சிறு சிறு - 4

    

    அவளை பிடிக்காமல் போக எந்த ஒரு காரணமும் இல்லைஎன்பதால் அவ்வளவு பிடித்துபோய் இருந்தது. அதுவும் அவளது கண்கள் மற்ற பெண்களிடத்தில் இருப்பதைவிட வித்தியாசமான் வண்ணத்தில்.  அது அவளுக்கு இன்னும் அழகாய்.  எல்லாம் சேர்ந்துதான் பிடித்துப்போக காரணம் என்றால் சரியாய் இருக்கும்.

    அடுத்து நடந்தது எல்லாம் பொதுவானதுதான். அவளின் பார்வையில் கயிறு கட்டி இழுக்காத குறையாக இழுத்து என்மேல் விழவைத்து நானும் பார்த்து வழிந்து கிட்டதட்ட இது ஒரு மாதம் வரை நடந்தது.

    இந்த காலங்களில் பார்வைகள் உரசியதில் என்னுள் மாற்றங்கள் நடந்தது என்னமோ உணமைதான். கனவுகள், கவிதைகள் ஏராளமாய் ஆனால் எல்லாத்திலும் அவ்ள மட்டுமே.

    அந்த முதல் புன்னகையை என்றும் மறக்க முடியாதுதான். சிரித்தபோது சந்தேகபட்டு என்னைபார்த்துதன் சிரிக்கிறாளா? என்று நம்பாமல் எனக்கு பின்னாடி யாரும் இருக்கிறார்களா? திரும்பி பார்த்தபோது அதற்கும் சிரித்தது எல்லாமே சுகமானவை.

   எந்த ஒரு தருணத்திற்கு காத்திருந்தேனோ அது நிகழ்ந்தது. அவள்தான் முதலில் சொன்னாள். அதிகமாய் காவியமாய் பேசவில்லை சுருக்கமாக பிடித்து இருப்பதாக மட்டும் சொன்னாள். அதற்கு பிறகுதான் தெரிந்தது காதல் சொல்வது கொஞ்சம் எளிதுதான் என்று.அதுவரை நான் சொல்ல நினைத்தும் பயத்தில் சொல்லாம் லிருந்தேன் அது வேறு விசயம்.

கொஞ்ச நேரத்து மௌனத்தை நான்தான் கலைத்தேன்.

  “பிடித்து இருந்தால் முதலிளியே சொல்லியிருக்கலாமே ஏன் இவ்வளவு காலம்?” என்றேன்

   “நானும் சொல்லாலாம் என்றுதான் நினைப்பேன் ஆனால் ஏதோ ஒன்று குறுக்கே வருவதுபோல இருக்கும்” என்றாள்.



“அப்படினா? புரியலை என்னது குறுக்கே வந்துச்சி?” என்றேன் சிரித்தபடி

  “உன்னை நெருங்கும்போது மட்டும் இதயத்தில் இருக்கும் காதல் எங்கேயோ மறைந்து அங்கு வெறும் பயம்,வெக்கம் மட்டுமே மிஞ்சும் அதான்? என்றாள் வெட்கத்தோடு.

“ஒ அப்படியா” என்றேன்

“சரி  சொல்லு நீ ஏன் சொல்லவில்லை இவ்வளவு காலம்?”

  பதில் சொல்ல கஷ்டமான கேள்வி. என்ன சொன்னாலும் அவள் அதை ஏற்றுகொள்ளும்படி இருக்க வேண்டும்.

   “நானும் சொல்லன்னும்தான் நினைப்பேன் ஆனா நீ என்கிட்ட வரும்போது எனக்கான காதல் உன் இதயத்தில் இருக்காதா அதான் அப்படியே விட்ருவேன்” என்றேன் சிரித்தபடி
இது அவளுக்கு புரிய சில வினாடிகள் ஆனது ........... மெல்ல சிரித்தாள்.


                    *************


 
“கணேஷ்?”

“என்ன சொல்லு?”

  “நீதான் அறிவியல் விசயங்கள், கதைகள் எல்லாம் படிச்சி இருக்கியே எனக்கு சில சந்தேகங்கள் இருக்கு கேட்கட்டுமா?”

“அட உனக்கு சொல்லாமால யார் யாருக்கோ பதில் சொல்றேன் கேளு?”

  “கடவுள் இருகாறனு கேட்டா இல்லைன்னு சொல்லிடுவே அதனால் அதை விட்டுறுவோம்..சரி சொல்லு இந்த பிரபஞ்சம் எப்படி முதல்ல உருவாகிச்சி?”

  “அதைத்தான் இப்போதைய அறிவியல் அறிய முயலுது கொஞ்சம் காலம் ஆகும் கிட்டத்தட்ட நெருங்கி விட்டோம்” என்றேன்

   “அதை ஏன் இப்படி வைத்துகொள்ள கூடாது எல்லாமே ஒருவரால் சில காரணங்களுக்காக  படைக்கப்பட்டு இவ்வளவு எல்லாம் நடந்து இருக்குன்னு?”

   “அப்படியே இருந்தாலும் அதை அறிவியல் ஆதாரத்தோடு விளக்கினால் பிரச்சினை இல்லம் நம்பலாம்”

“அப்ப அப்படி இருக்க வாய்ப்பு இல்லைங்கிறியா?”

“அதான் சொன்னேன்ல இருந்தால் அதுக்கு ஆதாரம் வேணும்னு”

“சரி உன்னோட கருத்து என்ன இதில்?"

   “எல்லாம் தற்செயலான விபத்துதான். பாரேன் இப்ப எப்படி அணுக்கள் நிறைந்த பிரபஞ்சத்தில் நாம் வாழ்கிறோமோ அதே மாதிரி அணுக்கள் இல்லாத ஒரு பிரபஞ்சமும் அல்லது ஒரு இடம் முன்னாடி இருந்து இருக்க வேண்டும். அங்கும் நம்மை போல சில உயிர்கள் வாழ்ந்து இருக்கலாம். அவர்கள் சூணியத்திளியே இருந்து விட்டதால் எதையாவது ஒன்றை உருவாக்க முயற்சி செய்து முதல் அணுவை உருவாக்கி இருப்பார்கள் தவறுதலாக அல்லது அதை எப்படி கையாள்வது என் தெரியாமல் வெளியே விட்டு இருக்கலாம் அதுவே வெடித்து சிதறி இப்ப நீ இங்க இந்த கேள்வி கேட்டுகிட்டு இருக்கே”
“அடப்பாவி” என்று சொல்லி ஆச்சர்யமாக பார்த்தாள்.


                     *******************


   
 அந்த ஆய்வுகூடத்தில் எல்லோருமே சந்தோசத்தின் உச்ச கட்டத்தில் இருந்தார்கள். எத்தனை வருடம் எத்தனை ஆராய்ச்சிகள் எத்தனை முயற்சிகள் அதில் தோல்விகள் இப்போது அடைத்து விட்டார்கள். உலகமே வியக்கும் ஒன்று.

   இதுவரை இந்த பிரபஞ்சத்தில் நமது பூமி மட்டுமே உயிர்களை கொண்டு இருக்கிறது என்கிற எண்ணத்தை முற்றிலும் மறக்க செய்யும் ஒன்று.ஒரு புதிய உயிர்கள் அடங்கிய கிரகத்தை கண்டு பிடித்ததோடு இல்லாமல் அதை ஆராய்ந்து அங்குள்ள உயிரினங்கள் தகவல் தொடர்பையும் மாதிரிக்கு கைப்பற்றி இருந்தார்கள். இதன் மூலம் அவர்கள் பற்றிய சில முக்கிய தகவல்களை தெரிந்துகொள்ள முடியும் அதாவது அவர்கள் இப்போது எந்த அளவு முன்னேற்றத்தில் என்ன மாதிரியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் போன்றவற்றை.

