காதலிப்போமே...


   எங்களின் சந்திப்புகளை சுகமாக்கும் அதே ஆற்றில் நான் மணலை கூட்டி அதில் தலை வைத்து படுத்து இருக்க அவள் அருகில் உட்கார்ந்து இருந்தாள்.மாலை இருள்சூழ அந்நேரத்துக்கான காற்று வேகமாக வீசி தூரத்தில் விளையாடிகொண்டிருந்த சிறுவர்களின் சத்தத்தை இழுத்துவந்து போகிற வழியில் அவளின் கூந்தளையும் கலைத்துவிட்டு செல்ல அதை கையால் விளக்கிவிட்டுகொண்டே மணலில் எதையோ எழுதி மீண்டும் அதை  அழித்துக்கொண்டு இருந்தாள். 

“கணேஷ்

“என்ன?

  “எதாவது பேசேன் இப்படி எவ்வளவு நேரம்தான் சும்மா உட்கார்ந்து இருக்க? என்றாள்

“பேச ஒன்னும் இல்லை வார்த்தைகள் எல்லாம் காலியாகிவிட்ட மாதிரி இருக்கு

“போச்சு அப்படின்னா இனிமேல் பேசவே மாட்டியா என்ன?
“அப்படியில்லை இப்போதைக்கு ஏதும் இல்லை

“சரி நான் அப்ப போறேன் நீ இருந்துட்டு வா சரியா?என்றாள்


“போகாதே உன்னோடு இருக்கணும்என்றேன்


“அப்ப எதாவது பேசித்தொலை


  நான் வானம் நோக்கி என்ன பேச இவளிடம் என்று  இருக்க வளர்பிறை நிலவு அழகாய் கொஞ்சம் மங்கலாய் இருந்தது...
“உன்னுடன் இருக்கையிலே அந்த நிலவுக்கும் சிறகுகள் முளைக்கிறதேஇதுவரை நான் பார்த்த நிலவா இத்தனை வெளிச்சம் கொடுத்த நிலவா.."இந்த பாடல் வரி இப்ப உண்மையா இருக்கு தெரியுமா? என்றேன்



  “அட நீயா பேசுறது காதல் எல்லாம் ஹோர்மோன் வேலை,அபத்தம் சொல்லிட்டு இப்ப இப்படி வளியிரே என்றாள் சிரித்துக்கொண்டே


   “காதலில் ஒருநிலை வரைக்கும் ஹார்மோன்களின் வேலையும், அபத்தமானதுமாகத்தான் இருக்கும். பெரும்பாலான காதல் இதுலே முடிஞ்சு போய்விடுவதுதான் உண்மை என்றேன்


  “என்ன புதுகதை சொல்றே. அப்படின்னா நம்ம காதல்ல இந்த அபத்த நிலை எது நல்ல நிலை எது?


   “உன்னைகாதலிப்பதே வாழ்க்கையில் பெரிதாக எண்ணியது, உன் பார்வைக்கு ஏங்கியது, கோயில் ,குழாயடி என உண் பின்னாடி சுற்றியது,உன்னை நினைத்து கற்பனை உலகில் சுழன்றது,எப்போதும் உன்கூடவே பேசிகிட்டு இருக்கணும் நினைக்கிறது இந்த மாதிரி நிறையா சொல்லாம் என்றேன்


   “அடப்பாவி நீ இதுவரைக்கும் செய்ததை எல்லாம் அப்த்தம்னு சொல்லிட்டே, பின்னே எப்பதான் காதலிக்க ஆரம்பிச்சே?


  “உண்மைக்கும் இதுவரை இல்லை அதுக்குத்தான் முயற்சிக்கிறேன் என்றேன்


   இதை சொன்னதும் சட்டென்று என்பக்கம் திரும்பி உட்கார்ந்து “நீ கதை எழுதுற மாதிரியே பேசாம கொஞ்சம் புரியுற மாதிரி பேசு கணேஷ். நீ சொல்வதை பார்த்தா ஒரு கட்டத்தில் நாம இதுவரை பண்ணியது காதல் இல்லை ஹோர்மொனின் வேலை அதனால மறப்போம் பிரிவோம் சொல்லுவியோன்னு பயமா இருக்கு. நான் உன்னை அதிகமா உணமையா காதலிக்கிறேன் அப்படி செஞ்சிரதே கணேஷ் என்றாள்


“நான் அந்த அர்த்தத்தில் சொல்ல வரலை


“பின்னே?


