“நான் கடவுள் வந்து இருக்கிறேன்” என்ற குரல் வெளியில் இருந்து கேட்டது....
சரி யாரோ வழக்கம் போல சாமிவேடம் போட்டு வந்து இருப்பார் என்று எண்ணி வெளியில் வந்து பார்க்கவில்லை...
மீண்டும் அதே குரல்.....இந்த முறை நான் கேட்டபோது உணரமுடிந்தது.....அது மிக தொலைவில் இருந்து வருகின்றது என்று...வெளியில் சென்று பார்த்தேன்... வானத்தின் ஒரு பகுதியை ஒரு ஒளி ஊடுருவும் தன்மை கொண்ட மிகப்பெரிய உருவம் மறைத்து இருந்தது...
என்னைபோல சில வெளியில் வந்து அதை பார்த்து கொண்டு இருந்தார்கள்...மற்றவர்கள் வீட்டுக்கு உள்ளே கண்டு கொள்ளாமல் இருந்தார்கள்...
அந்த நேரத்தில் பூமி கொஞ்சம் மெதுவாக அசைய எல்லோரும் பயந்துகொண்டு வெளியில் வந்த போதுதான் தெரிந்தது...அங்கு அவ்வளவு பெரிய உருவம் இருப்பது....எல்லோரும் ஆச்சர்யமாக அண்ணாந்து பார்த்து கொண்டு இருக்க....
"இந்த பிரபஞ்சத்தின் இயக்கத்தை முடிவுக்கு கொண்டுவர போகிறேன்...இன்னும் சில நிமிடங்கள் உங்களுக்கு இருக்கும்..அதற்கு பிறகு இதை அழித்து புதியதாய் உருவாக்குவேன்"
எல்லோருக்கும் பயம் சூழ்ந்தது...அங்கும் இங்கும் ஓடினார்கள்...கத்தினார்கள்..
"உங்களை படைத்ததின் விளைவு ...இன்று என்னையே நெருங்கி விட்டீர்கள்...எனது படைப்பின் ரகசியத்தையே ஆராயும் அளவுக்கு வந்து விட்டீர்கள்...உங்களுக்கு சரியான எண்ணிகையில் குரோமோசோம்களை வைத்ததில் இருந்து அனுவில் துகள்களின் எடையை தீர்மானித்தது வரை எல்லாம் செய்தது நானே..."
எல்லோரும் அமைதியாக அந்த குரலை கேட்டனர்...சாதாரண மனிதனை படைக்க இவ்வளவு பெரிய பிரபஞ்சத்தை படைத்தது எதற்கு? என்ற என் சந்தேகத்தை கேட்கநினைத்தேன்...ஏதோ ஒரு பயம் தடுத்தது...
"இனி நான் படைக்க போகும் பிரபஞ்சம், அதில் உருவாகும் எந்த ஒரு உயிரினங்களின் அறிவுக்கும் எட்டாத படி இருக்கும்...அவர்கள் என்னை பற்றியோ எனது படைப்பை பற்றியோ அறியவே முடியாத படி இருப்பார்கள்..." என்று சொன்ன படி.....கையில் மடிக்கணினி போல இருந்த ஒன்றை எடுத்து அதில் ஈர்ப்பு விசை என்ற பக்கத்திற்கு சென்று...அதில் ஈர்ப்பு விசையை "இயக்கு" "முடக்கு" என்ற இடத்தில் அவரது தேர்வு "முடக்கு" என்ற பொத்தனில் இருந்தது...
"இதோ உங்களுக்கான கடைசி நிமிடங்கள்" என்று சொன்னவுடன்..எல்லோரும் அதிக சத்தத்துடன் கத்தினார்கள்..ஆச்சர்யம் என்னவென்றால் கடவுள் வந்ததில் இருந்து ஒருவர்கூட “இறைவனே உன்னை சரணடைகிறேன்” என்று தானாக முன்வரவில்லை..
