விடை...


((உங்களுக்கு வைத்தி, புனி புதியவர்கள் என்றால் ஒரு அறிமுகம்..வைத்தி மிகப்பிரபலமான ஒரு மருத்துவர்..தனது மருத்துவமனையில் செய்ய முடியாதவற்றை தனது ஆய்வுகூடத்தில் செய்பவர்..அவருக்கு உதவியாக இருப்பவள் புனி எனும்  ஒரு மாணவி))


   பலமாத உழைப்பு முடிவுக்கு வரும் தருவாயில் இருந்தாலும் இறுதிக்கட்டத்தை நெருங்க நெருங்க வைத்திக்கும்,புனிக்கும் மனதுக்குள் பயம் அதிகமாகியதுதான் உண்மை.

   உலகத்தில் இல்லாத புதியமுறை அதுவும் மனித உயிர் சம்பந்தப்பட்டது. தோல்வியில்முடிந்தாலும் பிரச்சினையில்லை, இதனை உபயோகித்து உயிர் சேதம் ஏதும் ஏற்ப்பட்டால்தான் பிரச்சினை.

    இதில் புனியின் பங்கு கடந்த காலத்தைவிட மிகஅதிகம். இயந்திர வடிவமைப்பில் இருந்து வைத்தியின் சிறு சிறு கவனக்குறைவு, பிழைகளை சுட்டிகாட்டி திருத்துவதிலும் அவளின் பங்கு இருந்தது.இதன்மூலம் வைத்தியின் பாராட்டுக்கும் அவருக்கு மிக பிடித்தமானவளும் ஆகியிருந்தாள்.

   அவர்களின் ஆய்வுகூடத்தில் ஒரே மாதிரியான இரண்டு ஆள்உயர கண்ணாடி குடுவை போன்று இருக்க, ஒன்றன் பின்னாடி மட்டும் சில சிறு கண்ணாடி குடுவைகள் இருந்தன. மற்றொன்றில் அந்த இடதில் இருந்து அதற்கு பதில் வெறும் வயர்கள் மட்டும் பொருத்தப்பட்டு இருந்தன.ஒன்று ஆய்வுகூட கணினியில் பொருத்தப்பட்டு அதில் எதையோ புனி சரிபார்த்துகொண்டு இருந்தாள் மற்றொன்றில் வைத்தி வேலை பார்த்துகொண்டு இருந்தார்.எல்லாம் இறுதிகட்ட சரிபார்பப்பு.அடுத்த நாள் சோதனைக்கு முடிவு எடுத்து இருந்தார்கள்.

   மறுநாள் காலையில் வைத்தியும்,புனியும் ஒருவித பயம் கலந்த கவலையில் வேலையை பார்த்துகொண்டு இருந்தார்கள். மேஜையில் வைக்கப்பட்டு இருந்த பூனைகுட்டி அடுத்து என்ன நடக்கபோகின்றது என்பதை அறியாமல் அதன் கூண்டுக்குள் கத்தியபடி சுற்றி வந்துகொண்டு இருந்தது.


   வைத்தி புனியின் உதவியுடன் அதில் இருந்த ஒருகுடுவையை தூக்கி கொஞ்ச தூரத்தில் இருந்த மற்றொரு அறையில் வைத்து அதை கணினியுடன் இணைத்து இயங்கும் தன்மையை சொதித்துபார்த்துவிட்டு மற்றொரு குடுவையை அவரது அறையில் இருந்த கணினியுடன் இணைத்து அதையும் இயக்க துவங்கினார்.

   மற்றொரு அறையில் வைக்கபட்டு இருக்கும் குடுவையின் பின்பக்கம் பொருத்தப்பட்டு இருந்த சின்ன குடுவைகளில் ரத்தம் மற்றும் சில அமிலங்கள் என அதிகமாக நிரப்பப்பட்டு இருந்தது.அந்த இரண்டு குடுவைக்கும் பொதுவாக நடுவில் ஒரு வட்டவடிவ இடம் இருந்தது. அதை சுற்றி ஒரு வளையத்தில் இனைக்கப்பட்ட லேசர் ஒளி பாச்சும் கருவிகள் இருந்தன.அது நீளவாக்கில் மேலும் கீழும் நகரும்படி அமைக்கபட்டு இருக்க அதுக்கு  அடுத்த பகுதி அந்த குடுவையை மூடும் கண்ணாடி கதவு இருந்தது.

