அறுவடை


    இப்படித்தான் மனிதர்களா ? என்று நினைத்து தொடக்கத்தில் அவர்களோடு சேராமல் தனித்தே இருந்தேன்.சில வருடங்களில் இப்படித்தான் மனிதர்கள் என்பதை உணர்ந்த போது அவர்களோடு சேரும் எண்ணம் வந்தது.எங்களது தலமையின் அறிவுறைப்படி மனிதர்களுக்கு என்மீது எந்த ஒரு சந்தேகமும் வரக்கூடாது. அதற்கு நான் மனிதர்களோடு சகஜமாகப் பழகுவது ரெம்ப முக்கியம்.

    மனிதர்களின் சில குணங்களை வெறுத்தாலும் என்னை ஈர்த்தவையும் அவர்களிடம்  இருந்தன. உண்மையான அன்பு,பாசம்,பரிவு, முக்கியமாகக் காதல் எனும் உணர்ச்சி இது எல்லாமே எங்கள் இனத்திற்கு புதியதான ஒன்று.

   வேற்று இனத்தவனான எனக்கு கொடுக்கபட்ட வேலை பூமியில் சென்று "செல் விளைச்சலை"  மேர்ப்பார்வையிடுவது. நாங்கள் விதைத்த ஒரு செல் மனிதர்களாக வளரும்வரை காத்து இருப்போம். அதுவும் அவர்களின் பரிணாம வளர்ச்சியில் குறிப்பிட்ட காலம் கடந்து இருக்க வேண்டும். அதாவது மனிதர்கள் தோன்றிய காலத்தில் இருக்கும் மூளைதான்  இப்போதும் அவர்களிடம் இருக்கும் என்றாலும் அதன் சிந்திக்கும் திறன், செயல்படும் திறன் வேறு. அதுதான் எங்களுக்கு முக்கியம்.

   இந்த செல் வளர்ச்சியில் எங்காவது குறை நடந்தால் எனது குழுவுக்கு அறிவிக்க வேண்டும். அப்படித்தான் கொஞ்சகாலம் முன் மனிதர்களையே அளிக்க கூடிய டைனோசர்கள் தவறுதலான ஒரு செல் பரிணாம வளர்ச்சியில் உருவாக அதை அழிக்க எங்களது இனம் பெரும்பாடுபட்டது. ஒருவழியாக எரிகற்களை பூமி பக்கம் செயற்கையாகத் திருப்பி அதை அழித்தோம். இதுபோல் மனித இனத்திற்கு எந்த ஒரு இடையுறும் இல்லாதவகையில் பார்த்துவருவது என்னைப் போன்றவர்களின் வேலை.  

   இதற்காக கிட்டத்தட்ட மனிதனாகவே மாறி வாழ்ந்து வந்தேன்.  படிப்பது, வேலையில் அமர்ந்து காசு சம்பாரித்து வாழ்க்கை நடத்துவது என எல்லாமே மனித வாழ்க்கை. இது ஒன்றும் எனக்கு கஷ்டமாக தெரியவில்லை. எங்களின் அறிவுத்திறனோடு ஒப்பிடும்போது மனிதன் தூசுதான்.

   இருந்தும் இந்த மனித விளைச்சலுக்கு காரணம் அவர்களின் மூளையில் இருக்கும் நியூரான்கள், மற்றும் சில கிலியல் செல்கள். இந்த அமைப்பு எங்களுக்கு இல்லை.எப்படி மனித மூளைக்குள் வேதிவினையில் தகவலை கடத்துகிறதோ அதே வேலைக்குத்தான் எங்களுக்கும் அது தேவை.

    மனிதர்களைப் போல எங்களுக்கு பேசும்பழக்கம் இல்லை.தகவலை பரிமாற இந்த நியூரான்கள் தான் அவசியம்.போதுமானவரை எங்கள் கிரகத்திலியே உற்பத்தி செய்தாலும் எங்களின் இனப்பெருக்கத்தால் வேற்று கிரகத்தில் நியூரான் விளைச்சலுக்கு திட்டமிட்டு கிட்டதட்ட மூன்று கிரகங்களில் செயல்படுத்துகிறோம்.

