கிரக காதல்...

       கடவுள் இன்ன கிழமை இந்த ஊருக்கு வருவதாக சொன்னால் போதும் அதை கேட்டதில் இருந்தே அங்கு பயணிக்க தயாராகி விடுவாள் என் அன்பு காதலி..

    அந்த அளவு அவளின் அம்மாஅவளை கெடுத்து வைத்து இருந்தார்கள்......மாதம் ஒருமுறை கண்டிப்பாக எங்காவது வெளியூரில் இருக்கும் கோயில்களுக்கு பயணிப்பாள்....அப்படி ஒரு பக்தி...

    அன்று வழக்கமாக சந்தித்து பேசிக்கொண்டு இருக்கும்போதுதான் கவனித்தேன்..எப்போதும் துறுதுறு என்று பேசுபவள் இன்று ஏனோ கொஞ்சம் சோகராகம் பாடுவது போல இருந்தாள்...

     என்ன விஷயம் என்று கேட்டேன்...இரண்டு நாட்களுக்கு முன் அவள் அம்மா இவளுக்கு சாதகம் பார்த்தார்களாம்...இவளுக்கு சில நாட்களில் இருந்து ஏழரை சனி ஆரம்பிக்கிறதாம்...எந்த செயலை செய்தாலும் இடர்கள் வரும் என்றுவேறு அந்த ஜோசியர் பயம்காட்டி இருக்கின்றார்...இதுதான் இவளின் சோக ராகத்திற்கு காரணம்...


     அதோடு மட்டும் இல்லாமல் சனிக்கிழமைகளில் நவகிரக கோயில்களுக்கு சென்று சனி பகவானுக்கு நெய் விளக்கு ஏற்ற வேண்டுமாம்...நாங்கள் அதிகம் சந்தித்து கொள்வதே சனிக்கிழமையன்றுதான் அதுக்கும் சனி பகவான் வேட்டு வைத்து விட்டார்...என்று நினைத்துகொண்டேன்...

    நான் அவளுக்கு ஆறுதல் சொல்லுவிதமாக "அதை எல்லாம் நம்பாதே நீயும் படித்த பெண்தானே..அந்த நவகிரகம் மற்றது எல்லாம் சும்மா..அது எல்லாம் ஒன்றும் செய்யாது..நீ நல்ல படியாக முயற்சி செய்தால் எல்லாம் நல்ல படியாக முடியும்"என்றேன்.

    ”நீ சும்மா எதுக்கு எடுத்தாலும் அறிவியல் பேசாதே..அது உண்மை இல்லாமையா பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் இருந்தே இந்த நவகிரக வழிபாட்டை செய்துகொண்டு வருகிறார்கள்...அதுவும் அந்த காலத்தில் எந்த ஒரு அறிவியல் கருவியும் இல்லாமல் நம்மை சுற்றிவரும் கிரகங்களை துல்லியமாக வடிவமைத்து இருக்கிறார்கள்”...என்றாள்...


  ”நான் ஒன்றும் அறிவியல் பேசவில்லை..அது உணமையோ பொய்யோ அதைவைத்து ஏன் நாம் மனதை குழப்பி கொள்ளவேண்டும் என்றுதான் சொல்கிறேன்” என்றேன்...

   ”இல்லை இல்லை..அந்த கிரகங்களின் நகர்வுக்கும் நமக்கும் தொடர்பு உண்டு...அது நாம் முன்னோர்கள் சொன்னது..அவர்கள இதை கடவுளின் உதவி இல்லாமல் எப்படி இந்த கிரகங்களை கண்டுபிடிக்க முடியும்....எனவே எல்லாத்துக்கும் கடவுள் பின்னாடி இருக்கிறார்” என்றாள் அமைதியாக....

  அதை நான் ஒரேயடியாக மறுத்தால் நான் போகிறேன் என்று சொல்லிவிட்டு கிளம்பிவிடுவாள்....அதனால்..."நான் சொல்லபோவதை கொஞ்ச நேரம் கேள் அதில் ஏதும் தவறு இருந்தாள் சொல்லு” என்றேன்..அதற்கு அவள் “சரி” என்றாள்...

   ”முதலில் நவகிரகங்களாக சொல்லபடும் அந்த கிரகங்களில் எத்தனை கிரகங்கள் என்று உனக்கு தெரியுமா??....”அதில் இருப்பது மொத்தம் ஐந்தே கோள்கள்தான்..சூரியன் (sun) ஒரு நட்சத்திரம்... சந்திரன் (moon)ஒரு துணைக்கோள்..ஆக இந்த இரண்டுமே கோள்கள் இல்லை..

    “அதுக்கு அடுத்த படியாக மீதம் இருப்பது புதன் (mercury) ,சுக்ரன் (nevus),செவ்வாய் (mars),குரு (Jupiter),சனி (sat run)  இவைகள்தான்....அது தவிர ராகு.. கேது...இதுவும் கோள்கள் இல்லை...


     “நான் மேலே சொன்ன இந்த கோள்களை பற்றி சில விசயங்கள் தெரியுமா...இவைகள் நாம் சாதாரன கண்கள் கொண்டே பார்க்க முடியும்....அதாவது அதிகம் இருட்டான தெளிவான  வானவெளியில் இவைகளை நாம் பார்க்கமுடியும்”....


    “மேலும் இவகைளை முதன்முதலில் நாம் மட்டும் கண்டுபிடித்து வணங்க வில்லை..நமக்கு முன்னாடியே பாபிலோனியர்கள் இந்த முறையை பின்பற்றி வந்தார்கள்..அப்புறம் எகிப்தியர்கள்.. அப்படியே நாம்”..

     “என்னை பொறுத்தவரை இதுக்கும் கடவுளுக்கும் எந்த சம்பந்தமும் இருப்பதாக தெரியவில்லை...ஏனென்றால் அப்படி கடவுள் இதுக்கு பின்னாடி இருந்து இந்த கோள்களை மனிதனுக்கு தெரியபடுத்த வேண்டும் என்று இருந்தால் மீதம் இருந்த இரண்டு கோள்களான யுரேனஸ் (Uranus), நேப்டுன் (Neptune) இதை ஏன் அவர்கள கண்டு பிடிக்கவில்லை”?..

   “அது ஏன் என்றும் உனக்கு சொல்லுகிறேன்... இந்த இரண்டு கோள்களும் கொஞ்சம் மங்கலானவை மற்ற கோள்களைவிட.....நம்மில் இருந்து வெகு தூரத்தில் இருப்பவை....அதாவது சாதாரன கண்களால் பார்ப்பதை விட binocular வைத்தே இவற்றை இருண்டவான வெளியில் பார்க்க முடியும்”...

  அவள் சற்று கோபமாக “அப்படி என்றால் இந்த நவகிரக கோள்கள் அனைத்தும் மனிதன் கண்களால் பார்த்து சொன்னதுதான் என்கின்றாயா?” என்றாள்..

     அதுக்கு நான் ..”ஆமாம்... ..அது எப்படி என்றால் நிலையாக இருக்கும்  வான நட்சத்திரங்களை பார்க்கும்போது சில மட்டும் நகர்வதை பார்த்து இருப்பார்கள்..அப்படியே தொடந்து கண்காணித்து வந்தால் அந்த நகரும் பொருள்கள் அனைத்துமே ஒரே கால இடைவெளியில் பார்வைக்கு வந்து போய் இருக்கும்...

  
     "இந்த மாதிரி கண்ணால் பார்த்துதான் அதை மக்களுக்கு சொன்னார்கள்..ஆனால் அதை சொன்னதில் தவறு இல்லை..அதை ஏன் வழிபட சொன்னார்கள் என்றுதான் தெரியவில்லை..ஒருவேளை அவர்கள் வானத்தில் தெரியும் ஒருவிதமான அதிசயமாக அதை கருதி இருக்கலாம்"என்றேன்...

        உடனே அவள் “சரி நீ சொலவது போல வைத்து கொண்டாலும் இந்த சனி கிரகம் மெதுவாக சுற்றுவதை அப்போதே எப்படி சனி பகவானுக்கு கால் ஊனம் என்று சொல்லி வைத்தார்கள” என்றாள்..

எனக்கு என்ன சொல்வதேன்றே தெரியவில்லை எப்படி எல்லாம் யோசிக்கிறாள் இவள்....

   அதற்கு நான் ..”அது ஒன்றும் பெரிய விசயம் இல்லை..கோள்களுக்கு இடையே ஒளி மாறுதல்களை வைத்துதான் அவர்கள் வகை பிரித்து இருப்பார்கள்..அப்படி பிரித்து பார்க்கும் போது இந்த சனி கிரகம் மட்டும் மற்ற கிரகங்கள் சுற்றும் நேரத்தோடு  ஒப்பிடும்போது..
 கொஞ்சம் தாமதமாக தெரிந்து இருக்கலாம்”..

   “உடனே மக்களுக்கு எளிதாக புரியவைக்க அதை ஊனம் என்று சொல்லி இருப்பார்கள்...அது எப்படி என்றால்..ஒரு சிறு குழந்தை உன்னிடம் அங்கு பழுது அடைந்து நிற்கும் ஒருவாகனத்தை பார்த்து கேக்கின்றது இதில் என்ன பிரச்சினை என்று”...

    “அந்த வாகனத்தில் பற்சக்ரங்கள் கொஞ்சம் பிரச்சினை என்று உனக்கு தெரியும்..ஆனால் இதை எப்படி அந்த சிறு குழந்தைக்கு புரியவைப்பே...அந்த இடத்தில நீ சொல்வது அந்த வாகனம் ஓட்டை வாகனம் என்றுதான்...இதைகேட்ட அந்த குழந்தையும் சாந்தியடையும்...இதே காரணம்தான் அப்போதும் நிகழ்ந்து இருக்கலாம்...அப்போது இருந்த மக்களின் அறிவுத்திறனுக்கு ஏற்றபோல அப்படி சொல்லி இருப்பார்கள்” என்றேன்..

     “அப்படி நீ சொல்வதை பார்த்தால் இப்போதும் நம் வெறும் கண்களால் இந்த ஐந்து கிரகங்களை பார்க்க முடியுமா என்ன?” என்றாள்

    “கண்டிப்பாக பார்க்க முடியும்..என்ன அதற்கு தனி நேரம் இருக்கு அதுபடி நாம் வெறும் கண்களால் பார்க்க முடியும்” என்றேன்..

   சரி ப்ளுடோ (Pluto)  வும்தான் சூரியனை சுற்றிவருகிறது அதை ஏன் உன் அறிவியல் கோள்களின் வகையில் சேர்க்கவில்லை என்றாள்..

     இதோ பார்..அதுவும் கோள்களின் பட்டியலில் இருந்தது...ஒவ்வொருவரும் குறைந்த இடைவெளியில் சிலவற்றை கண்டுபிடித்துகொண்டே இருந்ததால் எல்லோரும் சேர்ந்து கோள்கள் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற ஒரு வரைமுறையை உருவாக்கி இருக்கிறார்கள்..அதன் படி பார்த்தால் இந்த ப்ளுடோ கோள்களின் பட்டியலில் இருந்து துரத்த படுகின்றது..என்றேன்..

அதற்கு அவள் "அப்படி என்ன வரைமுறை" என்றாள்

   அதாவது கோள்கள் என்று சொன்னால் அது சூரியனை சுற்றி வரவேண்டும்..,அதன் உருவம்  ஆனது...அது தனது ஈர்ப்பு விசையில் நிலையாக நிலைத்து இருக்கவேண்டும்,அதுவும் முடிந்தவரை கோளமாக, அடுத்து அது சூரியனை சுற்றும் பாதையில் தனக்கு அருகில் உள்ள எல்லாவற்றையும்  தன்பால் இழுத்து அது செல்லும் பாதையை சுத்தமாக வைத்து இருக்கவேண்டும் அதாவது அது செல்வதற்கு உதவியாக....


     இதுதான் ஒன்று கோள்களாக இருக்க காரணமான காரணிகள்..நீ சொல்லும் ப்ளுடோ இந்த மூன்றாம் விதியில் இருந்து விளகுகின்றது..ஏனென்றால் அதை சுற்றி asteroid belt போல ஒருவிதமான kuiper belt  என்ற ஒன்றை அதை சுற்றி பெற்று இருப்பதால் அதை துரத்தி விட்டார்கள்..என்றேன்..
    அவள் சற்று கோபமாக சரி உனக்கு இதன் மேல் நம்பிக்கை இல்லை என்றால் விடு நான் நம்பிகொள்கிறேன்..என்றாள்..   அதற்கு நான் "உன்னை  நம்ப வேண்டாம் என்று சொல்லவில்லை..இல்லாத ஒன்றுக்கு ஏன் அதை நினைத்து நமது மனதை போட்டு கவலைபடுத்தவேண்டும்..நீ நன்றாக முயற்சி செய்தால் அந்த சனி கூட உன்னை ஒன்றும் செய்ய முடியாது" என்று அவளை சமாதானப்படுத்துவதற்காக சொன்னேன்.


    அதற்கு அவள் "சனி இனிதான் என்னை பிடிக்கவேண்டும் என்று இல்லை அதான் மூன்று வருடம் முன்னாடியே  பிடிச்சிரிச்சே இனி எதுக்கு இன்னொருதடவை பிடிக்க வேண்டும்" என்று கோபமாக  சொல்லிவிட்டு  கிளம்பி விட்டாள்...    அவள் மூன்று வருடம் முன்னால் பிடித்த சனி என்று சொன்னது என்ன என்று எனக்கு புரிந்து இருந்தது.....

பிறந்தநாள் பரிசு..???

    இன்று பிறந்தநாள்...எப்படியோ இதுவரை 24 வருடம் நல்லபடியாக சிரமம் இல்லாமல் கடந்துவிட்டது...கழிந்த வருடங்கள் எல்லாம் சுகமானவை...இழப்புகள் இருந்தாலும் ..என மனது ஏனோ அதை விரைவில் மறந்து இருந்ததுதான் உண்மை...

    இந்நேரம் ஊரில் இருந்து இருந்தால்...காலையில் அம்மா வேகமாக எழுப்பி...குளிக்க சொல்லி.. கோவிலுக்கு போய் வரச்சொல்லுவார்கள்...எனக்கு இஷ்டம் இல்லாவிட்டாலும் அவர்களுக்காக போய் வருவேன்...எந்த வேண்டுதலும் இருக்காது...


    ஆனால் இப்போது வாய்ப்பு இல்லை..தொலைபேசியல் பேசினோம்..புதியதாக துணிகள் வாங்குமாறு சொன்னார்கள்..நானும் சரி என்று சொன்னேன்..கோவிலுக்கு போக சொன்னார்கள்..அதுக்கும் சரி என்றேன்..ஆனால் இந்த இரண்டையும் செய்யவில்லை...


    இன்று மாலைவேறு என் அன்பு காதலிக்கு கொஞ்சம் நேரம் ஒதுக்கி இருந்தேன்..அவளை சந்திக்க வேண்டும்....பரிசு ஏதும் கொண்டு வரமாட்டாள்..ஏற்கனவே நான் போன வருடம் மறுத்து இருக்கிறேன்..


     எனக்கு பிறந்தநாள் கொண்டாடுவது என்பது பிடிக்காத ஒன்று..என்ன காரணம் என்று தெரியவில்லை...அந்த நாளில் கடந்த ஆண்டுகளை பற்றி கொஞ்சம் நினைத்து பார்ப்பேன்..அவ்வளவுதான்..அதோடு சரி....இதற்காக போன வருடம் நாங்கள் இருவரும் சண்டைபோட்டு கொஞ்ச நாள் பேசிக்கொள்ளாமல் இருந்து..பின் சமாதானம் ஆனோம்..


     எனவே இந்த முறை அவள் பரிசு ஏதும் வாங்கி வர மாட்டாள்..வழக்கம் போல கொஞ்சம் நேரம் பேசுவோம் ..அதோடு சரி...


    ஆனால் இந்த வருட என் பிறந்தநாளுக்கு சில கடிதங்கள் வந்து இருந்தது...அதுவும் சாதாரணமானது இல்லை எல்லாம் சந்கேதமொழியில்..அதை கண்டுபிடித்து என் வலைப்பூவில் எழுதி இருந்தேன்...புரியாத பரிசுகள், ஒரு பரிசு என்ற தலைப்பில்....


   அதே போல் நேற்றும் எனக்கு ஒரு கடிதம் வந்து இருந்தது...அதே சங்கேத பாசை முறையில்...

     ஏற்கனவே வந்த இரண்டு கடிதங்களை நான் எளிமையாக கண்டுபிடித்து விட்டதாலோ என்னவோ இந்த முறை கொஞ்சம் கடினமானதாக இருந்தது..அதுவும் ஒரு பெண் எழுதியதுதான்...


     எவ்வளவோ முயன்று பார்த்தேன் அதை கண்டுபிடிக்க முடியவில்லை...அந்த கடிதம் என் கையில்தான் இருந்தது...


