காதலி vs BLACK HOLES

     இது நடந்தது சில வருடங்களுக்கு முன்......அப்போது நான் அவள் பின்னால்  சுற்றிய நேரம்.....எதற்காக அவள் என்னை காதலித்தாள்,அல்லது எதற்காக நான் அவளை காதலித்தேன் என்பது இருவருக்குமே தெரியாது.......ஏதோ ஹோர்மோன்களின் உந்துதலில் இருவருமே காதலித்தோம்.....என்று சொல்லலாம்....

    அவள் நல்ல பெண் எனக்கு மிக பிடித்தவள்........அவள் என்னை எதற்காக காதலித்தாள் என்று இதுவரை சொன்னதில்லை...எப்படியோ காதலித்து நல்லவிதமாக அது திருமணத்தில் முடிந்து...அப்புறம் நடந்த ஒருகதையை இங்கு யார் நீ? எனற தலைப்பில் எழுதி இருக்கின்றேன்...முடிந்தால் படியுங்கள்...

   அது காதலிக்கும் தருணம் என்பதால் காத்து இருப்பதில் சுகம் அதிகம்......அன்றும் அப்படித்தான் அவளுக்காக காத்து இருந்தேன்...இதில் முக்கியமானது அவள் வந்த பிறகு ஏன் தாமதம் என்று கேட்ககூடாது....அப்படி கேட்டால் சண்டை...அதனால் அமைதியாக வறவேர்ப்பதே சிறந்தது என்பதால் அன்றும் அதையே செய்தேன்...

    அன்றைய தினம் நான் வரும்போது வாங்கி இருந்த st.hawking எழுதிய புத்தகமான black holes and baby universe ஐ என் கையில் வைத்து இருந்தேன்....வந்தவுடன் அதை பார்த்தவள்...நீ வீட்டுலதான் இதை கட்டிகிட்டு அழுகிரேன்ன..என்னை பார்க்க வரும்போதும் கூடவ இப்படி.....என்று புலம்ப ஆரம்பித்தாள்.....

    அப்படி இல்லை வரும்போது வழியில்தான் வாங்கி வந்தேன் என்று சொல்லி அவளை சாந்தபடுத்தினேன்...

    அடுத்து கொஞ்சநேரம் எல்லா காதலர்களை போலவே தேவை இல்லாத பேச்சுககள்தான் பேசினோம்...அவள் வீட்டு பூனை எப்படி எலிபிடித்தது......போன்றமதிரியான பேச்சுகள்தான்...

    அப்படி பேசிக்கொண்டு இருக்கும்போதே அவள் என் கையில் இருந்த புத்தகத்தை பிடுங்கி அப்படியே கொஞ்சம் புரட்டி பார்த்துவிட்டு....சரி இந்த black hole னா என்ன என்று சாதரணமாக கேட்டாள்.....

உடனே நான் black hole நமது காதலிலும் இருக்கின்றது....என்றேன்..அவள் எப்படி என்றாள்..

    உனது கண்னும் ஒரு black hole தான்..அதுதானே என்னை உன்பக்கம் ஈர்த்தது.......இப்போது அதில் விழுந்து மாட்டி கொண்டு மீள முடியாமல் தவிக்கின்றேன்....

    அதே மாதிரிதான் இந்த பிரபஞ்சத்திலும்..ஒன்று இருக்கின்றது என்றேன்......அதற்கு அவள் அதைப்பற்றி சொல் என்றாள்...

    அதெல்லாம் சொன்னால் உனக்கு புரியாது அதை விட்டுவிடு..என்றேன்....நான் இப்படி சொன்னதுதான் பெரிய தப்பாகி போனது.....உடனே அவள் நான் ஒன்றும் அவ்வளவு பெரிய முட்டாள் இல்லை நீ சொன்னால் என்னால் புரிந்து கொள்ள முடியும்.....என்னை ஒன்றும் நீ அப்படி நினைக்க வேண்டாம்...  என்று தொடர்ந்து சண்டை பிடிக்க  ஆரம்பித்தாள்...

   சரி சரி திரும்பவும் ஆரம்பித்து விடாதே உன் சண்டையை நான் இதன் சில அடிப்படையான விஷயத்தை மட்டும் சொல்லுகிறேன்....புரியாததை கேள்..என்றேன்..