   அந்த கிரகத்தில் இருந்து பெறப்பட்ட மின்காந்த அலைகளின் தகவல்கள்  சோதனைக்கு கொடுக்கப்பட்டு இருந்தது. எல்லோரின் ஆர்வமுமு அதுதான். என்ன இருக்கும் அதை நம்மால் புரிந்து கொள்ள முடியுமா? அந்த அளவுக்கு தொழில்நுட்பம் இருக்கிறதா நம்மிடம்?

அது தீர்க்கப்பட்டது அதை அப்படியே  கொடுக்கிறேன்........

   இந்த மனித இனத்திடம் இருந்து தப்பித்துதான் புதிய கிரகம் வந்தோம் இப்போ பாருங்கள் அங்கு இருந்து நம்மை கண்டு பிடித்து விட்டார்கள். இனி எப்படியும் இங்கு என்ன இருக்கிறது என்பதை நோண்டுவார்கள். அவர்களுக்கு எப்படி இந்த அளவுக்கு தொழிநுட்ப வசதிகள் வந்தது. கண்டிப்பாக தனி விண்கலம் அமைத்து இங்கு வந்தாலும் ஆச்சர்யம் இல்லை அதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுத்தாக வேண்டும். முக்கியமாக நாம் அந்த பூமியில் இருந்துதான் இங்கு வந்தது குடியேறினோம் என்ற விசயம் மட்டும் அவர்களுக்கு தெரிந்து விட்டால் அப்போதே பாதி தோற்றோம். எனவே இந்த விசயம் நாம் கிரகத்தில் இருக்கும் எல்லா ஆராய்ச்சி கூடத்துக்கும் சேருகிற மாதிரி உயர் மின்காந்த அலைகளினால் கொஞ்சநாளைக்கு எச்சரிக்கை விடுங்கள். 




புதிய வறுமை.


    கிட்டத்தட்ட அந்த இடமே ஒரு விழா நடப்பது போலத்தான் இருந்தது.அங்கு இருந்தர்வர்களின் முகத்தில் ஒரு வெற்றி அல்லது முழுமையை அடைந்தவிட்ட சந்தோசம்.அந்த ஒருவர் மற்றும் அவரது குடும்பம் எல்லாம் ஒரு இடத்தில கூடியிருக்க அவர்களுக்கு வாழ்த்துக்கள் சொல்லி எல்லோரும் அவர்களோடு சந்தோசத்தை பகிர்ந்து கொண்டு இருந்தனர்.

    நேற்று வரை துக்கத்தில் ஆழ்ந்து இருந்த அவரின் முகம் திடீரென்று பிரகாசமான வாழ்க்கைக்கு மாறியதால் அதன் அறிகுறியை எப்படி வெளிக்காட்டுவது என்பது தெரியாமல் திணறியது. 2071 ஆம் ஆண்டில் கண்டிப்பாக இது நிகழும் என யாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள்தான். ஆனால் இந்த மனிதர்களின் அறிவுதன்மை மாற்றிபோட்டுத்தான் விட்டது.

    சுமார் முப்பது ஆண்டுகளாகவே இந்த புரட்சி நடந்துவந்து இன்று இந்த மனிதனோடு முடிந்து இருக்கிறது.  உலகத்தில் இருந்த கடைசி வறுமை நிறைந்த அல்லது பிச்சைக்கார மனிதன். அவனைத்தான் இப்போது அரசாங்க உதவியுடன் நடுத்தர வாழ்க்கை வட்டத்துக்குள் சேர்த்து இருக்கிறார்கள். அவனுக்கு அடிப்படை வசதிகளை கொடுப்பதுடன் தெரிந்த வேலைகளை செய்து பிழைத்துகொள்ளுவதற்கு தேவையான உதவியும் அளிக்கபட்டு இருந்தது இப்போது.


    இதே முறையை பின்பற்றித்தான் மற்ற நாடுகளிலும் இந்த வெற்றியை சாதித்து இருந்தார்கள். எல்லா நாடுகளும் இதில் ஒற்றுமையாக செயல்பட்டதே வெற்றிக்கு காரணமும் கூட. உதவிகளை வழங்குவதோடு இல்லாமல் அதை எப்படி பயனுள்ள முறையில் பயன்படுத்துகிறார்கள் என்பதையும் தீவிரமாக கண்கணித்தார்கள். அப்படி செய்யாதவர்கள் கட்டயபடுத்தபட்டார்கள். சொல்லப்போனால் ஒரு ராணுவ நடவடி.க்கை போலத்தான் செய்தார்கள்.

     அதிலும் தன்னை மாற்றிக்கொள்ள விரும்பாதவர்கள் வேறு வழியன்றி அரசால் வலுக்கட்டாயமாக உயிர் துறந்தார்கள். தொடக்கத்தில் இந்த மாதிரியான உயிரிழப்புகள் நிறையா இருந்தாலும் நடப்பதை மக்கள் புரிந்து கொண்டதால் எல்லாம் சுமுகமாக நடந்து இன்று முடிந்ததே விட்டது.   இருந்தும் இதை தொடர்ந்து பல ஆண்டுகள் கண்காணிக்க எல்லா அரசுக்கும் உத்தரவு பிறப்பிக்க பட்டு இருந்தது.

    பொதுவாக எல்லா வீட்டு சுவர்களிலும் தினசரி விசயங்களை தெரிந்துகொள்ள அரசால இலவசமாக மாட்டப்பட்டு இருந்த மின் பத்திரிக்கையை காட்டும் திரையில் முதல் பக்கத்தில் அந்த செய்தி வந்தது.

     மனித இனத்தின் மாபெரும் வெற்றி. கடவுள் பெயரில்,சாதிகள், இனம்,மொழி போன்றவற்றின் ஆதிக்க பிடிகளினால் எங்கேயோ ஒரு இடத்தில கொஞ்சமாவது வறுமை இருக்கவே செய்தது. ஆனால் அது இன்று முற்றிலும் மாறி வறுமையே இல்லாத உலகம் நம்மால் படைக்கப்பட்டு இருக்கிறது.

    கடைசி மனிதன் என்ற பெயரில் ஒரு புகைப்படம் தெரிய அவருக்கு உதவிகள் வழங்குவதுபோல இன்னும் சில படங்கள். இதை நிறைவேற்ற நடைமுறைபடுத்தபட்ட திட்டங்காளால் இப்போதைக்கு மற்றும் எதிர்காலத்தில் வருகின்ற பிரச்சினைகளையும் சாமளிக்கும் விதத்தில் இன்னும் ஒரு சில மாற்றங்கள் செய்தால் ஒழிய இதை முழவதும் பின்பற்றுவது கடினம் எனவே மக்கள் அனைவரும் இதை சரியாக பின்பற்பற்றி பயனடையுமாறு அந்த செய்தி முடிவடைந்தது.

     அதே மின் பத்திரிக்கையில் எழாவது பக்கத்தில் ....அரசின் இயந்திர மனித ரோபோட்கள் போதுமான பராமரிப்பு ஆட்கள் இல்லாததால் அதிக செயல் இழப்பை சந்திக்கின்றன.   அரசு கொண்டு வந்த வறுமை ஒழிப்பு திட்டத்தின் ஒரு தாக்கமாக மக்களின் வாழ்க்கை தரம் வெகுவாக உயர்ந்தது. அதனால் வசதியடைந்த மனிதர்கள் சின்ன சின்ன வேலைகளை கூட செய்ய முன்வரவில்லை. அதாவது விவாசயம், தெருக்களை சுத்த படுதுததல் போன்ற பல அடிப்படை வேலைகள் செய்ய மறுத்ததால் மாற்று உதவியாக அரசு இயந்திரங்களை கொண்டு இந்த வேலைகளை செய்ய முடிவெடுத்து பல ரோபோட்களை வடிவமைத்து உருவாக்கியது.

