கிரக காதல்...

       கடவுள் இன்ன கிழமை இந்த ஊருக்கு வருவதாக சொன்னால் போதும் அதை கேட்டதில் இருந்தே அங்கு பயணிக்க தயாராகி விடுவாள் என் அன்பு காதலி..

    அந்த அளவு அவளின் அம்மாஅவளை கெடுத்து வைத்து இருந்தார்கள்......மாதம் ஒருமுறை கண்டிப்பாக எங்காவது வெளியூரில் இருக்கும் கோயில்களுக்கு பயணிப்பாள்....அப்படி ஒரு பக்தி...

    அன்று வழக்கமாக சந்தித்து பேசிக்கொண்டு இருக்கும்போதுதான் கவனித்தேன்..எப்போதும் துறுதுறு என்று பேசுபவள் இன்று ஏனோ கொஞ்சம் சோகராகம் பாடுவது போல இருந்தாள்...

     என்ன விஷயம் என்று கேட்டேன்...இரண்டு நாட்களுக்கு முன் அவள் அம்மா இவளுக்கு சாதகம் பார்த்தார்களாம்...இவளுக்கு சில நாட்களில் இருந்து ஏழரை சனி ஆரம்பிக்கிறதாம்...எந்த செயலை செய்தாலும் இடர்கள் வரும் என்றுவேறு அந்த ஜோசியர் பயம்காட்டி இருக்கின்றார்...இதுதான் இவளின் சோக ராகத்திற்கு காரணம்...


     அதோடு மட்டும் இல்லாமல் சனிக்கிழமைகளில் நவகிரக கோயில்களுக்கு சென்று சனி பகவானுக்கு நெய் விளக்கு ஏற்ற வேண்டுமாம்...நாங்கள் அதிகம் சந்தித்து கொள்வதே சனிக்கிழமையன்றுதான் அதுக்கும் சனி பகவான் வேட்டு வைத்து விட்டார்...என்று நினைத்துகொண்டேன்...

    நான் அவளுக்கு ஆறுதல் சொல்லுவிதமாக "அதை எல்லாம் நம்பாதே நீயும் படித்த பெண்தானே..அந்த நவகிரகம் மற்றது எல்லாம் சும்மா..அது எல்லாம் ஒன்றும் செய்யாது..நீ நல்ல படியாக முயற்சி செய்தால் எல்லாம் நல்ல படியாக முடியும்"என்றேன்.

    ”நீ சும்மா எதுக்கு எடுத்தாலும் அறிவியல் பேசாதே..அது உண்மை இல்லாமையா பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் இருந்தே இந்த நவகிரக வழிபாட்டை செய்துகொண்டு வருகிறார்கள்...அதுவும் அந்த காலத்தில் எந்த ஒரு அறிவியல் கருவியும் இல்லாமல் நம்மை சுற்றிவரும் கிரகங்களை துல்லியமாக வடிவமைத்து இருக்கிறார்கள்”...என்றாள்...


  ”நான் ஒன்றும் அறிவியல் பேசவில்லை..அது உணமையோ பொய்யோ அதைவைத்து ஏன் நாம் மனதை குழப்பி கொள்ளவேண்டும் என்றுதான் சொல்கிறேன்” என்றேன்...

   ”இல்லை இல்லை..அந்த கிரகங்களின் நகர்வுக்கும் நமக்கும் தொடர்பு உண்டு...அது நாம் முன்னோர்கள் சொன்னது..அவர்கள இதை கடவுளின் உதவி இல்லாமல் எப்படி இந்த கிரகங்களை கண்டுபிடிக்க முடியும்....எனவே எல்லாத்துக்கும் கடவுள் பின்னாடி இருக்கிறார்” என்றாள் அமைதியாக....

  அதை நான் ஒரேயடியாக மறுத்தால் நான் போகிறேன் என்று சொல்லிவிட்டு கிளம்பிவிடுவாள்....அதனால்..."நான் சொல்லபோவதை கொஞ்ச நேரம் கேள் அதில் ஏதும் தவறு இருந்தாள் சொல்லு” என்றேன்..



அதற்கு அவள் “சரி” என்றாள்...

