சில அறிவியல்
விசயங்களை மையமாக வைத்து கற்பனைசெய்து சிறு திருப்பத்தோடு முடியும் சிறுகதைகளை இதுவரை எழுதிவந்தேன்.
இரண்டு தொடர்கதைகள் எழுதியிருக்கிறேன். அதே வரிசையில் ஒரு தொடர்கதை. கொஞ்சம்
வித்தியாசமாக நீளமாக எழுத எண்ணம் இருக்கிறது.
முக்கியமாக இதில்
வைத்தி,புனி,லில்லி பூனை,புத்தி, கணேஷ் என அனைவரும் ஒன்று
சேருகிறார்கள்.இதுவரை இவர்கள் நான் எழுதிய கதைகளில் தனித்தனியாக வந்த கற்பனை
கதாபாத்திரங்கள். இதில் பல அறிவியல் விசயங்களை ஒரே கோர்வையாக வைத்து கதை நகரும்.
ஏற்க்கனவே நான்
இதுவரை எழுதிய கதைகளுக்கு அவ்வளவாக கருத்துக்களோ விமர்சனங்களோ சொல்லாமல், அந்த
கதைகள் யார் எப்படி படித்தார்கள்,அதை எப்படி புரிந்து கொண்டார்கள் என்பதை பற்றிய
கவலை எனக்கில்லாமல் செய்து இருந்தார்கள். அதே
வரிசையில் எனது மற்றுமொரு கதை.
அதனால் இதையும் நீங்கள்
எப்படி புரிந்து கொள்கிறீர்கள்,எந்த விதத்தில் சேர்த்துகொள்ளபட்டது என்பதை பற்றி
எனக்கு கவலை இல்லை அதை நீங்கள் எனக்கு சொல்லாத வரை. என்னைபொறுத்தவரை வழக்கம்போல
அண்மைய அறிவியல் விசயங்களை உள்ளடக்கிய என் கற்பனை கதை அவ்வளவே.
************
************
விரிகோணம்
அன்பின் வைத்தி,
இல்லை என்பதை முழுமையாக ஒத்துக்கொண்டு
விளக்கிவிட முடிகிறது. ஆனால் இருக்கலாம் என்ற விசயத்தில் அதை “இல்லை” “இருக்கும்” என்
இரண்டு முடிவுகளில் கொண்டுவந்து விடாமல் என்னால் இருக்க முடியவில்லை.
அப்படியொரு
விசயத்தைபற்றிதான் ஒரு புதிய ஆராச்சியை தொடங்குகிறேன்.கடவுளின் அனுக்கிரகம்
இரண்டாவது பட்சமாக இருந்தாலும் உங்களை போன்றோரின் உதவி இருந்தால் இன்னும் பக்கபலம்.
இது சம்பந்தமாக பல ஆராய்ச்சிகளை என் வாழ்நாளில் செய்து அதில் இருந்து சில
அனுபவங்களையும் பெற்று இருக்கிறேன்.
அதன்படி இப்போது நான் செய்ய போவதுக்கு உங்கள்
மற்றும் குழுவின் உதவி எனக்கு கண்டிப்பாக தேவை. எனது ஆய்வு என்னதான் முழுமையாக
விண்ணியல் சம்பந்தமாக இருந்தாலும் உங்கள் மருத்துவ துறையின் சாதனைகள் பற்றி நன்கு
அறிவேன்.
நீங்களும் என்னைபோலவே
காசுக்காக வேலைபார்ப்பதை விட்டுவிட்டு வாழ்க்கை லட்சியத்துக்காக ஆய்வுகள் செய்து
பல சாதனைகளை செய்துள்ளீர்கள். அந்த ஒரு காரணத்துக்காகவே இந்த உதவியை உங்களிடம்
இருந்து எதிர்பார்க்கிறேன்.
அனேகமாக இனி என்
வாழ்நாள் அதிக பட்சம் பத்து வருடங்கள் குறைந்தது இருக்கும் அதற்குள் எதாவது ஒன்றை
வாழ்வின் அர்த்தமாய் செய்துவிட நினைக்கிறேன்.