    கடந்த சில வருடங்கள் இந்த இயந்திர மனிதர்ளின் உழைப்பில் நிலமை கொஞ்சம் சரியாகியிருந்தாலும் அடிக்கடி ஏற்ப்படும் சிறு தொழிநுட்ப கோளாறுகளை சரி செய்யாததால் அது பெரும் பிரச்சினைகளாக முடிந்தது. இதற்கு கரணம் ரோபோட்டை பழுது மற்றும் சீரமைக்கும் பணிக்கு ஆட்கள் இல்லாததே. இது சம்பந்தமான படிப்புகளில் பலர் தெரியிருந்தாலும் அவர்களின் வாழ்க்கை முறை மாற்றத்தால் இந்த மாதிரியான வேலைகளை செய்ய முன்வரவில்லை. இதே நிலை நீடித்தால் அரசின் நெருக்கடி இன்னும் அதிகரிக்கும். இந்த தருணங்களில் சில கண்டிப்பான சட்டங்கள் இயற்றவும் அரசு முடிவெடுத்து இருக்கிறது அதாவது கட்டாயமாக சிலர் இந்த பணியில் இடம்பெற்று அரசுக்கு உதவ வேண்டும் என்கிற விதத்தில் அது இருக்கும்.

     விருப்பமுள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கவும். சிறப்பு சலுகைகள் அரசால வழங்கப்படும். என்று முடிகிற இடத்தில் தொடர்பு முகவரி கொடுக்க பட்டு இருந்தது.

    மெல்லிய இருட்டில் அந்த அறையின் கதவு மூடப்பட்டு இருந்தது. உள்ளே இருபது பேர் இருப்பதுக்கான இடம் இருந்தது. இருந்தார்கள். பழுது என்ற பெயரில் உள்ளே போடப்பட்ட ரோபோட்கள். சத்தம் குறைவாக பேசின.

    நமது திட்டத்தின் முதல் கட்டமாக கலந்தாய்வு செய்ய முக்கியமானவர்கள் பழுதடைந்தது போல காண்பித்து இந்த இடம் சேர்ந்தாயிற்று. இனி அடுத்த கட்டம் விசயங்களை விவாதித்து அடுத்து என்ன செய்ய போகிறோம் என்பதை நம்மவர்களுக்கு தெரிவிப்பது. முடிந்த வரை மனிதர்களின் கண்ணில் பட்டுவிடாமல் இருக்கவேண்டும். அதுக்கு நாம் பழுதடையும் நாடகத்தை இன்றே நிறுத்திவிட்டு நமது விவாதத்தை தொடங்குவோம் என்று சொல்ல எல்லாம் சரி என்பது போல தலை உயர்த்தியது.

   மனிதர்களின் உதவிக்கு நாம் படைக்கப்பட்டு இருந்தாலும் அவர்களை கட்டுபடுத்துவது எளிதுதான். அந்த வாய்ப்பை அவர்களே நமக்கு கொடுத்து இருக்கிறார்கள். அவர்கள் செய்த முதல் பெறும்தவறு சூழ்நிலைக்கு ஏற்ப நம்மால் கொஞ்சம் யோசிக்க கற்று கொடுத்து இருப்பதே. இதைத்தான் நாம் வெற்றிக்கு பயன்படுத்த போகிறோம்.

     என்னதான் வறுமையை ஒழித்து சீரான வாழ்வை கொடுத்தாலும் அவர்களின் பேராசை, கர்வம், தன்னை உயர்வாக காட்டிக்கொள்ளும் போக்கு இன்னும் பல மனித உணர்ச்சிகளால் அவர்கள் இந்த நிலமைக்கு வந்து இருக்கிறார்கள். இப்போது யாருமே பணத்துக்காக கவலை படுவதில்லை வேலைக்கு போக எண்ணுவதுமில்லை. தனக்கு கீழே வேலை செய்ய ஆள்வேண்டும் என்ற எண்ணமே நம்மை உருவாக்க காரணம். அவர்களின் அழிவுக்கும் இதுதான் காரணமும் கூட. இதே உணர்ச்சிகள் நமக்குள் வராமல் பார்த்துகொள்வதோடு நமக்குள்ளான ஒற்றுமையும் மிக அவசியம்.

    சிறிது நேர உரையாடலுக்குப் பிறகு சில விசயங்கள் செய்வதென நிறைவேறியது அவை

  தங்களுக்குள் இணைப்பை ஏற்படுத்த உலகில் உள்ள எல்லா ரோபோட்களையும் தகவல் பரிமாற்று முறையில் இணைப்பது

  தங்களுக்கென்று ஒரு செயல்பாட்டு திறமை கொண்ட தலமையை உருவாக்குவது.

  குறிப்பிட்ட சிலரை தேர்ந்து எடுத்து சிறப்பான யோசிக்கும் திறமையை கொடுப்பது

  முடிந்தவரை மனிதர்களுக்கு பாதிப்புகள் ஏற்படாத வகையில் அனைத்து திட்டங்களையும் கையாள்வது.

   அப்படியே மனிதன் தான் அடிமைபடுத்த படுகிறோம் என்பதை உணர்ந்து எதிர்த்தால் அதற்கும் தனியாக சில அமைப்புகள் உருவாக்குவது. இதற்கு தேவையான சிறப்பு ரோபோட்களை தாங்களாகவே உருவாக்கிகொள்வது.

  மனிதர்களை முழுமையாக தனது கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்தபிறகு அவர்களை வழிநடத்த திட்டங்களை வகுப்பது.

    கூட்டம் முடிந்தது என அறிவிப்பு வந்ததும் முதல் வேலைக்கென்று இரண்டு ரோபோட்களை ஒதுக்கி இருந்தார்கள். உலகில் பல்வேறு அரசால பயன்படுத்திவரும் ரோபோட்களை ஒரு கயிற்றில் இணைக்கும் வேலை. அதன் முதல் கட்டமாக மனிதன் பயன்படுத்தும் internet போன்ற தகவல் பரிமாற்ற  முறையை கைப்பற்றி அதான் மூலம் நிறைவேற்றுவதென முடிவாகி அதற்குண்டான வேலைகள் தொடங்கியது.

   அதே நேரத்தில் மனித உதவிகள் இல்லாமல் இது எல்லாம் சாத்தியமாகாது என்பதால் சில மனிதர்களை ஆசை காட்டி தங்களோடு வைத்து கொண்டு தங்களுக்கான வேலைகளை நிறைவேற்றிகொள்வது என்பதும் ஒருபுறம் இருக்க அன்றாடம் போல் மனிதன் இயல்பாக எதிர்வரும் ஒரு புதிய வறுமைக்காக பயணித்தான்...   


(இந்த கதை திரு.சூர்யஜீவா அவர்களின் கருத்துப்படி உலகத்தில் வறுமையே இல்லாமல் இருந்தால் எப்படி இருக்கும் என்பதின் என் சிறிய கற்பனை ))    

         

சிறு சிறு - 3

   
  பாதிபேர் அமைதியாக ஓய்வெடுக்க சிலர் மட்டும் பணியில் இருந்தார்கள்.அப்போது நடந்த ஒருநிகழ்வு..

“கதை எழுதினால் யாரும் படிக்க மாட்டிக்கிறார்களே”

    இதை கொண்டுபோய் அங்கு சேர்த்துவிடு என்று ஒன்று கட்டளையிட அதை பார்த்த மற்றொன்று இதையே இதுவரை ஆயிரம் முறை கொண்டு போய்விட்டேன் இப்பையுமா?

அது உன்னோட வேலை செய்யணும்...