   ”முதலில் நவகிரகங்களாக சொல்லபடும் அந்த கிரகங்களில் எத்தனை கிரகங்கள் என்று உனக்கு தெரியுமா??....”அதில் இருப்பது மொத்தம் ஐந்தே கோள்கள்தான்..சூரியன் (sun) ஒரு நட்சத்திரம்... சந்திரன் (moon)ஒரு துணைக்கோள்..ஆக இந்த இரண்டுமே கோள்கள் இல்லை..

    “அதுக்கு அடுத்த படியாக மீதம் இருப்பது புதன் (mercury) ,சுக்ரன் (nevus),செவ்வாய் (mars),குரு (Jupiter),சனி (sat run)  இவைகள்தான்....அது தவிர ராகு.. கேது...இதுவும் கோள்கள் இல்லை...


     “நான் மேலே சொன்ன இந்த கோள்களை பற்றி சில விசயங்கள் தெரியுமா...இவைகள் நாம் சாதாரன கண்கள் கொண்டே பார்க்க முடியும்....அதாவது அதிகம் இருட்டான தெளிவான  வானவெளியில் இவைகளை நாம் பார்க்கமுடியும்”....


    “மேலும் இவகைளை முதன்முதலில் நாம் மட்டும் கண்டுபிடித்து வணங்க வில்லை..நமக்கு முன்னாடியே பாபிலோனியர்கள் இந்த முறையை பின்பற்றி வந்தார்கள்..அப்புறம் எகிப்தியர்கள்.. அப்படியே நாம்”..

     “என்னை பொறுத்தவரை இதுக்கும் கடவுளுக்கும் எந்த சம்பந்தமும் இருப்பதாக தெரியவில்லை...ஏனென்றால் அப்படி கடவுள் இதுக்கு பின்னாடி இருந்து இந்த கோள்களை மனிதனுக்கு தெரியபடுத்த வேண்டும் என்று இருந்தால் மீதம் இருந்த இரண்டு கோள்களான யுரேனஸ் (Uranus), நேப்டுன் (Neptune) இதை ஏன் அவர்கள கண்டு பிடிக்கவில்லை”?..

   “அது ஏன் என்றும் உனக்கு சொல்லுகிறேன்... இந்த இரண்டு கோள்களும் கொஞ்சம் மங்கலானவை மற்ற கோள்களைவிட.....நம்மில் இருந்து வெகு தூரத்தில் இருப்பவை....அதாவது சாதாரன கண்களால் பார்ப்பதை விட binocular வைத்தே இவற்றை இருண்டவான வெளியில் பார்க்க முடியும்”...

  அவள் சற்று கோபமாக “அப்படி என்றால் இந்த நவகிரக கோள்கள் அனைத்தும் மனிதன் கண்களால் பார்த்து சொன்னதுதான் என்கின்றாயா?” என்றாள்..

     அதுக்கு நான் ..”ஆமாம்... ..அது எப்படி என்றால் நிலையாக இருக்கும்  வான நட்சத்திரங்களை பார்க்கும்போது சில மட்டும் நகர்வதை பார்த்து இருப்பார்கள்..அப்படியே தொடந்து கண்காணித்து வந்தால் அந்த நகரும் பொருள்கள் அனைத்துமே ஒரே கால இடைவெளியில் பார்வைக்கு வந்து போய் இருக்கும்...

  
     "இந்த மாதிரி கண்ணால் பார்த்துதான் அதை மக்களுக்கு சொன்னார்கள்..ஆனால் அதை சொன்னதில் தவறு இல்லை..அதை ஏன் வழிபட சொன்னார்கள் என்றுதான் தெரியவில்லை..ஒருவேளை அவர்கள் வானத்தில் தெரியும் ஒருவிதமான அதிசயமாக அதை கருதி இருக்கலாம்"என்றேன்...

        உடனே அவள் “சரி நீ சொலவது போல வைத்து கொண்டாலும் இந்த சனி கிரகம் மெதுவாக சுற்றுவதை அப்போதே எப்படி சனி பகவானுக்கு கால் ஊனம் என்று சொல்லி வைத்தார்கள” என்றாள்..

எனக்கு என்ன சொல்வதேன்றே தெரியவில்லை எப்படி எல்லாம் யோசிக்கிறாள் இவள்....

