தாயைபோல மட்டும்தான் சேய்...!!!

 (இந்த கதையை நீங்கள் படிக்க நினைத்து தொடங்கினால்......... இந்த கதைக்கு ஒரு பெருமை உண்டு.அதை கதையின் கடைசியில் சொல்லி இருக்கிறேன்...கதையை படிக்காமல்  சென்று அதை படித்தால்  புரியாது...!!!!)     


     இந்த வருட சிறந்த அறிவியல் ஆராய்ச்சிக்கான விருது இந்த முறையும் அவனுக்கு கிடைத்து இருந்தது.....இது அவனுக்கு இரண்டாவது முறை...

     இந்த விருதுகள் ஒன்றும் அவனுக்கு சாதரணமாக கிடைத்து இருக்கவில்லை..தனது வாழ்நாளின் பெரும்பகுதியை அந்த விருதுகளுக்கு செலவிட்டு இருந்தான் என்பதே உண்மை..அதுவும் இந்த இளம் வயதில்...இந்த மாதிரியான ஒரு சாதனை என்பது மிகபெரிய விஷயம்....

     இது என்னமோ அவனுக்கு ஒரு பெரிய மகிழ்ச்சியாக இருந்தாலும்..சில வருடங்களுக்கு முன்னால் திருமணமான அவனது மனைவிக்கு மகிழ்ச்சியை தரவில்லை....

     எப்போது பார்த்தாலும் எதாவது ஆராய்ச்சி ..ஆய்வுகூடம் என்று சுற்றி திரியும் கணவன் ....தன் மீது எந்தவொரு பாசமோ அக்கறையோ இல்லாமல் சுற்றுவது அவளுக்கு பிடிக்கவில்லை...

      சிலமுறை சொல்லியும் பார்த்தாள்....அவன் அதை கேட்பதாக இல்லை....அவனது எண்ணம முழுதும் அவனது ஆரய்ச்சிலேயே இருந்தது..இவளுக்கு அவனின் அன்பு,காதல் கிடைக்காத சோகம்.......தனது வார்த்தைகளை கணவன் கேட்கவில்லை என்ற ஒரு வெறுப்பு..மனம் முழுவதும் பரவி இருந்தது..

     அவளின் அம்மா..மற்றும் உறவினர்களிடம் இது பற்றி விவாதித்து பார்த்தாள்.......அவர்கள்..எல்லாம் ஒரு குழந்தை பிறந்தால் சரியாகிவிடும் என்ற ஆறுதல் வார்த்தையை மட்டுமே சொன்னார்கள்..

      அதற்கும் வாய்ப்பு இல்லை...இருவருமே சேர்ந்து பேசி இப்போதைக்கு குழந்தை வேண்டாம் என முடிவெடுத்து இருந்தார்கள்......இது அவனது கருத்து மட்டும்தான்.....

   அவளுக்கு எப்போதும் ஒரு பயம் இருந்தது....அப்படியே குழந்தை பிறந்தாலும்..அந்த குழந்தையும் அப்பாவை போல அறிவியல்..... ஆராய்ச்சி என்று தன்னை பிரிந்து தனியாக சென்று விட்டால்...........தன் மீது அன்பு செலுத்த..குடும்ப வாழ்க்கை வாழ வழியே இல்லாமல் போய்விடும்..என்ற பயம்தான் அவளுக்கு...

     இந்த பிரச்சினைகளுக்கு எதாவது செய்து ஆகவேண்டும்.........அவளது நல்ல மனது அவனை விட்டு பிரிந்து செல்லவும் மனம் வரவில்லை.......கணவன்தான் இப்படி .........ஆனால் பிறக்கும் குழந்தை என்னோடு இருக்க வேண்டும் என்ற ஆசை அவளுக்கு...அதற்கு என்ன செய்ய போகிறோம் என்ற கவலையில் இருக்கும் போதுதான்..தற்செயலாக கணேஷ் எழுதிய  மரபுரிமை எப்படி?..என்ற  ஒரு பதிவை வாசித்தாள்..

