இது என்ன ????

     அவனுக்கு 28 வயது இருக்கும்..இப்போது அவன் ஒரு மருத்துவ பரிசோதனை செய்யும் இடத்தில் அவனது முறைக்காக காத்து இருந்தான்...

     அவனது அம்மா ஊரில் இருக்கும் அவர்களது நிலங்களை பராமரித்து  கொண்டு இருந்தார்கள்... அம்மா பல நாள்களாக அவனை வற்புறுத்தி ஊருக்கு அழைத்துகொண்டு இருந்தார்கள்....

      சில வேலைகளுக்காக.....அதில் முக்கியமாக இவனுக்கு வயது ஆகி கொண்டே போகின்றது......பெண் பார்க்கவேண்டும்..சில மாதங்கள் கழித்து திருமணம் செய்யவேண்டும்...

     இந்த மருத்துவ பரிசோதனை இவனது முடிவுதான்....சாதாரணமாக சோதனை செய்து கொண்டால் சில குறைபாடுகள் இருந்தால் முன்னே தெரிந்து சரி படுத்தி கொள்ளலாம் என்பதுதான் இவனது எண்ணம..

    மேலும்  அப்போது நடைமுறையில் இருந்த மனிதனின் genome ஐ பரிசோதித்து எதிர்காலங்களில் என்னென்ன நோய்கள் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன எனபதை சொல்லும் genetic முறை பரிசோதனையை செய்யவும் நினைத்து இருந்தான்..

     நமது உடம்பில் ஏற்ப்படும் சில உயிர்கொல்லி நோய்கள,மற்றும் சில சாதாரண நோய்கள் ஏற்படுவதை நமது பண்பியக்கியை  (gene) வைத்து சொல்லிவிடலாம்..

      ஏனென்றால் நோய்கள ஏற்படுவதற்கு  நமது பண்பியக்கிகளில் (gene) ஏற்ப்படும் மாற்றம்தான் (mutation) காரணம்.எனவே ஒருவருடைய genome ஐ படித்தால் அவருக்கு என்னென்ன பண்பியக்கிகள் எப்போது எப்படி மாற்றம் அடையும்......அதனால் அவருக்கு என்னென்ன நோய்கள வரும் என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம்..

     கொஞ்சம் முன்னேற்றமாக அவன் எத்தனை ஆண்டுகள் சுகமாக வாழமுடியும் என்பதையும் கணித்து சொல்ல முடியும்..

     எனவேதான் அவன் இந்த பண்பியக்கி சம்பந்தமான சோதனையை செய்யலாம் என்று நினைத்து இருந்தான்....


     அவனது ஊரில் அவன் அம்மா இவனை சில மாதங்களுக்கு முன் அங்குள்ள ஜோசியரிடம் அழைத்து சென்று இருந்தார்..

     அவனுக்கு அதன் மீது நம்பிக்கை இல்லை ஜோசியர் என்னதான் சரியாக சொன்னாலும்....... தோராயமாக தண்ணியில் கண்டம்..அல்லது வாகனத்தில் கண்டம் என்று சொல்லி முடித்துவிடுவார்...

     இந்த பரிசோதனை...கொஞ்சம் செலவு அதிகம்..ஜோசியரிடம் கொடுக்கும் பணத்தோடு ஒப்பிடும்போது..,.....ஆனால் நம்பகமானது என்பது இவனது எண்ணம...

     இவனது முறை வந்தது...அங்கு இருந்த மருத்துவர்கள் அவர்களுக்கு தேவையான மரபியல்(genetic) பொருள்களை பரிசோதனைக்கு எடுத்துவிட்டு.... ஒரு குறிப்பிட்ட தேதியில் வந்துபெற்று செல்லுமாறு  அவனை அனுப்பி வைத்தார்கள்...

    அதற்காக அவன் சில நாள்கள காத்து இருக்க வேண்டியது இருந்தது..அதற்குள் அவனது அம்மாவிடம் இருந்து சில அழைப்புகள் சீக்கிரம் வரச் சொல்லி...