   பொதுவாக மிகப்பெரிய நட்சத்திரங்கள் தனது எரிபொருள் தீர்ந்து அதில் ஏற்ப்படும்  அதிக  ஈர்ப்பு விசை மாற்றத்தால்  அது இறக்கும்போது சிலநேரங்களில் அது black hole ஆக மாறும்.

   அதற்கு அவள் அப்படின்னா எல்லா நட்சத்திரமும் அப்படி black hole ஆக மாறுமா? என்றாள்...எனக்கு கொஞ்சம் சந்தோசம் எனது தேர்வு சோடை போகவில்லை..அவளும் கொஞ்சம் அறிவுப்பூர்வமாக கேள்வி கேட்கிறாள்....

    அப்படி இல்லை நமது சூரியனின் நிறையை விட பல மடங்கு நிறை கொண்ட நட்சத்திரங்கள் இறக்கும் போதுதான் இது நடக்கும் என்றேன்..

சரி அப்படி என்ன இந்த black hole ல் விஷயம் இருக்கின்றது...என்றாள்.

   முதலில் black hole ஐ பற்றி கொஞ்சம் சொல்லிவிடுகிறேன் அதற்கு பிறகு நீயே புரிந்துகொள்வாய் என்று நான் சொல்ல ஆரம்பித்தேன்...

   black hole என்பது அதிக ஈர்ப்பு விசை ஒரே இடத்தில் செறிந்து இருக்கும்...அதனால் அதன் அருகில் இருக்கும் எல்லாத்தையும் அது உள்ளே இழுக்கும்.. அந்த ஈர்ப்பு விசையில் இருந்து ஒளி கூட தப்பிக்க முடியாது....உனக்கும் தெரியும் என்று நினைக்கிறேன்..ஐன்ஸ்டீன் தாத்தாவின் சொல்படி ஒளியை விட வேகமாக பயணிப்பது ஒன்றும் இல்லை....அப்படி இருக்குபோது black hole ல் இருந்து ஒளியே தப்பிக்க முடியாது என்றால் மற்ற எதுக்குமே தப்பிக்க வாய்ப்பு இல்லை....என்றேன்.

   அதற்கு அவள் ஏன் அப்படி.......அப்படி என்ன விஷயம் அதில் இருக்கின்றது,அவ்வளவு ஈர்ப்பு விசை அதில் இருக்குதா? என்ன என்றாள்.


    ஆமாம்... escape velocity என்று ஒன்று இருக்கு..அது எப்படின்னா..இப்ப நீ இங்கு இருந்து ஒரு கல்லை மெதுவாக எறிந்தால் அது கொஞ்ச தூரம் மேலே சென்று பின் கிழே விழும்..இன்னும் நீ கொஞ்சம் வேகமாக எறிந்தால் அது இன்னும் கொஞ்சம் அதிக தூரம் போகும்....இதற்கு காரணம் நமது பூமியின் ஈர்ப்பு விசைதான்.. அந்த கல் மேலே போவதற்கு நீ எரியும் வேகம் நமது பூமியின் ஈர்ப்பு விசையை விட அதிகமாக  அல்லது அதை எதிர்த்து செல்ல  தேவையான விசையோடு  இருக்கவேண்டும்...

    அப்படி இந்த பூமியின் ஈர்ப்பு விசையைவிட நீ அதிக திறனோடு எரிந்தல்தான் அந்த கல் ஈர்ப்பு விசைக்கு எதிராக மேலே செல்லும்.......நமது பூமியின் escape velocity  11.2 km/sec....இது முழுக்க முழுக்க ஈர்ப்பு விசை.சம்பந்தப்பட்டது..எந்த அளவுக்கு ஈர்ப்புவிசை அதிகமாக இருக்கின்றதோ அந்த அளவு இந்த escape velocity அதிகமாக இருக்கும்...

   அதாவது ஒரு பொருள் ஈர்ப்பு விசையை எதிர்த்து பயணிக்க வேண்டும் என்றால் அதான் ESCAPE VELOCITY ஆனது அங்கு இருக்கும் ஈர்ப்பு விசையைவிட அதிகமாக இருக்க வேண்டும்..


