யாருக்கும் தெரியபடுத்தவேண்டாம் என்ற அறிவுரையோடு. அப்போதே அவளுக்கு அதன்மீது ஒரு ஆர்வம்கலந்த ஆச்சர்யம்

   கணேஷ்  அதே ஆய்வுகூடத்தில் cryptography   துறையில் இருப்பவன். அங்கு சேரும் முன்னரே புனி பின்னாடி சுற்றி அவளை காதலித்துக்கொண்டு இருப்பவன். அவர்கள் காதலிக்கிறார்கள் என்பதைவிட சண்டை போடுகிறார்கள் என்றே சொல்லவேண்டும்..

  மறுநாள் காலையில் இருவரும் சேர்ந்தே ஆராய்ச்சி கூடத்துக்கு வந்தார்கள். பார்த்த இருவருக்குமே ஆச்சர்யம்.அவர்கள் நினைத்து இருக்கவில்லை இந்த அளவு வித்தியாசமாக இருக்குமென. இருவருக்கும் அது கண்டுபிடிக்கபட்டதில் இருந்து கடைசியில் செய்தவேலைகள் பற்றிய தகவல்கள் அனைத்துமே கொடுக்கபட்டன. கணேஷ் அதன் அளவுகள் எடை மற்றும் அது என்ன பொருளால் ஆனது போன்ற தகவல்களை வாங்கிகொண்டான்.

   கணேஷின் முதல்வேலை அந்தபெட்டி ரகசிய எழுத்துக்களால் மூடபட்டுள்ளதா இல்லையா என்பதை கண்டறிய வேண்டும். அந்த மீன்முத்திரைக்கு கிழே இருந்த எழுத்துக்களை முதலில் எழுதியவன் அந்தபெட்டி முழுவதும் பூதகண்ணாடி கொண்டு தேடினான் வேறெங்கும் எழுத்துக்கள் இருக்கிறதா என்று. தென்படவில்லை. அவன் குறிப்பெடுத்த எழுத்துகள் SWH26F


   சிறிதுநேர யோசனையில் அவனுக்கு தெரிந்து இருந்தது மிகவும் பழமையான கஷ்ட்டமான எழுத்துக்களை கொண்டு சங்கேதபாசையால் அமைத்து மூடப்பட்டபெட்டி அதென்று. வெளியில் வந்தான் அங்கிருந்த அதிகாரிகளிடம் அந்தபெட்டி ரகசிய எழுத்துக்களால் பூட்டப்பட்டுள்ளது என்பதையும் அதனை திறக்க தனக்கு கொஞ்சம் அவகாசம்தேவை என்று சொல்லிவிட்டு கிளம்பினான்.   
வெளியில் வரும்போது .புனியை வீட்டுக்குவருமாறு அழைக்க முதலில் மறுத்தவள் பின்சம்மதித்தாள்.

     ஆய்வுகூடத்தில்  சில முக்கயமான முடிவுகள் எடுக்கப்பட்டன. அந்தபகுதியில் இருக்கும் காவல்நிலையத்துக்கு இதுசம்பந்தமாக சொல்லி  பாதுகாப்புவசதி கோரப்பட்டது. அதோடு ஊடகங்களுக்கு செய்திகளை அளிப்பதில் கட்டுபாடுகளை கையாள ஒருநபரை நியமிப்பது என முடிவாகியிருந்தது.

     S W H2 F6 கண்டிப்பாக அந்தபெட்டியை மையமாக வைத்துதான் இது இருக்க வேண்டும் என்பதால் அந்த கோணத்திளியே யோசிக்க ஆரம்பித்தான். அதை திறப்பதற்கு ஒருஇடம் இருக்கவேண்டும்.  ஒரு செவ்வகவடிவில் உள்ள  பொருளில் குறிப்பிட்ட பகுதியை சரியாக குறிக்க நீளஅகல முறைகளை கொண்டுதான் கண்டிப்பாக உணர்த்தவேண்டும். அப்படிபார்த்தால் இதில் இருக்கும் W,H2 என்ற எழுத்துக்கள் கொஞ்சம் பொருந்துவதாக இருந்தது. அதாவது ஒரு புள்ளியில் இருந்து WIDTH, HEIGHT போன்றவற்றை இவை உணர்த்தவேண்டும். அப்படியே இருந்தாலும் H2 என்பதில் ஒருஅளவை குறிக்கும் எண் இருக்கிறது. ஆனால் WIDTH க்கு இல்லை.

    அதுக்கு பொருத்தமான எண்ணை முதலில் கண்டுபிடிக்க வேண்டும். அதில் உள்ள மற்றவவை எண்களுடன் தொடர்புகொண்டு இருக்க   S மட்டும் எந்த எண்ணோடு தொடர்பு இல்லாமல் இருப்பது கொஞ்சம் குழப்பியது. ஆனால் அந்த எழுத்தை எதுக்கு கொடுக்கபட்டு இருக்கிறது என்பதை கண்டுபிடித்தபோது அது  எளிதானது. அந்த எழுத்து குறிப்பது நீள உயர அளவுகளை எந்தபக்கத்தில் இருந்து அளக்கவேண்டும் என்பதை அது குறிக்கிறது.அதாவது அந்த பெட்டியில் இருக்கும் நான்கு பக்கங்களில் ஒன்றை குறிப்பாக உணர்த்த அந்த எழுத்து. இப்பொது அந்த எழுத்துக்கும் ஒரு எண்ணை கொடுக்க வேண்டிய கட்டாயம். அப்போதுதான் அவனுக்கு நினைவுக்கு வந்தது அந்த மீன்முத்திரை அதை பார்த்தால் எதாவது கிடைக்கலாம் என்ற எண்ணம் அவனுக்கு.

    மறுநாள் அங்கு போனபோது இரண்டு புதியவர்கள் அவனுக்கு அறிமுகமானார்கள். ஒருவர் பாதுகாப்பு பணியினை மேற்கொள்ளும் எஸ்.பி கோகுல்  மற்றொருவர் செய்தி  தகவல்களை கட்டுபடுத்தும் விஷ்ணு. இதில் விஷ்ணுவின் பணி கொஞ்சம் கணேஷ்க்கு தேவை. அதாவது எந்த காரணத்தை கொண்டும் இந்த ரகசிய எழுத்து முறைகளை வெளியில் சொல்லகூடாது. அப்படி சொன்னால் மக்களுக்கு ஆர்வம் அதிகமாகி பிரச்சினை வேறுமாதிரி போகலாம். அதோடு தவறான சிலரின் கைகளுக்குபோக வாய்ப்பு இருக்கிறது. எனவே விஷ்ணுவை கூப்பிட்டு தனியாக இதைப்பற்றி விளக்கினான்.

    அவனுக்கு தேவையான எண்கள் அந்த மீன்முத்திரையில் இருக்கிறதா என்பதை தேடினான். இல்லை. அந்த எண் எழுதுகளுக்கிடையேதான் இருக்கிறது என்று முடிவாகினான். வெளியில் போகும்போது கோகுல் எதிரில் வந்தார். ஏற்க்கனவே நன்கு பழக்கம் உடையவர். அவரது சிலபிரச்சினைகளில் இருந்த ரகசிய எழுத்துக்களை தீர்க்க கணேஷ்ஐ சந்தித்தது உண்டு.

    கணேஷ் அவரை தனியாக அழைத்துச்சென்று அந்த ரகசியஎழுத்துக்கள் சம்பந்தமாக பேசினான். அதன் முக்கியத்துவம் பற்றிசொன்னான்.  அது விஷ்ணுவுக்கும் தெரியும் அவன் அந்த எழுத்துகளை எந்தக்காரணம் கொண்டும் வெளியில் சொல்லாமல் இருக்கவேண்டும் என்ற தனது கருத்தை சொன்னபோது.

 “அப்படி என்ன எழுத்து அது எனக்குதெரியாம? என்றார் கோகுல்

“இப்போதைக்கு வேண்டாம் விஷ்ணுவை கொஞ்சம் பார்த்து கொள்ளுங்கள் எங்காவது சொல்லிவிடபோகிறார் என்று சொல்லிவிட்டு கிளம்பினான்.

    அந்த S க்கு உதவும் எண் எது என்பதை யோசித்தான்.அதில் மீதம் இருக்கும் எண்கள் 6, 2 இதில் 2 என்பது H ஓடு சேர்ந்து உயரத்தில் இருந்து 2 அடி என்ற அர்த்தத்தில் வருமென தோன்றியது. மீதி இருப்பது அகலம் எந்தபக்கம். அந்த இரண்டின் கூட்டுதொகை 8. மற்ற இரண்டு எழுத்துக்களின் கூட்டு தொகையும் அதுவாகவே இருக்கவேண்டும். காரணம் இந்தமாதிரியான ரகசிய எழுத்துக்கள் அமைப்பதின் நோக்கம் இது சாதாரணமானவர்களின் கையில் கிடைத்து சேதம்அடையகூடாது என்பதே. எனவே அனுமானம் செய்ய எளிதாக ஒன்றையே இன்னொன்றிலும் தொடர்வது சங்கேத பாசையில் பொதுவானஒன்று.

   அந்த இரண்டு எழுத்துக்களுக்கும் இரண்டு எண்களை கொடுத்தால் அதன் கூட்டுதொகை 8 வரவேண்டும். எளிதாக பாதியாகபிரித்து S4, W4 கொடுத்தான். காரணம் மேலேசொன்னதுதான். கண்டுபிடிப்பவரின் சிறிய அனுமானத்திற்குகேற்ப எளிதானமுறை. இப்போது அந்தஎழுத்துக்களை அமைத்தால் S4 W4 H2 F6 அதாவது பெட்டியின் நான்காவது பக்கத்தில் நான்கடி அகலத்தில், இரண்டடி உயரத்தில் எதாவது ஒன்று இருக்கவேண்டும் 

   ஆனால் அந்த F6க்குமுடிவு இன்னும் இல்லாமல்இருந்தது. F சேர்ந்தபடி இருக்கும் 6 எண்ணை மட்டும் வைத்துபார்ப்பது சரியாகாது ஏனென்றால் இதன் அடிபப்டை எண் 8.எனவே F8 என அர்த்தம்கொள்ள தீர்மானித்தான். அந்த 6 என்ற எண் ஒரு உதவிக்குமட்டுமே என்பது அவனது எண்ணம்.F8 என்பதை Fல் இருந்து 8வது எழுத்தை முன்னோக்கிபார்த்தால் அதில் அர்த்தமில்லை ஆனால் பின்னோக்கி பார்க்கும்போது 8 எழுத்துக்கள் முடிந்து 9வதாக வரும்எழுத்து o. இது எதையாவது உணர்த்தவேண்டும். அந்த F6 க்கு பதிலாக o எழுத்தை பொருத்திபார்த்தபோது அவனுக்கு ஆச்சர்யம்  S4W4H2o அதாவது H2o நீரை குறிக்கும் ஒரு குறிப்பு. கணிப்பு சரியாக இருந்தால் பெட்டியில் திறக்கும் இடத்தை கண்டுபிடித்தபிறகு தண்ணீரின் தேவையிருக்கும் என்ற முடிவுக்குவந்தான்.

   அந்தநேரத்தில்தான்  கோகுலிடமிருந்து அலைபேசி அழைப்புவந்தது. அதை கேட்டபோது கொஞ்சம் அதிர்ந்துதான்போனான். காரணம் கோகுல் விஷ்ணுவிடம் ஒரு சோதனைக்காக அந்தஎழுத்துக்கள் பற்றிகேட்க கொஞ்சமும் தயக்கம் இல்லாமல் அதை எழுதி அவன் அனுப்பியதே. கோகுல் கூடவே ஒரு விண்ணப்பம் வைத்தார்  தன்மூலம் இது தெரிந்தது என்று விஷ்ணுக்கு தெரியவேண்டாம் என்பது.

    சிறிது நேரம்கழித்து கணேஷ் விஷ்னுவுக்கு போன்செய்தான் அவனிடம் அந்த ரகசிய எழுத்துக்கள் பற்றி கேட்டபோது நான் யாரிடமும் சொல்லவில்லை என்பதயே திரும்பதிரும்ப சொன்னான். ஒருகட்டத்தில் கோபம அடைந்த கணேஷ் ஆதாரத்தை காட்டினால் என்னசெய்வாய் என்றபோதுதான் அவனுக்கு புரிந்தது. எங்கு மாட்டினோம் என்று. அதற்குபிறகு அவனிடம் வெறும் மௌனமே.