   இது சுழற்சிமுறையில் நடக்கும்.எங்களின் தேவையை இந்த நடைமுறைகள் பூர்த்தியும் செய்தும் வந்தது. பூமி என சொல்லப்படும் இங்கு அறுவடைக்கான காலம் நெருங்கி இருந்தது. இந்த தருணத்தில் தான் என் மனதில் கொஞ்சம் மாற்றம். எங்கள் இனத்துக்கு மனம் ,உடல்,ஆத்மா என்று மனிதர்கள் சிந்தித்து வைத்து இருக்கும் விசயங்கள் தெரியாது. இன்னும் இந்த சித்தர்கள்,மந்திரம்,கடவுள், என்னவோ சொல்கிறார்கள் எனக்கு யோசிக்கவே கஷட்டமாக இருக்கிறது. எங்களுக்கு தேவை நீயுரான்கள் அதுக்கு இவை எந்த ஒரு தீங்கும் இல்லையென்பதால் கண்டுகொள்ளவில்லை. 


   ஆனால் எனது நோக்கத்தையே மாற்றும் சம்பவம் என்னையறியாமல் என்னுள் நடந்து வந்திருக்கிறது. அதை மனிதர்கள் காதல் என்கிறார்கள்.அவர்கள் சொல்வதை விட அனுபவிக்கும் போதுதான் சுகமாய் இருந்தது. காரணம் இதுவரை ஆணிடம் பழகியது போல் பெண்களிடம் பூமியில் பழகியது இல்லை. எல்லா பெண்களும் மனதில் பாதிப்பை ஏற்படுத்தாமல் இருப்பதில்லை என்பதை எனக்கு உணர்த்தினாள் அவள். சம்பளத்திற்காக ஒரு நிறுவனத்தில்  வேலை பார்த்து வருகிறேன். அங்குதான் அவளை பார்க்க நேர்ந்தது. எனக்கும் மனித ஆண் நண்பர்கள் நிறையா உண்டு. அவர்கள் சொல்லும்போது எல்லாம் இந்த காதல்  மீது பெரியதாக ஆர்வமோ ஆசையோ வந்தது இல்லை.

  அவளின் துறுதுறு கண்கள்,அதைசிமிட்டி  பேசும் அழகு எல்லாமே சேர்ந்து என்னை ஏதோ செய்தது.மற்ற பெண்களிடத்தில் பார்த்தது போல இல்லாமல் வர்ணம் வித்தியாசமாக இருந்ததும் ஒரு காரணம். என் மனித நண்பர்கள் அதை பூனை கண், பாம்பு கண் என்றார்கள். என்னவோ எனக்கு அது பிடித்து இருந்தது.

   அவளை பார்ப்பதுக்கு சுற்றிய தினங்களில் எனக்கு கொடுக்கபட்ட வேலையே முற்றிலும் மறந்தேன். ஒருவழியாக அவளிடம் நட்பு கொண்டு பேசும் அளவுக்கு தேரியிருந்தேன். இருந்தாலும் இந்த மனித உணர்வுகள் பெண்களிடம் பழகும்போது மட்டும் ஏன்தான் இப்படி இருக்கிறதோ தெரியவில்லை.

   இதை எல்லாமே அவள் கண்கள்தான் செய்ய வைத்தது. நிறையமுறை சொல்லியிருக்கிறேன் உனது கண்கள் அழகாய் இருக்கு என்று அதுக்கு  அவள் வெட்கம் என்ற சொல்லும் ஒன்றால் தரையைப்பார்த்து குனிவது பிடிக்கும். இருவரும் ஏற்கனவே ஒருவருக்குள் ஒருவர் உணர்ந்து இருந்ததால் நான் முதலில் காதலை சொன்னபோது ஏதும் சொல்லாமல் முன்பு போலவே தரைபார்த்து “நானும் என்று மட்டும் சொன்னாள்.

