இதற்கு முந்தைய பாகங்கள் படிக்க...
இருந்தாலும் இது
சம்பந்தமான மற்றொரு முறை அவருக்கு சாத்தியம் என பட்டது. அது தேறினால் கண்டிப்பாக
இரண்டாவதாக யோசித்து வைத்து இருக்கும் ஒளியின் வேக பயணம் தேவையில்லை.
அது எந்த
விதத்திலாவது வயதாகுவதை குறைப்பது. இதன்மூலம் கிட்டதட்ட மரணமில்லா மனிதர்களை உருவாக்குவது
சாத்தியம் என்பது அவரின் எண்ணம். செல்களின் பிரிதலை கட்டுபடுத்தி அதனை கட்டுக்குள்
கொண்டுவருவது இந்த மாதிரி ஏதவது செய்து அதிக காலத்துக்கு மரணத்தை தள்ளி போடுவதே
நோக்கம். வைத்தியை கடிதத்துடன் தொடர்பு கொண்டதும் இந்த ஒரு விசயத்துக்காகத்தான்.
அதே நேரத்தில் அவரது
இரண்டாவது முறையில் இருந்த சில சிக்கல்கள்களும் வைத்தியின் உதவியை நாட காரணமாக
இருந்தது. அவருக்கே அந்த இரண்டாவது முறையான ஒளியின் வேக பயணத்தில் நம்பிக்கை
இல்லை. இதுவரை அறிவியலில் தீர்க்கபடாத சிக்கல்கள் நிறைந்த ஒன்று.
ஒளியின் வேகபயணம்
என்பது ஒருபக்கம் இருந்தாலும் அதன் அடிப்படையில் வேறொன்றை செய்ய முயன்றுகொண்டு
இருந்தார். wormhole
ஐ வைத்து வேகமாக பயணிப்பது. இந்த wormhole கற்பனை வடிவில் மட்டும் இருந்தாலும் ஒளியின் வேக
பயணத்தை முயல்வதை விட இதன் மேல் அவருக்கு
நம்பிக்கை இருந்தது. காரணம் ஐன்ஸ்டீன் relativity theory ன் மூலம் இதை விளக்கியிருப்பதே.
எப்படி கருந்துளைகள்
இருக்கிறது என்பதை ஐன்ஸ்டீன் சொன்னபோது முதலில் கற்பனை மட்டும் என்று நம்பி பின்
அது இருப்பதை உணர்ந்ததை போல இந்த wormhole
விசயமும் இருக்கலாம் என்பது அவரது
நம்பிக்கை. relativity
theory ள் சொல்லியபடி space time ல் அதிக ஈர்ப்பு விசை மாற்றத்தினால்
ஏற்ப்படும் ஒரு துளை அல்லது ஒரு வெளிப்பகுதி என்று இதை சொன்னாலும் பெரிய அளவிலான
இரண்டு பிரப்ஞ்சங்களுக்கு இடையே இது இருக்ககூடும் என்பது புத்திக்கு சரியாகப்படவில்லை.
இரண்டு
பிரப்ஞ்சங்களுக்கு இடையே இருக்ககூடும் என் நம்பியதுக்கு காரணம் அந்த அளவிற்கு அதிக
ஈர்ப்பு விசை செயல்பட்டால்தான் இந்த துளைகளை ஏற்ப்படுத்தமுடியும். அதோடு இதை
ஏற்ப்படுத்தும் அணுக்களும் அதை சார்ந்தவற்றையும் மனிதன் இன்னும் சரியாக
கண்டுபிடித்து புரிந்துகொள்ளவில்லை.
இவற்றை ஏற்படுத்த
காரணமாக இருப்பதை அந்நியமானது அல்லது விசித்திரமானது என்பதே மனிதனின் இன்றைய
கணிப்பு. இந்த அளவு ஈர்ப்பு விசையை செயற்கையாக ஏற்ப்படுத்தி சோதிப்பது என்பதும்
இயலாத காரியம் என்பதால் இது சம்பந்தமான எந்த ஒரு சோதனை முயற்சியும் இல்லை.
