இதுக்கு முந்தைய பாகம்
“நாம் oxygen வாயுவை தவிர வேற எதாவது ஒன்றை சுவாசிப்பவர்களாக இருந்தால் எப்படி இருந்து
இருப்போம்?”
“ஏன் திடிர்னு
கேட்கிரிங்க?”
“உனக்கு தெரிஞ்சு
அப்படி இருந்தால் எப்படி இருக்கும்னு சொல்லு போதும்”
“நான் படிச்சதை
மட்டும் வச்சி பார்த்தா அதுக்கு வாய்ப்பு இல்லை ஏன்னா நமது செல்கள் எல்லாமே oxygen வச்சிதான் உயிர் வாழமுடியும்.
அதுவுமில்லமா சுவாசிக்கும்போது 75% nitrogen,
இன்னும் பிற வாயுக்கள உள்ளே சென்றாலும்
நுரையீரலில் உள்ள alivoli
எனும் வாயு மாற்றம் செய்யும் அமைப்பு oxygen க்கு பதிலாக வேற வாயுவை எடுத்துக்கொண்டு
கார்பன் டை ஆக்ஸ்டை வெளியிடாது. இது தவிர நமது மூளையில் இருக்கும் சுவாசத்துக்கான
சென்சார்கள் எப்போதுமே ரத்தத்தில் உள்ள oxygen அளவை
வைத்து நமது சுவாசத்தை கட்டுபடுத்தும் அதனால அதுவும் ஒத்துழைக்காது. எல்லாத்தையும்
வச்சி பார்க்கும்போது வாய்ப்பு இல்லைன்னு தோணுது” என்று முடிக்கும்போது அவளின் சத்தம் கொஞ்சம் குறைந்து
இருந்தது. வைத்தியின் மீது இருந்த பயமே காரணம்.
“சரி நீ மேலே சொன்ன
எல்லா விசயத்தையும் சரிபண்ணிட்டா சாத்தியம்தானே?” என்றார்
“கண்டிப்பாக ஆனால்
நான் சொன்னதை மாற்றம் செய்வது எப்படி? அதுதானே நமது பிறப்பின் ரகசியம்?”
“மாற்றலாம்
எல்லாத்தையும்”என்றார் வைத்தி மெல்ல சிரித்து கொண்டே
“எனக்கு தெரிஞ்சு அது
மனித நிலையில் சாத்தியம் இல்லைன்னு தோணுது”
“அதான் கேட்டேன்
உன்னிடம் வேறு வாயுவை சுவாசித்தால் அந்த உயிரினம் எப்படி இருக்கும்னு மனிதர்கள்
மாதிரி இல்லாம?”
“கற்பனை பண்ணி
பார்க்கவும் எந்த வாயுவை சுவாசித்தால் என்று தெறிய வேண்டுமே?”
“சரி இப்ப கார்பன் டை
ஆக்ஸ்சடை சுவாசிக்குமாறு இருந்தால்?”
“ம்ம... என்ன கார்பன்
உடம்பில் அதிகமாகி சதைகளுக்கு பதில் மிக கடினமான ஒரு அமைப்பு இருக்கும். ரத்தம்
இருப்பது சந்தேகம். அதுக்கு பதில் உணவை கடத்த வேறேதாவது தனியாக இருக்கும். உருவ
அமைப்பு சொல்ல முடியலை. ஆனால் சுவாசம் நம்மை போல இருக்கணும்னு இல்ல சுவாச இடைவெளி
அதிகமாக இருக்கலாம். கிட்டதட்ட மணி நேரத்துக்கு ஒன்று அல்லது அதுக்கு மேல் அதனால்
வாழ்நாள் அதிகமாகும். வேற இனபெருக்க முறை கண்டிப்பாக மாறியிருக்கும். எனக்கு
தெரிஞ்சு இவ்வளவுதான் யோசிக்க முடியுது”
என்றாள்
“ம்ம நீ சொன்னதுல எதுவுமே
நடக்கமா வேற மாதிரியும் இருக்கலாம்” என்று சொல்லி விட்டு அவரது அறைக்குள் போனார்
வைத்தி.
