ஒரு பரிசு... (tamil cryptography)

     இந்த மாதத்தில் பிறந்தநாள் வருவதால் அந்த தபால் மூலம் வந்த சிறு பெட்டி போன்ற பொருள் எனக்கு ஆச்சர்யமாக இருந்தது...

     அதை  அனுப்பியது ஒரு பெண் என்று அதில் இருந்த அனுப்புனர் முகவரியில் இருந்து தெரிந்து கொண்டேன்.முகவரி என்றால் வெறும் பெயர் மட்டும்தான் இருந்தது.

    அந்த பெட்டியை திறந்தேன்..முதலில் தெரிந்தது ஒரு சிறிய மரத்தாலான சதுர பெட்டி ஒரு சிறிய பூட்டுடன். அதை சுற்றி பார்த்துவிட்டு அந்த பூட்டுக்கு உரிய சாவி எங்கே என நான் நினைக்கும் போதே அந்த பெட்டி இருந்த இடத்தில் ஒரு சிறிய சாவி கொத்து இருந்தது.

     அந்த சாவிகொத்தோடு இணைந்தே ஒரு காகிதத்துண்டும் இருந்தது...அந்த சாவி கொத்தில் மொத்தம் நான்கு சிறிய சாவிகள் இருந்தன...அந்த சாவிகளில் சிறிய வடிவில் தெ,ரெ,ழா,ழௌ இந்த எழுத்துக்கள் இருந்தன.. அந்த துண்டு காகிதத்தில் சில வரிகள் எழுதப்பட்டு இருந்தன.

      இதில் உள்ள சாவிகளில் ஒரு சாவியை ஒரு முறை. மட்டுமே உபோயோகித்து அந்த பெட்டியை திறக்க முடியும்.. அது எந்த சாவி என்று அதில் உள்ள எழுத்துக்கள் வழிகாட்டும்..சரியான எழுத்துக்கு அந்த பெட்டியின் பின் பக்கம் பார்க்கவும் ... என்று எழுதப்பட்டிருந்தது

உடனே அந்த பெட்டியின் பின்பக்கம் பார்த்தேன். அதிலும் சில எழுத்துக்கள்.

தமிழ் 246  -  பெர்முடா முக்கோணத்தின் மையம்.

இதுதான் அந்த சிறு பெட்டிக்கு பின்னால் இருந்தது.

     இது எனக்கு ஒரு புது அனுபவம்.என் பிறந்த நாளைக்கு எந்த ஒரு பரிசும் வந்தது இல்லை....வந்த முதல் பரிசும் இப்படி..குழப்பமாய்... அதுவும் ஒரு பெண்ணிடம் இருந்து....இதில் வேறு அதில் இருந்த பெண்ணின் கையெழுத்து மிக அழகாக இருந்தது.....அதனால் அதை எப்படி திறப்பது என்பதில் மூழ்கினேன்.

   முதலில் அந்த நான்கு எழுத்துக்களில் எந்த எழுத்து சரியானது  என்பதை கண்டுபிடிக்க வேண்டும். ஆனால் அதற்கு கொடுக்க பட்ட வரிகளோ ஒன்றும் புரியாத வகையில்....

     முதலில் நான் பார்த்தது தமிழ் 246.  எனக்கு தெரிந்து தமிழில் மொத்தம் 247 எழுத்துக்கள்.ஆனால் இங்கு தமிழ் 246 என்று கொடுத்து இருக்கின்றது..ஒருவேளை இதில் விடுபட்ட அந்த ஒரு எழுத்தாக இருக்கலாமோ என நினைத்தேன்...

      அப்படியே இருந்தாலும் மொத்தம் 247 எழுத்தில் அந்த ஒரு எழுத்தை எப்படி கண்டு பிடிப்பது...அதற்கு அடுத்துவரும் வார்த்தையோ BERMUDA முக்கோணத்தின் மையம்.இதில் இருந்து எந்த முறையில் அந்த ஒரு எழுத்துக்கு உண்டான விடை கிடைக்கபோகின்றது என்பதை பார்க்க வேண்டும்.