   அதற்கு நான் ..”அது ஒன்றும் பெரிய விசயம் இல்லை..கோள்களுக்கு இடையே ஒளி மாறுதல்களை வைத்துதான் அவர்கள் வகை பிரித்து இருப்பார்கள்..அப்படி பிரித்து பார்க்கும் போது இந்த சனி கிரகம் மட்டும் மற்ற கிரகங்கள் சுற்றும் நேரத்தோடு  ஒப்பிடும்போது..
 கொஞ்சம் தாமதமாக தெரிந்து இருக்கலாம்”..

   “உடனே மக்களுக்கு எளிதாக புரியவைக்க அதை ஊனம் என்று சொல்லி இருப்பார்கள்...அது எப்படி என்றால்..ஒரு சிறு குழந்தை உன்னிடம் அங்கு பழுது அடைந்து நிற்கும் ஒருவாகனத்தை பார்த்து கேக்கின்றது இதில் என்ன பிரச்சினை என்று”...

    “அந்த வாகனத்தில் பற்சக்ரங்கள் கொஞ்சம் பிரச்சினை என்று உனக்கு தெரியும்..ஆனால் இதை எப்படி அந்த சிறு குழந்தைக்கு புரியவைப்பே...அந்த இடத்தில நீ சொல்வது அந்த வாகனம் ஓட்டை வாகனம் என்றுதான்...இதைகேட்ட அந்த குழந்தையும் சாந்தியடையும்...இதே காரணம்தான் அப்போதும் நிகழ்ந்து இருக்கலாம்...அப்போது இருந்த மக்களின் அறிவுத்திறனுக்கு ஏற்றபோல அப்படி சொல்லி இருப்பார்கள்” என்றேன்..

     “அப்படி நீ சொல்வதை பார்த்தால் இப்போதும் நம் வெறும் கண்களால் இந்த ஐந்து கிரகங்களை பார்க்க முடியுமா என்ன?” என்றாள்

    “கண்டிப்பாக பார்க்க முடியும்..என்ன அதற்கு தனி நேரம் இருக்கு அதுபடி நாம் வெறும் கண்களால் பார்க்க முடியும்” என்றேன்..

   சரி ப்ளுடோ (Pluto)  வும்தான் சூரியனை சுற்றிவருகிறது அதை ஏன் உன் அறிவியல் கோள்களின் வகையில் சேர்க்கவில்லை என்றாள்..

     இதோ பார்..அதுவும் கோள்களின் பட்டியலில் இருந்தது...ஒவ்வொருவரும் குறைந்த இடைவெளியில் சிலவற்றை கண்டுபிடித்துகொண்டே இருந்ததால் எல்லோரும் சேர்ந்து கோள்கள் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற ஒரு வரைமுறையை உருவாக்கி இருக்கிறார்கள்..அதன் படி பார்த்தால் இந்த ப்ளுடோ கோள்களின் பட்டியலில் இருந்து துரத்த படுகின்றது..என்றேன்..

அதற்கு அவள் "அப்படி என்ன வரைமுறை" என்றாள்

   அதாவது கோள்கள் என்று சொன்னால் அது சூரியனை சுற்றி வரவேண்டும்..,அதன் உருவம்  ஆனது...அது தனது ஈர்ப்பு விசையில் நிலையாக நிலைத்து இருக்கவேண்டும்,அதுவும் முடிந்தவரை கோளமாக, அடுத்து அது சூரியனை சுற்றும் பாதையில் தனக்கு அருகில் உள்ள எல்லாவற்றையும்  தன்பால் இழுத்து அது செல்லும் பாதையை சுத்தமாக வைத்து இருக்கவேண்டும் அதாவது அது செல்வதற்கு உதவியாக....






     இதுதான் ஒன்று கோள்களாக இருக்க காரணமான காரணிகள்..நீ சொல்லும் ப்ளுடோ இந்த மூன்றாம் விதியில் இருந்து விளகுகின்றது..ஏனென்றால் அதை சுற்றி asteroid belt போல ஒருவிதமான kuiper belt  என்ற ஒன்றை அதை சுற்றி பெற்று இருப்பதால் அதை துரத்தி விட்டார்கள்..என்றேன்..




    அவள் சற்று கோபமாக சரி உனக்கு இதன் மேல் நம்பிக்கை இல்லை என்றால் விடு நான் நம்பிகொள்கிறேன்..என்றாள்..