    கையில் இருந்து திமிர பார்த்த பூனையை அழுத்திபிடித்து அந்த குடுவைக்குள் விட்டார் வைத்தி.கதவு முடியதும் பயத்தில் பூனை நகத்தால் கண்ணாடி கதவை பரண்டியது. வைத்தி சிறு தயக்கத்தோடு  புனியை பார்க்க, அவள் ஏதும் சொல்லாமல் அதே பார்வையை பார்த்தாள். வைத்தி அந்த குடுவையை இயக்கத்திற்கு கொண்டு வந்தார்

   அதுவரை பரண்டிகொண்டு இருந்த பூனையின் மீது மேல் இருந்து வந்த லேசர் ஒளிக்கற்றை பட்டதும் அப்படியே அசையாமல் நின்றது. அந்த ஒளிக்கற்றை திரும்பி மேலே போய் கீழே திரும்பியது இப்போது பூனையின் உருவத்தில் கொஞ்சம் மாற்றம இருந்தது. இந்த செயல் தொடர்ந்து நடக்க அதற்கு ஏற்றாற்போல பூனையின் உருவத்திலும் குறைவு வந்துகொண்டே இருந்தது.லேசர் ஒளி மேலேபோய் கடைசியாக நின்றபோது கிழே பூனை இருந்த இடத்தில அது காணாமல் போய் இருந்தது.

    இதுவரை இதை பார்த்துகொண்டு இருந்த வைத்தியும் புனியும் ஒரு பெரு மூச்சோடு கணினியை நோக்கி ஓடினார்கள். கணினி சில தவல்களை இவர்களுக்காக தயாரிக்கும் பணியில் இருக்க முடிவுக்காக காத்து இருந்தார்கள்.

 Sequence name            Length (bp) including gaps 
chrA1             279,330,936 
chrC1             231,559,387 
chrA2            217,619,046 
chrB1            216,457,954 
chrA3            170,549,644 

   இப்படி பலபக்கங்ககளுக்கு தொடர்ந்து கொண்டே செல்ல கடைசியாக அந்த பூனையின் ஜினோம் படித்து முடிக்கப்பட்டு கணினி திரையில் காட்டப்பட்டது.எத்தனை செல்கள்,என்னென்ன ஜீன்கள் என எல்லா தகவல்களும்.  இது வைத்தி கண்டு பிடித்திருக்கும் புதியமுறை.சாதராண முறைப்படி ஒரு பூனையின் ஜினோமை படிக்க பல மாதங்கள் ஆகும்.ஆனால் இந்த முறையில் சில நிமிடங்கள்தான்.

   கணினி திரையில் அந்த தகவலை அனுப்ப அனுமதிகேட்க..வைத்தி புனியை மற்றொரு அறையில் கணினியோடு இணைக்கப்பட்டு இருக்கும் அந்த குடுவைக்கு சென்று இயக்கத்தை சரிபார்க்குமாறு சொல்லிக்கொண்டே பூனையின் ஜினோமை அனுப்பினார்.

   வந்து இருந்த அந்த தகவலை புனி பதற்றத்தோடு அந்த குடுவைக்கு அனுப்பினாள். அடுத்த நிமிடத்தில் அந்த குடுவையின் உள்ளே வேகமாக வேலைகள் நடக்க ஆரம்பித்தன.கொஞ்சம் ரத்தம்,அமினோ அமிலங்கள், ஹோர்மொன்கள் எல்லாம் குறைந்து இருந்தன.குடுவையின் இயக்கம் நின்று இருந்த போது அந்த கண்ணாடி கதவை பூனை பரண்டிகொண்டே கத்தியது.

   இருவருக்கும் சொல்லமுடியாத சந்தோசம்.புனியின் கண்களில் கண்ணீரே வந்து இருந்தது.வைத்தி வேகமாக சென்று குடுவையின் கதவை திறந்து அதை கையில் எடுத்து சோதித்து பார்த்தார்.சற்று முன்னர் வேறொரு குடுவையில் விட்ட அதே பூனை.

“எதாவது மாற்றம் இருக்கா? கேட்டாள் புனி

“ஆமாம் இருக்கு. முடியின் நீளம் கொஞ்சம் கம்மியா இருக்கு என்றார்

   “ஒருவேளை லேசர் ஒளிகற்றை தொடங்கும்போது கொஞ்சம் வெப்பத்தில் கருகி இருக்குமோ?