     அந்த பதிவில் செல்களுக்கிடையே எப்படி மரபு சம்பந்தபட்ட விஷயங்கள் கடத்தபடுகின்றன......எந்த நிலையில் இருந்து எப்படி..கடத்தபடுகின்றன என்பதை பற்றி கொஞ்சம் இருந்தது.....மேலும் அதில் மரபு பண்புகளை கடத்த காரணமாக இருப்பது CENP-A என்ற மூலக்கூறுதான்..இந்த CENP-A என்ற மூலக்கூறுதான் கருமுட்டையில் (ZYGOTE) இருந்தே  செல்களுக்கிடையே மரபு பண்புகளை கடத்தும் என்று அதில்  இருந்தது......

     இதை படித்தவுடன் அவளுக்குள் ஒரு திட்டம் உருவானது........தனக்கும் ஒரு குழந்தை வேண்டும் ....ஆனால் அது அப்பாவின் குணநலன்களை பெற்று இருக்க கூடது...தனது மரபையே பெற்று இருக்க வேண்டும்...இது சாத்தியமா..என்று யோசித்தாள்....

     அவள் படித்தபடி பார்த்தால்...கருமுட்டையில் இருந்து நடக்கும் செல்பிரிதலின் போது இந்த CENP-A என்ற மூலக்கூறு வழியாக மரபு விசயங்கள் கடத்தபடுகின்றன…

     அப்படி கருமுட்டையில் இணையும்  அவளது கணவனின் இன்பெருக்க அணுவில்  உள்ள குரோமோசோம்களில் உள்ள இந்த CENP-A என்ற மூலக்கூறுவை கொஞ்சம் மரபு பண்புகளை கடத்தமுடியாத படி மாற்றியமைத்து தனது கணவனுடைய மரபு பண்புகளை பிறக்கபோகும் குழந்தைக்கு இருக்காமல்...முழுக்க முழுக்க தன் பண்புகளையே கொண்ட குழந்தையை பெறுவதுதான்..அவளுடைய திட்டம்....

      அடுத்து...தனது கணவனிடம் பொய் சொல்லி மருத்துவமனைக்கு அழைத்துசென்று அவனுடைய இனப்பெருக்க அணுவை தனது ஆராய்ச்சிக்கு எடுப்பது அவளுக்கு ஒன்றும் கடினமானதாக இல்லை....

      CENP-A என்ற மூலக்கூறுவை மாற்றியமைப்பது சாத்தியமா....கொஞ்சம் தேடிப்பார்த்தாள் ...இது இருப்பது குரோமோசோம் மத்தியில்..அதாவது இரண்டு க்ரோமோடின் இலைகள் சந்திக்கும் இடத்தில..அதாவது centrome என்ற இடத்தில........இதில் இருந்து க்ரோமோடின் இருக்கும் நீளத்தை வைத்துதான்..குரோமோசோம்கள் பிரித்து அறியப்படுகின்றன...

      சரி எப்படியோ இவள் மேலே சொன்னபடி கற்பனை செய்துமட்டும் பார்த்தால் போதுமானதாக இருக்காது..அதை எப்படி செயல்படுத்துவது..இது மிகவும் கஷ்டமான ஒருவகையில் ஆபத்தான விசயமும் கூட....

      இது சம்பந்தமாக சில மருத்துவர்களை சந்தித்து பேசி ..சில நிபந்தனைகளோடு இதனை செய்ய ஒப்புக்கொண்டு..எப்போது எப்படி செய்ய என்பன பற்றி பேசி முடிவு எடுக்கபட்டது...

     அதான் படி இந்த சோதனையை IVF (IN VETRO FERTILISATION) முறையில் செய்ய முடிவு எடுத்து இருந்தார்கள்..அதாவது முதலில் கணவனுடைய இனப்பெருக்க செல்லில் இருந்து அந்த CENP-A என்ற மூலக்கூறுவில் தேவையான மாற்றங்களை செய்துவிட்டு..பின் அதை பெண்ணின் இனபெருக்க அனுவோடு இணையவைத்து..அதை மீண்டும் அவளுடைய கருப்பையில் வளரவைப்பது...

     அதாவது இந்த முறையில் செயற்கையாக ஆண்,மற்றும் பெண் இனப்பெருக்க செல்களை இணையவைத்து ..வெளியில் கருமுட்டையை(ZYGOTE) உருவாக்கி பின் அதை கருப்பையில் கருவாக வளரவைப்பது...

     இந்த வேலைகள் அனைத்துமே அவனது கணவனுக்கு தெரியாமலே நடந்து முடிந்தது......அவனை பொறுத்தவரையில் தனது மனைவி கர்ப்பமாக இருக்கிறாள் என்ற சந்தோசமே....அவனுக்கு அவனது ஆராய்ச்சியின் மீதே முழுகவனமும்....மற்றபடி அவனுக்கு எதுவும் தெரியாது....

