இதுவரை நமது மனித மண்டையை குழப்பியது
மட்டுமில்லாமல் செயற்கையாக ரோபோட்கள் வைத்தும் பிரபஞ்சத்தில் சோதனைகள் செய்ய
தயாரகி விட்டார்கள்.
காரணம் நான் விரிகோணம் கதையில்
சொன்னதுதான். மனிதனால் விண்ணில் இருக்கும் எதிர்பாராத அபாயங்ககளை எதிர்கொண்டு
நீண்ட நாள் உயிரோடு பயணிப்பது கஷ்டம். அந்த அபாயம் எந்த வடிவம் என்று தெரியாது
எனபது வேறு விசயம். இந்த இடத்தில மனித உயிர்களை இழப்பதுக்கு பதில் ரோபோட்களை கட்டுபாட்டுகளுடன்
செயல்படுத்துவதுதான் இவர்களின் எண்ணம்.
சொல்லபோனால் எல்லாவிதமான ஆராய்ச்சிகளுக்கும்
பயன்படுத்தும் சாத்திய கூறுக்கள் இருக்கவே செய்கிறது. சில தகவல்களை வைத்து
செயல்படும் விதத்தில் ரோபோட்டை விண்ணுக்கு அனுப்பி அங்கு சென்ற பிறகு அங்குள்ள சூழ்நிலையை
தெரிந்து கொண்டு அதுக்கு ஏற்ப நாம் இங்கு இருந்தே புதிய ப்ரோக்ரம் வடிவமைத்து அதன்மூலம் அவற்றின் பணியை செய்ய வைக்கலாம் என
நினக்கிறேன்.அவ்வளவு சுலபமும இல்லை.பார்ப்போம் என்ன செய்கிறார்கள் என்று
இது சம்பந்தமாக நிறையா யோசிக்கிறார்கள். வேற்று
கிரக மனிதர்களை கண்டறியும் நீண்ட பயணத்திற்கு கூட இதை பயன்படுத்தலாம் என்ற ஒரு
கருத்து இருக்கிறது. எத்தனை தலைமுறை ஆனாலும் பதில் கிடைக்கும் அனுப்பிய
ரோபோட்டிடம் இருந்து. இது மட்டும் சீக்கிரம் நடந்தேறினால் நமது சொந்தக்காரர்கள்
இந்த பிரபஞ்சத்தில் வேறு எங்காவது இருந்தால் கண்டுபிடித்துவிடலாம்.
*************
*************
என்னதான் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல்
எழுதுகிறேன் என்று சொன்னாலும் எழுதிய விசயங்களை யார் எப்படி புரிந்து கொண்டார்கள்
என்பதை அறியும் ஆவல் இருக்கத்தான் செய்கிறது. இதன் காரணமாகவே எழுதியதை பற்றி சிலர்
சேர்ந்து விவாதிப்பது ரெம்ப பிடிக்கும்.
காரணம் அறிவியல் விசயம் அதுவும் இல்லாமல்
நான் எழுதிய விசயங்களில் எல்லாம் முழுதும் தேர்ச்சி பெற்றவனும் இல்லை. புத்தகங்களில்
கொஞ்சம் படித்து அதை சரியாக புரியும் வரை இணையத்தில் தேடி கற்றுகொள்வது
வழக்கம். இந்த நிலையில் அதே விசயத்தை
சிலர் சேந்து விவாதிக்கும்போது அது சம்பந்தமான அறிவு இன்னும் கொஞ்சம் விரிகிறது
அவ்வளவுதான்.
ஒரு விசயத்தை பலபேர் விவாதிக்கும்போது தெரிந்ததுக்கு மேல் அது சம்பந்தமான புதிய புரிதல்கள் கிடைக்கவே செய்கின்றன.எப்படி brain storming என்ற பெயரில் யோசிப்பதாக நினைத்து ஒரு அறையில் சம்பளம் வாங்கிக்கொண்டு உட்கார்ந்து யோசிக்காமல் இருப்பதை போல இல்லாமல் நண்பர்களாக சேர்ந்து கருத்துகளை சந்தேகங்களை பகிர்ந்து கொள்ளுதல் முக்கியமானதும்கூட
**********
**********
கோபம பொத்துக்கொண்டு வருகிறது சுஜாதாவை
பற்றி யார் தவறாக சொன்னாலும். அவரது எழுத்து ஒரு பக்கம் இருந்தாலும் ஒரு அருமையான
மனிதராக மனதில் பதிந்து இருப்பதே காரணம்.
சிலருக்கு அவரை பிடிக்கதாதுக்கு என்னதான் கரணங்கள் இருந்தாலும்
நான் பார்த்தவரை பொறாமைதான்.அதுவும் தன்னுடைய எழுத்து சுஜாதாவின் எழுத்தோடு ஒப்பிடகூடியது,
அவரது எழுத்தை இலக்கிய வகையில் சேர்க்க முடியாது அல்லது வராது இந்த மாதிரி.