“இருக்கலாம் என்றார்

   அடுத்த வந்த நாள்களில் அவர்களின் கண்டுபிடிப்பை நிலையான ஒன்றாக கொண்டுவர முயற்சி எடுத்தார்கள்.அடுத்த இரண்டு மாத கடின உழைப்பில் அவர்களின் இந்த ஒளியின் வேகத்தில் உயிரை அல்லது மனிதனை அனுப்பும் முறை தேரியிருந்தது. இந்த இடைப்பட்ட காலத்தில் பல பூனைகளை இடம் மாற்றியிருந்தார்கள்.

   அவர்களின் அடுத்த இலக்கு மனிதர்களை இடம் மாற்றி பார்க்க வேண்டும்.அதுக்கு இவர்களின் மற்றொரு குடுவை அதாவது ஜினோம் தகவல்களை வைத்து உயிர்களை உருவாக்கும் குடுவை மற்ற இடங்களில் இருப்பது அவசியம்.

   அதற்கு வைத்தி பெரும்முயற்சி எடுத்து சில முக்கியமான இடங்களில் அந்த குடுவையை இதில் தேர்ச்சி பெற்றவர்களோடு நிறுவியிருந்தார்.ஆனால் யாரும் இதை நம்பி வரவில்லை என்னதான் விளம்பரம் அதிகமாக செய்து இருந்தும்.

   பல மாதங்கள் கடந்த நிலையில் ஒருவன் அதில் பயணிக்க வந்து இருந்தான்.வைத்திக்கு நம்பிக்கையில்லை இதன் முறைகளை பற்றி கேட்ட பிறகு யாருமே சம்மதிப்பதில்லை என்பது அவரது கவலை.வந்தவனிடம்..

   “எங்கு போக வேண்டும் என்று சொன்னால் அங்கு எங்கு கிளை இருக்கிறதா என உறுதிசெய முடியும் என்றார்

“கோவில்பட்டிக்கு போகணும் எவவளவு நேரம் ஆகும்?

    “கிளை இருக்கு அதிக பட்சம் 4 நிமிடம். அதற்குமுன் இந்த முறை பற்றி சொல்லிவிடுகிறேன். இது முதலில் லேசர் ஒளிகற்றையின் மூலம் உங்களின் ஜினோமை படிப்போம்,அப்ப்போது உங்களின் முழு உடலும் அழிந்து விடும் அதாவது லேசர் உங்களை உருக்கி ஜினோமை படித்து அதை கோர்வையாக எங்களுக்கு கொடுக்கும். நாங்கள் வேற ஊரில் இருக்கிற மற்றொரு குடுவையின் மூலம் உங்களின் ஜினோம் தகவலை வைத்து மீண்டும்  உருவாக்குவோம்.

“இதுதான் உங்க முறையா என்ன?

“ஏன் உங்களுக்கு ஏற்க்கனவே தெரியுமா என்ன? என்றார்

   "ம்ம் தெரியும் எங்க ஊருக்காரர் கணேஷ் ஏற்க்கனவே இதைப்பற்றி விடை என்ற கதை  எழுதியிருந்தார் படித்திருக்கிறேன்.ஆனால் அப்போது அதை நம்பவில்லை அவருக்கு வேற வேலையில்லை என நினைத்தேன்.ஆனால் இன்று அவரது கற்ப்பனை உணமையாயிருக்கிறது சந்தோசம். சரி எனது பயணத்தை தொடங்கலாமா...இதை போய் கணேஷிடம் சொல்லணும். என்றான் வந்தவன்

   வைத்திக்கு கணேஷ் யரேன்று தெரியாததால் கொஞ்சம் குழப்பத்தோடு அவனை அந்த குடுவைக்குள் நிற்க செய்துவிட்டு,கோவில்பட்டியில் உள்ள கிளைக்கு தொடர்புகொண்டு இந்த பயண விபரத்தை சொல்ல அங்கும் குடுவை தயாராய் இருக்க இயக்கத்தை ஆரம்பித்தார். அடுத்த ஒரு நிமிடத்தில் அவனது ஜினோம் படிக்கபட்டு கணினியில் வர அதை புனி கோவில்பட்டிக்கு அனுப்பினாள்.