   மருத்துவர்களின் கண்காணிப்பில் எந்தவொரு பிரச்சினையும் இல்லாமல் கரு நன்றாக வளர்ந்து..குழந்தையாக பிறந்தது..அதுவும் பெண்குழந்தை...அவளுக்கு மிக சந்தோசம்...

   பெண் குழந்தை... அப்படியென்றால்..மருத்துவர்கள் தங்களது வேலையை சரியாக செய்து இருக்கிறார்கள்..என்று நினைத்து கொண்டாள்.....குழந்தை வளர்ந்து பெரியவள ஆனாள்...


சரியக 28 வருடங்கள் கழித்து..

    இந்த முறை சிறந்த அறிவியல் ஆராய்ச்சிக்கான விருதை அந்த 28 வயது பெண் பெற்று இருந்தாள்...தனது அப்பாவைவிட மிக குறைந்த வயதில் வயதிலியே இந்த விருதை பெற்று இருந்தாள்..

    மருத்துவர்கள் CENP-A என்ற மூலக்கூறில் செய்த தவறு அந்த கரு முழுவதும் அவனது குரோமோசோம் ல் உள்ளதையே இதுவரை கடத்தி வந்து கொண்டு இருக்கின்றது .......இனியும் செவ்வனே கடத்தும்.....



     ((((((இந்த கதை முதன்முதலில் CENP-A என்ற மூலக்கூறை வைத்து எழுதப்பட்ட ஒரு அறிவியல் புனைவு கதை..அதுவும் தமிழில்...இந்த மாதிரி நிறைய அறிவியல் புனைவு நான் எழுதி இருந்தாலும் அதில் நான் பயன்படுத்தபட்ட விசயங்கள் எனக்கு தெரியாமல் எங்காவது பயன்படுத்தபட்டு இருக்கலாம்...
   ஆனால் இந்த  CENP-A என்ற மூலக்கூறு மரபுகளை கடத்துவது கண்டுபிடிக்க பட்டது  இந்த மாத 16 &17 தேதிகளில்தான்...)))))

6 comments:

Gayathri said...

ஹஹா நல்ல பல்பு..நல்ல தகவலும் கூட...அப்பாவோட க்ரோமொசொம்ஸ்
வந்துருக்குன்ன எப்படி தாயைபோல மட்டுமே சேய் என்று சொல்றீங்க..

நிலாமதி said...

சிலது நடைமுறை சாத்தியமானதா என் எண்ண தோன்றுகிறது.அறிவியலும் புரட்சிகரமான கற்பனையும் சேர்ந்த பதிவு. வித்தியாசமாக் இருக்கிறது .

கணேஷ் said...

Gayathri said...

ஹஹா நல்ல பல்பு..நல்ல தகவலும் கூட...அப்பாவோட க்ரோமொசொம்ஸ்
வந்துருக்குன்ன எப்படி தாயைபோல மட்டுமே சேய் என்று சொல்றீங்க///

அக்கா முயற்சி செய்வது அம்மாவுடைய குரோமோசோம் க்கு தானே..அதான் அப்படி பெயர் வைத்தேன்...நன்றி

கணேஷ் said...

நிலாமதி said...

சிலது நடைமுறை சாத்தியமானதா என் எண்ண தோன்றுகிறது.அறிவியலும் புரட்சிகரமான கற்பனையும் சேர்ந்த பதிவு. வித்தியாசமாக் இருக்கிறது .///

இதில் நான் சொன்ன IVF முறை சாதாரணமாகவே நடைமுறையில் இருக்கும் ஒன்று...

அந்த CENP-A மூலக்கூறுவில் மாற்றம் என்பதுதான் என் கற்பனை.

உங்களின் கருத்துக்கு நன்றி...

thiyaa said...

நல்ல ஆய்வு முயற்சி
முயற்சி திருவினையாக்கும்
ஹி...ஹி... ஹி...(சிரித்தேன்
)

jothi said...

பிரிச்சு மேய்ஞ்சிட்டீங்க,..
கலக்கல் பதிவு,.. இது போன்ற பதிவுகள் ஹிட் ஆவதில் இன்னும் சந்தோசம்,..