   அதற்கு நான் "உன்னை  நம்ப வேண்டாம் என்று சொல்லவில்லை..இல்லாத ஒன்றுக்கு ஏன் அதை நினைத்து நமது மனதை போட்டு கவலைபடுத்தவேண்டும்..நீ நன்றாக முயற்சி செய்தால் அந்த சனி கூட உன்னை ஒன்றும் செய்ய முடியாது" என்று அவளை சமாதானப்படுத்துவதற்காக சொன்னேன்.


    அதற்கு அவள் "சனி இனிதான் என்னை பிடிக்கவேண்டும் என்று இல்லை அதான் மூன்று வருடம் முன்னாடியே  பிடிச்சிரிச்சே இனி எதுக்கு இன்னொருதடவை பிடிக்க வேண்டும்" என்று கோபமாக  சொல்லிவிட்டு  கிளம்பி விட்டாள்...



    அவள் மூன்று வருடம் முன்னால் பிடித்த சனி என்று சொன்னது என்ன என்று எனக்கு புரிந்து இருந்தது.....

10 comments:

dheva said...

தம்பி.....


அறிவியலை நிறுவ வேண்டும் என்ற ஆவல் உங்களிடம் இருப்பதை ஆமோதித்து வரவேற்கும் அதே நேரத்தில்... அறிவியல் நம்பிக்கை என்பது திடப்பட்டு மூட நம்பிக்கையாக மாறுவதை வரவேற்க முடியாது.

உங்களின் கூற்றுப் படி நீயூட் ஐஸ் எனப்படும் வெற்றுக் கண்களுக்கு மற்ற 9 கோள்களும் என்பது வாதத்தில் நிறுவ சரியாயிருக்கும் பட்சத்தில் சில நேரங்களில் கோள்கள் பூமியின் மேற்பரப்பில் வந்து செல்லும் என்பதையும் ஒத்துக் கொள்ளும் அதே நேரத்தில்.. ஒரே ஒரு கூற்றை கூற விரும்புகிறேன்....

நீங்களும் நானும் காணும் வானத்தின் பரப்பு.... எவ்வளவு....தெரியுமா? மிக மிக குறுகிய ஒரு பகுதி....

அதில் கிரகங்கள் எல்லாம் எப்பொது வரும்.. மேலும் வந்தவை எல்லாம் கிரகங்கள்தான் என்று எப்படி சர்வ நிச்சயமாய் சொல்ல முடிந்தது அவர்களால்....


முன்பு வந்தது என்றால் இப்போதும் தானே வரும்... எங்கே அறிவியல் ஒரு விழா நடத்தி......பொது மக்களை எல்லாம் கூட்டி... எல்லோருக்கும் அவர்களின் வெற்றுக் கண்களால்....ஒவ்வொரு கிரகத்தைய்யும் காட்டி விளக்கச் சொல்லுங்கள் பார்ப்போம்.....?


சாத்தியமா? சாத்தியப்பட்டால்.....சொல்லுங்கள்.. உங்களின் கூற்றைப் பற்றி சிந்தித்துபார்க்கிறேன்....

ஆரோக்கியமான விவாதமாக எடுத்துக் கொள்ளவும்....தம்பி...!

கணேஷ் said...

கண்டிப்பாக இது மிக ஆரோகியமான விவாதம்..அண்ணா...நான் மேலே சொன்ன பதிவில் சொல்ல முடியாதவற்றை இங்கு சொல்ல முடியும்....

அதில் கிரகங்கள் எல்லாம் எப்பொது வரும்.. மேலும் வந்தவை எல்லாம் கிரகங்கள்தான் என்று எப்படி சர்வ நிச்சயமாய் சொல்ல முடிந்தது அவர்களால்....

பொதுவாக நாம் வானத்தில் பார்க்கும்போது தெரிவது முதலில் பெரியதாக நிலா..அப்புறம் நட்சத்திரங்கள்..சில நேரங்களில் எரிகற்கள் சில வினாடிகள் வேகமாக பயணித்து உடனே மாண்டு போகும்..இதை தவிர வேறு எதையும் நம்மால் பார்க்க வாய்ப்பு இல்லை...

சில நேரங்களில் ஆகாயவிமானம்..பார்க்கலாம்..அப்புறம் பறவைகள்..அதை விட்டு விடுவோம்..