     அவள் எனக்காக காத்து இருந்தாள்..சிரித்த முகத்துடன் வாழ்த்துக்கள் சொன்னாள்..நினைத்தமாதிரியே பரிசு எதுவும் கொண்டுவரவில்லை...சந்தோசம்..மீண்டும் சண்டை சச்சரவுகள் இல்லை...


    பேசிக்கொண்டு இருக்கும்போது என் கையில் இருந்த கடிதத்தை அவளிடம காட்டி..இந்த மாதிரி எனக்கு ஏற்கனவே இரண்டு கடிதங்கள் வந்து இருப்பதையும் ..அதை நான் கண்டுபிடித்துவிட்டதையும் சொன்னேன்....


இதை ஏன்? முதலில் சொல்லவில்லை என்றாள்..

     அது ஒரு பெண்ணிடம் இருந்து வந்து இருந்தது அதான் உன்னிடம் சொல்லவில்லை..அப்படி சொன்னால்..நீ என்னிடம் சண்டைபிடிப்பாய்..என்றேன்.....

    அந்த கடித விசயத்தை சொன்னதில் இருந்தே அவளின் முகத்தில் ஒருவித புன்னகை கலந்த பேச்சு இருந்து வந்தது...


    நான் கொடுத்த கடிதத்தை பிரித்தவரே அப்படி என்ன கஷ்டமான ஒன்று....என்று அதை படிக்க ஆரம்பித்தாள்....


அதில் இருந்தது..க நி பூ பொ ர          = ஐன்ஸ்டீன் தாத்தாவின் வெளிநேரம்...
ம் மா ர் பி ற்              = 4 2 3 = 20 ,, 1 2 3 = x
சே ம பி கொ யா = autosome

டி லா ன் மி இ        = phi


     இதை படித்தவுடன் என்னை பார்த்து சிரித்தாள்...இதை உன்னால் கண்டு பிடிக்க முடியலையா? என்ன என்று கேட்டாள்....நான் அவளிடம் இது உனக்கு எளிமையாக இருக்கா என்ன? என்றேன்...

    அதற்கு அவள் இதை உருவாக்கியவளுக்கு எளிமையாக இருக்காமல் பின்ன என்ன கஷ்டமாகவ இருக்கும் என்றாள்....எனக்கு புரியவில்லை..அவள் தொடர்ந்தாள்...


     உனக்கு இதுக்கு முன்னாடி வந்த இரண்டு கடிதங்களும் நான் அனுப்பியதுதான்...அதை நீ சரியாக கண்டுபிடித்துவிட்டாய்.........நான் நினைத்தேன் இதையும் கண்டு பிடித்துவிடுவாய் என்று.ஆனால் உன்னால் முடியவில்லை....என்றாள்..

    எனக்கு ஆச்சர்யம் முன்னால் வந்த கஷ்டமான சங்கேத பாசை கடிதங்களை இவளா எழுதியது என்று........அதே ஆச்சர்யத்துடன் அவளிடம் கேட்டேவிட்டேன்..உணமையில் நீயா அந்த கடிதங்களை எழுதியது என்று..


    அதற்கு அவள் ஆம் என்றாள்....சரி அப்படி என்றால் இதுக்கும் நீ விடை சொல்லிவிடேன் என்னால் முயன்றும் கண்டு பிடிக்க முடியவில்லை என்றேன்...


     அதற்கு அவள் நான் சொல்ல மாட்டேன்....நீயே கண்டு பிடித்துகொள்..அப்படி கண்டுபிடித்துவிட்டால்..அது உனக்கு ஒரு மிகபெரிய பிறந்தநாள் பரிசாக இருக்கும்..அது என்னவென்று நீ கண்டுபிடித்த பிறகு தெரியும் என்றாள்....


    அவளிடம் எவ்வளவோ கேட்டும் சொல்ல மறுத்தாள்....நீயே கண்டு பிடி..அது உனது பிறந்த நாள் பரிசுதான்......என்று சொல்லிவிட்டாள்....பரிசுபிடிக்காதுதான்..இருந்தாலும் இந்த எழுத்துக்களில் அப்படி என்ன பரிசை அவள் மறைத்து வைத்து இருக்க முடியம்..என்ற ஆவல்தான்....கண்டுபிடிக்க வேண்டும்....(phi மற்றும் ஐன்ஸ்டீன் தாத்தாவின் வெளிநேரம் பற்றி தனியாக எழுத எண்ணம..அதற்கு முன் ஒரு சிறிய அறிமுகத்திற்கு இங்கு குறிப்பிட்டு இருக்கிறேன்....மேலும் இதில் நான் சொல்லி இருக்கும் பரிசை கண்டு பிடித்து சொல்லுங்கள்...எளிமையான ஒன்றுதான்...)

தாயைபோல மட்டும்தான் சேய்...!!!

 (இந்த கதையை நீங்கள் படிக்க நினைத்து தொடங்கினால்......... இந்த கதைக்கு ஒரு பெருமை உண்டு.அதை கதையின் கடைசியில் சொல்லி இருக்கிறேன்...கதையை படிக்காமல்  சென்று அதை படித்தால்  புரியாது...!!!!)     


     இந்த வருட சிறந்த அறிவியல் ஆராய்ச்சிக்கான விருது இந்த முறையும் அவனுக்கு கிடைத்து இருந்தது.....இது அவனுக்கு இரண்டாவது முறை...

     இந்த விருதுகள் ஒன்றும் அவனுக்கு சாதரணமாக கிடைத்து இருக்கவில்லை..தனது வாழ்நாளின் பெரும்பகுதியை அந்த விருதுகளுக்கு செலவிட்டு இருந்தான் என்பதே உண்மை..அதுவும் இந்த இளம் வயதில்...இந்த மாதிரியான ஒரு சாதனை என்பது மிகபெரிய விஷயம்....

     இது என்னமோ அவனுக்கு ஒரு பெரிய மகிழ்ச்சியாக இருந்தாலும்..சில வருடங்களுக்கு முன்னால் திருமணமான அவனது மனைவிக்கு மகிழ்ச்சியை தரவில்லை....

     எப்போது பார்த்தாலும் எதாவது ஆராய்ச்சி ..ஆய்வுகூடம் என்று சுற்றி திரியும் கணவன் ....தன் மீது எந்தவொரு பாசமோ அக்கறையோ இல்லாமல் சுற்றுவது அவளுக்கு பிடிக்கவில்லை...

      சிலமுறை சொல்லியும் பார்த்தாள்....அவன் அதை கேட்பதாக இல்லை....அவனது எண்ணம முழுதும் அவனது ஆரய்ச்சிலேயே இருந்தது..இவளுக்கு அவனின் அன்பு,காதல் கிடைக்காத சோகம்.......தனது வார்த்தைகளை கணவன் கேட்கவில்லை என்ற ஒரு வெறுப்பு..மனம் முழுவதும் பரவி இருந்தது..

     அவளின் அம்மா..மற்றும் உறவினர்களிடம் இது பற்றி விவாதித்து பார்த்தாள்.......அவர்கள்..எல்லாம் ஒரு குழந்தை பிறந்தால் சரியாகிவிடும் என்ற ஆறுதல் வார்த்தையை மட்டுமே சொன்னார்கள்..

      அதற்கும் வாய்ப்பு இல்லை...இருவருமே சேர்ந்து பேசி இப்போதைக்கு குழந்தை வேண்டாம் என முடிவெடுத்து இருந்தார்கள்......இது அவனது கருத்து மட்டும்தான்.....

   அவளுக்கு எப்போதும் ஒரு பயம் இருந்தது....அப்படியே குழந்தை பிறந்தாலும்..அந்த குழந்தையும் அப்பாவை போல அறிவியல்..... ஆராய்ச்சி என்று தன்னை பிரிந்து தனியாக சென்று விட்டால்...........தன் மீது அன்பு செலுத்த..குடும்ப வாழ்க்கை வாழ வழியே இல்லாமல் போய்விடும்..என்ற பயம்தான் அவளுக்கு...

     இந்த பிரச்சினைகளுக்கு எதாவது செய்து ஆகவேண்டும்.........அவளது நல்ல மனது அவனை விட்டு பிரிந்து செல்லவும் மனம் வரவில்லை.......கணவன்தான் இப்படி .........ஆனால் பிறக்கும் குழந்தை என்னோடு இருக்க வேண்டும் என்ற ஆசை அவளுக்கு...அதற்கு என்ன செய்ய போகிறோம் என்ற கவலையில் இருக்கும் போதுதான்..தற்செயலாக கணேஷ் எழுதிய  மரபுரிமை எப்படி?..என்ற  ஒரு பதிவை வாசித்தாள்..

     அந்த பதிவில் செல்களுக்கிடையே எப்படி மரபு சம்பந்தபட்ட விஷயங்கள் கடத்தபடுகின்றன......எந்த நிலையில் இருந்து எப்படி..கடத்தபடுகின்றன என்பதை பற்றி கொஞ்சம் இருந்தது.....மேலும் அதில் மரபு பண்புகளை கடத்த காரணமாக இருப்பது CENP-A என்ற மூலக்கூறுதான்..இந்த CENP-A என்ற மூலக்கூறுதான் கருமுட்டையில் (ZYGOTE) இருந்தே  செல்களுக்கிடையே மரபு பண்புகளை கடத்தும் என்று அதில்  இருந்தது......

     இதை படித்தவுடன் அவளுக்குள் ஒரு திட்டம் உருவானது........தனக்கும் ஒரு குழந்தை வேண்டும் ....ஆனால் அது அப்பாவின் குணநலன்களை பெற்று இருக்க கூடது...தனது மரபையே பெற்று இருக்க வேண்டும்...இது சாத்தியமா..என்று யோசித்தாள்....

     அவள் படித்தபடி பார்த்தால்...கருமுட்டையில் இருந்து நடக்கும் செல்பிரிதலின் போது இந்த CENP-A என்ற மூலக்கூறு வழியாக மரபு விசயங்கள் கடத்தபடுகின்றன…

     அப்படி கருமுட்டையில் இணையும்  அவளது கணவனின் இன்பெருக்க அணுவில்  உள்ள குரோமோசோம்களில் உள்ள இந்த CENP-A என்ற மூலக்கூறுவை கொஞ்சம் மரபு பண்புகளை கடத்தமுடியாத படி மாற்றியமைத்து தனது கணவனுடைய மரபு பண்புகளை பிறக்கபோகும் குழந்தைக்கு இருக்காமல்...முழுக்க முழுக்க தன் பண்புகளையே கொண்ட குழந்தையை பெறுவதுதான்..அவளுடைய திட்டம்....

      அடுத்து...தனது கணவனிடம் பொய் சொல்லி மருத்துவமனைக்கு அழைத்துசென்று அவனுடைய இனப்பெருக்க அணுவை தனது ஆராய்ச்சிக்கு எடுப்பது அவளுக்கு ஒன்றும் கடினமானதாக இல்லை....

      CENP-A என்ற மூலக்கூறுவை மாற்றியமைப்பது சாத்தியமா....கொஞ்சம் தேடிப்பார்த்தாள் ...இது இருப்பது குரோமோசோம் மத்தியில்..அதாவது இரண்டு க்ரோமோடின் இலைகள் சந்திக்கும் இடத்தில..அதாவது centrome என்ற இடத்தில........இதில் இருந்து க்ரோமோடின் இருக்கும் நீளத்தை வைத்துதான்..குரோமோசோம்கள் பிரித்து அறியப்படுகின்றன...

      சரி எப்படியோ இவள் மேலே சொன்னபடி கற்பனை செய்துமட்டும் பார்த்தால் போதுமானதாக இருக்காது..அதை எப்படி செயல்படுத்துவது..இது மிகவும் கஷ்டமான ஒருவகையில் ஆபத்தான விசயமும் கூட....

      இது சம்பந்தமாக சில மருத்துவர்களை சந்தித்து பேசி ..சில நிபந்தனைகளோடு இதனை செய்ய ஒப்புக்கொண்டு..எப்போது எப்படி செய்ய என்பன பற்றி பேசி முடிவு எடுக்கபட்டது...

     அதான் படி இந்த சோதனையை IVF (IN VETRO FERTILISATION) முறையில் செய்ய முடிவு எடுத்து இருந்தார்கள்..அதாவது முதலில் கணவனுடைய இனப்பெருக்க செல்லில் இருந்து அந்த CENP-A என்ற மூலக்கூறுவில் தேவையான மாற்றங்களை செய்துவிட்டு..பின் அதை பெண்ணின் இனபெருக்க அனுவோடு இணையவைத்து..அதை மீண்டும் அவளுடைய கருப்பையில் வளரவைப்பது...

     அதாவது இந்த முறையில் செயற்கையாக ஆண்,மற்றும் பெண் இனப்பெருக்க செல்களை இணையவைத்து ..வெளியில் கருமுட்டையை(ZYGOTE) உருவாக்கி பின் அதை கருப்பையில் கருவாக வளரவைப்பது...

     இந்த வேலைகள் அனைத்துமே அவனது கணவனுக்கு தெரியாமலே நடந்து முடிந்தது......அவனை பொறுத்தவரையில் தனது மனைவி கர்ப்பமாக இருக்கிறாள் என்ற சந்தோசமே....அவனுக்கு அவனது ஆராய்ச்சியின் மீதே முழுகவனமும்....மற்றபடி அவனுக்கு எதுவும் தெரியாது....

   மருத்துவர்களின் கண்காணிப்பில் எந்தவொரு பிரச்சினையும் இல்லாமல் கரு நன்றாக வளர்ந்து..குழந்தையாக பிறந்தது..அதுவும் பெண்குழந்தை...அவளுக்கு மிக சந்தோசம்...

   பெண் குழந்தை... அப்படியென்றால்..மருத்துவர்கள் தங்களது வேலையை சரியாக செய்து இருக்கிறார்கள்..என்று நினைத்து கொண்டாள்.....குழந்தை வளர்ந்து பெரியவள ஆனாள்...


சரியக 28 வருடங்கள் கழித்து..

    இந்த முறை சிறந்த அறிவியல் ஆராய்ச்சிக்கான விருதை அந்த 28 வயது பெண் பெற்று இருந்தாள்...தனது அப்பாவைவிட மிக குறைந்த வயதில் வயதிலியே இந்த விருதை பெற்று இருந்தாள்..

    மருத்துவர்கள் CENP-A என்ற மூலக்கூறில் செய்த தவறு அந்த கரு முழுவதும் அவனது குரோமோசோம் ல் உள்ளதையே இதுவரை கடத்தி வந்து கொண்டு இருக்கின்றது .......இனியும் செவ்வனே கடத்தும்.....     ((((((இந்த கதை முதன்முதலில் CENP-A என்ற மூலக்கூறை வைத்து எழுதப்பட்ட ஒரு அறிவியல் புனைவு கதை..அதுவும் தமிழில்...இந்த மாதிரி நிறைய அறிவியல் புனைவு நான் எழுதி இருந்தாலும் அதில் நான் பயன்படுத்தபட்ட விசயங்கள் எனக்கு தெரியாமல் எங்காவது பயன்படுத்தபட்டு இருக்கலாம்...
   ஆனால் இந்த  CENP-A என்ற மூலக்கூறு மரபுகளை கடத்துவது கண்டுபிடிக்க பட்டது  இந்த மாத 16 &17 தேதிகளில்தான்...)))))

மரபுரிமை எப்படி???

மரபுரிமை..ஏன்? எப்படி?

     மரபுரிமை என்று நான் இங்கு சொல்லவருவது..நமது உடம்பில் இருக்கும் செல்களுக்கிடையே நடக்கும் அல்லது இருக்கும் மரபுரிமை பற்றி...

      சரி அது என்ன மரபுரிமை..(INHERITANCE) ..நமது உடம்பில் அன்றாடம் கோடான கோடி செல்கள் பகுபட்டு கொண்டே இருக்கின்றன...அப்படி பிரிந்து பகுபடும்போது ஒரு செல்லில் இருந்து பிரிந்த மற்றொரு குழந்தை செல்லானது..அது எந்த தாய் செல்லில் இருந்து வந்ததோ அதே குணநலன்களை பெற்றிருக்கும்..அப்படியே மாறாமல்....அது எத்தனை முறை பிரிந்தாலும் சரி..

    அப்படி நடக்கும் செல் பாகுபாடுகளில் எதாவது பிரச்சினை என்றால் வரக்கூடிய நோய்கள மிக கொடூரமானவைகள்..புற்றுநோய்,..அல்லது DOWN SYNDROME போன்றவைகள் இதில் அடங்கும்...

    சரி இந்த தாய் செல்லில் இருந்து சேய் செல்லுக்கு எப்படி அப்படியே தகவல்கள் செல் பிரிதலின் போது கடத்தபடுகின்றன எனபதை பற்றி பல ஆண்டுகளாக நமது சிறந்த மனித மூளை தேடிக்கொண்டு இருந்தது....