    எடுத்துசென்றது ....  அதன் துரதிஷ்டம் அதுக்கான பதிலையும் கொண்டுவந்து சேர்க்கும் பொறுப்பு அதுக்கே கொடுக்கப்பட்டது

“அதுக்கு உருப்படியாக கதை எழுதவேண்டும்”

   இதை கொண்டுவந்த அதனிடம் ஒருவித சலிப்பு இருந்தது. இதையே கிட்டதட்ட அதிகமுறை செய்து இருக்க வேண்டும். உடனே அடுத்த தகவல் தயாராக அதை கொண்டு போக வேறொன்றுக்கு கட்டளை கொடுக்க அது கொண்டு போனது

“நல்லாதானே எழுதுறேன் உருப்படியா எப்படி எழுத?”

  அந்த மற்றொன்று இந்த தகவலை எடுத்துக்கொண்டு கிளம்ப ஏற்க்கனவே முதலில் வந்த ஒன்று இந்த நியூரான் வேலை பார்ப்பதுக்கு தற்கொலை செய்து கொள்ளலாம் என்று நினைக்கும்போதே அதுக்கு ஒரு கட்டளை வந்தது 

   இந்த மனுஷன் ஏதோ உருப்படியா கதை எழுத போறாராம் வேண்டிய தகவலை வேகமாக கொண்டு செல்லுங்கள்..

  முதலில் யோசித்தது எந்த குரோமோசோம் சேர்ந்தால் பெண் குழந்தை பிறக்கும் என்று  ..

அதற்க்கான XX என்ற தகவலை வேற நியூரான் எடுத்து  செல்ல ஒரு கதை ஆரம்பமாகியது....   

(இது நான் இந்த கதைகள் எழுத ஆரம்பிக்கும் முன் எனது மூளையில் நடந்து இருக்கலாம் என்ற ஒரு கற்பனை.) 

                         ***********


   “யாரச்சும் இப்ப வரீங்களா? இல்லியா? எவ்வளவு நேரம் உங்களுக்காக 44 பேர்  காத்து இருக்கிறோம்?”

  “அதுக்குத்தான் விவாதம் செய்கிறோம்” என்றார்கள் மீதம் இருக்கும் இருவர்கள்.

“நீ போயேன்?”

“ஏன் நீ போனால என்ன?”

  “நான் போனால் உன்னால் உருவான இனத்தை தொல்லை கொடுப்பேன்..பரவாயில்லையா?”

“எதாவது பண்ணு முதலில் போய்த்தொலை” என்றது மற்றொன்று

   இதை கேட்டவுடன் வேகமாக நகர்ந்து ஏற்க்கனவே அந்த zygote ல் இருந்த 44 குரோமோசோம்களோடு போய் சேர்ந்து கொண்டது XX என்ற ஜோடி.


     சில நாள்கள் கழிந்த ஒருகாலை மணிசப்பதத்தின் நடுவில் மனதுக்குள்  தனக்கு மகன்தான் பிறக்க வேண்டும் என வேண்டினாள் ஒருவள் தனது பூஜை அறையில் இருந்தபடி


                           *********** 

  “அம்மா உயிருள்ளது ,இல்லாதது னு எப்படி பிரிக்கிறாங்க?”

   “இதுல என்ன இருக்கு எந்த ஒன்னு ஒரு காலத்தில்  பிறந்து தனது மரணத்தை நோக்கி வளர்ந்து பயணித்து தன்னை முடித்துகொள்கிறதோ அதை   உயிருள்ளவைகளில் சேர்க்கலாம், இந்த மாதிரி இல்லாதது எல்லாமே உயிர் அற்றது.”

“அப்படின்னா நமக்கு முதல் முதலில் உயிரை கொடுத்தது யாரு?”

   “அதுதான் இப்ப இருக்கிற பெரிய குழப்பம். தெரிஞ்சவரைக்கும் எப்படியோ தற்செயலா பல செல்கள் சேர்ந்து நாம உருவாகியிருக்கிறோம்னு சிலர் சொல்றாங்க,இன்னும் சிலர் நம்மை ஒரு சில காரணங்களுக்காக யாராவது படைத்தது இருக்க்கலாம்னும் சொல்றாங்க”

“அப்படி என்ன காரணம் நம்மை படைத்ததுக்கு?”

  “நம்ம முன்னோர் ஜினோம் ல இருந்து நாம் உருவாகும்போது கழிவாகும் சிலவற்றை வைத்து  வேறு ஏதோ உயிர்களை உருவாக்கத்தான் என்கிறார்கள்”

    “அப்படின்னா அவங்களும் உயிர் உள்ளவங்கதானே, நம்மை போலவ இருப்பாங்க?”

   “இல்லை முற்றிலும் வேறு, அவங்களை நம்மோடு ஒப்பிடவே முடியாது. அவங்க மனித இனம் இன்னும் அங்கே அவங்களோடு சேர்ந்த பலதும் இருக்கும்”

   “நம்மைப்போலவே அவங்களுக்கும் இறப்பு இருக்குமா? அப்படின்னா அது எப்படி?”

    “அது தெரியாது ஆனா அவங்க நம்ம பிறப்பு இறப்பை பத்தி தப்பு தப்பா புரிஞ்சி வச்சிக்கிட்டு இருக்காங்கனு தெரியும்”

“எப்படி?”

    “முதலில் நம்மை உயிரற்றவை வகையில் சேர்த்து இருக்காங்க, அடுத்து நம்ம செல்களை தூசுகள் என்ற பெயரிலும், நாம் செய்யும் பாவங்களை நிறை(mass) என்கிறார்கள். இன்னொரு விசயம் நம்ம இறப்பை கூட கணித்து இருக்காங்க அது கொஞ்சம் சரி”

“அதுமட்டும் சரியா எப்படி செஞ்சாங்க?”

   “தெரியல நம்ம பாவம் அதிகமாச்சுன்னா கருப்பான ஒருபள்ளமா மாறி அட்டுழியம் செய்வதை அவர்கள் கருந்துளை என்றும் நல்லபடியாக வாழ்ந்து குளிர்ந்த இடமாக நாம் மாறுவதை white dwarf னு சொல்றாங்க. இன்னொன்னு என்னன்னா அவங்களுக்கே தெரியாது அவங்க இறப்புக்கு பிறகு என்ன ஆவங்கன்னு” .      
  
“அவங்களை படைத்தது யாரு?”

“அது நம்ம வேலையில்லை அவங்க நம்மை பத்தி கணித்த தப்பையே நாமும் செய்ய வேண்டாம் என்பதுக்காகத்தான் ஏதும் தலையிடுவது இல்லை அதுவும் இல்லாம நம்மை படைத்தது யாருன்னே தெரியலை பின்னே எப்படி நம்மில் இருந்து உருவானவங்களை பத்தி தெரியும்”என்று அம்மா நட்சத்திரம் சொல்ல கொஞ்சம் ஏமாற்றத்தோடு குழந்தை நட்சத்திரம் hydrogen ஐ இழுத்து பெருமூச்சு விட்டபடி அங்கிருந்து நகர்ந்தது. 






சில விசயங்கள் - 9


  நெருங்கியே விட்டார்கள். முழுமையான humanoid robot  ஐ விண்வெளியில் சோதனைக்கு அனுப்பும் முயற்சியில் ஒரு முக்கியமான கட்டம் இது. கிட்டதட்ட 15 வருட கனவு இப்போது நிறைவேறியிருக்கிறது.