    கணேஷ்  புனியோடு அந்த இடத்திற்கு போனபோனது அவனது மேஜையில் ஒரு துண்டுகாகிதம் இருந்தது. அதில் விஷ்ணு தான் கோகுலிடம் அந்த ரகசிய எழுத்துகளை சொன்னதாகவும்  அது தவறானதுதான் என்பதை எழுதி வைத்திருந்தான். ஆனால் கணேஷ் வரும்போதே கோகுலிடம் இருந்து அவன் கொடுத்த அந்த எழுத்துக்கள் அடங்கிய சீட்டை வாங்கிவந்து இருந்தான்.அது சரியான எழுத்துதான் என்பது அவனுக்கு தெரியும்.


    இப்போது அவன் கவனம் முழுவதும் அந்தபெட்டியில் திறப்பதில் இருந்ததால் அதற்கு தேவையான வேளையில் இருந்தான். அளப்பதற்கு தேவையாக ஒரு அளவுகோல்(steel rule) வரவழைத்தான். அதன்மூலம் துல்லியமாக எழுத்துக்களில் பொதிந்திருக்கும் அளவுகளை அளக்க முடிவாகியிருந்தான்.அந்தநேரத்தில்தான் அவனுக்கு விஷ்ணுவிடம் இருந்து போன்வந்தது. கணேஷ்க்கு தெரியும் அவன் இப்போது என்ன பேசுவான் என்று. மன்னிப்பு கேட்பான் இனிமேல் கவனமாக இருப்பதாக சொல்வான் என்பதால் சிறிதுநேரம்  யோசித்த கணேஷ் இணைப்பை துண்டித்துவிட்டு அருகில் இருந்த அளவுகோலை எடுத்துக்கொண்டு பெட்டியை நெருங்கினான்.

    அருகில் இருபவர்களை வெளியில் அனுப்பிவிட்டு முக்கியமானவர்கள் மத்தியில் அதைதிறந்து முதலில் நான்காவது பக்கத்தை தேடும் முயற்சி செய்து அந்த மீன்முத்திரை இருக்கும் பக்கத்தை முகப்பு பக்கமாக கொண்டு அதில் இருந்து நான்காவது பக்கம் எனபார்த்தால் அதன் இடதுபக்கம் இருக்கிற பகுதிவந்தது. அதன் மேற்புறத்தில் இருந்து H2 என்பதுக்கு இணங்க இரண்டடியில் ஒரு குறிப்பை வைத்தான் அடுத்து W4 என்பதுக்கு பக்கவாட்டில் இருந்து நான்கடியில் ஒரு குறிப்பை வைக்க அது இரண்டும் ஒருஇடத்தில சேர்ந்தது.

   ஒருசிறிய சுத்தியல் வாங்கி மற்ற இடங்களில் தட்டி ஒலியின் தன்மையை சோதித்துப்பார்த்துவிட்டு அந்த குறிப்பு செய்த இடத்தை தட்டியபோது மாற்றமான சத்தம்வர எல்லோர் முகத்திலும் சந்தோஷம். அங்கிருந்த புனிக்கு கணேஷ்க்கு எதாவது கொடுக்கலாம் போல இருந்தது. அந்தப்பெட்டியில் திறப்புக்கான இடம் தெரிந்தவிட்டாலும் அதை எப்படி திறப்பது என்பதில் பிரச்சினை இருந்தது

   காரணம் இந்தமாதிரியான சங்கேதபாசைகள்  கொண்ட பெட்டிகளை வடிவமைக்கும்போது முறையான வழியில் திறக்காமல் தவறாக திறந்தால் அதன் உள்ளேஉள்ள பொருள்கள் அழிந்திடுமாறு அமைப்பார்கள்.கணேஷின் பயத்துக்கும் இதுதான் காரணம். ஒரு முடிவுக்கு வந்தவனாக ஒரு துளையிடும் கருவியும்(DRILLING MACHINE), மறைபோடும் (TAP) கேட்டுவாங்கி அந்த இடத்தில குறைந்த ஆழத்துக்கு துளையிட்டு மறையிட்ட பின்னர் அதில் ஒரு SCREW வை இணைத்து கொஞ்சம் அழுத்தமாக இழுத்து பார்த்தான். அந்த இடம் மெதுவாக விலகி வெளியில்வந்தது. கிட்டதட்ட சிறிய சதுரவடிவ பாகம்  முழுவதும் வெளியில்வர அதைதொடர்ந்த உட்பகுதி ஒரு துளைபோல உள்ளேசென்றது.

    அடுத்து நீரை எடுத்துவரச்சொன்னவன் அந்த துளைவழியாக செல்லுமாறு ஊற்றினான். நீர் நிரம்பி வெளியில்வர ஆரம்பித்த நிலையில் நிறுத்த அந்தபெட்டியில் ஒருமாற்றமும் இல்லாதது அதுவரை எல்லவாற்றையும் ஆச்சர்யமாக பார்த்துகொண்டு இருந்தவர்களுக்கு ஒரு ஏமாற்றமாக இருந்தது. கணேஷ்க்கும் குழப்பம். சிலவினாடிகள் கரைந்த நிலையில் அதன் எதிர்புற பக்கம் சிறுசப்பதத்துடன் விலகி வெளியில் விழுந்தது. எல்லோரும் அந்தபக்கம் பொய்ப்பார்த்தார்கள். ஊற்றிய தண்ணீர் வெளியே வடிந்து கொண்டு இருக்க இப்போது அதன்மேல் மீன்முத்திரை பதித்திருக்கும் ஒருபக்கத்தை விளக்க அந்தபெட்டியில் இருப்பது வெளிப்படையாக தெரிந்தது.

   ஒருவகைதுணியால் சுற்றப்பட்டு அந்தபெட்டிக்கு மத்தியில் தனியாக அதுக்கேன்று ஒரு இடம் அமைக்கபட்டு வைக்கபட்டிருந்தது. அதுக்குகிழே கொஞ்சம் இடைவெளி அதில் நீரால் விரிவடையும் ஒருபொருள் இருக்க அந்தபொருள் விரிவடைந்தால் அதுகொஞ்ச உயரத்தில் இருக்கும் நான்கு பக்கங்களையும் இணைக்கும் ஒரு பிரதான இணைப்பு பகுதியை அழுத்தி விளக்குவதாக அமைக்கபட்டு இருந்தது.

   தவறான முறையில் திறக்க முற்பட்டால் நான்குபக்கசுவரில்  இருக்கும் ஒருவகை அமிலம் உடைந்து அதிலுள்ள பொருளை யாருக்கும் கிடக்கலாம் சிதைத்துவிடும். அதன் மத்தியில் உள்ள அந்த பொட்டலம் போன்ற ஒன்றை வெளியில் தனியாக எடுத்து அவில்க்கும்போது துர்நாற்றம் வீசியது. புனி வேகமாக சென்று தன் உபகரணங்களை எடுத்து வந்து அதன்மீது சுற்றியிருந்த ஒருவிதமன் துனிபோன்ற ஒன்றை முழுதும்விலக்க அந்த உருவம் கண்ணுக்கு புலப்பட்டது.          

    உடல்பகுதி டால்பின்போல இருந்தாலும் அதன் கால்பகுதி மத்தியில் இருந்தே இரண்டாக பிரிந்திருந்தது. எப்படி மனிதனுக்கு இடுப்பில் இருந்து கால் பிரிகிறதோ. அனைவரின் ஆச்சர்யமும் அதன் தலை அமைந்த விதம்தான். கிட்டதட்ட மனிதஉருவ அமைப்பை பெற்றிருந்தது முடியில்லாமல் வழுவழுப்பாக இருக்க தலயின் நுணி கொஞ்சம் கூராக இருந்தது.

   அந்ததுணியில் ஒட்டினாற்போல ஒருகடிதம்.பாதுகாப்பான முறையில் மடித்து வைக்கப்பட்டிருந்தது. அதை சுத்தம்செய்து கணேஷ் படிக்கஆரம்பித்தான்.

    எங்களது பலகால கடல்பயணத்திலும் ஆராய்ச்சியிலும் நாங்கள்  கண்டசில உண்மைகள்.... மனிதன்  குறைந்தபட்ச நிலமே உலகம் என் நம்பிக்கொண்டு இருக்கிறான். அப்படியில்லாத பெரும்பகுதியான நீர்பகுதியில் ஏன் இன்னொரு உலகம் இருக்ககூடாது என்பதை கற்பனை செய்யமறுத்துவிட்டான் என்பதுக்கான பதில்தான் இது. நீர்பகுதியில் நிலப்பகுதியில் வாழ்வதைவிட ஒருபெரிய உலகம் இயங்குகிறது. நம்மைபொருத்தவரை வெறும் மீன்களும், வேறுசில உயிரனங்களும்தான்  நீர் உலகம் எனநம்புகிறோம். அது இல்லாத ஒருபெரிய வாழ்வு ஒன்று உள்ளே நமக்கு தெரியாமல் நடக்கிறது. அப்படிபட்ட ஒன்றுதான் இந்தஉயிர். இதுவரை இந்தபூமி பார்த்திராத ஒரு உயிர் அதுவும் இதேபூமியில். மனிதனின் ஆராய்ச்சி வேற்றுகிரகதுக்கு சென்றாலும் தனது கிரகத்தில் இருக்கும் ஒருபெரிய உயிரின் வாழ்க்கையையே காணமுடியாதவனாக தோற்றுபோய் இருக்கிறான். இதைகண்டு பிடித்தவர்கள் சில ஆராய்ச்சிகள் செய்வதின்மூலம் அந்த உலகம் சம்பந்தமாக தெளிவுகள் பெறலாம். 

எச்சரிக்கை : இந்த ஒரு உயிரனத்தை பிடிக்க நாங்கள் அப்போது பலஉயிர்களை பலிகொடுதோம்.நம்மைவிட எல்லாவிதத்திலும் மிகுந்த சக்திவாய்ந்தவைகள் ஆராய்ச்சியில் கவனம் இருக்கட்டும்.

படித்து முடித்தபோது அனைவரின் கண்களிலும் பயமிருந்தது.

   புனி அந்தஉடலில் பல்வேறு இடங்களிருந்து திசுக்களை சேகரித்தாள். கணேஷ் அந்தகடிதத்தை அங்கிருந்த அதிகாரிகளிடம் கொடுத்துவிட்டு மௌனமாக வெளியேறினான். அங்கு இதுவரை நடந்தவை எல்லாம் ஒரு நம்பமுடியாத கனவுபோல இருந்தாலும் இன்னும் கொஞ்சநாளில் புனியின் ஆராயச்சியில் இருந்து இந்த உலகம் ஒருபுதிய முடிவை சந்திக்கபோவதில் உறுதியாக இருந்தான்.  

  
                                             

தேடல்..

     "வையாமல் என்னைக்காவது  நீயா  தேச்சு இருக்கியா? பாரு முடியை கத்தாழை நார் மாதிரி"  திட்டியபடியே என் தலையில் பாட்டி எண்ணை தேய்த்து கொண்டு இருந்த போது

     "கணேஷ் இல்லையா?"  சத்தம் மறு வாசலில் இருந்து வந்தது.  பாட்டி முதலில் எட்டி பார்க்க பின்னாடியே நானும் பார்த்தேன் தூக்கிவாரிபோட்டது..என்னவள்  தோழியுடன் நின்று இருந்தாள்...பாட்டி  என்னவென்று விசாரித்தார்..அவர்கள என்னை பார்க்கணும் என்று சொல்ல ஒரு பார்வையோடு பாட்டி விலகி உள்ளே சென்றார்கள்

"கணேஷ் உனக்கு ஒரு வேலை?" என்றாள் என்னவள்

    "இப்ப எதுக்கு இங்க வந்தே சும்மாவே சந்தேகம் இருக்கு நம்ம மேலே" என்றேன் மெதுவாக

    "நீ கொஞ்சம் சும்மா இரு நீயே காட்டி கொடுத்துருவே..நான் ஒரு வேலையாகத்தான் வந்தேன்..உன்னை கூப்பிட்டு வரச்சொல்லி அனுப்பி இருக்கிறார்கள் அதான் வந்தோம் வா போவோம்" என்று சொல்ல அருகில் இருந்தவள் சிரித்தாள்


"யாரு எதுக்கு?"

