சிறு சிறு - 4

    

    அவளை பிடிக்காமல் போக எந்த ஒரு காரணமும் இல்லைஎன்பதால் அவ்வளவு பிடித்துபோய் இருந்தது. அதுவும் அவளது கண்கள் மற்ற பெண்களிடத்தில் இருப்பதைவிட வித்தியாசமான் வண்ணத்தில்.  அது அவளுக்கு இன்னும் அழகாய்.  எல்லாம் சேர்ந்துதான் பிடித்துப்போக காரணம் என்றால் சரியாய் இருக்கும்.

    அடுத்து நடந்தது எல்லாம் பொதுவானதுதான். அவளின் பார்வையில் கயிறு கட்டி இழுக்காத குறையாக இழுத்து என்மேல் விழவைத்து நானும் பார்த்து வழிந்து கிட்டதட்ட இது ஒரு மாதம் வரை நடந்தது.

    இந்த காலங்களில் பார்வைகள் உரசியதில் என்னுள் மாற்றங்கள் நடந்தது என்னமோ உணமைதான். கனவுகள், கவிதைகள் ஏராளமாய் ஆனால் எல்லாத்திலும் அவ்ள மட்டுமே.

    அந்த முதல் புன்னகையை என்றும் மறக்க முடியாதுதான். சிரித்தபோது சந்தேகபட்டு என்னைபார்த்துதன் சிரிக்கிறாளா? என்று நம்பாமல் எனக்கு பின்னாடி யாரும் இருக்கிறார்களா? திரும்பி பார்த்தபோது அதற்கும் சிரித்தது எல்லாமே சுகமானவை.

   எந்த ஒரு தருணத்திற்கு காத்திருந்தேனோ அது நிகழ்ந்தது. அவள்தான் முதலில் சொன்னாள். அதிகமாய் காவியமாய் பேசவில்லை சுருக்கமாக பிடித்து இருப்பதாக மட்டும் சொன்னாள். அதற்கு பிறகுதான் தெரிந்தது காதல் சொல்வது கொஞ்சம் எளிதுதான் என்று.அதுவரை நான் சொல்ல நினைத்தும் பயத்தில் சொல்லாம் லிருந்தேன் அது வேறு விசயம்.

கொஞ்ச நேரத்து மௌனத்தை நான்தான் கலைத்தேன்.

  “பிடித்து இருந்தால் முதலிளியே சொல்லியிருக்கலாமே ஏன் இவ்வளவு காலம்? என்றேன்

   “நானும் சொல்லாலாம் என்றுதான் நினைப்பேன் ஆனால் ஏதோ ஒன்று குறுக்கே வருவதுபோல இருக்கும் என்றாள்.“அப்படினா? புரியலை என்னது குறுக்கே வந்துச்சி? என்றேன் சிரித்தபடி

  “உன்னை நெருங்கும்போது மட்டும் இதயத்தில் இருக்கும் காதல் எங்கேயோ மறைந்து அங்கு வெறும் பயம்,வெக்கம் மட்டுமே மிஞ்சும் அதான்? என்றாள் வெட்கத்தோடு.

“ஒ அப்படியா என்றேன்

“சரி  சொல்லு நீ ஏன் சொல்லவில்லை இவ்வளவு காலம்?

  பதில் சொல்ல கஷ்டமான கேள்வி. என்ன சொன்னாலும் அவள் அதை ஏற்றுகொள்ளும்படி இருக்க வேண்டும்.

   “நானும் சொல்லன்னும்தான் நினைப்பேன் ஆனா நீ என்கிட்ட வரும்போது எனக்கான காதல் உன் இதயத்தில் இருக்காதா அதான் அப்படியே விட்ருவேன் என்றேன் சிரித்தபடி
இது அவளுக்கு புரிய சில வினாடிகள் ஆனது ........... மெல்ல சிரித்தாள்.


                    *************


 
“கணேஷ்?

“என்ன சொல்லு?

  “நீதான் அறிவியல் விசயங்கள், கதைகள் எல்லாம் படிச்சி இருக்கியே எனக்கு சில சந்தேகங்கள் இருக்கு கேட்கட்டுமா?

“அட உனக்கு சொல்லாமால யார் யாருக்கோ பதில் சொல்றேன் கேளு?

  “கடவுள் இருகாறனு கேட்டா இல்லைன்னு சொல்லிடுவே அதனால் அதை விட்டுறுவோம்..சரி சொல்லு இந்த பிரபஞ்சம் எப்படி முதல்ல உருவாகிச்சி?

  “அதைத்தான் இப்போதைய அறிவியல் அறிய முயலுது கொஞ்சம் காலம் ஆகும் கிட்டத்தட்ட நெருங்கி விட்டோம் என்றேன்

   “அதை ஏன் இப்படி வைத்துகொள்ள கூடாது எல்லாமே ஒருவரால் சில காரணங்களுக்காக  படைக்கப்பட்டு இவ்வளவு எல்லாம் நடந்து இருக்குன்னு?

   “அப்படியே இருந்தாலும் அதை அறிவியல் ஆதாரத்தோடு விளக்கினால் பிரச்சினை இல்லம் நம்பலாம்

“அப்ப அப்படி இருக்க வாய்ப்பு இல்லைங்கிறியா?

“அதான் சொன்னேன்ல இருந்தால் அதுக்கு ஆதாரம் வேணும்னு

“சரி உன்னோட கருத்து என்ன இதில்?"

