காதலில் DOPPLER EFFECT...

    அருகில் இருந்த நண்பனிடம் முந்தைய நாள் இரவில் படித்த Doppler effect பற்றி கொஞ்சம் பேசலாம் என்று எண்ணி அவனிடம் "நேற்று Doppler effect பற்றி  கொஞ்சம் படித்தேன் ரெம்ப ஆர்வமாக இருந்தது" என்றேன்.

     அவனோ அன்று காலையில் கொஞ்சம் தாமதமாக வந்ததால் அவன் தினமும் பார்க்கும் அவன் காதலியை பார்க்க முடியாத சோகத்தில் இருந்தான். அவள் ஒன்றும் காதலி இல்லை..இருந்தும் அவனுக்கு அவ்வளவு கவலை..கடந்த ஒருவருடமாக அவளை பின் தொடர்ந்து...சில இடங்களில் காத்திருந்து அவளின் தரிசனம் பெற்று  இப்படித்தான் போய்க்கொண்டு இருக்கின்றது. ஆனால் அவளை தனது காதலி என்று சொல்லிகொள்வான்.

     அவளும் அப்படித்தான் கடந்த ஒருவருடமாக இவனை கடைக்கண் பார்வையால்  சுத்தவைத்து கொண்டு இருப்பவள்.

    அன்று இவன் கொஞ்சம் தாமதமானதால் அவளை காண முடியவில்லை....அதனால் அவன் கொஞ்சம் கோபத்தில் இருந்தான்.

அந்த நேரத்தில் தான் எனது இந்த DOPPLER EFFECT விஷயத்தை சொன்னேன்...

     அதற்கு அவன் “இன்று காலை நான் அவளை பார்க்கவில்லை அதான் எனக்கு ரெம்ப கஷ்டம இருக்குடா" என்று ஏதோ உலகமே அழியப்போவது போல வருத்தமாக சொன்னான்.....

   இந்த நேரத்தில் ..இந்த சம்பந்தமில்லாத விஷயத்தை இப்ப எதுக்கு சொல்லுறே என்றான்"..சோகமாய்.

     “யார் சொன்னது இது உனக்கு சம்பந்தம் இல்லாதது என்று....இந்த உலகத்தில் Doppler effect இல்லாமல் எந்த ஒரு காதலும் இல்லை” என்றேன்.

    அவன் சற்று ஆச்சர்யமாக “அது எப்படி..அப்படின்னா என் காதலிலும் இது இருக்கா என்ன? அப்படின்னா அந்த Doppler effect பற்றி கொஞ்சம் சொல்லேன்” என்றான்.

       . நான் அவனிடம் “அதை நான் உனக்கு சொல்வதைவிட அதை உன்னை அனுபவிக்க வைத்து அதற்கு பிறகு அதை உனக்கு புரிய வைக்கிறேன்” என்றேன்.

     அவன் ஆர்வமாக “அப்பாடின்னா எனக்கு இபோதே அதை சொல்” என்றான்.நான் அதற்கு மறுத்து “இன்று மாலை வரை கொஞ்சம் பொறுத்து  இரு அப்போது உனக்கு செயல் முறை விளக்கத்தோடு சொல்றேன்” என்று சொல்லிவிட்டேன்.

     மாலை நேரம் வந்தது..வழக்கம் போல அவன் அவளை பார்ப்பதற்கு அவன் எப்போதும்  நிற்கும் இடத்தில நின்று இருந்தேன்..

     நான் அவனருகில் சென்று நின்றேன்..அவன் என்னை பார்த்தவுடன் “இப்பவாது சொல்லேன் என்றான்”...”சரி இரு உன் காதலி இந்த வழியாக கடந்து போன பிறகு உனக்கு சொல்கிறேன்” என்றேன்.

      அவன் சற்று கோபமாய் “அவளுக்கும் நீ சொல்ல போவதற்கும் என்ன சம்பந்தம்..எங்களுக்குள் எதாவது குழப்பம் செயய்துவிடதே”...எனறான்.

      சற்று தொலைவில் அவள் வந்தாள்..அவளோடு சேர்ந்து அவளது நான்கு தோழிகளும் வந்தார்கள்...இதை அவன் பார்த்தவுடன் கொஞ்சம் பரபரப்பானான்...எங்களோடு பேசுவதை நிறுத்தி விட்டு அவளின் மீது பார்வையை செலுத்தினான்.
    
    அவள் இவனை கடக்கும் சமயத்தில் ஒரே ஒருமுறை மட்டும் தலையை நிமிர்ந்து பார்த்துவிட்டு சென்றாள்.
   
     இப்போது கேட்டான்...”சொல் அவள்தான் போய்விட்டாளே..Doppler effect க்கும் காதலுக்கும் என்ன சம்பந்தம் என்று” ..என்றான் என்னிடம்.

     “சரி சொல் அவள் இப்போது உன்னை கடந்து போனாள்..அப்போது உன் இதயம் எப்படி துடித்தது..அல்லது அந்த நேரத்தில் உன் மனது எந்த நிலையில் இருந்தது”  என்றேன்...