ஆனால் அது
சாத்தியமாக்குவதில் நம்பிக்கை வைத்து இருந்தார் புத்தி.அதாவது தேவையான திசையில்,
பாதையில் warm
hole ளை உருவாக்கி அதில் வேகமாக பயணிப்பது.
அது விண்கலத்துக்கு சற்று முன் தோற்றுவிக்கப்பட்டு விண்கலத்தை தனது வழியில்
இழுத்து செல்லும் ஆனால் அதன் கட்டுப்பாடு விண்கலத்தில்தான் இருக்கும்.
எப்படியென்றால் ஒரு
பெரிய காந்தம் ஒரு குண்டூசியை தனது பக்கம் இழுக்கிறது ஆனால் அது ஒட்டுவதுக்கு
முன்னால் அது நகர்ந்து செல்கிறது மீண்டும் இழுக்கிறது குண்டூசி நகர அந்த காந்தமும்
தொடர்ந்து நகரும். இதுதான் புத்தி செய்ய போவதும். காந்தத்திற்கு பதில் அதிக
அளவிலான ஈர்ப்பு விசையை பயன்படுத்த திட்டம்.அந்த ஈர்ப்பு விசை warm hole உள்ளத்துக்கு நிகராக இருந்து விண்கலத்தை
தனதுபாதையில் இழுத்துசெல்லும்.
அந்த அளவுக்கு
ஈர்ப்பு விசையை ஏற்படுத்த புத்தி வைத்திருக்கும் திட்டம் மிக எளிதானதுதான்.ஆனால்
இதுவரை யாரும் யோசித்து முயற்சிக்காத ஒன்று.
************
************
புனி
ஆய்வுகூடத்திற்கு வரும்போது வைத்தி இல்லை.நேராக சோதினை கூடத்தில் இருந்த ஆய்வு
குடுவைகளில் தன எடுத்துவந்த லில்லியின் tissue களை
பத்திரபடுத்தி அதனை சோதிப்பதுக்கான வேலைகளில் இறங்கினாள்.வைத்தி வரும் முன் செய்து
விட்டால் அவருக்கு பதில் சொல்லும் வேலை மிச்சம் என்பது அவளது எண்ணம்.
முதலில் அவளது
சந்தேகம் எதாவது வைரஸ் தாக்கி இருக்கலாம் அதனால் லில்லிக்கு சோர்வு போன்ற நோய்
இருக்கும் என்பதுதான்.ரத்தத்தை சோதித்து பார்த்தாள் பொதுவான சில சோதனைகள் செய்து
பார்த்ததில் ரத்தத்தில் அதிக அளவில்
வைரஸின் தாக்கம் இருந்தது.
அடுத்த கட்டம் அந்த
வைரஸின் தன்மையை அறியும் சோதனை. சில மணி நேரத்தில் முடிந்து இருந்தது. முடிவு புனி
எதிர்பார்க்காத ஒன்று. அரிதாக பூனைகளை தாக்கி உயிரிழப்புகளை ஏற்ப்படுத்தும் Feline leukemia virus (FeLV) என்ற ஒன்று தாக்கியிருந்தது. இது பூனைகளில்
இருந்து எளிதாக மனிதர்களுக்கும் பரவுவதோடு. மனிதர்களுக்கு இது உயிர்கொல்லி நோய்
போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை படித்து இருக்கிறாள்
உடனே லில்லியை குணப்படுத்தவேண்டும் அதுவரை அதை கவனமாக கையாள
வேண்டும். அம்மாவுக்கு தெரிந்தால் இன்றே எங்காவது காட்டில் விட்டுவிட்டு வந்து
விடுவார்கள். எப்படி குணபடுத்துவது என்ற குழப்பத்தில் புனி இருந்தாள்.
கண்டிப்பாக புனியை காப்பற்ற வைத்தியின் உதவி தேவை. அவரிடம்
சொல்ல நினைத்து இருந்தாள். அந்த வைரஸின் தாக்கம் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது.