அடுத்த ஐன்ஸ்டீன் ஆப்பிரிக்காவில்.

     அடுத்த ஐன்ஸ்டீன் என்றவுடன் நான் ஏற்க்கனவே எழுதிய இரண்டாவது ஐன்ஸ்டீன் என்ற க்ளோனிங் விஷயம் கலந்த ஒரு கற்பனையான விஷயம் என்று நினைத்துவிட வேண்டாம்...

    உணமையில் அடுத்த ஐன்ஸ்டீனை உருவாக்கும் முயற்சியில் இறங்கி இருக்கின்றார் ஒருவர் மற்றும் அவரது குழுவுடன்


    ஐன்ஸ்டீன் எப்போதும் அறிவியல் உலகில் அடைய முடியாத ஒரு இடம். அவரது அறிவியல் அறிவு, சிந்தனை திறன்,கற்பனைத்திறன் இதுதான் அவருக்கு பலம். அவரை போலவே அத்தனை அறிவுகொண்ட மற்றொருவரை படைப்பது என்பது கொஞ்சம் கஷ்டம..இருந்தாலும் ஐன்ஸ்டீன் மீது அன்பு மற்றும் பற்று கொண்டவர்கள் எப்படியாவது அவரைப்போல கொஞ்சம் முயற்சி செய்வார்கள்..செய்து கொண்டு இருக்கின்றார்கள்..
  

   அப்படி ஒருவர்தான் ஆப்பிரிக்காவில் ஐன்ஸ்டீனை உருவாக்கும் எண்ணத்தை கொண்டு அதை செயலிலும் செய்து காட்டி வெற்றி பெற்று  கொண்டு இருக்கின்றார்.


  அவரது பெயர் NEIL TUROK. ஆப்ரிக்கா நாட்டை சேர்ந்த இவர் 1958 ஆம் ஆண்டு JOHANNESBURG ல் பிறந்தவர்.இவர் சாதாரன விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்தான்.  சிறு வயதில் கொஞ்சம் கஷ்டப்பட்டு படித்து இன்று உலக புகழ் பெற்றவர். இவரை பற்றி நான் சொல்வதை விட அவரே TED பரிசளிப்பு விழாவில் அருமையாக அழகாக சொல்லுகிறார் இந்த இணைப்பை பாருங்கள்.



   இவரது அறிவியல் கண்டுபிடிப்புகள் இன்றைய காலகட்டத்தில் ஒரு புதுமையான ஒன்று..அதுதான் STRING THEORY. இவர் இதன் மூலம் சொல்லும் விசயங்கள் மிக புதுமையானவை...இதோடு M THEORY ம் இவரது பங்களிப்புக்கு ஒரு உதாரணம். இதைப்பற்றி ஏற்க்கனவே PARALLEL UNIVERSE BEFORE BIG BANG என்ற ஒன்றில் நிறைய எழுதி விட்டேன்.

   இவர் ஐன்ஸ்டீன் க்கு அடுத்தபடியாக கருதப்படும் St.HAWKING அவர்களோடு சேர்ந்து சில முக்கிய அறிவியல் பணிகளையும் செய்து இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

   சரி இவர் அடுத்த ஐன்ஸ்டீனை உருவாக்க அப்படி என்ன செய்தார் என்றால்..அவர் கையில் எடுத்தது அறிவியல் கல்வி.

   இவர் இதுக்காக ஆப்ரிக்காவில் 2003 ஆம் ஆண்டு AFRICA INSTITUTE FOR MATHEMATICAL SCIENCE  என்ற கல்வி நிறுவனத்தை MUIZENBERG ல் நிறுவியவர்.

   தொடக்கத்தில் ஆப்பிரிக்காவில் தேர்ந்து எடுக்கபட்ட சிலர் இதில் பயிற்றுவிக்கப்ட்டு இப்போது உலக புகழ் பெற்றுக்கொண்டிருக்கின்றது.

   இவரது இந்த விடமுயற்சியினால் அடுத்த ஐன்ஸ்டீன் ஆப்பிரிக்காவில் உருவாவர் என்பதைவிட இந்த கல்வி நிறுவனத்தின் மூலம் கண்டிப்பாக ஐன்ஸ்டீன் போன்ற அறிவியல் திறமைசாலிகள் ஆப்பிரிக்காவில் உருவக்கபடுவார்கள் என்பதில் கொஞ்சம் கூட சந்தேகம் இல்லை..

    ஐன்ஸ்டீன் மீது கொண்ட ஒரு பற்று எந்த மாத்ரியான மாற்றங்களை கொண்டுவரும் என்பதற்கு இவர் ஒரு உதாரணம்.

