OXYTOCIN சாமியார் !!!!

        கடந்த முறை விடுமுறைக்கு சென்ற போது அந்த இடத்தில் ஒருவர் யோகா பயிற்சி சொல்லிகொடுப்பதாக கேள்விபட்டு இருந்தேன்..இந்த முறை விடுமுறைக்கு சென்று பார்த்தால் மக்கள் கூட்டம அதிகமாக இருந்தது...சிலர் வெளியில் தங்களின் முறைக்காக காத்து இருந்தார்கள்...

      என் அம்மாவிடம் சென்று கேட்டேன் "அங்கு என்னம்மா அவ்வளவு கூட்டம் என்று?...அதற்கு அவர்கள்...."ஒருவருடம் முன்னால் ஒருவர் வந்து யோகா போன்ற பயிற்சிகளை சொல்லிகொடுதார்ல..அவரு பெரிய சாமீயம்.....எல்லோரின் பிரச்சினையும் தீர்த்துவைக்கிறாராம்...
அதான் அங்கு அவ்வளவு கூட்டம்"....என்றார்கள்....

   நான் அப்படியா என்று மட்டும் சொல்லி அதை கண்டுகொள்ளவில்லை....

       மேலும் அப்படி என்னம்மா நம்ம ஊரில் உள்ளவங்களுக்கு  பிரச்சினை..... என்று கேட்டேன்...

     அதுதாண்டா எனக்கும் தெரியல....அங்கு போகிறவர்கள் பெரும்பாலும்...மாமியார் சண்டை....குடும்ப சண்டை...எதோ மனக்குழப்பம்..போன்றவற்றிக்காக அவரிடம் போகின்றார்கள்..அவர் எதோ தீர்த்தம் கொடுக்கிறாராம்...அதை குடித்தால்..குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் வருவதில்லையாம்....

     அப்புறம் நமது மனதில் உள்ளவற்றை அப்படியே சொல்கிறாராம்.....அதோடு ஏதும் பிரச்சினை என்றால் நமது கண்களை பார்த்து தியானம் செய்தே குணமாக்குகிறாராம்...அதான் எல்லோரும் அங்கு போகிறார்கள்...என்றார்கள்....

     அந்த சாமியாரை பற்றி அப்படி ஒன்றும் பெரிய விதமான எண்ணம ஒன்றும் எனக்கு அப்போது இல்லை...... அந்த ஆசிரமத்துக்கு அருகில் இருந்த ஒரு இடத்தில சில கண்ணாடி பாட்டில்கள் குவியலாக இருப்பதை பார்க்கும்வரை..

      அது சாதாரன பாட்டில்கள் என்றால் எனக்கு ஆச்சர்யம் இருந்து இருக்காது...அந்த பாட்டில்கள் சில ஹோர்மோனகளின் பாட்டில்கள்...அந்த ஹோர்மோன் பற்றி ஏற்க்கனவே நான் கொஞ்சம் படித்து இருக்கிறேன்....

     அங்கு கிடந்த பாட்டில்களில் அந்த ஹோர்மோனின் பெயர் தெளிவாக எழுதி இருந்தது..அதன் பெயர் oxytocin ..


       oxytocin ....இது உயிர்களின்  உடம்பில் மிக முக்கியமான பங்கை வகிப்பது...மனித உடலைபொறுத்தவரை இதன் பங்கு முக்கியமானதும் கூட....

       இதை பற்றி படித்தவைகள் அந்த பாட்டில்களை பார்த்தவுடன் நினைவுக்கு வந்தன.....இது ஒரு SEXUAL HORMONE.....இது அதிகமாக பெண்களுக்கு சுரக்கும்...அதிக பயன்பாடும் அவர்களுக்கே...இதன் மற்றொரு..முக்கிய பணி மண உளைச்சல் மற்றும் வெறுப்பை உண்டாக்கும் ஹோர்மோன் ஆன CORTISOL எனற ஒரு ஹோர்மோனை கட்டுபடுத்தி மனித மனத்தை சாந்தி அடைய செய்வது....மனதிற்கு ஒருவித இன்பத்தை தருவது....இது போன்ற பலவேளைகளை இது செய்கின்றது...

      இது பொதுவாக மனித உடலில் சுரப்பது உடல் உறவின் போதுதான்....ஆண் பெண் நெருக்கமாக இருக்க மூல காரணம் இந்த ஹோர்மோன் தான்...இது தவிர மற்றவர்களின் மீது அன்பு கொள்வது, பிடித்தவர்களோடு நெருக்கமாக இருப்பது போன்றவற்றிக்கு இதுவே காரணம்....

