எங்கே?



கணேஷ் எங்கே?
 
  சத்தம் வெளியில் இருந்து வந்தவுடன் அடுப்பாங்கூடத்தில் வேலை பார்த்துகொண்டு இருந்த அவனின் அம்மா யாரென்று எட்டிப்பார்த்து, அவள் இருப்பதை பார்த்தவுடன்..

ஏன் வெளியில் நிக்கிறே உள்ளே வாஎன்றார்

  அவருக்கு தெரியும் அவள் எதுக்கு கணேஷை தேடிவந்து இறுக்கிறாள் என்று.அவனும்,அவளும் நெருங்கி பழகுவது தெரிந்தும். ஏதும் வெளியில் காட்டிகொள்லாமல் காதலை கண்டுகொள்ளதாவாருதான் இருந்தார்.அவள் நல்ல பெண். அவருக்கு மிக பிடிதவள்கூட..

 “எங்கே பார்த்து ரெம்ப நாள் ஆச்சு எங்கே போயிருக்கான்னு உங்களுக்கு தெரியாத?

  “எங்கம்மா, அவன் எதையும் எனக்கு சொல்லிட்டா செய்றான். வீட்டுக்கு பின்னாடி ஆய்வுக்கூடம்னு ஒன்னை கட்டி அதுலதான் எப்ப பார்த்தாலும் அடைஞ்சி இருக்கான்.எதோ பன்றான்.

“ஏன் நீங்க கேட்க மாட்டிங்களா?

  “கேட்டாலும் அவன் சொல்றது எங்கே புரியுது எனக்கு. கொஞ்ச நாளைக்கு முன்னடி ஆய்வுகூடத்தில இருந்து ஒரு பொண்ணு குரல் கேட்டு போய் பார்த்தா ஒரு இரும்பு பொம்மை மாதிரி ஒன்னுகூட தனியா பேசிக்கிட்டு இருக்கான் அதுவும் பேசுது, இவனை அடிக்குது என்னமோ பண்ணுது.

“என்ன பொம்மை அது?

  “கேட்டேன் அது பேரு ரோமியாம்  ஒரு ரோபோட் ன்னு சொன்னான் வேற எதுவும் சொல்லலை.

“இப்ப எங்கதான் இருக்கான்னு தெரியுமா கேட்டாள்

  “தெரியாது போன மாசம் முழுதும் எதோ ஒரு வட்டமா பெருசா ஒன்னை பொருத்திக்கிட்டு இருந்தான். நான் எதும் கேட்டு வைக்கலை

  “சரி அங்கு போய் பார்க்கிறேன் என்று சொன்னவள் ஆய்வுக்கூடம் நோக்கி போனாள்.

  கதவு திறந்து இருத்தது கணினி உயிர்பெற்று இருக்க திரையில் சில எண்கள் இறங்கு வரிசையில் குறைந்து கொண்டே வந்தது. சற்று தள்ளி ரோமி தனக்கு உண்டான இடத்தில பின் முதுகு காட்டி நின்று இருந்தது.ஒரு புற சுவற்றில் ஐன்ஸ்டீனும், மறுபுறத்தில் சுஜாதாவும் சிரித்து கொண்டு இருந்தார்கள்.

  இவள் வரும் சத்தம் கேட்டவுடன் ரோமி இயந்திரத்தனமாக திரும்பி பார்த்து விட்டு மீண்டும் தனது பழைய நிலைக்கு சென்றது எதுமே பார்க்கதா மாதிரி.அவளுக்கு ஆச்சர்யம் அப்போதைக்கு ஒன்றும் செய்யாமல் அவனுடைய அறையில் எங்கு போய் இருக்கிறான் என்ற தகவல் கிடைகிறாதா என்று தேடினாள்.
  
