"god does not play dice with the UNIVERSE"

     தலைப்பை படித்ததும் கணேஷ்  ஏதோ நாத்திகம் பேசுகிறான் என்று எண்ணாமல்.....நான் இங்கே எழுதியதை கொஞ்சம் படியுங்கள்..

    முதலில் இந்த god does  not play dice with the universe  வார்த்தை எப்படி யாரிடம் இருந்து வந்தது என்பதை பார்ப்போம்.இந்த வரிக்கு சொந்தக்காரர் ஐன்ஸ்டீன் அவர்கள். இந்த வரி Bohr &  Heisenberg ன் quantum theory & uncertainty principle  ஐ விமர்சித்து ஐன்ஸ்டீன் அவர்கள் சொன்ன வார்த்தை... quantum theory ல் இருந்த சில குறைபாடுகள் மற்றும் தனது விருப்பமின்மையை தெரிவிக்க ஐன்ஸ்டீன் அவர்கள் உபோயோகபடுத்திய வார்த்தை இது.

    சரி இந்த வரிக்கும் நான் இங்கு எழுதப்போவதற்கும் என்ன சமபந்தம் என்றால்..நிறைய இருக்கின்றது.....ஐன்ஸ்டீன் என்ன அர்த்தத்தில் சொன்னரோ அதே அர்த்தத்தை இப்போது உள்ள ஒரு மாபெரும் அறிவியல் உலக மனிதரும் சொல்லி இறுக்கின்றார்.அதே வார்த்தையை அல்ல அதே அர்த்தம் கொண்ட விஷயத்தை.

    இதை சொன்னவர் ST.hawking அவர்கள். அவர் மற்றும் Leonard Mlodinow இருவரும் சேர்ந்து எழுதி இருக்கும் புதிய புத்தகமான THE GRAND DESIGN ல் இவ்வாறு சொல்லி இருக்கின்றார்.

    அந்த புத்தகத்தில் அவர் சொல்லி இருப்பது ..இந்த பிரபஞ்சம் உருவானதில் கடவுளுக்கு எந்த ஒரு பங்கும் இல்லை......அது BIG BANG ல் இருந்து உருவாகியது...இந்த BIG BANG யை கடவுள்தான் தொடக்கி வைத்து பிரபஞ்சத்தை உருவாக்கினர் என்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது...அதற்கு காரணம் ஈர்ப்பு விசையை போன்ற சில காரணிகள் இருக்கலாம்....இதுதான் அவரின் கருத்து....

   மேலும் இதை QUANTUM MECHANICS இல இருந்து வந்த M THEORY ன் படி எடுத்துகொல்ள்ளலாம்,அதன் மூலம் விளக்க முற்படலாம்......MULTIVERSE..MEMBRANES போன்றவைகள் ...இதில் இருந்து BIG BANG  தொடங்கி இருக்கலாம்...என்பதையும் சொல்லி இருக்கின்றார்.

   (இதை பற்றி நான் ஏற்க்கனவே PARALLEL UNIVERSE BEFORE BIG BANG என்ற.ஒரு கட்டுரை எழுதி இருக்கின்றேன்.......மிகவும் சந்தோசம் அதே விசயத்தை இப்போது ST.hawking சொன்னது)

   முந்தைய நாட்களின் ST.hawking புத்தகங்களை நான் படித்து இருக்கின்றேன்..BLACK HOLES BABY UNIVERSE, BRIEF HISTORY OF TIME போன்ற புத்தகங்களில் கூட இவர் கடவுளை பற்றி நிறைய கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.


    அதில் எனக்கு பிடித்தது “நாம் இந்த பிரபஞ்சம் உருவான விதியை கண்டு பிடித்து விட்டால் அந்த விதியை வைத்து நாம் கடவுளையும் அறிந்து கொள்ள முடியும். அது கண்டிப்பாக இயற்பியல் விதிகளால் மட்டுமே முடியும்” எனபது இவரின் கருத்து.