     அதற்கு விடை சில நாட்களுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது..அதற்கு காரணமாக கண்டுபிடிக்க பட்டது..CENP-A (CENTROME PROTEIN –A) என்ற MOLECULE தான்.

     இதுதான் செல்களின் பாகுபாட்டின் போது ஒரு செல்லில் இருக்கும் தகவல்களை அப்படியே சேய் செல்லுக்கு கடத்தி செல்கின்றது...

     இந்த MOLECULE தான் மரபு செய்திகளை கடத்த வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டு வந்தது.......இப்போது அதை நிரூபித்து உள்ளார்கள் Pennsylvania's School of Medicine சேர்ந்தவர்கள...

    அவர்கள் சொல்லுவது CENP-A என்ற இந்த ஒன்று இல்லாமல் செல் பாகுபாட்டின் போது தாய் செல்லில் இருந்து சேய் செல்லுக்கு தகவல் கடத்துவது என்பது இயலாத காரியம்..என்பதை நிரூபித்துள்ளார்கள்...இதுதான் செல் பகுபட்டின்போது தாய் செல்லில் இருந்து தகவல்களை பதிவு செய்து சேய் செல்லுக்கு கடத்த காரணமாக இருக்கின்றது என்பது இவர்களின் கண்டு பிடிப்பு...

இன்னும் விளக்கமாக சொல்வதென்றால்..

நூலை போல சேலை ...தாயை போல பிள்ளை என்பார்கள்....

இதை கொஞ்சம் அறிவியல் பூர்வமாக எப்படி என்று பார்ப்போம்..

    ஆண் மற்றும் பெண்ணிடம் இருந்து வரும் இனப்பெருக்க செல்களில் வெறும் ஒரு ஜோடி குரோமோசோம் களே இருக்கும்....இது இரண்டும் கருப்பையில் முழுமையாக இணைந்தால் அது ZYGOTE..இந்த ZYGOTE நிலையில் இனபெருக்க செல்களில் உள்ள குரோமொசோம்கள்...சரியாக இணைந்து..தங்களது வேலையை சரியாக செய்ய ஆரம்பித்தால..அது EMBRYO வாக மாறும்...அந்த EMBRYO சரியான முறையில் முழு வளர்ச்சி அடைந்தால்..நாம்.   .(மேலே உள்ளதை திரும்ப படிக்க முயற்சிக்காதிர்கள்)))))

      சரி இதில் அந்த CENP-A MOLECULE ன் வேலை எங்கு இருக்கின்றது என்று கேட்டால்..ZYGOTE எனப்படும் ஒரு செல் பகுப்படைந்து பல செல்களாக மாறும்போது...தாய் மற்றும் தந்தை இனப்பெருக்க செல்களில் உள்ள  மரபு பண்புகளை ((ZYGOTE ல் இணைந்த குரோமோசோம்களுக்கு ஏற்றார்போல)) தொடர்ச்சியாக கடத்துவதுதான் இதன் வேலை..

     சொல்ல போனால் இதன் வேலை ZYGOTE ல் இருந்தே தொடங்கி விடுகின்றது..அப்போது தொடங்கும் இதன் செயல் அந்த மனிதன் உயிர்வாழும் வரை அவன் உடலில் நடக்கும் அத்தனை செல் பாகுபாடுகளின் போதும் இது செவ்வனே தனது வேலையை செய்கின்றது...சொல்வதென்றால் தாய் செல்லுக்கும் சேய் செல்லுக்கும் ஒரு உறவு பாலமாய் அமைவது இதுதான்...


    இதை கண்டு பிடித்ததில் இப்போதைய அறிவில் உலகில் பெரும்பயன்பாடு உண்டு..அதுவும் SYNTHETIC GENOME துறையில் எனபது கூடுதல் தகவல்..

 

ஹிப்னாடிச காதலி....

     கல்லூரியில் படிக்கும்போது பாட சம்பந்தமான புத்தகங்களை படிக்க மட்டுமே அதிக தயக்கம்.......மற்றபடி வேறுசில புத்தகங்களை படிப்பதில் எந்த ஒரு தயக்கமும் இருந்தது இல்லை......எதையாவது புதியதாக தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வமே..காரணம்..

     புத்தகம் வாசிப்பு சம்பந்தமாக இருந்ததாலோ தெரியவில்லை......காதலை விட்டு வெகு தூரத்தில் இருந்தேன்...அதற்காக தனியாக நான் முயற்சி செய்யவில்லை அதனால் காதலும் என்னை தேடி வரவில்லை... இப்படி சில நாட்கள்தான் இருக்க முடியும் என்பதை ஒருநாள் உணர்ந்தேன்..
   
     அதை சொல்வதற்கு முன் ஒரு பெண்ணை பற்றி சொல்லிவிடுகிறேன்..அவள நான் இருக்கும் தெருவுக்கு பக்கத்து தெருதான்..

    அழகாய் இருப்பாள்...நன்றாக படிப்பவள்...ஆனால் கல்லூரியில் வேறு பிரிவில் படிப்பவள்.... போகும்போது வரும்போது பார்ப்போம்......அப்படியே கல்லூரிக்கு உள்ளே பார்த்து கொண்டாலும் பேசுவது இல்லை.. நான் பார்ப்பதை அவள் பார்த்து விட்டாலோ அல்லது அவள் பார்ப்பதை நான் பார்த்துவிட்டாலோ இருவருமே பார்வையை துண்டித்து கொள்வோம்..இது சில மாதங்களாகவே நடந்து கொண்டு இருந்தது...

     தற்செயலாக நான் நூலகத்தில் இருக்கும்போது அவள் வந்து இருந்தாள்...அப்போதும் அந்த பார்வை இடறல்கள்......

   அவள்தான் கேட்டாள்.."நீ அப்படி என்னதான் படிப்பே நான் எப்போது பார்த்தாலும் புத்தகமும கையோடு இருக்கிறாயே" என்றாள்..

    எனக்கு ஆச்சர்யம்..எப்படி அவளாக வந்து பேசுகிறாள்..என்று..நான் அப்போதைக்கு..."சும்மா அப்படியே..எதாவது ஒன்றை கற்றுக்கொள்ளவேண்டும் என்ற ஆர்வம்தான்" என்று மட்டும் சொல்லி வைத்தேன்..வேறேதும் நாங்கள் பேசவில்லை...

   சில நாட்கள் கழித்து கல்லூரி முடிந்து செல்லும்போது தற்செயலாக இருவரும் ஒரே நேரத்தில் செல்ல நேர்ந்தது....அப்போது இருவரும் சந்தித்து கொண்டோம்...

     நான்தான் பேசினேன்..எல்லாம் எனக்கு அவளை பற்றிய தெரிந்த விஷயங்கள்தான் இருந்தாலும் அப்போதைக்கு எதாவது பேசவேண்டுமே என்பதற்காக பேசினேன்...

   அன்றைய தினத்தில் என் மனதில் இரண்டு மூன்று முறை அவள் வந்து சென்றாள்..

   இப்போதெல்லாம் அவள் என்னை பார்க்கும் போது நான் பார்த்து விட்டால் பார்க்காதது போல நடிப்பதில்லை மாறாக சிறிய புன்னகையை..உதிர்ப்பாள்..அழகாய் இருக்கும்... அவளின் முகத்திற்கு...

     அடுத்து வந்த நாட்களில் கல்லூரியில் நேரம் கிடைக்கும்போது பேசிகொள்வோம்...சில தினங்களில் அவளுடன் பேச என் மனம் விரும்பியதுண்டு... மேலும் கல்லூரி வரும் மற்றும் போகும் போது இருவருமே சேர்ந்தே செல்ல ஆரம்பித்தோம்...அவளால் என் மனதில் சிறிய மாற்றம் உண்டாகியிருந்தது எனபதுதான் உண்மை....அந்த மாற்றம் காதல் என்பது மற்றொரு நாளில்தான் எனக்கு தெரியவந்தது...

   நான் அப்போது மிக ஆர்வமாக படித்து கொண்டு இருந்தது ஹிப்னாடிசம் சம்பந்தமான ஒன்று..அன்று எப்போதும் போல அவள் வந்தாள்..."என்ன படிக்கிறே நான் வருவது கூட தெரியாமல்" என்றாள்..

    நான் படித்துக்கொண்டு இருந்த புத்தகத்தை அவளிடம் காட்டி "ஹிப்னாடிசம் சம்பந்தமாக" என்றேன்..

  "ஐயோ இது சம்பந்தமாக ஏன் நீ படிக்கிறே!!!!"..என்றாள் கொஞ்சம் ஆச்சர்யத்தோடு..

    "ஏன் இதில் என்ன இருக்கின்றது" என்றேன்..அதற்கு அவள் "இது தெரிந்தால் மற்றவர்களை மயக்கி தன வயப்படுதிவிடலாம் என்று நான் எங்கோ படித்து இருக்கிறேன்" என்றாள்..


     அதற்கு நான் "அப்படி ஒன்றும் இல்லை அது எல்லாம் ஹிப்னாடிசம் பற்றி தவறான கருத்துகள்..நீ படத்தில் பார்த்திருப்பே.. அதையெல்லாம் நம்பாதே"..என்றேன்..அதற்கு அவள் "சரி நான் அதை நம்பவில்லை ..நீ சொல் உண்மையில் அது அப்படி இல்லையா என்ன? என்றாள்...

    "ஆமாம்"என்றேன்..அதற்கு அவள் "அப்படியென்றால் அதில் அப்படி என்னதான்    இருக்கிறது" எனறாள்..

    "ஹிப்னாடிசம் என்பது நீ நினைப்பது போல ஒருவரை அப்படியே மயக்கி தூங்க வைத்து அவரை தன்வயப்படுதுவது எல்லாம் இல்லை"...

     உனக்கு ஒன்னு தெரியுமா உன் அனுமதி மற்றும் ஒத்துழைப்பு இன்றி யாராலும் உன்னை ஹிப்னாடிசைய்ஸ் செய்ய முடியாது..எப்போது உன் உள்மனது முழுமையாக ஹிப்னாடிசம் செய்பவரோடு ஒத்துபோகின்றதோ அப்போதுதான்..அவர் உன்னை ஹிப்நோசிஸ் செய்ய முடியும்..என்றேன்..

     நம்மில் மனம்(conscious mind),மற்றும் ஆழ்நிலைமனம்(sub conscious mind)  என்ற இரண்டு இருக்கின்றது..அது பற்றி உனக்கு தெரியுமா என்றேன்....அதற்கு அவள்..அதிகமாக தெரியாது என்று சிரித்துக்கொண்டே தலையாட்டினாள்..அதுவும் அழகாய்த்தான் இருந்தது....

     சரி இப்போது ஒரு விமானத்தை ஒரு விமானி இயக்குகின்றார் என்று வைத்து கொள்..அவர்தான் நம் மனது...அவர் என்ன செய்வார் சாதாரண வேலைகளை  மட்டுமே..அதாவது அவருக்கு கொடுக்கப்பட்ட தடத்தில் சரியாக விமானத்தை செலுத்துவது, விமானத்தில் ஏற்ப்படும் மாற்றங்களை கண்டுகொள்வது போன்ற வேலைகள்.. ....எப்படி நாம் அன்றாடம் வேலைகளை செய்கின்றோம் அது போல..

     ஆனால் ஆழ்மனது என்பது அந்த விமானிக்கு தரையில் இருந்து கட்டளைகள் கொடுப்பவர்...மேல இருக்கும் விமானி கிழே இருப்பவர் என்ன கட்டளைகள் கொடுக்கின்றரோ அதைத்தான் செயல்படுத்துவார்...

     அதே போலத்தான் நம்மில நடக்கும்..அன்றாட வேலைகளை நமது மனது பார்த்து கொள்ளும்..ஆனால் நம் மனது செய்யும் ஒவ்வொரு வேலைகளுக்கு பின்னால் நமது ஆழ் மனதின் செயல்பாடு கண்டிப்பாக இருக்கும்...

     அப்படி நம் மனதில் ஏற்ப்படும் சில சிக்கல்களை,பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நேராக நம் மனதிற்கு கட்டளைகள் கொடுக்கும் ஆழ் மனதோடு பேசி அதற்கு சில கட்டளைகள் கொடுத்து அதான் மூலம் நமது மனதில் ஏற்பட்ட பிரச்சினைகள் சரிசெய்வதுதான் ஹிப்னாடிசம்...இது பல்வேறு காரணங்களுக்காக பயன்படுகின்றது...முக்கியமாக மருத்துவத்திற்கு...

     "இப்போ புரிகின்றதா ஹிப்னாடிசம் என்றால் என்ன" என்றேன்..அதற்கு அவள் "புரிகின்றது "என்று தலையாட்டினாள்...இப்போதும் அது அழகாய்த்தான் இருந்தது...

     "சரி அதுக்கு எதுக்கு நம்மை தூங்க வைக்கவேண்டும்' என்றாள்..அதற்கு நான் "உனக்கு யார் சொன்னா ஹிப்னாடிசம் த்தில் தூங்க வைப்பார்கள் என்று..அதெல்லாம் பொய் புரட்டு வேலை'...

     ஹிப்னாடிசம் செய்யும் போது நீ நினைவோடுதான் இருப்பாய்..உன் மனது செயல் இழந்து இருக்கும்..அதே நேரத்தில் உன் ஆழ் மனது செயலில் இருக்கும் என்றேன்...

அவள் உடனே "உனக்கு செய்ய தெரியுமா?' என்றாள்..

    "கொஞ்சம் தெரியும்" என்றேன்..... இப்போதுதான் அது சம்பந்தமாக படித்து கற்று கொண்டு இருக்கிறேன் என்றேன்..

     "அவள் உடனே எங்கே என்னை செய் பார்ப்போம்" என்றாள்..."அது எல்லாம் வேண்டாம்" என்று மறுத்து..."எதாவது பிரச்சினை ஆகிவிடும்'.என்றேன்..

     "ஒன்றும் பிரச்சினை இல்லை ஒருமுறை செய்துதான் பாரேன" என்றாள் வலுக்கட்டாயமாக......"சரி "என்று சொல்லி அவளை ஹிப்நோடிசம் செய்ய தயாரானேன்..

     ஏதோ கொஞ்சம் படித்த அறிவை வைத்து முதலில் அவளின் மனதோடு பேசி அப்படியே அவளின் ஆழ் மனதோடு பேச முயற்சித்தேன்...

    அவளும் நம்பிக்கையாக ஒத்துழைத்தாள்..ஒருவழியாக அவளின் ஆழ் மனதோடு பேச ஆரம்பித்தேன்...

     ஒரு கட்டத்தில் எனக்கு மிக ஆர்வம மிகுதியால்.."நீ யாரையாவது காதலிக்கின்றாயா" என்று கேட்டுவைத்தேன்...

      அதற்கு அவள் மெதுவாக.."ஆமாம்..நான் கடந்த சில மாதங்களாக கணேஷ் என்பவனை காதலிக்கிறேன்..ஆனால் அவன் என்னை காதலிக்கின்றான?? என்று எனக்கு தெரியாது" என்றாள்...

     அப்போது என் இதயம் இருந்த நிலை ....அப்படியே  பட்டாம் பூசசி வானத்தில் பறப்பது போல இருந்தது..எல்லாம் ஹோர்மோன்களின் வேலைதான்.......

   அந்த நிகழ்வு நடந்த சில நாள்கள கழித்து அவளிடம் என் காதலை சொன்னேன்....அவள் "நானும் உன்னை காதலிக்கிறேன்" என்றாள்..

      "அது எனக்கு முன்னாடியே தெரியும் நான் உன்னை ஹிப்னாடிசம் செய்தேன் நினைவிருக்கா??... அப்போதே உன் மனதில் இருப்பதை தெரிந்து கொண்டேன்" என்றேன்..

      நான் இதை சொன்னவுடன்..அவள் சிரிக்க ஆரம்பித்தாள்.."எதுக்கு சிரிக்கிறே" என்றேன் அவளிடம்......அவள் கொஞ்சநேரம் சிரித்து விட்டு..

      "ஒன்றும் இல்லை..நீ ஹிப்னாடிசம் செய்த அன்று நான் சாதாரணமாகத்தான் இருந்தேன்...அந்த நிலையில்தான் நீ கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தேன்...எனக்கே ஆச்சர்யம் நீ யாரையாவது காதலிக்கின்றாயா என்று கேட்டது...இதுதான் நல்ல சமயம் என்று நினைத்து நான் உன்னை காதலிப்பதை சொல்லி விட்டேன்..அன்று நான் அப்படி சொல்லவில்லை என்றால் இன்று நீ என்னிடம் காதலை சொல்லி இருக்கமாட்டாய்".... என்றாள்...

     அது எனக்கு சந்தோஷமான விஷயம் என்றாலும் அன்று நான் அவளை ஹிப்னாடிசம் செய்ததில்  இருந்து.... எனக்கும் ஹிப்னாடிசம் தெரியும் என்று நினைத்து  கொண்டிருந்தேன் ..இதை சொன்னதில் இருந்து அவள் எனக்கு ஹிப்னாடிசம் தெரியும் என்பதை பொய்யாக்கி விட்டிருந்தாள்...