     "ஆத்துல தண்ணீ அக்கரைக்கும் இக்கரைக்கும் போச்சில்ல அப்ப நம்ம ஊருபக்கம் இருக்கிற கரையை அரிச்சதுல அங்க ஒரு கதவு மாதிரி இருக்கு...எல்லோரும் சொல்றாங்க அந்த கதவு அங்க இருந்து நேரா நம்ம பெருமாள் கோயிலுக்கு வார குகையாம்,கோயிலுக்கு பூஜை செய்ய தண்ணீ ஆற்றிலிருந்து இந்த வழியாகத்தான் எடுத்துட்டு போவாங்கலாம் அது இப்ப நல்லா வெளிய தெரியது.." என்றாள்

"சரி போ நான் அப்புறம் வந்து பார்த்துக்குறேன்"என்றேன்

    "உன்னை யாரு பார்க்க கூப்பிட்டா அந்த கதவு  பாறையாள மூடியிருக்கு அதுக்கு மேல ஏதோ பாட்டு, எழுத்து எல்லாம் இருக்கு நீதான் என்கிட்டே சொல்லியிருக்கியே உனக்கு இந்த மாதிரி கண்டுபிடிக்கிறதுன்னா ரெம்ப பிடிக்கும்னு..அதான்  அங்க உள்ளவங்ககிட்டே சொன்னேன் நீ வந்து இருக்கேன்னு அதான் கூப்பிட்டு வரச்சொன்னாங்க"

    "அடிப்பாவி இதுல என்னை எதுக்கு மாட்டிவிட்டே கண்டுபிடிக்கலன்னா மானம் போகுமே?"

"அப்ப என்கிட்டே சொன்னது எல்லாம் பொய்யா?"

    "இல்லை உணமைதான்...இந்த மாதிரி விசயத்துல மட்டும் என்னை சேர்த்துவிடு .இன்னைக்கு காலையில் பூனைகுட்டிக்கு அத்தனை முத்தம் கொடுத்து கொஞ்சினியே அதோடு சேர்க்க சொன்னப்பமாட்டும் எவ்வளவு கோபம வந்துச்சி உனக்கு. ...."

   "நீ வந்தா வா இல்லேன்னா போ எனக்கென்ன" என்று கோபமாக சொல்லிவிட்டு நடக்க ஆரம்பித்தாள்

    "சரி நில் வருகிறேன்"..பின்னாடி ஓடி அவளோடு சேர்ந்தேன்..ஏதும் பேசாமல் நடந்தோம்..கோபத்தில் இருந்தாள்..தூரத்தில் கூட்டம் தெரிந்தது..கரையை விட்டு கிழே தண்ணீ போய் கொண்டு இருக்க அந்த கதவின் முன்னால் எல்லோரும் நின்று இருந்தார்கள்..அருகில் இருந்த கொஞ்சம் மண்மேடு,முட்புதர்கள அகற்றப்ட்டு சுத்தமாக இருந்தது...

        அவள் சொனனதையே அவர்களும் சொன்னார்கள்..பாறையை பார்த்தேன்...அதின் மேல் சில எழுத்துக்கள் ஒரு பத்தியில் இருக்க, சற்று நடுவில் அ உ எ என்ற எழுத்துகளும் அதன் கிழே இந்த இரண்டு பாடல்களும் இருந்தன..

அ உ எ

முக்கூடி முழுமையாகி ஒன்று தவறுமது
மூன்றாமடி தனில் ஆறாமிடத்தில்

முழுமைகூட முதலோடு ஆறுகூடலோ அல்லது
முழுதும் கடைக்குச் சமம் 


    எல்லாத்தையும் வாசித்து முடித்தபோது கொஞ்சம் தலைசுற்றியது...உள்ளுரில் காதலியை வைத்துக்கொண்டால் வரும் பிரச்சினைகளில் இதுவும் ஒன்று..நமது திறமையை எப்படியாவது வெளிபடுத்தி கொண்டே இருக்க வேண்டும்...

     அந்த பத்தியில், "கிழே உள்ள மூன்று சட்டங்ககளை அதில் உள்ள எழுத்துக்களின் சரியான வரிசையில் அமைத்தால் பாறைகள் விலகி வழி கிடக்கும்.. தவறாக மாற்றினால்" என்பதோடு நிருத்தப்ட்டு இருந்தது...

    அருகில் இருந்த பெரியவர் "முடியுமா பார் தம்பி இல்லையென்றால் பக்கவாட்டில் மண்ணை விளக்கி உள்ளே போகலாம்" என்றார்

    "நான் முயற்சிக்கிறேன் திறந்துவிடலாம்" என்றேன்..கூட்டத்தில் ஒருத்தியாய் நின்று இருந்தாள் கண்ணில் கோபம இருந்தது....

     அதிகம் யோசிக்க வழியில்லை வெறும் மூன்று எழுத்துக்கள் இரண்டு பாடல்கள், பார்த்தேன் எல்லாம் உயிர் எழுத்துக்கள், அந்த எழுத்துக்களில் ஒன்றும் இல்லை... அதை சரியான வரிசையில்  அமைக்க அந்த பாடல் சரியாக  புரிய வேண்டும் இரண்டு முறை நிதானமாக வாசித்த பார்த்தேன்......கண்டிப்பாக இது எண் சம்பந்த்தபட்டவையாக இருக்க வேண்டும், "முக்கூடி" என்றால் வேறு அர்த்தம் சரியில்லை அந்த பறையில் மொத்தம் நான்கு மூலைகள் இருந்தன..அதில் மூனறை மட்டும் இணைத்து எழுத்தை கண்டுபிடிப்பது முடியாது, அடுத்துவந்த பாடல்களும் எண்களை வைத்தே இருப்பதை உறுதிபடுத்துவையாக இருந்தன...ஒன்று கூடி,ஆறாமிடம். ஆறுகூடல், போன்றவைகள்


   தமிழில் தனியாக எண்கள் இருப்பது நினவுக்கு வந்தது,  பழந்தமிழர்கள் அந்த எண்களை உபோயோகப்படுத்தியிருக்க வாய்ப்புகள் அதிகம், அந்த எழுதுக்களுக்குரிய எண்களை யோசித்தேன்...
அ = 8 உ  = 2, எ  = 7,  

    இப்போது முதல் பாடலை இத்தோடு ஒப்பிட்டு பார்த்தால் "முக்கூடி" அந்த மூன்று எண்களையும் கூட்டினால்  18, ஒன்று குறையும்  அப்படிஎன்றால் 17, மூன்றமடி தனல் ஆறாமிடத்தில் மூன்றமடியில் ஆறாம் இடத்தில வருவது 6*3 = 18, இதில் ஒன்று குறைந்தால் ..... இரண்டும் ஒன்றுதான், அப்படி என்றால் அந்த எழுத்துக்கள் தமிழில் எண்களைத்தான் குறிக்கிறது...முதல் பாடலில் கிடைத்தது 17 என்ற எண்..... கொஞ்சம் மூச்சு விட்டேன்...

     அடுத்த பாடல் முழுமைகூட என்றால் கிடைத்த 17 இது கூடினால் 7+1 = 8, அடுத்து முதலோடு ஆறுகூடலோ இதற்கு அர்த்தம் கொள்ள கொஞ்சம் கஷ்டப்பட்டேன் அதாவது முதலில் உள்ளதோடு ஆறை கூட்டினால் 8 கிடைக்கும் என்கிறது, அப்படி என்றால் முதல் எண் அலல்து எழுத்து இரண்டை குறிக்க வேண்டும்..பார்த்தால் உ = 2 , முதல் எழுத்து என்று முடிவாகியது.. மீதம் இருப்பது இரண்டு எழுத்துக்கள்..அடுத்தவரி முழுதும் கடைக்குச் சமம். முழுதும் என்றால் கூட்டி கிடைத்த 8  அந்த எழுத்தில் எட்டை குறிக்கும் சொல் அ = 8, ஆக இந்த கடைசியில் வரும், மீதம் இருக்கும் நடுவில் வரும் தீர்ந்து இருந்தது சரியான வரிசைமுறை  உ எ அ

      ஒருமுறை நான் யோசித்து  பார்த்ததை சரிபார்த்துவிட்டு பொருந்தி  இருக்க அந்த பறையின் மீது இருந்த சட்டங்ககளை கண்டுபிடித்த எழுத்தின் வரிசைக்கு நகற்றினேன்..கூட்டம் எல்லாம் ஆர்வமாக முன்னோக்கி வந்தார்கள் ..மூன்றாவது சட்டத்தை சரியாக அமைக்கவும் அந்த பெரிய பாறையின் மத்தியில் இருந்த ஒரு பாறை பகுதி விலகி உள்ளே விழுந்தது..தொடக்கத்தில் ஒரு பெரிய பள்ளம அதான் மீது இந்த பாறை விழுந்து அதை கடக்கும் விதத்தில் ஒரு பாதை அமைப்பதாக  இருந்தது..ஆற்றில் தண்ணீ போனதால் அந்த பள்ளத்தில் நீர் நிரம்பி இருந்தது..

    ஏதோ பெரிய நிம்மதி...நல்லவேளை பிழைத்தோம் என்றிருக்க..எப்படி திறந்தாய் என்கிறவர்க்ளுக்கு விளக்கம் சொல்லிகொண்டே என்னவளை கூட்டத்தில் தேடினேன் கிடைக்கவே இல்லை..போயிருந்தாள்.

உண்மையில்...

     என்னைத்தேடிவந்த மூவரில் ஒருவர் என்னவளின் அப்பா.....மற்ற இருவர் ஊரில் உள்ள பெரியவர்கள்...வீட்டிற்குள் இருந்து வரும்போதே வெளியில் நின்று இருந்தவர்களை பார்த்தவுடன் பயம் தொற்றி கொண்டது..


      விடுமுறைக்கு வந்ததில்.... நேற்றுதான் யாருக்கும் தெரியாமல் நாங்கள் சந்தித்து பேசினோம்...நிறையா விசயங்கள் சொன்னாள்..அவளின் கண்களில் காதல் அதிகமாய் இருந்தது... அதே எண்ணத்தில் அன்றைய இரவு தூக்கத்தில் என் பெயரை சொல்லி ஏதாவது உளறி இருப்பாள்..அந்த விசயமாகத்தான் அவளது அப்பா  ஊர் பெரியவர்களை அழைத்து வந்து இருக்கிறார் என்பதே என் பயத்தின் காரணம்....


      நல விசாரிப்புகளுக்கு பின் "எங்களோடு கொஞ்சம் வரமுடியுமா?" என்று கேட்டார்கள்...கொஞ்சம் மனம் நிம்மதி .....நல்லவேளை காதல விசயம் இல்லை.."வருகிறேன்" என்று சொல்லி அவர்களோடு நடக்க ஆரம்பித்தேன்....


     போகிற வழியில் கேட்டார்கள்..."நீ சங்கேத பாசை அலலது மறைத்து எழுதுதல் (encryption) முறையில் கதைகள் எழுதிகின்றாயமே?"


      "அது எப்படி உங்களுக்கு தெரியும்..... ஆமாம் சும்மா  கற்ப்பனை செய்து எழுதுகிறேன்" என்றேன்


      "அதே மாதிரி சங்கேத எழுத்துக்கள் அடங்கிய ஒன்று நமது ஊரிலும் இருக்கின்றது இதுவரை யாரும் அதை முயற்சிக்கவில்லை நீ முயற்சித்து பாரேன்" என்றார்கள்


      "நான் எழுதுகின்ற கதைகளில் அந்த எழுத்துக்களை அமைப்பதும்,அதை விடுவிப்பதும் என கற்பனையே..ஆனால் ஒரு உணமையான ஒன்றை என்னால் தீர்க்க முடியுமா என்று தெரியவில்லை" என்றேன்


"இல்லை ஒருமுறை முயற்சி செய்துதான் பாரேன" என்றார்கள்..


"சரி எங்கு இருக்கின்றது" என்றேன்..



"நம்ம ஊர் சிவன் கோயிலில் ஒரு அறை கதவு மூடி இருக்கு அதை திறக்க வேண்டும்"


      போகின்ற வழியில் என்னவள் திண்ணையில் உட்கார்ந்து இருந்தாள்....அந்த இடத்தை கடக்கும்போது அவளை பார்த்தேன்...என்னை கண்டுகொள்ளவே இல்லை...யரோ போகிறார்கள் என்று திரும்பி உட்கார்ந்து இருந்தாள்...அடிப்பாவி... எப்படி எல்லாம்  நடிக்கிறாள் என்று நினைத்துகொண்டேன்


      கோயிலுக்கு போய் ஆறு ஏழு வருடங்கள் ஆகி இருந்தது...எந்த கோயிலுக்கும் போனதில்லை...விருப்பமில்லை அந்த சிவன் கோயில்  கோபுரங்கள் கொண்ட பெரிய  கோயில்..


