மரபுரிமை எப்படி???

மரபுரிமை..ஏன்? எப்படி?

     மரபுரிமை என்று நான் இங்கு சொல்லவருவது..நமது உடம்பில் இருக்கும் செல்களுக்கிடையே நடக்கும் அல்லது இருக்கும் மரபுரிமை பற்றி...

      சரி அது என்ன மரபுரிமை..(INHERITANCE) ..நமது உடம்பில் அன்றாடம் கோடான கோடி செல்கள் பகுபட்டு கொண்டே இருக்கின்றன...அப்படி பிரிந்து பகுபடும்போது ஒரு செல்லில் இருந்து பிரிந்த மற்றொரு குழந்தை செல்லானது..அது எந்த தாய் செல்லில் இருந்து வந்ததோ அதே குணநலன்களை பெற்றிருக்கும்..அப்படியே மாறாமல்....அது எத்தனை முறை பிரிந்தாலும் சரி..

    அப்படி நடக்கும் செல் பாகுபாடுகளில் எதாவது பிரச்சினை என்றால் வரக்கூடிய நோய்கள மிக கொடூரமானவைகள்..புற்றுநோய்,..அல்லது DOWN SYNDROME போன்றவைகள் இதில் அடங்கும்...

    சரி இந்த தாய் செல்லில் இருந்து சேய் செல்லுக்கு எப்படி அப்படியே தகவல்கள் செல் பிரிதலின் போது கடத்தபடுகின்றன எனபதை பற்றி பல ஆண்டுகளாக நமது சிறந்த மனித மூளை தேடிக்கொண்டு இருந்தது....

     அதற்கு விடை சில நாட்களுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது..அதற்கு காரணமாக கண்டுபிடிக்க பட்டது..CENP-A (CENTROME PROTEIN –A) என்ற MOLECULE தான்.

     இதுதான் செல்களின் பாகுபாட்டின் போது ஒரு செல்லில் இருக்கும் தகவல்களை அப்படியே சேய் செல்லுக்கு கடத்தி செல்கின்றது...

     இந்த MOLECULE தான் மரபு செய்திகளை கடத்த வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டு வந்தது.......இப்போது அதை நிரூபித்து உள்ளார்கள் Pennsylvania's School of Medicine சேர்ந்தவர்கள...

    அவர்கள் சொல்லுவது CENP-A என்ற இந்த ஒன்று இல்லாமல் செல் பாகுபாட்டின் போது தாய் செல்லில் இருந்து சேய் செல்லுக்கு தகவல் கடத்துவது என்பது இயலாத காரியம்..என்பதை நிரூபித்துள்ளார்கள்...இதுதான் செல் பகுபட்டின்போது தாய் செல்லில் இருந்து தகவல்களை பதிவு செய்து சேய் செல்லுக்கு கடத்த காரணமாக இருக்கின்றது என்பது இவர்களின் கண்டு பிடிப்பு...

இன்னும் விளக்கமாக சொல்வதென்றால்..

நூலை போல சேலை ...தாயை போல பிள்ளை என்பார்கள்....

இதை கொஞ்சம் அறிவியல் பூர்வமாக எப்படி என்று பார்ப்போம்..

    ஆண் மற்றும் பெண்ணிடம் இருந்து வரும் இனப்பெருக்க செல்களில் வெறும் ஒரு ஜோடி குரோமோசோம் களே இருக்கும்....இது இரண்டும் கருப்பையில் முழுமையாக இணைந்தால் அது ZYGOTE..இந்த ZYGOTE நிலையில் இனபெருக்க செல்களில் உள்ள குரோமொசோம்கள்...சரியாக இணைந்து..தங்களது வேலையை சரியாக செய்ய ஆரம்பித்தால..அது EMBRYO வாக மாறும்...அந்த EMBRYO சரியான முறையில் முழு வளர்ச்சி அடைந்தால்..நாம்.   .(மேலே உள்ளதை திரும்ப படிக்க முயற்சிக்காதிர்கள்)))))

      சரி இதில் அந்த CENP-A MOLECULE ன் வேலை எங்கு இருக்கின்றது என்று கேட்டால்..ZYGOTE எனப்படும் ஒரு செல் பகுப்படைந்து பல செல்களாக மாறும்போது...தாய் மற்றும் தந்தை இனப்பெருக்க செல்களில் உள்ள  மரபு பண்புகளை ((ZYGOTE ல் இணைந்த குரோமோசோம்களுக்கு ஏற்றார்போல)) தொடர்ச்சியாக கடத்துவதுதான் இதன் வேலை..

     சொல்ல போனால் இதன் வேலை ZYGOTE ல் இருந்தே தொடங்கி விடுகின்றது..அப்போது தொடங்கும் இதன் செயல் அந்த மனிதன் உயிர்வாழும் வரை அவன் உடலில் நடக்கும் அத்தனை செல் பாகுபாடுகளின் போதும் இது செவ்வனே தனது வேலையை செய்கின்றது...சொல்வதென்றால் தாய் செல்லுக்கும் சேய் செல்லுக்கும் ஒரு உறவு பாலமாய் அமைவது இதுதான்...


    இதை கண்டு பிடித்ததில் இப்போதைய அறிவில் உலகில் பெரும்பயன்பாடு உண்டு..அதுவும் SYNTHETIC GENOME துறையில் எனபது கூடுதல் தகவல்..

 

4 comments:

LK said...

இதை போன்ற துறை சார்ந்தப் பதிவுகள் தமிழ் பதிவுலகில் மிகக் குறைவு. தொடர்ந்து எழுத்துகள் வாழ்த்துக்கள் கணேஷ். இதை மற்ற இடங்களில் பகிர உங்கள் அனுமதி வேண்டும்

ganesh said...

LK said...

இதை போன்ற துறை சார்ந்தப் பதிவுகள் தமிழ் பதிவுலகில் மிகக் குறைவு. தொடர்ந்து எழுத்துகள் வாழ்த்துக்கள் கணேஷ். இதை மற்ற இடங்களில் பகிர உங்கள் அனுமதி...////

வாழ்த்துக்கு நன்றி...

தாராளமாக பகிருங்கள்..எல்லோர்க்கும் இந்த மாதிரியான விசயங்கள் தெரிய வேண்டும் என்பதே என் விருப்பம்...

நன்றி

Gayathri said...

ரொம்ப நல்லா இருக்கு ப்ரோ..இண்டேறேச்டிங்..தொடருங்கள்..

ganesh said...

Gayathri said...

ரொம்ப நல்லா இருக்கு ப்ரோ..இண்டேறேச்டிங்..தொடருங்கள்////

ரெம்ப நன்றி அக்கா...