நிஜம்.


   அந்த சிறுமி வீட்டின் முன்னால் இருந்த இடத்தில் எதையோ கையில்வைத்து விளையாடிகொண்டு இருக்கிறாள். அது மூன்றாவது மாடி என்பதால் அந்த இடத்தில கம்பிகள் போடப்பட்டு இருந்தது.

   நான் அதுக்கு சற்று எதிரே அமைந்த அதேபோல இருக்கும் இடத்தில் அமர்ந்து ஒரு நாவலை படித்து கொண்டு இருந்தேன்.ஒரு இளைஞ்ஞனின் சிறுவயது வாழ்க்கையில் தொடங்கும் அந்த நாவல் அவனது பிற்பாடு வாழ்க்கையோடு முடிவடையும் ஒன்று.

   கிடைக்கும் சிறு இடைவேளையில் அந்த சிறுமி என்ன செய்கிறாள் என்று பார்ப்பேன்.என்னை ஏதும் கண்டுகொள்ளாமல் அவள் அவளது போக்கில் விளையாடிக்கொண்டு இருந்தாள்.அவ்வப்போது அவளின் அம்மா வந்து பார்த்துவிட்டு போனார்கள்.

   அந்த நாவலில் முதல் ஐம்பது பக்கம் முடித்து இருந்தேன். இதவரை படித்ததின் சாராம்சம் என்றால் ஒரு நடுத்தர குடும்பத்தில் முதல் பிள்ளையாக அவன் பிறக்கிறான்.பெற்றோருக்கு சந்தோசம்.அடுத்த வந்த சில நாள்களில் அவனை எப்படியெல்லாம் வளர்க்கவேண்டும் என அவனின் பெற்றோர்கள் திட்டமிடுகிறார்கள்.

  அந்த சிறுமி வளர்ந்து இருந்தாள். அதற்கு ஏற்றாற்போல் அவளது விளையாட்டு பொருளும் மாறியிருந்தது.அனேகமாக ஐந்தாம் வகுப்பு படிக்க வேண்டும்.இபோதும் நான் எதிரே இருப்பதை பார்த்தாலும் சட்டை செய்யவில்லை.

   கதை சுவராசியமாக போனது. ஒரே பயன் என்பதால் அதிக செல்லம் கொடுத்து வளர்க்கிறார்கள். அதனால் அவன் எட்டாம் வகுப்பு படிக்கும்போதே தனது விருப்பத்துக்கு மாறாக பேசும் பெற்றோரிடம் கோபம கொள்கிறான். இது அவர்களுக்கு புதிய அனுபவமாய் இருக்கிறது.அவர்களின் பெரிய கனவில் ஒரு சிறு கீறல் விழுந்ததைப்போல உணர்கிறார்கள். இப்படியே தொடர்கிறது கதை...

   அந்த எதிர்வீட்டு பெண் இப்போது விதவிதமாக ஆடை உடுத்த தொடங்கியிருந்தாள். எல்லாமே அவளது தேர்வுக்கு பெற்றோர்கள் வாங்கி கொடுத்தது.அவள் சரியாக படிக்கவில்லை என்பதற்காக அவளுக்கு அறிவுரை சொல்ல அதை எதிர்த்து சண்டைபோடுவது எதிரில் அமர்ந்து இருக்கும் எனக்கு கேட்டது. என் வாழ்க்கையை பார்த்துக்கொள்ள எனக்கு தெரியும் நான் இப்படித்தான் படிப்பேன் என்று சொன்னதுக்கு அவளின் பெற்றோரிடம் இருந்து எந்தவொரு பதிலும் வந்ததாக எனக்கு தெரியவில்லை.

   கதையில் கொஞ்சம் சோக ராகம் சேர்கிறது. அவர்களது மகன் நடத்தையை பற்றி ஒரு தனிமையில் அவனின் பெற்றோர்கள் பேசுகிறார்கள். நாம் அவனுக்கு நல்லதுதானே செய்ய எண்ணுகிறோம் பின்னே எதுக்கு அபப்டி செய்கிறான். எனக்கென்னவோ நமது கனவு நிறைவேரும்போல தோணவில்லை என அப்பா சொல்ல, அப்படியில்லை அவன் சின்னப் பையன் போகப்போக திருந்திவிடுவான் நாம்தான் பொறுமையாக போக வேண்டும். இதுக்காக நமது லட்சியத்தை மறக்ககூடாது என சொல்கிறாள் அம்மா. இப்படியே அவர்களது உரையாடல் தொடர்கிறது.