     உள்ளே ஒரு மூலையில் அந்த கதவு இருந்தது...ஒரு சிறிய அறைக்கு சொந்தமானது ..முழுவதும் ஒரு கல்லால் செய்து இருந்தார்கள்...அதில் சில தமிழ் எழுத்துக்கள் வரிசையாக இல்லாமல் கோணலாக எழுதபட்டு இருந்தது......அந்த எழுத்துக்களுக்கு மேல் இரண்டு காலடி தடங்கள் ....பள்ளமாக செதுக்கப்பட்டு இருந்தது ... அது சாதாரண மனிதனுடையது.......அதில் இருந்த எழுத்துக்கள்


த ம் ள் உ க சு ள ப மி ச ம தி வு உ அ க பூ பொ ன் ந ம் தி ப ம கெ ச சு மி றி கி


இதை பார்த்தபிறகு பின்னாடி நின்று இருந்தவர்களை பார்த்தேன்...


"என்ன முடியுமா?" என்றார்கள்


"கொஞ்ச நேரம் ஆகும் முயற்சி செய்கிறேன்" என்றேன்


"சரி" என்று வெளியில் சென்று விட்டார்கள்..


     அந்த எழுத்துக்களை ஒரு முறை பார்த்தேன் அதைவைத்து ஒரு வார்த்தைக்கு பதில் நிறையா வார்த்தைகள் அமைக்கும் வாய்ப்புகள் இருந்தன.....அப்படி அமைத்தாலும் அதை வைத்து எப்படி திறப்பது..கதவில் இருப்பது வெறும் ஒரு ஜோடி காலடி தடங்கள மட்டுமே.....மற்ற படி எல்லாமே சமபரப்பு...


       பொதுவாக சங்கேத பாசை என்றால் விசயத்தை முழுமையாக மறைத்து வைத்து இருக்க வேண்டும் அல்லது அதை குறிப்பால் உணர்த்தவேண்டும் ..இந்த இரண்டை தவிர வேறு எந்த முறையிலும் அமைக்க முடியாது


      இந்த எழுத்துக்களை பார்க்கும்போது இரண்டாம் வகை...எதையோ உணர்த்துகின்றது...அந்த எழுத்துக்களில் விசயம் இல்லை..ஆனால் அந்த எழுத்துக்கள் உணர்த்துகின்றன...


      அந்த இரண்டு காலடித்தடம்...ஒரு வேலை மனிதனின் காலை அங்கு வைத்தால் திறக்குமோ..அப்படி என்றால் இந்த எழுத்துக்கள் எதுக்கு....அந்த இரண்டு காலடிகளுக்கும் எழுத்துக்கும் தொடர்பு உண்டு....


       காலடி சம்பந்தமான விசயங்களை அந்த எழுத்துக்களோடு சேர்த்துபர்த்தேன்...பாதம்,அடி,ஈரடி,கால்..போன்ற வார்த்தைகள்...எதுவும் சேரவில்லை...அந்த எழுத்துக்கள் எப்படி கதவை திறக்க வேண்டும் எனபதை  சொல்கிறது...அந்த எழுத்தை வைத்து திறக்க முடியாது என்பது எனக்கு புரிந்து இருந்தது ....


     அந்த இரண்டு அடிகள்,சில எழுத்துக்கள் மட்டும்தான்  என் மனதில்.....இந்த இரண்டையும் எப்படி சேர்ப்பது...


      அந்த இரண்டு அடிகள் அல்லது ஈரடி...ஒருவேளை அந்த எழுத்துக்களை ஈரடிமான எண் வரிசையில் அமைத்தால்...பார்த்தேன்...ஆச்சர்யம் அதில் வரும் எழுத்துக்களில் முதல்  எழுத்தை  பார்த்தால் ஒரு அர்த்தம் கொடுத்தது......மற்ற எழுத்துக்கள் கொடுக்க வில்லை.....


த ம் ள் உ க சு ள ப மி ச ம தி வு உ அ க பூ பொ ன் ந ம் தி ப ம கெ ச சு மி றி கி   
இதை அமைத்தால் ....


ம்


ள் உ க சு


ப மி ச ம தி


வு உ அ க பூ பொ ன் ந


ம் தி   ப  ம கெ   ச  சு  மி  றி  கி




     கிடைத்த வார்த்தை "தள்ளவும்"  அப்படிஎன்றால் இந்த கதவுக்கு ஒரு பூட்டும் இல்லை..சும்மா தள்ளினலே திறக்கும்...இதைத்தான் இவ்வளவு நாள் செய்யாமல் இருந்து இருக்கிறார்கள்..கடவுள் விசயம் என்றாலே எதையும் யோசிக்காமலேயே முரட்டு தனமாக பின்பற்றுபவர்கள இதை செய்து இருக்க  வாய்ப்பு இல்லை...


வெளியில் வந்தேன்...ஆர்வமாக கேட்டார்கள் "என்ன விடை கிடைத்ததா?"


    அது சும்மா தள்ளினாலே திறக்கும் என்று சொல்ல மனம் வரவில்லை...காரணம் என்னவளின் அப்பா வேறு இருந்தார்..இப்போது எனது திறமையை நிரூபித்தால் பின்னாளில் காதலுக்கு உதவும் என்று எண்ணி...


"அதை நான் திறந்துவிட்டேன் போய் தள்ளுங்கள் திறக்கும்" என்றேன்
போய் தள்ளினார்கள் அந்த பாறை கதவு பின்னோக்கி நகர்ந்தது

சில ஆறுதல்கள்...

      விடுமுறைக்கு ஊருக்கு சென்றால்.. அடுத்த நாளில் செய்யும் முக்கியமான வேலை என்றால்.. அவளை பார்த்து ஒரு புன்னகையை பரிசாய் பெறுவதுதான்....பேசமாட்டாள்.......அந்த வழியாக நான் போகும்போது பார்த்து சிரிப்பாள்....ஒரே ஊரில் இருந்துகொண்டு காதலிப்பதில் உள்ள பிரச்சினைகளில் இதுவும் ஒன்று..வெளிப்படையாக எதையும் செய்ய முடியாது...

      பொதுவாக காலையில் எப்போதும் அதிக நேரம் தூங்கினால் அது பிடிக்கும்,இது பிடிக்கும் என்று தூங்க விடாமல் என் வீட்டில் எழுப்பி விடுவார்கள்..ஆனால் அன்று யாரும் எழுப்பவில்லை....ஆறுதலாக தூங்க நினைத்தபோது வழியில் சிலர் சத்தமாக பேசிக்கொண்டு செல்வது கேட்டது...

     காலையில் காட்டுக்கு வேலைக்கு செல்வார்கள் என்று நினைத்தேன்..ஆனால் தொடர்ந்து ஆண்கள்,பெண்கள். பேசிக்கொண்டே போகும் குரல் கேட்டது....

      எழுந்து பார்த்தால் என் வீட்டில் யாரையும் காணோம்...வெளியில் பார்த்தால் ஆட்கள் சென்று கொண்டு இருந்தார்கள்..என்னவென்று கேட்க அந்த பிரதான பாதைக்கு செல்ல.... அந்நேரம் என்னவள் அவள் தோழியுடன் வந்து கொண்டு இருந்தாள்..

      நான் பொதுவாக அவர்களை நோக்கி “எல்லாரும் எங்கே போகிறார்கள்?” என்று கேட்டு..
இப்போதாவது அவள் பேசுவாள் என்ற ஆவலில் இருக்க ....இப்போதும் பேசவில்லை...அவளுடைய தோழிதான் ஊரில் உள்ள ஒருவர் குழாய்பதிக்க பள்ளம தோண்டிய இடத்தில் இருந்து ஒரு புதையல் கிடைத்து இருக்கிறதாம் அதை பார்க்கத்தான் எல்லோரும் போய்கிட்டு இருக்கோம்..நீயும் வாயேன் என்று சொல்லிவிட்டு நடந்தார்கள்.....

    அந்த புதையல் கிடைத்து இருக்கும் இடத்திற்கு சென்றபோது, கிட்டதட்ட ஊரில் உள்ள பாதிபேர் அங்குதான் இருந்தார்கள்...அவர்களுக்கு மத்தியில் ஒருவர் செவ்வக வடிவ கல்லை தண்ணீர் ஊற்றி அதன் மேல் இருந்த மண்ணை கழுவி கொண்டு இருந்தார்..

     அது முழுவதும் ஒரே கல்லால் செய்யப்பட்டு இருந்தது.... எந்த பக்கம் திறக்க வழி இருக்கிறது என்று அவர் பார்க்க...அதன் ஒரு பக்கத்தில் நான்கு கல்லாலான வில்லைகள் இருந்தன...நான்கும் ஒரு சதுர வடிவ slot ல் நகரும் வண்ணம் இருந்தது...அதாவது அந்த நான்கு எழுத்துக்களை நமக்கு தேவையானபடி அந்த slot ல் மாற்றியமைக்கலாம்.....அதே நேரத்தில் அந்த பகுதியில் இருந்து வெளியில் எடுக்க முடியாது...

     அதில் இருந்த எழுத்துக்கள் சு,பு,செ,கு. அவர் இதை பார்த்துவிட்டு அந்த மேல் பகுதியை திறக்கின்றதா என்று இழுத்து பார்த்தார் அது வரவில்லை...மற்ற பக்கங்களை சோதித்து பார்த்தார்.....இந்த எழுத்துக்கள் இருந்த பக்கத்தை தவிர மற்ற பக்கங்கள் எல்லாம் ஒரே மாதிரியாக சமமாக இருந்தது...

       கொஞ்சம் முயற்சியுடன் அதை தூக்கி ஒரு திண்டின் மீது வைத்தார்..அதற்குள் ஊர் பெரியவர்கள்...இது சில எழுத்துக்களால் பூட்டப்பட்டு இருக்கிறது..இதை சுத்தியல் கொண்டு உடைத்துதான் பார்க்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்து இருந்தனர்....

      அந்த கல்பெட்டி அருகே சென்று பார்த்தேன்...அந்த எழுத்துக்கள் இருக்கும் பக்கதில்தான் அது திறப்பதற்கு உண்டான சாத்தியம் தெரிந்தது...அந்த எழுத்துக்களை கொஞ்சம் நகர்த்தி பார்த்தேன்..அதன் இடுக்குகளில் மண் நிரம்பி இருந்ததால் நகர மறுத்தன..தண்ணீர் வைத்து சுத்தபடுத்திய பின்னர் ஒரு சிறு சத்தத்துடன் நகர்ந்தது...

       அதற்குள் ஒருவர் ஒரு சுத்தியலையும் உளியையும் எடுத்து வந்து இருந்தார்..அதே நேரத்தில் கொஞ்ச தூரம்தள்ளி இருந்த பெரியவர்கள்..இதை கலெக்டரிடம் ஒப்படைக்கலமா? தாசில்தாரிடம் கொடுக்கலாமா? என்ற விவாதத்தில் இருந்தனர்...சுத்தியல் வைத்து இருந்த மனிதர் அந்த பெரியவர்களின் கட்டளைக்கு காத்து இருந்தார்...

      அதற்கு முன் நான் அந்த பெர்யவர்களிடம் சென்று "இதை நான் ஒரு முறை திறக்க முயற்சி செய்து பார்க்கட்டுமா?" என்று கேட்க..."அது உன்னால் முடியாதுப்பா..இது பழைய காலத்து தந்திரமுறை...உடைப்பதுதான் எளிது" என்றார் அதில் ஒருவர்.

     "உடைப்பது இறுதி தீர்வாக இருக்கட்டுமே,அதற்கு முன் நான் கொஞ்சம் முயற்சித்து பார்க்கிறேனே"..என்று சொல்ல ஒருவழியாக சம்மதித்தார்கள்..... சுற்றி கூட்டம் கூடி இருக்க..அதில் என்னவளும் இருந்தாள்..ஒரு ஓரத்தில் என் பாட்டியும் இவன் என்ன செய்யபோகிறான் என்று பார்த்து கொண்டு இருந்தார்கள்...

        முதலில் அதில் இருந்த எழுத்துக்களை பார்த்தேன்..சு பு செ கு ...இந்த நான்கு எழுத்துக்களையும் எந்த வகையிலாவது மாற்றி அமைத்தால் ஒரு பொருள்படும் சொல்வருகின்றதா எனப்பார்த்தேன்...ஒரு அர்த்தம இருந்தது “புகு” ..இது தவிர மற்ற இரண்டு எழுத்துக்கள் ஒரு அர்த்தம இல்லாமல் போகின்றன.......அந்த “புகு” என்ற சொல் சரியாக இருக்குமோ என்ற சந்தேகத்தில் அதனை வரிசையாக அமைத்து அதை இழுத்து பார்த்தேன் திறக்கவில்லை..

       சற்று நிமிர்ந்து பார்க்க என்னவள் என்னையே பார்த்து கொண்டு இருந்தாள்....பெரியவர்கள் வேறு அதை உடைக்கும் அவசரத்தில் பார்த்தார்கள்..