  “அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்”...என்றான்

“நீ முதலில் சொல் அதற்க்கு பிறகு நான் என்னவென்று சொல்கிறேன்” என்றேன்...

“அதை நான் எப்படி சொல்வது” என்றான்.

“சரி நான் கேட்க்கும் கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்லு” என்றேன்.

    “அவளை சற்று தூரத்தில் பார்த்தவுடன் உனக்குள் எப்படி இருந்தது? உன் இதயம் எப்படி சாதரணமாக துடித்தாதா? என்ன” என்றேன் அவனிடம்.

    “‘ஒ!!!! அதை கேட்கின்றாய? ஆமாம் அது என்னவோ அவளை பார்க்கும்போதே என் இதயம் கொஞ்சம் பதட்டதோடு வேகமாகத்தான் துடிக்கின்றது” என்றான்.

“சரி மீதியை நான் சொல்கிறேன்” என்று நான் அவனிடம் சொல்ல ஆரம்பித்தேன்.

    “அவள் சற்று துரத்தில் வரும்போது அவளை பார்த்தவுடன் உன் இதயம் கொஞ்சம் வேகமாக துடிக்க ஆரம்ப்பிக்கும் அப்படித்தானே”...

அதற்க்கு அவன் “ஆமாம்” என்றான்.

    “ பின் அவள் உன் அருகில் வரும்போது இன்னும் படபடப்பாக இருக்கும் இன்னும் வேகமாக துடிக்கும்....

ஆமாம் “இது எப்படி உனக்கு தெரியும்..நீதான் யாரயும் காதலிக்கவில்லையே?” என்றான்

    “இதற்க்கு கதாலிக்கவேண்டிய அவசியம் இல்லை..காதலைப்பற்றிய கொஞ்ச புரிதலே போதுமானது என்று அவனிடம் சொல்லி தொடர்ந்தேன்.

     அவள் எப்போது உன் நேரே கடந்து செல்கின்றளோ அப்போது உன் இதயத்துடிப்பு உச்சத்தில் இருக்குமே..அதுவும் அந்த கடைக்கண் பார்வை பார்க்கும்போது.......

   அப்படியே அவள் உன்னை கடந்து போன பிறகு உன் இதயம் அப்படியே மெதுவாக சாந்தியடைந்து படிப்படியாக குறையும்... அப்படித்தானே...என்றேன்..

  ஆமாம்  இதெல்லாம் சரிதான்,..நீ சொல்லுகின்ற இதுக்கும் நீ சொல்ல வரும் Doppler effect க்கும் என்ன சம்பந்தம் என்றான்     .

     சரி சொல்லுகின்றேன்... ஒலி காற்றில் எப்படி பரவும் என்று உனக்கு தெரியுமா என்றேன்.

"எப்போதோ படித்தது என்றான்"..தனக்கு தெரியாததை சொல்ல முடியாமல்..

     சரி சரி நானே சொல்லுகின்றேன் என்று அவனை சமாதானப்படுத்தி...பொதுவாக ஒலி ஆனது காற்றில் அலையாக(WAVES) பரவும். அப்படி அலையாக பரவும்போது இரண்டு அலைகளுக்கு இடையே உள்ள தூரம் WAVE LENGTH என்று சொல்வார்கள். அந்த இரண்டு ஆலைகளுக்கும் இடையே உள்ள நேர இடைவெளியை FREQUENCY என்பார்கள்.இந்த இரண்டும்த்ன் காற்றில் ஒலி பயணிக்க முக்கிய காரணிகள் என்று நான் சொல்லி முடிக்கும் போது அந்த வழியாக சென்ற இரண்டு மாணவிகளை இவன் கண்கொட்டாமல பார்த்துகொண்டு இருந்தான்.

   நீ நான் சொல்வதை கேட்கின்றையா? இல்லை வழியில் போறவர்களை பர்க்கின்றையா? என்றேன். சரி சொல்லு சொல்லு என்று என் பக்கம் திரும்பினான்.


   இந்த FREQUENCY ன்னு சொல்றங்கல்லா இது கொஞ்சம் அதிகமாக இருந்தால் அந்த நேரத்தில் WAVE LENGTH ஆனது குறைவாக இருக்கும் அதே நேரத்தில் FREQUENCY குறைவாக இருந்தால் WAVE LENGTH அதிகமாக இருக்கும் என்றேன்.

      DOPPLER EFFECT என்பது இதுதான்.....ஒலியானது நிலையான இடத்தில இருந்து வெளிப்பட்டால் அது சாதரணமாக சமமாக பரவும் அங்குள்ள காற்றின தன்மைக்கு ஏற்ப.....அதே நேரத்தில் ஒலி  வெளிப்படும் இடம் நகர்வதாக இருந்தால் அப்போது WAVE LENGTH ஆனது நகரும் பொருளின் வேகத்தால் முன்னோக்கி தள்ளப்பட்டு அங்கு ஏற்ப்படும் WAVE LENGTH ஆனது மிக நெருக்கமாக இருக்கும்.

