நான் விடுமுறைக்கு ஊருக்கு செல்வது என்றால் அதிகமாக பதினைந்து நாட்கள்தான் எனது விடுமுறை நாட்கள்.......அதற்குள் ஊர் சலித்துவிடும்....அந்த பதினைந்து நாட்களுக்கும் நேரம் போக சில தேர்ந்து எடுத்த புத்தகங்களை என்னோடு எடுத்து செல்வது வழக்கம்....
நான் ஊரில் வேறு எங்கும் செல்லாமல் வீட்டிலே படுத்து புத்தகம் படிப்பது என் அம்மாவுக்கு பிடிக்காது..அடிக்கடி..எதாவது உறவினர் பெயரை சொல்லி அவர் உன்னை வரச்சொன்னார்..இவர் வரச்சொன்னார்..என்று எதாவது சொல்லிகொண்டே இருப்பார்கள்...சில நேரங்களில் திட்டும் விழும்...
அப்படித்தான் அன்றும்....அவர்கள் எதோ சொல்லிகொண்டு இருக்கும்போது..எனது பக்கத்து வீட்டில் இருக்கும் ஒருவர் என் அம்மா திட்டுவதை கேட்டு....கணேஷ் என்ன பண்றான் புத்த்கம்தனே படிக்கிறான் விடுங்கள படித்துவிட்டு போகட்டுமே....என்று எனக்கு ஆதரவாக பேசினார்கள்...
அவர்கள் எனக்கு அக்கா வேண்டும்...என் வீட்டுக்கு பக்கதுவீடு என்பதால் சிறுவயது முதலே எங்களுக்கு நன்கு தெரிந்தவர்கள்...திருமணமாகி ஒரு ஆண் குழந்தை இருக்கின்றது...
நான் கையில் புத்தகத்துடன் இருந்ததை பார்த்து..கணேஷ் அப்படி நீ என்னதான் படிப்பே? இப்படி உங்க அம்மா திட்டுகின்ற அளவுக்கு..என்று கேட்டார்கள்...
அதற்கு நான் ..கொஞ்சம் அறிவியல் சம்பந்தப்பட்ட புத்தகங்கள் படிப்பேன் அக்கா.. என்றேன்....
அறிவியல் என்றால் எது சம்பந்தமாக.என்று கேட்டார்கள்..
எனக்கு ஐன்ஸ்டீன் என்றால் மிக பிடிக்கும் அதான் அவர் சம்பந்தமான புத்தகங்கள் படிப்பேன் என்றேன்..
ஆமாம் எனக்கும் அறிவியல் என்றால் ரெம்ப பிடிக்கும்...என் மகன் எட்டாம் வகுப்பில் நான்காவதாக வர நான்தான் காரணம்...நான்தான் அவனுக்கு அறிவியல் சொல்லி கொடுப்பேன் .....என்று அவர்களின் அறிவியல் அறிவை பற்றி சொன்னார்கள்..
நான் எதோ ஒரு ஆர்வத்தில் ஐன்ஸ்டீன் பத்தி உங்களுக்கு நிறைய தெரியுமா அக்கா என்று கேட்டுவைத்தேன்...
எனக்கு தெரியும் அவர்கள் நிறைய படித்தவர்கள்..எனக்கு சில விசயங்களில் நிறைய கற்றுகொடுதது இருக்கின்றார்கள்.....ஒருவேளை ஐன்ஸ்டீன் பற்றி அவர்களுக்கு தெரிந்து இருக்கலாம்.....என்றுதான் அவர்களிடம் கேட்டேன்...
அதற்கு அவர்கள்..கொஞ்ச நேரம் யோசித்துவிட்டு..
அது எல்லாம் எங்கே.... நினைவிருக்கின்றது..எப்போதோ படித்தது...ஆனால்..அவர் வைத்து சொல்லப்படும் ஒரு நிகழ்வு இன்னும் நினைவிருக்கின்றது..என்றார்கள்...
சரி ஐன்ஸ்டீன் வாழ்வில் நடந்த நிகழ்வு எதாவது சொல்லுவார்கள் என நினைத்து அது என்ன நிகழ்வு அக்கா என்றேன்..
அவர் ஒருமுறை தோட்டத்தில் உட்கார்ந்து இருக்கும் போது மரத்தின் மேலே இருந்து ஒரு ஆப்பிள் விழுந்தது..அது ஏன் என்று ஆராய்ந்து ..அதில் இருந்து புவியில் ஈர்ப்பு விசை இருப்பதை கண்டுபிடித்து சொன்னார்... என்றார்கள்..
இதை கேட்டவுடன் எனக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை...ஒருபக்கம் அதிகம் சிரிப்பு வந்தாலும்...அவர்கள் பெரியவர்கள்..நிறைய விசயம் அவர்களிடத்தில் கற்றுக்கொண்டு இருக்கின்றேன்..எனவே அவர்களை கிண்டல் செய்யமுடியாது....
அவர்களிடத்தில் என்னால் முடிந்த அளவு எடுத்து விளக்க முடியும்..அதை சொல்ல நினைக்கும் போது..அருகில் இருந்து எல்லாத்தையும் கேட்டு கொண்டு இருந்த அவரது மகன்..
அம்மா நீங்கள் சொல்வது நியூட்டன் தாத்தா...பற்றி..அவர்தான் ஆப்பிள் தாத்தா..
கணேஷ் அண்ணன் கேட்டது..காம்பஸ்(COMPASS) தாத்தா பற்றி..அவருதான் ஐன்ஸ்டீன்..என்றான் சிரித்து கொண்டே..
அக்கா ஒன்றும் சொல்லாமல் சிரித்து கொண்டே உள்ளே சென்று விட்டார்கள்....
5 comments:
சரி சரி விடுங்கள் அந்த பையன் எப்படி நான்காவதாக வந்தான் ஹி ஹி ஹி நிச்சயம் அவங்க அம்மா சொல்லி தந்து இருக்கமாட்டார்கள்
சரி சரி விடுங்கள் அந்த பையன் எப்படி நான்காவதாக வந்தான் ஹி ஹி ஹி நிச்சயம் அவங்க அம்மா சொல்லி தந்து இருக்கமாட்டார்கள்\\\\
அதுதான் எனக்கும் சந்தேகம் அண்ணா>?))))))
nice writing..
அஹமது இர்ஷாத் said...
nice writing.///
ரெம்ப நன்றி உங்க கருத்துக்கு...
சத்தமாக சிரித்துவிட்டேன். நல்ல நகைச்சுவை...
Post a Comment