    இன்று அவனுடைய அந்த பரிசோதனை முடிவை பெறும் நாள்,,,......கொஞ்சம் மனதில் பயம் இருந்தது...தனது வாழ்நாளை கணித்து சொல்லுகிறார்கள்..அதை பார்க்கபோகிறோம்..எனற எண்ணம்தான் அவனது பயத்திற்கு காரணம்...

     அந்த அறிக்கையை கொண்டுவந்து கொடுத்தவள் ஒரு அழகான பெண்..முதலில் அவனது சாதாரண மருத்துவ பரிசோதனையை பற்றி சில விளக்கங்களை அவள் பேசினாள்...

      இவன் அந்த அறிக்கையில் என்ன இருக்கின்றது என்பதில் கவனம் செலுத்தாமல்..அவளது அழகையே ரசித்து கொண்டு இருந்தான்...

     இறுதியில் இவனது பண்பியக்கியின் பரிசோதனை அறிக்கையை அவள் திறந்து பார்த்து இவனிடம் அதை விளக்கினாள்..

     அதாவது இவனுக்கு சொல்லும்படியாக எந்த ஒரு பெரிய நோயும் இல்லை..எதிர்காலத்திலும் கூட.....அதுவும் அவனது 79~82 வயது வரை இவன் சுகமாக வாழமுடியும் என்பதை அவள் சொல்லி முடித்தபோது இவனுக்கு இரட்டை சந்தோசம்..தான் 80 வயது வரை வாழப்போகிறோம் என்ற ஒன்று..அதை ஒரு தேவதையின் வாயிலாக தெரிந்து கொள்கிறோம் என்று...

அடுத்த நாளே ஊருக்கு கிளம்பினான்......

    அவன் சேர்ந்த அன்றைய நாள் இரவே அவனது அம்மா சில பெண்களின் புகைப்படங்களை அவனிடம் காட்டி..பார்த்து சொல்லுமாறு கொடுத்தார்கள்..

     இவன் அதை மறுத்து..இப்போதுதான் வந்து இருக்கின்றேன் நாளை பர்ததுகொள்ளலாம் என்று சொல்லி மறுத்தான்...

     மறுநாள் காலையில்..அவனது விளைநிலங்கள் வழியாக நடந்து போய்கொண்டு இருந்தான்......

     ஒரு இடத்தில்..திடிரென்று அப்படியே நின்றான்....அவனது காலுக்கடியில் எதோ ஒன்று விசித்திரமாக மிதிபடுவது போன்ற ஒரு எண்ணம..அது என்ன என்று கிழே குனிந்து பார்க்கும்போதே......அவன் காலுக்குள் மிதிபட்டு இருந்த ஒரு கருநாகம் ஒன்று அவனது காலில் கொத்தி அதன் அதிகம் ப்ரோடீன் கலந்த விசத்தை உள்ளே ஏற்றி கொண்டு இருந்தது..

    இவன் வேகமாக காலை உதறும் முன அதன வேலையை முழுமையாக முடித்து இருந்தது....இவன் உதறியெறிந்ததில் அந்த நாகம் தூரத்தில் விழுந்து வேகமாக நகர்ந்து சென்றுவிட்டது...
 

   சில நிமிடங்களில் அவனுக்கு தலை சுற்றியது...அவனுக்கு தெரியும்...இன்னும் சில நிமிடங்களில் உயிர் பிரிந்துவிடும்..அப்படியே வரப்பில் சரிந்தான்.....

    கண்கள் சொருகின...அந்த மருத்துவ பரிசோதனை அறிக்கையும் .....அதை கொடுத்த அந்த அழகான பெண்ணும்...அவள் சொன்ன அந்த 82 வருட வாழ்க்கை...என்ற வாக்கியமும் ......... ஒருமுறை வந்துபோனது...இறுதியாக உலகம் மெல்ல மெல்ல ...அவனது கண்ணில் இருந்து மறைந்தது.
 

2 comments:

சௌந்தர் said...

இதை எப்படி சொல்றது எல்லாம் விதி என்று அதன் மீது பழி போடவேண்டியதுதான்

ganesh said...

சௌந்தர் said...

இதை எப்படி சொல்றது எல்லாம் விதி என்று அதன் மீது பழி போடவேண்டியதுதான்///

முடிவு உங்கள் விருப்பம்...எப்படி வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளுங்கள்)))