நல்ல வேலை மற்றும் காசு கிடைக்கும் என்பதற்காக GENETIC ENGINEERING படித்து, இப்போது தனியார் ஆய்வுகூடத்தில் நல்ல சம்பளத்தில் வேலை செய்கிறேன்... என் அப்பாவிடம் அதிக பணம் இருந்ததால் என் வீட்டிற்கு சற்று தொலைவில் எங்களுக்கு இருந்த ஒரு இடத்தில் என் ஆசைக்கு இணங்க ஒரு சிறு ஆய்வுக்கூடம் அமைத்தேன்...
முதலில் சிறு சிறு உபகரணங்களுடன் ஆரம்பித்தேன்..பின்னாளில் நான் சம்பாதித்து எனக்கு இப்போதைய தேவைகளுக்கு ஏற்றவாறு மாற்றியமைத்துள்ளேன்...
திருமணம் முடிந்து சில மாதங்கள் தான் ஆகின்றது......மனைவி...... நான் ஏற்க்கனவே காதலித்த பெண்..கடைக்கண் பார்வையால் சுத்தவிட்டவள்,......கவிதை எழுத வைத்தவள்.
எனது அலுவலக வேலை நேரம் போக மற்ற பெரும்பாலான நேரம் எனது ஆய்வுக்கூடத்திலேயே கழிப்பேன்....சில ஆராய்சிகளில் ஈடுபட்டிருந்தேன் ...அலுவலகத்தில் கிடைக்காத சில சுதந்திரம் எனது சொந்த அய்வுக்கூடத்தில் கிடைத்தது..அலுவலகத்தில் எது செய்தாலும் சட்டப்பிரச்சினை...
இது என் காதல் மனைவிக்கு பிடிக்காது....தினமும் அதிகம் நேரம் வெளியில் செலவிடுவது...அவளுடன் நேரம் செலவிடதாது..அவளுக்கு கொஞ்சம் கோபத்தை ஏற்ப்படுத்தியிருந்தது...... சில நேரங்களில் சண்டை பிடிப்பாள்..சில நேரங்களில் அன்பாக சொல்லி பார்ப்பாள்....ஆனாலும் நான் திருந்துவதாக இல்லை...
அப்படி நான் என்ன ஆராய்ச்சி செய்து கொண்டு இருந்தேன் என்றால்....செயற்கையான முறையில் GENE களை வடிமைத்து கொண்டு இருந்தேன்...
நமது உடம்பில் நடக்கும் எல்லா வேலைகளும் GENE களின் கட்டளைகளின் பேரில்தான் நடக்கும்.ஒவ்வொரு GENE ம் நமது உடம்பில் ஒவ்வொரு வேலைகளுக்கான பங்கை ஆற்றுகின்றன..அந்த GENE களில் உள்ள இயற்கையான பண்புகளின்படி அதன் வேலைகள் இருக்கும்....
அதாவது காதலியை பார்த்தவுடன் மனதுக்குள் பட்டாம் பூச்சிகள் பறப்பது,அதே காதலி ஏமாற்றி விட்டு போனபிறகு நொந்து நூலாவது இது எல்லாம் கூட GENE களின் வேலையே...
இப்போது நான் செய்வது அந்த இயற்கையான பண்புடைய GENE களை செயற்கையான(SYNTHETIC GENOME) முறையில் மாற்றியமைத்து அது செய்யும் வேலையில் மாற்றம் கொண்டுவருவது....அதாவது GENE களின் பண்புகளை மாற்றியமைத்தால் அதில் இருந்து வெளிப்படும் ப்ரோடின்கள்,ஹோர்மோன்கள் எல்லாம் தானாகவே மாற்றம் அடையும்....இவைகள் மாற்றம் அடைந்தால் நமது செல்களின் வளர்ச்சி மற்றும் அது செய்யும் வேலைகளிலும் மாற்றம் ஏற்ப்படும்...இதுதான் என் ஆராய்ச்சி.