இது என்ன ????

     அவனுக்கு 28 வயது இருக்கும்..இப்போது அவன் ஒரு மருத்துவ பரிசோதனை செய்யும் இடத்தில் அவனது முறைக்காக காத்து இருந்தான்...

     அவனது அம்மா ஊரில் இருக்கும் அவர்களது நிலங்களை பராமரித்து  கொண்டு இருந்தார்கள்... அம்மா பல நாள்களாக அவனை வற்புறுத்தி ஊருக்கு அழைத்துகொண்டு இருந்தார்கள்....

      சில வேலைகளுக்காக.....அதில் முக்கியமாக இவனுக்கு வயது ஆகி கொண்டே போகின்றது......பெண் பார்க்கவேண்டும்..சில மாதங்கள் கழித்து திருமணம் செய்யவேண்டும்...

     இந்த மருத்துவ பரிசோதனை இவனது முடிவுதான்....சாதாரணமாக சோதனை செய்து கொண்டால் சில குறைபாடுகள் இருந்தால் முன்னே தெரிந்து சரி படுத்தி கொள்ளலாம் என்பதுதான் இவனது எண்ணம..

    மேலும்  அப்போது நடைமுறையில் இருந்த மனிதனின் genome ஐ பரிசோதித்து எதிர்காலங்களில் என்னென்ன நோய்கள் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன எனபதை சொல்லும் genetic முறை பரிசோதனையை செய்யவும் நினைத்து இருந்தான்..

     நமது உடம்பில் ஏற்ப்படும் சில உயிர்கொல்லி நோய்கள,மற்றும் சில சாதாரண நோய்கள் ஏற்படுவதை நமது பண்பியக்கியை  (gene) வைத்து சொல்லிவிடலாம்..

      ஏனென்றால் நோய்கள ஏற்படுவதற்கு  நமது பண்பியக்கிகளில் (gene) ஏற்ப்படும் மாற்றம்தான் (mutation) காரணம்.எனவே ஒருவருடைய genome ஐ படித்தால் அவருக்கு என்னென்ன பண்பியக்கிகள் எப்போது எப்படி மாற்றம் அடையும்......அதனால் அவருக்கு என்னென்ன நோய்கள வரும் என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம்..

     கொஞ்சம் முன்னேற்றமாக அவன் எத்தனை ஆண்டுகள் சுகமாக வாழமுடியும் என்பதையும் கணித்து சொல்ல முடியும்..

     எனவேதான் அவன் இந்த பண்பியக்கி சம்பந்தமான சோதனையை செய்யலாம் என்று நினைத்து இருந்தான்....


     அவனது ஊரில் அவன் அம்மா இவனை சில மாதங்களுக்கு முன் அங்குள்ள ஜோசியரிடம் அழைத்து சென்று இருந்தார்..

     அவனுக்கு அதன் மீது நம்பிக்கை இல்லை ஜோசியர் என்னதான் சரியாக சொன்னாலும்....... தோராயமாக தண்ணியில் கண்டம்..அல்லது வாகனத்தில் கண்டம் என்று சொல்லி முடித்துவிடுவார்...

     இந்த பரிசோதனை...கொஞ்சம் செலவு அதிகம்..ஜோசியரிடம் கொடுக்கும் பணத்தோடு ஒப்பிடும்போது..,.....ஆனால் நம்பகமானது என்பது இவனது எண்ணம...

     இவனது முறை வந்தது...அங்கு இருந்த மருத்துவர்கள் அவர்களுக்கு தேவையான மரபியல்(genetic) பொருள்களை பரிசோதனைக்கு எடுத்துவிட்டு.... ஒரு குறிப்பிட்ட தேதியில் வந்துபெற்று செல்லுமாறு  அவனை அனுப்பி வைத்தார்கள்...

    அதற்காக அவன் சில நாள்கள காத்து இருக்க வேண்டியது இருந்தது..அதற்குள் அவனது அம்மாவிடம் இருந்து சில அழைப்புகள் சீக்கிரம் வரச் சொல்லி...

    இன்று அவனுடைய அந்த பரிசோதனை முடிவை பெறும் நாள்,,,......கொஞ்சம் மனதில் பயம் இருந்தது...தனது வாழ்நாளை கணித்து சொல்லுகிறார்கள்..அதை பார்க்கபோகிறோம்..எனற எண்ணம்தான் அவனது பயத்திற்கு காரணம்...

     அந்த அறிக்கையை கொண்டுவந்து கொடுத்தவள் ஒரு அழகான பெண்..முதலில் அவனது சாதாரண மருத்துவ பரிசோதனையை பற்றி சில விளக்கங்களை அவள் பேசினாள்...

      இவன் அந்த அறிக்கையில் என்ன இருக்கின்றது என்பதில் கவனம் செலுத்தாமல்..அவளது அழகையே ரசித்து கொண்டு இருந்தான்...

     இறுதியில் இவனது பண்பியக்கியின் பரிசோதனை அறிக்கையை அவள் திறந்து பார்த்து இவனிடம் அதை விளக்கினாள்..

     அதாவது இவனுக்கு சொல்லும்படியாக எந்த ஒரு பெரிய நோயும் இல்லை..எதிர்காலத்திலும் கூட.....அதுவும் அவனது 79~82 வயது வரை இவன் சுகமாக வாழமுடியும் என்பதை அவள் சொல்லி முடித்தபோது இவனுக்கு இரட்டை சந்தோசம்..தான் 80 வயது வரை வாழப்போகிறோம் என்ற ஒன்று..அதை ஒரு தேவதையின் வாயிலாக தெரிந்து கொள்கிறோம் என்று...

அடுத்த நாளே ஊருக்கு கிளம்பினான்......

    அவன் சேர்ந்த அன்றைய நாள் இரவே அவனது அம்மா சில பெண்களின் புகைப்படங்களை அவனிடம் காட்டி..பார்த்து சொல்லுமாறு கொடுத்தார்கள்..

     இவன் அதை மறுத்து..இப்போதுதான் வந்து இருக்கின்றேன் நாளை பர்ததுகொள்ளலாம் என்று சொல்லி மறுத்தான்...

     மறுநாள் காலையில்..அவனது விளைநிலங்கள் வழியாக நடந்து போய்கொண்டு இருந்தான்......

     ஒரு இடத்தில்..திடிரென்று அப்படியே நின்றான்....அவனது காலுக்கடியில் எதோ ஒன்று விசித்திரமாக மிதிபடுவது போன்ற ஒரு எண்ணம..அது என்ன என்று கிழே குனிந்து பார்க்கும்போதே......அவன் காலுக்குள் மிதிபட்டு இருந்த ஒரு கருநாகம் ஒன்று அவனது காலில் கொத்தி அதன் அதிகம் ப்ரோடீன் கலந்த விசத்தை உள்ளே ஏற்றி கொண்டு இருந்தது..

    இவன் வேகமாக காலை உதறும் முன அதன வேலையை முழுமையாக முடித்து இருந்தது....இவன் உதறியெறிந்ததில் அந்த நாகம் தூரத்தில் விழுந்து வேகமாக நகர்ந்து சென்றுவிட்டது...
 

   சில நிமிடங்களில் அவனுக்கு தலை சுற்றியது...அவனுக்கு தெரியும்...இன்னும் சில நிமிடங்களில் உயிர் பிரிந்துவிடும்..அப்படியே வரப்பில் சரிந்தான்.....

    கண்கள் சொருகின...அந்த மருத்துவ பரிசோதனை அறிக்கையும் .....அதை கொடுத்த அந்த அழகான பெண்ணும்...அவள் சொன்ன அந்த 82 வருட வாழ்க்கை...என்ற வாக்கியமும் ......... ஒருமுறை வந்துபோனது...இறுதியாக உலகம் மெல்ல மெல்ல ...அவனது கண்ணில் இருந்து மறைந்தது.
 

ஆப்பிள் தாத்தா....compass தாத்தா...

    நான் விடுமுறைக்கு ஊருக்கு செல்வது என்றால் அதிகமாக பதினைந்து நாட்கள்தான் எனது விடுமுறை நாட்கள்.......அதற்குள் ஊர் சலித்துவிடும்....அந்த பதினைந்து நாட்களுக்கும் நேரம் போக சில தேர்ந்து எடுத்த புத்தகங்களை என்னோடு எடுத்து செல்வது வழக்கம்....

    நான் ஊரில் வேறு எங்கும் செல்லாமல் வீட்டிலே படுத்து புத்தகம் படிப்பது என் அம்மாவுக்கு பிடிக்காது..அடிக்கடி..எதாவது உறவினர் பெயரை சொல்லி அவர் உன்னை வரச்சொன்னார்..இவர் வரச்சொன்னார்..என்று எதாவது சொல்லிகொண்டே இருப்பார்கள்...சில நேரங்களில் திட்டும் விழும்...

   அப்படித்தான் அன்றும்....அவர்கள் எதோ சொல்லிகொண்டு இருக்கும்போது..எனது பக்கத்து வீட்டில் இருக்கும் ஒருவர் என் அம்மா திட்டுவதை கேட்டு....கணேஷ் என்ன பண்றான் புத்த்கம்தனே படிக்கிறான் விடுங்கள படித்துவிட்டு போகட்டுமே....என்று எனக்கு ஆதரவாக பேசினார்கள்...


  அவர்கள் எனக்கு அக்கா வேண்டும்...என் வீட்டுக்கு பக்கதுவீடு என்பதால் சிறுவயது முதலே எங்களுக்கு நன்கு தெரிந்தவர்கள்...திருமணமாகி ஒரு ஆண் குழந்தை இருக்கின்றது...

     நான் கையில் புத்தகத்துடன் இருந்ததை பார்த்து..கணேஷ் அப்படி நீ என்னதான் படிப்பே? இப்படி உங்க அம்மா திட்டுகின்ற அளவுக்கு..என்று கேட்டார்கள்...


 அதற்கு நான் ..கொஞ்சம் அறிவியல் சம்பந்தப்பட்ட புத்தகங்கள் படிப்பேன் அக்கா.. என்றேன்....

அறிவியல் என்றால் எது சம்பந்தமாக.என்று கேட்டார்கள்..

   எனக்கு ஐன்ஸ்டீன் என்றால் மிக பிடிக்கும் அதான் அவர் சம்பந்தமான புத்தகங்கள் படிப்பேன் என்றேன்..

  ஆமாம் எனக்கும் அறிவியல் என்றால் ரெம்ப பிடிக்கும்...என் மகன் எட்டாம் வகுப்பில் நான்காவதாக வர நான்தான் காரணம்...நான்தான் அவனுக்கு அறிவியல் சொல்லி கொடுப்பேன் .....என்று அவர்களின் அறிவியல் அறிவை பற்றி சொன்னார்கள்..

  நான் எதோ ஒரு ஆர்வத்தில் ஐன்ஸ்டீன் பத்தி உங்களுக்கு நிறைய தெரியுமா அக்கா என்று கேட்டுவைத்தேன்...

   எனக்கு தெரியும் அவர்கள் நிறைய படித்தவர்கள்..எனக்கு சில விசயங்களில் நிறைய கற்றுகொடுதது இருக்கின்றார்கள்.....ஒருவேளை ஐன்ஸ்டீன் பற்றி அவர்களுக்கு தெரிந்து இருக்கலாம்.....என்றுதான் அவர்களிடம் கேட்டேன்...


அதற்கு அவர்கள்..கொஞ்ச நேரம் யோசித்துவிட்டு..

   அது எல்லாம் எங்கே.... நினைவிருக்கின்றது..எப்போதோ படித்தது...ஆனால்..அவர் வைத்து சொல்லப்படும் ஒரு நிகழ்வு இன்னும் நினைவிருக்கின்றது..என்றார்கள்...

   சரி ஐன்ஸ்டீன் வாழ்வில் நடந்த நிகழ்வு எதாவது சொல்லுவார்கள் என நினைத்து அது என்ன நிகழ்வு அக்கா என்றேன்..


   அவர் ஒருமுறை தோட்டத்தில் உட்கார்ந்து இருக்கும் போது மரத்தின் மேலே இருந்து ஒரு ஆப்பிள் விழுந்தது..அது ஏன் என்று ஆராய்ந்து ..அதில் இருந்து புவியில் ஈர்ப்பு விசை இருப்பதை கண்டுபிடித்து சொன்னார்... என்றார்கள்..

   இதை கேட்டவுடன் எனக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை...ஒருபக்கம் அதிகம் சிரிப்பு வந்தாலும்...அவர்கள் பெரியவர்கள்..நிறைய விசயம்  அவர்களிடத்தில் கற்றுக்கொண்டு இருக்கின்றேன்..எனவே அவர்களை கிண்டல் செய்யமுடியாது....

   அவர்களிடத்தில் என்னால் முடிந்த அளவு எடுத்து விளக்க முடியும்..அதை சொல்ல நினைக்கும் போது..அருகில் இருந்து எல்லாத்தையும் கேட்டு கொண்டு இருந்த அவரது மகன்..

அம்மா நீங்கள் சொல்வது நியூட்டன் தாத்தா...பற்றி..அவர்தான் ஆப்பிள் தாத்தா..

   கணேஷ் அண்ணன் கேட்டது..காம்பஸ்(COMPASS) தாத்தா பற்றி..அவருதான் ஐன்ஸ்டீன்..என்றான் சிரித்து கொண்டே..

அக்கா ஒன்றும் சொல்லாமல் சிரித்து கொண்டே உள்ளே சென்று விட்டார்கள்....

பேசும் நாய் !!!

    கல்லூரியில் சேர்ந்த புதிதில்.....இது என் கனவு.... இது என் லட்சியம்....இது எனது படிப்பிற்கு உதவியாக இருக்கும்.. என்று அப்பாவிடம் பொய் சொல்லி ஒரு பெருந்தொகையை பெற்று எப்படியோ..சிறியதாக ஒரு ஆய்வுகூடம் அமைத்து விட்டேன்...

    சில நாள்கள் வரை அதில் கல்லூரியில் சொல்லி கொடுத்த சில அடிப்படை விசயங்களை செய்து முயற்சித்து பார்த்தேன்...சில நாள்களில் அதுவும் கொஞ்சம் வெறுப்பானது..

    ஒருநாள் தற்செயலாக என் அப்பா என்னிடம்..ஆய்வுகூடத்தில் எதாவது உருப்படியாக செய்கின்றாயா? என்று கேட்டுவைத்தார்.....அப்போதைக்கு நான் ஒன்றும் சொல்லவில்லை..

    ஆனால் அவரிடம் நிறைய பணம் வாங்கி இருக்கின்றேன்......அதனால் எதாவது ஒன்றை அவருக்கு செய்து அந்த அய்வுகூடத்தை நான் உருப்படியாக பயன்படுத்துகிறேன் என்பதை நிருபிக்கவேண்டும்...

    அப்போது என் கல்லூரியில் GENOME பற்றி பாடம் போய் கொண்டு இருந்தது...அது தவிர என் சொந்த ஆர்வத்தால் சில புத்தகங்கள் தனியாக படித்து தெரிந்து கொள்ளும் முயற்சியில் இருந்தேன்..

    அப்படி நான் தெரிந்து கொண்டதுதான்....மனிதன்  மொழிகளை பேசுவதற்கு காரணமான சில LANGUAGE GENE களை பற்றி.....    

   அதை பற்றி வெறும் படிப்பறிவு மட்டுமே இருந்தது..இருந்தாலும் எனக்கு அதை எதாவது முறையில் சோதித்து பார்க்கவேண்டும் என்ற எண்ணம இருந்தது...அது அப்படியே என் அப்பாவுக்கு எனது பெருமையை எடுத்து சொல்வதாகவும் இருக்க வேண்டும் என எண்ணினேன்...

   அப்படி நான் யோசித்து முடிவெடுத்தது..அந்த பேசுவதற்கு காரணமான GENE களை பேசமுடியாத உயிர்களில் செலுத்தி அதை பேச வைப்பது...

   அதாவது நான் செய்ய முயன்றது..எங்கள் வீட்டு நாய்க்கு அந்த GENE களை செலுத்தி நாயை பேசவைப்பது...


    முதலில் அந்த GENE ஐ மனித GENEOME இல இருந்து பிரித்து எடுத்தேன்..பின் அதை GENE CLONING முறையில் தனியாக அதை வளர்த்து குறிப்பிட்ட எண்ணிக்கையில்..சேகரித்து கொண்டேன்..

   அதற்கு முன் அந்த GENE  களை பற்றி சில விசயங்கள்......மற்றும் எனது முயற்சி ஏன் தோல்வியடைந்தது என்பதை சொல்கிறேன்...