இதோடு இன்னொன்றையும் சேர்த்து கொள்ளலாம்...சில மங்கலான கோள்கள...சரி இதை ஏன் அவர்கள் கண்டார்கள்....

நான் மேலே சொன்னது போல எரிகற்கள் போல சில வினாடிகளில் மாண்டு போகாது....நட்சத்திரங்கள் நகராது ..இது நகரும்...இதை ஒரு தடவை கண்காணித்து விட்டால் மறுமுறை இதனை அடையலாம் காணுவது எளிது...என்ன பார்க்கும் இடம் மாறலாம்...

மற்றபடி எப்போதுமே நமது பார்வைக்கு சில கோள்கள் தென்படும்..அது கொஞ்சம் மங்கலாக தெரியும்..

அவர்கள் சில வினாடிகளில் இறந்து போகததும், குறைவான ஒளியை கொண்டதும்.சராசரி வேகத்துடன் பயனிப்பதையும் பார்த்து இருப்பார்கள்....

இங்கு ஒன்றை சொல்ல விரும்புகிறேன் அவர்கள் இதை கண்டு பிடித்து இது ஒரு பிரபஞ்சத்தின் அங்கம என்று கருதவில்லை..அன்றைய காலகட்டத்தில்..மனித அறிவுக்கு எது கொஞ்சம் புதுமையாக அல்லது பயமுறுத்துவதாக இருந்ததோ அதை வணங்க சொன்னார்கள்...

அப்படி இவர்கள் பார்த்த இந்த புதுமையான விஷயங்களோடு கொஞ்சம் கற்பனையை சேர்த்து வணங்க சொல்லிவிட்டார்கள்...அவர்கள் இந்த கோள்களை ஒரு கடவுள் என்றே சொல்லிவந்தார்கள..பூஜை செய்தார்கள்...அதன் பின்னரே இதை கோள்களாக நமது பிரபஞ்சத்தின் அங்கமாக பார்த்தார்கள்...


முன்பு வந்தது என்றால் இப்போதும் தானே வரும்... எங்கே அறிவியல் ஒரு விழா நடத்தி......பொது மக்களை எல்லாம் கூட்டி... எல்லோருக்கும் அவர்களின் வெற்றுக் கண்களால்....ஒவ்வொரு கிரகத்தைய்யும் காட்டி விளக்கச் சொல்லுங்கள் பார்ப்போம்.....?

சாத்தியமா? சாத்தியப்பட்டால்.....சொல்லுங்கள்.. உங்களின் கூற்றைப் பற்றி சிந்தித்துபார்க்கிறேன்....

நீங்கள் கேட்பது போல சரிதான்..முன்பு வந்தால் இப்போதும் அது வரும்...அதாவது வந்தது..இப்போது இருக்கின்றது..இனிமேலும் வரும்....இதை ஒரு big crunch நடக்கும் வரை உங்களுக்கு உத்திரவாதமாக சொல்லமுடியும்....

இப்போதும் நீங்கள் உங்கள கையில் binoculars இருந்தால் மாலையில் பாருங்கள்,..அதற்கு முன் நான் இங்கு கொடுத்து இருக்கும் இனைப்பை ஒரு தடவை பாருங்கள்..
http://homepage.ntlworld.com/mjpowell/Astro/Naked-Eye-Planets/Naked-Eye-Planets.htm

http://www.skyandtelescope.com/observing/highlights/100126474.html

http://science.nasa.gov/science-news/science-at-nasa/2000/ast30mar_1m/

http://www.space.com/spacewatch/sky_calendar.html



இது நீங்கள் கோள்களை தேடும் நேரத்தை குறைக்கும்...கோள்களின் இருப்பிடத்தை சரியாக சொல்லி இருக்கிறார்கள்...இதற்கு ஏன் விழா எடுக்க வேண்டும் அந்த துட்டில் நீங்கள் ஒரு நல்ல binocular வாங்க முடியும்...

வெறும் கண்களால் பார்க்க முடியும்..சில இடங்களில் தூசு .புகைமண்டலம் போன்றவற்றை நாம் உருவாக்கி விட்டோம்..இதனால் கூட சில இடங்களில் இருந்து பார்க்க முடியாமல் போகலாம்...