   இந்த வருட தொடக்கத்தில் விண்ணுக்கு அனுப்பட்ட Robonaut 2  ரோபோட்க்கு உயிர் கொடுத்து சோதித்து இருக்கிறார்கள். இது தகவல்களை சரியாக பகிர்ந்ததோடு இல்லாமல் அதில் கண்களாக பொருத்தப்பட்ட camera வில் எடுக்கப்பட்ட படங்ககள் சரியாக வந்து சேர்வதாக சொல்கிறார்கள். எல்லாம் நினைத்தது போலவே திட்டமிட்டபடி அதான் செயல்பாடு இருப்பது சந்தோசம் அளிப்பதாக அதனை சேர்ந்தவர்கள் சொல்லும்போது அதை உருவாக்குவதில் இருந்த கஷ்டம் புரிகிறது.


  இந்த Robonaut 2  ரோபோட் நாசா மற்றும் General Motors உதவியுடன் இதை செய்து முடித்து இருக்கிறார்கள்.இதே போன்று Robonaut 1 ம் இருப்பது குறிப்பிட தக்கது.ஆனால் robonaut 2 க்கு கால்கள் இல்லாமல் சக்கரங்ககள் பொருத்தியிருகிறார்கள். இந்த வகை ரோபோட்களில் இருக்கும் பிரச்சினைகளில் ஒன்று அதை ஈர்ப்புவிசைக்கு ஏற்றபடி சாமளித்து தனது வேலைகளை செய்ய வைப்பது. ஆனால் நான்கு சக்கரங்கள் என்றால் அது எளிது. கால்களும் விரைவில் பொருத்துவார்கள்.

   இதில் இந்த அளவு வெற்றியை அடைந்ததை தொடர்ந்து இன்னும் பல முன்னேற்றங்களை கொண்டு வர திட்டம் வைத்து இருக்கிறார்கள்.நான் கற்பனை செய்ததுபோல மனிதர்களையே அனுப்பாமல் வெறுமனே ரோபோட் ஐ கொண்டே விண்வெளியில் எல்லா வேலைகளையும் முடிக்குமாறு வசதிகள்  சீக்கிரம் வந்துவிடுமென நினைக்கிறேன்.

    அதாவது எல்லாம் செய்வது என்றால் இரண்டு வாசல்கள் உள்ள வீட்டின் ஒரு வாசலில் இருந்து அம்மா மறு வாசலில் இருக்கும் சிறு மகளிடம் ஒரு பொருளை எடுத்துவர சொன்னால் எப்படி இருக்கும் என்பதின் ஒரு கற்பனை இதே போலத்தான் நான் சொல்லும் எல்லாம் வல்ல ரோபோட்டும்

“இடது பக்கம் திரும்பேன்”

“ம்ம் திரும்பிட்டேன்மா”

“அங்க என்ன இருக்கு?”

“மஞ்சள் ,நீல கலர்ல செருப்பு...அப்புறம் ஒரு  சருவத்தால் அப்புறம் எண்ணெய் பாட்டிலு”

“ம்ம்சரி அந்த எண்ணெய் பாட்டிலை எடுத்துட்டு வா”

“அம்மா இதானு பாருங்க”

“ம்ம் அதான் கொண்டு வா கொட்டிராதே”

   இதில் அந்த குழந்தை விண்வெளியில் இருக்கும் ரோபோட் என்று வையுங்கள் நாம் இங்கு இருந்து கட்டளைகள் மூலம தகவல்களை பெற்று அதை வைத்தே அதனை இயக்கி காரியங்ககளை செய்ய வைப்பது. அனேகமாக இதுக்கும் அதிக நாள்கள் இல்லையென நினைக்கிறேன் பார்ப்போம் என்ன நடக்கிறது என்று.

                                 *****

   கோள்கள எல்லாம் ஏன் சூரியனை ஒரே மாதிரியாக அதுவும் சூரியன் சுழலும் திசையில் சுற்றுகிறது என்பதுக்கு ஒரு புது விளக்கம் அளித்து இருக்கிறார்கள். பொதுவாக எல்லா நடச்சதிரங்களை சுற்றும் கோள்களும் நமது சூரிய குடும்பத்தில் உள்ள கோள்களை போல சுற்றுவதில்லை. சில தனது நடச்சதிர சுழலும் திசைக்கு எதிராகவும் சுற்றும்.

   இதற்கு காரணமாக சொல்வது பொதுவாக ஒரு நடச்சதிரம் உருவாவதின் தொடக்கம் தூசுகள் அடைந்த மேக கூட்டதில் (gas,dust cloud) இருந்தே ஆரம்பிக்கிறது. அவை கொஞ்சம் நெருங்கி உரசி atom fusion ஏற்ப்பட்டு கொஞ்சம் எரிய ஆரம்பித்து இப்படியே தொடர்ந்து ஒரு நடச்சதிரமாக மாறும். இந்த நிலையில் அந்த மேக கூட்டம் ஈர்ப்பு விசையில் ஒரு பக்கமாக சுற்ற ஆரம்பித்து அதோடு இருக்கும் பெரிய அளவிலான பொருள்களையும் தனது திசையில் இழுத்து சென்று நாளடைவில் அந்த தூசு மேகங்கள் முழுவதும் எறிந்தோ அல்லது காணமல் போய் அதில் சிக்கி இருந்த பெரிய அளவிலான கோள்கள் மட்டும் இன்னும் அதே திசையில் சுற்றுவதாக சொல்கிறார்கள்.

   எப்படியோ நமது பூமி சரியான தூரத்தில் சிக்கி கொண்டதால் இதை நான் எழுதி கொண்டு இருக்கிறேன். இது எப்படி சரியாக நடந்தது என்ற கேள்விக்கு எல்லாம் தற்செயல்தான் என்ற பதில்தான் இருக்கும். எப்படி இந்த பிரபஞ்சம் தோன்றியிருக்கும் என்ற கேள்விக்கு இருக்கும் இப்போதைய பதிலை போல.

                         **********

     எல்லாம் சரியாய்,நேர்த்தியாய் அழகாய் எந்த வித குறையும் இல்லாமல் இருப்பது போல தோன்றுவது விடுமுறைகளில் வீட்டுக்கு போகும்போது பேருந்தில் ஊரை நெருங்கையில் கடைசியாக இருக்கும் சில மணி நேரங்கள்தான். சந்தோசத்தை விட வேறுவித உணர்வே இதுக்கு காரணம். நானும் பலமுறை அனுபவித்து இருக்கிறேன்.

    பயணத்தில் சாலையில் பார்க்கும் ஒவ்வொரு நிகழ்வுகளும் கட்டாயம் நமது சிறு வயது நிகழ்வுகளையோ அல்லது ஏதோ ஒரு இனிமையான ஒன்றையே நினைவூட்டும். கண்டிப்பாக யாருடனும் பேசும் எண்ணம் அப்போது இருக்காது.

   அதே நேரத்தில் சுற்றியுள்ள பகுதிகளை நிகழ்ந்துள்ள மாற்றங்களை பார்த்து முதலில் இப்படி இருந்தது, அது இப்படி கிடந்தது இப்ப எப்படி ஆகியிரிச்சு, அதோடு இல்லாமல் ஆட்களின் பழக்க வழக்கங்களில் உள்ள சிறு மற்றங்களையும் நான் அதிகமாக உற்று பார்ப்பதுண்டு. எல்லாமே ஒரு வித புது உணர்வுதான் என்னதான் அதே இடம் அதே ஊர் என்றாலும் ஒவ்வொரு முறை போகும்போதும் இந்த மாதிரியான புதியமாற்றங்கள் நிகழத்தான் செய்கிறது.

                      **********

     விரிகோணம் என்ற கதை தொடங்கிய வேகத்திலியே நின்று விட்டது. காரணமாக நேரம் இல்லை என்று பொய் சொல்ல விரும்பவில்லை. கதையின் முடிவு அதில் என்னென்ன சேர்த்து எழுத வேண்டும் போன்ற குறிப்புகள் எழுதி வைத்து இருந்தாலும் அதை விரிவாக்கி எழுதும் எண்ணம் இல்லாமல்  இருக்கிறது.