    மனிதன் மொழிகளை பேசுவதற்கு காரணமாக இருப்பதாக கண்டுபிடிக்கபட்ட GENE ன் பெயர்.FOXP2 . இது மனிதனின் குரோமோசோம் வரிசையில் ஏழாவது குரோமோசோம் ல்  பொதிந்து இருக்கும்.....இதில் இருந்து வரும் சில ப்ரோடீன்கள் மற்றும் அமினோ அமிலங்கள்தான் சில ரசாயன மாற்றங்களை செய்து மனித மூளையில் மற்ற GENE களை தூண்டி  மனிதன் மொழியை பேசுவதற்கு..புரிவதற்கு.. உதவும்....ஒருவேளை இதில் எதாவது குளறுபடி இருந்தால் (MUTATION)  அவர்களுக்கு பேசுவதில் சிரமம்....வார்த்தை உச்சரிப்பதில் சிரமம் போன்ற பிரச்சினைகள் வரும்..


   இந்த GENE களால்  மூலையில் ஏற்படும் மாற்றம் என்பது உயிரினத்தில் அதன் தொடக்க காலங்களில் மட்டும்தான் நிகழும்...இது எனக்கு முதலில் தெரியாததும் எனது தோல்விக்கு ஒரு காரணம்....
   நான் என் நாய்க்கு இந்த GENE களை செழுத்துவதினால் அதில் எந்த மாற்றமும் நடக்காது ..என்பதை பின்னர்தான் தெரிந்து கொண்டேன்.........ஏனென்றால் இந்த GENE ன் மாற்றம் அந்த நாயின் GENOME ல் தொடக்கத்தில் இருந்தே இருந்து இருக்க வேண்டும்...

    இருந்தும் அப்போது எனது. முயற்சிகு உந்துதல் அளித்த விசயம் என்ன என்றால் இந்த GENE ஆனது ....மனிதர்களுக்கு மட்டும் இல்லாமல் ..மற்ற விலங்குகளுக்கும் இருந்ததுதான்...

    ஆனால் மற்ற விலங்களுக்கு இதில் இருந்து சுரக்கும் அமினோ அமிலங்கள்,ப்ரோடின்கள் கொஞ்சம் வேறுமாதிரி.....அந்த அமினோ அமிலங்களில் இருக்கும் சில வேருபாடுகள்தான் மனிதனை மொழி பேசும் தன்மையுள்ளவனாக பிரிக்கின்றது.......இந்த GENE கள் சிம்பன்சி,கொரில்லா,உறங்குட்டான், எலி போன்ற விலங்குகளிலும் கண்டு கொள்ளப்பட்டு அதை ஆராய்ச்சி செய்து பார்த்ததில் இந்த மாதிரியான..சில விசயங்கள் தெரிய வந்தன.....


   என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய விஷயம் என்னவென்றால்...இந்த GENE களில் இருந்து வெளிப்படும் அமினோ அமிலங்களின் வித்தியாசம் என்று பார்த்தால் நமக்கும் எலிக்கும் மொத்தம் மூன்றுதான்..அதைவிட சிம்பன்சி குரங்குக்கு வித்தியாசம்  மொத்தம் இரண்டேதான்...

   அடுத்து நமக்கு முன்னோர்கள் என்று கருதப்படும் நியாண்டர்தால் இனத்தில் கூட இந்த GENE ஆனது அப்படியே எந்தவித மாற்றமும் இல்லாமல் இருந்தது என்று இப்போது கண்டு பிடித்து இருக்கின்றார்கள்....அப்படி என்றால் அவர்கள் கூட பேசி இருக்க வாய்ப்பு இருக்கலாம் என்று கருதுகிறார்கள்...
 
    மேலே நான் சொன்ன சில விசயங்கள் தான் நான் எனது ஆரய்ச்சியை தொடர காரணமாக இருந்தது.....ஒருவேளை அந்த GENE கள் நாய்க்கும் இருந்தால்?????.......என நினைத்துதான் நான் முயன்றேன்....

    நான் இந்த மாதிரி எங்கள் வீட்டு நாயின் மீது சோதனை செய்ய போறேன் என்பதை முதலில் என் அப்பாவிடம் தான் சொன்னேன்...

   அவர் முதலில் உன் விளையாட்டுத்தனமான ஆராய்ச்சிக்கு நமது நாயை ஏன் பலியாக்குகிறாய்..என்று மறுப்பு தெரிவித்தவர்.....பின்னர் நான் கொஞ்சம் விளக்கிய பிறகு சம்மதம் தெரிவித்தார்...

   அன்று மாலை எங்கள் வீட்டு நாயை எனது ஆராய்ச்சி கூடத்துக்கு அழைத்து சென்றேன்..நல்ல நாய் ...... எல்லோர்க்கும் ரெம்ப பிடித்த நாய்..அதற்கு எதாவது என் ஆராய்ச்சியில் ஆனது என்றால்..எல்லோருடைய கோபமும் என் மீதுதான் இருக்கும்...

  ஆய்வுக்கூடத்தில் நுழைந்த நாய்... அதுக்கு என்ன நிகழபோகின்றது என்பது தெரியாமல் வழக்கம் போல வாலை ஆட்டிக்கொண்டே என் பின்னால் வந்தது....

  நான் ஏற்க்கனவே எடுத்து வைத்து இருந்த அந்த GENE களை அதன் கழுத்தில் ஊசியின் மூலம் ஏற்றினேன்..அப்போதைக்கு அதன் நடவடிக்கையில் எந்த ஒரு மாற்றத்தையும் என்னால் காண முடியவில்லை..

   கொஞ்ச நேரத்தில் அதை வீட்டிற்கு அழைத்து சென்றேன்..அப்போது என் அப்பா என்னடா? ஆச்சு..என்றார்....அதன் பலன் தெரிய கொஞ்சம் நேரம் எடுக்கலாம் என்று சொல்லி சமாளித்தேன்....உணமையில் அந்த நாயுக்குள் என்ன நடக்கின்றது என்று எனக்கு தெரிந்து இருக்கவில்லை...

  அன்று இரவு என் அப்பா என் வீட்டில் உள்ள அனைவரிடமும் சொல்லி விட்டார்..எல்லோரும் முதலில் கோபபட்டாலும்..அவர்களுக்கும் அந்த நாய்க்கு என்ன நடக்கும் என்ற ஆர்வம தொற்றி கொண்டது...அவர்களின் ஆர்வம..பேசும் நாயை பர்க்கபோகிறோம் என்றுதான்...அதுவும் என் ஆராய்ச்சியின் மூலமாக....

   எல்லோரும் சேர்ந்து முடிவெடுத்து நாளை காலைவரை காத்து இருந்து பார்க்க முடிவெடுத்தோம்..

   நாய் வழக்கம்போல நன்றாகத்தான்..தூங்கியது.....மறுநாள் காலை அந்த நாய்க்கு முன் நாங்கள் எழுந்து அது முதலில் என்ன பேசும் என்பதை அறியும் ஆவலில் அதற்கு முன்னால் சுற்றி ஆஜர் ஆனோம்...

     அது வழக்கம் போல கண்விழித்தது ...நாங்கள் அதனை சுற்றி இருப்பதை பார்த்தவுடன் முதலில் கொஞ்சம் பயந்து.... பின்னர் செல்லமாக வாலாட்டியது...

      எங்களின் எதிர்பார்ப்பு முதலில் அது என்ன பேசும் என்பதுதான்.....ஆனால் அது எங்களை சட்டை செய்யாமல்..தனது இடது காலால் இடது காது பக்கம்..சரியாக நான்கு முறை சொரிந்து விட்டு இடத்தை காலி செய்தது...

     சரி எப்பையாவது பேசித்தானே ஆகவேண்டும் என்று நினைத்து கொண்டோம்...ஆனால் நான் ஆராய்ச்சி செய்த விதம....அதுவரை நன்றாக குறைத்து கொண்டு இருந்த நாய் அதற்கு பிறகு..அதன் வாழ்நாளில் ஒருமுறை கூட குறைக்க வே இல்லை.....பின்னே எங்கே பேசுவது...!!!!!

காதலி vs BLACK HOLES

     இது நடந்தது சில வருடங்களுக்கு முன்......அப்போது நான் அவள் பின்னால்  சுற்றிய நேரம்.....எதற்காக அவள் என்னை காதலித்தாள்,அல்லது எதற்காக நான் அவளை காதலித்தேன் என்பது இருவருக்குமே தெரியாது.......ஏதோ ஹோர்மோன்களின் உந்துதலில் இருவருமே காதலித்தோம்.....என்று சொல்லலாம்....

    அவள் நல்ல பெண் எனக்கு மிக பிடித்தவள்........அவள் என்னை எதற்காக காதலித்தாள் என்று இதுவரை சொன்னதில்லை...எப்படியோ காதலித்து நல்லவிதமாக அது திருமணத்தில் முடிந்து...அப்புறம் நடந்த ஒருகதையை இங்கு யார் நீ? எனற தலைப்பில் எழுதி இருக்கின்றேன்...முடிந்தால் படியுங்கள்...

   அது காதலிக்கும் தருணம் என்பதால் காத்து இருப்பதில் சுகம் அதிகம்......அன்றும் அப்படித்தான் அவளுக்காக காத்து இருந்தேன்...இதில் முக்கியமானது அவள் வந்த பிறகு ஏன் தாமதம் என்று கேட்ககூடாது....அப்படி கேட்டால் சண்டை...அதனால் அமைதியாக வறவேர்ப்பதே சிறந்தது என்பதால் அன்றும் அதையே செய்தேன்...

    அன்றைய தினம் நான் வரும்போது வாங்கி இருந்த st.hawking எழுதிய புத்தகமான black holes and baby universe ஐ என் கையில் வைத்து இருந்தேன்....வந்தவுடன் அதை பார்த்தவள்...நீ வீட்டுலதான் இதை கட்டிகிட்டு அழுகிரேன்ன..என்னை பார்க்க வரும்போதும் கூடவ இப்படி.....என்று புலம்ப ஆரம்பித்தாள்.....

    அப்படி இல்லை வரும்போது வழியில்தான் வாங்கி வந்தேன் என்று சொல்லி அவளை சாந்தபடுத்தினேன்...

    அடுத்து கொஞ்சநேரம் எல்லா காதலர்களை போலவே தேவை இல்லாத பேச்சுககள்தான் பேசினோம்...அவள் வீட்டு பூனை எப்படி எலிபிடித்தது......போன்றமதிரியான பேச்சுகள்தான்...

    அப்படி பேசிக்கொண்டு இருக்கும்போதே அவள் என் கையில் இருந்த புத்தகத்தை பிடுங்கி அப்படியே கொஞ்சம் புரட்டி பார்த்துவிட்டு....சரி இந்த black hole னா என்ன என்று சாதரணமாக கேட்டாள்.....

உடனே நான் black hole நமது காதலிலும் இருக்கின்றது....என்றேன்..அவள் எப்படி என்றாள்..

    உனது கண்னும் ஒரு black hole தான்..அதுதானே என்னை உன்பக்கம் ஈர்த்தது.......இப்போது அதில் விழுந்து மாட்டி கொண்டு மீள முடியாமல் தவிக்கின்றேன்....

    அதே மாதிரிதான் இந்த பிரபஞ்சத்திலும்..ஒன்று இருக்கின்றது என்றேன்......அதற்கு அவள் அதைப்பற்றி சொல் என்றாள்...

    அதெல்லாம் சொன்னால் உனக்கு புரியாது அதை விட்டுவிடு..என்றேன்....நான் இப்படி சொன்னதுதான் பெரிய தப்பாகி போனது.....உடனே அவள் நான் ஒன்றும் அவ்வளவு பெரிய முட்டாள் இல்லை நீ சொன்னால் என்னால் புரிந்து கொள்ள முடியும்.....என்னை ஒன்றும் நீ அப்படி நினைக்க வேண்டாம்...  என்று தொடர்ந்து சண்டை பிடிக்க  ஆரம்பித்தாள்...

   சரி சரி திரும்பவும் ஆரம்பித்து விடாதே உன் சண்டையை நான் இதன் சில அடிப்படையான விஷயத்தை மட்டும் சொல்லுகிறேன்....புரியாததை கேள்..என்றேன்..

   பொதுவாக மிகப்பெரிய நட்சத்திரங்கள் தனது எரிபொருள் தீர்ந்து அதில் ஏற்ப்படும்  அதிக  ஈர்ப்பு விசை மாற்றத்தால்  அது இறக்கும்போது சிலநேரங்களில் அது black hole ஆக மாறும்.

   அதற்கு அவள் அப்படின்னா எல்லா நட்சத்திரமும் அப்படி black hole ஆக மாறுமா? என்றாள்...எனக்கு கொஞ்சம் சந்தோசம் எனது தேர்வு சோடை போகவில்லை..அவளும் கொஞ்சம் அறிவுப்பூர்வமாக கேள்வி கேட்கிறாள்....

    அப்படி இல்லை நமது சூரியனின் நிறையை விட பல மடங்கு நிறை கொண்ட நட்சத்திரங்கள் இறக்கும் போதுதான் இது நடக்கும் என்றேன்..

சரி அப்படி என்ன இந்த black hole ல் விஷயம் இருக்கின்றது...என்றாள்.

   முதலில் black hole ஐ பற்றி கொஞ்சம் சொல்லிவிடுகிறேன் அதற்கு பிறகு நீயே புரிந்துகொள்வாய் என்று நான் சொல்ல ஆரம்பித்தேன்...

   black hole என்பது அதிக ஈர்ப்பு விசை ஒரே இடத்தில் செறிந்து இருக்கும்...அதனால் அதன் அருகில் இருக்கும் எல்லாத்தையும் அது உள்ளே இழுக்கும்.. அந்த ஈர்ப்பு விசையில் இருந்து ஒளி கூட தப்பிக்க முடியாது....உனக்கும் தெரியும் என்று நினைக்கிறேன்..ஐன்ஸ்டீன் தாத்தாவின் சொல்படி ஒளியை விட வேகமாக பயணிப்பது ஒன்றும் இல்லை....அப்படி இருக்குபோது black hole ல் இருந்து ஒளியே தப்பிக்க முடியாது என்றால் மற்ற எதுக்குமே தப்பிக்க வாய்ப்பு இல்லை....என்றேன்.

   அதற்கு அவள் ஏன் அப்படி.......அப்படி என்ன விஷயம் அதில் இருக்கின்றது,அவ்வளவு ஈர்ப்பு விசை அதில் இருக்குதா? என்ன என்றாள்.


    ஆமாம்... escape velocity என்று ஒன்று இருக்கு..அது எப்படின்னா..இப்ப நீ இங்கு இருந்து ஒரு கல்லை மெதுவாக எறிந்தால் அது கொஞ்ச தூரம் மேலே சென்று பின் கிழே விழும்..இன்னும் நீ கொஞ்சம் வேகமாக எறிந்தால் அது இன்னும் கொஞ்சம் அதிக தூரம் போகும்....இதற்கு காரணம் நமது பூமியின் ஈர்ப்பு விசைதான்.. அந்த கல் மேலே போவதற்கு நீ எரியும் வேகம் நமது பூமியின் ஈர்ப்பு விசையை விட அதிகமாக  அல்லது அதை எதிர்த்து செல்ல  தேவையான விசையோடு  இருக்கவேண்டும்...

    அப்படி இந்த பூமியின் ஈர்ப்பு விசையைவிட நீ அதிக திறனோடு எரிந்தல்தான் அந்த கல் ஈர்ப்பு விசைக்கு எதிராக மேலே செல்லும்.......நமது பூமியின் escape velocity  11.2 km/sec....இது முழுக்க முழுக்க ஈர்ப்பு விசை.சம்பந்தப்பட்டது..எந்த அளவுக்கு ஈர்ப்புவிசை அதிகமாக இருக்கின்றதோ அந்த அளவு இந்த escape velocity அதிகமாக இருக்கும்...

   அதாவது ஒரு பொருள் ஈர்ப்பு விசையை எதிர்த்து பயணிக்க வேண்டும் என்றால் அதான் ESCAPE VELOCITY ஆனது அங்கு இருக்கும் ஈர்ப்பு விசையைவிட அதிகமாக இருக்க வேண்டும்..


    இந்த முறையில் இந்த black hole ளின்(ஈர்ப்பு விசை) escape velocity என்று பார்த்தால் அது ஒளியின் திசைவேகத்தை விட அதிகமானது...அந்த அளவு அதிக ஈர்ப்பு விசையானது ஒரே இடத்தில் குவிந்து இருக்கின்றது....அதான் அதில் இருந்து எதுவுமே தப்பிக்க முடியாது..

   அப்படியா என்றவள் அது எங்கு இருக்கின்றது என்றாள்...இதுவும் நமது பிரபஞ்சத்தில் ஒரு அங்கம்தான்...ஆனால் ஒன்று.... இது இருப்பதை அவ்வளவு எளிதாக கண்டு பிடிக்க முடியாது...கொஞ்சம் கஷ்டமானது...சில அறிகுறிகள் வைத்துதான் இதை கண்டு பிடிப்பார்கள்....