     மீண்டும் அந்த எழுத்துக்களில் முயற்சி செய்தேன்..இந்த ஒவ்வொறு எழுத்துக்களும் தனியாக எதையாவது குறிக்கின்றதா? என பார்த்தால்...அதற்கும் வாய்ப்பு இல்லாமல் இருந்தது...

        இந்த எழுத்துக்களை ஒரு வரிசையில் அமைத்தால் மட்டுமே பெட்டி திறக்கும்...அப்படி என்றால் இந்த எழுத்துக்கள் கண்டிப்பாக ஒரு வரிசையில் இருக்கவேண்டும், அல்லது வரிசையில் இருக்கும் ஒன்றை குறிக்க வேண்டும்...

        இந்த எழுத்துக்கள் ஒரு வரிசையில் இருக்க கண்டிப்பாக வாய்ப்பு இல்லை..அப்படியானால் இது வரிசையில் இருக்கும் ஒன்றை குறிக்கின்றது...அந்த ஒன்றை கண்டுபிடிக்க வேண்டும்...

        முதலில் பொதுவாக வரிசையில் அமைக்கப்பட்டு இருக்கும் விசயங்களை வைத்து தீர்க்க முடிகின்றதா என்று பார்த்தேன் ..இல்லை..தமிழ் மாதங்கள்,ராசிகள்,கிழமைகள்,எண்கள்..இதில் ஏதும் அடங்கவில்லை...வேறெந்த வரிசையை அடிப்படையாக வைத்து இது அமைக்கப்பட்டு இருக்கும்??...அங்கு இருந்த பெரியவர்களிடம் கேட்டால்....இதுக்குத்தான் முதலிலேயே உடைக்கலாம் என்று சொன்னேன்....எனச்சொல்லி உடைக்க ஆரம்பித்து விடுவார்கள்...

        அதே வரிசையில் கோள்களை வைத்து பார்த்தேன்..எழுத்துக்கள் சரியாக பொருந்தின...அதாவது சூரியனில் இருந்து வரிசையில் பார்த்தால்..புதன்(mercury),சுக்கிரன்(venus),செவ்வாய்(mars),குரு(jupiter)..இதில் வரும் முதல் எழுத்துக்கள் சரியாக பொருந்த வேகமாக அதை அமைத்து இழுத்து பார்க்க..அது திறக்க மறுத்தது..என்ன காரணம்..எழுத்துக்கள் எல்லாம் சரியாக பொருந்தியும் ஏன் திறக்கவில்லை?? என்று யோசிததபோதுதன் தெரிந்தது...நமது முன்னோர்களின் நவகிரக அமைப்புபடி பார்த்தால் கோள்களின் வரிசை வேறு.... அதன்படி பார்த்தால் செவ்வாய்,புதன்,குரு,சுக்கிரன்...இதன் எழுத்துக்களை வரிசையில் அமைத்ததில் மேலே இருந்த மூடி கொஞ்சம் ஆடியது...

   அதை பிடித்து இழுக்க திறந்து கொண்டு தனியாக வந்தது..இதை பார்த்தவுடன் சுற்றி இருந்த பெரியவர்கள் உட்பட எல்லோரும் உள்ளே என்ன இருக்கின்றது என்று ஆர்வமாக பார்த்தார்கள்...எல்லோரும் பார்த்த வேகத்தில் பின்வாங்கினார்கள்..

        உள்ளே இருந்தது..பழங்காலத்து ஓட்டை நாணயங்கள்....ஒரு பெரியவர் வந்து அதை முழுவதும் கிளறி பார்த்துவிட்டு..எல்லாம் ஓட்டை நாணயங்கள்... .....கஷ்டப்பட்டு திறந்த கணேஷுக்கு இதை கோர்த்து ஒரு மாலை போடுங்கள் என்று சொல்ல எல்லாரும் சிரித்தார்கள்...

       இப்போது என்னவளை பார்த்தேன் அவள் சிரிக்கவில்லை....கண்களில் கோபம தெரிந்தது...இருவரும் சிறிது நேரம் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு இருந்தோம்...

      சிலர் அந்த நாணயங்களை பார்த்துவிட்டு சென்றனர்..யாரும் இதை எப்படி திறந்தாய் என்று கேட்கவில்லை...ஒருவழியாக கூட்டம் குறைந்து இருந்தது..

       என்னருகில் வந்தாள்...சில நாணயங்களை கையில் எடுத்து பார்ப்பதுபோல பார்த்துகொண்டே "சொல் கணேஷ் இதை எப்படி நீ திறந்தாய் என்று? என்றாள்...

ஒரு ரகசியம்

    பயமா? பக்தியா? தெரியவில்லை...இதுவரை கோயிலில் உள்ள அந்த குகைக்குள் யாரும் போனதாக இல்லை.....குகை என்று சொல்வதைவிட....கோயிலுக்குள் கிழே இருக்கும் ஒரு வழிப்பாதை...

   பல வருடங்களுக்கு முன் அந்த கோயில் மிக பிரபலமாக இருந்ததாம்....திருவிழாவின் போது யானை கட்டி தேர் இழுத்ததாக சொல்வார்கள் என் பாட்டி. 
  
   நான் சிறு பிள்ளையில் பார்த்து இருக்கிறேன்.....மிகப்பெரிய தேர் ஊரின் மையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும்......அந்த இடத்திற்கு தேரடி என்ற பெயர்.....மாலையில் பெரியவர்கள அமர்ந்து கதை பேசுவார்கள்..அதன் நான்கு சக்கரங்களுக்கு கிழே ஒரு பெரிய கல்லை வைத்து இருப்பார்கள்..எனக்கு தெரிந்து நான் பார்த்து அந்த கோயிலுக்கு விழாக்கள் நடந்ததாக இல்லை..அதற்கு பிறகு வந்த நாட்களில்..அந்த தேரின் பாகங்கள் ஊரில் உள்ளவர்களால் அடுப்பு எரிக்க பயன்படுத்தப்பட்டு...இப்போது அந்த கல் மட்டும் இருக்கின்றது..

   பெரிய கோயில், நிறைய சிலைகள் இருந்தன,ஒரு கட்டத்தில் எல்லாம் திருடுபோய் இன்று ஒரு சில மட்டுமே மிஞ்சி இருக்கின்றன..கோயிலின் கோபுரத்தை சுற்றியும் செதுக்கப்பட்டுள்ள சிற்ப்பங்கள் நேர்த்தியானவைகள்...உள்புறம் பெரிய தூண்கள் வைத்து கட்டப்பட்ட கோயில்..,...வெளியேயும் பெரிய தூண்கள் இருந்ததாகவும்...சில காரணங்களுக்காக அதை பிடுங்கி விட்டார்கள் என்றும் பாட்டி சொல்லி இருக்கிறார்கள்..

   இன்றும் அந்த கோயிலை சுற்றி பெரிய அளவிலான கல் தூண்கள் கிடக்கின்றன...அதை யாரும் பெயர்த்து எடுத்து கொண்டு போக முடியாது என்பதே அதற்கு காரணம்...

   மூலவர் பெருமாள்..சிறுவயதில் போய் இருக்கிறேன்...அதற்கு பிறகு அந்த கோயிலில் பூஜை நடந்ததாக நினைவில்லை....ஒரு நேரத்தில் கோயிலின் மீது இருந்த கலசம் காணமல் போனது..இப்போது இருப்பது வெறும் மூலவரும்,சில அழகான சிற்பங்களும், அந்த மர்ம குகையும்தான்...

   எல்லோரின் நம்பிக்கையும் அந்த குகைக்குள் சில ரகசியங்கள் இருகின்றன என்பதுதான், சிலர் புதையல் இருப்பதாக சொல்லுவார்கள்..ஆனால் இதுவரை யாரும் உள்ளே போனதில்லை..

   காரணம் அந்த குகையின் வாசலில் இருந்த ஒரு கல்வெட்டில் குறிப்பிட்ட சில விசயங்கள் ....நான் பலமுறை என் பாட்டியிடம் கேட்டு இருக்கிறேன்..அந்த குகைக்குள் என்ன இருக்கின்றது என்று?

    அது எதுக்கு உனக்கு? ஏதும் ஆராய்ச்சி செய்யப்போகிறேன் என்று உள்ளே போக முயற்ச்சிக்கதே என்று கண்டிக்க மட்டுமே செய்வார்கள்..இதுதான் அந்த குகைக்குள் என்ன இருக்கிறது? என்று பார்க்கும ஆர்வத்தை அதிகமாக்கியது...

    அதற்கு ஏற்ற நேரமும் வந்தது, ஊரில் ஒருவரின் திருமணத்திறக்கு வீட்டில் உள்ள அனைவரும் சென்றுவிட..தனிமையில் இருந்த எனக்கு அந்த குகைக்குள் செல்லும் எண்ணம வந்தது..இது என் வீட்டுக்கு தெரிந்தால் மட்டும் அல்ல ஊரில் யாருக்கு தெரிந்தாலும் பிரச்சினைதான்..அடுத்த நொடியே வீட்டில் தகவல் கொடுத்து விடுவார்கள்..

    அதனால் நான் செய்யும் எல்லா வேலைகளையும் மறைத்து செய்ய வேண்டியது இருந்தது, உள்ளே போவதற்கு தேவையான பொருள்கள் என்னவென்று யோசித்ததில்..இரண்டு டார்ச் லைட்டுகள்,ஒரு சிறிய கம்பு மட்டும் போதும் என நினைத்தேன்....

   யாருக்கும் தெரியாமல் கோயிலுக்குள் நுழைந்தேன், அந்த குகையின் வாசல் மண் மூடி மேடு ஏறியிருந்தது.. அந்த கல்வெட்டு செவ்வகவடிவ  கல்லில் செதுக்கி அதன் உள்நுழையும் இடத்தில் வைக்கபட்டு இருந்தது...

அதில் ஒரு சில வரிகள் அமைந்த பாடலும் அதற்கு கீழ் ஒரு அட்டவணையும் இருந்தது...அது...

உயிர்வளி காக்க உயிர்வழி சென்று
ஆயுதமெடுத்தால் மெய்வழி கிட்டும்

மெய்கீழ்வழி சென்றால் உயிரினும் மேலான
மெய்ரகசியம் வெளியாய் இருக்கும்

பலவழி இருக்குமிதில் மனவழி சென்றால்
உயிர்வளிதன் மெய்யின்வெளி நீங்கும்



   இதில் இப்படி எழுதி இருப்பதற்கு பயந்துதான் யாரும் உள்ளே செல்லவில்லை.....ஒருவேளை அதில் என்ன எழுதி இருக்கின்றது என்பதை புரிந்து உள்ளே போகவில்லையா, இல்லை அது என்னவென்று புரியாமல் போகவில்லையா என்பதை நான் தெரிந்துகொள்ள அந்த வார்த்தைகளை முதலில் நான் புரிந்துகொள்ள வேண்டும்..  


    இரண்டு முறை வாசித்து பார்த்ததில் அதன் முழு அர்த்தம் புரிந்தது..ஆனால்.எந்த உயிர் வழி சென்று எங்கு ஆயுதம் எடுக்க வேண்டும் என்பதில் குழப்பம்...அதற்கு கிழே அட்டவணையில் வரிசை படுத்தப்பட்ட தமிழ் எழுத்துக்கள்..அந்த எழுத்துக்களில் எங்காவது உயிர் என்ற பொருளில் சொல் வருகின்றதா என பார்த்தேன்...

    அந்த எழுத்துக்களில் ஒரு எழுதுக்கள கூட ஒரு முழு வார்த்தையை கொடுப்பதாக இல்லை..எந்த முறையில் இது அமைக்கப்பட்டு இருக்கின்றது என்ற அடிப்படை தெரிந்தால் மற்றவற்றை கண்டுபிடிப்பது எளிது..

  உயிர் வழி என்றால் என்ன அர்த்தம? உயிரின் வழி...அந்த எழுத்துக்களின் அமைப்பை பார்த்தேன்..ஏதவது உயிர் சம்பந்தபட்டதை உணர்த்துகிறதா என்று?.. அதன் நான்கு புறங்களில் இருந்து பார்க்கும்போது ஒரே ஒரு உயிர் எழுத்து அமைந்து இருந்தது..

   ஒருவேளை அந்த உயிர் என்ற வார்த்தை இந்த உயிர் எழுத்தை குறிக்கலாம் என நினைத்து...அடுத்த வரியை படித்தேன்..ஆயுதம் எடுத்தால்..அப்படி என்றால் ஆயுத எழுத்து ஆச்சர்யம் அதற்கு சற்று கிழே ஒரு ஆயுத எழுத்து இருந்தது..இப்பொது அந்த இரண்டு எழுத்துகளையும் இணைத்தால் ஒரு நேர்கோடு கிடைத்தது..