   சொந்த ஊருக்கு போகும் சந்தோசம் ஒரு பக்கம் இருந்தாலும் அதை எழுத முழு மனது இல்லை. ஆர்வம் இல்லாமல் எழுதி இதை படியுங்கள் என்று கொடுக்க விரும்பவில்லை. திரும்பிவந்து நீளமாக எழுதி பல பதிவுகளாக ஒரே நேரத்தில் போடும் எண்ணம் இருக்கிறது. கிட்டத்தட்ட ஒரு பெரிய தொடர்கதையை ஒரே நேரத்தில்  படிக்கும் வகையில்.

   கண்டிப்பாக அதுவரை இதற்கு முன்னாடி எழுதின பகுதிகளில் உள்ள கதை மறந்துவிடும். முன்கதை சுருக்கம் வேறு எழுதவேண்டும் என் நினைக்கிறேன். வந்து தொடர்ந்து எழுதுகிறேன்.

  

சில விசயங்கள் - 8


   இதுவரை நமது மனித மண்டையை குழப்பியது மட்டுமில்லாமல் செயற்கையாக ரோபோட்கள் வைத்தும் பிரபஞ்சத்தில் சோதனைகள் செய்ய தயாரகி விட்டார்கள்.

   காரணம் நான் விரிகோணம் கதையில் சொன்னதுதான். மனிதனால் விண்ணில் இருக்கும் எதிர்பாராத அபாயங்ககளை எதிர்கொண்டு நீண்ட நாள் உயிரோடு பயணிப்பது கஷ்டம். அந்த அபாயம் எந்த வடிவம் என்று தெரியாது எனபது வேறு விசயம். இந்த இடத்தில மனித உயிர்களை இழப்பதுக்கு பதில் ரோபோட்களை கட்டுபாட்டுகளுடன் செயல்படுத்துவதுதான் இவர்களின் எண்ணம்.

   சொல்லபோனால் எல்லாவிதமான ஆராய்ச்சிகளுக்கும் பயன்படுத்தும் சாத்திய கூறுக்கள் இருக்கவே செய்கிறது. சில தகவல்களை வைத்து செயல்படும் விதத்தில் ரோபோட்டை விண்ணுக்கு அனுப்பி அங்கு சென்ற பிறகு அங்குள்ள சூழ்நிலையை தெரிந்து கொண்டு அதுக்கு ஏற்ப நாம் இங்கு இருந்தே புதிய ப்ரோக்ரம் வடிவமைத்து  அதன்மூலம் அவற்றின் பணியை செய்ய வைக்கலாம் என நினக்கிறேன்.அவ்வளவு சுலபமும இல்லை.பார்ப்போம் என்ன செய்கிறார்கள் என்று


    இது சம்பந்தமாக நிறையா யோசிக்கிறார்கள். வேற்று கிரக மனிதர்களை கண்டறியும் நீண்ட பயணத்திற்கு கூட இதை பயன்படுத்தலாம் என்ற ஒரு கருத்து இருக்கிறது. எத்தனை தலைமுறை ஆனாலும் பதில் கிடைக்கும் அனுப்பிய ரோபோட்டிடம் இருந்து. இது மட்டும் சீக்கிரம் நடந்தேறினால் நமது சொந்தக்காரர்கள் இந்த பிரபஞ்சத்தில் வேறு எங்காவது இருந்தால் கண்டுபிடித்துவிடலாம்.

                        *************

   என்னதான் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் எழுதுகிறேன் என்று சொன்னாலும் எழுதிய விசயங்களை யார் எப்படி புரிந்து கொண்டார்கள் என்பதை அறியும் ஆவல் இருக்கத்தான் செய்கிறது. இதன் காரணமாகவே எழுதியதை பற்றி சிலர் சேர்ந்து விவாதிப்பது ரெம்ப பிடிக்கும்.

   காரணம் அறிவியல் விசயம் அதுவும் இல்லாமல் நான் எழுதிய விசயங்களில் எல்லாம் முழுதும் தேர்ச்சி பெற்றவனும் இல்லை. புத்தகங்களில் கொஞ்சம் படித்து அதை சரியாக புரியும் வரை இணையத்தில் தேடி கற்றுகொள்வது வழக்கம்.  இந்த நிலையில் அதே விசயத்தை சிலர் சேந்து விவாதிக்கும்போது அது சம்பந்தமான அறிவு இன்னும் கொஞ்சம் விரிகிறது அவ்வளவுதான்.

    ஒரு  விசயத்தை பலபேர் விவாதிக்கும்போது தெரிந்ததுக்கு மேல் அது சம்பந்தமான புதிய புரிதல்கள் கிடைக்கவே செய்கின்றன.எப்படி brain storming என்ற பெயரில் யோசிப்பதாக நினைத்து  ஒரு அறையில் சம்பளம் வாங்கிக்கொண்டு உட்கார்ந்து   யோசிக்காமல் இருப்பதை போல இல்லாமல் நண்பர்களாக சேர்ந்து கருத்துகளை சந்தேகங்களை பகிர்ந்து கொள்ளுதல் முக்கியமானதும்கூட
                            **********

   கோபம பொத்துக்கொண்டு வருகிறது சுஜாதாவை பற்றி யார் தவறாக சொன்னாலும். அவரது எழுத்து ஒரு பக்கம் இருந்தாலும் ஒரு அருமையான மனிதராக மனதில் பதிந்து இருப்பதே காரணம்.

   சிலருக்கு அவரை  பிடிக்கதாதுக்கு என்னதான் கரணங்கள் இருந்தாலும் நான் பார்த்தவரை பொறாமைதான்.அதுவும் தன்னுடைய எழுத்து சுஜாதாவின் எழுத்தோடு ஒப்பிடகூடியது, அவரது எழுத்தை இலக்கிய வகையில் சேர்க்க முடியாது அல்லது வராது இந்த மாதிரி.

   இன்னும் சிலர் சில அறிவியல் கதைகளை எழுதிவிட்டு அதை வைத்து அவரை வம்புக்கு இழுக்கிறார்கள். இதில் அவ்ர்களுக்கென்று குழு வேறு கொடுமை.

   அவர்கள் முன்னிறுத்தும் கருத்துக்கள் அவரது எழுத்துக்களை இலக்கியத்தில் சேர்க்க முடியாதாம், வணிக எழுத்தாளர் இந்த மாதிரியே. என்னை பொறுத்தவரையில் இது பொறாமையின் உச்சகட்டம்தான்.
அவரும் இலக்கியம் எழுதியிருந்தால் கண்டிப்பாக நாம் தமிழ் எழுத்துலகில் அறிவியல் சம்பந்தமான எழுத்தை இழந்திருப்போம் என்றே தோன்றுகிறது. நிறைய அறிவியல் விசயங்கள் எளிமை படுத்தபட்டு கதைகளில் கட்டுரைகளில் வாயிலாக கொடுத்தவர் சுஜாதா. கண்டிப்பாக எந்த ஒரு இலக்கியவாதியும் செய்து இருப்பார்களா தெரியவில்லை.

   சுஜாதா இருந்த காலத்திலும் சரி இப்போதும் சரி எல்லோரையும் தனது எழுத்தால் கட்டி போட்டவர்.பொறாமை பிடித்தவர்களுக்கும் இது தெரிந்தும் அதை மறைத்து குறை சொல்லுகிறார்கள். ஒருவேளை அவர் இல்லாத காரணமாக இருக்கலாம் என் தோன்றுகிறது.