   மேசையில் நிறையா வரைபடங்கள் சிதறிக்கிடந்தன.பார்த்தாள் எல்லாம் ஒரு விண்கலத்துக்கான வரைபடங்கள். பக்கத்தில் இருந்த குறிப்பேட்டில் ஒரு கிரகத்தை பற்றி அவன் தொடக்கத்தில் இருந்து எடுத்த குறிப்புகள் இருந்தன.அதன் கடைசி பகுதியில் அவனுடைய அந்த கிரகத்துக்கான பயண விவரங்கள் இருந்தன.

  அவளுக்கு புரிந்து இருந்தது.  எங்கே போய் இருக்கிறான் என்று.கொஞ்சம் பயம் அவளுக்குள். ஏன் இவன் இப்படி செய்கிறான்? என்று. எல்லாம் அவன் மீது கொண்ட காதல். கோபம அக்கறை ஒன்று கலந்து சோகத்துக்கு தள்ளியது.

  அவன் தாயரித்த பேசும் ரோபோட் பற்றி நினவுக்கு வர எதுவும் அதுக்கு தெரிந்து இருக்கலாம் என்ற நம்பிக்கையில் ரோமியின் அருகில் சென்று .

“கணேஷ் எங்கே போய் இருக்கிறான் தெரியுமா?

  அது தலையை மட்டும் திருப்பி பார்த்து விட்டு எதுவும் பதில் சொல்லாமல் திரும்பி கொண்டது.

  ஓய் உன்னைத்தான் கேட்குறேன் என்றாள் மீண்டும் ரோமியிடம்..அது முன்னர் செய்ததையே இப்போதும் செய்ததது.

   கணேஷ் ரோமியை அவனுடைய சத்தத்திற்கு ஏற்ப இயங்கும்படியே அமைத்து இருந்தான். மற்ற சப்தங்கள் அதனால் உணர முடிந்தாலும் மூல கட்டளைகள் கணேஷின் சபதத்தில்தான் இருந்தாக வேண்டும்.இது ரோமிக்கு பொருத்தப்பட்ட sound synthesizer ல் செய்தவேலை. மற்றவர்கள் என்ன செய்தாலும் ரோமியை கட்டுப்படுத்த முடியாது. 

  கணினி திரையில் குறைந்து கொண்டு வந்த எண் இப்போது பத்துக்கு அருகில் வந்து இருந்தது..அது சரியாக 00 என்று வரும்போது வெளியில் பெரிய சப்பதத்துடன் ஒரு வட்டவடிவ விண்கலம் தூசுகளை கிளப்பியபடி இறங்கியது. சிறிது நேரத்தில் கணேஷ் இறங்கி வந்தான்.

அவளை அந்த இடத்தில பார்த்தவுடன் கொஞ்சம் ஆச்சர்யம் கலந்த பயத்தில் ..

“ நீ இங்கே என்ன பண்றே?

   “உன்னை தேடித்தான் வந்தேன், சரி இப்ப எங்கே போயிட்டு வார அந்த வேற்று கிரகத்துக்கா?

“அது எப்படி உனக்கு தெரியும்?

“உன் குறிப்பில் பார்த்தேன்

   “ஆமாம் நான் அங்குதான் போயிட்டு வந்தேன் என்று சொல்லிகொண்டே உள்ளே வரும்போது ரோமி திரும்பி அவனை நோக்கி ஓடிவந்தது. இதை பார்த்த அவளுக்கு புரிந்தது இப்போது, அது கணேஷின் குரலுக்கு மட்டும்தான் இயங்கும் என்று.

  “கணேஷ் வந்துட்டியா நீ இல்லாம எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா? பிராயணம் எப்படி இருந்திச்சி? என்றது ரோமி.

   அவள் ரோமி இப்படி ஆசை ஆர்வமாக கேட்பதை ஆச்சர்யமாக பார்த்துகொண்டே..

“கணேஷ் இது என்ன? எதுக்கு உன்மேல இவ்வளவு அதிக ஆர்வம்?