    உனக்கு ஒன்னு தெரியுமா இதை உறுதி படுத்தி சொல்ல முக்கியகாரணம் ஐன்ஸ்டீன் தாத்தா கண்டு பிடித்த relativity theory தான்....அப்புறம்..ஐன்ஸ்டீன் தாத்தாவும் இதில் முக்கிய பங்கு வகித்து இருக்கிறார்(EINSTEIN RING)......அப்புறம் இதோ இந்த புத்தகத்தில் இருக்கின்ற st.hawking  (HAWKING RADIATION) போன்றவர்கள் இதில் பங்களித்து உள்ளார்கள்..என்றேன்....மேலும் நான் சிலவற்றை சொல்லலாம் என நினைக்கும்போது ...

  அவள் மெதுவாக தனது கடிகாரத்தை பார்த்தாள்...எனக்கு தெரியும் அவள் என்ன சொல்லுவாள் என்று...நேரமாகிவிட்டது நான் போக வேண்டும் என்றாள்...

     மேலும் அவள் எப்பையவதுதான் நாம் சந்தித்து பேசிக்கொள்கிறோம் அப்போதும் இந்த ஐன்ஸ்டீன் தாத்தா....,hawking மாமா பற்றி பேச வேண்டுமா.. என்ன?...அடுத்த முறை நான் தூரத்தில் இருந்து பார்ப்பேன் உன் கையில் எதாவது புத்தகம் இருந்தால் உன் அருகில் வரமாட்டேன் அப்படியே போய்டுவேன் என்று சொல்லிவிட்டு சென்றாள்..


OXYTOCIN சாமியார் !!!!

        கடந்த முறை விடுமுறைக்கு சென்ற போது அந்த இடத்தில் ஒருவர் யோகா பயிற்சி சொல்லிகொடுப்பதாக கேள்விபட்டு இருந்தேன்..இந்த முறை விடுமுறைக்கு சென்று பார்த்தால் மக்கள் கூட்டம அதிகமாக இருந்தது...சிலர் வெளியில் தங்களின் முறைக்காக காத்து இருந்தார்கள்...

      என் அம்மாவிடம் சென்று கேட்டேன் "அங்கு என்னம்மா அவ்வளவு கூட்டம் என்று?...அதற்கு அவர்கள்...."ஒருவருடம் முன்னால் ஒருவர் வந்து யோகா போன்ற பயிற்சிகளை சொல்லிகொடுதார்ல..அவரு பெரிய சாமீயம்.....எல்லோரின் பிரச்சினையும் தீர்த்துவைக்கிறாராம்...
அதான் அங்கு அவ்வளவு கூட்டம்"....என்றார்கள்....

   நான் அப்படியா என்று மட்டும் சொல்லி அதை கண்டுகொள்ளவில்லை....

       மேலும் அப்படி என்னம்மா நம்ம ஊரில் உள்ளவங்களுக்கு  பிரச்சினை..... என்று கேட்டேன்...

     அதுதாண்டா எனக்கும் தெரியல....அங்கு போகிறவர்கள் பெரும்பாலும்...மாமியார் சண்டை....குடும்ப சண்டை...எதோ மனக்குழப்பம்..போன்றவற்றிக்காக அவரிடம் போகின்றார்கள்..அவர் எதோ தீர்த்தம் கொடுக்கிறாராம்...அதை குடித்தால்..குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் வருவதில்லையாம்....

     அப்புறம் நமது மனதில் உள்ளவற்றை அப்படியே சொல்கிறாராம்.....அதோடு ஏதும் பிரச்சினை என்றால் நமது கண்களை பார்த்து தியானம் செய்தே குணமாக்குகிறாராம்...அதான் எல்லோரும் அங்கு போகிறார்கள்...என்றார்கள்....

     அந்த சாமியாரை பற்றி அப்படி ஒன்றும் பெரிய விதமான எண்ணம ஒன்றும் எனக்கு அப்போது இல்லை...... அந்த ஆசிரமத்துக்கு அருகில் இருந்த ஒரு இடத்தில சில கண்ணாடி பாட்டில்கள் குவியலாக இருப்பதை பார்க்கும்வரை..

      அது சாதாரன பாட்டில்கள் என்றால் எனக்கு ஆச்சர்யம் இருந்து இருக்காது...அந்த பாட்டில்கள் சில ஹோர்மோனகளின் பாட்டில்கள்...அந்த ஹோர்மோன் பற்றி ஏற்க்கனவே நான் கொஞ்சம் படித்து இருக்கிறேன்....

     அங்கு கிடந்த பாட்டில்களில் அந்த ஹோர்மோனின் பெயர் தெளிவாக எழுதி இருந்தது..அதன் பெயர் oxytocin ..


       oxytocin ....இது உயிர்களின்  உடம்பில் மிக முக்கியமான பங்கை வகிப்பது...மனித உடலைபொறுத்தவரை இதன் பங்கு முக்கியமானதும் கூட....

       இதை பற்றி படித்தவைகள் அந்த பாட்டில்களை பார்த்தவுடன் நினைவுக்கு வந்தன.....இது ஒரு SEXUAL HORMONE.....இது அதிகமாக பெண்களுக்கு சுரக்கும்...அதிக பயன்பாடும் அவர்களுக்கே...இதன் மற்றொரு..முக்கிய பணி மண உளைச்சல் மற்றும் வெறுப்பை உண்டாக்கும் ஹோர்மோன் ஆன CORTISOL எனற ஒரு ஹோர்மோனை கட்டுபடுத்தி மனித மனத்தை சாந்தி அடைய செய்வது....மனதிற்கு ஒருவித இன்பத்தை தருவது....இது போன்ற பலவேளைகளை இது செய்கின்றது...

      இது பொதுவாக மனித உடலில் சுரப்பது உடல் உறவின் போதுதான்....ஆண் பெண் நெருக்கமாக இருக்க மூல காரணம் இந்த ஹோர்மோன் தான்...இது தவிர மற்றவர்களின் மீது அன்பு கொள்வது, பிடித்தவர்களோடு நெருக்கமாக இருப்பது போன்றவற்றிக்கு இதுவே காரணம்....

     இது உறவுகளுக்கு ஏற்றார்போல மாறும்...கணவன் மனைவி என்றால்..ஒருவிதம். தாய் சேய் என்றால் ஒருவித பாசப்பிணைப்பு...இது போல எல்லாவிதமான பாசபினைப்புக்கு இதுவே காரணம்....எனவேதான் இதை CUDDLING HORMONE என்று கூட சொல்வார்கள்....

        இந்த ஹோர்மோன் இந்த இடத்தில் எப்படி வந்தது என்பதுதான் எனக்கு புரியவில்லை..இத்தனைக்கும் அந்த இடத்தில் ஒரு மருத்துவமனை கூட இல்லை....

      அப்போதுதான் எனக்கு என் அம்மா சொன்னது நினைவுக்கு வந்தது...அந்த சாமியார் சண்டை சச்சரவு,மனக்கசப்பு போன்ற பிரச்சினைகளை ஒரு தீர்த்தத்தின் மூலம் சரி செய்கிறார் என்று....

     என்னை பொறுத்தவரை அது கண்டிப்பாக OXYTOCIN ஆகத்தான் இருக்க வேண்டும்...இதுவும் நிறமற்றது மனமற்றது....எதோடு சேர்த்து கலந்து கொடுத்தாலும் வித்தியாசம் தெரியாது.....எனவே இந்த சாமியார் எளிதாக இந்த ஹோர்மோனை உபோயோகிக்கின்றார்...என நினைத்தேன்...

     அப்படி என்றால் அவர் கண்களை பார்த்து நமது மனதில் உள்ள பிரச்சினைகளை தீர்க்கிறார் என்பது...என்னை பொறுத்தவரையில்..hypnotism என்ற ஒரு சமாச்சாரம் இருக்கின்றது...அதில் ஒரு வீரியமான முறைதான் இந்த கண்களை பார்த்து அவர்களை ஆழ்ந்த மயக்கம் செய்வது...

      hypnotism த்தில் மிக முக்கியாமான முறையில் கண்களை பார்த்து அவரை ஆழ்ந்த உறக்கத்துக்கு இழுத்து சென்று அவர் மனதில் உள்ளவற்றை தெரிந்து கொண்டு..நாம் என்ன செய்ய நினைக்கின்றோமோ அதையும் அவரது மனதில் பதிய வைக்க முடியும்....இது ஒரு சிறந்த மருத்துவமுறையும் கூட.....


      அதாவது இந்த முறையில் ஒருவர் உங்களை hypnotism செய்து உங்களின் ஆழ்மனதில்  கணேஷ் எழுதுவதை கண்டிப்பாக படி என்று பதிய வைத்தால்.....நீங்கள் நான் எழுதும் ஒரு எழுத்தை கூட தவறவிடமாட்டிர்கள்....அந்த அளவு உங்களின் ஆழ்மனதில் மாற்றம் ஏற்படுத்த இந்த வகை hypnotism த்தால் முடியும்...

       ஆகமொத்தத்தில் அந்த சாமியார் கொஞ்சம் அறிவியல் படித்தவர்....அவர் அறிவியலை கொஞ்சம் படித்ததுதான் ஒரு நாள் பிரச்சினை ஆகியது....

      அவருக்கு தெரியாமல் போனது oxytocin அதிகமாக எடுத்து கொண்டால் என்னென்ன பக்கவிளைவுகள் வரும் என்பதை அவர் மறந்து விட்டார்...அல்லது அதை பற்றிய அறிவு அவருக்கு இல்லாமல் இருந்து இருக்க வேண்டும்....

      தொடர்ந்து வந்த நாள்களில் அந்த பகுதி மக்கள் பல்வேறு பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு மருத்துவனை சென்ற போதுதான் தெரிந்தது...அவர்கள் அனைவரும் ஒரே விதமான நோயால்பாதிக்கப்பட்டு இருப்பது...அதுவும் oxytocin ஹோர்மோன் என்ற ஒன்றால் என்பதை மருத்துவர்கள் கண்டுபிடிக்காமல் இல்லை...

       அங்குதான் பிரச்சினை ஆரம்பம் ஆனது..அந்த மருத்துவர்கள் சந்தேகத்தின் பெயரில் காவல துறையிடம் சொல்ல..அவர்கள் போய் சோதனை இட....அந்த oxytocin சாமியார் மாட்டிக்கொண்டார்....

      அவர் இருந்த இடத்தை சோதனை இட்டபோது நிறைய oxytocin பாட்டில்கள் கிடைத்தன...

      அவரை கைது செய்வது அந்த பகுதி மக்களுக்கு பிடிக்கவில்லை..இன்றுவரை அவர் செய்தது கடவுள் செயல் தான் என நம்புகிறார்கள்..அவர்கள் பாதிக்கப்பட்டும் கூட...

       ஆனால் அந்த சாமியாருக்கு ஒரே குழப்பம் எப்படி எல்லோர்க்கும் தெரிந்தது என்று....அது வேறொன்றும் இல்லை......நம்மவர்களுக்கு கடவுள் என்றால்தான் போதுமே...அதுவும் கடவுளின் தீர்த்தம் என்றால்....அதான் தினமும் ஒரு முறை பருகிபார்ப்போம் என்று அவரது ஆசிரமத்துக்கு தினமும் ஒரு நடை வந்த போய் இருக்கிறார்கள்..விளைவு....சாமியார் மாட்டி கொண்டார்...


      காவல் துறை அவரை கைது செய்து அழைத்து போகும்போது அதை தடுக்க மக்கள் கூட்டம் வாசலில் நிரம்பியிருந்தது.....ஒருவழியாக அவரை அழைத்து சென்றனர்...

       அப்போது எனது அருகில் இருந்த இருவர்.......சரி காவல்துறை நமக்கு அவர் எதோ மருந்து கொடுத்தாக கைது செய்கிறார்கள்......அப்படியே அவர் செய்து வந்த இந்த ஒன்று  கடவுளின் செயல் இல்லை என்றாலும் கூட ..அவர் நமது கண்களை ஆழமாக பார்த்தே மனதில் உள்ள பிரச்சினைகள் தீர்க்கின்றரே அது கடவுள் அருள் இல்லாமல் இருக்க  முடியுமா என்ன? என்று ஒருவர் மற்றொருவரிடம் கேட்டார்....

      நான் அவர்களிடம் hypnotism பற்றி சொன்னால் அந்த இடத்தில் என்னை அடிக்காமல் விடமாட்டார்கள் என்பதால் நான் ஏதும் சொல்லாமல் அப்படியே..கூட்டத்தை விட்டு வெளியில் வந்தேன்....அந்த சாமியார் திருமப்வும் இங்கு வருவார்..என நினைத்துகொண்டே..

யார் நீ??? (gene therapy)

       நல்ல வேலை மற்றும் காசு கிடைக்கும் என்பதற்காக GENETIC ENGINEERING படித்து, இப்போது தனியார் ஆய்வுகூடத்தில் நல்ல சம்பளத்தில் வேலை செய்கிறேன்... என் அப்பாவிடம் அதிக பணம் இருந்ததால்  என் வீட்டிற்கு சற்று தொலைவில் எங்களுக்கு இருந்த ஒரு இடத்தில் என் ஆசைக்கு இணங்க ஒரு சிறு ஆய்வுக்கூடம் அமைத்தேன்...

      முதலில் சிறு சிறு உபகரணங்களுடன் ஆரம்பித்தேன்..பின்னாளில் நான் சம்பாதித்து எனக்கு இப்போதைய தேவைகளுக்கு ஏற்றவாறு மாற்றியமைத்துள்ளேன்...

      திருமணம் முடிந்து சில மாதங்கள் தான் ஆகின்றது......மனைவி...... நான் ஏற்க்கனவே காதலித்த பெண்..கடைக்கண் பார்வையால் சுத்தவிட்டவள்,......கவிதை எழுத வைத்தவள்.

      எனது அலுவலக வேலை நேரம் போக மற்ற பெரும்பாலான நேரம் எனது ஆய்வுக்கூடத்திலேயே கழிப்பேன்....சில ஆராய்சிகளில் ஈடுபட்டிருந்தேன் ...அலுவலகத்தில் கிடைக்காத சில சுதந்திரம் எனது சொந்த அய்வுக்கூடத்தில் கிடைத்தது..அலுவலகத்தில் எது செய்தாலும் சட்டப்பிரச்சினை...

     இது என் காதல் மனைவிக்கு பிடிக்காது....தினமும் அதிகம் நேரம் வெளியில் செலவிடுவது...அவளுடன் நேரம் செலவிடதாது..அவளுக்கு கொஞ்சம் கோபத்தை ஏற்ப்படுத்தியிருந்தது...... சில நேரங்களில் சண்டை பிடிப்பாள்..சில நேரங்களில் அன்பாக சொல்லி பார்ப்பாள்....ஆனாலும் நான் திருந்துவதாக இல்லை...

    அப்படி நான் என்ன ஆராய்ச்சி செய்து கொண்டு இருந்தேன் என்றால்....செயற்கையான முறையில் GENE களை வடிமைத்து கொண்டு இருந்தேன்...

     நமது உடம்பில் நடக்கும் எல்லா வேலைகளும் GENE களின் கட்டளைகளின் பேரில்தான் நடக்கும்.ஒவ்வொரு GENE ம் நமது உடம்பில் ஒவ்வொரு வேலைகளுக்கான பங்கை ஆற்றுகின்றன..அந்த GENE களில் உள்ள இயற்கையான பண்புகளின்படி அதன் வேலைகள் இருக்கும்....


    அதாவது காதலியை பார்த்தவுடன் மனதுக்குள் பட்டாம் பூச்சிகள் பறப்பது,அதே காதலி ஏமாற்றி விட்டு போனபிறகு நொந்து நூலாவது இது எல்லாம் கூட GENE களின் வேலையே...

      இப்போது நான் செய்வது அந்த இயற்கையான பண்புடைய GENE களை செயற்கையான(SYNTHETIC GENOME) முறையில் மாற்றியமைத்து அது செய்யும் வேலையில் மாற்றம் கொண்டுவருவது....அதாவது GENE களின் பண்புகளை மாற்றியமைத்தால் அதில் இருந்து வெளிப்படும் ப்ரோடின்கள்,ஹோர்மோன்கள் எல்லாம் தானாகவே மாற்றம் அடையும்....இவைகள் மாற்றம் அடைந்தால் நமது செல்களின் வளர்ச்சி மற்றும் அது செய்யும் வேலைகளிலும்  மாற்றம் ஏற்ப்படும்...இதுதான் என் ஆராய்ச்சி.

     முதலில் நான் எடுத்துக்கொண்டது..இரண்டு விசயங்களை GENE களை செயற்கையாக உருவாக்கி மனிதனின் கோபத்தை கட்டுபடுத்துவது...அதாவது கோபம வரும்போது நான் கண்டுபிடித்த GENE களை அவர்களை சுவாசிக்க வைத்தால் போதுமானது...அப்படியே அமைதியாகி விடுவார்கள்...