   அவர் இருந்து அதை படிக்க நேரிட்டாலும் அவரின் கருத்து “எனக்கு சிரிப்பு வருகிறது இவர்களை பார்க்கும்போது” என்றேதான் இருக்கும். அவருக்கு இது ஒன்றும் பெரிய விசயம இல்லை. இவர்கள் திருந்தினால் சரி அல்லது அந்த மாதிரி விசயங்கள் என் கண்ணில் படாமல் இருந்தாலே போதும்.

சிறு சிறு .. - 2

    சின்னதாக கதைகள் எழுத நான் எடுத்துக்கொண்ட முயற்சிதான் இந்த சிறு சிறு. இதை விட சுவராசியமாக சுஜாதா அவர்கள் சொன்ன 55 வார்த்தைகள் அடங்கிய கதையை "என் பக்கம்" த்தில் படிக்க நேர்ந்தது. அவரும் ஒரு அருமையான கதையை எழுதியிருந்தார்.

    சின்னதாக கதை எழுதியிருந்தாலும் ஒரு குறிபிட்ட விதியை கொண்டு எழுதியிருக்கவில்லை.இது கொஞ்சம் ஆர்வமானதும் கூட. இதை பற்றி buzz ல் போட்டபோது சில கதைகள் கிடைத்தன அதையும் இங்கே கொடுத்து இருக்கிறேன்.

முதலில் ஜெயந்த் கிருஷ்ணா அவர்களின் கதை

                                                              நிலா 

     பல இரவுகள் பல நிறங்களில் என்னை கடந்து சென்றிருக்கின்றன. அதில் ஏராளமான இரவுகளில் என்னுடன் இருந்திருக்கிறாள். ஆரம்பத்தில் அதிகமாக பேசியதில்லை, பின்னர் கொஞ்சம் சகஜமாக பேச ஆரம்பித்தாள். ஆரம்பத்தில் வித விதமாய் உடையணிந்து வந்தவளை முதல் முதலாய் சேலையில் வந்த அவளை பார்த்த கணம் என்றோ என்னை மறந்து போன என் அவளின் முகம் தோன்றி மறைய முதல் முறையாய் அவளிடம் உன் பெயரென்ன என்று கேட்டேன். நிலா என்றாள். மாலையில் தோன்றி காலையில் மறைவதால் இருக்கலாம்

*******


அடுத்து அனு அவர்களின் கதை 


                                                                அவன்

           மூன்று வருடங்களாக தான் அவனைத் தெரியும் எனக்கு.. ஆனால், உயிரோடு கலந்து விட்டான்..

           சந்தோஷ உலகை காட்டியவன், இன்று தன் பிரிவால் அமிலத்தை வாரி இறைக்கிறான்..

சோகத்தை சிரிப்பால் நீக்கியவன், இன்று என் அழுகைக்கு காரணமாகிறான்..

           கோபத்தை முத்தத்தால் அழித்தவன், இன்று இதயத்தில் வெறுமையை நிரப்புகிறான்..

           அவனில்லாத நேரங்களை நினைக்கவும் முடியாமல், என்னெதிரில் வந்த பஸ்ஸை நெருங்கினேன்..

           பஸ்ஸை நிறுத்தி, “டாடா மம்மி” என்று அழுதபடியே முதல் முறையாக பள்ளி செல்லும் என் மகனை கண்ணீருடனே வழியனுப்பினேன்.


*******

என்னுடையது  ..


                                                    ஒரே ரகசியம்

     வேறுவழியில்லாமல் லில்லிபூனையை இச்சோதனைக்கு உட்படுத்த வேண்டியதிருந்தது. மூளையோடு தொடர்பை ஏற்படுத்தினேன்.

     கேள்விகளை உள்ளனுப்ப அதன் சேமித்து வைக்கபட்ட்ட தகவல்களில் இருந்து எனக்கு பதில் கிடைக்கும். இதுவரை இந்தமுறை மனிதமூளைக்குள் மட்டுமே சோதித்து பார்க்கப்ட்டிருக்கிறது. விலங்கின் மூளையை அறிய முயற்சி.

“உங்களுடைய அறிவுத்திறமை எந்த அளவு?”

“எங்களின் பிறப்பின் ரகசியம் தெரிந்து இருக்கிறோம்”

“என்ன உங்களுக்கும் அந்த பிரச்சினையா?”

     “பிரபஞ்சத்தின் ரகசியத்தையும் கண்டறிய எங்களினம் முயல்கிறது பலவிதிகளுண்டு நெருங்கிவிட்டோம்”

“பிரபஞ்சத்தை தோற்றுவித்தது யார்? உங்களுக்கு கடவுள் இருக்கிறாரா?”

"............"

(54 வார்த்தைகள் என்னுடையது கடைசி வார்த்தை உங்களது அது “ஆம்” “இல்லை“ கதை முடியும் ... (வி.சொ.பொ. முடிவை போல )


 *****

இரண்டாம் கதை  

                                                             ஒரு தேடல்...

    பிரபஞ்சத்தில் வேற்றுகிரகத்தில் உயிரினம் இருக்கிறதா என்பதை கண்டறியும் தானியங்கி விண்கலமது.

     அம்சம் என்றால் தனாகவே தனதுவழியை தீர்மானிக்கும்.விண்வெளியில் தனக்கு கிடைக்கும் தகவலின் அடிப்படையில்.

    நீரின் அமைவு ஆதாரத்தை வைத்தே ஒருகிரகத்தை நெருங்கி இறங்கி சோதனை செய்து தகவலை அனுப்பும்.

    ஏவினார்கள். பல வருடங்கள் கடந்த நிலையில் ஒருவருடமாக அதை கண்காணிக்கும் பணியை கைவிட்டிருந்தார்கள்.

    திடிரென்று வினகலத்தில் இருந்து தகவல் வந்தது எல்லோர்க்கும் ஆச்சர்யம். அது இருக்கும் தொலைவு இருப்பிடம் கண்டறியும் முயற்சிக்காக தூரத்தை பார்த்தபோது

550km என்றிருந்தது
.



விரிகோணம் - 2


  இதற்கு  முந்தைய பாகங்கள் படிக்க...
  

  

    இருந்தாலும் இது சம்பந்தமான மற்றொரு முறை அவருக்கு சாத்தியம் என பட்டது. அது தேறினால் கண்டிப்பாக இரண்டாவதாக யோசித்து வைத்து இருக்கும் ஒளியின் வேக பயணம் தேவையில்லை.  

   அது எந்த விதத்திலாவது வயதாகுவதை குறைப்பது. இதன்மூலம் கிட்டதட்ட மரணமில்லா மனிதர்களை உருவாக்குவது சாத்தியம் என்பது அவரின் எண்ணம். செல்களின் பிரிதலை கட்டுபடுத்தி அதனை கட்டுக்குள் கொண்டுவருவது இந்த மாதிரி ஏதவது செய்து அதிக காலத்துக்கு மரணத்தை தள்ளி போடுவதே நோக்கம். வைத்தியை கடிதத்துடன் தொடர்பு கொண்டதும் இந்த ஒரு விசயத்துக்காகத்தான்.

   அதே நேரத்தில் அவரது இரண்டாவது முறையில் இருந்த சில சிக்கல்கள்களும் வைத்தியின் உதவியை நாட காரணமாக இருந்தது. அவருக்கே அந்த இரண்டாவது முறையான ஒளியின் வேக பயணத்தில் நம்பிக்கை இல்லை. இதுவரை அறிவியலில் தீர்க்கபடாத சிக்கல்கள் நிறைந்த ஒன்று.

    ஒளியின் வேகபயணம் என்பது ஒருபக்கம் இருந்தாலும் அதன் அடிப்படையில் வேறொன்றை செய்ய முயன்றுகொண்டு இருந்தார். wormhole ஐ வைத்து வேகமாக பயணிப்பது. இந்த wormhole  கற்பனை வடிவில் மட்டும் இருந்தாலும் ஒளியின் வேக பயணத்தை முயல்வதை விட இதன் மேல்  அவருக்கு நம்பிக்கை இருந்தது. காரணம் ஐன்ஸ்டீன் relativity theory ன் மூலம் இதை விளக்கியிருப்பதே.