   “இந்த மாதிரியான செயல்கள் எல்லாம் காதல் என்ற பெயரில் செய்கின்ற வேற வேலைகள். என்னை பொருத்தவரை உண்மைகாதல் தொடக்கத்தில் தெரியவே வாய்ப்பில்லை என்றேன்


   “பின்னே எப்பதான் தெரியும்? அப்படின்னா நான் உன்னை உண்மையா காதலிக்கலைன்னு சொல்ல வாரியா?


  “நீ எதுக்கு நம்ம காதலையே காரணம் காட்டுறே? நான் பொதுவா சொல்றேன் என்றேன்


“சரி சொல்லு உண்மைகாதல் எப்போ தெரியும்? தொடக்கத்தில் தெரியாம?


  “காதலித்து முழு வாழ்க்கையையும் கடந்து நிரந்தரமாய் ஒருவரையொருவர் உலகத்தை விட்டு பிரியும்போது


  “அப்படின்னா காதல்ங்கிற பேருல தொடக்கத்துல செய்யுறது எல்லாம் காதல இல்லை அபத்தம்னு சொல்றியா?


   “ஆமாம், அதையே சிலர் காதல்னு நினச்சு வாழ்க்கையை தொடங்கி வாழ்றதுதான் காதலில் பிரச்சினைக்கு காரணம்.


   “ம்ம சரி இப்ப புரியுது. இப்போதைக்கு என காதல் உண்மையானது அப்படின்னு நிரூபிக்க முடியாவிட்டாலும் கண்டிப்பா நீ சொன்ன முறையில் நிரூபிப்பேன் கணேஷ் என்றாள்


   “அதைத்தான் நானும் செய்ய முயற்சிக்க போறேன்னு உன்கிட்ட முதல்ல சொன்னேன்


   “சரி அப்ப ரெண்டு பேரும் சேர்ந்தே செய்யலாம் என்றாள் லேசாய் சிரித்துகொண்டே.


  அதுக்கு பிறகு ஏதும் பேசவில்லை. அதிகமாக இருள்சூழ தொடங்க காற்று மட்டும் எங்களின் மௌனத்தின் இடைவெளியில் சென்று கொண்டிருந்தது.  
   

8 comments:

இம்சைஅரசன் பாபு.. said...

//“அப்படின்னா காதல்ங்கிற பேருல தொடக்கத்துல செய்யுறது எல்லாம் காதல இல்லை அபத்தம்னு சொல்றியா?”

“ஆமாம், அதையே சிலர் காதல்னு நினச்சு வாழ்க்கையை தொடங்கி வாழ்றதுதான் காதலில் பிரச்சினைக்கு காரணம்.”//

ஹி ..ஹி ..ரொம்ப கரெக்ட் ..

கணேஷ் said...

என்ன சார் அனுபவம் ஏதும் இருக்கா என்ன? கரக்ட்னு சொல்றிங்க))

இம்சைஅரசன் பாபு.. said...

//என்ன சார் அனுபவம் ஏதும் இருக்கா என்ன? கரக்ட்னு சொல்றிங்க))//

உண்மைய சொன்னேன் ....

test said...

எனக்கு எதுவும் புரியாவிட்டாலும் கணேஷ் எது சொன்னாலும் அதில ஒரு நேர்மை, உண்மை, ஆழ்ந்த ஆராய்ச்சி எல்லாமே இருக்கும்னு தெரியும்! கரெக்டா பாஸ்? :-)

கணேஷ் said...

ஜீ... said...////

உங்க கருத்தை எனது நடையில் சொன்னால் "கதை ஒரு மண்ணும் புரியலை" இதைத்தான் நீங்க சொல்ல வாரிங்க))

என்ன செய்ய எப்பயாச்சும் இந்த மாதிரி எழுத தோணுது)))

Anonymous said...

romba correct ganesh unmaiyaana kaathal muthallaye theriyaathu

konja naal kalichuthaan theriyum

athu neraya peruku frndshiplathan arambikirathu

கணேஷ் said...

@ சுந்தர்

ம்ம நன்நீங்கள் சொல்வதும் உண்மைதான்

கவிநா... said...

hmm kathaliyungal.... best of luck....


:)
:)
:)