    அடுத்து வந்த நாள்களில் என்நினைவு மட்டுமில்லாமல் எல்லாவற்றையும் ஆக்கிரமித்து இருந்தாள். அவள் இல்லாத நிமிடங்கள் கண்டிப்பாக தவிர்க்க முடியாத ஒன்றாகத்தான் இருந்தது.எல்லாமே புதிய ஒரு உணர்ச்சிகள்.சுகமானதும்கூட.இந்த நேரங்களில் நான் வந்ததுக்கான நோக்கம், என் பணி எல்லாமே மறந்து அவளுக்கான ஒரு தனி வாழ்க்கை வாழ ஆரம்பித்தேன்.

    இருட்டியிருந்தது. மாலையில் அவளின் நினைவுகளில் கலந்து இருந்த சமயம்.  நான் பார்த்து பழகின உருவம். திடுக்கிட்டு எழுந்தேன். இப்போதுதான் எனது வேலையை நான் முற்றிலும் மறந்து இருக்கிறேன் என்பது நினைவுக்கு வந்தது. எங்களின் தகவல் பரிமாற்றம் நியூரான்கள்வழி என்பதால் சத்தம் இருக்காது. நாங்கள் உள்ளுக்குள் உணர்ந்தாலே அதுக்கேற்ப விகிதத்தில் நியுரான்கள் வெளிப்பட்டு மற்றவர்களை அடையும் அதை உள்வாங்கி அதை வேறொரு தகவலாக புரிந்து கொள்ளும் அமைப்பு எங்களது.

  மனிதர்கள் எப்படி ஒலியை பயன்டுத்துகிறார்களோ நாங்கள் நியூரான்களை பயன்படுத்துவோம். சத்தமாக பேச அதிக நியூரான்கள் செலவழியும், சிதறிபோகும் அவற்றை எங்கள் இனத்தவர் யார் வேண்டுமானாலும் கேட்கலாம். எப்படி மனிதன் கத்தி பேசுகிறானோ அந்த மாதிரி.

“என்ன திடீர் விஜயம் என்று கேட்டேன்.

   “உன்னிடம் இருந்து எந்த ஒரு தகவலும் இல்லியே ஏன்? அறுவடை காலம் வேறு நேருங்கி விட்டது அதான் தலைமை உன்னை பார்த்து விட்டு வரும்படி உத்தரவு என்றான்  அவன்

   “ஒன்றுமில்லை எல்லாம் சரியாகதான் போகின்றது அதான் ஏதும் தெரிவிக்க வில்லை

   “ஏன் உன் நீயுரான்கள் ஒரு சுழற்சியில் வருகிறது மனிதர்களோடு சேர்ந்து நீயும் பொய்யை கத்துகொண்டியா?

“பொய் இல்லை” என்றேன் சமாளிக்கும் விதத்தில்.

   “சரி அறுவடை தேதி முடிவாகிவிட்டது நாளை அல்லது அடுத்த நாள் இருக்கும் அதுக்குள் நீ உன் உருவத்தை மாற்றிவிட்டு நமது இடம் வந்தது சேர். கொஞ்ச ஓய்வுக்கு பிறகு வேறு கிரகம் போக வேண்டியது இருக்கும்

“இல்லை இப்போதைக்கு அறுவடை இங்கு வேண்டாம்

  “ஏன் எல்லாம் சரியாதானே இருக்கு இதுதான் போதுமான சமயம். இதுக்குமேலும் மனிதனின் தரம் உயர்ந்து விட்டால் அவர்களது நீயுரன்களில் எதாவது மாற்றம் ஏற்ப்பட வாய்ப்பு இருக்கிறது அதை நம்மால் சாமாளிப்பது கஷ்டம உனக்கு தெரியும்தானே

“தெரியும் அறுவடை செய்யுங்கள் ஆனால் நான் இங்குதான் இருப்பேன்

   “என்னாச்சு உனக்கு அறுவடையின் போது என்ன நடக்கும் என்று தெரியும் தானே?’