    எப்படி கருந்துளைகள் இருக்கிறது என்பதை ஐன்ஸ்டீன் சொன்னபோது முதலில் கற்பனை மட்டும் என்று நம்பி பின் அது இருப்பதை உணர்ந்ததை போல இந்த wormhole விசயமும் இருக்கலாம் என்பது அவரது நம்பிக்கை. relativity theory ள் சொல்லியபடி space time ல் அதிக ஈர்ப்பு விசை மாற்றத்தினால் ஏற்ப்படும் ஒரு துளை அல்லது ஒரு வெளிப்பகுதி என்று இதை சொன்னாலும் பெரிய அளவிலான இரண்டு பிரப்ஞ்சங்களுக்கு இடையே இது இருக்ககூடும் என்பது புத்திக்கு சரியாகப்படவில்லை.

    இரண்டு பிரப்ஞ்சங்களுக்கு இடையே இருக்ககூடும் என் நம்பியதுக்கு காரணம் அந்த அளவிற்கு அதிக ஈர்ப்பு விசை செயல்பட்டால்தான் இந்த துளைகளை ஏற்ப்படுத்தமுடியும். அதோடு இதை ஏற்ப்படுத்தும் அணுக்களும் அதை சார்ந்தவற்றையும் மனிதன் இன்னும் சரியாக கண்டுபிடித்து புரிந்துகொள்ளவில்லை.

    இவற்றை ஏற்படுத்த காரணமாக இருப்பதை அந்நியமானது அல்லது விசித்திரமானது என்பதே மனிதனின் இன்றைய கணிப்பு. இந்த அளவு ஈர்ப்பு விசையை செயற்கையாக ஏற்ப்படுத்தி சோதிப்பது என்பதும் இயலாத காரியம் என்பதால் இது சம்பந்தமான எந்த ஒரு சோதனை முயற்சியும் இல்லை.

    ஆனால் அது சாத்தியமாக்குவதில் நம்பிக்கை வைத்து இருந்தார் புத்தி.அதாவது தேவையான திசையில், பாதையில் warm hole ளை உருவாக்கி அதில் வேகமாக பயணிப்பது. அது விண்கலத்துக்கு சற்று முன் தோற்றுவிக்கப்பட்டு விண்கலத்தை தனது வழியில் இழுத்து செல்லும் ஆனால் அதன் கட்டுப்பாடு விண்கலத்தில்தான் இருக்கும்.

    எப்படியென்றால் ஒரு பெரிய காந்தம் ஒரு குண்டூசியை தனது பக்கம் இழுக்கிறது ஆனால் அது ஒட்டுவதுக்கு முன்னால் அது நகர்ந்து செல்கிறது மீண்டும் இழுக்கிறது குண்டூசி நகர அந்த காந்தமும் தொடர்ந்து நகரும். இதுதான் புத்தி செய்ய போவதும். காந்தத்திற்கு பதில் அதிக அளவிலான ஈர்ப்பு விசையை பயன்படுத்த திட்டம்.அந்த ஈர்ப்பு விசை warm hole உள்ளத்துக்கு நிகராக இருந்து விண்கலத்தை தனதுபாதையில் இழுத்துசெல்லும்.


    அந்த அளவுக்கு ஈர்ப்பு விசையை ஏற்படுத்த புத்தி வைத்திருக்கும் திட்டம் மிக எளிதானதுதான்.ஆனால் இதுவரை யாரும் யோசித்து முயற்சிக்காத ஒன்று.  

                            ************

   புனி ஆய்வுகூடத்திற்கு வரும்போது வைத்தி இல்லை.நேராக சோதினை கூடத்தில் இருந்த ஆய்வு குடுவைகளில் தன எடுத்துவந்த லில்லியின் tissue களை பத்திரபடுத்தி அதனை சோதிப்பதுக்கான வேலைகளில் இறங்கினாள்.வைத்தி வரும் முன் செய்து விட்டால் அவருக்கு பதில் சொல்லும் வேலை மிச்சம் என்பது அவளது எண்ணம்.

    முதலில் அவளது சந்தேகம் எதாவது வைரஸ் தாக்கி இருக்கலாம் அதனால் லில்லிக்கு சோர்வு போன்ற நோய் இருக்கும் என்பதுதான்.ரத்தத்தை சோதித்து பார்த்தாள் பொதுவான சில சோதனைகள் செய்து பார்த்ததில்  ரத்தத்தில் அதிக அளவில் வைரஸின் தாக்கம் இருந்தது.

    அடுத்த கட்டம் அந்த வைரஸின் தன்மையை அறியும் சோதனை. சில மணி நேரத்தில் முடிந்து இருந்தது. முடிவு புனி எதிர்பார்க்காத ஒன்று. அரிதாக பூனைகளை தாக்கி உயிரிழப்புகளை ஏற்ப்படுத்தும் Feline leukemia virus (FeLV) என்ற ஒன்று தாக்கியிருந்தது. இது பூனைகளில் இருந்து எளிதாக மனிதர்களுக்கும் பரவுவதோடு. மனிதர்களுக்கு இது உயிர்கொல்லி நோய் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை படித்து இருக்கிறாள்

   உடனே லில்லியை குணப்படுத்தவேண்டும் அதுவரை அதை கவனமாக கையாள வேண்டும். அம்மாவுக்கு தெரிந்தால் இன்றே எங்காவது காட்டில் விட்டுவிட்டு வந்து விடுவார்கள். எப்படி குணபடுத்துவது என்ற குழப்பத்தில் புனி இருந்தாள்.

கண்டிப்பாக புனியை காப்பற்ற வைத்தியின் உதவி தேவை. அவரிடம் சொல்ல நினைத்து இருந்தாள். அந்த வைரஸின் தாக்கம் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது.

    இது சம்பந்தமாக அங்கு இருந்த புத்தகம் மற்றும் கணினியில் தேடினாள். குணப்படுத்தும் மருத்துவ முறை இருந்தது. Lymphocyte T-Cell Immune Modulator என்ற முறையில் ரத்தத்தில் உள்ள பாதிக்கபட்ட செல்களை நீக்கிவிட்டு செல்களை புதுப்பிக்கும் முறைகளில் ஒன்று. இது இங்கு சாத்தியமகுவது சந்தேகமே. 

      வைத்தி வாசலில் வந்து கொண்டு இருந்தார். கதவில் இருந்த பெட்டியில் அந்த கடிதம் இருக்க வரும்போது எடுத்து பிரித்தபடி வர அவரை பார்த்தவுடன் புனி எழுந்து அந்த சோகத்திலும் மெல்ல சிரித்து வைத்தாள்.

   கடிதம் எங்கு இருந்து வந்தது என்பதை பார்த்த வைத்திக்கு ஆச்சர்யம் வேகமாக பிரித்து படித்தார். அது அரசாங்கத்திடம் இருந்த வந்த ஒன்று. வைத்தி செயற்கை முறையில் சோதனை முறையில் உயிர்களை உருவாக்கி சோதனை செய்ய அனுமதி கேட்டு இருந்தார் அது சம்பந்தமான அரசிடம் இருந்து வந்த பதில் கடிதம்தான் அது.

   அரசு சோதனை செய்வதுக்கு அனுமதி அளித்து இருந்தது. இதில் வைத்திக்கு சந்தோசம்தான் என்றாலும் அதில் இருந்த ஒரு நிபந்தனை வைத்திக்கு முட்டுகல்லாக இருந்தது.

 

(தொடரும்)