எல்லோரும் அவர்களின்
அறிவுக்கு ஏற்ப வித்தியாசமான முறைகளில் ஆய்வுகள் மேற்கொண்டு வேற்று கிரகத்தில்
உயிர்களை பற்றி ஆராய்கிறார்கள். அவர்கள் இதுவரை முன் நிறுத்தும் ஆதாரம் எல்லாம் “இருக்கலாம்” என்பதே.எனது ஆராச்சியின் நோக்கம் இந்த இருக்கலாம்
என்பதை இல்லை அல்லது இருக்கு என்று மாற்றுவதே.
அது ஒன்றும் சுலபம்
இல்லைதான்.அறிவியல் கடவுளுக்கே தகுந்த விளக்கமான ஆதாரம் கேட்கும்நிலையில் நான் சில
நம்பும் ஆதாரங்களை முன்வைத்து என் முடிவை சொன்னால் கண்டிப்பாக நிற்க்காமல் போவது
உண்மை.
ஒரு திடமான உணமையான
முடிவு வேண்டும் இந்த விசயத்தில். இது சம்பந்தமான ஆய்வு கட்டங்களை மனதில்
செயல்படுத்தி பார்த்தபொழுது என் விண்ணியல் அறிவுக்கு அப்பாற்பட்டு உயிரியல்
துறையில் உள்ளவர்களின் அறிவும் அதிகம் தேவை.இங்குதான் உங்களின் உதவி தேவை.
இப்போது நீங்கள் எதாவது
ஆராய்ச்சிகள் செய்து கொண்டு இருந்தால் அது எப்போது முடியும், முடிந்த பிறகு
என்னோடு இணைய முடியுமா? போன்ற விசயங்களை தெரிவியுங்கள்.
அதுவரை எனது தரப்பில்
எல்லா விசயங்களையும் தயார் செய்கிறேன்.ஒரு நீளமான யோசனையின் பின்னேதான் இந்த
கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறேன்.உங்களின் உதவியை விரைவில் நாடும்
அன்புடன்,
புத்தி.
**********
காலையில் எழுந்ததில்
இருந்து லில்லி கண்ணில்படததால் தேடிபர்க்க தொடங்கியிருந்தாள். எப்போதும் அவளது
காலை ராகம் போட்டபடி கத்திக்கொண்டு சுத்திவரும் லில்லி பூனை காணமல் போனது எதையோ
இழந்தது போல இருந்தது அவளுக்கு.
“அம்மா லில்லி எங்கே?”
“தெரியாது நீ
வேலைக்கு கிளம்பலியா அதை எதுக்கு இப்ப தேடுறே?”
“இதோ கிளம்பிட்டேன்” என்றவளின் மனது லில்லி எங்கே என்றே தேடியது.
புனி மருத்துவ படிப்பை
முடித்துவிட்டு வைத்தியின் ஆய்வுகூடத்தில் வேலை பார்ப்பவள். நண்பர்களோடு வீண்
அரட்டை,ஊர் சுத்தும் இளமையான வயதுதான் என்றாலும் அதில் அவளுக்கு சுத்தமாக
விருப்பம் இருந்தது இல்லை.அதனால்தான் படிப்பு முடிந்தவுடன் அருகில் இருக்கும்
வைத்தியிடம் சேர்ந்தாள்.
முதலில் அவளின் துறுதுறு
கண்களையும், சுறுசுறுப்பையும் பார்த்த வைத்தி கண்டிப்பாக இவள் ஏதவது சேட்டைகள்
செய்வாள் என்று எண்ணி தனது ஆராச்சி விசயங்களில் புனியை கொஞ்சம் கவனமாகத்தான் பார்த்துகொண்டார்
.. ஆனால் போக போக அவளின் அறிவுகூர்மை கண்டு வைத்தியே வியந்ததுதான் உண்மை.