மனித நம்பிக்கை என்பது மனதில் பதிந்து விட்ட நிலையான ஒன்று..இதை ஒருவகையில் hypnotism வகையில் கூட சேர்க்கலாம்..அந்த வகையில் நமது ஆழ் மனதில் ஒன்று ஆழமாக பதிந்து விட்டால் அதை தூக்கி போட்டுவிட்டு மற்றொன்றை புரிந்து கொள்வது என்பது கொஞ்சம் சிக்கலான விஷயம்..என்பது என் கருத்து..

எனது பதிவை படித்து கருத்து சொன்னதற்கு மிக்க நன்றி அண்ணா...முடிந்தால் இன்னும் விவாதிக்கலாம்...ஆரோகியமான விவாதங்கள் அறிவை வளர்க்க கூடியவை....

ஆனந்தி.. said...

கணேஷ்..சகோதரர் ஜோதி பின்னூட்டத்தில் உங்கள் ஆதங்கம் பார்த்து உங்க ப்ளாக் வந்தேன்...இந்த பதிவை படிச்சுட்டு அசந்துட்டேன்..எனக்கும் தனிப்பட்ட முறையில் அறிவியலை கடவுள் ஆக்குராங்கலேன்னு ஒரு வருத்தம் உண்டு..ஆனால்,ஜோசியர்கள் எல்லாமே கணக்குப்படி..காலப்படி ஒரு புது கதை சொல்றாங்க..அந்த டெக்னிக் தான் புரியலே..இது அனேகமா ரோமானிய காலத்தில் இருந்து ஆர்ம்பிசுருக்கலாம் நினைக்கிறேன்..உங்கள் கண்ணோட்டம் இன்னும் சில விஷயங்கள் தெரிஞ்சுக்க முடிஞ்சது..தொடர்ந்து இப்படி பண்ணுங்க...என்னை மாதிரி ஆளுங்க உங்களுக்கு சப்போர்ட் ஆ இருப்போம்..

'பரிவை' சே.குமார் said...

nalla katturai.

devavin kootru mutrilum unmaiyey...
atharkaana ungal pathilum arumai. ithai pathivil pakirnthirunthaal innum sirappaga irunthirukkum nanbarey.

கணேஷ் said...

.தொடர்ந்து இப்படி பண்ணுங்க...என்னை மாதிரி ஆளுங்க உங்களுக்கு சப்போர்ட் ஆ இருப்போம்..////

உங்களின் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி....கண்டிப்பாக தொடர்ந்து எழுதுகிறேன்...

கணேஷ் said...

nalla katturai.

devavin kootru mutrilum unmaiyey...
atharkaana ungal pathilum arumai. ithai pathivil pakirnthirunthaal innum sirappaga irunthirukkum nanbarey.////

உங்களின் கருத்துக்கு மிக்க நன்றி,,

இனியன் said...

அருமையான அணுகுமுறை . நன்று நன்று மிகவும் அரமையான விளக்கம் நமது அடிப்படைப்பிரச்சினை என்னவென்றால் மனிதர்கள் தாங்கள் சொண்டுள்ள நம்பிக்கைக்கு கேடு வரும்போது உண்மையை ஏற்கும் பக்குவம் இல்லாமல் தாங்கள் இதுவரை முட்டாள் தனமாக இருந்து விட்டோமே என்ற ஆதங்கம் ஆற்றாமை. சரி இனி அவ்வாறு இல்லாமல் நாம் இருக்க நமக்கு உதவி செய்கிறார்கள் என்று எண்ணாமல் சொல்பவர்மீது கோபம் கொள்வது அர்ச்சனை வீசுவது இது சுய பச்சாதாபத்தின் விளைவுகள். கேள்வி கேட்பவர்கள் சரி யானவர்கள்.(It is better to post all the feedbacks at the group'S original thread

கணேஷ் said...

படித்துவிட்டு கருத்துக்கள் சொன்னதுக்கு நன்றி..))

அங்கு சொன்னதும் ஏற்க்கனவே நான் எழுதியதும் கொஞ்சம் பொருத்தமாக இருந்ததால் வெளியிட்டேன் ))

நன்றி

Unknown said...

Raaghu, Kethu laaam enna? Black holes aaa??? verum kangalaal Raaghu kethu kandupudichangala???

Unknown said...
This comment has been removed by the author.