    இந்த முறையில் இந்த black hole ளின்(ஈர்ப்பு விசை) escape velocity என்று பார்த்தால் அது ஒளியின் திசைவேகத்தை விட அதிகமானது...அந்த அளவு அதிக ஈர்ப்பு விசையானது ஒரே இடத்தில் குவிந்து இருக்கின்றது....அதான் அதில் இருந்து எதுவுமே தப்பிக்க முடியாது..

   அப்படியா என்றவள் அது எங்கு இருக்கின்றது என்றாள்...இதுவும் நமது பிரபஞ்சத்தில் ஒரு அங்கம்தான்...ஆனால் ஒன்று.... இது இருப்பதை அவ்வளவு எளிதாக கண்டு பிடிக்க முடியாது...கொஞ்சம் கஷ்டமானது...சில அறிகுறிகள் வைத்துதான் இதை கண்டு பிடிப்பார்கள்....

    உனக்கு ஒன்னு தெரியுமா இதை உறுதி படுத்தி சொல்ல முக்கியகாரணம் ஐன்ஸ்டீன் தாத்தா கண்டு பிடித்த relativity theory தான்....அப்புறம்..ஐன்ஸ்டீன் தாத்தாவும் இதில் முக்கிய பங்கு வகித்து இருக்கிறார்(EINSTEIN RING)......அப்புறம் இதோ இந்த புத்தகத்தில் இருக்கின்ற st.hawking  (HAWKING RADIATION) போன்றவர்கள் இதில் பங்களித்து உள்ளார்கள்..என்றேன்....மேலும் நான் சிலவற்றை சொல்லலாம் என நினைக்கும்போது ...

  அவள் மெதுவாக தனது கடிகாரத்தை பார்த்தாள்...எனக்கு தெரியும் அவள் என்ன சொல்லுவாள் என்று...நேரமாகிவிட்டது நான் போக வேண்டும் என்றாள்...

     மேலும் அவள் எப்பையவதுதான் நாம் சந்தித்து பேசிக்கொள்கிறோம் அப்போதும் இந்த ஐன்ஸ்டீன் தாத்தா....,hawking மாமா பற்றி பேச வேண்டுமா.. என்ன?...அடுத்த முறை நான் தூரத்தில் இருந்து பார்ப்பேன் உன் கையில் எதாவது புத்தகம் இருந்தால் உன் அருகில் வரமாட்டேன் அப்படியே போய்டுவேன் என்று சொல்லிவிட்டு சென்றாள்..


10 comments:

settaikkaran said...

பக்கத்துலே காதலியை வைச்சுக்கிட்டு விஞ்ஞானமா? அவ்வ்வ்வவ்வ்வ்!

முகுந்த்; Amma said...

வித்தியாசமான கற்பனை. அறிவியல் சார்ந்த பதிவுகள் அருமையாக
இருக்கின்றன. வாழ்த்துக்கள்.

கணேஷ் said...

பக்கத்துலே காதலியை வைச்சுக்கிட்டு விஞ்ஞானமா? அவ்வ்வ்வவ்வ்வ்!\\\\


அண்ணா அது வெறும் கதைக்கு மட்டும்தான்)))))

கணேஷ் said...

முகுந்த் அம்மா said...

வித்தியாசமான கற்பனை. அறிவியல் சார்ந்த பதிவுகள் அருமையாக
இருக்கின்றன. வாழ்த்துக்கள்.\\\

உங்களின் கருத்துக்கும்,வாழ்த்துக்கும் நன்றி..

மதுரை சரவணன் said...

காதலுடன் பிளாக் ஹோல் பிரமாதம்.. வாழ்த்துக்கள்

கணேஷ் said...

மதுரை சரவணன் said...

காதலுடன் பிளாக் ஹோல் பிரமாதம்.. வாழ்த்துக்கள்\\\\

உங்களின் வாழ்த்துக்கு நன்றி..

Gayathri said...

vingyaanapoorvamaana kadhal pola

கணேஷ் said...

Gayathri said...

vingyaanapoorvamaana kadhal pola////

AAMAM SIS...)))

senthil velayuthan said...

அடுத்த பகுதி எப்போ எழுதுவீங்க.

கணேஷ் said...

senthil velayuthan said...
அடுத்த பகுதி எப்போ எழுதுவீங்க.////

அடுத்த முறை காதலியின் நினைவு வரும்போது....))))

கண்டிப்பா கொஞ்சம் விரிவா இதை பற்றி...போடுறேன்

நன்றி