     இது உறவுகளுக்கு ஏற்றார்போல மாறும்...கணவன் மனைவி என்றால்..ஒருவிதம். தாய் சேய் என்றால் ஒருவித பாசப்பிணைப்பு...இது போல எல்லாவிதமான பாசபினைப்புக்கு இதுவே காரணம்....எனவேதான் இதை CUDDLING HORMONE என்று கூட சொல்வார்கள்....

        இந்த ஹோர்மோன் இந்த இடத்தில் எப்படி வந்தது என்பதுதான் எனக்கு புரியவில்லை..இத்தனைக்கும் அந்த இடத்தில் ஒரு மருத்துவமனை கூட இல்லை....

      அப்போதுதான் எனக்கு என் அம்மா சொன்னது நினைவுக்கு வந்தது...அந்த சாமியார் சண்டை சச்சரவு,மனக்கசப்பு போன்ற பிரச்சினைகளை ஒரு தீர்த்தத்தின் மூலம் சரி செய்கிறார் என்று....

     என்னை பொறுத்தவரை அது கண்டிப்பாக OXYTOCIN ஆகத்தான் இருக்க வேண்டும்...இதுவும் நிறமற்றது மனமற்றது....எதோடு சேர்த்து கலந்து கொடுத்தாலும் வித்தியாசம் தெரியாது.....எனவே இந்த சாமியார் எளிதாக இந்த ஹோர்மோனை உபோயோகிக்கின்றார்...என நினைத்தேன்...

     அப்படி என்றால் அவர் கண்களை பார்த்து நமது மனதில் உள்ள பிரச்சினைகளை தீர்க்கிறார் என்பது...என்னை பொறுத்தவரையில்..hypnotism என்ற ஒரு சமாச்சாரம் இருக்கின்றது...அதில் ஒரு வீரியமான முறைதான் இந்த கண்களை பார்த்து அவர்களை ஆழ்ந்த மயக்கம் செய்வது...

      hypnotism த்தில் மிக முக்கியாமான முறையில் கண்களை பார்த்து அவரை ஆழ்ந்த உறக்கத்துக்கு இழுத்து சென்று அவர் மனதில் உள்ளவற்றை தெரிந்து கொண்டு..நாம் என்ன செய்ய நினைக்கின்றோமோ அதையும் அவரது மனதில் பதிய வைக்க முடியும்....இது ஒரு சிறந்த மருத்துவமுறையும் கூட.....


      அதாவது இந்த முறையில் ஒருவர் உங்களை hypnotism செய்து உங்களின் ஆழ்மனதில்  கணேஷ் எழுதுவதை கண்டிப்பாக படி என்று பதிய வைத்தால்.....நீங்கள் நான் எழுதும் ஒரு எழுத்தை கூட தவறவிடமாட்டிர்கள்....அந்த அளவு உங்களின் ஆழ்மனதில் மாற்றம் ஏற்படுத்த இந்த வகை hypnotism த்தால் முடியும்...

       ஆகமொத்தத்தில் அந்த சாமியார் கொஞ்சம் அறிவியல் படித்தவர்....அவர் அறிவியலை கொஞ்சம் படித்ததுதான் ஒரு நாள் பிரச்சினை ஆகியது....

      அவருக்கு தெரியாமல் போனது oxytocin அதிகமாக எடுத்து கொண்டால் என்னென்ன பக்கவிளைவுகள் வரும் என்பதை அவர் மறந்து விட்டார்...அல்லது அதை பற்றிய அறிவு அவருக்கு இல்லாமல் இருந்து இருக்க வேண்டும்....

      தொடர்ந்து வந்த நாள்களில் அந்த பகுதி மக்கள் பல்வேறு பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு மருத்துவனை சென்ற போதுதான் தெரிந்தது...அவர்கள் அனைவரும் ஒரே விதமான நோயால்பாதிக்கப்பட்டு இருப்பது...அதுவும் oxytocin ஹோர்மோன் என்ற ஒன்றால் என்பதை மருத்துவர்கள் கண்டுபிடிக்காமல் இல்லை...

       அங்குதான் பிரச்சினை ஆரம்பம் ஆனது..அந்த மருத்துவர்கள் சந்தேகத்தின் பெயரில் காவல துறையிடம் சொல்ல..அவர்கள் போய் சோதனை இட....அந்த oxytocin சாமியார் மாட்டிக்கொண்டார்....

      அவர் இருந்த இடத்தை சோதனை இட்டபோது நிறைய oxytocin பாட்டில்கள் கிடைத்தன...

      அவரை கைது செய்வது அந்த பகுதி மக்களுக்கு பிடிக்கவில்லை..இன்றுவரை அவர் செய்தது கடவுள் செயல் தான் என நம்புகிறார்கள்..அவர்கள் பாதிக்கப்பட்டும் கூட...

