ஹிப்னாடிச காதலி....

     கல்லூரியில் படிக்கும்போது பாட சம்பந்தமான புத்தகங்களை படிக்க மட்டுமே அதிக தயக்கம்.......மற்றபடி வேறுசில புத்தகங்களை படிப்பதில் எந்த ஒரு தயக்கமும் இருந்தது இல்லை......எதையாவது புதியதாக தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வமே..காரணம்..

     புத்தகம் வாசிப்பு சம்பந்தமாக இருந்ததாலோ தெரியவில்லை......காதலை விட்டு வெகு தூரத்தில் இருந்தேன்...அதற்காக தனியாக நான் முயற்சி செய்யவில்லை அதனால் காதலும் என்னை தேடி வரவில்லை... இப்படி சில நாட்கள்தான் இருக்க முடியும் என்பதை ஒருநாள் உணர்ந்தேன்..
   
     அதை சொல்வதற்கு முன் ஒரு பெண்ணை பற்றி சொல்லிவிடுகிறேன்..அவள நான் இருக்கும் தெருவுக்கு பக்கத்து தெருதான்..

    அழகாய் இருப்பாள்...நன்றாக படிப்பவள்...ஆனால் கல்லூரியில் வேறு பிரிவில் படிப்பவள்.... போகும்போது வரும்போது பார்ப்போம்......அப்படியே கல்லூரிக்கு உள்ளே பார்த்து கொண்டாலும் பேசுவது இல்லை.. நான் பார்ப்பதை அவள் பார்த்து விட்டாலோ அல்லது அவள் பார்ப்பதை நான் பார்த்துவிட்டாலோ இருவருமே பார்வையை துண்டித்து கொள்வோம்..இது சில மாதங்களாகவே நடந்து கொண்டு இருந்தது...

     தற்செயலாக நான் நூலகத்தில் இருக்கும்போது அவள் வந்து இருந்தாள்...அப்போதும் அந்த பார்வை இடறல்கள்......

   அவள்தான் கேட்டாள்.."நீ அப்படி என்னதான் படிப்பே நான் எப்போது பார்த்தாலும் புத்தகமும கையோடு இருக்கிறாயே" என்றாள்..

    எனக்கு ஆச்சர்யம்..எப்படி அவளாக வந்து பேசுகிறாள்..என்று..நான் அப்போதைக்கு..."சும்மா அப்படியே..எதாவது ஒன்றை கற்றுக்கொள்ளவேண்டும் என்ற ஆர்வம்தான்" என்று மட்டும் சொல்லி வைத்தேன்..வேறேதும் நாங்கள் பேசவில்லை...

   சில நாட்கள் கழித்து கல்லூரி முடிந்து செல்லும்போது தற்செயலாக இருவரும் ஒரே நேரத்தில் செல்ல நேர்ந்தது....அப்போது இருவரும் சந்தித்து கொண்டோம்...

     நான்தான் பேசினேன்..எல்லாம் எனக்கு அவளை பற்றிய தெரிந்த விஷயங்கள்தான் இருந்தாலும் அப்போதைக்கு எதாவது பேசவேண்டுமே என்பதற்காக பேசினேன்...

   அன்றைய தினத்தில் என் மனதில் இரண்டு மூன்று முறை அவள் வந்து சென்றாள்..

   இப்போதெல்லாம் அவள் என்னை பார்க்கும் போது நான் பார்த்து விட்டால் பார்க்காதது போல நடிப்பதில்லை மாறாக சிறிய புன்னகையை..உதிர்ப்பாள்..அழகாய் இருக்கும்... அவளின் முகத்திற்கு...

     அடுத்து வந்த நாட்களில் கல்லூரியில் நேரம் கிடைக்கும்போது பேசிகொள்வோம்...சில தினங்களில் அவளுடன் பேச என் மனம் விரும்பியதுண்டு... மேலும் கல்லூரி வரும் மற்றும் போகும் போது இருவருமே சேர்ந்தே செல்ல ஆரம்பித்தோம்...அவளால் என் மனதில் சிறிய மாற்றம் உண்டாகியிருந்தது எனபதுதான் உண்மை....அந்த மாற்றம் காதல் என்பது மற்றொரு நாளில்தான் எனக்கு தெரியவந்தது...

   நான் அப்போது மிக ஆர்வமாக படித்து கொண்டு இருந்தது ஹிப்னாடிசம் சம்பந்தமான ஒன்று..அன்று எப்போதும் போல அவள் வந்தாள்..."என்ன படிக்கிறே நான் வருவது கூட தெரியாமல்" என்றாள்..

    நான் படித்துக்கொண்டு இருந்த புத்தகத்தை அவளிடம் காட்டி "ஹிப்னாடிசம் சம்பந்தமாக" என்றேன்..

  "ஐயோ இது சம்பந்தமாக ஏன் நீ படிக்கிறே!!!!"..என்றாள் கொஞ்சம் ஆச்சர்யத்தோடு..

