பிறந்தநாள் பரிசு..???

    இன்று பிறந்தநாள்...எப்படியோ இதுவரை 24 வருடம் நல்லபடியாக சிரமம் இல்லாமல் கடந்துவிட்டது...கழிந்த வருடங்கள் எல்லாம் சுகமானவை...இழப்புகள் இருந்தாலும் ..என மனது ஏனோ அதை விரைவில் மறந்து இருந்ததுதான் உண்மை...

    இந்நேரம் ஊரில் இருந்து இருந்தால்...காலையில் அம்மா வேகமாக எழுப்பி...குளிக்க சொல்லி.. கோவிலுக்கு போய் வரச்சொல்லுவார்கள்...எனக்கு இஷ்டம் இல்லாவிட்டாலும் அவர்களுக்காக போய் வருவேன்...எந்த வேண்டுதலும் இருக்காது...


    ஆனால் இப்போது வாய்ப்பு இல்லை..தொலைபேசியல் பேசினோம்..புதியதாக துணிகள் வாங்குமாறு சொன்னார்கள்..நானும் சரி என்று சொன்னேன்..கோவிலுக்கு போக சொன்னார்கள்..அதுக்கும் சரி என்றேன்..ஆனால் இந்த இரண்டையும் செய்யவில்லை...


    இன்று மாலைவேறு என் அன்பு காதலிக்கு கொஞ்சம் நேரம் ஒதுக்கி இருந்தேன்..அவளை சந்திக்க வேண்டும்....பரிசு ஏதும் கொண்டு வரமாட்டாள்..ஏற்கனவே நான் போன வருடம் மறுத்து இருக்கிறேன்..


     எனக்கு பிறந்தநாள் கொண்டாடுவது என்பது பிடிக்காத ஒன்று..என்ன காரணம் என்று தெரியவில்லை...அந்த நாளில் கடந்த ஆண்டுகளை பற்றி கொஞ்சம் நினைத்து பார்ப்பேன்..அவ்வளவுதான்..அதோடு சரி....இதற்காக போன வருடம் நாங்கள் இருவரும் சண்டைபோட்டு கொஞ்ச நாள் பேசிக்கொள்ளாமல் இருந்து..பின் சமாதானம் ஆனோம்..


     எனவே இந்த முறை அவள் பரிசு ஏதும் வாங்கி வர மாட்டாள்..வழக்கம் போல கொஞ்சம் நேரம் பேசுவோம் ..அதோடு சரி...


    ஆனால் இந்த வருட என் பிறந்தநாளுக்கு சில கடிதங்கள் வந்து இருந்தது...அதுவும் சாதாரணமானது இல்லை எல்லாம் சந்கேதமொழியில்..அதை கண்டுபிடித்து என் வலைப்பூவில் எழுதி இருந்தேன்...புரியாத பரிசுகள், ஒரு பரிசு என்ற தலைப்பில்....


   அதே போல் நேற்றும் எனக்கு ஒரு கடிதம் வந்து இருந்தது...அதே சங்கேத பாசை முறையில்...

     ஏற்கனவே வந்த இரண்டு கடிதங்களை நான் எளிமையாக கண்டுபிடித்து விட்டதாலோ என்னவோ இந்த முறை கொஞ்சம் கடினமானதாக இருந்தது..அதுவும் ஒரு பெண் எழுதியதுதான்...


     எவ்வளவோ முயன்று பார்த்தேன் அதை கண்டுபிடிக்க முடியவில்லை...அந்த கடிதம் என் கையில்தான் இருந்தது...


     அவள் எனக்காக காத்து இருந்தாள்..சிரித்த முகத்துடன் வாழ்த்துக்கள் சொன்னாள்..நினைத்தமாதிரியே பரிசு எதுவும் கொண்டுவரவில்லை...சந்தோசம்..மீண்டும் சண்டை சச்சரவுகள் இல்லை...


    பேசிக்கொண்டு இருக்கும்போது என் கையில் இருந்த கடிதத்தை அவளிடம காட்டி..இந்த மாதிரி எனக்கு ஏற்கனவே இரண்டு கடிதங்கள் வந்து இருப்பதையும் ..அதை நான் கண்டுபிடித்துவிட்டதையும் சொன்னேன்....


இதை ஏன்? முதலில் சொல்லவில்லை என்றாள்..

     அது ஒரு பெண்ணிடம் இருந்து வந்து இருந்தது அதான் உன்னிடம் சொல்லவில்லை..அப்படி சொன்னால்..நீ என்னிடம் சண்டைபிடிப்பாய்..என்றேன்.....

    அந்த கடித விசயத்தை சொன்னதில் இருந்தே அவளின் முகத்தில் ஒருவித புன்னகை கலந்த பேச்சு இருந்து வந்தது...


    நான் கொடுத்த கடிதத்தை பிரித்தவரே அப்படி என்ன கஷ்டமான ஒன்று....என்று அதை படிக்க ஆரம்பித்தாள்....


அதில் இருந்தது..



க நி பூ பொ ர          = ஐன்ஸ்டீன் தாத்தாவின் வெளிநேரம்...