புனிக்கு குழப்பமாக
இருந்தது. அவரது பதிலால் கொஞ்ச பயமும் கூட எங்கே தவறாக ஏதும் சொல்லி விட்டோமோ
என்று. உண்மையில் அவர் சொன்ன விசயத்தை கற்பனை செய்து பார்க்க கஷ்ட்டமாகத்தான் இருந்தது
அவளுக்கு. இயல்பாக நடந்து வரும் ஒன்றை அதுக்கு முரணாக வேறு விதத்தில் யோசிக்க
சொன்னதே காரணம்.
மாலைவரை வைத்தி அவரது அறையில் ஆய்வுகள் சம்பந்தமாக
எதையோ படித்து கொண்டு இருக்க புனி நேரம் போகாமல் வெளியில் கொஞ்ச நேரம் புத்தகம்
படிப்பதும் சோதனை கூடத்தில் சென்று வைத்தி முன்செய்த சில ஆய்வு முறைகளை பார்த்து
நேரத்தை போக்கினாள்.
அன்று வீடு
திரும்பும்போது பாதிவழியில்தான் அவளுக்கு நினைவுக்கு வந்தது காலையில் லில்லி
காணமல் போனது. என்னவாயிருக்கும் எனறு யோசித்தபடியே வீடு வந்து சேர்ந்தவள்.
“அம்மா லில்லி வந்துச்சா? பார்த்தியா?”
“ஆமாம் இப்ப அதான்
குறைச்சல்?”
“சொல்லுமா பார்த்தியா
இல்லியா?”
“வந்துச்சி சத்தம்
ஏதும் இல்ல கொஞ்ச நேரம் சுத்திட்டு போயிருச்சு”
“எங்கே?”
“வேற வேலை இல்ல அது
பின்னாடிபோறதுதனா என்ன?”
சோகமாக லில்லியை
வீட்டுக்கு உள்ளேயே தேட ஆரம்பித்தாள். மத்தபடி அவளது குரலை கேட்டாலே காலை சுற்றி
வரும் இப்போது வீட்டில் இருந்தால் வந்திருக்கும். எங்காவது வெளியில் போயிருக்கும்
அல்லது அம்மா அடித்து இருப்பார்கள் என்ற எண்ணம் அவளுக்கு.
பழைய துணிகள் வைத்து
இருந்த இடத்தில சுருண்டு படுத்து இருந்தது லில்லி. பார்த்தவுடன் தூக்கினாள் வேறு
எங்கோ பார்த்து மெதுவாக கத்தியது. பழைய நிலையில் அது இல்லை என்பதை பார்க்கும்போதே
அவளுக்கு தெரிந்தது. கிண்ணத்தில் பால் ஊற்றி வைத்தாலும் சுத்தமாக குடிக்க
மறுத்தது. என்ன நடந்தது என்று ஒரு பக்கம் குழப்பமாக இருந்தாலும் ஏன் இந்த லில்லி
இப்படி செய்கிறது என்ற கோபம வேறு அவளுக்கு.
லில்லியால் அன்றைய
இரவு முழுதும் சோகமாகவே கழித்தாள்.அருகில் படுக்க வைத்து இருந்தாலும் காலையில்
பார்க்கும்போது எங்கோ போய் இருந்தது. தேடிபார்க்க எண்ணி பழைய துணிகள் போடும்
இடத்தில பார்க்க இருந்தது. “லில்லி” என்று கத்தியவுடன் தலையை தூக்கி
பார்த்துவிட்டு மீண்டும் படுத்துவிட்டது. காலையிலயே அதை கொஞ்சினால் அம்மா
திட்டுவார்கள் என்பதால் வேலைக்கு கிளம்பபோனாள்.
