கல்லூரியில் சேர்ந்த புதிதில்.....இது என் கனவு.... இது என் லட்சியம்....இது எனது படிப்பிற்கு உதவியாக இருக்கும்.. என்று அப்பாவிடம் பொய் சொல்லி ஒரு பெருந்தொகையை பெற்று எப்படியோ..சிறியதாக ஒரு ஆய்வுகூடம் அமைத்து விட்டேன்...
சில நாள்கள் வரை அதில் கல்லூரியில் சொல்லி கொடுத்த சில அடிப்படை விசயங்களை செய்து முயற்சித்து பார்த்தேன்...சில நாள்களில் அதுவும் கொஞ்சம் வெறுப்பானது..
ஒருநாள் தற்செயலாக என் அப்பா என்னிடம்..ஆய்வுகூடத்தில் எதாவது உருப்படியாக செய்கின்றாயா? என்று கேட்டுவைத்தார்.....அப்போதைக்கு நான் ஒன்றும் சொல்லவில்லை..
ஆனால் அவரிடம் நிறைய பணம் வாங்கி இருக்கின்றேன்......அதனால் எதாவது ஒன்றை அவருக்கு செய்து அந்த அய்வுகூடத்தை நான் உருப்படியாக பயன்படுத்துகிறேன் என்பதை நிருபிக்கவேண்டும்...
அப்போது என் கல்லூரியில் GENOME பற்றி பாடம் போய் கொண்டு இருந்தது...அது தவிர என் சொந்த ஆர்வத்தால் சில புத்தகங்கள் தனியாக படித்து தெரிந்து கொள்ளும் முயற்சியில் இருந்தேன்..
அப்படி நான் தெரிந்து கொண்டதுதான்....மனிதன் மொழிகளை பேசுவதற்கு காரணமான சில LANGUAGE GENE களை பற்றி.....
அதை பற்றி வெறும் படிப்பறிவு மட்டுமே இருந்தது..இருந்தாலும் எனக்கு அதை எதாவது முறையில் சோதித்து பார்க்கவேண்டும் என்ற எண்ணம இருந்தது...அது அப்படியே என் அப்பாவுக்கு எனது பெருமையை எடுத்து சொல்வதாகவும் இருக்க வேண்டும் என எண்ணினேன்...
அப்படி நான் யோசித்து முடிவெடுத்தது..அந்த பேசுவதற்கு காரணமான GENE களை பேசமுடியாத உயிர்களில் செலுத்தி அதை பேச வைப்பது...
அதாவது நான் செய்ய முயன்றது..எங்கள் வீட்டு நாய்க்கு அந்த GENE களை செலுத்தி நாயை பேசவைப்பது...
முதலில் அந்த GENE ஐ மனித GENEOME இல இருந்து பிரித்து எடுத்தேன்..பின் அதை GENE CLONING முறையில் தனியாக அதை வளர்த்து குறிப்பிட்ட எண்ணிக்கையில்..சேகரித்து கொண்டேன்..
அதற்கு முன் அந்த GENE களை பற்றி சில விசயங்கள்......மற்றும் எனது முயற்சி ஏன் தோல்வியடைந்தது என்பதை சொல்கிறேன்...
மனிதன் மொழிகளை பேசுவதற்கு காரணமாக இருப்பதாக கண்டுபிடிக்கபட்ட GENE ன் பெயர்.FOXP2 . இது மனிதனின் குரோமோசோம் வரிசையில் ஏழாவது குரோமோசோம் ல் பொதிந்து இருக்கும்.....இதில் இருந்து வரும் சில ப்ரோடீன்கள் மற்றும் அமினோ அமிலங்கள்தான் சில ரசாயன மாற்றங்களை செய்து மனித மூளையில் மற்ற GENE களை தூண்டி மனிதன் மொழியை பேசுவதற்கு..புரிவதற்கு.. உதவும்....ஒருவேளை இதில் எதாவது குளறுபடி இருந்தால் (MUTATION) அவர்களுக்கு பேசுவதில் சிரமம்....வார்த்தை உச்சரிப்பதில் சிரமம் போன்ற பிரச்சினைகள் வரும்..
இந்த GENE களால் மூலையில் ஏற்படும் மாற்றம் என்பது உயிரினத்தில் அதன் தொடக்க காலங்களில் மட்டும்தான் நிகழும்...இது எனக்கு முதலில் தெரியாததும் எனது தோல்விக்கு ஒரு காரணம்....