    இந்த விசயத்தை பார்க்கும்போது அவருக்கு கொஞ்சம் கடவுள் நம்பிக்கை இருந்து இந்த வரியை எழுதி இருப்பதாக கருதலாம்.உண்மையில் அவருடைய முந்தைய புத்தகங்கள் அனைத்திலும் கடவுள் இருப்பதாக சொல்லி இருப்பார்..ஆனால் அதை அறிய இயற்பியல் விதிகளால் மட்டுமே முடியும் என்பதையும் வலியுறுத்தி இருப்பார்.

    அவர் இந்த புத்தகத்தில் கடவுள் இல்லை என்று  சொன்னதற்கு காரணம் கடவுள் இந்த பூமியை மனிதர்களுக்காக சிறப்பாக படைத்து இருகிறார் என்று நாம் நம்பினால்......இந்த பிரபஞ்சத்தில் நமது சூரிய மண்டலத்தை தவிர நிறைய EXTRA SOLAR PLANETS கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.... எனவே இது நடந்து இருக்க வாய்ப்பில்லை...இந்த பிரபஞ்சம் ஈர்ப்பு விசை போன்ற சில காரணிகளால் தற்செயலாக உருவாக்கப்பட்டிருக்கலாம் என்பதே அவர் சொல்லுவது...

    இதற்க்கு சிலர் வரவேற்ப்பு அளித்து இருந்தாலும் இதை சிலர் கடுமையாக விமர்சித்தும் உள்ளனர். என்னை பொறுத்தவரையில் இது ஒரு நல்ல வர்வேறப்பே...

   இத்தனை கால அறிவியல் அறிவு கொண்ட ஒரு மூத்த மனிதர் சில விசயங்களை சொன்னால் அதை ஏற்றுகொள்ள்வேண்டும்.என்பது என் கருத்து.

      உடனே நீங்கள் ...கடவுள் நம்பிக்கை கொண்ட சில பெரியவர்களும்தான் சொல்கிறார்கள் கடவுள் இருக்கிறார் என்று..அதை ஏன் நம்பகூடது என்று கேட்டால்.........ST.hawking அவர்களால் இதற்க்கு முன் அறிவியலில் விளக்கப்பட்ட விஷங்கள் அனைத்துமே அனைவராலும் ஆராய்ந்து  ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று...அவர் சொன்ன black hole பற்றிய மற்றும் சில விசயங்களில் இவரது பங்களிப்பு உலகம் அறிந்ததே....

    ஆனால் மதம் சம்பந்தப்பட்டவர்கள் (நூல்கள்) அப்படி இல்லை கடவுளை பற்றி எந்த ஒரு அதரமும் இல்லாமல் அதை முழுமையாக நம்புங்கள்...என்கிறார்கள்....அவர்களால் இதுதான் கடவுள் இப்படித்தான் அவரது செயல்பாடுகள் என்று ஆராய்ந்து சொல்ல முடியாது..எல்லாம் ஒரு நம்பிக்கை....உடனே நீங்கள் கடவுள் என்பவரை அப்படி ஒன்றும் வரையருக்க இயலாது..அவரை உணர்வுப்பூர்வமாக உணர வேண்டும் என்று சொல்விர்கள்...எனவே இந்த விவாதத்தை தொடர்ந்தால் அது போய்க்கொண்டே இருக்கும்.

    உணர்வுபூர்வமாக கடவுளை பார்க்கவேண்டும் என்றால் அந்த உணர்வு ஒன்றும் வெளியில் இருந்து வரவில்லை ..நமது மனித மூளைக்குள் இருந்துதான் வருகின்றது....அதற்க்கு காரணம் சில ஹார்மோன்கள் ..இந்த சில ஹோர்மோன்களுக்கு காரணம் சில GENE கள்....அந்த (GOD GENE) GENE கள் NUCLEI  இருந்து...அந்த முதல் NUCLEI ....என்று..இப்படியே போய் பார்த்தால் இவை எல்லாம் ஒரு நட்சத்திர அழிவில் கொண்டு போய் முடியும். அந்த நட்சத்திரம் இந்த பிரபஞ்சத்தில் இருந்து வந்தது.