வெளியேறும் போதுதான்
நினைவுக்கு வந்தது லில்லிக்கு என்ன ஆயிருக்கும் என்பதை அறிவதுக்கு அதன் ரத்தத்தை
ஆய்வுக்கு எடுத்து செல்லலாம் என்று எண்ணி கொஞ்சம் ரத்தம் மற்றும் tissues எடுத்துக்கொண்டு கிளம்பினாள்.
அனைத்தையும் தெரிந்து கொள்ள முடியாவிட்டாலும் ஏன் இப்படி செய்கின்றது என்றாவது
அவளால் தெரிந்து கொள்ளமுடியும்.
********
புத்தி அந்த
கரும்பலகைக்கு முன் உடகார்ந்தபடி புகைத்து கொண்டு இருந்தார்.அவரது எண்ணம் முழுவதும்
அந்த பலகையில் இருந்த விசயத்தில் இருந்தது.
புத்தி விண்ணியல்
துறையில் குறிப்பிட்டு சொல்பவர்களில் ஒருவர் என்பதோடு தனியாக பல ஆராய்ச்சிகள்
செய்து அறிவியல் துறையில் தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்து இருப்பவர். அவரது
இப்போதைய ஆராய்ச்சியான வேற்றுகிரக உயிரன வாழ்க்கை பற்றி ஏற்க்கனவே வைத்திக்கு கடிதம்
எழுதிய நிலையில் அடுத்த கட்ட நிலைமையை பற்றித்தான் அவரது யோசனை. அந்த பலகையில்
இருந்ததும் அதுதான்.
விண்ணில் எப்படி அதிக
நாள்கள் மனிதன் ஆராய்ச்சிக்காக உயிரோடு பயணிப்பது அல்லது அதிக நாள்கள் என்பதை
குறைக்க பயண வேகத்தை ஒளியின் வேகத்திலியோ
அதைவிட அதிகமாகவோ வைத்து பயணம் செய்வது
இதுதான் அவர் தேர்ந்து எடுத்த இரண்டு வழிகள்.
முதல் ஒன்று அவரை
பொருத்தவரை சாத்தியமாக தெரியவில்லை. இறப்பில்லாத மனிதன் முடியாத காரியம். பல
ஒளியாண்டுகள் தள்ளி இருக்கும் கிரகங்ககளுக்கு செல்ல கண்டிப்பாக மனிதன் சாதாரண
வாழ்நாளை விட அதிகமாக உயிர் வாழ்வது அவசியம்.
அதற்கு உண்டான
வாய்ப்புகள் என்று அவர் பார்த்தது மனிதனுக்கு சாகாமல் இருக்க எதாவது ஒன்று
கண்டுபிடித்து கொடுக்க வேண்டும் அல்லது அவனை அப்படியே உயிரோடு உறைய வைத்து தேவைபடும்போது
எழுப்பிவிட்டு தேவை பூர்த்தி ஆனதும் மீண்டும் உறைய வைக்கும்முறை. கடைசியாக உடல்
தனியாக உயிர் தனியாக அனுப்பி தேவைபடும்போது இணைத்துக்கொண்டு வேலையை
பார்க்கும்படியாக இது எல்லாமே அவருக்கு எது ஒரு கற்பனை உலகத்தில் மிதப்பது போல
தோன்றவே எல்லாவற்றையும் கைவிட்டார்.
இருந்தாலும் இது
சம்பந்தமான மற்றொரு முறை அவருக்கு சாத்தியம் எனபட்டது. அது தேறினால் கண்டிப்பாக
இரண்டாவதாக யோசித்து வைத்து இருக்கும் ஒளியின் வேக பயணம் தேவையில்லை.
தொடரும்....