ம் மா ர் பி ற்              = 4 2 3 = 20 ,, 1 2 3 = x




சே ம பி கொ யா = autosome





டி லா ன் மி இ        = phi


     இதை படித்தவுடன் என்னை பார்த்து சிரித்தாள்...இதை உன்னால் கண்டு பிடிக்க முடியலையா? என்ன என்று கேட்டாள்....நான் அவளிடம் இது உனக்கு எளிமையாக இருக்கா என்ன? என்றேன்...

    அதற்கு அவள் இதை உருவாக்கியவளுக்கு எளிமையாக இருக்காமல் பின்ன என்ன கஷ்டமாகவ இருக்கும் என்றாள்....எனக்கு புரியவில்லை..அவள் தொடர்ந்தாள்...


     உனக்கு இதுக்கு முன்னாடி வந்த இரண்டு கடிதங்களும் நான் அனுப்பியதுதான்...அதை நீ சரியாக கண்டுபிடித்துவிட்டாய்.........நான் நினைத்தேன் இதையும் கண்டு பிடித்துவிடுவாய் என்று.ஆனால் உன்னால் முடியவில்லை....என்றாள்..

    எனக்கு ஆச்சர்யம் முன்னால் வந்த கஷ்டமான சங்கேத பாசை கடிதங்களை இவளா எழுதியது என்று........அதே ஆச்சர்யத்துடன் அவளிடம் கேட்டேவிட்டேன்..உணமையில் நீயா அந்த கடிதங்களை எழுதியது என்று..


    அதற்கு அவள் ஆம் என்றாள்....சரி அப்படி என்றால் இதுக்கும் நீ விடை சொல்லிவிடேன் என்னால் முயன்றும் கண்டு பிடிக்க முடியவில்லை என்றேன்...


     அதற்கு அவள் நான் சொல்ல மாட்டேன்....நீயே கண்டு பிடித்துகொள்..அப்படி கண்டுபிடித்துவிட்டால்..அது உனக்கு ஒரு மிகபெரிய பிறந்தநாள் பரிசாக இருக்கும்..அது என்னவென்று நீ கண்டுபிடித்த பிறகு தெரியும் என்றாள்....


    அவளிடம் எவ்வளவோ கேட்டும் சொல்ல மறுத்தாள்....நீயே கண்டு பிடி..அது உனது பிறந்த நாள் பரிசுதான்......என்று சொல்லிவிட்டாள்....பரிசுபிடிக்காதுதான்..இருந்தாலும் இந்த எழுத்துக்களில் அப்படி என்ன பரிசை அவள் மறைத்து வைத்து இருக்க முடியம்..என்ற ஆவல்தான்....கண்டுபிடிக்க வேண்டும்....



(phi மற்றும் ஐன்ஸ்டீன் தாத்தாவின் வெளிநேரம் பற்றி தனியாக எழுத எண்ணம..அதற்கு முன் ஒரு சிறிய அறிமுகத்திற்கு இங்கு குறிப்பிட்டு இருக்கிறேன்....



மேலும் இதில் நான் சொல்லி இருக்கும் பரிசை கண்டு பிடித்து சொல்லுங்கள்...எளிமையான ஒன்றுதான்...)

12 comments:

எல் கே said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் .. நீடுழி வாழ வாழ்த்துக்கள் தம்பி

கணேஷ் said...

LK said...
பிறந்த நாள் வாழ்த்துக்கள் .. நீடுழி வாழ வாழ்த்துக்கள் தம்பி///


உங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி அண்ணா...

Mythees said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் ...

கணேஷ் said...

mythees said...
பிறந்த நாள் வாழ்த்துக்கள் ...///



உங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி....

(((யாரவது நான் மேலே சொன்ன பரிசு என்னவென்று கண்டுபிடிக்கலமே))))

நிலாமதி said...

பிறந்த நாள் ....வாழ்த்துக்கள் உங் களுக்கு .விடை ( திருமணதுக்கான நாள் அனுமதி) .....குறிப்பிட்டு இருப்பார்.

கணேஷ் said...

நிலாமதி said...

பிறந்த நாள் ....வாழ்த்துக்கள் உங் களுக்கு .விடை ( திருமணதுக்கான நாள் அனுமதி) .....குறிப்பிட்டு இருப்பார்////


உங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி..

உங்களின் விடை தப்பு..முயற்சி செய்து பாருங்கள்))))

Gayathri said...

பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

have a rocking happy long life bro..

கணேஷ் said...

Gayathri said...

பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

have a rocking happy long life bro..////

வாழ்த்துக்கு ரெம்ப நன்றி அக்கா...

சௌந்தர் said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பா

கணேஷ் said...

சௌந்தர் said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பா////


வாழ்த்துக்கு மிக்க நன்றி

ஆனந்தி.. said...

கணேஷ்..அந்த புதிரு க்கு விடை தான் என்ன??

கணேஷ் said...

ஆனந்தி.. said...

கணேஷ்..அந்த புதிரு க்கு விடை தான் என்ன??////

அந்த புதிரை தீர்த்தால் ஒரு பெண்ணின் பெயர் வரும்....அதை நீங்களே கண்டுபிடியுங்கள் மிக எளிமையானதுதன்...