சில விசயங்கள் - 6

   எல்லோரும் சொல்கிறார்களே என்பதற்காகவும் கொஞ்சம் அது சம்பந்தமாக படித்து இருந்ததால் தொடக்கத்தில் யார் இந்த நியண்டர்தால் என்ற தலைப்பில்  இதைப்பற்றி எழுதியிருந்தேன். அதாவது முதலில் உயிரினம் ஆப்ரிக்காவில் தோன்றி நகர்ந்து பல இடங்களுக்கு சென்று வளர்ந்ததாக.

    இதை பொதுவாக ஒத்துகொண்டாலும் அப்படி ஆப்ரிக்காவில் தோன்றிய உயிரினம் எப்படி அங்கு இருந்து அதிக தொலைவு கடந்து எல்லா இடங்களுக்கும் பரவியது அதுவும் முக்கியமாக அந்த வறண்ட சஹாரா பாலைவனத்தை எப்படி கடந்தார்கள் என்ற பொதுவான கேள்விகளை முன் வைத்தார்கள்.

   இதுக்கு பதில் அளிக்கும் விதமாக சஹாரா பாலைவனத்தில் கொஞ்சகாலம் முன் நதிகள் ஓடியதுக்கான நீர் படுக்கைகள் இருப்பதாக கண்டுபிடித்து இருக்கின்றார்கள்.

   இதன்மூலம் அவர்கள் சொல்லவருவது இந்த ஆற்றின் நீர் வளத்தை உதவியாக கொண்டு பழைய உயிரினங்கள் இடம் பெயர்ந்து இருக்கலாம் என்றுதான். இந்த நதியின் தொடக்கம் northern Sahara வில் இருந்து Mediterranean Sea க்கு போவதாக சொல்கிறார்கள். இந்த கடல் கரையில் இருந்து அந்த உயிர்கள் நகர்ந்து நதியின் வழியே இடம்பெயர்ந்து இருக்கலாம் என்கிறார்கள். இன்னும் ஆராய்ச்சிகள தொடர்கிறது.

*********

   விமர்சிப்பவர்களை பற்றி சுஜாதா சார் சொன்ன விசயம், “பலரின் விமர்சனம் அவர்களின் மேதாவித்தனத்தை காட்டுவதாகவே உள்ளது.எழுதியதுக்கு சம்பந்தமே இல்லாமல் அவர்களின் அறிவுதனத்தை காட்டவே விமர்சிப்பார்கள். இந்த மாதிரியான விமர்சகர்களை கண்டுகொள்வதில்லை என்ற அர்த்தத்தில் சொல்லியிருப்பார்.  இதை ஏன் இப்போது சொல்கிறேன் என்றால் இந்த மாதிரியான மேதாவித்தனமான விமர்சனங்களை இப்போதெல்லாம் பார்க்கமுடிவதில்லை.இப்போது வருவது எல்லாமே எந்த ரகத்தில் சேர்ப்பது என்று சுஜாதா சாருக்கே ஒருவேளை குழப்பமாக இருக்ககும்போல.

   நானும் பல இடங்களில் சில கருத்துக்களை படித்துவிட்டு யோசித்து பார்த்தேன் ஒன்றும் தோணவில்லை.நிறையா முறை இதே மாதிரி புலம்பியும் விட்டேன். காரணம் மட்டும் பிடிபடவே இல்லை.

   ஒரு பெண் பதிவர் மழை பெய்ந்ததாகவும் அதில் நனைந்ததால் தனக்கு சளி பிடித்ததை ஜவ்வாக இழுத்து ஒரு பதிவுக்கு தேற்றியிருக்கிறார் என்று வைத்துகொள்வோம். உணமையில் எதாவது பெண் பதிவரின் பதிவை மேற்கோள் காட்ட பயம். பின் எல்லோரும் வரிந்து கட்டுவார்கள். அதனால் இந்த எடுத்துகாட்டே போதும்.

