இப்போதைய கண்டுபிடிப்பு தொழிநுட்ப சிக்கல் நிறைந்தது என்பதால் அதை பெரியதாக விளம்பர படுத்தாமல் ஆய்வுகூடத்திலேயே வைத்து இருந்தேன். மனநிறைவுக்காக அது சம்பந்தாமான சில விவரங்களுடன் வெளியில் ஒரு பலகை வைத்தேன்
நான் நினைத்தது போல அதை வைத்ததில் இருந்தது யாருமே நம்பி வரவில்லை.இது எனக்கு ஒன்றும் புதிதும் இல்லை என்பதால் எனது அடுத்த முயற்சியான மனிதனை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு ஒளி வேகத்தில் இடமாற்றுவது சம்பந்தாமான ஆராய்ச்சியை தொடங்கியிருந்தேன்.
அன்று மதியத்திற்கு பிறகு ஒரு பெண் தயங்கி தயங்கி உள்ளே எட்டிபார்ப்பது போல இருக்க யாராவது நமது இயந்திரத்தை வேடிக்கை பார்ப்பார்கள் என்று கண்டுகொள்ளவில்லை.அடுத்த சில சில நிமிடத்தில் அவள் என எதிரில் இருந்தாள்.
ஏதும் பேசவில்லை கண்கொட்டாமல் பார்த்துகொண்டு இருந்தவளை..
“நீங்கள் யார் என்ன வேண்டும்?”கேட்டேன்
“என்னை யாரென்று தெரியவில்லையா”?
அப்போதையா நிலையில் சட்டென்று எதையும் நினைவுக்கு கண்டுவர முடியாததால்..
“இல்லை எனக்கு தெரியலயே” என்றேன்
“சரி விடுங்க எனக்கு உங்க உதவி வேண்டும். வெளியில் விளம்பர பலகை பார்த்தேன். உதவி கிடைக்குமா?”
“கண்டிப்பாக. எப்போ நீங்க தயார்?
“ஏன் இப்பயேதான்” என்றாள்
“சரி அதுக்கு முன்னாடி இதை பற்றி கொஞ்சம் விளக்கமாக சொல்லிவிடுகிறேன் அதுக்கு பிறகு உங்கள் முடிவை சொன்னல் போதும்”
“எப்படினாலும் நான் இதை செய்துதான் ஆகவேண்டும்.இருந்தாலும் நீங்கள் சொல்வதை சொல்லுங்கள்” என்றாள் அவளிடத்தில் எந்த ஒரு பயமோ கவலையோ இல்லை தான் செய்யபோவதை எண்ணி.
“ம்ம் சரி..இது ஒரு கால இயந்திரம் மாதிரி. மனிதன் தனது கடந்த காலத்தில் செய்த மிகப்பெரிய தவறுகளுக்கு இப்போது மனம் வருந்தினலோ,அதக்குரிய பலனை அனுபவித்து கொண்டு இருந்தாலோ அதை இந்த இயந்திரத்தில் இறந்த காலத்திற்கு பயணம் செய்து செய்த தவறை திருத்திகொள்ளலாம்.”
“பயண காலம் எவ்வளவு? அதிகபட்சமாக எத்தனை நாள்கள இறந்த காலத்தில் இருக்கலாம்?”
“ஒளிவேக பயணம் என்பதால் பயண நேரம் மிக குறைவு.அதே மாதிரி பயணிப்பவரின் விருப்பத்தை பொருத்து எத்தனை நாள்கள் வேணுமானாலும் இருக்கலாம்.”என்றேன்
“சரி எப்ப நான் கிளம்பணும்?” கேட்டாள்
“உங்களுக்கு ஏதும் பயம் இல்லையா?ஒளிவேக பயணம். தவறு நேர்ந்தால் அடுத்த விநாடி காற்றில் கலக்க நேரிடும்”
“எனக்கு உங்களின் மீது நம்பிக்கை இருக்கிறது”என்றாள்
இந்த பதில் மிக ஆச்சர்யமாக இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல்..