   அந்த பெண்ணுக்கும் பெற்றோர்க்கும் அவ்வளவாக பேச்சுவார்த்தை இல்லை. பள்ளி போய்விட்டு  நேராக வெளியில் வந்து அமர்ந்துவிடுவாள். விருப்பபட்டால் கொஞ்சநேரம் படிப்பாள். சில நேரங்களில் நான் அவளை கவனிப்பதை பார்த்து இருக்கிறாள். அவளுக்கென்று இருக்கும் சில தோழிகள் வர ஆரம்பித்தார்கள். வெளியில் அமர்ந்து மெதுவாக ஏதோ பேசி சத்தமாக சிரிப்பார்கள்.

   மிக குறைந்த மதிப்பெண்ணில் தேறியிருந்த தனது மகனுக்கு சிரமப்பட்டு ஒரு கல்லூரியில் படிக்க இடம் வாங்குகிறார். அப்போதே அவரது கனவு நிறைவேறும் என்ற நம்பிக்கையில் பாதி போனதாக ஒரு நினைவு. தனது மனைவியிடம் சொல்லி அழுதே விடுகிறார். அவருக்கு ஆறுதல் சொல்லிவிட்டு தனது மகனிடம் பேச செல்லும் அம்மாவிடம் தான் இப்போது ஏதும் பேச விரும்பவில்லை என்று சொல்லி முகத்தை திருப்பி கொள்கிறான்.

   பள்ளி இறுதி தேர்வுக்கு கொஞ்சம் கஷ்ட்டப்பட்டு படிக்கிறாள்.அதற்கு அவளது அம்மாவும் உதவுகிறார்கள். அனேகமாக தேர்வு முடிந்து இருக்கவேண்டும்.அன்று எல்லா தோழிகளும் வந்து இருக்க சிறு விருந்து போல நடந்தது.அதுக்குப்பிறகு அந்த பெண்ணை அந்த வீட்டில் பார்க்க முடியவில்லை.விடுமுறைக்கு உறவினர் வீட்டுக்கு சென்று இருப்பாள் என நினைத்து கொண்டேன்.

   கல்லூரி இரண்டாம் ஆண்டு படிக்கும்போது நண்பர்கள் எல்லாம் பைக் வைத்து இருக்கிறார்கள் எனக்கும் வேண்டும் என சண்டைபோட அவனது அப்ப சில இடங்களில் கடன் வாங்கி வான் விருப்பட்ட பைக்கை வாங்கி கொடுக்கும்போது பார்த்து ரெம்ப கவனமாக பயனிக்குமாறு சொல்ல அது எல்லாம் நான் பார்த்துகொள்கிறேன் என்று சொல்லிவிட்டு போகும் தனது மகனை ஒருவித விரக்தியோடு பார்க்கிறார் தந்தை. கதையில் அடுத்த சில பக்கங்கள் அவனோடு சின்ன விசயங்களுக்கு எல்லாம் சண்டைபோடுவது அதனால் அவனது பெற்றோர்கள் வருத்தம் கொள்வதுமாய் நகருகின்றது.

    பள்ளிதேர்வுமுடிவுக்கு ஒருநாள் முன் அவளை வீட்டில் பார்க்க முடிந்தது.வெயிலில் அதிகம் சுற்றியிருக்க வேண்டும் அவளது நிறத்தில் நிறைய மாற்றம் தெரிந்தது.அன்றைய தேர்வு முடிவில் நல்ல கணிசமான மதிப்பெண்கள் வாங்கி தெரியிருக்க வேண்டும். அவளது பெற்றோர்கள் மகிழ்ந்து இனிப்பு கொடுத்து கொண்டாடியதில் தெரிந்தது.மதிப்பெண்கள் அதிகம் என்பதால் கல்லூரியில் இடம் கிடக்க சிரமம் இல்லாமல் சேர்ந்து கல்லுரி செல்ல ஆரம்பித்து இருந்தாள்.