இன்னும் சிலர் சில அறிவியல் கதைகளை
எழுதிவிட்டு அதை வைத்து அவரை வம்புக்கு இழுக்கிறார்கள். இதில் அவ்ர்களுக்கென்று
குழு வேறு கொடுமை.
அவர்கள் முன்னிறுத்தும் கருத்துக்கள் அவரது
எழுத்துக்களை இலக்கியத்தில் சேர்க்க முடியாதாம், வணிக எழுத்தாளர் இந்த மாதிரியே.
என்னை பொறுத்தவரையில் இது பொறாமையின் உச்சகட்டம்தான்.
அவரும் இலக்கியம் எழுதியிருந்தால்
கண்டிப்பாக நாம் தமிழ் எழுத்துலகில் அறிவியல் சம்பந்தமான எழுத்தை இழந்திருப்போம்
என்றே தோன்றுகிறது. நிறைய அறிவியல் விசயங்கள் எளிமை படுத்தபட்டு கதைகளில்
கட்டுரைகளில் வாயிலாக கொடுத்தவர் சுஜாதா. கண்டிப்பாக எந்த ஒரு இலக்கியவாதியும்
செய்து இருப்பார்களா தெரியவில்லை.
சுஜாதா இருந்த காலத்திலும் சரி இப்போதும்
சரி எல்லோரையும் தனது எழுத்தால் கட்டி போட்டவர்.பொறாமை பிடித்தவர்களுக்கும் இது
தெரிந்தும் அதை மறைத்து குறை சொல்லுகிறார்கள். ஒருவேளை அவர் இல்லாத காரணமாக
இருக்கலாம் என் தோன்றுகிறது.
அவர் இருந்து அதை படிக்க நேரிட்டாலும்
அவரின் கருத்து “எனக்கு சிரிப்பு வருகிறது இவர்களை பார்க்கும்போது”
என்றேதான் இருக்கும். அவருக்கு இது ஒன்றும் பெரிய விசயம இல்லை. இவர்கள்
திருந்தினால் சரி அல்லது அந்த மாதிரி விசயங்கள் என் கண்ணில் படாமல் இருந்தாலே
போதும்.
10 comments:
//கோபம் பொத்து கொண்டு வருகிறது//
உனக்கு கோபம் வருமா ? ஆச்சரியம் !
//“எனக்கு சிரிப்பு வருகிறது இவர்களை பார்க்கும்போது”//
இது ஒ.கே !! ஆமாம் எதுக்கு சிரிப்பு வருது ?? யார் அவர்கள் ? அவர்களை நீ ஏன் பாக்குற ??
கணேஷ் ரொம்ப நாள் கழிச்சு உன் போஸ்ட் படிக்க வந்தேன்...ஆனா பாரு இந்த பதிவும் வழக்கம் போல என்னை குழப்புது !!?
:))
வாங்க வாங்க..))
நான் பார்க்கலை சுஜாதா இருந்து இந்த மாதிரி அவரை குறை சொல்றவங்களை பார்த்த அப்படித்தான் சொல்வர்னு சொன்னேன் ))
நன்றிக்கா))
//
கோபம பொத்துக்கொண்டு வருகிறது சுஜாதாவை பற்றி யார் தவறாக சொன்னாலும். //
சொல்பவர்கள் சொல்லிக்கொண்டு போகட்டுமே!
சொல்பவர்கள் சொல்லிக்கொண்டு போகட்டுமே!//
இருந்தாலும் கோபம வருகிறதே))
சரி விடுங்கள் போகட்டும்
நன்றி
//
என்னதான் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் எழுதுகிறேன் என்று சொன்னாலும் எழுதிய விசயங்களை யார் எப்படி புரிந்து கொண்டார்கள் என்பதை அறியும் ஆவல் இருக்கத்தான் செய்கிறது. //
சில நேரங்களில் சற்று (அதிகம் சயின்ஸ் ஃபிக்ஷன் படிப்பதில்லை என்பதால்) சிரமமாய் இருந்தாலும் இரண்டாவது முறை படித்ததும் புரிந்து விடுகிறது.
ஒ அப்படியா நன்றிங்க. கருத்தை சொன்னதுக்கு ))
ஏற்கனவே செவ்வாய்க்கு அனுப்பப்பட்ட மார்ஸ்ரோவர், பாத்ஃபைண்டர் எல்லாமே ரோபோக்கள் தானே? ஆனா என்ன அவை நீங்க சொல்ற மாதிரியான ரோபோக்கள் இல்ல, குறைந்த பயன்பாடு உள்ளவைதான்!
கூல் டவுன் கணேஷ்..... எதற்கு கோபம்....?
பன்னிக்குட்டி ராம்சாமி//
ம்ம் படிச்சிருக்கேன்..
ஆனா நான் சொல்ல வராது முழு கட்டுப்பாட்டையும் கொண்டு செயல்படுற மாதிரி இதுவும் சாத்தியம் ஆகும் சீக்கிரம் ))
என்ன பண்ணங்க சுஜாதாவை சொல்றாங்களே ((
உங்கள் பதிவுக்கு நன்றி.
நன்றி,
பிரியா
http://www.tamilcomedyworld.com
Post a Comment