    இதில் கடவுள் எங்கு இருக்கிறார்? இதை எல்லாம் படைத்ததே கடவுள்தான் என்று நீங்கள் நினைத்தால் அதைத்தான் ST.hawking மறுக்கிறார். இந்த பிரபஞ்சம் உருவாக கடவுளின் அருள் தேவை இல்லை என்று........ வேறொன்றும் இல்லை.


    இதை படித்தவுடன்... ST.hawking சொன்ன பிரபஞ்சம் உருவாக காரணமாய் இருக்கும் அந்த ஈர்ப்பு விசைதான் கடவுள் என்றால்......உங்களுக்கு பதில் என்னிடம் இல்லை.

   அதே நேரத்தில் ஆதி காலம் தொட்டே மனிதனின் தன் அறிவுக்கு எட்டாத அல்லது தெரியாத ஒன்றையே தனக்கு மேலே உள்ள சக்தியாக அல்லது கடவுளாக நினைத்து கொண்டு இருக்கிறான்....அந்த வகையில் இப்போது இந்த ஈர்ப்பு விசையும் சேர்ந்து கொள்ளும் அவ்வளவே....

12 comments:

Gayathri said...

எல்லாம் ரைட்டு தான் ஆனா இந்த ஈர்ப்பு விசை எங்கிருந்து உருவாகிறது?? அதை உருவாக்கும் சக்திதான் கடவுள் என்று நன் நம்புகிறேன்...

கணேஷ் said...

எல்லாம் ரைட்டு தான் ஆனா இந்த ஈர்ப்பு விசை எங்கிருந்து உருவாகிறது?? அதை உருவாக்கும் சக்திதான் கடவுள் என்று நன் நம்புகிறேன்...\\\\\

கண்டிப்பாக நீங்கள் சொல்வது அல்லது நம்புவது கூட ஒருவகையில் சரியாக இருக்கலாம்......நம்புங்கள். நல்லதுதான்.

மெளனம் said...

ஐன்ஸ்டீன் சொன்னதும் ஹாகின்ஸ் எதிர்மறையான கருத்துக்களாக உள்ளதே.
ஐன்ஸ்டீன் குவாண்டம் விதியை மீறிய ஒரு மறைபொருள் உள்ளதாக கொண்டு கூறியது அவரின் சொல்லாடல்.
ஹாகின்ஸ் கூறுவது குவாண்டம் விதியினை அடிப்படையாக கொண்டு ஈர்ப்புவிசையினை தவிர்த்து எல்லாம் இயற்பியல் விதியினை அடிப்படியாக உருவானதால் இதில் கடவுளுக்கு என்ன வேலை என்கிறார்.

கணேஷ் said...

ஐன்ஸ்டீன் சொன்னதும் ஹாகின்ஸ் எதிர்மறையான கருத்துக்களாக உள்ளதே.
ஐன்ஸ்டீன் குவாண்டம் விதியை மீறிய ஒரு மறைபொருள் உள்ளதாக கொண்டு கூறியது அவரின் சொல்லாடல்.
ஹாகின்ஸ் கூறுவது குவாண்டம் விதியினை அடிப்படையாக கொண்டு ஈர்ப்புவிசையினை தவிர்த்து எல்லாம் இயற்பியல் விதியினை அடிப்படியாக உருவானதால் இதில் கடவுளுக்கு என்ன வேலை என்கிறார்./////

எனக்கு தெரிந்து குவாண்டம் விதியில் ஒரு அனுதுகள்களின் வேகத்தை துள்ளியமாக கணக்கிட முடியாது...இது போன்ற சில காரணங்களுக்குத்தான் ஐன்ஸ்டீன் bohr உடன் விவாதம் செய்தார்..இறுதியாக EPR என்ற ஒரு paper ஐன்ஸ்டீன் மற்றும் சிலரால் வெளியிடப்பட்டது..இது குவாண்டம் விதிக்கு கொஞ்சம் எதிர்ப்பு..மற்றும் அதில் உள்ள சில குறைகளை எடுத்து அளிக்கும் விதமாக வெளியிடப்பட்டது...