வைத்தியின் அய்வுகூடம்
மொத்தம் மூன்று அறைகளை கொண்டது. கொஞ்சம் நீளமான அகன்ற அறையில் ஆய்வுக்காக
தேவைப்படும் எல்லா இயந்திரங்களும்,பொருள்களும் வைக்கபட்டு இருந்தது. உள்ளே
நுழைந்ததும் தென்படும் அறையில் உட்கார்வதுக்கு சில நாற்காலிகள் பக்கவாட்டில்
புத்தக அலமாரி. அதன் இடது பக்கம் ஒரு சிறிய அறை அதுதான் வைத்தியோடையது.
மருத்துவதுறையில்
சாதனைகள் புரிந்தவர்களில் மிக முக்கியமானவர்களில் இவரும் ஒருவர். என்னதான்
உலகத்தில் மதிப்பு மரியாதை இருந்தாலும் இவரின் எண்ணங்களுக்கு ஏற்ப சில ஆராய்ச்சிகளை
சுதந்திரமாக மருத்துவமனைகளில் செய்ய முடியாததே இவரின் தனிப்பட்ட ஆய்வுகூடத்திற்கு
காரணம்.
தொடக்கத்தில் ஒரு
பணியாள் உட்பட தனியாகவே ஆய்வுகள் செய்துவந்தார்.இரண்டுவருடங்களுக்கு முன்பே புனி
வந்து கேட்க மிகுந்த கெஞ்சல்களுக்கு பிறகு
சேர்த்துகொண்டார். எப்போதுமே புனிக்கு வைத்தியின் மீது ஒரு பயம் உண்டு.அவரின் அறிவுக்கு
மரியாதை கொடுத்தாலும் மனநிலை அறிந்து அவரை கிண்டலும் செய்வாள்.வெறுமனே
சிரித்துமட்டுமே வைப்பார் வைத்தி.
ஆய்வுகூடத்தில்
நுழைந்தபோது வைத்தி அவரது அறையில் எதையோ படித்து கொண்டு இருந்தார்.சில வாரங்களாக
புனிக்கு ஏதும் வேலை கொடுப்பதில்லை.சொல்லப்போனால் பேசுவதுகூட இல்லை. அவளுக்கு
முன்னரே வந்தது இருப்பார் எப்போது போவார் என்பது அவளுக்கு தெரியாது.
புனி தனக்கு தெரிந்த
விசயங்களை சோதனைகூடத்தில் செய்து பார்த்துவந்தாள் அதுவும் நேரம் போக வேண்டுமே
என்பதுக்காக.சில நாள்களில் வைத்தி சேர்த்து வைத்திருக்கும் புத்தகங்களை படிப்பாள்.
இன்று லில்லி காணமல்
போன கவலைவேறு ஏதும் பெருசாக செய்ய தோணாமல் வந்ததும் அங்கு இருந்த புத்தகத்தை
திறந்து உட்கார்ந்தாள் படிக்கவில்லை. கொஞ்ச நேரத்தில் உள்ளே இருந்து வைத்தி
வெளியில் வந்தார்.
“புனி மனிதர்கள் வேறு
வாயுவை சுவாசித்தால் என்னாயிருக்கும்?”
“புரியலியே என்ன
சொல்ரிங்கன்னு?”
“நாம் oxygen வாயுவை தவிர வேற எதாவது ஒன்றை சுவாசிப்பவர்களாக இருந்தால் எப்படி இருந்து
இருப்போம்?”+
(தொடரும்)
4 comments:
//
“நாம் oxygen வாயுவை தவிர வேற எதாவது ஒன்றை சுவாசிப்பவர்களாக இருந்தால் எப்படி இருந்து இருப்போம்?”//
interesting.நானும் இதை யோசித்திருக்கிறேன்.
எப்படி இருப்பார்கள் என்பதை தெரிந்துக் கொள்ள ஆவலுடன் காத்திருக்கிறேன்!
interesting.நானும் இதை யோசித்திருக்கிறேன்.//
அப்படியா..எப்படி இருப்பாங்க?
நான் இனிமேல்தான் யோசிக்கணும் )))
அருமை
அருமை//
thanks ))
Post a Comment