    "ஏன் இதில் என்ன இருக்கின்றது" என்றேன்..அதற்கு அவள் "இது தெரிந்தால் மற்றவர்களை மயக்கி தன வயப்படுதிவிடலாம் என்று நான் எங்கோ படித்து இருக்கிறேன்" என்றாள்..


     அதற்கு நான் "அப்படி ஒன்றும் இல்லை அது எல்லாம் ஹிப்னாடிசம் பற்றி தவறான கருத்துகள்..நீ படத்தில் பார்த்திருப்பே.. அதையெல்லாம் நம்பாதே"..என்றேன்..அதற்கு அவள் "சரி நான் அதை நம்பவில்லை ..நீ சொல் உண்மையில் அது அப்படி இல்லையா என்ன? என்றாள்...

    "ஆமாம்"என்றேன்..அதற்கு அவள் "அப்படியென்றால் அதில் அப்படி என்னதான்    இருக்கிறது" எனறாள்..

    "ஹிப்னாடிசம் என்பது நீ நினைப்பது போல ஒருவரை அப்படியே மயக்கி தூங்க வைத்து அவரை தன்வயப்படுதுவது எல்லாம் இல்லை"...

     உனக்கு ஒன்னு தெரியுமா உன் அனுமதி மற்றும் ஒத்துழைப்பு இன்றி யாராலும் உன்னை ஹிப்னாடிசைய்ஸ் செய்ய முடியாது..எப்போது உன் உள்மனது முழுமையாக ஹிப்னாடிசம் செய்பவரோடு ஒத்துபோகின்றதோ அப்போதுதான்..அவர் உன்னை ஹிப்நோசிஸ் செய்ய முடியும்..என்றேன்..

     நம்மில் மனம்(conscious mind),மற்றும் ஆழ்நிலைமனம்(sub conscious mind)  என்ற இரண்டு இருக்கின்றது..அது பற்றி உனக்கு தெரியுமா என்றேன்....அதற்கு அவள்..அதிகமாக தெரியாது என்று சிரித்துக்கொண்டே தலையாட்டினாள்..அதுவும் அழகாய்த்தான் இருந்தது....

     சரி இப்போது ஒரு விமானத்தை ஒரு விமானி இயக்குகின்றார் என்று வைத்து கொள்..அவர்தான் நம் மனது...அவர் என்ன செய்வார் சாதாரண வேலைகளை  மட்டுமே..அதாவது அவருக்கு கொடுக்கப்பட்ட தடத்தில் சரியாக விமானத்தை செலுத்துவது, விமானத்தில் ஏற்ப்படும் மாற்றங்களை கண்டுகொள்வது போன்ற வேலைகள்.. ....எப்படி நாம் அன்றாடம் வேலைகளை செய்கின்றோம் அது போல..

     ஆனால் ஆழ்மனது என்பது அந்த விமானிக்கு தரையில் இருந்து கட்டளைகள் கொடுப்பவர்...மேல இருக்கும் விமானி கிழே இருப்பவர் என்ன கட்டளைகள் கொடுக்கின்றரோ அதைத்தான் செயல்படுத்துவார்...

     அதே போலத்தான் நம்மில நடக்கும்..அன்றாட வேலைகளை நமது மனது பார்த்து கொள்ளும்..ஆனால் நம் மனது செய்யும் ஒவ்வொரு வேலைகளுக்கு பின்னால் நமது ஆழ் மனதின் செயல்பாடு கண்டிப்பாக இருக்கும்...

     அப்படி நம் மனதில் ஏற்ப்படும் சில சிக்கல்களை,பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நேராக நம் மனதிற்கு கட்டளைகள் கொடுக்கும் ஆழ் மனதோடு பேசி அதற்கு சில கட்டளைகள் கொடுத்து அதான் மூலம் நமது மனதில் ஏற்பட்ட பிரச்சினைகள் சரிசெய்வதுதான் ஹிப்னாடிசம்...இது பல்வேறு காரணங்களுக்காக பயன்படுகின்றது...முக்கியமாக மருத்துவத்திற்கு...

     "இப்போ புரிகின்றதா ஹிப்னாடிசம் என்றால் என்ன" என்றேன்..அதற்கு அவள் "புரிகின்றது "என்று தலையாட்டினாள்...இப்போதும் அது அழகாய்த்தான் இருந்தது...

     "சரி அதுக்கு எதுக்கு நம்மை தூங்க வைக்கவேண்டும்' என்றாள்..அதற்கு நான் "உனக்கு யார் சொன்னா ஹிப்னாடிசம் த்தில் தூங்க வைப்பார்கள் என்று..அதெல்லாம் பொய் புரட்டு வேலை'...

     ஹிப்னாடிசம் செய்யும் போது நீ நினைவோடுதான் இருப்பாய்..உன் மனது செயல் இழந்து இருக்கும்..அதே நேரத்தில் உன் ஆழ் மனது செயலில் இருக்கும் என்றேன்...

அவள் உடனே "உனக்கு செய்ய தெரியுமா?' என்றாள்..

    "கொஞ்சம் தெரியும்" என்றேன்..... இப்போதுதான் அது சம்பந்தமாக படித்து கற்று கொண்டு இருக்கிறேன் என்றேன்..