    BERMUDA முக்கோணத்தை பற்றி கொஞ்சம் படித்து இருக்கின்றேன்...இது அட்லாண்டிக் பெருங்கடலில் MIAMI,BERMUDA மற்றும் PUERTORICA போன்ற பகுதிகளுக்கு...இடையே உள்ள கடல் பகுதியில் அமைந்த ஒரு மர்மம நிறைந்த கடல் பகுதி...

     இதன் மத்தியில் என்றால் மர்மம நிறைந்த கடல்தான் இருக்கின்றது...இதில் இருந்து எப்படி அந்த ஒரு எழுத்து வரும்....கொஞ்சம் குழப்பம்.

     முதலில் இந்த தமிழ் 246 க்கு என்ன அர்த்தம் என்று கண்டுபிடிக்கவேண்டும்...அதற்கு முதலில் தமிழில் உள்ள 247 எழுத்துக்களையும் மொத்தமாக எழுதவேண்டும்.

    நான் அதற்கு முயற்சி செய்யும் போதுதான்..இந்த மாதிரியான ஒரு தமிழ் எழுத்துக்கள் அடங்கிய அட்டவணையை பார்த்தேன்...

    இதில் உள்ள எழுத்துக்களை எண்ணி பார்த்தால் மொத்தம் 246. கொஞ்சம் சந்தோசம்..ஆனால் அது நீடிக்கவில்லை...அந்த விடுபட்ட எழுத்து  ..இந்த எழுத்து அந்த சாவிகளில் இல்லை...சரி இந்த எழுத்துக்கும் அந்த PERMUDA முக்கோணத்திற்கும் சம்பந்தப்படுத்தி பார்த்தால் அதுவும் பொருந்தவில்லை....

      அடுத்த முயற்சியாக அந்த நான்கு எழுத்துக்களை அந்த அட்டவணையில் தேடி அதன் இருப்பிடத்தை குறித்து கொண்டேன்......அதில் ஒன்றும் விளக்கம் இருப்பதாக தெரியவில்லை...இதில் கொஞ்சம் நேரம் செலவழித்து விட்டதால்..அடுத்ததாக இருக்கும் BERMUDA முக்கோணத்திற்கு போகலாம் என்று நினைத்து அதைப்பற்றி யோசித்தேன்...

      வெறும் மர்மம நிறைந்த கடலில் இருந்து எழுத்துக்கள் வர கண்டிப்பாக வாய்ப்பு இல்லை...அடுத்து அந்த முக்கோண வடிவம்...என்னை கொஞ்சம் யோசிக்க வைத்தது....

     அதே நேரத்தில் அந்த அட்டவணையில் நான் புள்ளி வைத்த எழுத்துக்களை பார்த்தால்..அதன் அமைப்பு முக்கோணம் வடிவத்தில் அமைந்து இருந்தது....

     பரபரப்பாகி ...அந்த புள்ளிகளை இணத்து ஒவ்வொரு எழுத்துக்கும் இடையே முக்கோண வடிவம் அமையுமாறு கோடுகளை இணைத்தேன்....அப்படி இணைத்ததில் இருந்த நான்கு எழுத்துக்களில் மூன்று எழுத்துக்கள் தீர்ந்து விட்டன..மீதி இருப்பது ஒரு எழுத்துதான்...ஆச்சர்யம் அந்த எழுத்து நான் வரைந்த முக்கோணாத்திறக்கு நடுவில் இருந்தது...

    அந்த ரெ என்னும் எழுத்து இருந்த சாவியை எடுத்து திறக்கபோவதற்க்கு முன்...அந்த வாசகம் நினைவுக்கு வந்தது..ஒரு சாவியை ஒருமுறைமட்டுமே பயன்படுத்த வேண்டும்.

    மீண்டும் ஒரு முறை வந்து சோதித்து பார்த்தேன்..எல்லாம சரி...அப்படி என்றால் அந்த பெர்முடாஸ் என்ற வார்த்தை எதுக்கு என்று யோசிக்க தவறவில்லை..