நான் என் நாய்க்கு இந்த GENE களை செழுத்துவதினால் அதில் எந்த மாற்றமும் நடக்காது ..என்பதை பின்னர்தான் தெரிந்து கொண்டேன்.........ஏனென்றால் இந்த GENE ன் மாற்றம் அந்த நாயின் GENOME ல் தொடக்கத்தில் இருந்தே இருந்து இருக்க வேண்டும்...
இருந்தும் அப்போது எனது. முயற்சிகு உந்துதல் அளித்த விசயம் என்ன என்றால் இந்த GENE ஆனது ....மனிதர்களுக்கு மட்டும் இல்லாமல் ..மற்ற விலங்குகளுக்கும் இருந்ததுதான்...
ஆனால் மற்ற விலங்களுக்கு இதில் இருந்து சுரக்கும் அமினோ அமிலங்கள்,ப்ரோடின்கள் கொஞ்சம் வேறுமாதிரி.....அந்த அமினோ அமிலங்களில் இருக்கும் சில வேருபாடுகள்தான் மனிதனை மொழி பேசும் தன்மையுள்ளவனாக பிரிக்கின்றது.......இந்த GENE கள் சிம்பன்சி,கொரில்லா,உறங்குட்டான், எலி போன்ற விலங்குகளிலும் கண்டு கொள்ளப்பட்டு அதை ஆராய்ச்சி செய்து பார்த்ததில் இந்த மாதிரியான..சில விசயங்கள் தெரிய வந்தன.....
என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய விஷயம் என்னவென்றால்...இந்த GENE களில் இருந்து வெளிப்படும் அமினோ அமிலங்களின் வித்தியாசம் என்று பார்த்தால் நமக்கும் எலிக்கும் மொத்தம் மூன்றுதான்..அதைவிட சிம்பன்சி குரங்குக்கு வித்தியாசம் மொத்தம் இரண்டேதான்...
அடுத்து நமக்கு முன்னோர்கள் என்று கருதப்படும் நியாண்டர்தால் இனத்தில் கூட இந்த GENE ஆனது அப்படியே எந்தவித மாற்றமும் இல்லாமல் இருந்தது என்று இப்போது கண்டு பிடித்து இருக்கின்றார்கள்....அப்படி என்றால் அவர்கள் கூட பேசி இருக்க வாய்ப்பு இருக்கலாம் என்று கருதுகிறார்கள்...
மேலே நான் சொன்ன சில விசயங்கள் தான் நான் எனது ஆரய்ச்சியை தொடர காரணமாக இருந்தது.....ஒருவேளை அந்த GENE கள் நாய்க்கும் இருந்தால்?????.......என நினைத்துதான் நான் முயன்றேன்....
நான் இந்த மாதிரி எங்கள் வீட்டு நாயின் மீது சோதனை செய்ய போறேன் என்பதை முதலில் என் அப்பாவிடம் தான் சொன்னேன்...
அவர் முதலில் உன் விளையாட்டுத்தனமான ஆராய்ச்சிக்கு நமது நாயை ஏன் பலியாக்குகிறாய்..என்று மறுப்பு தெரிவித்தவர்.....பின்னர் நான் கொஞ்சம் விளக்கிய பிறகு சம்மதம் தெரிவித்தார்...
அன்று மாலை எங்கள் வீட்டு நாயை எனது ஆராய்ச்சி கூடத்துக்கு அழைத்து சென்றேன்..நல்ல நாய் ...... எல்லோர்க்கும் ரெம்ப பிடித்த நாய்..அதற்கு எதாவது என் ஆராய்ச்சியில் ஆனது என்றால்..எல்லோருடைய கோபமும் என் மீதுதான் இருக்கும்...
ஆய்வுக்கூடத்தில் நுழைந்த நாய்... அதுக்கு என்ன நிகழபோகின்றது என்பது தெரியாமல் வழக்கம் போல வாலை ஆட்டிக்கொண்டே என் பின்னால் வந்தது....
நான் ஏற்க்கனவே எடுத்து வைத்து இருந்த அந்த GENE களை அதன் கழுத்தில் ஊசியின் மூலம் ஏற்றினேன்..அப்போதைக்கு அதன் நடவடிக்கையில் எந்த ஒரு மாற்றத்தையும் என்னால் காண முடியவில்லை..