   அந்த பதிவுக்கு வரும் கருத்துக்கள் எல்லாமே அறிவை வளர்க்க கூடியவை. எப்படித்தான் மனசு வருகிறதோ தெரியவில்லை. ஒருவர் மருந்து சொல்வார், ஒருவர் குடை எடுத்துட்டு போய் இருக்கலாமே என்பார். அப்படி குடை எடுத்துட்டு போய் இருந்தால் அந்த பெண் பதிவை எழுத வேண்டிய அவசியம் இருந்து இருக்காதே என்பதை யோசிக்காமல். இந்த மாதிரி ஏதோ சொல்ல வேண்டுமே என்ற காரணத்துக்கு வரிந்து கட்டுவது ஏனோ பிடிக்கவில்லை.

   கும்மியடிக்கின்ற முறையில் பேசுவதை ஒரு வகையில் சேர்த்துகொள்ளலாம் போல இருக்கிறது. இது கிட்டத்தட்ட நண்பர்களுக்குள் கேலி பேசுவதை போல.ஆனால் நான் மேலே சொன்னவர்களை என்ன சொல்ல என்பதுக்கு என்னிடம் பதில் இல்லை. 

*********

   நடக்கின்றவைகளை பார்க்கும்போது நமது மக்களுக்கு இன்னும் மூடநம்பிக்கையை வளர்க்கும் அல்லது நம்பும் எண்ணம் இருக்கவே செய்கிறது.அதுவும் நிறையா.

    மக்கள் அது சம்பந்தமான விசயங்களை அதிகமாக ஆதரிக்கிறார்கள். மூடநம்பிக்கை என்று வெளிப்படையாக தெரிந்தும் அதில் இருந்து எதாவது ஒன்று கிடைக்கும் என்ற எண்ணத்தை அவர்களால் எப்படி ஏற்றுகொள்ள முடிகிறது தெரியவில்லை.

   இப்போது எந்த கண்பார்வை கோளாறுக்கும் செயற்கையான லென்ஸ் மற்றும் நேரடியான மூளைக்குள் இணைப்பு கொடுத்து பார்வை கொடுக்கும் முறை இருந்தாலும் ஒருவர் இந்த மந்திரத்தை குளித்து முடித்து ஈரத்துண்டோடு கிழக்கே பார்த்து அமர்ந்து 108.5 முறை சொன்னால் கண்பார்வை கிடைக்க வழியிருக்கிறது என்றால் அதை கடைபிடிப்பவர்களே அதிகம்.

    அப்படியும் சரியாகவில்லையே என்ற கேள்விக்கு அவர்கள் அளிக்கும் பதில் அந்த மந்திரத்தை உச்சரிக்கும்போது அந்த முறை ரெம்ப முக்கியம்.இது முக்கியம் என்று பல முக்கியங்கள் வருகிறது. அந்த தமிழ் மந்திரத்தை வேறு யாரும் எப்படி உச்சரிப்பார்கள்? அப்படிஎன்றால் அவர்களுக்கு இந்த மந்திரம் வேலை செய்யதா? என தெரியவில்லை. நான் சொல்லவருவது வேற்று மொழியினருக்கு.

   அபப்டி தமிழர்க்கு மட்டும்தான் இந்த கடவுள் அனுக்கிரகம்.சித்தர்கள்,சாத்தான்கள் உதவுவார்கள் என்றால் எத்தனையோ மக்கள் எந்த வித காரணமும் இல்லாமல் கொடுராமாக கொல்லப்பட்ட போது யாரும் இல்லை. இதுக்கும் யாரச்சும் அது வந்து தம்பி நமது சுத்தமான பயன்படுத்தும் முறையில்தான் இருக்கிறது என்று சொல்ல வேண்டாம். இப்படி மக்களுக்கு சொல்லுகிறவர்கள் திருந்தினால் தேவலை போலிருக்கிறது.

    கிட்டதட்ட இந்த மாதிரியான விசயங்களை மக்களுக்கு வெளிச்சம் போட்டுகாட்டுவதால் பாதிப்புதான் அதிகமே தவிர எந்தொரு பயனும் இல்லை. இந்த மந்திர தந்திரத்தின் மூலம் நமது தலைமுறை என்ன சாதித்தது என்பதை பார்த்தாலே விளங்கும்.