மற்றபடி ஐன்ஸ்டீன் குவாண்டம் விதியில் ஒரு பங்கும் வகித்து இருந்தார்...

அப்படி ஐன்ஸ்டீன் குவாண்டம் விதியை மீறிய மறை பொருள் என்று எதை சொல்லி இருப்பார் என்று உன்ங்களுக்கு ஏதாவது..idea இருந்தால் எனக்கு தயவு செய்து சொல்லலாம்..நானும் தெரிந்து கொள்வேன்...ஆர்வமே...

நன்றி

மகேஷ்.வெ said...

//A knowledge of the existence of something we cannot penetrate, of the manifestations of the profoundest reason and the most radiant beauty - it is this knowledge and this emotion that constitute the truly religious attitude; in this sense, and in this alone, I am a deeply religious man. (Albert Einstein)//


//I do not believe in a personal God and I have never denied this but have expressed it clearly. If something is in me which can be called religious then it is the unbounded admiration for the structure of the world so far as our science can reveal it. (Albert Einstein, 1954)//

Ref# http://www.spaceandmotion.com/albert-einstein-god-religion-theology.htm

ஐன்ஸ்டீன் ஒரு Pantheist ...... இதை நமோட வேதாந்த தத்துவதோடஒரு வகைல சேர்க்கலாம் .

bogan said...

ஐன்ஸ்டீன் சொன்னதின் அர்த்தம் கடவுள் [என்று ஒருவர் இருந்தால்]ஒரு methodology இல்லாமல் பிரபஞ்சத்தைப் படைக்க துணியமாட்டார் என்பதே.கடவுளின் விருப்பம் என்பது தர்க்கத்திற்கு அப்பாற்பட்டதாய் இருக்கவேண்டிய அவசியமில்லை.

Thekkikattan|தெகா said...

|||எல்லாம் ரைட்டு தான் ஆனா இந்த ஈர்ப்பு விசை எங்கிருந்து உருவாகிறது?? அதை உருவாக்கும் சக்திதான் கடவுள் என்று நன் நம்புகிறேன்...\\\\\

கண்டிப்பாக நீங்கள் சொல்வது அல்லது நம்புவது கூட ஒருவகையில் சரியாக இருக்கலாம்......நம்புங்கள். நல்லதுதான்||||

கணேஷ், அவருதான் க்ளியர கடவுள் தேவையில்ல இந்த ப்ரபஞ்சத்தை சிருஷ்டிக்கன்னு ஊத்தி மூடிட்டார்ல. அதில இந்த ஈர்ப்பு விசை எங்கிருந்து உருவாகியது கண்டிப்பிடிக்க முடியாம அதுதிலதான் கடவுள் கரைந்து இருக்கிறார்னு, ஒரு ’இக்’ வைச்சு முடிச்ச மாதிரி இங்க நீங்க ஆரம்பிச்சு வைச்சிருக்கீங்க.

முன்னாடி இந்த ப்ரபஞ்சம் உருவான நொடியில இருந்து விரவிக் கிடக்கிற டார்க் மேட்டர்தான் (god particle) இதனை உந்தி தள்ளுவதாக கூறினார்கள். ஈர்ப்பு விசை என்பது பொருட்களின் பருமனைக் கொண்டு உருவாதில்லையா?

’’ஈர்ப்பு விசை எங்கிருந்து உருவாகிறது’’ = எந்த ஈர்ப்பு விசை எங்கிருந்து உருவாகிறதுன்னு தெரியலங்கிறத கொஞ்சம் விளக்குங்களேன்...