   கதையில் ஒரு பெரிய திருப்பமாக அவன் ஒருநாள் நிறைய குடித்துவிட்டு வந்து பைக்கை நிறுத்தாமல் அப்படியே போட்டுவிட்டு வீட்டுக்குள் வருகிறான். பெற்றோர்கள் நொந்து போகிறார்கள். அம்மா அவனை சரிசெய்து படுக்க வைக்கிறார்.அப்ப ஏதும் பேசாமல் அமர்ந்து இருக்கிறார்.பைக் விழுந்த இடத்தில அப்படியே கிடக்கிறது. இருவருக்குமே தனது லட்சியத்தில் ஏதும் மீதி இல்லை என்பதை அடுத்த வந்த பக்கங்ககள் உணர்த்தின. இனி விதிவிட்ட வழி நடக்கட்டும் என்று முடிவான நிலையில் அந்த பெற்றோர்கள் வாழ தயாராகுகிறார்கள்.

   சிலமாத கல்லூரி வாழ்க்கை அவளுக்கு பிடித்திருக்க வேண்டும். பழைய தோழிகள் சேர்த்து நிறைய புதிய தோழிகளை இப்போது அவளது வீட்டில் பார்க்க முடிந்தது. முன்னர் பார்த்ததுக்கு இப்போது கொஞ்சம் அழகாக இருப்பது போல தெரிந்தது. வெளியில் வரும்போது நான் எதிரில் மறந்து இருப்பதை பார்த்துவிட்டு பார்க்காது போல தனது வேலையை தொடருவாள்.

    பையனுக்கும் அவர்களுக்கும் இருந்த பேச்சுவார்த்தை முற்றிலும் இல்லாமல் போய் இருந்தது. வாரத்தில் இரண்டு நாள்கள குடித்துவிட்டு வருவான்.படிப்பும் சொல்லிகொள்ளும்படி  இல்லை.மிகுந்த வேதனையோடு தனது வாழ்நாட்களை நகர்த்துவதாக கதை சென்றது. ஆனால் அது மகனுக்கு கொஞ்சமும உணரவே இல்லை.

   இப்போதெல்லாம் அவள் கல்லூரி முடிந்து வந்ததும் ஒரு நாற்காலியில் மொபைலோடு வந்து அமரும் அவள் அதுலேயே லயித்து இருந்தாள். சில நேரங்களில் பேசுவாள். இல்லையென்றால் குறுஞ்செய்தி அனுப்பி தனக்குதானே சிரித்து கொள்வாள்.அவளது பெற்றோரும் தொடக்கத்தில் கண்டுகொள்ளவில்லை போல தெரிந்தாலும் அவளது நடத்தையில் சந்தேகம் வர ஒரு நாள் என்னவென்று கேட்கப்போக பெரிய சண்டையே வெடித்தது.அவள் ஒருவனை காதலிப்பதாக சொல்ல அவளது அப்ப வன்மையாக கண்டித்ததால் வந்த சண்டை அது. அப்போது அவள் இரண்டாம் ஆண்டு படித்து கொண்டு இருக்க வேண்டும்.

   கதையின் உச்சகட்ட திருப்பமாக அன்று ஒரு பெண்ணை தனது வீட்டுக்கு அழைத்து வருகிறான். அம்மாதான் தயக்கத்தோடு யாருடா இவ? என்று கேட்டுவைக்க இவளைத்தான் திருமணம் செய்துகொள்ள போவதாக சொல்லிவிட்டு தனது அறைக்குள் அழைத்து செல்கிறான். இப்போது கதையில் இருவருமே சேர்ந்து எதுவும் பேசாமல் அழுகிறார்கள். அதற்கு பிறகு அந்த பெண் அடிக்கடி வந்துபோகிறாள்.ஆனால் இவர்கள் ஒன்றுமே கேட்பதில்லை.