“அதேநேரம் இந்த இயந்திரம் உங்களை விருப்பமான இடத்தில் இறக்கிவிட்டுவிட்டு என்னிடம் வந்துவிடும். நீங்கள் என்னை மட்டும் தொடர்புகொள்ள ஒரு சிறப்பு சாதனம் கொடுப்பேன் உங்கள் வேலை முடிந்தவுடன் என்னை தொடர்புகொண்டால் அடுத்த சில நிமிடங்களில் உங்களை இயந்திரம் அழைக்கவரும்” என்றேன்
“சரி என்று தலையாட்டிவிட்டு கிளம்பட்டுமா?” என்றாள்
இதுவும் எனக்கு ஆச்சர்யம்தான் இப்படியும் இரு தைரியாமான பெண்ணா என்று நினைக்க தோன்றினாலும் அவளுக்கு என்ன ஆகுமோ என்ற பயம் எனக்குள் இருந்தது. எதாவது தொழிநுட்ப பிரச்சினை என்றால் அவள உயிர் அவளுக்கு இல்லை. யோசித்து கொண்டே இயந்திரத்தை தயார் செய்தேன். அவள் ஆர்வமாக நான் செய்வதை வேடிக்கை பார்த்துகொண்டு இருந்தாள்.
கிளம்புவதுக்கு முன் சில நிமிடம் என்னையே பார்த்து கொண்டு இருந்துவிட்டு இருக்கையில் அமர்ந்தாள் வந்ததில் இருந்து அவளின் நடவடிக்கைகள் ஒன்றும் புரிந்துகொள்ளமுடியாதபடி செய்யும் செயலுக்கு பின்னாடி எதோ ஓர் காரணம் இருப்பதாக தோன்றியது ஒருகட்டத்தில் இறந்த காலத்தில் சென்று என்ன செய்ய போகின்றீர்கள் என்று கேட்க நினைத்து வேண்டாமென்று விட்டேன்.
அந்த இயந்திரம் இயக்கத்துக்கு வந்து எம்பி பறந்து கண்ணில் இருந்து மறைந்தது. அதன் இயக்கம் சரியாக இருக்கிறதா என்பதை கணினியில் சரிபார்க்க அத சரியாக அவளின் விருப்பமான இருப்பிடத்தில் சென்று இறக்கிவிட்டுவிட்டு கிளம்பிவர தயராக இருந்தது.இது எல்லாம் நடந்து முடிக்க மூன்று நிமிடங்கள் முடிந்து இருந்தன.
ஒருபுறத்தில் எனது முயற்சி வெற்றியடைந்த சந்தோசம் இருந்தாலும் அவளுக்கு ஏதும் ஆகிவிடுமோ என்ற கவலைவேறு.எல்லாமே எதுவுமே யோசிக்காமல் நடந்தது போல இருந்தது. அவள் வந்தவுடன் பயணிக்க சம்மதித்தது எல்லாம் நான் நினைத்து பார்க்காதது. அப்படியே இரண்டு நாள்கள் கழிந்து இருக்க வாசலில் தாபால்காரன் ஒரு கடிதத்தை வீசி செல்ல எடுத்து படித்தேன்....தலை சுற்றாத குறை அதை அப்படியே கொடுக்கிறேன்.....
கணேஷ்...
உன் பெயர் எப்படி தெரியும் என்ற ஆச்சர்யபட்டால், நீ என முகத்தை மறந்தது அதைவிட எனக்கு ஆச்சர்யம்.
நன்கு வருடங்களுக்கு முன் சென்னையில் ஒரே நிறுவனத்தில் வேலை பார்த்தபோது என்ன காரணம் என்றே தெரியாமல் உன்னை பிடித்து போக என்னையறியாமல் உன்னை காதலிக்க ஆரம்பித்து ஆனால் கடைசிவரை சொல்லாமல் சொல்ல தைரியம் இல்லாமல் இப்போது இந்த மரண போராட்டத்துக்கு எனக்கு தைரியம் வந்து இருக்கிறது.