கணேஷ் said...

bogan said...
ஐன்ஸ்டீன் சொன்னதின் அர்த்தம் கடவுள் [என்று ஒருவர் இருந்தால்]ஒரு methodology இல்லாமல் பிரபஞ்சத்தைப் படைக்க துணியமாட்டார் என்பதே.கடவுளின் விருப்பம் என்பது தர்க்கத்திற்கு அப்பாற்பட்டதாய் இருக்கவேண்டிய அவசியமில்லை.////

நீங்கள் இங்கு சொன்ன கருத்தை நான் எங்கும் மறுக்கவில்லை என நினைக்கிறேன்...

அவர் சொன்ன methodology..நாம் காண முடியவில்லை என்பதற்காக அனுத்துகல்களின் வேகத்தை (electron ororbits) சரியாக சொல்ல முடியாது என்பதில்லை...அது வரையறுக்க தக்கது..என்பதே..

இதில் எதாவது கருத்து இருந்தால் சொல்லுங்கள் தெரிந்து கொள்கிறேன்

நன்றி

கணேஷ் said...

|||எல்லாம் ரைட்டு தான் ஆனா இந்த ஈர்ப்பு விசை எங்கிருந்து உருவாகிறது?? அதை உருவாக்கும் சக்திதான் கடவுள் என்று நன் நம்புகிறேன்...\\\\\

கண்டிப்பாக நீங்கள் சொல்வது அல்லது நம்புவது கூட ஒருவகையில் சரியாக இருக்கலாம்......நம்புங்கள். நல்லதுதான்||||/////

முதலில் நான் மேலே சொன்னதை எதற்கு சொன்னேன் என்பதை சொல்லிவிடுகிறேன்...
எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்பதற்காக அது மற்றவர்களுக்கும் இருக்க கூடாது..என்பது என் எண்ணம இல்லை....

அது அவரது தனிப்பட்ட நம்பிக்கை...அதனால்தான் நம்புங்கள் என்று சொன்னேன்....

நீங்கள் சொல்வது போல பருமனை கொண்டு ஈர்ப்பு விசை உருவாவதாக இருந்தாலும்..எனக்கு தெரிந்தவற்றை சொல்லுகிறேன்..

ஐன்ஸ்டீன் தாத்தா சொன்னபடி பார்த்தால்...ஈர்ப்பு விசையானது space curvature ஆல் உருவாகின்றது..அவரது relativity theory ன் படி..

அடுத்து newton சொன்னது ஈர்ப்பு விசை என்பது ஒரு தனியான விசை..என்பது..

இபோதைக்கு என் கருத்து ஈர்ப்பு விசை அனுதுகல்களின் வேலையாக... இருக்கலாம்..

கணேஷ் said...

Arulmozhi Varmar said...
//A knowledge of the existence of something we cannot penetrate, of the manifestations of the profoundest reason and the most radiant beauty - it is this knowledge and this emotion that constitute the truly religious attitude; in this sense, and in this alone, I am a deeply religious man. (Albert Einstein)//


//I do not believe in a personal God and I have never denied this but have expressed it clearly. If something is in me which can be called religious then it is the unbounded admiration for the structure of the world so far as our science can reveal it. (Albert Einstein, 1954)//

Ref# http://www.spaceandmotion.com/albert-einstein-god-religion-theology.htm

ஐன்ஸ்டீன் ஒரு Pantheist ...... இதை நமோட வேதாந்த தத்துவதோடஒரு வகைல சேர்க்கலாம் .///

உங்களின் கருத்துக்கு நன்றி..

அஞ்சா சிங்கம் said...

physics would have much easier if the apple tree had fallen on newton's head......

கணேஷ் said...

மண்டையன் said...

physics would have much easier if the apple tree had fallen on newton's head......///

உங்களுக்கு அவரின் மீது என்ன கோபமோ தெரியவில்லை)))