கடைசி நிமிடங்கள்.... அழுதார்கள், சிலர் தனது உறவினர்களை பதுகாபப்தில் இருந்தார்கள்,சிலர் இதை நம்பவில்லை..சிலர் அங்கும் இங்கு ஓடி பாதுகாப்பான இடம் தேடினார்கள்..அதே நேரத்தில் கடவுள் அந்த பொத்தனை அழுத்த முனைந்தார்....
வேகமாக படியுங்கள் ..... நேரம் இல்லை...உங்களுக்கு நான் அந்த சில நிமிடங்களில் என்ன செய்தேன் என்ற கேள்வி இருக்கலாம்.....இதை எழுதி கொண்.....
"கிளிக்."
16 comments:
//ஆச்சர்யம் என்னவென்றால் கடவுள் வந்ததில் இருந்து ஒருவர்கூட “இறைவனே உன்னை சரணடைகிறேன்” என்று தானாக முன்வரவில்லை//
Nice! :-)
நேத்து ஏதோ ஹாலிவுட் பார்த்து விட்டு என்னமா கதை எழுதுறே ம்ம்ம்ம் வித்தியாசமான கதை நல்லா இருக்கு
நேத்து ஏதோ ஹாலிவுட் பார்த்து விட்டு என்னமா கதை எழுதுறே ம்ம்ம்ம் வித்தியாசமான கதை நல்லா இருக்கு////
இந்த கதை எந்த படத்தில் வருது))))
நல்லாயிருக்கு பாஸ்..
நல்லா இருக்கு பாஸ் ...........
பட்டாபட்டி.... said...
நல்லாயிருக்கு பாஸ்..////
Mythees said...
நல்லா இருக்கு பாஸ் ...........///
நன்றி பாஸ்^2 )))))
@Ganesh
//என்ன செய்தேன் என்ற கேள்வி இருக்கலாம்.....இதை எழுதி கொண்.....
"கிளிக்."//
அப்பா... இனி இவர் கதை படிச்சி மண்டை பிச்சிக்க வேண்டாம்... வாழ்க கடவுள்.... :))
TERROR-PANDIYAN(VAS) said...
அப்பா... இனி இவர் கதை படிச்சி மண்டை பிச்சிக்க வேண்டாம்... வாழ்க கடவுள்.... :))////
அதெப்படி அந்த கடவுள் கம்ப்யூட்டர் சரியா வேலை செய்யலை...பாவம்..))))
ரொம்ப வித்யாசமா இருந்தது கணேஷ் இந்த கதை...முடிவின் திரில் சூப்பர்...நாமலே அனுமானிக்கும் இந்த டெக்னிக் எனக்கு ரொம்ப பிடிச்சது...ப்ரொபெஷனல் டச்...சின்ன ஸ்க்ரிப்ட் எப்படி நல்லா எலாபுரெட் பண்ற...really i am wonder.....!!good..keep it up ganesh!!!:)))
ஆனந்தி.. said...
ரொம்ப வித்யாசமா இருந்தது கணேஷ் இந்த கதை...முடிவின் திரில் சூப்பர்...நாமலே அனுமானிக்கும் இந்த டெக்னிக் எனக்கு ரொம்ப பிடிச்சது...ப்ரொபெஷனல் டச்...சின்ன ஸ்க்ரிப்ட் எப்படி நல்லா எலாபுரெட் பண்ற...really i am wonder.....!!good..keep it up ganesh!!!:)))/////
கருத்துக்கு நன்றி sis..
நல்லாயிருக்கு பாஸ்..
வெறும்பய said...
நல்லாயிருக்கு பாஸ்..////
வாங்க பாஸ் .நன்றி..
அருமையா எழுதியிருக்கீங்க.. முடிவ மிகவும் ரசிச்சேன்... அசத்தல்..
பிரியமுடன் ரமேஷ் said...
அருமையா எழுதியிருக்கீங்க.. முடிவ மிகவும் ரசிச்சேன்... அசத்தல்..////
கருத்துக்கு நன்றி..
அன்பின் கணேஷ்
ந்லலாவே போகுது கதை - கடசிலே சூப்ப்பர் முடிவு. வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா
முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க,,
Post a Comment