    அவளை பார்ப்பது அரிதாகிபோனது.எப்போதாவது வருவாள்.வந்தாலும் ஒரே தொலைபேசியில் பேச்சுதான். சில நாட்களில் இரவு தமதமாகவும் இருந்தது அவளது வருகை. பெற்றோர்களின் கண்டிப்பு வழி திருந்தியதாக தெரியவில்லை. அவர்களும் ஒரு அளவுக்கு மேல எதுவும் சொல்லாமல் கடைசியாய் இருக்கும் ஒரு வழியை கையில் எடுக்க முடிவெடுத்து திருமணம் செய்துவைக்க அவளிடம் பேசினார்கள். அப்படி நீங்களாக செய்து வைத்தால் இந்த வீட்டுக்கே நான் வரமாட்டேன் என்று மிரட்டியிருக்கிறாள். அதுக்குப்பிறகு என்ன நடந்தது என்பது எனக்கு தெரியாமல் போனது.

   இறுதியாண்டை முடித்துவிட்டு சும்மா இருக்கும் தனது மகனை வேலைக்கு போக சொல்ல அதுக்கு அவன் எல்லாம் எனக்கு தெரியும் என்ன வேலைக்கு எப்போ போகனுமா அப் போவேன் என்கிறான். இருந்தும் அவனது அப்ப தனுக்கு தெரிந்த நபர்களிடம் பேசி ஒரு நல்ல வேலையாக அவனுக்காக பார்க்கிறார். இதற்கு இடையில் அவனது அம்மா நோயில் படுக்க அதையும் கண்டுகொள்ளாமல் இருக்கிறான். இது அவர்களிடத்தில் பேரும் ஏமாற்றத்தை ஏற்படுத்துகிறது. இன்னும் புத்தகத்தில் சில பக்கங்களே மீதம இருக்கின்றது.

    அன்றைய நாளில் தான் பிடித்தவனோடு திருமணம் செய்து கொண்டதாகவும் இனி நீங்கள் நினைத்தாலும் திருமணம் செய்து வைக்க முடியாது என்று சொல்ல ஆளுக்கொரு மூலையில் உடகார்ந்து அழுவது தெரிந்தது. ஆனால் அவள் சந்தோசமாகத்தான் இருந்தாள். அடுத்த சிலமாதங்கள் கழிந்து இருந்த நிலையில் எப்போதும் வீட்டுலேயே இருந்தாள் அனேகமாக படிப்பை முடித்து இருக்க வேண்டும்.

    அந்த நாவல் இன்னும் நான்கு பக்கம் மீதியிருந்தது. பெற்றோர்கள விரக்தியின் உச்சத்தில் இருக்க அதை சிறிதும் கண்டுகொள்ளாத மகன் எல்லாம் ஒரே வீட்டில்.இதற்கு இடையில் நடக்கும் அவர்களது வாழக்கையை யாதர்த்தமாக சொல்லிவந்திருந்தது கதை. அடுத்து அதே பெண் ஆனால் கையில் பையுடன வந்து இருந்தாள். அங்கு உட்கார்ந்து இருந்த அவர்களிடம் இவள் இனிமேல் இங்குதான் இருப்பாள் என்றும் தனக்கு இவளோடு திருமணம் முடிந்துவிட்டதாக சொலி ளித்து செல்கிறான். அதையும் வேதனையோடு கடக்கிறார்கள் அவர்கள்.

   நான் பார்த்த நிகழ்ச்சி ஆச்சர்யமாகவும் வேதனையாகவும் இருந்தது. இது வரை நான் பார்த்துவந்த பெண் தான் தனியாக போய் வாழபோவதாக சொல்லி வீட்டை விட்டு வெளியேறுகிறாள். அவளது அம்மா அழுதுகொண்டே எவ்வளவுதான் தடுத்தும் நிற்காமல் அவள் வழியில் நடக்கிறாள். இதைபர்தா நான் படித்த அந்த நாவலை சில நிமிடங்கள் மூடிவைத்துவிட்டு என்ன அவள் என்று யோசிக்க ஆரம்பித்து இருந்தேன்.