முதலில் நான் எடுத்துக்கொண்டது..இரண்டு விசயங்களை GENE களை செயற்கையாக உருவாக்கி மனிதனின் கோபத்தை கட்டுபடுத்துவது...அதாவது கோபம வரும்போது நான் கண்டுபிடித்த GENE களை அவர்களை சுவாசிக்க வைத்தால் போதுமானது...அப்படியே அமைதியாகி விடுவார்கள்...
உங்களுக்கு புரிந்து இருக்கும் எதற்காக நான் இதை ஆராய்ச்சிக்கு எடுத்து கொண்டேன் என்று......எல்லாம் அன்பு மனைவிக்க்காகததான்..பார்த்து... பார்த்து.....சுற்றி காதலித்தவள்..இப்போது நான் தாமதமாக வந்தாலே தினமும் கோபத்தின் உச்சிக்கே சென்று திரும்புவாள்...இந்த மாதிரி அவளை துன்புறுத்துவது பிடிக்கவில்லை என்பதால் இந்த முடிவை எடுத்தேன்.
மற்றொன்று..மிக முக்கியமானது...மனித மூளையில் இருக்கும் ஒரு பகுதி ஞாபக சக்தியை(explicit memory) முற்றிலுமாக அழிப்பது...இதை செய்வதற்கு வேறு எதுவும் காரணம் இல்லை....என் சிறு முயற்சிக்க்காகத்தான்....
சில மாதங்கள் கடின முயற்சிக்குபின் இரண்டுமே தயாரானது...எனது ஆசை இதை எப்படியாவது நான் வேலை பார்க்கும் இடத்தில செய்து காட்டவேண்டும் என்பதே....
அன்றும் வழக்கம் போல காலையில் கிளம்பும்போது என் மனைவி.எப்போதும் சொல்வதை சொன்னாள்......இன்னைக்கு சீக்கிரம் வாங்க என்று......கூடுதலாக.....நாளைக்கு எங்களின் திருமண நாள் அதற்க்கு வெளியில் சென்று சிலவற்றை வாங்கவேண்டும் என்று வேறு சொன்னாள்
ஆனால் நான் இதை நினைத்து பார்த்தது..என் அலுவலகம் முடிந்து என் சொந்த ஆய்வுகூடத்தில் சில வேலைகளை செய்து கொண்டு இருக்கும்போது..அவள் தொலைபேசி வழியாக அழைத்தபோதுதன்...என்ன செய்வது என்று தெரியாமல்..பதறிப்போய்..இது வந்துவிட்டேன் என்று பொய் சொல்லி அவசரமாக கிளம்பினேன்...
நான் செய்வது எவ்வளவு பெரிய தவறு என்று எனக்கு தெரியாமல் இல்லை...என்னை உயிருக்கு உயிராக காதலித்தவள்....பாசமானவள்..அவளை ஒருவகையில் இப்படி துன்புறுத்துவது எனக்கு கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது....
அவசரமாக கிளம்பி வெளியில் போகும் போதுதான் அந்த எண்ணம வந்தது..இன்று எப்படியும் அவள் கோபத்தின் உச்சத்தில் இருப்பாள்....அந்த கோபத்தை குறைக்க நான் கண்டுபிடித்த அந்த gene spray யை உபோயோகித்தால் என்ன என்று யோசித்து ..வேகமாக சென்று அதை எடுத்து பையில் போட்டு கொண்டேன்....
வீடு சென்று அவளை எப்படியாவது இதை சுவாசிக்க செய்ய வேண்டும்..என்று எண்ணியபடியே உள்ளே நுழைந்தேன்..அவள் மிக கோபமாய் காத்து இருந்தாள்...
அவள் முன்னாடி நான் சென்று நின்றபோதும் கூட பார்க்காததுபோல் இருந்தாள்..நான் மெதுவாக அவள் முகத்தின் அருகில் வைத்து நான் கொண்டு வந்திருந்த அந்த gene spray வை திறந்தேன்...அவள் அதைபர்த்துக்கொண்டே இருக்க...அந்த gene கள் அவள் சுவாசத்தில் கலந்து உள்ளே சென்றது....