   “அது சும்மா அப்புறம் சொல்றேன் சரி நீ வந்தது அம்மாவுக்கு தெரியுமா என்ன? என்றான்

“ம்ம தெரியும் என்றாள்

   அதுக்குள் ரோமி “ கணேஷ் நான் நேத்துதான் self lubricating பண்ணேன் நீ சொன்ன மாதிரி உதட்டு பகுதிக்கு கம்மியாத்தான் பண்ணியிருக்கேன் பாரேன் என்று அவனுக்கு நெருக்கமாக சென்று உதட்டை சுளித்து காட்டியது

“கணேஷ் இது என்ன இப்படி பண்ணுது..நீ சும்மா இருக்கே? என்றாள்

“அது சும்மா விளையாட்டுக்கு அப்படித்தான் என்றான்.

   “என்னமோ எனக்கு சரியா படலை உன் நடவடிக்கைகள் பார்த்துக்கோ என்றாள்

   “சரி அதை விடு நான் இப்ப போன கிரகத்துல ஒரு அதிசயம் என்ன தெரியுமா? என்று அவளின் மனநிலையை மாற்ற முயற்சித்தான்

“என்ன சொல்லு என்றாள்

   “அங்கு வெறும் பெண்கள் மட்டும்தான்..ஆண்களே இல்லை..பெண்களின் கிரகம்
 
“பொய் சொல்லாதே இது எப்படி சாத்தியம்

“நானும் நம்பலை முதலில் ஆனா பார்த்து ஆராச்சி செஞ்சிட்டு வரேன் ஆணே இல்லை

“பின்னே எப்படி இனபெருக்கம் எல்லாம்? என்றாள்

“எல்லாம் வித்தியாசமான முறை அப்புறம் சொல்றேன்

   “அதுசரி அங்கு வெறும் பெண்கள் மட்டும் இருந்தால் நீ எப்படி திரும்பி வந்து இருப்பே அதை சொல்லு முதல்ல

  “எத்தனை பெண்கள் இருந்தால் என்ன, உன்னை பார்க்காமல் என்னால் இருக்க முடியலை அதான் வந்துட்டேன்

“பொய் சொல்லாதே உண்மையை சொல்லு

“ஏன் நீ மட்டும்தான் என்னை உயிருக்கு உயிரா காதலிக்கனுமா என்ன?

“உண்மையா கணேஷ்" என்ற அவளது குரலில் தாழ்வு இருந்தது

“ஆமாம் நம்பு உன்னை ரெம்ப காதலிக்கிறேன் என்றான்

  அவள் அருகில் வந்தால் கண்களில் காதலுடன். அடுத்து என்ன நடக்கும் என்று அவனுக்கு தெரியும் என்பதால் ரோமியை அந்த பக்கம் திரும்ப சொன்னான். அது பார்த்தால் கோபப்படும், கேள்வி கேட்கும் என்பதால்.திரும்பியது.

  இன்னும் நெருக்கமாக வந்து இருந்தாள்....அவன் போன அந்த கிரகதுக்குள் அங்கு இருந்தவர்கள் உள்ளே நுழைய விடாமல் அடித்து துரத்தியதால் உடனே திரும்பவேண்டிய சூழல். ஆனால் அதை பொய்யாக மாற்றி சொன்னதுக்கான பரிசு இப்போது அவனுக்கு கிடைத்து இருந்தது. 



(இவ்வளவு நாள் காணமல் போனதுக்கு இந்த மாதிரி கதைவிட ஆசைதான்..ஆனால் உணமையான காரணம் சிறியதுதான்..இனி தொடர்ந்து எழுதுகிறேன்)))

14 comments:

ஆனந்தி.. said...

//இவனை அடிக்குது என்னமோ பண்ணுது.”////

அது அடிக்குது ஓகே...அது என்ன என்னமோ பண்ணுது...விளக்கம் ப்ளீஸ் மிஸ்டர்.கணேஷ்...:)))))

ஆனந்தி.. said...

