யாரு?                                           25:09:2555 – 9:00 am
                                                               

   இந்த கடிதத்தை படித்தவுடன் கிழித்துபோடுவதுடன் இதை பற்றி தொடர்ந்து சிந்திப்பதை உடனே நிறுத்தவும்

    இப்படியொரு கடிதத்தை எழுதுவது யாரென்ற அறிமுகம் தேவையில்லை கிட்டத்தட்ட அழியும் நிலையில் அடித்து ஒடுக்கப்பட்ட மனித இனத்தில் இருந்து வரும் கடிதம்தான்.

   நமது இனத்திற்கு இந்த நிலமை வரும் என்று ஒருபோதும் நினைத்துப்பார்த்தது இல்லை. நாம்தான் எல்லா சக்திகளையும் கொண்டவர்கள் எல்லாம் செய்யமுடியும்,இந்த பூமி நமது கட்டுபாட்டில் இருக்கிறது என்ற எண்ணத்திலேயே வாழ்ந்து விட்டோம்.

   ஆனால் இயற்கை ஒன்று இருக்கிறது, மாற்றம் நிகழும் என்பதை கொஞ்சம் முன்னரே யோசித்து பார்த்து இருந்தால் இந்தநிலை இப்போது இருந்து இருக்காது.

   பரிணாம வளர்ச்சியில்தான் மனித இனம் வந்தது என நம்பிய நாம் இந்த மனித இனத்திற்கும் மேல் ஒரு பரிணாமம் இருந்தால்? எனபதை கற்பனைகூட செய்யாமல் விட்டதுதான் பெரிய தவறு. அதுதான் இன்று நடந்து நம்மை அழித்துவிட நினைக்கிறது.

   இப்போதைய மனித இனத்தின் நிலை நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. நமது இனம்போலவே நமக்குள்ளவே சேர்ந்து வளர்ந்த அவர்கள் நம்மை அடக்கி ஒரு அடிமையை போல வைத்து இருப்பது எல்லோரும் அனுபவிக்கும் ஒன்றுதான்.

   எப்படி நமக்கு கீழ் வாழ்ந்த பிந்தைய உயிரினங்களை அடக்கி ஏன் கொன்று தின்றுகூட வாழ்ந்தோம்.அதே நிலமைதான் இன்று நமக்கு.

  எதிலும் உரிமை இல்லை,எந்த விசயத்திலும் தலையிடகூடாது அவர்கள் கொடுக்கிற உணவையும் பொருளையும் வைத்துக்கொண்டு வாழ்கையை நடத்த வேண்டும். மீறினால் தண்டனை.

   தொடக்கத்தில் புரட்சிகள் செய்து பார்த்தாலும் அவர்களின் அறிவுக்கு முன்னால் நம்மால் முடியவில்லைதான். முழுமையாக ஒடுக்கிய பின் நாம் வாழுகின்ற பகுதிகளில் ராடர் போன்ற சில உபகரணங்களை வைத்து நாம் மூளையில் இருந்து வெளிவரும் மின்அலைகளை படித்து நாம் என்ன யோசிக்கிறோம் என்பதை கண்டுபிடித்து விடுகிறார்கள்.இதனால் புரட்சி பற்றி யோசித்தாலே அடுத்த சில நிமிடத்தில் வந்து தூக்கி போகிறார்கள்.

   தண்டனை என்ற பெயரில் அடைத்து வைக்கப்பட்டு கிட்டதட்ட 2000 பேர் சேர்ந்த பிறகு மொத்தமாக ஒரு விண்கலத்தில் பூட்டி எரிபொருள் முழுவதும் நிரப்பி மேலே பறக்கவிட்டுவிடுகிறார்கள்.அந்த விண்கலம் எரிபொருள் தீரும்வரை மேல்நோக்கி மட்டுமே போகும்.தீர்ந்தபின் அங்கேயே மிதக்கும். மனித இனம் மற்றொரு முறை தவறுதலாககூட இந்த பூமியில் வந்துவிடகூடாது என்பதுதான் அவர்களின் நோக்கம்.

   இந்த உலகமே அவர்களின் கட்டுபாட்டில்.காரணம் அவர்களின் ஒற்றுமை.நாம் பிரிந்து கிடந்தோம் அழிந்தோம். அவர்கள் அறிவால் சேர்ந்து இருக்கிறார்கள்.நமது அறிவியல் கண்டுபிடிப்புகள் எல்லாம் அவர்களின் அறிவுக்கு முன் மதிப்பற்று கிடக்கிறது.தோல்விக்கு இதுவும் ஒரு காரணம்.