  சரி இதுபோல நானும் ஐன்ஸ்டீன் மீது கொண்ட பற்றினால் என்னால் முடிந்த  சிலவற்றை செய்து கொண்டு இருக்கின்றேன்..

   அரைகுறை அறிவியல் அறிவை வைத்துக்கொண்டு...எனது வலைப்பதிவை யார் படித்தாலும் சரி படிக்காவிட்டாலும் சரி..பின்னுட்டம் இட்டாலும் இடாவிட்டலும் ஐன்ஸ்டீன் புராணம் பாடிக்கொண்டே இருக்கின்றேன்..

   என் நண்பர்களிடம் ஐன்ஸ்டீன் பெருமைகளை சொல்லி அவர்களை என் அருகில் நெருங்கவிடாமல் செய்வேன்..(நான் ஏதாவது ஐன்ஸ்டீன் பற்றி பேச ஆரம்பித்தாலே தலை தெறிக்க ஓடுவார்கள்)

   ஐன்ஸ்டீனின் சில புகைப்படத்தை அலுவலகத்தில் இருந்து இலவசமாக பிரதி எடுத்து வந்து என் அறையில் ஒட்டி இருக்கின்றேன்.

    ஐன்ஸ்டீன் பற்றி எந்த புது ஒருவிசயமாக இருந்தாலும் அதை எப்படியாவது என் மண்டைக்குள் ஏற்றிவிடுவேன்.

    இதையெல்லாம் விட என் நண்பர்களின் அதிக கோபத்துக்கு நான் ஆளானது எனது ORKUT PROFILE பெயரை கிழே உள்ளவாறு மாற்றி அமைத்து கொண்டதுதான்

gaNESha moorThI  = EINSTEIN + gahamoor.


(இதற்க்கு அர்த்தம் EINSTEIN என்ற பெயர் என் பெயருக்குள் இருப்பதுதான்.பெயர் மட்டும்தான்...மற்ற எதுவும் இல்லை..)

3 comments:

Jey said...

எளிமையான விளக்கம் தமிழில்!!!!. வாழ்த்துக்கள்.

கணேஷ் said...

எளிமையான விளக்கம் தமிழில்!!!!. வாழ்த்துக்கள்.\\\\

உங்களின் கருத்துக்கு நன்றி..

செல்வா said...

//அரைகுறை அறிவியல் அறிவை வைத்துக்கொண்டு...எனது வலைப்பதிவை யார் படித்தாலும் சரி படிக்காவிட்டாலும் சரி..பின்னுட்டம் இட்டாலும் இடாவிட்டலும் ஐன்ஸ்டீன் புராணம் பாடிக்கொண்டே இருக்கின்றேன்..//

நீங்க ஒண்ணும் கவலைப்பாடதீங்க .. எனக்கு இன்னிக்குத்தான் நேரம் கிடைச்சது .. எனக்கும் அறிவியல்னா ரொம்ப ரொம்ப பிடிக்கும் . ஆனா உங்க அளவு புத்தக அறிவு கிடையாது .. அதே மாதிரி ஐன்ஸ்டீன் பத்தி அதிகமாவும் தெரியாது ..ஆனா இன்னிக்குப் படிச்சதிலிருந்து நானும் முடிஞ்ச அளவுக்கு ஐன்ஸ்டீன் பத்தி தெரிஞ்சிக்கலாம்னு இருக்கேன்.. அதே மாதிரி எனக்குத் தெரிஞ்ச அறிவியல் விசயங்களை வச்சு அடிக்கடி அறிவியல் சிறுகதை எழுதுறேன் .. இதுக்கு முன்னாடி ஒரு அறிவியல் கதை எழுதினேன் .. அப்புறம் அறிவியல் கதை எழுதல .. உங்களுக்கு நேரம் இருந்தா பாருங்க .. அதுமட்டும் இல்லாம ஒரு கதை பாதி எழுதி அப்படியே இருக்கு .. உங்க ப்ளாக் படிச்சதில அறிவியல் கதை எழுதணும்னு ஒரு ஆசை .. அதனால அடிக்கடி அறிவியல் கதை எழுதப் போறேன் ..

இந்த லிங்க் ல இருக்கிறது முழுக்க முழுக்க அறிவியல் கிடையாது ..ஆனா அறிவியல் கலந்திருக்கும் ..நேரம் இருந்தா படிச்சிட்டு சொல்லுங்களேன் .. இல்லனா மெயில் பண்ணுங்க ..

http://koomaali.blogspot.com/2010/10/blog-post.html