இதில் மொத்தம் மூன்று விசயங்கள். இரண்டு
படித்த அறிவியல்,ஒன்று சொந்த சோக கதை.
பூமிக்கு வேற்று கிரகத்தில் இருந்தோ அல்லது
விண்வெளியில் வேறு எங்கு இருந்தோ உயிர்கள்
தோன்றுவதுக்கான மூலகூறுகள் வந்து இருக்கலாம் என்பதை திடமாக நம்பி அதன் மீது
ஆராச்சி செய்கிறார்கள்.
அதன் முன்னேற்றமாக சில நுண்ணியிரிகள் பல
ஆண்டுகள் விண்ணில பயணிக்கும் தன்மை கொண்டவை என தெறிய வந்துள்ளது. இதை சோதனையாகவும்
செய்து பார்த்து இருக்கிறார்கள்.
இது சாத்தியமாகவே, விண்வெளிகளில்
காணப்படும் தூசுகளின் வழியாக கூட இந்த மாதிரியான நுண்ணுயிரிகள் பூமிக்கு வந்து
இருக்கலாம் என்பது அவர்களின் கருத்து. ஏனென்றால் இந்த வகை நுண்ணுயிரிகள் பிரச்சினை
இல்லாமல் பல நூறு வருடம் விண்வெளியில் பயணிக்கும் தன்மை கொண்டவை என்கிறார்கள்.
அப்படி என்றால் கண்டிப்பாக நாமெல்லாம்
எங்கு இருந்தோ காற்றில் அடித்துவரப்பட்டவர்கள் என்பதுதான் உண்மை. காற்றில் வந்த
தூசுகள் வேறு கிரகங்களின் மீது விழுந்து இருந்தாலும் அங்கு நிலவும் தட்ப வெட்ப
சூழலில் பிழைத்து வாழ முடியாமல் போய் இருக்க கூடும.
இதை படித்து முடித்தவுடன் இன்னொரு கேள்வியும்
வருவது சகஜம்தான் அந்த தூசில்(aerial dust) வந்த நுண்ணுயிரி எங்கு இருந்து வந்தது? அதுவந்தது என்றால் அந்த
இடத்தில கண்டிப்பாக உயிர்கள் இருக்கனுமே. கண்டிப்பாக இருக்கும். அதையும்
கண்டுபிடிப்பார்கள். இவளவு தூரம் வரவே நிறையா நாட்களை செலவழித்து இருக்கிறோம். கொஞ்சம் பொறுத்து இருக்கத்தான் வேண்டும்.
அவர்கள் ஒன்றும் கடவுள் சம்பந்தமான வெறும்
புத்த்கங்களை படித்துவிட்டு எல்லாமே அவன் செயல் என்று அறிவுக்கு தீனி கொடுக்காமல்
தனிவழியில் போகவில்லை.எதாவது ஒன்று தான் படித்ததோடு ஒத்துபோயவிட்டால் இதைத்தான்
எங்கள் மதநூலில் சுமார் 100000000..வருடம் முன்னே சொல்லிவிட்டார்களே என்று நக்கலாக சிரிக்காமல் நிறையா
குழம்புகிறார்கள் பின் தெளிகிறார்கள்.
********
இந்த பிரபஞ்சத்தின் அமைப்பை பற்றி இன்னும்
ஒரு தெளிவான முடிவு இல்லை. எல்லோரும் தனது அனுமானத்தை இதுவரை சொல்லி வந்து இருக்கிறார்களே தவிர இதுதான்
உண்மை என்று நிரூபிக்கவில்லை.
உருவ அமைப்பு என்று தனியாக இருந்தாலும்
அதற்கு அடுத்ததாக அது எந்த நிலையில் இருக்கிறது என்பதில் கொஞ்சம் தெளிவு
இருந்தாலும் முழுதும் இல்லை அதாவது Hubble சொன்னது
போல expanding universe இந்த மாதிரி.
இது சம்பந்தமாக இன்னொரு அனுமானம் வந்து
இருக்கிறது.இந்த பிரபஞ்சம் ஒரு மைய அச்சை கொண்டு சுழலும் நிலையில்
இருப்பதாக.அதற்கு காரணம் Michael
Longo என்பவரும் இவரோடு சேர்ந்து சிலரும் கிட்டதட்ட
பத்தாயிரம் spiral galaxy களை
வைத்து ஆராய்ச்சி செய்து இருக்கிறார்கள்.
அப்படி பார்த்தபோது எல்லா galaxy களுமே ஒரே
மாதிரி clockwise திசையிலியே
சுற்றிவருகிறதை வைத்து இவர்கள் கொண்ட
அனுமானம் தான் இந்த பிரபஞ்சம் சுற்றுகின்றது என்பது.