   அவர்களின் முதல்வேற்றியே மனிதர்களோடு மனிதனாக வாழ்ந்து கடைசியில் நம்மை வென்றதுதான்.

   இதை தொடக்கத்தில் மனிதன் உணர்ந்து அவர்களை பற்றிய உண்மைகளை அறிய முயலும் முன்னரே ஒன்று சேர்ந்து நம்மை வீழ்த்தி விட்டார்கள்.நம்மைவிட நான்கு குரோமோசோம்கள் அதிகம்,சிந்திக்கும்திறன், மூளையின் அளவு என சின்ன சின்ன மாற்றங்கள்.இதுதான் மனித இனத்தில் கால்பங்குகூட இல்லாத அவர்கள் நம்மை ஆள்வதுக்கு காரணம்.

   எல்லா இடங்களிலும் ராடர் வைத்து இருப்பதால் புரட்சி பற்றி யோசிப்பதே சிரமம்.நான் தெருவில் இறங்கி புரட்சி செய்ய இந்த கடிதத்தை அனுப்பவில்லை.அவர்களை அறிவால் வெல்லுவோம்.கடிதத்தை படிக்கும் எல்லோரும் அதை எப்படி சாதிக்கலாம் என்பதில் கவனம் செலுத்துங்கள்.

   வெகு நாட்களாக இந்த கடிதத்தை நான் எழுத காத்து இருந்தேன். இன்றுதான் எனது தெருவில் வைக்கப்பட்டு இருக்கும் ராடர் பழுதடைந்து அதை சரிபார்க்கும் பணியில் அவர்கள் ஈடுபட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.  இது உண்மையா தெரியவில்லை இப்படித்தான் போனமுறை பக்கத்துக்கு தெருவில் இப்படி செய்தி பரவியது. மனிதர்கள் எல்லாம் கிடைத்த நேரத்தில் ஒன்று கூடி புரட்சி பற்றி யோசிக்க அந்த தெருவே விண்கலத்தில் ஏற்றப்பட்டது. அந்த செய்தி அவர்களால் பரப்பப்பட்ட தவறான செய்தி.

   இந்த செய்தியும் உண்மையா தெரியவில்லை. பொய்யாக இருந்தால் நானும் விண்கலம் ஏற வேண்டும்.கவலை இல்லை இந்த கடிதம் உங்களுக்கு கிடைத்து புரிந்து கொண்டு செயல்படுத்தும்போது நான் இல்லாவிட்டாலும் அதுக்கு காரணமாக நான் இருந்ததுக்கு சந்தோசப்பட்டு கொண்டே விண்வெளி போவேன்.

   முதன்மை உயிரினம் என்பது போய் நமக்கு மேல் உள்ள அவர்களுக்கு கட்டுப்பட்டு கிடக்கிறோம். அவர்களை வெல்வது சுலபம் இல்லை. ஆனால் முடியும் அவர்களிடமிருந்தே பல விசயங்களை கற்று அதையே எதிராக பயன்படுத்துவோம்.அவர்கள் நம்மில் இருந்து வந்தவர்களே.

   இவ்வளவு விளக்கமாக சொல்வதுக்கு காரணம் என்னைபோன்ற பழமையான மனிதர்களுக்கு தெரியும் மனித இனம் முன்னர் எப்படி வாழ்ந்தது என்று.ஆனால் அடிமைபடுத்திய பின்னர் பிறந்த சிலருக்கு நம்மின் முந்தைய நிலை தெரியாது. அவர்களை பொறுத்தவரையில் மனிதன் என்பவன் தனக்கு மேல் உள்ள ஒரு இனத்திற்கு அடிமை என்பதே. இந்த கடிதத்தின் நோக்கமும் இந்த நிலை மாறவேண்டும் என்பதே.

   அதே நேரத்தில் உணர்ச்சி கொண்டு புரட்சி என்ற பெயரில் எதாவது செய்து விண்கலம் ஏறுவதைவிட நல்லதொரு வாய்ப்புக்கு காத்து இருப்போம்.கண்டிப்பாக அறிவை தவிர வேறொன்றை கொண்டும் இவர்களை ஜெயிக்க முடியாது என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.