   அடுத்த வரி மெய்கீழ் வழி அந்த ஆயுத எழுத்தில் இருந்து அடுத்து ஒரு மெய் எழுத்தை குறிக்கின்றது பாடல்...அதே போல் அங்கு ஒரே ஒரு மெய் எழுத்து இருந்தது....இப்போது அந்த நேரான கோடு வளைந்து இருந்தது..அப்படி என்றால்..இது குகைக்குள் செல்ல வழிகாட்டும் பாதையாக இருக்க வேண்டும்...

  அடுத்த வரி மெய் ரகசியம் ஒரு வெளியாய்..இந்த வரிக்கு ஏற்றாற்போல் அந்த கட்டத்தின் முடிவில் ஒரு வெற்று இடம் இருந்ததது..அதுவரை கோடு வரைந்தால்.. வருவது..இந்த மாதிரி இருந்தது..


    ஒருவேளை இது குகைக்குள் செல்ல வழி காட்டுவதாக இருக்கலாம்...அடுத்து வரும் வரிகள் அதை உறுதி படுத்தின... பலவழி இருக்கும் இதில் மனவழி சென்றால் உயிர்வளி தன் மெய்யின் வெளி நீங்கும் இதன் படி குகைக்குள் பல வழிகள் இருக்கலாம்..அந்த வழிகளில் மனம் போன போக்கில் சென்றால்.உயிர்போகும் என்பதை முதலிலேயே உணர்த்தி இருக்கிறார்கள்..இந்த வரியை படிக்கும்போது கொஞ்சம் பயம்..

  இருந்தாலும் கல்வெட்டில் வழிகிடைத்தது கொஞ்சம் தைரியம்..உள்ளே நுழைந்தேன்..என் விளக்கின் வெளிச்சத்தில் வழியை மூடி இருந்த சிலந்தி வலைகளை கம்பினால் நீக்கி முன்னே நகர்ந்தேன்..சிறிது தூரம் சென்றவுடன் பாதை மூன்றாக பிரிந்தது.....கல்வெட்டு வரைபடம தெரிவித்தபடி பார்த்தால் நேராக செல்லும் பாதை முடியும் இடத்தில் வலது புறம மட்டுமே வளைவு இருக்க வேண்டும்..

   எனவே இந்த வல,மற்றும் இட செல்லும் பாதைகள் தவறானவை..ஒருவேளை அந்த பாட்டில் சொன்ன உயிர்வாங்கும் வழியாக இருக்கலாம்..எனவே அந்த வழியில் செல்ல முயற்சிக்க வில்லை...

   நேராக சென்றேன்..வௌவால்கள் வெளிச்சம் பட்டவுடன் வேகமாக அங்கும் இங்கும் பறந்தன...கொஞ்சம் பின் திரும்பி பார்த்தேன்..ஒன்றும் தெரியவில்லை..இருட்டு........திரும்பி செல்வது ஒன்றும் பிரச்சினை இல்லை..நான் வந்த வழியை தவிர மற்ற இடத்தில் எல்லாம் சிலந்தி வலை மூடி இருந்தது.... வந்த வழியில் மட்டுமே அந்த வலைகளை  விளக்கி ஒரு பாதை அமைத்து இருந்தேன்...

   அந்த கல்வெட்டு சொன்னபடி ஒரு இடத்தில் பாதை முடிந்து வலப்புறம் திரும்பியது...வழிகளில் சில சிலைகள் இருந்தன..அதன் பக்க சுவர்களில் சிற்பங்கள் செதுக்கி இருந்தார்கள்..எழுதி இருந்தார்கள்...தமிழ்தான்...எல்லா எழுத்துக்களையும் கொஞ்சம் நீட்டி நீட்டி எழுதி இருந்தார்கள்...ஒருவேளை அபோதைய தமிழ் எழுதும் முறையாக இருக்கலாம்...அதை படிக்கவில்லை..காரணம் பயம்..வேகமாக வெளியேறவேண்டும்...

   வலப்புற பாதையில் சென்றால் ஒரு இடத்தில் முடிந்து கீழ்நோக்கி படிக்கட்டுகள் அமைத்த வழியில் சென்றது..அந்த கல்வெட்டில் குறிபிட்டபடி இது சரிதான்...படிக்கட்டுகள் செல்ல செல்ல அளவில் குருகியபடி சென்றன..ஒரு இடத்தில் ஒருவரே செல்லும் அளவுக்கு பாதை இருந்தது..

  அந்த இடத்தை நெருங்கி விட்டோம் என்று நினைக்கும்போது..அங்கு என்ன இருக்கும் தங்கம்?,புதையல்?..இல்லை வேறு ஏதாவது?...இப்படி   என்வென்று யோசித்தாலும் அதில் ஆர்வம இல்லை..யாரும் போகத குகைக்குள் போய் என்னவென்று பார்க்க வேண்டும் என்பதே என் ஆர்வம

  அந்த படிக்கட்டுகள் ஒரு இடத்தில் முடிந்தன..சற்று பெரிய இடம்...காற்றின் அடர்த்தி அதிகமாக இருந்தது..மூச்சு விடுவதில் கொஞ்சம் சிரமம்..சமாளித்தேன்..அந்த ரகசியததை கொஞ்ச நேரத்தில் பார்க்க போகிறோம் என்ற ஆர்வம.

  அந்த சதுரவடிவ இடத்தை சுற்றி பார்த்தேன் ஒன்றும் இல்லை..சில சிலைகள் அங்கும் இங்கும் கிடந்தன...அதோடு பாதைகள் முடிந்து இருந்தன..இதில் எங்கு? என்ன? ரகசியம் இருக்கிறது என்பதை எப்படி கண்டுபிடிப்பது? சுற்றி பார்த்தேன்..ஒன்றும் கிட்டவில்லை...

  அதன் நான்கு சுவர்களிலும் தேடினேன் வழிகள் இருக்கின்றதா என்று இல்லை...சுவர்களில் விளக்கு அடிக்கும் போது தற்செயலாக அதில் பெரிய வடிவில் செதுக்க பட்டிருந்த எழுத்துக்கள் கண்ணில் பட்டன.. 


   அதில் கோயிலுக்கு உண்டான நகைகள்,சிலைகள் மற்ற பொருள்களை ரகசியமாக வைத்து, மக்களை பயம்காட்டி இதன் உள்ளே வராதபடி செய்யத்தான் இந்த முறை என்று சொல்லப்பட்டு இருந்தது..அதன் கடைசியில்..ரகசியம் என்று சுட்டிக்காட்டி..



 அறியாதவரைதான் ஒன்று ரகசியம்    அறிந்துவிட்டால்?

   பதில்  என்னவென்று யோசித்தேன் கல்வெட்டில் இருந்த கடைசி கட்டத்தில் அதை சொல்லி இருந்தார்கள்.







(கதையில் சொல்லி இருக்கும் கோயில் எங்கள் ஊரில் சிறுவயதில் நான் மிக  ரசித்த ஒன்று..ஆனால் அதன் இப்போதைய  நிலை.... எல்லாம் சிதைந்துவிட்டது....சிற்பங்களைதவிர ஒன்றும் அழகாக இல்லை...

குகை , கல்வெட்டு மற்றும் எழுத்துக்கள்  எல்லாம் என் கற்பனை...)

பொன்விகித காதல் கடிதம் ...

    ஒரு பெண் வந்து காதல் கடிதம் கொடுத்தால்..மனதில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பதை அன்றுதான் நான் உணர்ந்தேன்...எல்லாம் ஹோர்மோன்களின் விளையாட்டுத்தான் என்று தெரிந்தாலும் அதிலும் சுகம் இருக்கத்தான் செய்தது...
    வேலைக்கு செல்ல நாங்கள் சந்தித்து கொள்வது ஒரே பேருந்து நிறுத்தம்..அவள் வேறு பேருந்தில் பயனிப்பாள்..நான் வேறொன்றில்....


  அதனால் காலையில் தவறாமல் ஒருவரையொருவர் பார்த்துகொள்ள தவறுவது இல்லை..சில நாள்களில் அவள் எனக்கு பிடித்து போனாள்.......என்றாவது ஒருநாள் அவள் விடுமுறை என்றால் என்னவோ போலிருந்தது..

   சில நாட்கள் வரை வெறும் பார்வை பரிமாற்றங்களையே செய்துவந்தோம்...ஒருநாள் நான் கொஞ்சம் தாமதமாக வர அங்கு நிறைய ஆள்கள் இருந்தும் நான் நேராக அவளிடம சென்று 'நான் செல்லும் பேருந்து போய்விட்டதா?" என்று கேட்டேன்..

அதற்கு அவள்.."இல்லை இன்னும் போகவில்லை" என்றாள்..

     இதுதான் நாங்கள் பேசிய முதல் வார்த்தை...அடுத்த நாளில்தான் ஒரு சிறிய அதியம் நடந்தது..அவளை பார்க்கும் போது எப்போதும் போல பார்த்ததோடு மட்டும் இல்லாமல் ஒரு மெல்லிய புன்னகையை உதிர்த்தாள்...

   அன்றுவரை நான் பார்க்காத ஒன்று என்பதால் அது அழகாய்த்தான் இருந்தது..பதிலுக்கு நானும் சிரித்து வைத்தேன்..

  அடுத்த வந்த நாள்களில பேசதொடங்கியிருந்தோம்..எங்கள் பேச்சு  அப்படி ஒன்றும்  உருப்பிடியாக இல்லை..என்னை பற்றி அவளை பற்றி..எங்களின் முன்னால் கடந்து சென்ற தெருநாயை பற்றித்தான் இருந்தது..

    என்னதான் தேவை இல்லாத பேச்சுகள் பேசினாலும் அவளுடன் பேசும் நேரங்கள் எல்லாம் இனிமையானது...மனசுக்குள் ஏதோ ஒன்று.....ஹோர்மோன்கள் தங்களின் வேலையை சரியாக செய்தன...

   அடுத்து வந்த நாள்களில் நிறைய பார்த்து கொண்டோம் ..நிறைய பேசிகொண்டோம்...

   இந்த நிலையில்தான்..அவள் வந்து என்னிடம் அந்த கடிதத்தை கொடுத்துவிட்டு "படித்துவிட்டு சொல்" என்று மட்டும் சொல்லிவிட்டு சென்றாள்...

    அவள் கொஞ்ச தூரம்தான் போயி இருப்பாள் அதற்குள் அவள் கொடுத்த அந்த கடிதத்தை படித்து முடித்து இருந்தேன்.....எளிமையாக தனது காதலை சொல்லி இருந்தாள்...

      கொஞ்சம் சந்தோசம் அவளை நானும் காதலித்தேன் ஆனால் சொல்ல பயம்...அவள் சொல்லிவிட்டாள்....எப்படியும் நாளைக்கு சம்மதம் சொல்லவேண்டும்...அன்றைய இரவு புரியாத சில காரணங்களால் தூக்கம் இல்லாமல் இருந்தது...

    அடுத்தநாள் அவளை பார்க்கும் போது மெல்ல சிரித்தேன்..."நானும் உன்னை காதலிக்கிறேன்.....சொல்ல பயம் அதான்"..என்றான்

அது "எனக்கு தெரியும்..அதன் நானே சொன்னேன்" என்றாள்...

  மற்றவர்களின் காதலைபோலத்தான் எங்களின் காதலும் சில மாதங்கள் சென்றது...

   ஒருமுறை பேசிக்கொண்டிருக்கும்போது..எப்போதும் போல நான் கொஞ்சம் அதிகமாக அறிவியல் பேச எங்களுக்குள் செல்லமான சண்டை வந்தது..

   "உனக்கு அறிவியலை தவிர ஏதாவது உருப்பிடியா தெரியுமா?" என்று அவள் கேட்க..
  "அப்படி என்ன உனக்கு தெரியும்..ஏதாவது சொல் பார்ப்போம்" என்றேன்..
    அவள், "உனக்கு கொடுத்த காதல் கடிதத்தை பார்த்தியா..அதில் என்ன இருக்கு என்று"என்றாள்..
   நான், "அதில் என்ன அப்படி பெருசா இருக்கு..நீ என்னை காதலிப்பதாக சொல்லி இருக்கே வேற என்ன" என்றேன்..
   அவள்,"உனக்கு அது மட்டும்தான் தெரியும் அதில் மற்றொரு பெரிய விஷயம் இருக்கு"..என்றாள்..
    "அப்படி என்ன பெரிய விசயம்" என்றேன்.. 