கொஞ்ச நேரத்தில் அதை வீட்டிற்கு அழைத்து சென்றேன்..அப்போது என் அப்பா என்னடா? ஆச்சு..என்றார்....அதன் பலன் தெரிய கொஞ்சம் நேரம் எடுக்கலாம் என்று சொல்லி சமாளித்தேன்....உணமையில் அந்த நாயுக்குள் என்ன நடக்கின்றது என்று எனக்கு தெரிந்து இருக்கவில்லை...
அன்று இரவு என் அப்பா என் வீட்டில் உள்ள அனைவரிடமும் சொல்லி விட்டார்..எல்லோரும் முதலில் கோபபட்டாலும்..அவர்களுக்கும் அந்த நாய்க்கு என்ன நடக்கும் என்ற ஆர்வம தொற்றி கொண்டது...அவர்களின் ஆர்வம..பேசும் நாயை பர்க்கபோகிறோம் என்றுதான்...அதுவும் என் ஆராய்ச்சியின் மூலமாக....
எல்லோரும் சேர்ந்து முடிவெடுத்து நாளை காலைவரை காத்து இருந்து பார்க்க முடிவெடுத்தோம்..
நாய் வழக்கம்போல நன்றாகத்தான்..தூங்கியது.....மறுநாள் காலை அந்த நாய்க்கு முன் நாங்கள் எழுந்து அது முதலில் என்ன பேசும் என்பதை அறியும் ஆவலில் அதற்கு முன்னால் சுற்றி ஆஜர் ஆனோம்...
அது வழக்கம் போல கண்விழித்தது ...நாங்கள் அதனை சுற்றி இருப்பதை பார்த்தவுடன் முதலில் கொஞ்சம் பயந்து.... பின்னர் செல்லமாக வாலாட்டியது...
எங்களின் எதிர்பார்ப்பு முதலில் அது என்ன பேசும் என்பதுதான்.....ஆனால் அது எங்களை சட்டை செய்யாமல்..தனது இடது காலால் இடது காது பக்கம்..சரியாக நான்கு முறை சொரிந்து விட்டு இடத்தை காலி செய்தது...
சரி எப்பையாவது பேசித்தானே ஆகவேண்டும் என்று நினைத்து கொண்டோம்...ஆனால் நான் ஆராய்ச்சி செய்த விதம....அதுவரை நன்றாக குறைத்து கொண்டு இருந்த நாய் அதற்கு பிறகு..அதன் வாழ்நாளில் ஒருமுறை கூட குறைக்க வே இல்லை.....பின்னே எங்கே பேசுவது...!!!!!
4 comments:
////அதுவரை நன்றாக குறைத்து கொண்டு இருந்த நாய் அதற்கு பிறகு..அதன் வாழ்நாளில் ஒருமுறை கூட குறைக்க வே இல்லை.....பின்னே எங்கே பேசுவது...!!!!!/////
கலியாணம் செய்து விட்டு மனைவி பேச்சை கேட்க்க முடியாமல் இருப்பவர்களுக்கு இந்த ஊசியை பயன் உள்ளதா இருக்கும்....இது வரை ஜோக்
நல்ல இருக்கு உங்கள் ஆராய்ச்சி நான் அந்த நாய் உயிருக்கு ஏதாவது ஆகிவிடுமோ பயந்தேன்
கலியாணம் செய்து விட்டு மனைவி பேச்சை கேட்க்க முடியாமல் இருப்பவர்களுக்கு இந்த ஊசியை பயன் உள்ளதா இருக்கும்....இது வரை ஜோக்
நல்ல இருக்கு உங்கள் ஆராய்ச்சி நான் அந்த நாய் உயிருக்கு ஏதாவது ஆகிவிடுமோ பயந்தேன்////
அந்த நாய்..எனது ஆரய்ச்சி எல்லாம் கதைதான்..எனவே பயப்பட தேவை இல்லை)))
அந்த ஊசி யாருக்கு வேணும்னு சொல்லவே இல்லை)))))
நன்றி
//அந்த அமினோ அமிலங்களில் இருக்கும் சில வேருபாடுகள்தான் மனிதனை மொழி பேசும் தன்மையுள்ளவனாக பிரிக்கின்றது......//
அப்படியா...??
கணேஷ் வழக்கம் போல் உங்க கதை மற்றுமொரு சிறந்த பகிர்வு. வாழ்த்துக்கள்.
அப்படியா...??
கணேஷ் வழக்கம் போல் உங்க கதை மற்றுமொரு சிறந்த பகிர்வு. வாழ்த்துக்கள்////
ஆமாம்..
உங்களின் வாழ்த்துக்கு நன்றி....
Post a Comment