//அதுக்குள் ரோமி “ கணேஷ் நான் நேத்துதான் self lubricating பண்ணேன் நீ சொன்ன மாதிரி உதட்டு பகுதிக்கு கம்மியாத்தான் பண்ணியிருக்கேன் பாரேன்” என்று அவனுக்கு நெருக்கமாக சென்று உதட்டை சுளித்து காட்டியது //

ஹ ஹ ஹ...கணேஷ்...சிரிச்சு மாளல...முடியல சாமி..முடியல...உன் நிலைமை இவ்வளவு கவலைகிடமா ....ஹ ஹ...

ஆனந்தி.. said...

//“அதுசரி அங்கு வெறும் பெண்கள் மட்டும் இருந்தால் நீ எப்படி திரும்பி வந்து இருப்பே அதை சொல்லு முதல்ல”//

ஹ ஹ...கணேஷ்...உன்னவள் ஓவர் புத்திசாலியா இருக்காளே....:)))))

ஆனந்தி.. said...

//“எத்தனை பெண்கள் இருந்தால் என்ன, உன்னை பார்க்காமல் என்னால் இருக்க முடியலை அதான் வந்துட்டேன்”//

உன்னால் அறிவியல் கதை மட்டுமில்லை...சிறந்த நகைச்சுவை சிறுகதைகள் கூட எழுத முடியும் நிருபிச்சிட்ட...:))))

ஆனந்தி.. said...

//அவள் அருகில் வந்தால் கண்களில் காதலுடன். அடுத்து என்ன நடக்கும் என்று அவனுக்கு தெரியும் என்பதால் ரோமியை அந்த பக்கம் திரும்ப சொன்னான். அது பார்த்தால் கோபப்படும், கேள்வி கேட்கும் என்பதால்.திரும்பியது.//

:-)))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))

ஆனந்தி.. said...

//இன்னும் நெருக்கமாக வந்து இருந்தாள்....அவன் போன அந்த கிரகதுக்குள் அங்கு இருந்தவர்கள் உள்ளே நுழைய விடாமல் அடித்து துரத்தியதால் உடனே திரும்பவேண்டிய சூழல். ஆனால் அதை பொய்யாக மாற்றி சொன்னதுக்கான பரிசு இப்போது அவனுக்கு கிடைத்து இருந்தது. //

காதல் சிறுகதை எழுத்தாளர் கணேஷ் வால்க..வாள்க :))))))

சுதா SJ said...

சூப்பர் பாஸ்

சுதா SJ said...

//“அதுசரி அங்கு வெறும் பெண்கள் மட்டும் இருந்தால் நீ எப்படி திரும்பி வந்து இருப்பே அதை சொல்லு முதல்ல”//

உங்கள பத்தி ரெம்ப நல்லா தெரிந்து வைத்து இருக்காங்க போல
lol

கணேஷ் said...

ஆனந்தி.. said...
உன்னவள் ஓவர் புத்திசாலியா இருக்காளே....:)))))///

எல்லாம் என்கூட சேர்ந்த பிறகுதான் அப்படி ஆயிட்டா)))

கருத்துக்கு நன்றிக்கா))

கணேஷ் said...

துஷ்யந்தனின் பக்கங்கள்//

கருத்துக்கு நன்றிங்க..))

Rathnavel Natarajan said...

பதிவு நன்றாக இருக்கிறது.
வாழ்த்துக்கள்.

கணேஷ் said...

Rathnavel said...//

பாராட்டுக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா..

கவிநா... said...

WOW... aanaalum ganesh, nalla samalikkireenga... romba naal kalichu potta pathivuthaan. athukaka, ippadiyaa, oreyadiya poi solvaanga.

nijamo, poyyo, romba arumaiyaa irukku ganesh, unga thiraikkathai amaippu.

:)
:)
:)

கவிநா... said...

thirumba oru murai padichen...

nakaichuvaiyaana, uraiyadalkalukkaka... :)))