    சங்கேத எழுத்து அல்லது பாசை என்றால் உரித்து தரும் வாழைப்பழம் இல்லை என்று எங்கோ படித்த நினைவு...இந்த வார்த்தைகள் எல்லாம் இதை படிப்பவரை குழப்புவதறக்கே...

    சரி தையரியமாக சாவியை வைத்து திறக்க முயற்சித்தேன்....ஆச்சர்யம்  அது சரியான சாவி..

     ஆர்வம அதிகமானது ..இவ்வளவு கஷ்டபட்டு திறந்த அந்த பெட்டிக்குள்..அதுவும் ஒரு அழகான கையெழுத்து உள்ள பெண்ணிடம் இருந்து பரிசாக வந்த அந்த பெட்டிக்குள்..அப்படி என்ன  இருக்கின்றது எனற ஆர்வம அதிகமாக..உள்ளே அவசரமாக பார்த்தேன்....

மீண்டும் என்னை குழப்பும் சில ஆங்கில வார்த்தைகள்...HRDYAIBT SSIWHE...

    இது என்ன என்று கொஞ்சம் யோசித்ததில்..விடை கிடைத்தது..ஏற்க்கனவே இதுபற்றி எனக்கு தெரியும் என்பதால் எளிமையாக தீர்த்துவிட்டேன்.



   மேலே இருக்கும் வார்த்தைகள் அமைக்கபட்டிருப்பது எளிமையான ANAGRAM  முறையில்...
அந்த பெட்டிக்குள் இருந்த வார்த்தை...

BIRTHDAY WISHES !!!

17 comments:

பத்மநாபன் said...

புதிராக வந்த வாழ்த்தை கண்டுபிடித்த விதம் அருமையாக விளக்கியுள்ளீர்கள்.

BIRTHDAY WISHES.

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

இந்த மாதிரி சுவாரஸ்யம் மகிழ்வானது

கணேஷ் said...

புதிராக வந்த வாழ்த்தை கண்டுபிடித்த விதம் அருமையாக விளக்கியுள்ளீர்கள்.

BIRTHDAY WISHES.

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

இந்த மாதிரி சுவாரஸ்யம் மகிழ்வானது\\\


பரிசு..அது கதைக்கு மட்டும்தான்...அப்படி ஒரு பரிசும் வரவில்லை...

உங்களின் பிறந்த நாள் வாழ்த்துக்கு நன்றிகள்.

இளங்குமரன் said...

அருமை கணேசு மிகவும் அருமை. ஒரு மர்ம நாவலைப் படிப்பது போன்ற உணர்வைத் தந்தது. அதற்குக் காரணம் பெர்மூடா... அழகான பெண் போன்றவை.... அதுசரி... யாருங்க அந்த பெண்?

கணேஷ் said...

அருமை கணேசு மிகவும் அருமை. ஒரு மர்ம நாவலைப் படிப்பது போன்ற உணர்வைத் தந்தது. அதற்குக் காரணம் பெர்மூடா... அழகான பெண் போன்றவை.... அதுசரி... யாருங்க அந்த பெண்?////

அந்த பெண் கற்பனைக்கு மட்டும்தான்...உணமையில் இல்லை...

அந்த பெண் அந்த கதையில் இல்லை என்றால் அதை முழுமையாக படிக்க நல்லா இருக்காது....)))))

உணகுளின் கருத்துக்கு நன்றி..

ஜெயந்தி said...

புதிரும் விடையும் சுவாரசியமாக இருந்தது. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

கணேஷ் said...

புதிரும் விடையும் சுவாரசியமாக இருந்தது. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!\\\\

உங்ககளின் வாழ்த்துக்கு நன்றி..

Gayathri said...

பிறந்த நாள் நல வாழ்த்துக்கள்

கணேஷ் said...