   ஏற்க்கனவே சொல்லி இருக்கின்றேன் WAVE LENGTH குறைவாக இருந்தால் அது விரைவாக பரவும்...அதே நேரத்தில் WAVE LENGTH அதிகமாக இருந்தால் அது சென்று அடையும் திறன் குறைவாக இருக்கும்..

   இதுதான் இங்கு நடக்கின்றது..ஒலி வெளிப்படும் இடம் (CAR) முன்னோக்கி நகர்வதால்... அந்த இடத்தில WAVE LENGTH ஆனது  குறைகின்றது அதனால்  நகரும் பொருளுக்கு முன்னாடி இருப்பவர் (A) அதில் இருந்து வெளிப்படும் ஒலியை அதிகமாக அல்லது விரைவாக கேட்கமுடியும்..அதே நேரத்தில் அந்த நகரும் பொருளின் பின்னாடி இருப்பவர் (B) அங்கு இருக்கும் அதிக WAVE LEGTH காரணமாக ஒலியை குறைவாக அல்லது மெதுவாக் கேட்கமுடியும். இந்த மற்றதுக்குத்தான் DIOPPLER EFFECT என்று பெயர்.


   எல்லோரும் சொல்வது போல சொல்வது என்றால் ஒரு siren பொருத்திய வண்டி உன்னை நோக்கி வருகிறது என்றால் அது முன்னால் இருக்கும் உனக்கு நல்லா கேட்க்கும் ..அதே நேரத்தில் அந்த வண்டிக்கு பின்னால்  நான் இருந்தால் உனக்கு கேட்க்கும் அளவை விட எனக்கு குறைவாகவே கேட்கும்...

    ஏனென்றால் அந்த வண்டியின் முன் செல்லும் வேகத்தால் அங்கு wave length ஆனது சுருக்கப்படுகின்றது அதனால் முன்னால் இருக்கும் உனக்கு விரைவாக அதிமாக ஒலி கேட்கும்......அதே சமயம் பின்னால் ஏற்ப்படும் அதிக wave length காரணமாக எனக்கு குறைவாக மெதுவாக அந்த ஒலி கேட்க்கும்......இப்படி அந்த வண்டி சற்று தூரத்தில் தொடங்கி உன்னை முழுவதும் கடந்து போகும்போது ஏற்ப்படும் ஒலியின் மாற்றம்தான்..Doppler effect.

   இதை சொல்லி முடிக்கும் போது ..அதெல்லாம் சரி இதுக்கும் என் காதலுக்கும் என்ன சம்பந்தம் என்றான் வேகமாக.

   அந்த வண்டிதான் உன்னை நோக்கிவரும் உன் காதலி...அவளின் பார்வைதான் அந்த ஒலி...இப்போது சொல் அவள் உனக்கு சற்று தொலைவில் வரும்போது உனக்குள் ஏற்ப்பட்ட மாற்றம்..,உன் அருகில் வரும்போது ஏற்பட்ட மாற்றம்.. அவள் உன்னை கடந்து போனபோது உனக்குள் ஏற்ப்பட்ட மாற்றம்..போன்றவைகள்.. மேலே நான் சொன்ன DOPPLER EFFECT உடன் ஒத்துபோகின்றதா இல்லையா? என்றேன்.

   அதற்க்கு அவன் என்னை முறைத்தபடியே “ஆமாம்” என்றான்..”இதை சொல்லத்தான் இவ்வளவு அறிவியல் பேசினியா? என்றான்.

“ஆமாம்” என்றேன்.





  
(இங்கு நான் சொல்லி இருப்பது Doppler effect ஒலியில் எப்படி என்றுதான்..Doppler effect அறிவியல் உலகில் மிக முக்கியமான ஒன்று..இது பொதுவாக எல்லா துறைகளிலும் பயன் படுகின்றது..விண்ணியல் (RED SHIFT & WHITE SHIFT),மருத்துவம்,ராணுவம்..போன்ற துறைகளில்..)

3 comments:

Gayathri said...

ஹா ஹா அருமைய காதலைக்கூட அறிவியல் பூர்வமா சொல்றீங்களே..
ம்ம் நம்ம ப்ளோக்ல இந்த டாப்ளர் எப்பெக்ட் எப்படி பொருந்தும்னு யோசிக்க போறேன்

கணேஷ் said...

ம்ம் நம்ம ப்ளோக்ல இந்த டாப்ளர் எப்பெக்ட் எப்படி பொருந்தும்னு யோசிக்க போறேன்\\\\\

யோசிங்க ..யோசிங்க...

....$Vignesh said...

ஸ்கூல்ல இப்படி சொல்லிகொடுத்து இருந்தா நானும் நல்ல மதிப்பெண் வாங்கி இருப்பேன்.