   “எல்லாம் தற்செயலான விபத்துதான். பாரேன் இப்ப எப்படி அணுக்கள் நிறைந்த பிரபஞ்சத்தில் நாம் வாழ்கிறோமோ அதே மாதிரி அணுக்கள் இல்லாத ஒரு பிரபஞ்சமும் அல்லது ஒரு இடம் முன்னாடி இருந்து இருக்க வேண்டும். அங்கும் நம்மை போல சில உயிர்கள் வாழ்ந்து இருக்கலாம். அவர்கள் சூணியத்திளியே இருந்து விட்டதால் எதையாவது ஒன்றை உருவாக்க முயற்சி செய்து முதல் அணுவை உருவாக்கி இருப்பார்கள் தவறுதலாக அல்லது அதை எப்படி கையாள்வது என் தெரியாமல் வெளியே விட்டு இருக்கலாம் அதுவே வெடித்து சிதறி இப்ப நீ இங்க இந்த கேள்வி கேட்டுகிட்டு இருக்கே
“அடப்பாவி என்று சொல்லி ஆச்சர்யமாக பார்த்தாள்.


                     *******************


   
 அந்த ஆய்வுகூடத்தில் எல்லோருமே சந்தோசத்தின் உச்ச கட்டத்தில் இருந்தார்கள். எத்தனை வருடம் எத்தனை ஆராய்ச்சிகள் எத்தனை முயற்சிகள் அதில் தோல்விகள் இப்போது அடைத்து விட்டார்கள். உலகமே வியக்கும் ஒன்று.

   இதுவரை இந்த பிரபஞ்சத்தில் நமது பூமி மட்டுமே உயிர்களை கொண்டு இருக்கிறது என்கிற எண்ணத்தை முற்றிலும் மறக்க செய்யும் ஒன்று.ஒரு புதிய உயிர்கள் அடங்கிய கிரகத்தை கண்டு பிடித்ததோடு இல்லாமல் அதை ஆராய்ந்து அங்குள்ள உயிரினங்கள் தகவல் தொடர்பையும் மாதிரிக்கு கைப்பற்றி இருந்தார்கள். இதன் மூலம் அவர்கள் பற்றிய சில முக்கிய தகவல்களை தெரிந்துகொள்ள முடியும் அதாவது அவர்கள் இப்போது எந்த அளவு முன்னேற்றத்தில் என்ன மாதிரியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் போன்றவற்றை.

   அந்த கிரகத்தில் இருந்து பெறப்பட்ட மின்காந்த அலைகளின் தகவல்கள்  சோதனைக்கு கொடுக்கப்பட்டு இருந்தது. எல்லோரின் ஆர்வமுமு அதுதான். என்ன இருக்கும் அதை நம்மால் புரிந்து கொள்ள முடியுமா? அந்த அளவுக்கு தொழில்நுட்பம் இருக்கிறதா நம்மிடம்?

அது தீர்க்கப்பட்டது அதை அப்படியே  கொடுக்கிறேன்........

   இந்த மனித இனத்திடம் இருந்து தப்பித்துதான் புதிய கிரகம் வந்தோம் இப்போ பாருங்கள் அங்கு இருந்து நம்மை கண்டு பிடித்து விட்டார்கள். இனி எப்படியும் இங்கு என்ன இருக்கிறது என்பதை நோண்டுவார்கள். அவர்களுக்கு எப்படி இந்த அளவுக்கு தொழிநுட்ப வசதிகள் வந்தது. கண்டிப்பாக தனி விண்கலம் அமைத்து இங்கு வந்தாலும் ஆச்சர்யம் இல்லை அதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுத்தாக வேண்டும். முக்கியமாக நாம் அந்த பூமியில் இருந்துதான் இங்கு வந்தது குடியேறினோம் என்ற விசயம் மட்டும் அவர்களுக்கு தெரிந்து விட்டால் அப்போதே பாதி தோற்றோம். எனவே இந்த விசயம் நாம் கிரகத்தில் இருக்கும் எல்லா ஆராய்ச்சி கூடத்துக்கும் சேருகிற மாதிரி உயர் மின்காந்த அலைகளினால் கொஞ்சநாளைக்கு எச்சரிக்கை விடுங்கள். 
8 comments:

SURYAJEEVA said...

சத்தியமா சொல்றேன், அனுபவிச்சு படிச்சேன்...

கணேஷ் said...

ரெம்ப நன்றிங்க படிச்சதுக்கும் ..அதை சொன்னதுக்கும் ))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

மூணுமே நல்லாருக்கு, ஆனா ரொம்ப புடிச்சது பிரபஞ்சத்தின் தோற்றம் தான்.... அது மாதிரியே ஆண்டி மேட்டர் யுனிவர்சும் இருக்கலாம் இல்லியா?

HVL said...

எல்லாமே நல்லாயிருந்தது. இரண்டாவது ரொம்ப நல்லாயிருந்தது.

கணேஷ் said...

பன்னிக்குட்டி ராம்சாமி //

இருந்தாலும் இருக்கலாம்..ஏன்னா வெறும் மேட்டர்ஸ் வச்சி இருக்கும் போது அப்படி இருக்கவும் வாய்ப்பு இருக்கும் )))

கணேஷ் said...

HVL//

கருத்துக்கு நன்றிங்க))

மகேந்திரன் said...

அன்பு நண்பர் கணேஷ்
தங்களை இவ்வளவு நாள் தவற விட்டு விட்டேன்.
நண்பர் சூர்யஜீவா அவர்கள் இட்ட இணைப்பை பார்த்து இங்கே வந்தேன். உங்கள் படைப்புகள் அருமையாக இருக்கின்றன.
இன்று முதல் தொடர்கிறேன்.

கணேஷ் said...

அப்படியா )) சந்தோசம்

ரெம்ப நன்றிங்க ))