   கதையின் கடைசி இரண்டு பக்கம்.வேதனையின் உச்சகட்டம்.அவனது பெற்றோர்கள் எது செய்தாலும் அவர்களுக்கு முன்னாடியே எடுத்து எரிந்து பேச ஆரம்பிக்கிறாள் அவள். ஒருகட்டத்தில் அவர்கள் இந்த வீட்டில் இருந்தால் தான் இங்கு இருக்கபோவதில்லை என்று சொல்ல மகன் தனது பெற்றோரை ஒரு எண்ணத்தில் பார்க்கிறான். அதை அவர்களும் புரிந்து கொள்வதாக கதை நகருகின்றது

    தனது மகள் பிரிந்து போன கவலையில் சிறிது நாள் அழுது புலம்பி கழித்தவர்களுக்கு அவளின் படிப்புக்கு வாங்கிய கடன் பிரச்சினை வேறு.அதுக்கு முடிவு கட்ட வாங்கிய அவர்களது சொந்த வீட்டை விற்று கடனை அடைக்கிறார்கள். கொஞ்ச நாள் இருக்க அனுமதி கேட்டு அந்த நாளும் முடிவடைகின்ற தருவாயில் என்ன செய்வதுவேன்று தெரியாமல் இருக்கும் நிலையில் அவர்களுக்கு அது தோன்றியிருக்க வேண்டும்

  கதையின் கடைசி பக்கத்தை புரட்டினேன். அன்று மதியத்துக்கு மேல் அவர்கள் என்ன எதிர்பர்த்தார்களோ அது அவனது வாயில் இருந்தே வந்து இருந்தது. மாதம் மாதம் துட்டு கொடுத்துவிடுவதாகவும் முதியோர் காப்பகத்துக்கு போகுமாறு சொல்ல இருவரின் கண்களிலும் கண்ணீர். சாயங்காலம் தயாராக இருக்குமாறும் தான் கொண்டுபோய் சேர்த்துவிடுவதாகவும் சொல்லுகிறான்

  அந்த கடைசி பத்தியில் அடுத்து என்ன இருக்க வேண்டுமோ அது என் கண் முன்னால் விரிந்தது. அந்த பெண்ணின் பெற்றோர்களின் மூலம். இரண்டுக்குமே ஒரே முடிவுதான்.


   எதுக்கும் காத்து இருக்காமல் தெருவில் இறங்கி நடக்கிறார்கள்.அம்மா மட்டும் சிறிது தூரம் வரை சேலையால் கண்களை துடைத்துகொண்டே நடக்கிறாள். அவர்களது பயணம் ஏற்க்கனவே முடிவெடுத்த முதியோரின் இல்லம் நோக்கி பயணிக்கிறது இன்னொரு வாழ்க்கைக்காக.

       

8 comments:

Anonymous said...

மிகவும் அழுத்தமான உணர்வுகளோடு கதையை முடித்திருக்கிறீர்கள், மனதில் ஏதோ கனமாக உணர்கிறேன், பிள்ளைகள் இதை படித்தாலும் திருந்துவார்களா என்பது சந்தேகம் தான், ஆனால் வருந்துவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. மிக அருமையான கதை.

கணேஷ் said...

Heart Rider //

கருத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி

HVL said...

கதை படிக்க விறுவிறுப்பாய் இருந்தது.

கணேஷ் said...

HVL //

கருத்துக்கு நன்றி

ஆனந்தி.. said...

கணேஷ்...ஒரு வழியா படிச்சிட்டேன்...:))

ஆனந்தி.. said...

நீ சொன்னது போலே kerchief தேடினேன்...:))) என்னப்பா...இவ்வளவு சோகம்...:))))))

ஆனந்தி.. said...

ஓகே...கணேஷ்...கொஞ்சம் வித்யாசமா இருந்தது இந்த கதை...கதை கரு ரொம்ப சிம்பிள் விஷயம்...ஆனால் ரெண்டு கோணத்தில் விவரிச்சது கொஞ்சம் வித்யாசம்....வழக்கம்போலே viewers ஐ guess பண்ண வைக்கும் உன் tacties ஐ இங்கே நீ இம்ப்ளிமென்ட் பண்ணி இருந்திருக்கலாம் தோணுது கிளைமாக்ஸ் ல்...கிளைமாக்ஸ் இன்னும் கொஞ்சம் பெட்டெர் ஆ develop பண்ணிருக்கலாம் கணேஷ்...anyway ...டச்சிங் ஆ இருந்தது ...ம்ம்..கலக்கு...

குடந்தை அன்புமணி said...

குடந்தை அன்புமணி said...

ஜூலை மாத இன்ப அதிர்ச்சி என்ன? http://thagavalmalar.blogspot.com/2011/07/blog-post_05.html