       ஆனால் அந்த சாமியாருக்கு ஒரே குழப்பம் எப்படி எல்லோர்க்கும் தெரிந்தது என்று....அது வேறொன்றும் இல்லை......நம்மவர்களுக்கு கடவுள் என்றால்தான் போதுமே...அதுவும் கடவுளின் தீர்த்தம் என்றால்....அதான் தினமும் ஒரு முறை பருகிபார்ப்போம் என்று அவரது ஆசிரமத்துக்கு தினமும் ஒரு நடை வந்த போய் இருக்கிறார்கள்..விளைவு....சாமியார் மாட்டி கொண்டார்...


      காவல் துறை அவரை கைது செய்து அழைத்து போகும்போது அதை தடுக்க மக்கள் கூட்டம் வாசலில் நிரம்பியிருந்தது.....ஒருவழியாக அவரை அழைத்து சென்றனர்...

       அப்போது எனது அருகில் இருந்த இருவர்.......சரி காவல்துறை நமக்கு அவர் எதோ மருந்து கொடுத்தாக கைது செய்கிறார்கள்......அப்படியே அவர் செய்து வந்த இந்த ஒன்று  கடவுளின் செயல் இல்லை என்றாலும் கூட ..அவர் நமது கண்களை ஆழமாக பார்த்தே மனதில் உள்ள பிரச்சினைகள் தீர்க்கின்றரே அது கடவுள் அருள் இல்லாமல் இருக்க  முடியுமா என்ன? என்று ஒருவர் மற்றொருவரிடம் கேட்டார்....

      நான் அவர்களிடம் hypnotism பற்றி சொன்னால் அந்த இடத்தில் என்னை அடிக்காமல் விடமாட்டார்கள் என்பதால் நான் ஏதும் சொல்லாமல் அப்படியே..கூட்டத்தை விட்டு வெளியில் வந்தேன்....அந்த சாமியார் திருமப்வும் இங்கு வருவார்..என நினைத்துகொண்டே..

4 comments:

Kousalya said...

oxytocin என்பதை பற்றிதான் எனது தாம்பத்தியம் தொடரிலும் கூட சொல்லி இருப்பேன்...

//இது பொதுவாக மனித உடலில் சுரப்பது உடல் உறவின் போதுதான்....ஆண் பெண் நெருக்கமாக இருக்க மூல காரணம் இந்த ஹோர்மோன் தான்..//

தவிரவும் இந்த ஹார்மோன் பெண்களின் பிரசவ நேரத்திலும் மிக அதிகமாக சுரக்கும்.

//இந்த முறையில் ஒருவர் உங்களை hypnotism செய்து உங்களின் ஆழ்மனதில் கணேஷ் எழுதுவதை கண்டிப்பாக படி என்று பதிய வைத்தால்.....நீங்கள் நான் எழுதும் ஒரு எழுத்தை கூட தவறவிடமாட்டிர்கள்..//

ம்.. உங்கள் எழுத்தை படிக்க வைக்க இப்படி கூட செய்யலாமோ...?!!

இந்த பதிவில் சாமியாரும் ஹார்மோனும் நல்ல பொருத்தம் தான்.

:))

ganesh said...

//இந்த முறையில் ஒருவர் உங்களை hypnotism செய்து உங்களின் ஆழ்மனதில் கணேஷ் எழுதுவதை கண்டிப்பாக படி என்று பதிய வைத்தால்.....நீங்கள் நான் எழுதும் ஒரு எழுத்தை கூட தவறவிடமாட்டிர்கள்..//


ம்.. உங்கள் எழுத்தை படிக்க வைக்க இப்படி கூட செய்யலாமோ...?!!\\\

எனது அடுத்த முயற்சி அதுதான்...எல்லாம் கொஞ்சம் கவனமாக இருங்கள்)))))

ஜெயந்தி said...

பொதுவா எல்லா சாமியார்களுமே போதைப்பொருளை கலந்து கொடுப்பார்கள். இவர் கொஞ்சம் வித்தியாசமான சாமியார் போல.

என்னை உங்கள் எழுத்தை படிக்க ஹிப்னாடிஸ் பண்ணி இழுத்து வருவது உங்கள் ஊர் பெயர்தான்.

ganesh said...

என்னை உங்கள் எழுத்தை படிக்க ஹிப்னாடிஸ் பண்ணி இழுத்து வருவது உங்கள் ஊர் பெயர்தான்.////

ம்ம்...உண்மைய சொல்லி இருக்கீங்க...சரி அப்படியாவது என் எழுத்தை படிங்க..அதுவே சந்தோசம்...))))