   “தெரியும் வழக்கம்போல ஒருவித  ஒளிக்கற்றைகள் வைத்து நியுரான்களை எடுத்துவிட்டு அடுத்த சில நிமிடங்களிளியே நெருப்பால் அழிப்போம் நான் நெருப்பில் அழிகிறேன் இங்கேயே நீ அறுவடையை சொன்ன தேதியில் ஆரம்பி

   “இதை தலைமைக்கு சொன்னால் இங்கேயே உன்னை அழிக்க ஆணை வரும் தெரியும்தானே?

   “அதான் நானும் சொல்கிறேன் இங்கேயே அழிகிறேன் என்று.இதற்கு மேல் ஏதும் பகிரவேண்டாம்

“சரி உன் இஷ்டம் முடிந்தால் முடிவை மாற்று.

   “இல்லை. எனக்கு ஒரு உதவி செய் எப்போது அறுவடை நேரம் எப்போது என்பதை சொல்

“நாளை மாலை

   போய் இருந்தது அந்த உருவம். பூமிக்கு வந்த பிறகு நான் அடையாத வருத்தம் துக்கம் அப்போது எனக்குள். எதுமே இல்லாமல் எல்லாமே அவலாகவே இருந்தாள்.

   மறுநாள் மதிய உணவு இடைவேளையில் நான் ஏதும் பேசாமல் இருக்க அவள் மட்டுமே பேசினாள். ஒருகட்டத்தில் காரணம் கேட்க ஒன்றுமில்லை என்றுமட்டும் சொல்லிவைத்தேன். வழக்கம்போல் உதட்டை சுழித்து கண்ணை சிமிட்டினாள்.

எப்போதும் சந்திக்கும் பூங்காவில் அமர்ந்து இருக்க அவளிடம்

“இந்த பூமி அழியும்போது என் பக்கத்தில் நீ இருந்தால் என்ன பண்ணுவே?

“பெருசா என்ன பண்ண உன் கையை இருக்க பிடிச்சிக்குவேன்

“இப்ப பிடிச்சிக்கோ

   “அடப்பாவி சும்மா பிடிக்க சொல்லு பிடிச்சிட்டு போறேன் அதுக்காக இந்த உலகத்தை எதுக்கு அழிய சொல்றே என்றாள் சிரித்து கொண்டே

   “இல்லை இப்ப அழியப்போகுது என்னுடைய ஆசையும் அதுதான் என்று சொல்லி அவளது கைகளை பற்றினேன்.

   “ஏன் ஏதேதோ பேசுறே? கவலையா என்னவோ மாதிரி இருக்க என்னாச்சு?” என்றாள்

    பதில் சொல்லவில்லை அறுவடைக்கான அறிகுறிகள் எனக்கு தெரிய ஆரம்பித்தன என் இனத்தவர்கள் செய்யும் வேலைகளை புரிந்து கொள்வது சிரமமாய் இருக்கவில்லை

   “பதில் சொல்லு ஏன் இப்படி....என்று சொல்லி முடிக்கும்போது அந்த ஒளிக்கற்றை எங்களை கடந்து சென்றது அதுக்கு பிறகு நியூரான்கள் இல்லாததால் தகவல் ஏதும் கடத்தாமல் பிரம்மை பிடித்தவள் போல அப்படியே அமர்ந்து இருந்தாள்.  அந்த அழகான பாம்பு கண் என்னையே பார்த்து கொண்டிருந்தது. கைகளில் கொஞ்சம் தளர்ச்சி. தூரத்தில் பெரிய நெருப்புவளையம் சுழன்று வருவது அவளது கண்களில் தெரிந்தது. அவளது பிடி தளர்ந்து இருந்தாலும் அவளது கைகளை  விரல்களுக்கு இடையில் அழுத்தமாகப் பிடித்திருந்தேன்.  கடைசியான அவளின் ஆசைக்காக.