இவர்கள் சொல்ல வருவது சொல்லிவைத்தாற்போல
எல்லா galaxy லும்
ஒரே திசையில் சுற்றுவதுக்கு இந்த பிரபஞ்சத்தின் சுற்றும் விசையை தவிர வேற காரணம் இருக்க முடியாது என்பதே.
இது இப்போதைக்கு ஒரு சிறிய அனுமானம்தான்.
ஏனென்றால் சில முக்கியமான விதிகள் இதை ஏற்றுகொள்வதில்லை. இன்னும் இதில்
ஆராய்ச்சிகள் தொடருகிறது.
**********
சென்னையில் இருக்கும்போது “சுஜாதாவின்
மளிகை கடை சீட்டை கூட படிக்க தயாராக இருக்கிறார்கள் ஆனால் எங்கள் கதையை படிக்க
மறுக்கிறார்கள்” என சில எழுத்தாளர்கள் சொன்னதாக சுஜாதா அவர்கள் சொல்லியிருந்தார்.
இதை படித்தவுடன் சிரிப்புவந்தது அந்த
எழுத்தாளர்கள் சொன்னது சரிதான். அப்படி சீட்டை யார் படிக்க தயார் என்றால் முதலில் கை
தூக்குவது நானாகத்தான் இருப்பேன் என்பதை நினைத்துதான் சிரிப்பு. அப்போதைக்கு
சுஜாதா என்றால் அப்படி. இப்பையும்தான்.
அவர்கள் சொல்லவருவது சுஜாதா என்ன எழுதினாலும்
படிக்கிறார்கள் என்பதே. உண்மைதான் அவர் என்ன எழுதினாலும் எழுத்து எழுத்தாக ரசித்து படிப்பதுதான் என்
வழக்கம். ஏன்? என்ன காரணம்? எல்லாம் தெரியாது அவர் எழுத்துக்கு மட்டுமே அப்படி.
இதுக்கு பதிலாக அமையும் விதத்தில் சுஜாதா
அவர்கள் மற்றொன்றில் சொன்னது “எல்லோரும்
என்ன வசிய மை ஊத்தி எழுதுகிறீர்கள்? என்று கேட்கிறார்கள் ஆனால் எனக்கு இருக்கும்
எழுத்துக்கு மை பேனா வைத்து எழுதினால் யாருக்குமே புரியாது என்பதில் தொடங்கி அவர்
எப்படி எழுதுவார் என்பதை விளக்கியிருப்பார். அருமையாக இருக்கும். உண்மையில் அவரிடம்
ஏதோ வசியம் இருக்குமோ என்றுகூட யோசித்தது உண்டு.
அவரின் எழுத்தில் இதுதான் பிடிக்கும் இது பிடிக்காது
என்று சொல்ல தெரியாது. ஜவ்வு மிட்டாய் விக்காமல் சட்டென்று நேரடியாக விசயத்தை
சொல்லும் முறை எனக்கு ரெம்ப பிடிக்கும்.
அவர் இருந்தவரை ஏதோ ஒரு வித்தியாசமான உணர்வு
நம்மோடு சுஜாதா இருக்கிறார் என்பது போல. இப்போது
அவர் இல்லை என்பதை நினைப்பதே கடினாமாக இருக்கிறது. இத்தனைக்கும் அவர்
இருக்கும்போது நான் இந்த மாதிரி எல்லாம் வலைப்பூவில் எழுத ஆரம்பிக்கவில்லை. வசியம்
செய்தாரோ இல்லையோ ஆனால் பல இளைஞ்சர்களை தனது பக்கம் கட்டிவைத்து ஒரு முன் மாதிரியாக இருந்தார் என்று சொல்ல
முடியும்.
நானும் எனது எழுத்துக்களை பலர் நிறையா தடவை
திரும்பி திரும்பி படிப்பதாக கேள்விபட்டேன்.காரணம் நான் செய்த வசியம் இல்லை. எழுதிய
கதைகள் ஒருதடவையில் படித்து புரியாமல் இன்னொருமுறை நிறுத்தி நிதானமாக புரிந்து
படிப்பதற்காக. கிட்டதட்ட இதுவும் ஒரு முறைதான் மீண்டும் படிக்க வைக்க.
2 comments:
அந்த தூசி எங்க இருந்துதான் வந்துருக்கும்?:-))
அண்டத்தை பற்றி ஆளாளுக்கு நிறைய தியரி வச்சிருக்காங்க...எப்ப உண்மை தெரியுமோ:-)
Post a Comment