பிறந்த நாள் நல வாழ்த்துக்கள்\\\\


வாழ்த்துக்கு நன்றிங்க...இன்னும் 20 நாட்கள் இருக்கின்றன...அதுக்குள் இந்த மாதிரி நிறைய பதிவு போடுவதாக எண்ணம....

Anonymous said...

பாம்பின் கால் பாம்பறியும்... என்ன நண்பா...birth day wishes செய்ய வந்துட்டு பாம்பை பற்றி பேசுகிறேன் என்று தவறாக நினைக்காதே.. comments-லும் எனக்கு திரில் வேணும்...
go ahead my friend

கணேஷ் said...

பாம்பின் கால் பாம்பறியும்... என்ன நண்பா...birth day wishes செய்ய வந்துட்டு பாம்பை பற்றி பேசுகிறேன் என்று தவறாக நினைக்காதே.. comments-லும் எனக்கு திரில் வேணும்...
go ahead my friend\\\\\\

உங்களின் வாழ்த்துக்கு நன்றி...சரி காலுள்ள பாம்பு எங்க இருக்கு..சிங்கையில் இருக்கா என்ன?)))))))

Anonymous said...

:)), நண்பரே... உங்கள் எழுத்தின் ஆழம் பிடித்திருக்கிறது என்று சொல்ல வந்தேன்..தவறாக ஏதாவது சொல்லி இருந்தால் மன்னிக்கவும். :)) வாழ்த்துக்கள்...:))

கணேஷ் said...

:)), நண்பரே... உங்கள் எழுத்தின் ஆழம் பிடித்திருக்கிறது என்று சொல்ல வந்தேன்..தவறாக ஏதாவது சொல்லி இருந்தால் மன்னிக்கவும். :)) வாழ்த்துக்கள்...:))///

நண்பரே இதில் தவறாக நினைக்க என்ன இருக்கின்றது...

நான் சும்மாதான் அதை கேட்டேன்...

நீங்கள் ))))) இந்த குறியை பார்க்கவில்லையா?)))

இப்போதும் என் எழுத்து எவ்வளவு ஆழம் என்று என்னால் கேட்க முடியும்...அப்படி கேட்டால் என்னை நீங்கள் தவறாக நினைப்பிர்கள் என்பதால் நான் கேட்கவில்லை)))))))))))


நன்றி

நண்பர்கள் உலகம் said...

மிக அருமையான படைப்பு!
இதைப்போன்ற படைப்புகள் தொடரட்டும்.

நண்பர்கள் உலகம் said...

நண்பருக்கு,
திருமூலரின் மந்திரக்கட்டத்தை இது போலக் கட்டவிழ்க்க முடியுமா?

கணேஷ் said...

மிக அருமையான படைப்பு!
இதைப்போன்ற படைப்புகள் தொடரட்டும்.நண்பருக்கு,
திருமூலரின் மந்திரக்கட்டத்தை இது போலக் கட்டவிழ்க்க முடியுமா?\\\\

கருத்துக்கு நன்றி...

மந்திரக்கட்டத்தை குடுத்தால் என்னால் முடிந்த அளவு முயற்சி செய்து பார்ப்பேன்..கொடுங்களேன்...

நன்றி

pinkyrose said...

பிறந்த நாள் எப்போன்னு சொல்லுங்க அன்னிக்கு wish பண்றேன்...

அறிவியல் கதை, சுஜாதா,ஐன்ஸ்டீன்
சோ நீங்க நம்பாளு...

so, vil meet at ISRO r NASA..,
:)

கணேஷ் said...

பிறந்த நாள் எப்போன்னு சொல்லுங்க அன்னிக்கு wish பண்றேன்...

அறிவியல் கதை, சுஜாதா,ஐன்ஸ்டீன்
சோ நீங்க நம்பாளு...

so, vil meet at ISRO r NASA..,
:)////

அப்படியா ரெம்ப சந்தோசம்...பிறந்த நாள்..25,sep.


சரி இந்த ISRO ,.. NASA..,
அப்படின்னா என்னங்க??))))