     உங்களுக்கு புரிந்து இருக்கும் எதற்காக நான் இதை ஆராய்ச்சிக்கு எடுத்து கொண்டேன் என்று......எல்லாம் அன்பு மனைவிக்க்காகததான்..பார்த்து... பார்த்து.....சுற்றி காதலித்தவள்..இப்போது நான் தாமதமாக வந்தாலே தினமும் கோபத்தின் உச்சிக்கே சென்று திரும்புவாள்...இந்த மாதிரி அவளை துன்புறுத்துவது பிடிக்கவில்லை என்பதால் இந்த முடிவை  எடுத்தேன்.

     மற்றொன்று..மிக முக்கியமானது...மனித மூளையில் இருக்கும் ஒரு பகுதி ஞாபக சக்தியை(explicit memory) முற்றிலுமாக அழிப்பது...இதை செய்வதற்கு வேறு எதுவும் காரணம் இல்லை....என் சிறு முயற்சிக்க்காகத்தான்....

    சில மாதங்கள் கடின முயற்சிக்குபின் இரண்டுமே தயாரானது...எனது ஆசை இதை  எப்படியாவது நான் வேலை பார்க்கும் இடத்தில செய்து காட்டவேண்டும் என்பதே....

     அன்றும் வழக்கம் போல காலையில் கிளம்பும்போது என் மனைவி.எப்போதும் சொல்வதை சொன்னாள்......இன்னைக்கு சீக்கிரம் வாங்க என்று......கூடுதலாக.....நாளைக்கு எங்களின் திருமண நாள் அதற்க்கு வெளியில் சென்று சிலவற்றை வாங்கவேண்டும் என்று வேறு சொன்னாள்

     ஆனால் நான் இதை நினைத்து பார்த்தது..என் அலுவலகம் முடிந்து என் சொந்த ஆய்வுகூடத்தில் சில வேலைகளை செய்து கொண்டு இருக்கும்போது..அவள் தொலைபேசி வழியாக அழைத்தபோதுதன்...என்ன செய்வது என்று தெரியாமல்..பதறிப்போய்..இது வந்துவிட்டேன் என்று பொய் சொல்லி அவசரமாக கிளம்பினேன்...

     நான் செய்வது எவ்வளவு பெரிய தவறு என்று எனக்கு தெரியாமல் இல்லை...என்னை உயிருக்கு உயிராக காதலித்தவள்....பாசமானவள்..அவளை ஒருவகையில் இப்படி துன்புறுத்துவது எனக்கு கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது....

     அவசரமாக கிளம்பி வெளியில் போகும் போதுதான் அந்த எண்ணம வந்தது..இன்று எப்படியும் அவள் கோபத்தின் உச்சத்தில் இருப்பாள்....அந்த கோபத்தை குறைக்க நான் கண்டுபிடித்த அந்த gene spray யை உபோயோகித்தால் என்ன என்று யோசித்து ..வேகமாக சென்று அதை எடுத்து பையில் போட்டு கொண்டேன்....

    வீடு சென்று அவளை எப்படியாவது இதை சுவாசிக்க செய்ய வேண்டும்..என்று எண்ணியபடியே உள்ளே நுழைந்தேன்..அவள் மிக கோபமாய் காத்து இருந்தாள்...

     அவள் முன்னாடி நான் சென்று நின்றபோதும் கூட பார்க்காததுபோல் இருந்தாள்..நான் மெதுவாக அவள் முகத்தின் அருகில் வைத்து நான் கொண்டு வந்திருந்த அந்த gene spray வை திறந்தேன்...அவள் அதைபர்த்துக்கொண்டே இருக்க...அந்த gene கள் அவள் சுவாசத்தில் கலந்து உள்ளே சென்றது....

     அவளின் கண்களில் மாற்றம் தெரிந்தது...கைகளால தலையை பிடித்து கொண்டே என்னை பார்த்தபடி அப்படியே சரிந்து விழுந்தாள்...

    எனக்கு திடுக்கென்றது....அந்த gene வேலை செய்தால் இப்படி ஆகாதே..என்று நினைத்தபடியே...அவளை மயக்கத்தில் இருந்து மீட்டு கொண்டுவரும் முயற்சியில் இறங்கினேன்...

     முகத்தில் தண்ணீர் தெளிதத பின்னர் கொஞ்சம் கஷ்டப்பட்டு கண்களை திறந்து பார்த்தாள்....இப்போதும் தனது கையால் தலையை பிடித்து கொண்டு இருந்தாள்....

     எனை பார்த்தவுடன் அவள் திட்டாததை பார்த்து எனக்கு கொஞ்சம் சந்தோசம்..நல்லவேளை..நமது gene spray வால் பிழைத்தோம்..என நினைத்து கொண்டுஇருக்கும்போதே...
   அவ்ள என்னைவிட்டு கொஞ்சம் விலகி சென்று யார் நீ? என்று என்னை பார்த்து கேட்டாள்.

     எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை...தவறு எங்கு நடந்து இருக்கின்றது என்று  என்னால் உணரமுடிந்தது....ஆய்வுக்கூடத்தில் இருந்த gene பாட்டில்களை எடுக்கும்போது மாற்றி எடுத்து விட்டேன்...நான் எடுத்த பாட்டில் ஞாபகசக்தியை அளிக்கும் ஒன்று.....இதை நான் யோசித்து கொண்டு இருக்கும்போதே..அவள் மீண்டும் கேட்டாள்..

யார் நீ?????
((நாம் இப்போது இருக்கும் காலம் gene therapy காலம்...gene களை வெளியில் தனியாக வளர்த்து அல்லது stem cell களின் மூலம் நமது உடலில் ஏற்க்கனவே பாதிப்படைந்த செல்களை சரி செய்யும் முறை gene therapy...... இதில் பல வகைகள் உள்ளன..இது முன்னேற்றம் அடைந்தால்..நான் மேலே சொன்னது போல நடக்க வாய்ப்பு இருக்கிறது.)))

கண்ணாமூச்சி காதல்....

      இப்போது என் முறை. சுவற்று பக்கம் திரும்பிக்கொண்டு கண்ணை மூடி பத்தில் இருந்து ஒன்று வரை தலைகீழாக சத்தமாக எண்ண வேண்டும். ஒன்று வந்தவுடன் அந்த இடத்தை சுற்றி ஓடி ஒழிந்தவர்களை கண்டுபிடிக்கும் விளையாட்டு ஆரம்பம் ஆகும்.

   அப்படி எண்ணி முடித்ததும் நான் என் மனதில் நினைத்தது முதலில் அவள் என் கண்ணில் விழுந்து விடக்கூடாது என்பதே.ஏனென்றால் யார் முதலில் அகப்படுகிறார்களோ அடுத்த முறை அவர்களுடையது. அப்படி அவள் முறை வந்து விட்டால் அடுத்த முறை அவளோடு சேர்ந்து ஒரே இடத்தில ஒழிய முடியாது என்பதே.

   "அவள்" .....நான் சிறுவயது பள்ளி விடுமுறைக்கு என் அம்மாவின் கண்டிப்புக்கு பயந்து எப்படியாவது அங்கிருந்து கிளம்ப வேண்டும் என்று எண்ணி.... என் பாட்டி ஊருக்கு வந்து இருந்தேன். அங்கு என்னை போலவே விடுமுறையில் தன் அம்மாவுக்கு பயந்து வந்தவர்களில் அவளும் ஒருவள்.

    என் சொந்தக்கார பெண்தான் நாங்கள் சந்திப்பது மூன்று மாத இடைவெளி விட்டு வரும் தேர்வு விடுமுறையில்தான்.


   இன்று எங்களுக்கு விடுமுறையின் கடைசி நாள். ஒருபக்கம் பள்ளி செல்ல வேண்டும் என்ற கவலை  இருந்தாலும் அன்று நாங்கள் விளையாட தவறவில்லை.

    அனேகமாக அன்று மாலை அவள் ஊருக்கு சென்றுவிடுவாள் நான் என் ஊருக்கு சென்று விடுவேன். இன்னும் இருப்பது கொஞ்சம் நேரம். அதற்குள் தான் இந்த விளையாட்டு.

    எப்படியும் அவள் என் கண்ணில் முதலில விழக்கூடாது என்று நினைத்து கொண்டே அங்கு ஒளிந்து இருப்பவர்களை தேட ஆரம்பித்தேன்.

    அப்படியே அவளை முதலில் பார்த்துவிட்டாலும் பார்க்காதது போல் இருந்து விடமுடியாது...நான் வருவதை யாராவது ஒழிந்து கொண்டு பார்த்து கொண்டு இருப்பார்கள். அப்படி நான் அவளுக்காக அப்படி செய்வதை பார்த்துவிட்டால் அந்த விளையாட்டில் இருந்து என்னை விளக்கி விடுவார்கள்.எனவே நான் அப்படி செய்ய முடியாது. இல்லை என்றால் நான் அப்படி செய்பவன்தான்.
  
    அது கிராமம் என்பதால் யார் வீட்டுக்குள் யார் வேண்டுமானாலும் தாரளமாக போய் வரலாம். அநேமாக எல்லாரும் கிராமத்தில் உறவினர்களாகவே இருப்பார்கள் என்பதால் அவர்கள் ஒன்றும் சொல்ல மாட்டார்கள்.

    நல்ல அகலமான சந்துகள் சிறிய வீடுகள் என்பதால் எளிதில் ஒளிந்து இருப்பவர்களை கண்டுபிடித்து விடலாம்...... அப்படித்தான் நான் அவர்களை தேடிக்கொண்டிருந்தேன்.

    கொஞ்ச நேரம் சுற்றி தேடியதில் ஒருவன் என் கண்ணில் மாட்டினான்...கொஞ்சம் சந்தோசம் நல்லவேளை முதலாக அவ்ள மாட்டவில்லை. தொடர்ந்து தேடினேன் ...தேடியதில் வேறு சிலர் என் கண்ணில் பட்டனர்.

   மொத்தம் நாங்கள் விளையாடியதில் கிட்டதட்ட எல்லோரும் கண்டுபிடிக்கப்பட்டு விற்றாயிட்டு.ஆனால் அவள் மட்டும் கிடைக்கவில்லை.

    நான்தான் தேடுகிறேன் என்று இல்லை...ஏற்க்கனவே OUT ஆனவர்கள் அவள் எங்கே ஒழிந்து இருக்கிறாள் என்ற ஆர்வத்தில் அவளை தேடிக்கொண்டு இருந்தார்கள்.அப்படியே அவர்கள் அவளை கண்டு பிடித்துவிட்டாலும் என்னிடம் சொல்ல மாட்டார்கள். மாறாக அவளுக்கு உதவுவார்கள்...

    ஆக மொத்தத்தில் நாங்கள் அனைவரும் சேர்ந்து அவளை தேடுகிறோம். கொஞ்ச நேரம் தேடியும் அவள் கிடைக்கவில்லை.

    அதற்குள் என்னோடு இருந்தவர்கள் சரி அவளை விடு..எங்காவது இடையிலேயே போய் இருப்பாள்..நாம் விளையாட்டை தொடரலாம் என்றார்கள்...நான் முதலில் கண்டுபிடித்தவன் தனியாக சென்று எண்ணுவதற்கு தயாரானான்.

    அங்கு இருந்தவர்களிடம் நான் கேட்டேன் "அவளை காணவில்லை என்றால் அப்படி அவள் எங்குதான் போய் இருப்பாள்" என்று......அதற்க்கு அதில் ஒருவன் ..."தெரியவில்லை.....அவள் வீட்டில் இன்று ஊருக்கு போவதாக சொல்லிக்கொண்டு இருந்தார்கள்..ஒருவேளை அவளை அழைத்து கொண்டு போய் இருக்கலாம்". என்றான்.

     ஒருவேளை அப்படி இருக்கலாம் என்று நான் எண்ணி கொண்டு விளையாட ஆரம்பித்தேன்.எதோ ஒரு சிறு கவலை என் மனதில்..அவளை பார்க்கவில்லை..ஊருக்கு போகும்பொது என்னிடம் சொல்லிவிட்டு போகவில்லை...

     ஒரு வழியாக் விளையாட்டு முடிந்து அவரவர் வீட்டுக்கு செல்லும்போது அப்படியே நான் அவள் வீட்டு பக்கம் சென்று அவள் இருக்கின்றாளா? என்று பார்த்தேன் அங்கு அவள் இல்லை போய் இருந்தாள்.

   கொஞ்சம் கவலை கொஞ்சம் வருத்தம்..அவளை நினைத்து.   அப்போது காதலுக்கு உண்டான ஹார்மோன்கள் சுரக்க ஆரம்பிக்கவில்லை என்பதால் இது கண்டிப்பாக காதலாக இறுக்க முடியாது. எதோ அவளை பார்க்காததால் கொஞ்சம் வருத்தம் ,கவலை இதுமட்டும்தான்.

   
    அன்று மாலையே நானும் என் ஊருக்கு சென்றுவிட்டேன். அதற்க்கு பிறகு என் எதிர்கால  நலன் கருதி என்னை பள்ளி மாற்றி விட்டார்கள்.அதுவும் விடுதியில். அப்போதும் விடுமுறை நாள்கள வரும்.ஆனால் அந்த நாள்கள என் சொந்த ஊரில்தான் கழியும்.

    என பாட்டி ஊருக்கு செல்ல சமயம் கிடைப்பதில்லை.அதற்க்கு அடுத்து வந்த காலங்களில் அவளை பார்க்கவே இல்லை.

   அடுத்து என் பள்ளி பருவம் முடிந்து மேல்கல்வி படித்து, அடுத்து கல்லூரி..என்று தொடர்ந்து....வேலைக்கு சேர்ந்து..அப்படியே காலம் இன்றுவரை ஓடிவிட்டது..

     அன்று அந்த விளையாட்டில் தொலைந்த்தவள் இன்றுவரை என் கண்ணில் படவேயில்லை ..இருந்தாலும் அவளை பற்றிய செய்திகள் நான் ஊருக்கு போகும் சமயங்களில் என் நண்பர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டிருக்கிறேன். என்ன படிக்கிறாள் என்ன செய்கிறாள் போன்ற விசயங்கள்.

    இதுவரை முடியாத அவளுடன் தொடரும்  அந்த விளையாட்டு எப்போது முடியும் என்ற ஆவல் எனக்கு எப்போதும் உண்டு...

    இதை எழுதிக்கொண்டு இருக்கும்போதே "அப்படி என்ன ஆர்வமாக எழுதிரிங்க? என்று என் அன்பு மனைவி வந்து என் தோள் மீது கைவைத்தாள்...அதோடு வேகமாக நான் எழுதியதை படித்தும் முடித்தாள்....


    "அந்த விளையாட்டில் நான் அன்று தொலைந்து போனவள் அப்படியே போய் இருந்தால் சந்தோசம்..ஆனால் திரும்பி வந்து உங்க மனைவியாக மட்டிகொண்டேனே..... அதையும் சேர்த்து எழுதுங்கள்"..என்றாள்....செல்லமான கோபத்துடன்....

"god does not play dice with the UNIVERSE"

     தலைப்பை படித்ததும் கணேஷ்  ஏதோ நாத்திகம் பேசுகிறான் என்று எண்ணாமல்.....நான் இங்கே எழுதியதை கொஞ்சம் படியுங்கள்..

    முதலில் இந்த god does  not play dice with the universe  வார்த்தை எப்படி யாரிடம் இருந்து வந்தது என்பதை பார்ப்போம்.இந்த வரிக்கு சொந்தக்காரர் ஐன்ஸ்டீன் அவர்கள். இந்த வரி Bohr &  Heisenberg ன் quantum theory & uncertainty principle  ஐ விமர்சித்து ஐன்ஸ்டீன் அவர்கள் சொன்ன வார்த்தை... quantum theory ல் இருந்த சில குறைபாடுகள் மற்றும் தனது விருப்பமின்மையை தெரிவிக்க ஐன்ஸ்டீன் அவர்கள் உபோயோகபடுத்திய வார்த்தை இது.

    சரி இந்த வரிக்கும் நான் இங்கு எழுதப்போவதற்கும் என்ன சமபந்தம் என்றால்..நிறைய இருக்கின்றது.....ஐன்ஸ்டீன் என்ன அர்த்தத்தில் சொன்னரோ அதே அர்த்தத்தை இப்போது உள்ள ஒரு மாபெரும் அறிவியல் உலக மனிதரும் சொல்லி இறுக்கின்றார்.அதே வார்த்தையை அல்ல அதே அர்த்தம் கொண்ட விஷயத்தை.

    இதை சொன்னவர் ST.hawking அவர்கள். அவர் மற்றும் Leonard Mlodinow இருவரும் சேர்ந்து எழுதி இருக்கும் புதிய புத்தகமான THE GRAND DESIGN ல் இவ்வாறு சொல்லி இருக்கின்றார்.