10 comments:
மனித உடம்பில் இருந்து முழு ரத்தத்தையும் எடுத்துவிட்டு, உடம்பையும் ரத்ததையும் உறைநிலையில் வைத்துவிட்டு, தேவையான போது உடலை எடுத்து மீண்டும் செலுத்திடலாம் இது மார்ஸ் ட்ராவலுக்காக நாசாவால் விவாதிக்கப்பட்ட முறைகளில் ஒன்று என நினைக்கிறேன். அதுல மனிதனை ஹைபர்னேசன் செய்ய வைக்க முடியுமா என்பது ஒன்று.
ஆகிசஜன் இல்லாத சுவாசிப்பு என்றால் அது ஒரு வாயுவாகத்தான் இருக்க வேண்டும்...... ஏன்னா அது எளிதா உள்ளே செல்லனும், வெளிய வரனும். இல்லேன்னா சுவாசமும் சாப்பிடுற முறை மாதிரி ஆகிடும். திட/திரவ பொருளை எடுத்துட்டு, கழிவை வெளியேத்தனும்...... அதற்கு கேரியர் (ரத்தம்/RBC மாதிரி) என்னவாக இருக்கலாம்? கண்டிப்பா அதுவும் திரவமா இருக்கனும் (உடம்பு பூரா செல்லனுமே?)
இல்ல ஒருவேளை கார்பன், கரிப்புகை வடிவுல சுவாசிக்கபடக் கூடிய ஒண்ணா இருக்கலாம்.......
//
சரி இப்ப கார்பன் டை ஆக்ஸ்சடை சுவாசிக்குமாறு இருந்தால்?”//
கிட்டத்தட்ட செடி மாதிரி இருப்போம்ன்னு நினைக்கிறேன்!
லில்லிக்கு என்ன ஆச்சு?
அதை ஏதாவது லேப் டெஸ்ட்டுக்கு பயன் படுத்திகிட்டாங்களா?
நீங்க சொன்ன நாசா முறை ஏற்க்கனவே அசிமோ கர்ப்பனையில் சாத்யம்னு சொன்னதுதான் அதே மாதிரி ஒத்துபோவதுதான் நான் சொன்னதும் அப்படியே உடலை உறைய வைக்கிற ஒன்னு. ரெண்டாவது நம்மா ஊருல இருக்கிற கூடு விட்டு கூடு பாயுற முறை மாதிரி தேவையான போது உயிர் உடலை விட்டு வெளியில் வந்துட்டு தேவையானபோது உள்ளே போகிற மாதிரி...
அசிமோவும் ஹைபர்னேசன் முறையை சொல்லி விளக்கியிருப்பாறு.
சுவாசிப்பது வாயுவாக இருந்தாலும் உணவை கடத்த திரவம் தேவை இல்லைன்னு தோணுது நான் ஒரு முறையில் கற்பனை செஞ்சி இருக்கேன். முடிஞ்சா உங்களுக்கு தெரிந்த முறைகளை சொல்லுங்க ))
கிட்டத்தட்ட செடி மாதிரி இருப்போம்ன்னு நினைக்கிறேன்!//
இருப்போம் இல்ல இருக்கும். அப்படி இருந்தா அது வேறு இனம்தானே))
லில்லி தான் கதையில் இபோதைக்கு முக்கிய பங்கை வகிப்பது அதை யாரும் ஒன்னும் செய்ய முடியாது))
என்னமெல்லாமோ சொல்லுறீங்க ..நமக்கு தான் ஒன்னும் புரியலை
எலேய் மக்கா எனக்கு ஒன்னுமே புரியலை, பன்னிகுட்டி மாதிரி டாக்டருங்க படிக்க வேண்டிய பதிவு இது, நான் படிச்சா எனக்கு அழுகாச்சி அழுகாச்சியா வருது மக்கா புரியாம....
தமிழ்மணம் ஓட்டு போட்டுட்டேன் ஹி ஹி....
அட கஷ்டமே இது தொடர்கதைங்க முன்னாடி ஒரு பகுதி இருக்கு அதை படிச்சிட்டு படிங்க புரியும்
நன்றிங்க
Post a Comment