அவளின் கண்களில் மாற்றம் தெரிந்தது...கைகளால தலையை பிடித்து கொண்டே என்னை பார்த்தபடி அப்படியே சரிந்து விழுந்தாள்...
எனக்கு திடுக்கென்றது....அந்த gene வேலை செய்தால் இப்படி ஆகாதே..என்று நினைத்தபடியே...அவளை மயக்கத்தில் இருந்து மீட்டு கொண்டுவரும் முயற்சியில் இறங்கினேன்...
முகத்தில் தண்ணீர் தெளிதத பின்னர் கொஞ்சம் கஷ்டப்பட்டு கண்களை திறந்து பார்த்தாள்....இப்போதும் தனது கையால் தலையை பிடித்து கொண்டு இருந்தாள்....
எனை பார்த்தவுடன் அவள் திட்டாததை பார்த்து எனக்கு கொஞ்சம் சந்தோசம்..நல்லவேளை..நமது gene spray வால் பிழைத்தோம்..என நினைத்து கொண்டுஇருக்கும்போதே...
அவ்ள என்னைவிட்டு கொஞ்சம் விலகி சென்று யார் நீ? என்று என்னை பார்த்து கேட்டாள்.
எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை...தவறு எங்கு நடந்து இருக்கின்றது என்று என்னால் உணரமுடிந்தது....ஆய்வுக்கூடத்தில் இருந்த gene பாட்டில்களை எடுக்கும்போது மாற்றி எடுத்து விட்டேன்...நான் எடுத்த பாட்டில் ஞாபகசக்தியை அளிக்கும் ஒன்று.....இதை நான் யோசித்து கொண்டு இருக்கும்போதே..அவள் மீண்டும் கேட்டாள்..
யார் நீ?????
((நாம் இப்போது இருக்கும் காலம் gene therapy காலம்...gene களை வெளியில் தனியாக வளர்த்து அல்லது stem cell களின் மூலம் நமது உடலில் ஏற்க்கனவே பாதிப்படைந்த செல்களை சரி செய்யும் முறை gene therapy...... இதில் பல வகைகள் உள்ளன..இது முன்னேற்றம் அடைந்தால்..நான் மேலே சொன்னது போல நடக்க வாய்ப்பு இருக்கிறது.)))
4 comments:
இது நல்லதா கேட்டதா???
Gayathri said...
இது நல்லதா கெட்டதா???///
சரியான வழியில் பயன்படுத்தினால் ரெம்ப நல்லது....இதன் மூலம் cancer,Alzheimer போன்ற குணப்படுத்த முடியாத நோய்களை கூட குணப்படுத்த முடியும் என்கிறார்கள்.....
இனி நீங்கள் கேட்ட கேள்விக்கு பதில்..
இது நல்லதா கேட்டதா???///
அக்கா இதுவரைக்கும் யாரும் இதை எழுத சொல்லி கேட்கலை....நானாத்தான் எழுதினேன்)))))))
ரொம்ப நல்ல நடை....வித்தியாசமான சிந்தனை....விறுவிறுப்பாக இருந்தது...கிளைமாக்ஸ் நச்....
//gene களை வெளியில் தனியாக வளர்த்து அல்லது stem cell களின் மூலம் நமது உடலில் ஏற்க்கனவே பாதிப்படைந்த செல்களை சரி செய்யும் முறை gene therapy...... இதில் பல வகைகள் உள்ளன..இது முன்னேற்றம் அடைந்தால்..//
அறிவியலை எல்லோருக்கும் புரிகிற மாதிரி கதையுடன் இணைத்து சொல்வது நன்றாக இருக்கிறது கணேஷ்.
அறிவியலை எல்லோருக்கும் புரிகிற மாதிரி கதையுடன் இணைத்து சொல்வது நன்றாக இருக்கிறது கணேஷ்.\\\\\
உங்களின் கருத்துக்கு நன்றி அக்கா
Post a Comment