  இந்த ராடர் சாதனம் இன்னம் சில நாள்களுக்கு சரியாகவில்லை என்றால் இன்னும் சில முக்கியமான விசயங்களை பற்றி கடிதம் எழுதுகிறேன்

   எழுதிய கடிதத்தை வேகமாக மடக்கி பையில் வைத்து கிளம்பும் வேளையில் வெளியில் அவர்களின் அந்த அறிவுப்பு வந்தது
உங்கள் தெருவில் பழுதடைந்து இருந்த ராடர்,மற்றும் தானியங்கி பொருள் வழங்கும் இயந்திரம் சரியாக 8:45 am முதல் வேலை செய்ய ஆரம்பித்து விட்டது. இனிமேல் தவறுகள் நடக்காமல் பார்த்து கொள்கிறோம் என்று ஒலித்த சில நிமிடங்களில்.கடிதம் எழுதி  போக தயராக இருந்தவரின் கதவு அவசரகதியில் தட்டபட்டது.

12 comments:

TERROR-PANDIYAN(VAS) said...

//அவர்களின் முதல்வேற்றியே மனிதர்களோடு மனிதனாக வாழ்ந்து கடைசியில் நம்மை வென்றதுதான்//

அட!! கண்டுபிடிச்சிடானே!! மனிதன் புத்திசாலிதான். நல்ல வேளை ரேடார் சரியான நேரத்தில் வேலை செஞ்சிது. இவனை மொதல்ல வின்களத்தில் ஏத்தனும்.... :)

Niroo said...

ஹி ஹி

கணேஷ் said...

TERROR-PANDIYAN(VAS) //

அப்ப நீங்க மனுஷன் இல்லியா?? அவங்கள நீங்க)

இம்சைஅரசன் பாபு.. said...

இதுல டெர்ரர் ன்னு ஒரு விஞ்ஞானி கமெண்ட்ஸ் போட்டு இருக்கிறதை பார்த்து ..ஓட்டு மட்டும் போட்டு கிட்டு ஓடிரலாம்ன்னு பார்த்தேன் ..ஓட்டு பட்டை ஒன்னையும் காணவில்லை ..

செல்வா said...

ஐ.. எனக்கு முதல் பத்திய படிச்சதும் இப்படி ஒன்னு இருந்தா அதாவது நமக்கு மீறிய சக்தி ஒன்னு நம்ம இனத்திலிருந்த தோன்றியிருந்தால் எப்படி இருக்கும்னு நினைச்சிட்டே படிச்சேங்க.

கடைசில அதே மாதிரி இருந்தது அருமை.

அப்புறம் கடைசில முடிச்சிருக்கிற் விதம் உண்மைலயே அடுத்த பாகம் எப்போ அப்படின்னு எதிர்பார்க்குற அளவு இருக்கு :-)

கணேஷ் said...

கோமாளி செல்வா //

இதுல இருந்து என்ன தெரியுது நீங்களும் அருமையா புனைவு எழுதுவிங்கன்னு தெரியுது ))

அடுத்த பாகம் அவரு விண்வெளியில இருந்துதான் எழுதணும்))

Unknown said...

வழக்கம் போல கலக்கல் பாஸ்!
சுஜாதா சொல்லுவாரே...உலகின் சிறிய திகில் கதைன்னு..
உலகின் கடைசி மனிதன் அறையில் தனித்திருந்தான். கதவு தட்டப்பட்டது!
- அதோட இன்ஸ்பிரேசனா?

கணேஷ் said...

ஜீ... //

அது தனிமனிதன் இது நமக்காக போராட துடிக்கும் நம்ம்மோடு வாழும் ஒரு மனிதன்))

இது சும்மா எழுதியதுதான்

நன்றி ஜீ

HVL said...

ரொம்ப நல்லா இருந்ததுங்க.

கணேஷ் said...

HVL//
கருத்துக்கு நன்றிங்க))

ஆமினா said...

உங்களின் இந்த இடுகையை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்... நேரம் கிடைக்கும் போது பார்வையிடவும்

http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_4769.html

வாழ்த்துக்கள்

கணேஷ் said...

வலைசரத்தில் அறிமுகம் செய்ததுக்கு ரெம்ப நன்றிங்க ))