சிறு சிறு .. - 2

    சின்னதாக கதைகள் எழுத நான் எடுத்துக்கொண்ட முயற்சிதான் இந்த சிறு சிறு. இதை விட சுவராசியமாக சுஜாதா அவர்கள் சொன்ன 55 வார்த்தைகள் அடங்கிய கதையை "என் பக்கம்" த்தில் படிக்க நேர்ந்தது. அவரும் ஒரு அருமையான கதையை எழுதியிருந்தார்.

    சின்னதாக கதை எழுதியிருந்தாலும் ஒரு குறிபிட்ட விதியை கொண்டு எழுதியிருக்கவில்லை.இது கொஞ்சம் ஆர்வமானதும் கூட. இதை பற்றி buzz ல் போட்டபோது சில கதைகள் கிடைத்தன அதையும் இங்கே கொடுத்து இருக்கிறேன்.

முதலில் ஜெயந்த் கிருஷ்ணா அவர்களின் கதை

                                                              நிலா 

     பல இரவுகள் பல நிறங்களில் என்னை கடந்து சென்றிருக்கின்றன. அதில் ஏராளமான இரவுகளில் என்னுடன் இருந்திருக்கிறாள். ஆரம்பத்தில் அதிகமாக பேசியதில்லை, பின்னர் கொஞ்சம் சகஜமாக பேச ஆரம்பித்தாள். ஆரம்பத்தில் வித விதமாய் உடையணிந்து வந்தவளை முதல் முதலாய் சேலையில் வந்த அவளை பார்த்த கணம் என்றோ என்னை மறந்து போன என் அவளின் முகம் தோன்றி மறைய முதல் முறையாய் அவளிடம் உன் பெயரென்ன என்று கேட்டேன். நிலா என்றாள். மாலையில் தோன்றி காலையில் மறைவதால் இருக்கலாம்

*******


அடுத்து அனு அவர்களின் கதை 


                                                                அவன்

           மூன்று வருடங்களாக தான் அவனைத் தெரியும் எனக்கு.. ஆனால், உயிரோடு கலந்து விட்டான்..

           சந்தோஷ உலகை காட்டியவன், இன்று தன் பிரிவால் அமிலத்தை வாரி இறைக்கிறான்..

சோகத்தை சிரிப்பால் நீக்கியவன், இன்று என் அழுகைக்கு காரணமாகிறான்..

           கோபத்தை முத்தத்தால் அழித்தவன், இன்று இதயத்தில் வெறுமையை நிரப்புகிறான்..

           அவனில்லாத நேரங்களை நினைக்கவும் முடியாமல், என்னெதிரில் வந்த பஸ்ஸை நெருங்கினேன்..

           பஸ்ஸை நிறுத்தி, “டாடா மம்மி” என்று அழுதபடியே முதல் முறையாக பள்ளி செல்லும் என் மகனை கண்ணீருடனே வழியனுப்பினேன்.


*******

என்னுடையது  ..


                                                    ஒரே ரகசியம்

     வேறுவழியில்லாமல் லில்லிபூனையை இச்சோதனைக்கு உட்படுத்த வேண்டியதிருந்தது. மூளையோடு தொடர்பை ஏற்படுத்தினேன்.

     கேள்விகளை உள்ளனுப்ப அதன் சேமித்து வைக்கபட்ட்ட தகவல்களில் இருந்து எனக்கு பதில் கிடைக்கும். இதுவரை இந்தமுறை மனிதமூளைக்குள் மட்டுமே சோதித்து பார்க்கப்ட்டிருக்கிறது. விலங்கின் மூளையை அறிய முயற்சி.

“உங்களுடைய அறிவுத்திறமை எந்த அளவு?”

“எங்களின் பிறப்பின் ரகசியம் தெரிந்து இருக்கிறோம்”

“என்ன உங்களுக்கும் அந்த பிரச்சினையா?”

     “பிரபஞ்சத்தின் ரகசியத்தையும் கண்டறிய எங்களினம் முயல்கிறது பலவிதிகளுண்டு நெருங்கிவிட்டோம்”

“பிரபஞ்சத்தை தோற்றுவித்தது யார்? உங்களுக்கு கடவுள் இருக்கிறாரா?”

"............"

(54 வார்த்தைகள் என்னுடையது கடைசி வார்த்தை உங்களது அது “ஆம்” “இல்லை“ கதை முடியும் ... (வி.சொ.பொ. முடிவை போல )


 *****

இரண்டாம் கதை  

                                                             ஒரு தேடல்...

    பிரபஞ்சத்தில் வேற்றுகிரகத்தில் உயிரினம் இருக்கிறதா என்பதை கண்டறியும் தானியங்கி விண்கலமது.

     அம்சம் என்றால் தனாகவே தனதுவழியை தீர்மானிக்கும்.விண்வெளியில் தனக்கு கிடைக்கும் தகவலின் அடிப்படையில்.

    நீரின் அமைவு ஆதாரத்தை வைத்தே ஒருகிரகத்தை நெருங்கி இறங்கி சோதனை செய்து தகவலை அனுப்பும்.

    ஏவினார்கள். பல வருடங்கள் கடந்த நிலையில் ஒருவருடமாக அதை கண்காணிக்கும் பணியை கைவிட்டிருந்தார்கள்.

    திடிரென்று வினகலத்தில் இருந்து தகவல் வந்தது எல்லோர்க்கும் ஆச்சர்யம். அது இருக்கும் தொலைவு இருப்பிடம் கண்டறியும் முயற்சிக்காக தூரத்தை பார்த்தபோது

550km என்றிருந்தது
.



11 comments:

Unknown said...

நல்ல தொகுப்பு பாஸ்!

கணேஷ் said...

ரெம்ப நன்றிங்க))

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

ஓரளவு நன்றாயிருந்தது.

HVL said...

//54 வார்த்தைகள் என்னுடையது கடைசி வார்த்தை உங்களது அது “ஆம்” “இல்லை“ கதை முடியும் ... //
இருக்கலாம்.
Nice!
Short science fictions
நன்றாய் இருந்தது

ஜெயந்த் கிருஷ்ணா said...

சும்மா எழுதினத பதிவாவே மாற்றியாச்சா.. ... Thanks dear...

குறையொன்றுமில்லை. said...

நல்லா இருக்கு.

கணேஷ் said...

ஓரளவு நன்றாயிருந்தது.//
அடுத்த முறை முயற்சிக்கிறேன்))

நன்றி

கணேஷ் said...

HVL //

நன்றி..

உங்களை பார்த்து எடுத்த முயற்சி ))

கணேஷ் said...

வெறும்பய //

நல்ல இருந்துச்சி சும்மா விட மனசு இல்ல அதான்))

கணேஷ் said...

Lakshmi said...

நல்லா இருக்கு.//

மிக்க நன்றி கருத்துக்கு))

aotspr said...

நல்ல கதை.
நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com