தவறு என்னிடம் மட்டும் இல்லை கணேஷ்.நான் எத்தனையோ முறை குறிப்பால் உணர்த்தியும் நீதான் புரிந்து கொள்ளவில்லை.
பலமுறை மதிய உணவுக்கு நான் கொண்டு வந்த உணவை இரண்டாக பங்கிட்டு சாபிடுபோதாவது நான் சொல்லியிருக்கலாம்...
இல்லை ஆயுதபூஜை அன்று நான் உடுத்தி வந்த புது பட்டுபுடவை பற்றி நான் எப்படி இருக்கிறது என்று கேட்டும் நீ பதில் சொல்லாம் சென்றதுக்கு நான் விசும்பளோடு உன் கண்முன்னாடியே அழுதபோதாவது நீ உணந்து இருக்கலாம்.
தினம் காலையில் ஆயிரம் வேலைகள் இருந்தும் உன் வருகைக்கு காத்து இருந்து உன்னிடம் சில வார்த்தைகள் பேசிய பிறகே நான் வேலையை பார்க்க சென்றது என நிறையா சொல்ல இருந்தாலும் அதை சொல்லுவதால் இப்போது ஓரு பயனும் இல்லை..இவ்வளவு செய்தவள் வாய் திறந்து உன்னை காதலிக்கிறேன் என்று சொல்லியிருக்கலாம்தான்.
இதோ எனக்கு கிடைத்த இறுதி வாய்ப்பு உனக்காக காத்து இருந்த இந்த நான்கு வருடங்களில் நான் அதிகம் யோசித்தது உன்னை எப்படி சந்திப்பது, என காதலை எப்படி சொல்வது என்பதுதான் இதோ அந்த வாய்ப்பு.
நான் உன் இயந்திரம் இறக்கி விட்ட இடத்தில் இருந்து எங்கும் செல்லவில்லை. நான் திரும்பி வருவதுக்கான செய்தியை உனக்கு ஒருபோதும் ன் நானாக அனுப்ப போவதுமில்லை...
நீ என் காதலை புரிந்து ஏற்றுகொண்டால் எப்போது வேண்டுமானாலும் அந்த இயதிரந்தை என்னிடம் அனுப்பு நான் வரத்தயார். இல்லையென்றால் விடு நான் உன் பழைய இனிய நினைவுகளோடு இந்த காலத்திலயே இருந்து விடுகிறேன்.
உன்னிடம் இருந்து வேறெந்த பதிலையும் இப்போதைக்கு எதிர்பார்க்கவில்லை...
முதலியே அவளை அடையாளம் கண்டு கொண்டு இருந்தால் இந்த பயணத்தை தடுத்து இருக்கலாம். என் தவறு. அதோடு நான்கு வருட மாற்றம் அவளை வெகுவாக மாற்றியிருந்தது.
அருமையான பெண். அவளோடு பழகிய நாட்களை பலமுறை வாழ்கையில் இனிமையான தருனங்களாக நினைத்துபார்ததுண்டு. காதல் என்ற இடம் கொடுக்கவில்லையே தவிர என் மனதுக்குள் உயர்வாய் இருந்தவள்.
கண்டிப்பாக அவளின் காதலை மறுப்பதில் அர்த்தம் இல்லைஎன்பதால் அந்த இயந்திரம் திரும்பி செல்வதற்க்கான கட்டளையை பிறப்பித்தேன். கிளம்பி சென்றது
சென்ற நேரத்தில் இருந்து நான் ஒவ்வொரு நிமிடத்தையும் எண்ண தொடங்கியிருதேன்....
1..
2.......
3...........
2 comments:
nanba nalla irukku.
excellent ganesh... a good emotional story... I am wondering that, no one comment to this post.
excellent. don't worry, your machine will return successfully...
:) :) :)
Post a Comment