  அவள், "அந்த கடிதத்தை நான் பொன் விகித முறையில் அமைத்து இருந்தேன்" என்றாள்..
   நான், "அது என்ன பொன் விகிதம் என்றேன்" தெரியாதது போல..
   அவள், "அதான் உன்னிடம் முதலில் சொன்னேன்..உனக்கு ஒன்றும் தெரியாது என்று"...என்றாள்..
அதற்கு நான் "சரி நீ சொல் எனக்கு ஒன்றும் தெரியாதுதான்" என்றேன்...

   அவள்,"பொன் விகிதம் என்ற ஒருவிகிதம் இருக்கின்றது..அந்த விகிதத்தில் இருந்து பெறப்படும் எண் ஆனது 1.681..அந்த விகிதமானது ..இரண்டு வெவ்வேறு அளவிற்கும் (எண்ணிற்கும்) உள்ள கூட்டு தொகையை அந்த இரு எண்களில் உள்ள பெரிய எண்ணால் வகுத்தால் வரும் எண் ஆனது, அந்த இரண்டு எண்களின் விகிதத்துக்கு சரி சமமாக இருக்க வேண்டும்...என்ன புரியுதா" என்றாள்..நான், "சத்தியமா ஒண்ணுமே புரியலை" என்றேன்..

அவள், "என்னோமோ ஒரு நாளைக்கு நூறு தடவை ஐன்ஸ்டீன் தாத்தா பெயரை சொல்லுறே..எனக்கு புரிந்தது கூட உனக்கு புரியலையா என்ன?" என்றாள்..
   "சரி இன்னும் எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் இதோ பார்" என்று காகிதத்தில் எழுதினாள்..
இதில் "a" பெரிய அளவு அல்லது எண் என்று வைத்துகொண்டால்..

நான், "சரி அதுக்கு என்ன இப்ப? இந்த எண்ணில் அப்படி என்ன இருக்கு?" என்றேன்..

   அவள்."இது மிகப்பிரபலமான ஒரு எண் விகிதம்...சிலர் சொல்கிறார்கள இந்த பிரபஞ்சத்தில் எல்லா படைப்பும் இந்த விகிதத்தில்தான் படைக்கப்பட்டு இருக்கின்றது ..இதை phi என்று அழைப்பார்கள்"..


   "ஏன் நமது உடம்பில் கூட இந்த விகிதம் இருக்கு...உன் கையின் தோல் பட்டையில் இருந்து உன் விரல் நுனிவரை அளந்துகொள் அப்புறம் உன் முழங்கையில் இருந்து விரல் நுனிவரை அளந்து வரும் அளவை முதலில் அளந்த மொத்த அளவோடு வகுத்து பார் வருகிற எண் கண்டிப்பாக 1.618..இப்படித்தான் இருக்கும்."..

   மேலும் "உன் இடுப்பில் இருந்து உன் பாதம் வரை..அப்புறம் உன்  முழங்காலில் இருந்து தரைவரை அளந்து வரும் அளவை கொண்டு வகுத்து பார் வருவது 1.618.. என்ற எண்..நமக்கு மட்டுமில்லை தாவரங்கள்,விலங்குகள் எல்லாத்துக்கும் இது பொருந்துவதாக சொல்கிறார்கள்"..என்றாள்..
"அதைவிட இந்த விகிதம் Fibonacci எண் வரிசையில் தொடர்ந்து வரும்" என்றாள்..

    "Fibonacci பற்றி என்னிடம் பேசாதே அவரைபற்றி முன்னாடியே ஒரு கதை Fibonacci யும் என்கற்பனையும் என்ற தலைப்பில்  எழுதி இருக்கிறேன்..அவரை பற்றி தெரியும்......சரி இதுக்கும் நீ அந்த எண் அடிப்படையில் எனக்கு காதல் கடிதம் கொடுத்ததற்கும் என்ன சம்பந்தம்" என்றேன்..

  அவள், "பொதுவாக இந்த எண் விகிதம் ஒருவிசித்திரமாக கருதபட்டாலும் கொஞ்சம் புனிதமாக கருதப்பட்டது..பழைய காலத்து ஒரு சில கட்டிடங்கள்,பிரமிடுகள் எல்லாம் இந்த விகிதத்தில் தான் கட்டப்பட்டுள்ளன..... என்று சொல்கிறார்கள்"..

   "சரி அதான்..உன்னை அதிகம் காதலித்தேன்..இந்த எண் விகிதம் பற்றி கொஞ்சம் தெரிந்து இருந்தேன்..நம் காதல் கொஞ்சம் வெற்றியடைய இது ஒருவேளை உதவலாம் என்ற எண்ணம்தான் காரணம்" என்றாள்...

   அன்று வீடு வந்து அவள் கொடுத்த அந்த துண்டு கடிதத்தை அளந்து பார்த்தேன்..அதில் இருந்த அளவுகள்..89mm மற்றும் 144mm. இந்த இரண்டையும் வகுத்துபர்த்தேன்..வந்தது..1.618..

சந்தோசம் கொஞ்சம் அறிவாளியான காதலி..எப்படி எல்லாம் யோசித்து இருக்கிறாள்.....

சில  வருடங்களுக்கு பிறகு....
    நானும் என் காதல் மனைவியும் பேசிக்கொண்டு இருந்தோம்...தற்செயலாக அவள் "நான் என் காதலை சொல்ல ஒரு கடிதம் கொடுத்தேன் நினைவிருக்கா?" என்றாள்.

  நான், "அதை எப்படி மறப்பேன் இன்னும் நான் அதை வைத்து இருக்கிறேன்" என்றேன்
   அவள், "அது சாதாரன கடிதம் இல்லை நாம் காதல் வெற்றியடைய அதில் நான் ஒரு மந்திரம் செய்து இருந்தேன்..அது தெரியுமா?": என்றாள்.

   இதை சொல்லும்போது அவளது கண்களில் வெட்கம் கலந்த காதல் இருந்தது...அவளது பேச்சு பழைய காதல் நினைவுகளை நினைவுபடுத்துவதாக இருந்தது..அருமையான நினைவுகள்..அதுவும் அவள் சொல்லி கேட்பது...என்பது..

அதனால்..நான் "தெரியாது" என்றேன்.. 

  அந்த பொன்விகித காதல் கடிதத்தை அவள் கொடுத்த சில நாட்களில் அதில் இருந்தவற்றை நான் கண்டுபிடித்து  ஏற்கனவே அவளைவைத்து கற்பனை செய்து ஒரு கதையாக எழுதிவிட்டதை மறைத்து....

அவள்,"சரி நான் சொல்கிறேன்" என்று ஆர்வமாக  அந்த காதல கடிதத்தை பற்றி சொல்ல ஆரம்பித்தாள்...







(Fibonacci எண்களை பற்றி ஏற்க்கனவே கொஞ்சம் எழுதி இருக்கிறேன்.. .மிக ஆர்வமான ஒன்று.. ..இதில் நான் சொன்னதுபோல கை கால்களை அளந்து பார்த்தால் அவர்கள் என் கட்சி......நான் முதலில் இதை அறியும்போது படிப்பதை பாதியில் நிறுத்திவிட்டு அளந்துபார்த்து அது சரியாக இருக்க ஆச்சர்யத்தோடு மேலும் படிக்க தொடர்ந்தேன்...)


பிறந்தநாள் பரிசு..???

    இன்று பிறந்தநாள்...எப்படியோ இதுவரை 24 வருடம் நல்லபடியாக சிரமம் இல்லாமல் கடந்துவிட்டது...கழிந்த வருடங்கள் எல்லாம் சுகமானவை...இழப்புகள் இருந்தாலும் ..என மனது ஏனோ அதை விரைவில் மறந்து இருந்ததுதான் உண்மை...

    இந்நேரம் ஊரில் இருந்து இருந்தால்...காலையில் அம்மா வேகமாக எழுப்பி...குளிக்க சொல்லி.. கோவிலுக்கு போய் வரச்சொல்லுவார்கள்...எனக்கு இஷ்டம் இல்லாவிட்டாலும் அவர்களுக்காக போய் வருவேன்...எந்த வேண்டுதலும் இருக்காது...


    ஆனால் இப்போது வாய்ப்பு இல்லை..தொலைபேசியல் பேசினோம்..புதியதாக துணிகள் வாங்குமாறு சொன்னார்கள்..நானும் சரி என்று சொன்னேன்..கோவிலுக்கு போக சொன்னார்கள்..அதுக்கும் சரி என்றேன்..ஆனால் இந்த இரண்டையும் செய்யவில்லை...


    இன்று மாலைவேறு என் அன்பு காதலிக்கு கொஞ்சம் நேரம் ஒதுக்கி இருந்தேன்..அவளை சந்திக்க வேண்டும்....பரிசு ஏதும் கொண்டு வரமாட்டாள்..ஏற்கனவே நான் போன வருடம் மறுத்து இருக்கிறேன்..


     எனக்கு பிறந்தநாள் கொண்டாடுவது என்பது பிடிக்காத ஒன்று..என்ன காரணம் என்று தெரியவில்லை...அந்த நாளில் கடந்த ஆண்டுகளை பற்றி கொஞ்சம் நினைத்து பார்ப்பேன்..அவ்வளவுதான்..அதோடு சரி....இதற்காக போன வருடம் நாங்கள் இருவரும் சண்டைபோட்டு கொஞ்ச நாள் பேசிக்கொள்ளாமல் இருந்து..பின் சமாதானம் ஆனோம்..


     எனவே இந்த முறை அவள் பரிசு ஏதும் வாங்கி வர மாட்டாள்..வழக்கம் போல கொஞ்சம் நேரம் பேசுவோம் ..அதோடு சரி...


    ஆனால் இந்த வருட என் பிறந்தநாளுக்கு சில கடிதங்கள் வந்து இருந்தது...அதுவும் சாதாரணமானது இல்லை எல்லாம் சந்கேதமொழியில்..அதை கண்டுபிடித்து என் வலைப்பூவில் எழுதி இருந்தேன்...புரியாத பரிசுகள், ஒரு பரிசு என்ற தலைப்பில்....


   அதே போல் நேற்றும் எனக்கு ஒரு கடிதம் வந்து இருந்தது...அதே சங்கேத பாசை முறையில்...

     ஏற்கனவே வந்த இரண்டு கடிதங்களை நான் எளிமையாக கண்டுபிடித்து விட்டதாலோ என்னவோ இந்த முறை கொஞ்சம் கடினமானதாக இருந்தது..அதுவும் ஒரு பெண் எழுதியதுதான்...


     எவ்வளவோ முயன்று பார்த்தேன் அதை கண்டுபிடிக்க முடியவில்லை...அந்த கடிதம் என் கையில்தான் இருந்தது...


     அவள் எனக்காக காத்து இருந்தாள்..சிரித்த முகத்துடன் வாழ்த்துக்கள் சொன்னாள்..நினைத்தமாதிரியே பரிசு எதுவும் கொண்டுவரவில்லை...சந்தோசம்..மீண்டும் சண்டை சச்சரவுகள் இல்லை...


    பேசிக்கொண்டு இருக்கும்போது என் கையில் இருந்த கடிதத்தை அவளிடம காட்டி..இந்த மாதிரி எனக்கு ஏற்கனவே இரண்டு கடிதங்கள் வந்து இருப்பதையும் ..அதை நான் கண்டுபிடித்துவிட்டதையும் சொன்னேன்....


இதை ஏன்? முதலில் சொல்லவில்லை என்றாள்..

     அது ஒரு பெண்ணிடம் இருந்து வந்து இருந்தது அதான் உன்னிடம் சொல்லவில்லை..அப்படி சொன்னால்..நீ என்னிடம் சண்டைபிடிப்பாய்..என்றேன்.....

    அந்த கடித விசயத்தை சொன்னதில் இருந்தே அவளின் முகத்தில் ஒருவித புன்னகை கலந்த பேச்சு இருந்து வந்தது...


    நான் கொடுத்த கடிதத்தை பிரித்தவரே அப்படி என்ன கஷ்டமான ஒன்று....என்று அதை படிக்க ஆரம்பித்தாள்....


அதில் இருந்தது..



க நி பூ பொ ர          = ஐன்ஸ்டீன் தாத்தாவின் வெளிநேரம்...




ம் மா ர் பி ற்              = 4 2 3 = 20 ,, 1 2 3 = x




சே ம பி கொ யா = autosome





டி லா ன் மி இ        = phi


     இதை படித்தவுடன் என்னை பார்த்து சிரித்தாள்...இதை உன்னால் கண்டு பிடிக்க முடியலையா? என்ன என்று கேட்டாள்....நான் அவளிடம் இது உனக்கு எளிமையாக இருக்கா என்ன? என்றேன்...