     "அவள் உடனே எங்கே என்னை செய் பார்ப்போம்" என்றாள்..."அது எல்லாம் வேண்டாம்" என்று மறுத்து..."எதாவது பிரச்சினை ஆகிவிடும்'.என்றேன்..

     "ஒன்றும் பிரச்சினை இல்லை ஒருமுறை செய்துதான் பாரேன" என்றாள் வலுக்கட்டாயமாக......"சரி "என்று சொல்லி அவளை ஹிப்நோடிசம் செய்ய தயாரானேன்..

     ஏதோ கொஞ்சம் படித்த அறிவை வைத்து முதலில் அவளின் மனதோடு பேசி அப்படியே அவளின் ஆழ் மனதோடு பேச முயற்சித்தேன்...

    அவளும் நம்பிக்கையாக ஒத்துழைத்தாள்..ஒருவழியாக அவளின் ஆழ் மனதோடு பேச ஆரம்பித்தேன்...

     ஒரு கட்டத்தில் எனக்கு மிக ஆர்வம மிகுதியால்.."நீ யாரையாவது காதலிக்கின்றாயா" என்று கேட்டுவைத்தேன்...

      அதற்கு அவள் மெதுவாக.."ஆமாம்..நான் கடந்த சில மாதங்களாக கணேஷ் என்பவனை காதலிக்கிறேன்..ஆனால் அவன் என்னை காதலிக்கின்றான?? என்று எனக்கு தெரியாது" என்றாள்...

     அப்போது என் இதயம் இருந்த நிலை ....அப்படியே  பட்டாம் பூசசி வானத்தில் பறப்பது போல இருந்தது..எல்லாம் ஹோர்மோன்களின் வேலைதான்.......

   அந்த நிகழ்வு நடந்த சில நாள்கள கழித்து அவளிடம் என் காதலை சொன்னேன்....அவள் "நானும் உன்னை காதலிக்கிறேன்" என்றாள்..

      "அது எனக்கு முன்னாடியே தெரியும் நான் உன்னை ஹிப்னாடிசம் செய்தேன் நினைவிருக்கா??... அப்போதே உன் மனதில் இருப்பதை தெரிந்து கொண்டேன்" என்றேன்..

      நான் இதை சொன்னவுடன்..அவள் சிரிக்க ஆரம்பித்தாள்.."எதுக்கு சிரிக்கிறே" என்றேன் அவளிடம்......அவள் கொஞ்சநேரம் சிரித்து விட்டு..

      "ஒன்றும் இல்லை..நீ ஹிப்னாடிசம் செய்த அன்று நான் சாதாரணமாகத்தான் இருந்தேன்...அந்த நிலையில்தான் நீ கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தேன்...எனக்கே ஆச்சர்யம் நீ யாரையாவது காதலிக்கின்றாயா என்று கேட்டது...இதுதான் நல்ல சமயம் என்று நினைத்து நான் உன்னை காதலிப்பதை சொல்லி விட்டேன்..அன்று நான் அப்படி சொல்லவில்லை என்றால் இன்று நீ என்னிடம் காதலை சொல்லி இருக்கமாட்டாய்".... என்றாள்...

     அது எனக்கு சந்தோஷமான விஷயம் என்றாலும் அன்று நான் அவளை ஹிப்னாடிசம் செய்ததில்  இருந்து.... எனக்கும் ஹிப்னாடிசம் தெரியும் என்று நினைத்து  கொண்டிருந்தேன் ..இதை சொன்னதில் இருந்து அவள் எனக்கு ஹிப்னாடிசம் தெரியும் என்பதை பொய்யாக்கி விட்டிருந்தாள்...

13 comments:

அஞ்சா சிங்கம் said...

நல்ல புத்திசாலித்தனமான முடிவு பாராட்டுகள்.

கணேஷ் said...

மண்டையன் said...

நல்ல புத்திசாலித்தனமான முடிவு பாராட்டுகள்.\\\\\
உங்களின் பாராட்டுக்கு நன்றி...

Mythees said...

ரம்போ படிச்சு இருகிங்களோ............

கணேஷ் said...

mythees said...

ரம்போ படிச்சு இருகிங்களோ............////

அப்படியெல்லாம் இல்ல்லைங்க ...

சரி அது என்ன "ரம்போ" இதுவரைக்கும் இதை படிக்கல))))

Kiruthigan said...

அகா...
பதிவு நல்லாருக்கு

கணேஷ் said...

Cool Boy கிருத்திகன். said...

அகா...
பதிவு நல்லாருக்கு////

உங்களின் கருத்துக்கு நன்றி..

கருடன் said...

ஹா..ஹா..ஹா (கதையில்) நல்லா பல்பு வாங்கி வழிஞ்சி இருப்பிங்களே.

naveen said...

ada ponga sir romba mokkaya iruku

விருட் கார்த்திக் said...

ரொம்ப நல்லா இருக்கு......

Jagadeesh said...

Arumaiyana pathivu...

Jagadeesh said...

Arumaiyana pathivu..

Unknown said...

Alakana&Aalamana Kathal

Unknown said...

Vada Poche..