    அங்கு இருந்த குடுவையில் அவன் உருவாகிக்கொண்டு இருக்க வைத்தி அலைபேசி இணைப்பில் நிலைமையை சோதித்து கொண்டிருந்தார்.முழுஉடல் சேர்ந்தாயிற்று என்பதை கேட்டவுடன் கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விட்டபடி இருக்கையில் அமர..

   கடைசியாக சில  தவறுகள் காட்டுவதாக மறுமுனையில் உள்ளவன் சொல்ல வைத்திக்கு பயம்.

“என்ன தவறு வருவதை படி  என்றார்

HEART -00000001-MISS-PASSWORD INCORRECTஇந்த தப்புதான் வருகின்றது என்றான்.

   இதை புனியிடம் காட்டி என்ன தவறு என்று பார்க்க சொல்ல அவளும் பயத்துடன் வேகமாக பார்த்தாள்.தவறு புரிந்தது.

   “இதயத்தின் எல்லா செல்களும்,தகவல்களும் சரியாக போய் இருக்கு ஆனால் அதுக்கு இயக்கத்துக்கான ஒரே ஒரு தகவல்மட்டும் இல்லை.ஆச்சர்யம் அது இயங்க PASSWORD கேட்குது.இந்த மாதிரி ஒரு முறையை நாம் பதியவே இல்லையே நமது முறையில்? கேட்டாள் புனி

“பூனைக்கு எல்லாம் இதுமாதிரி கேட்கவில்லையே? என்றார்வைத்தி

  “ஆமாம் அதான் எனக்கு புரியவில்லை என்று சொனபடி குழப்பமாக யோசித்து கொண்டிருந்த வைத்தியை பார்த்தாள்.

“எனக்கு புரிஞ்சி போச்சி அந்த PASSWORD யாருடையதுன்னு

  “யாருடையது ஏதவது மூன்றாவது மனிதர்கள் குழப்பம் செய்கிறார்களா என்ன? என்றாள்

   இல்லை அது கடவுளின் PASSWORD..அதுதான் உயரின் ரகசியம்..அது அவருக்கு மட்டும் தெரிந்த ஒன்று.அதான் அது துடிக்க மறுக்கின்றது. என்றார்

7 comments:

TERROR-PANDIYAN(VAS) said...

மறுபடியும் ஒரு நல்ல கதை இங்கிலிஷ் படம் பாக்கர மாதிரி. குட்... கலக்கல்.. :)

ரசிகன் said...

Liked ur Gush of Story Narration :-) Nice scientific flash fiction..
ஆனா பரப்ப்ரம்மத்துக்கு சகல உயிர்களும் சமம் இல்லயா..? பூனை , புனி ன்னு பாரபட்சம் இருக்கா என்ன.. #டவுட்டு.. :‍))

இம்சைஅரசன் பாபு.. said...

// இல்லை அது கடவுளின் PASSWORD..அதுதான் உயரின் ரகசியம்..அது அவருக்கு மட்டும் தெரிந்த ஒன்று.அதான் அது துடிக்க மறுக்கின்றது//

சபாஷ் நச்சுன்னு பினிஷிங் ......

இம்சைஅரசன் பாபு.. said...

//மறுபடியும் ஒரு நல்ல கதை இங்கிலிஷ் படம் பாக்கர மாதிரி. குட்... கலக்கல்.. :)//

டேய் உன்ன படிக்க தான் சொல்லிச்சு ....இருந்து அந்த ஒரு பிக்சர் பார்த்து கிட்டு ..இங்கிலீஷ் படம் பார்த்த பீலின்காம் ..

தினேஷ்குமார் said...

கதை நல்லாருக்கு .... ஆமாம் அந்த கணேஷ் நீங்கதானே

தமிழ் இனிது said...

தமிழ் இணையங்களையும், வலைப்பூக்களையும் ஒன்றாக இணைக்கும் ஒரு முயற்சியே இந்த தமிழ் இனிது வலைத்தளம்.

http://tamilinithuthiratti.blogspot.com/

இதற்கு உங்களது ஆதரவு தேவை. உங்களது வலைத்தளங்களின், வலைப்பூக்களின் முகவரியை எமக்கு inithutamil@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவையுங்கள்.

தமிழ் இனிது பற்றி உங்கள் நண்பர்களுக்கும் சொல்லுங்கள்.

வாருங்கள்!
விரல் அசைவை விசையாக்குவோம்!

கவிநா... said...

"vidai" nu title vechutu, vidai sollama poiteengaley ganesh..!!

nice story...

keep writing...