   இல்லை இது தமிழரின் பழைய பண்பாடு அதை வெளிக்கொணர்வதுதான் இந்த முயற்சி என்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது. அவர்கள் இதனை பயன்படுத்தினார்கள் அல்லது இதன்மூலம் பயன் அடைந்தார்கள் என்பதுக்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை.பழைய புத்தகம் ஏடுகளை தவிர்த்து. அதுதவிர இவைகள இல்லாமல்  நமது பண்பாட்டு கலச்சாரத்தில் வெளிக்கொணர நல்ல விசயங்கள் நிறையா இருக்கிறது. அதை முயற்சிக்கலாம் இந்தமாதிரியான தவறான வழிகளை காட்டுவதை விடுத்து.-
*******

   இப்போது ரோமி எனும் இயந்திர பெண் கிடப்பில் கிடக்கிறாள்.அதை வெறுமனே காதலிக்க மட்டும் பயன்படுத்துவது படிக்க ஒரு மாதிரி இருக்கிறது கொஞ்சம் அறிவாளியாக மாற்றுங்கள் என்ற கருத்துக்கு ஏற்ப அவ்வாறு ரோமியை மாற்றும் எண்ணம் இருக்கிறது.

    காதலிக்க மட்டும் பயன்படுத்துவதால் அறிவு கம்மி என்ற அர்த்தமில்லை.அதுக்கும் நிறைய அறிவும்,சாதுர்யமும் தேவைதான் என்பதை என அனுபவத்தில் இருந்து கற்று கொண்டு இருக்கிறேன்.அது எனக்கு இல்லை என்பதால்தான் இந்த ரோமியே உருவானது.

   எந்த விதத்திலாவது ரோமியை அறிவுமிகு பெண்ணாக மாற்றவேண்டும். இந்த வைத்தி,புனி மற்றும் புத்தி போன்ற கூட்டத்தோடு சேர்க்கும் எண்ணம் இருக்கிறது.பார்ப்போம் ரோமி என்ன செய்ய போகிறாள் என்று.

10 comments:

HVL said...

ரொம்ப யோசிச்சா அப்புறம் எதையும் எழுத முடியாதே! அப்ப என்ன செய்யறது?

Rathnavel said...
This comment has been removed by the author.
Rathnavel said...

நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.

கணேஷ் said...

HVL //
நீங்க சொன்னது ஒன்னும் புரியலியே..என்ன சொல்ல வாரிங்க??

கணேஷ் said...

Rathnavel //

கருத்துக்கு நன்றி

அருண் பிரசாத் said...

//அப்படி குடை எடுத்துட்டு போய் இருந்தால் அந்த பெண் பதிவை எழுத வேண்டிய அவசியம் இருந்து இருக்காதே//
இதுதான் பின்நவீனத்துவமா பாஸ்??????

நானும் எப்படியாவது இதை புரிஞ்சிக்கனும்னு பார்கறேன் முடிய மாட்டுது

அருண் பிரசாத் said...

//அப்படி குடை எடுத்துட்டு போய் இருந்தால் அந்த பெண் பதிவை எழுத வேண்டிய அவசியம் இருந்து இருக்காதே//
இதுதான் பின்நவீனத்துவமா பாஸ்??????

நானும் எப்படியாவது இதை புரிஞ்சிக்கனும்னு பார்கறேன் முடிய மாட்டுது

TERROR-PANDIYAN(VAS) said...

இங்க கணேஷ் அப்படினு ஒரு மாணஸ்தன் இருந்தான் அவன் எங்க போனான்... என்னாட பொலம்பல். மழை, குடைன்னு?போடா போடா போய் உருப்படர வழியை பாரு.. :)

கணேஷ் said...

அருண் பிரசாத் ///

அவங்க குடை எடுத்துட்டு போய் இருந்தால் நனைஞ்சி இருக் மாட்டாங்க சளியும் பிடிச்சி இருக்கதுள்ள அதை சொன்னேன் ))

கணேஷ் said...

TERROR-PANDIYAN(VAS) //

நான் உங்ககூட சேர்ந்த பிறகு அதையே மறந்துட்டேன் அதான் இப்படி ))))