(இந்த கதையின் மஞ்சள் கரு பிரபல பதிவர் டெரர் பாண்டியன் எழுதிய இந்தகதையில் இருந்து எடுத்தது. வெள்ளைகரு என்னுடையது ஒரு அழகான அறிவியல் புனைவை எழுதிய அவருக்கு நன்றிகள்)))






16 comments:

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அடப்பாவி நல்லாத்தான்யா எழுதி இருக்கே.....!

கணேஷ் said...

அப்படியா..))

கரு யாருது சும்மாவ பிரபல பதிவர் இல்ல அதான்)))

TERROR-PANDIYAN(VAS) said...

மொக்க ஐடியா வச்சி இவ்வளவு நல்லா கதை எழுத முடியுமா? :)

(ஓ!! கதைனா இப்படி தான் எழுதனும் போல)

HVL said...

மஞ்சள் கரு வெள்ளைக் கரு ரெண்டுமே சேர்ந்து ஒரு விறுவிறுப்பான ஆம்லெட் ஆகியிருக்கிறது.

கணேஷ் said...

ஓ!! கதைனா இப்படி தான் எழுதனும் போல//

ம் ஆமாம் நான் சொல்லி கொடுத்த மாதிரியே அடுத்த கதையை எழுதுங்க))

கணேஷ் said...

ஆம்லெட் ஆகியிருக்கிறது.//

ஹா ஹா அடப்பாவமே கடைசியா ஆம்லேட் ஆக்கிட்டிங்கலே)))

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

@டெரர்

கதைன்னா இதான் கதை. நீயெல்லாம் இன்னும் ஏன் @@@@ ?

இம்சைஅரசன் பாபு.. said...

சபாஷ் கணேஷ் செம கதை ..சூப்பர் ..ஆனா போய் சொல்லிட்ட மஞ்சள் கருன்னு

இம்சைஅரசன் பாபு.. said...

உண்மைலேயே நாம பேசினது என்ன .ஒரு கதை எழுதி டெர்ரர் போட்டு தள்ளனும்ன்னு ...ஆனா இப்படி மாத்தி சொல்லி போட்டியே ராசா

ADMIN said...

சும்மா சொல்லக்கூடாது. நல்லாவே கதை விட்டிருக்கீங்க..!

இல்லை நல்லா எழுதயிருக்கீங்க..!

பகிர்வுக்கு நன்றி.!

செல்வா said...

உண்மைலயே ரொம்ப ரொம்ப கலக்கலா இருக்குங்க. ஆனா நான் கடைசில உலகம் அழியாதுங்கிற மாதிரி கற்பனை பண்ணினேன்.

அதாவது அவர் அவுங்க கிரகவாசிகளோட சண்டை போட்டு ( தமிழ் படத்துல வர்ர ஹீரோ மாதிரி ) நினைச்சேன் :-)

கணேஷ் said...

டெர்ரர் போட்டு தள்ளனும்ன்னு ...ஆனா இப்படி மாத்தி சொல்லி போட்டியே ராசா///

என்ன பண்ண சார்அவரை பார்க்க பாவமா இருந்துச்சி அதான் விட்டுட்டேன் )))

கணேஷ் said...

தமிழ் படத்துல வர்ர ஹீரோ மாதிரி ) நினைச்சேன் :-)//

படம் நிறையா பாக்கிரத்தை விட்டுட்டு புக படிங்க ))

கணேஷ் said...

மேலான கருத்துக்களை இடவும்.. முடிந்தால் இன்ட்லி ஓட்டுப்பட்டையில் கிளிக் ஓட்டுப் போடவும்//

கண்டிப்பாக செய்கிறேன் ))

கணேஷ் said...

கதைன்னா இதான் கதை. நீயெல்லாம் இன்னும் ஏன் @@@@ ?//

அப்படி சொல்லாதிங்க இனிமே பதிவுன்னு எழுதினா அது அறிவியல் புனைவுன்னு சப்தம் எடுத்து இருக்கிறாராம்)))

Anonymous said...

நல்ல பதிவு..,வாழ்த்துக்கள்...பகிர்வுக்கு நன்றி.!