    அந்த புத்தகத்தில் அவர் சொல்லி இருப்பது ..இந்த பிரபஞ்சம் உருவானதில் கடவுளுக்கு எந்த ஒரு பங்கும் இல்லை......அது BIG BANG ல் இருந்து உருவாகியது...இந்த BIG BANG யை கடவுள்தான் தொடக்கி வைத்து பிரபஞ்சத்தை உருவாக்கினர் என்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது...அதற்கு காரணம் ஈர்ப்பு விசையை போன்ற சில காரணிகள் இருக்கலாம்....இதுதான் அவரின் கருத்து....

   மேலும் இதை QUANTUM MECHANICS இல இருந்து வந்த M THEORY ன் படி எடுத்துகொல்ள்ளலாம்,அதன் மூலம் விளக்க முற்படலாம்......MULTIVERSE..MEMBRANES போன்றவைகள் ...இதில் இருந்து BIG BANG  தொடங்கி இருக்கலாம்...என்பதையும் சொல்லி இருக்கின்றார்.

   (இதை பற்றி நான் ஏற்க்கனவே PARALLEL UNIVERSE BEFORE BIG BANG என்ற.ஒரு கட்டுரை எழுதி இருக்கின்றேன்.......மிகவும் சந்தோசம் அதே விசயத்தை இப்போது ST.hawking சொன்னது)

   முந்தைய நாட்களின் ST.hawking புத்தகங்களை நான் படித்து இருக்கின்றேன்..BLACK HOLES BABY UNIVERSE, BRIEF HISTORY OF TIME போன்ற புத்தகங்களில் கூட இவர் கடவுளை பற்றி நிறைய கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.


    அதில் எனக்கு பிடித்தது “நாம் இந்த பிரபஞ்சம் உருவான விதியை கண்டு பிடித்து விட்டால் அந்த விதியை வைத்து நாம் கடவுளையும் அறிந்து கொள்ள முடியும். அது கண்டிப்பாக இயற்பியல் விதிகளால் மட்டுமே முடியும்” எனபது இவரின் கருத்து.

    இந்த விசயத்தை பார்க்கும்போது அவருக்கு கொஞ்சம் கடவுள் நம்பிக்கை இருந்து இந்த வரியை எழுதி இருப்பதாக கருதலாம்.உண்மையில் அவருடைய முந்தைய புத்தகங்கள் அனைத்திலும் கடவுள் இருப்பதாக சொல்லி இருப்பார்..ஆனால் அதை அறிய இயற்பியல் விதிகளால் மட்டுமே முடியும் என்பதையும் வலியுறுத்தி இருப்பார்.

    அவர் இந்த புத்தகத்தில் கடவுள் இல்லை என்று  சொன்னதற்கு காரணம் கடவுள் இந்த பூமியை மனிதர்களுக்காக சிறப்பாக படைத்து இருகிறார் என்று நாம் நம்பினால்......இந்த பிரபஞ்சத்தில் நமது சூரிய மண்டலத்தை தவிர நிறைய EXTRA SOLAR PLANETS கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.... எனவே இது நடந்து இருக்க வாய்ப்பில்லை...இந்த பிரபஞ்சம் ஈர்ப்பு விசை போன்ற சில காரணிகளால் தற்செயலாக உருவாக்கப்பட்டிருக்கலாம் என்பதே அவர் சொல்லுவது...

    இதற்க்கு சிலர் வரவேற்ப்பு அளித்து இருந்தாலும் இதை சிலர் கடுமையாக விமர்சித்தும் உள்ளனர். என்னை பொறுத்தவரையில் இது ஒரு நல்ல வர்வேறப்பே...

   இத்தனை கால அறிவியல் அறிவு கொண்ட ஒரு மூத்த மனிதர் சில விசயங்களை சொன்னால் அதை ஏற்றுகொள்ள்வேண்டும்.என்பது என் கருத்து.

      உடனே நீங்கள் ...கடவுள் நம்பிக்கை கொண்ட சில பெரியவர்களும்தான் சொல்கிறார்கள் கடவுள் இருக்கிறார் என்று..அதை ஏன் நம்பகூடது என்று கேட்டால்.........ST.hawking அவர்களால் இதற்க்கு முன் அறிவியலில் விளக்கப்பட்ட விஷங்கள் அனைத்துமே அனைவராலும் ஆராய்ந்து  ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று...அவர் சொன்ன black hole பற்றிய மற்றும் சில விசயங்களில் இவரது பங்களிப்பு உலகம் அறிந்ததே....

    ஆனால் மதம் சம்பந்தப்பட்டவர்கள் (நூல்கள்) அப்படி இல்லை கடவுளை பற்றி எந்த ஒரு அதரமும் இல்லாமல் அதை முழுமையாக நம்புங்கள்...என்கிறார்கள்....அவர்களால் இதுதான் கடவுள் இப்படித்தான் அவரது செயல்பாடுகள் என்று ஆராய்ந்து சொல்ல முடியாது..எல்லாம் ஒரு நம்பிக்கை....உடனே நீங்கள் கடவுள் என்பவரை அப்படி ஒன்றும் வரையருக்க இயலாது..அவரை உணர்வுப்பூர்வமாக உணர வேண்டும் என்று சொல்விர்கள்...எனவே இந்த விவாதத்தை தொடர்ந்தால் அது போய்க்கொண்டே இருக்கும்.

    உணர்வுபூர்வமாக கடவுளை பார்க்கவேண்டும் என்றால் அந்த உணர்வு ஒன்றும் வெளியில் இருந்து வரவில்லை ..நமது மனித மூளைக்குள் இருந்துதான் வருகின்றது....அதற்க்கு காரணம் சில ஹார்மோன்கள் ..இந்த சில ஹோர்மோன்களுக்கு காரணம் சில GENE கள்....அந்த (GOD GENE) GENE கள் NUCLEI  இருந்து...அந்த முதல் NUCLEI ....என்று..இப்படியே போய் பார்த்தால் இவை எல்லாம் ஒரு நட்சத்திர அழிவில் கொண்டு போய் முடியும். அந்த நட்சத்திரம் இந்த பிரபஞ்சத்தில் இருந்து வந்தது.

    இதில் கடவுள் எங்கு இருக்கிறார்? இதை எல்லாம் படைத்ததே கடவுள்தான் என்று நீங்கள் நினைத்தால் அதைத்தான் ST.hawking மறுக்கிறார். இந்த பிரபஞ்சம் உருவாக கடவுளின் அருள் தேவை இல்லை என்று........ வேறொன்றும் இல்லை.


    இதை படித்தவுடன்... ST.hawking சொன்ன பிரபஞ்சம் உருவாக காரணமாய் இருக்கும் அந்த ஈர்ப்பு விசைதான் கடவுள் என்றால்......உங்களுக்கு பதில் என்னிடம் இல்லை.

   அதே நேரத்தில் ஆதி காலம் தொட்டே மனிதனின் தன் அறிவுக்கு எட்டாத அல்லது தெரியாத ஒன்றையே தனக்கு மேலே உள்ள சக்தியாக அல்லது கடவுளாக நினைத்து கொண்டு இருக்கிறான்....அந்த வகையில் இப்போது இந்த ஈர்ப்பு விசையும் சேர்ந்து கொள்ளும் அவ்வளவே....

புரியாத பரிசுகள்... (tamil cryptography)

      மீண்டும் ஒரு தபால் ....எனக்கு கொஞ்சம் ஆச்சர்யம்....ஏற்க்கனவே வந்த ஒரு புரியாத பரிசை கண்டுபிடித்து அதை இங்கு ஒரு பரிசு என்ற தலைப்பில் கொடுத்து இருந்தேன்..அதே மாதிரி இப்போது ஒரு கடிதம்...

    (முதலில் சொன்ன ஒரு பரிசு என்றதை படித்தால் இது புரிய எளிதாக இருக்கும்)


   அனுப்புனர் முகவரியில் அதே பெண்ணின் பெயர்.....அதே அழகான கையெழுத்து..ஆனால் இந்த முறை பரிசு ஏதும் இல்லை ..வெறும் கடிதம் மட்டுமே வந்து இருந்தது....


   பிரித்து படித்தேன்...அந்த முழு கடிதத்தில்...நடுவில் சில வரிகள் மட்டுமே எழுதி இருந்தது..அதுவும் எழுத்துக்கள் இல்லை வெறும் எண்கள் வடிவில்....அதில் இருந்தது இதுதான்..


1108 10018 10017 ....1109 13012 1503 1101 1001611007 1105 15012 10012.....


      இப்போது எனக்கு இருப்பது புதிய சோதனை..ஏற்க்கனவே அனுப்பியதை கொஞ்சம் கஷ்டப்பட்டு கண்டு பிடித்தாயிற்று...இதை எப்படி கண்டு பிடிக்க என்ற சிந்தனையில் மூழ்கினேன்....


     ஒருமுறை அந்த எண்களை உற்று பார்த்தால் கொஞ்சம் தலை சுற்றுவது போல இருந்தது...இந்த எண்களில் இருந்து எப்படி தமிழ் வார்த்தைகள் வரும்...


     முதலில் அதில் உள்ள 1108 என்ற இந்த எண்களை பார்த்தேன்...அப்படி ஒன்றும் எளிதில் புரிகின்ற விசயமாக இது இல்லை என்பதை உணர்ந்தேன்...


    ஆனால் எதாவது ஒரு வழியில் இதில் தமிழ் எழுத்துக்கான விவரம் அடங்கி இருக்கும்...நான் கண்டு பிடிக்க வேண்டும்...


      இதில் அவள் வழக்கம் போல பிறந்தநாள் செய்திதான் அனுப்பி இருப்பாள் என என்னால் ஒதுக்கி விட முடியவில்ல..ஒருவேளை வேறு எதாவது விஷயம் அனுப்பி இருந்தால்...கொஞ்சம் ஆர்வம...எல்லாம் ஹோர்மொன்களின் ஊக்கம்...


    ஒருவர் ஒருமுறையில் சங்கேத பாஷையை உருவாக்கினால்..அந்த முறையை சில இடங்ககளில் தொடர்ந்து பயன்படுத்துவார் என்று எங்கயோ படித்து இருக்கின்றேன்... அந்த முறையில் பார்த்தால் இந்த பெண்ணும் அவள் ஏற்க்கனவே உபோயோகித்த பழைய முறையை உபோயோகித்து இருப்பாள் என்று நினைத்துக்கொண்டே முன்னால் நான் உபோயோகித்த அந்த தமிழ் எழுத்துக்கள் கொண்ட அட்டவணையை எடுத்து பார்த்தேன்...


      அந்த அட்டவணையில் இந்த எண்களை எப்படி சேர்ப்பது..எப்படி வரிசை படுத்துவது...அந்த எண்கள் எந்த கோர்வையில் கொடுக்க பட்டுள்ளது என்பதை முதலில் பார்க்க வேண்டும்...


      முதலில் அந்த எண்கள் அனைத்தையும் ஒருமுறை நன்றாக அலசி பார்த்தேன்..அதில் இருந்து சில விசயங்கள் கிடைத்தன...அதாவது அந்த எண் கோர்வையில்..சில எண்கள் தொடர்ந்து மாறி மாறி வருவதை என்னால் காணமுடிந்தது...


அதாவது இந்த முறையில் அனைத்து எண்களும்..அமைக்கப்பட்டு இருந்தன..


1108 10018 10017 ....1109 13012 1503 1101 1001611007 1105 15012 10012....


      இதில் 1 மற்றும் 0 ஆனது குறிப்பிடும்படி திரும்ப திரும்ப வந்து இருந்ததை கண்டுபிடித்தேன்..அப்படி என்றால் இதற்க்கு எதவது காரணம் இருக்க வேண்டும்...இந்த இரு எண்கள் மட்டுமே மாறாமல் வருகின்றன..மற்ற எண்கள் அனைத்தும் மாறுகின்றன..


      எனவே இந்த இரு எண்கள் எதையாவது தெரிவிக்க இருக்க வேண்டும்...அப்படி இந்த 0,1 ல் என்ன தெரிவிக்க முடியும்...யோசித்தேன்..


     அந்த பெண் என்னை நன்றாக சுத்த விடுகிறாள் என்பது மட்டும் தெளிவாக தெரிந்தது..அழகான கையெழுத்து உடன் ஒரு பெண்ணின் இப்படி ஒரு கடிதம் என்றால் அதை கண்டுபிடிக்காமல் இருக்க முடியாதுதான்...


      முதலில் அந்த 0,1 என்ற எண்களை பார்த்தவுடன் என் மனதில் தோன்றியது..இது ஒரு BINARY NUMBER ...இந்த BINARY முறையில் பார்த்தால்..0 என்றால் OFF, 1 என்றால் ON. இதுமட்டுமே எனக்கு தெரியும்... இது எந்த வகையில் தமிழ் எழுத்துக்களை கண்டுபிடிக்க பொருந்தும் என்பதை பார்க்க வேண்டும்....


      இந்த BINARY எண்களின் அர்த்தத்தை தமிழில் பார்த்தால்... ON – உயிர் கொடு. OFF - இணைப்பை துண்டி..அல்லது நிறுத்து...இதை எப்படி ஒப்பிடுவது....


      இதில் ஒன்று என்னை சிந்திக்க வைத்தது..”உயிர்கொடு” என்ற வார்த்தை....தமிழ் எழுத்துக்கு உயிர் கொடுப்பது....உயிர் எழுத்துக்கள்...ஒருவேளை அந்த 1 என்ற எண் தமிழில் உயிர் எழுத்துக்களை குறிக்கலாம்...

     அப்படி என்றால் அந்த 0 என்பது...தமிழ் எழுத்துக்கள் உருவாக காரணமாக இருப்பது உயிர் எழுத்துக்கள்,மற்றும் மெய் எழுத்துகள்...மீதம் இருப்பது மெய் எழுத்து..அப்படி என்றால் அந்த 0 என்பதை மெய் எழுத்தாக கொண்டு சோதித்து பார்க்கலாம என்று நினைத்தேன்...


     அதற்கு நானா உதவியாக எடுத்துக்கொண்டது..நான் முன்னர் உபோயோகித்த அதே அட்டவணையை...ஏனென்றால் அவளும் இந்த அட்டவனையைத்தான் உபோயோகித்து இருப்பாள்....


     அப்படி அந்த எண்களின் படி பார்த்தால்.. 1108 .. இதில் முதலில் வரும் எண் உயிர் எழுத்தை குறிப்பது...அடுத்து வரும் எண் 1 உயிர் எழுத்தில் ஒன்றாவது எழுத்தாக இருக்கலாம் என்று அட்டவணையில் தேடினேன்...      அந்த எழுத்து “அ”..அடுத்து 0 என்பது மெய் எழுத்தை குறிப்பது..அடுத்து வரும் 8 என்பது மெய் எழுத்தில் எட்டாவது எழுத்து..அந்த எழுத்து..”ந்”..இப்போது இரண்டையும் சேர்த்து முழுமையாக்கினால் ந்+அ = . என்று வரும்...முயற்சியில் ஒரு எழுத்து கிடைத்த சந்தோசம்..இது சரியா? இல்லையா? என்பது மற்ற எழுத்துக்களை கண்டுபிடித்த பின்னர்தான் தெரியும்...


       அடுத்து 10018 இதில் மேலே சொன்ன முறையில் பார்த்தால் “ன்” வந்தது....அடுத்த எண்ணில் “10017” தேடினால் “று” வந்தது...இதோடு ஒரு வாக்கியம் முடிந்து இருந்தது...


     அந்த எழுத்துக்களை ஒன்று சேர்த்தால் “நன்று” என்று வந்தது....மிக சந்தோசம்..அப்படி என்றால் நான் தொடரும் முறை சரியானது....


      எனக்கு இன்னும் ஆர்வம அதிகமானது..மீதி இருக்கும் இரண்டு வரிகளில் அவளை பற்றி எதாவது தகவல் இருக்கலாம் என்று நினைத்து அதி வேகமாக மேலே சொன்ன முறையில்..தீர்த்து பார்த்தால்..நன்று (1108 10018 10017)

பரிசுகள் (1109 13012 1503 1101 10016)

தொடரும்... (11007 1105 15012 10012....)இதுதான் எழுதி இருந்தது.....


     ஒருவேளை அவள் அனுப்பிய முதல் பரிசில் இருந்த முறையை நான் கண்டு பிடித்து பதிவாக எழுதியதை அவளும் படித்து இருக்க கூடும்.

    இன்னும் பரிசுகள் தொடரும் என்று வேறு சொல்லி இருக்கின்றாள்...ஒருவேளை அவள் இதையும் படித்தால் அடுத்த முறை அவள் உபோயோகிக்கும் முறையை மாற்ற வாய்ப்பு இருக்கின்றது.


   அது கடினமாக இருக்கலாம் அல்லது எளிதாக இருக்கலாம்....அது வந்த பிறகுதான் தெரியும்..அதற்காக நான் காத்திருக்கின்றேன்....