    அதற்கு அவள் இதை உருவாக்கியவளுக்கு எளிமையாக இருக்காமல் பின்ன என்ன கஷ்டமாகவ இருக்கும் என்றாள்....எனக்கு புரியவில்லை..அவள் தொடர்ந்தாள்...


     உனக்கு இதுக்கு முன்னாடி வந்த இரண்டு கடிதங்களும் நான் அனுப்பியதுதான்...அதை நீ சரியாக கண்டுபிடித்துவிட்டாய்.........நான் நினைத்தேன் இதையும் கண்டு பிடித்துவிடுவாய் என்று.ஆனால் உன்னால் முடியவில்லை....என்றாள்..

    எனக்கு ஆச்சர்யம் முன்னால் வந்த கஷ்டமான சங்கேத பாசை கடிதங்களை இவளா எழுதியது என்று........அதே ஆச்சர்யத்துடன் அவளிடம் கேட்டேவிட்டேன்..உணமையில் நீயா அந்த கடிதங்களை எழுதியது என்று..


    அதற்கு அவள் ஆம் என்றாள்....சரி அப்படி என்றால் இதுக்கும் நீ விடை சொல்லிவிடேன் என்னால் முயன்றும் கண்டு பிடிக்க முடியவில்லை என்றேன்...


     அதற்கு அவள் நான் சொல்ல மாட்டேன்....நீயே கண்டு பிடித்துகொள்..அப்படி கண்டுபிடித்துவிட்டால்..அது உனக்கு ஒரு மிகபெரிய பிறந்தநாள் பரிசாக இருக்கும்..அது என்னவென்று நீ கண்டுபிடித்த பிறகு தெரியும் என்றாள்....


    அவளிடம் எவ்வளவோ கேட்டும் சொல்ல மறுத்தாள்....நீயே கண்டு பிடி..அது உனது பிறந்த நாள் பரிசுதான்......என்று சொல்லிவிட்டாள்....பரிசுபிடிக்காதுதான்..இருந்தாலும் இந்த எழுத்துக்களில் அப்படி என்ன பரிசை அவள் மறைத்து வைத்து இருக்க முடியம்..என்ற ஆவல்தான்....கண்டுபிடிக்க வேண்டும்....



(phi மற்றும் ஐன்ஸ்டீன் தாத்தாவின் வெளிநேரம் பற்றி தனியாக எழுத எண்ணம..அதற்கு முன் ஒரு சிறிய அறிமுகத்திற்கு இங்கு குறிப்பிட்டு இருக்கிறேன்....



மேலும் இதில் நான் சொல்லி இருக்கும் பரிசை கண்டு பிடித்து சொல்லுங்கள்...எளிமையான ஒன்றுதான்...)

புரியாத பரிசுகள்... (tamil cryptography)

      மீண்டும் ஒரு தபால் ....எனக்கு கொஞ்சம் ஆச்சர்யம்....ஏற்க்கனவே வந்த ஒரு புரியாத பரிசை கண்டுபிடித்து அதை இங்கு ஒரு பரிசு என்ற தலைப்பில் கொடுத்து இருந்தேன்..அதே மாதிரி இப்போது ஒரு கடிதம்...

    (முதலில் சொன்ன ஒரு பரிசு என்றதை படித்தால் இது புரிய எளிதாக இருக்கும்)


   அனுப்புனர் முகவரியில் அதே பெண்ணின் பெயர்.....அதே அழகான கையெழுத்து..ஆனால் இந்த முறை பரிசு ஏதும் இல்லை ..வெறும் கடிதம் மட்டுமே வந்து இருந்தது....


   பிரித்து படித்தேன்...அந்த முழு கடிதத்தில்...நடுவில் சில வரிகள் மட்டுமே எழுதி இருந்தது..அதுவும் எழுத்துக்கள் இல்லை வெறும் எண்கள் வடிவில்....அதில் இருந்தது இதுதான்..


1108 10018 10017 ....



1109 13012 1503 1101 10016



11007 1105 15012 10012.....


      இப்போது எனக்கு இருப்பது புதிய சோதனை..ஏற்க்கனவே அனுப்பியதை கொஞ்சம் கஷ்டப்பட்டு கண்டு பிடித்தாயிற்று...இதை எப்படி கண்டு பிடிக்க என்ற சிந்தனையில் மூழ்கினேன்....


     ஒருமுறை அந்த எண்களை உற்று பார்த்தால் கொஞ்சம் தலை சுற்றுவது போல இருந்தது...இந்த எண்களில் இருந்து எப்படி தமிழ் வார்த்தைகள் வரும்...


     முதலில் அதில் உள்ள 1108 என்ற இந்த எண்களை பார்த்தேன்...அப்படி ஒன்றும் எளிதில் புரிகின்ற விசயமாக இது இல்லை என்பதை உணர்ந்தேன்...


    ஆனால் எதாவது ஒரு வழியில் இதில் தமிழ் எழுத்துக்கான விவரம் அடங்கி இருக்கும்...நான் கண்டு பிடிக்க வேண்டும்...


      இதில் அவள் வழக்கம் போல பிறந்தநாள் செய்திதான் அனுப்பி இருப்பாள் என என்னால் ஒதுக்கி விட முடியவில்ல..ஒருவேளை வேறு எதாவது விஷயம் அனுப்பி இருந்தால்...கொஞ்சம் ஆர்வம...எல்லாம் ஹோர்மொன்களின் ஊக்கம்...


    ஒருவர் ஒருமுறையில் சங்கேத பாஷையை உருவாக்கினால்..அந்த முறையை சில இடங்ககளில் தொடர்ந்து பயன்படுத்துவார் என்று எங்கயோ படித்து இருக்கின்றேன்... அந்த முறையில் பார்த்தால் இந்த பெண்ணும் அவள் ஏற்க்கனவே உபோயோகித்த பழைய முறையை உபோயோகித்து இருப்பாள் என்று நினைத்துக்கொண்டே முன்னால் நான் உபோயோகித்த அந்த தமிழ் எழுத்துக்கள் கொண்ட அட்டவணையை எடுத்து பார்த்தேன்...


      அந்த அட்டவணையில் இந்த எண்களை எப்படி சேர்ப்பது..எப்படி வரிசை படுத்துவது...அந்த எண்கள் எந்த கோர்வையில் கொடுக்க பட்டுள்ளது என்பதை முதலில் பார்க்க வேண்டும்...


      முதலில் அந்த எண்கள் அனைத்தையும் ஒருமுறை நன்றாக அலசி பார்த்தேன்..அதில் இருந்து சில விசயங்கள் கிடைத்தன...அதாவது அந்த எண் கோர்வையில்..சில எண்கள் தொடர்ந்து மாறி மாறி வருவதை என்னால் காணமுடிந்தது...


அதாவது இந்த முறையில் அனைத்து எண்களும்..அமைக்கப்பட்டு இருந்தன..


1108 10018 10017 ....



1109 13012 1503 1101 10016



11007 1105 15012 10012....


      இதில் 1 மற்றும் 0 ஆனது குறிப்பிடும்படி திரும்ப திரும்ப வந்து இருந்ததை கண்டுபிடித்தேன்..அப்படி என்றால் இதற்க்கு எதவது காரணம் இருக்க வேண்டும்...இந்த இரு எண்கள் மட்டுமே மாறாமல் வருகின்றன..மற்ற எண்கள் அனைத்தும் மாறுகின்றன..


      எனவே இந்த இரு எண்கள் எதையாவது தெரிவிக்க இருக்க வேண்டும்...அப்படி இந்த 0,1 ல் என்ன தெரிவிக்க முடியும்...யோசித்தேன்..


     அந்த பெண் என்னை நன்றாக சுத்த விடுகிறாள் என்பது மட்டும் தெளிவாக தெரிந்தது..அழகான கையெழுத்து உடன் ஒரு பெண்ணின் இப்படி ஒரு கடிதம் என்றால் அதை கண்டுபிடிக்காமல் இருக்க முடியாதுதான்...


      முதலில் அந்த 0,1 என்ற எண்களை பார்த்தவுடன் என் மனதில் தோன்றியது..இது ஒரு BINARY NUMBER ...இந்த BINARY முறையில் பார்த்தால்..0 என்றால் OFF, 1 என்றால் ON. இதுமட்டுமே எனக்கு தெரியும்... இது எந்த வகையில் தமிழ் எழுத்துக்களை கண்டுபிடிக்க பொருந்தும் என்பதை பார்க்க வேண்டும்....


      இந்த BINARY எண்களின் அர்த்தத்தை தமிழில் பார்த்தால்... ON – உயிர் கொடு. OFF - இணைப்பை துண்டி..அல்லது நிறுத்து...இதை எப்படி ஒப்பிடுவது....


      இதில் ஒன்று என்னை சிந்திக்க வைத்தது..”உயிர்கொடு” என்ற வார்த்தை....தமிழ் எழுத்துக்கு உயிர் கொடுப்பது....உயிர் எழுத்துக்கள்...ஒருவேளை அந்த 1 என்ற எண் தமிழில் உயிர் எழுத்துக்களை குறிக்கலாம்...

     அப்படி என்றால் அந்த 0 என்பது...தமிழ் எழுத்துக்கள் உருவாக காரணமாக இருப்பது உயிர் எழுத்துக்கள்,மற்றும் மெய் எழுத்துகள்...மீதம் இருப்பது மெய் எழுத்து..அப்படி என்றால் அந்த 0 என்பதை மெய் எழுத்தாக கொண்டு சோதித்து பார்க்கலாம என்று நினைத்தேன்...


     அதற்கு நானா உதவியாக எடுத்துக்கொண்டது..நான் முன்னர் உபோயோகித்த அதே அட்டவணையை...ஏனென்றால் அவளும் இந்த அட்டவனையைத்தான் உபோயோகித்து இருப்பாள்....


     அப்படி அந்த எண்களின் படி பார்த்தால்.. 1108 .. இதில் முதலில் வரும் எண் உயிர் எழுத்தை குறிப்பது...அடுத்து வரும் எண் 1 உயிர் எழுத்தில் ஒன்றாவது எழுத்தாக இருக்கலாம் என்று அட்டவணையில் தேடினேன்...



      அந்த எழுத்து “அ”..அடுத்து 0 என்பது மெய் எழுத்தை குறிப்பது..அடுத்து வரும் 8 என்பது மெய் எழுத்தில் எட்டாவது எழுத்து..அந்த எழுத்து..”ந்”..இப்போது இரண்டையும் சேர்த்து முழுமையாக்கினால் ந்+அ = . என்று வரும்...முயற்சியில் ஒரு எழுத்து கிடைத்த சந்தோசம்..இது சரியா? இல்லையா? என்பது மற்ற எழுத்துக்களை கண்டுபிடித்த பின்னர்தான் தெரியும்...


       அடுத்து 10018 இதில் மேலே சொன்ன முறையில் பார்த்தால் “ன்” வந்தது....அடுத்த எண்ணில் “10017” தேடினால் “று” வந்தது...இதோடு ஒரு வாக்கியம் முடிந்து இருந்தது...


     அந்த எழுத்துக்களை ஒன்று சேர்த்தால் “நன்று” என்று வந்தது....மிக சந்தோசம்..அப்படி என்றால் நான் தொடரும் முறை சரியானது....


      எனக்கு இன்னும் ஆர்வம அதிகமானது..மீதி இருக்கும் இரண்டு வரிகளில் அவளை பற்றி எதாவது தகவல் இருக்கலாம் என்று நினைத்து அதி வேகமாக மேலே சொன்ன முறையில்..தீர்த்து பார்த்தால்..



நன்று (1108 10018 10017)





பரிசுகள் (1109 13012 1503 1101 10016)





தொடரும்... (11007 1105 15012 10012....)



இதுதான் எழுதி இருந்தது.....


     ஒருவேளை அவள் அனுப்பிய முதல் பரிசில் இருந்த முறையை நான் கண்டு பிடித்து பதிவாக எழுதியதை அவளும் படித்து இருக்க கூடும்.

    இன்னும் பரிசுகள் தொடரும் என்று வேறு சொல்லி இருக்கின்றாள்...ஒருவேளை அவள் இதையும் படித்தால் அடுத்த முறை அவள் உபோயோகிக்கும் முறையை மாற்ற வாய்ப்பு இருக்கின்றது.


   அது கடினமாக இருக்கலாம் அல்லது எளிதாக இருக்கலாம்....அது வந்த பிறகுதான் தெரியும்..அதற்காக நான் காத்திருக்கின்றேன்....